DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்

3
DigiLocker

த்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட DigiLocker சேவையில் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த DigiLocker SSO வசதியைக் கொடுத்துள்ளார்கள்.

DigiLocker SSO (Single Sign-On)

SSO என்றால் என்னவென்றால், பல தளங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைவதாகும்.

எடுத்துக்காட்டுக்கு, பல இணையதளங்களில் Google மற்றும் facebook கணக்கின் வழியாக நுழைய வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். அத்தளத்தில் நாம் புதிய கணக்கை உருவாக்காமல் இதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த முறையில் நுழையும் போது Google / facebook கணக்கின் சில பகுதிகளின் Access கேட்கும் அதைக் கொடுத்து விட்டால் போதும்.

இதில் பாதுகாப்பு, தனியுரிமை (Privacy) பிரச்சனைகளும் உள்ளதால், இதைப்பயன்படுத்த விரும்புவதில்லை.

ஆனால், மத்திய / மாநில அரசுகளின் தளத்தில் நுழைய DigiLocker SSO பயன்படுத்தலாம்.

அரசுத் தளங்கள்

தற்போது இணையம் வழியாகச் சான்றிதழ் பெறுவது, வரி கட்டுவது போன்ற பல்வேறு தேவைகளுக்காக மத்திய / மாநில அரசுகளின் தளங்களைப் பயன்படுத்துகிறோம்.

வழக்கமாக அரசு தளங்களில் பயனர் கணக்கு உருவாக்குவதும் அதைப் பராமரிப்பதும் பெரிய தொல்லை. ஒவ்வொரு தளமும் வெவ்வேறு வழிமுறைகளை வைத்து இருக்கும்.

எனவே, இதைப் பராமரிப்பது கடினம். குறிப்பாக மாநிலத்தளங்கள் மோசமான வடிவமைப்பிலும், வேகம் குறைந்ததாகவும் இருக்கும்.

இப்பிரச்னைகளைத் தவிர்க்க ஒரே ஒரு கணக்கின் வழியாக நுழையும் வசதி இருந்தால் எளிது தானே! பல பயனர் கணக்குகளை உருவாக்க வேண்டியதில்லை.

இந்த இடத்தில் தான் DigiLocker SSO வருகிறது.

தற்போது Cowin தளத்தில் பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் மற்ற தளங்களுக்கும் இவ்வசதியை விரிவுபடுத்துவார்கள்.

எளிதாகப் புரிந்து கொள்ள https://selfregistration.cowin.gov.in/ தளம் சென்று Login with DigiLocker Meripachaan என்று இருப்பதைப் பயன்படுத்தி நுழையுங்கள்.

சான்றிதழ்கள்

மத்திய அரசு IT ACT, 2000 படி DigiLocker ல் Issued Documents என்ற பிரிவில் உள்ளவை அனைத்தும் அசல் ஐடிக்கு இணையான அதிகாரத்தைப் பெறுகிறது.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

அதாவது எங்காவது உங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்றால், Physical Card அல்லாமல் மொபைலில் DigiLocker லிருந்தே காண்பிக்கலாம்.

கையில் வைத்துள்ள அடையாள அட்டைக்கு நிகரான மதிப்பைப் பெற்றது.

எடுத்துக்காட்டுக்கு ரயிலில் பயணிக்கிறீர்கள், அடையாள அட்டையைக் காட்ட பரிசோதகர் கூறுவார். அப்போது Physical Card இல்லையென்றால் இதைக்காட்டலாம்.

Issued Documents என்றால் என்ன?

நாம் எதற்கெல்லாம் அடையாள அட்டை வைத்து இருப்போம்? PAN, Aadhaar, License, Vehicle Registration, Cowin Certificate போன்றவை.

இவற்றையெல்லாம் அந்தந்த தளத்திலிருந்து ஆதார் உதவியுடன் DigiLocker க்கு Fetch செய்து கொள்ள முடியும்.

அதாவது மேற்கூறிய அனைத்து அடையாள அட்டைகளையும் IT ACT, 2000 சட்டப்படி அதிகாரபூர்வமாக இங்கே சேமிக்க முடியும்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களே Issued Documents, அதாவது அசலுக்கு நிகரானவை.

இதனுடைய ஜெராக்ஸ் வேண்டும் என்று கேட்கும் போது தான், நமக்குச் சிக்கல். ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

ஏனென்றால், மொபைலில் இருப்பதை அவசரத்துக்கு ஜெராக்ஸ் எடுப்பது மட்டுமே சிரமம். மற்றபடி இதை எவரிடமும் சோதனையின் போது காண்பிக்கலாம்.

