Paytm UPI Lite எப்படியுள்ளது?

10
Paytm UPI Lite

BHIM செயலி அறிமுகப்படுத்திய UPI Lite வசதியைத் தற்போது Paytm UPI Lite என்று Paytm நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளது. Image Credit

Paytm UPI Lite

UPI Lite பற்றி ஏற்கனவே விரிவாகக் கூறி விட்டேன்.

சுருக்கமாக,

வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்குப் பதிலாக, செயலியின் (App) Wallet ல் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்வது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு UPI க்குக் கட்டணம் என்று கிளப்பி விட்டதால், UPI Lite வசதியைப் பயன்படுத்தினால், அப்பிரச்சனையில்லை என்று கூறி இருந்தேன்.

அதாவது, ஒவ்வொரு முறையும் வங்கியைத் தொடர்பு கொண்டு பணம் செலுத்தாமல், Wallet ல் இருந்தே அனுப்புவதால், விரைவாகவும் எளிதாகவும் அனுப்ப முடியும்.

தற்போது பலரும் UPI பயன்படுத்துவதால், வங்கி ஸ்டேட்மென்ட் முழுக்க UPI பரிவர்த்தனை தகவலாக இருக்கும்.

இதற்கு UPI Lite பயன்படுத்தினால், Wallet க்கு அனுப்பும் பரிவர்த்தனை மட்டுமே இருக்கும், மற்றபடி தெளிவான வங்கி ஸ்டேட்மென்ட் காண முடியும்.

UPI Lite ல் இருந்து Wallet க்கு அனுப்பும் போது ஒரு மாதத்துக்கு எவ்வளவு முறை அனுப்புகிறோம் என்பதை வைத்துச் செலவுக் கணக்குக்கு வரம்பு இருக்கும்.

ஆனால், அதே வங்கியிலிருந்து UPI செலவு செய்யும் போது கட்டுப்பாடில்லாதவர்கள் கணக்கு இல்லாமல் அதிக செலவு செய்துவிட வாய்ப்புள்ளது.

தினமும் இருமுறை ₹2,000 (அதிகபட்சம் ஒரு நாளைக்கு ₹4,000) சேர்க்க முடியும், அதிகபட்சம் ₹200 வரை ஒரு பரிவர்த்தனையில் செலவு செய்ய முடியும்.

கிரெடிட் கார்டு UPI

கிரெடிட் கார்டு UPI வசதியையும் Paytm கொண்டு வந்தது பயனுள்ளதாக உள்ளது.

BHIM செயலியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால், பயன்படுத்தக் கடுப்பாக இருந்தது. அவசரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை.

ஆனால், Paytm ல் ஒரு பிரச்சனையும் இல்லை.

தற்போது Paytm செயலி மூலம், UPI, UPI Lite, Paytm Postpaid, Credit Card UPI என்று அனைத்து வழிகளிலும் எளிதாகப் பணத்தைச் செலுத்த முடிகிறது.

சில QR Code களில் கிரெடிட் கார்டு UPI வேலை செய்வதில்லை.

காரணம், சேமிப்பு கணக்கு இணைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது கிரெடிட் கார்டு UPI க்கு தேவையான முறையில் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

இருப்பினும் 80% QR Code களில் கிரெடிட் கார்டு UPI வேலை செய்கிறது.

கடைகளுக்கான (P2M) பரிவர்த்தனைக்கு Paytm செயலி மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தேன் ஆனால், Paytm Postpaid சேவையை நிறுத்திய பிறகு Paytm அதிகம் பயன்படுத்துவதில்லை.

தற்போது Google Pay சேவையைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறேன்.

இதற்கு ஒரு முக்கியக்காரணம் உள்ளது 🙂 . கூகுள் தரும் பல்வேறு சேவைகளால் பலனடைந்து வருகிறேன். ஜிமெயில், ட்ரைவ், மேப் என்று ஏராளமான சேவைகள்.

எனவே, ஒரு நன்றிக்கடனாக கூகுளுக்கு என்னால் முடிந்த உதவி 🙂 .

நீங்கள் என்ன UPI பயன்படுத்துகிறீர்கள்?

தொடர்புடைய கட்டுரைகள்

UPI Lite என்றால் என்ன?

UPI சேவைக்கட்டணம் விதித்தால் என்ன செய்வது?

கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. Paytm மற்றும் சமீபகாலமாக PhonPe யும் பயன்படுத்துகிறேன். மின்கட்டணம் மற்றும் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது. விளைபொருளை விற்பனை செய்தபோது வியாபாரி எனக்கு ஃபோன் பே மூலம் பணம் அனுப்பினார்.

  2. @அழகு

    Paytm பயன்படுத்துவதாக ஏற்கனவே கூறி இருந்தீர்கள்.

    எந்தக்கட்டணமாக இருந்தாலும், UPI வழியாகவே செலுத்தி விடலாம். மேற்கூறியது போல தற்போது பலரும் பணத்தை Gpay / PhonePe மூலமாகவே பெறுகிறார்கள்.

    இதற்கு எளிமை தான் காரணம். சில்லறை தட்டுப்பாடு போன்றவற்றை தவிர்க்கலாம். அதோடு உடனடியாக செலுத்துவதால், விரைவில் பணி முடிகிறது.

