அசல் ஓட்டுநர் உரிமம் இனி தேவையில்லை!

1
அசல் ஓட்டுநர் உரிமம்

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்து இருக்க வேண்டும் என்று “வரலாற்று சிறப்புமிக்க” அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பொதுமக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. Image Credit

அசல் ஓட்டுநர் உரிமம்

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில்..

Digi Locker” தளத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் இணைத்து இருந்தால், அதையே அதிகாரப்பூர்வமாகக் காட்டலாம், அசல் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை

என்று மாநில அரசுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. தமிழக அரசும் இதை நடைமுறைப்படுத்தியது.

மின்னணு உரிமத்தை காட்டினால் போக்குவரத்துக் காவலர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பிரச்னை செய்தார்கள்.

இதனால், பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் திரும்ப அசல் உரிமத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலையானது.

இது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

தீர்ப்பில் நீதிபதி,

மின்னணு ஓட்டுநர் உரிமம் போதுமானது, அசல் உரிமம் கையில் வைத்து இருக்க வேண்டிய கட்டாயமில்லை” என்று அறிவித்துள்ளார்.

Digi Locker

மத்திய அரசின் Digi Locker தளத்தில் உங்கள் ஓட்டுநர், வாகன உரிமத்தை ஆதாருடன் இணைத்துக்கொள்ளுங்கள். பின் Digi Locker செயலி உங்கள் திறன்பேசியில் இருந்தால் போதுமானது.

எப்படியும் உங்கள் திறன்பேசி உங்கள் கைகளில் 100% இருக்கப்போகிறது. எனவே, உங்கள் உரிமங்களும் 100% இருக்கும், பிரச்சனையில்லை.

மேலும் விரிவான தகவல்கள் பின்வரும் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்

கொசுறு

என்னுடைய ஓட்டுநர் உரிமம் 20 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதால், இதில் இணைக்க முடியவில்லை. அடுத்த வருடம் புதுப்பிக்கும் போது சரி செய்து விடுவேன்.

வாகன உரிமம் பெயர் பிரச்னை காரணமாக Digi Locker ல் இணைக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வதென்று பார்க்க வேண்டும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. நிச்சயம் வரவேற்கதக்க ஒன்று!!! கண்டிப்பாக இந்த தகவல் அனைவர்க்கும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here