எனவே, அனைத்து விவரங்களையும் இதில் Fetch செய்து கொள்ளுங்கள். இங்கே சென்றாலே, என்னென்ன சேவைகள் உள்ளன என்பது தெரியும்.

தேவைப்படுபவற்றை இது போலச் சேர்த்துக்கொள்ளலாம். இவையல்லாமல் DigiLocker ல் நம் தகவல்களைக் கோப்புகளாகச் சேமிக்க 1 GB உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் இதில் இணைக்க முடியாது. காரணம், மத்திய அரசு தற்போது (ஜூன் 2022) தான் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

2020 ம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர்கள் அடையாள அட்டையைத் தரவிறக்கம் (Download) செய்யலாம்.

விரைவில் அனைவரும் இணைக்க அனுமதி கிடைக்கும்.

எதிர்காலம் DigiLocker

தமிழக அரசின் பல சேவைகள் இதில் இல்லை. தமிழக அரசு மின்னணு சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்துமே DigiLocker வழியாக நடைபெறும் என்பதால், தமிழகம் தற்போது இருந்தே செயல்பட்டால் தான் சேவையில் முன்னணியில் இருக்க முடியும்.

தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துச் செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அரசு சேவையில் Xerox Copy என்பதே இருக்காது.

அனைத்துமே DigiLocker ல் இருந்து மட்டுமே எடுக்கப்படும், தேவைப்பட்டால் ஆதார் ரேகையில் உறுதி செய்யப்படும்.

சுருக்கமாக, நாம் எதையுமே எடுத்துச்செல்ல வேண்டியதில்லை.

இதுவரை இதன் பயன்பாடு தெரியாதவர்கள் DigiLocker கணக்குத்துவங்கி பயன் அடையுங்கள்.

உங்கள் விவரங்களைப் பதிவேற்ற Digi-Locker தளம் செல்லவும். எளிமையான வடிவமைப்பில் தனியார் செயலிக்கு இணையாக App உருவாக்கப்பட்டுள்ளது.

Download here –> Android App / Apple App

கொசுறு

ஆதார் வந்த பிறகு அனைத்துமே எளிதாகி விட்டது. ஆதார் அவசியத்தைப் பல கட்டுரைகளில் விளக்கிய போது பலரும் அப்போது கொந்தளித்தார்கள்.

ஆனால், இன்று ஆதார் இல்லாமல் ஒன்றுமே இல்லையென ஆகி விட்டது. சராசரி நபரின் பல பிரச்சனைகளைக் குறைத்து, வழிமுறைகளை எளிதாக்கி விட்டது.

பொது மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள் என்று எவ்வளவு விமர்சனங்கள்! இன்று பலனை அனுபவிப்பது யார்?

Digi Locker சேவையும் ஆதார் போலப் பெரிய வெற்றியைப் பெறும், சந்தேகமே வேண்டாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி?

அசல் ஓட்டுநர் உரிமம் இனி தேவையில்லை!

ஆதார் கட்டாயம் என்பது சரியா?!

ஆதார் கை ரேகையைப் பாதுகாப்பது எப்படி?

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உடனே செலுத்த வேண்டுமா?

ஆதார் PVC அட்டை பெறுவது எப்படி?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. Nice Giri 🙂 Meri pachaan na? Vivek solra “achachan kochachan pachachan” maatri iruku :)வடா தோசா காரனுக தொல்லை தாங்க முடியல 🙂

  2. எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அரசினால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் என்றும் வரவேற்பவன் நான்.. நீங்கள் கூறியது போல் Digi Locker சேவையும் ஆதார் போலப் பெரிய வெற்றியைப் பெறும், சந்தேகமே வேண்டாம்… என்னுடைய கருத்தும் இது தான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @Ari

    “Meri pachaan na? Vivek solra “achachan kochachan pachachan” maatri iruku

    😀 😀 ஆமாம்.

    “வடா தோசா காரனுக தொல்லை தாங்க முடியல

    ஆமாம்… அது ஏன் இந்தி பெயரில் மட்டுமே வைக்கிறாங்க.. மற்ற மாநில மொழிகளிலும் அனைவரும் எளிதாக கூறும்படியான பெயரை வைக்கலாம்.

    @Yasin

    DigiLocker பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை ஆனால், இது இல்லாமல் இனி நம் வாழ்க்கையே இருக்காது என்பதே நிஜமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here