    இருவருடங்களுக்கு முன் எழுதியது.. தற்போதும் இதே நிலை தான்.

    https://www.giriblog.com/phonepe-google-pay-paytm-which-is-best-upi/

  3. Nan iPhone use panren. iOS paytm app ku innum upi lite & credit card upi rendume varla. Upi lite coming soon nu pottu irukanga. Credit card upi patthi endha update um illa. Bhim app la Error vandhute iruku. Add pannave mudiyala. Nan ipo dha rupay credit card ku change panni thara solli HDFC ta kettu irukken. Bhim upi la bank madhiri namma rupay credit card already use panna dha adhula link panra option varuma? Indha number ku endha credit card um illa nu varudhu. Rupay card vandha udane apo update aaguma? indha iOS edhuvum first vara matengudhu. Or avanga Android ku dha first tharanga. Romba kashtam pa.

  4. @ஹரிஷ்

    வழக்கமாக Android க்கு தான் முதலில் கொடுப்பார்கள் குறிப்பாக இந்தியா தொடர்பானவைகளுக்கு.

    RuPay க்கு மாறியே பிறகே உங்களால் Add செய்ய முடியும். அதற்கு முன் முடியாது.

    கிரெடிட் கார்டு UPI ரொம்ப உதவியாக உள்ளது. தற்போது 90% இதைத்தான் பயன்படுத்துகிறேன். மீதி 10% UPI Lite பயன்படுத்துகிறேன்.

    எப்போதாவது CRED UPI.

    • நன்றி கிரி. HDFC CREDIT visa CARD ஐ ரூபே கார்டாக மாற்றி தருமாறு கேட்டிருக்கிறேன். வந்தவுடன் முயற்சித்து பார்த்து கூறுகிறேன்.

  5. ஹாய் கிரி. நீங்கள் சொன்னதுபோல தான் நடக்கிறது. நான் ஏற்கனவே HDFC MILLENNIA VISA CREDIT CARD தான் உபயோகிக்கிறேன். அதனால் எனக்கு கேட்டவுடன் Rupay card கொடுத்து விடுவார்கள் என்று நினைத்தேன். அதற்குண்டான form பூர்த்தி செய்து HDFC க்கு அனுப்பினேன். தெளிவாக Moneyback plus Rupay card வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்களுக்கு Card அனுப்பிவிட்டோம் என்றார்கள் நான் rupay தானே கேட்டேன் ஏன் எனக்கு visa card என்று கேட்டேன் அதற்கு அந்த அதிகாரிக்கு விஷயம் சொல்லத்தெரியவில்லை. உங்கள் இக்கட்டுரை படித்ததனால் எனக்கு அவர்கள் visa அனுப்பிய பிறகே Rupay அனிப்புவார்கள் என தெரிந்தது. கொடுமை என்னவென்றால் அப்படி ஒரு ரூல்ஸ் இருப்பதே அங்கு வேலை செய்யும் அவர்களுக்கு தெரியவில்லை. bhim இல் HDFC RUPAY CARD லிங்க் ஆகி இருந்தது. அதை வைத்து நானே கேட்டேன். எனக்கு Rupay card அனுப்பி இருக்கிறீர்களா என்று. அவர்கள் ஆம் என்றார்கள். ஒரு வாரத்தில் வரும் என்றார்கள். ஏன் இப்படி என்று அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை. என்னமோ போங்க. ஒரே Confusion

  6. ஃபோன்பே app இல் கிரெடிட் கார்டு யுபிஐ default ஆக வைத்துக்கொள்ளலாம். இது அதிகாரபூர்வமாக ஃபோன்பே தெரிவிக்கவில்லையே தவிர கடைசியாக அல்லது அடிக்கடி எந்த மோடில் பே செய்கிறோமோ அதிலேயே default ஆக இருக்கிறது. இது மிக வசதியாக உள்ளது. முயற்சித்து பாருங்கள்.

  7. @ஹரிஷ்

    நான் முழுக்க Paytm தான் பயன்படுத்துகிறேன். இது எனக்கு பிரச்சினையில்லாமல் உள்ளது.

    PhonePe ல் கார்டை சேர்த்து விட்டேன் ஆனால், பயன்படுத்த இன்னும் துவங்கவில்லை.

    ஒருவழியாக RuPay கார்டு வாங்கி விட்டீர்கள் போல 🙂 .

  8. ஆமாம். வாங்கிவிட்டேன். நீங்கள் சொன்னதுபோல visa card கொடுத்து பின்னரே ரூபே கார்டு அனுப்புகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. மிக நன்றாக உள்ளது. ஆனால் நான் ஏற்கனவே வைத்திருந்த HDFC MILLENNIA card இல் rewards points அதகம் இதில் கம்மி தான். அதில் ரூபே இல்லை. அதனால் மணி ப்ளஸ் ரூபே கார்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. மிக உபயோகமாக உள்ளது. உங்கள் ப்ளாக் படித்து நான் நிறைய விஷயம் தெரிந்துகொள்கிறேன். தினமலருக்கு பிறகு என்னுடைய favourite Site கிரிப்ளாக் தான்😊

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here