“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 1)

55

ந்தப் பதிவு சாதாரணத் திரை ரசிகனாக இருந்து எழுதியது. எனவே இதைப் படித்து விட்டு ஏன் இப்படி இருக்கறீங்க? திரையில் மட்டும் ரசிகனாக இருங்க. நன்கு படித்தும்! இதைப் போல ஏன் செய்கிறீர்கள்? Image Credit

இந்த மாதிரி நடிகர்களைத் தூக்கி வைத்து ஆடுவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ! நீங்கெல்லாம் எப்ப தான் திருந்தப் போறீங்களோ!! என்பது போன்ற வழக்கமான அறிவுரை! கருத்துகளைத் தவிர்க்கவும்.

பதிவை ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் ஜாலியாக எடுத்துக்கொள்ளவும்

தலைவர் படம்

னைத்து திரை ரசிகர்களுக்கும் தனக்குப் பிடித்த நடிகரின், இயக்குனரின் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அல்லது முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்பது கீழ் தட்டு மேல் தட்டு ரசிகர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

அதுவும் இதைப் போல விசயங்களில் தலைவர் படம் என்றால் அது பற்றிச் சந்தேகமே தேவையில்லை. முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் வாங்க அடிதடியே நடக்கும்.

யார் யாரிடமோ சொல்லி டிக்கெட் வாங்கித் தர சொல்லி படுத்தி எடுப்பார்கள், படம் ரிலீஸ் ஆகும் இரண்டு நாள் முன்பு பார்த்தீர்கள் என்றால் டிக்கெட் வாங்கியாச்சா, வாங்கியாச்சா என்று இதே கேள்வியா தான் இருக்கும் ரசிகர்களுக்குள்.

பல சிபாரிசுகள் எல்லாம் வேண்டும் இதற்கு..பொய் கூறவில்லை.

வேண்டும் என்றால் எந்திரன் படம் வரும் போது பாருங்கள்..எங்கெல்லாம் கூறி சிபாரிசு செய்து டிக்கெட் வாங்குகிறார்கள் என்று.

படம் வெளிவரும் இரண்டு நாள் முன்பு இருந்து எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள்.

மச்சி! டிக்கெட் வாங்கிட்டியா!..டேய்! அவன் எப்படியோ இரண்டு டிக்கெட் வாங்கிட்டாண்டா! எனக்கு ஒண்ணு வாங்கிக் கொடுக்கச் சொல்லுடா!

மாமே! அவன் நாலு டிக்கெட் வைத்து இருக்கேன்னு ஓவரா சீன் போடுறாண்டா!

டேய்! எப்ப்படியாவது வாங்கிக் கொடுடா ப்ளீஸ்! ப்ளீஸ்!! ப்ளீஸ்!!! இதைப் போன்ற வசனங்களைக் கேட்கலாம் 🙂 .

வயித்தெரிச்சல் பார்டீஸ்

தலைவர் படம் ரசிகர்கள் தான் முண்டியடித்துப் பார்க்கிறார்கள் என்றால் ரஜினியை பிடிக்காதவர்களும் உடனே பார்த்து விடுவார்கள்.

எதற்கு என்றால் படம் மொக்கை குப்பை சொத்தை என்று படம் எப்படி இருந்தாலும் இதைப் போல விமர்சனம் எழுத தட் மீன்ஸ் வயித்தெரிச்சல் பார்டீஸ் 🙂 .

இது ரஜினி படம் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களுக்கும் ஏற்படும் ரஜினிக்கு மற்றவர்களை விட அதிகம்.

எனக்கு முதல் காட்சி பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் இருந்தாலும் இந்தப் பால் ஊத்துறது, கொடி பிடிக்கிறது, கட் அவுட் வைக்கிறது இதில் எல்லாம் உடன்பாடு இல்லை.

நம்ம சும்மா விசில் அடிப்பது கூட்டத்தோடு கூட்டமா ஒரு ஆட்டம் போடுவது இது தான் நம்ம வழக்கம். இந்த அளவோடு என் கொண்டாட்டம் முடிந்து விடும்.

பாட்ஷா

நான் பாட்ஷா படம் பார்த்ததிலிருந்து ரஜினி ரசிகன் ஆனேன்.

அதன் பிறகும் எனக்கு முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை அல்லது அந்த அளவிற்கு ஆர்வமில்லை அல்லது துணையில்லை.

அதன் பிறகு சென்னை வந்தவுடன் என் அறை நண்பன் தீவிர தலைவர் ரசிகன் அவனுடன் சேர்ந்து போக ஆரம்பித்து விட்டேன்.

இது வரை நாங்கள் இருவரும் அனைத்து ரஜினி படமும் முதல் நாள் பார்த்து விட்டோம், குசேலன் மட்டும் சேர்ந்து பார்க்கவில்லை (நான் சிங்கப்பூர் வந்ததால்).

அருணாச்சலம்

முதன் முதலாக முதல் காட்சி என்று சென்றது “அருணாச்சலம்” படம் தான். படம் நன்றாக இருந்தாலும் ரஜினியின் அந்த வசீகரமான ஸ்டைல் இதில் என்னவோ குறைந்தது போன்ற உணர்வு.

அதனால் பெரிய பாதிப்பை என்னில் ஏற்படுத்தவில்லை, பாடல்களும் சுமார் ரகம் தான். படம் 150 நாட்கள் ஓடியதாக நினைவு

இந்தப் படம் பார்த்தது ஆல்பட் திரை அரங்கில், ரஜினி படம் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது இந்தத் திரை அரங்கம் தான்.

இதில் பார்த்தால் தான் முதல் நாள் படம் பார்த்த மாதிரியே இருக்கும், அந்த அளவிற்கு ரசிகர்களிடையே பிரபலம்.

அதற்கு தகுந்த மாதிரி திரை அரங்கு முதலாளியும் ரஜினி ரசிகர், எங்குப் பார்த்தாலும் ரஜினி சம்பந்தப்பட்ட ஷீல்டுகளும் படங்களும் வசனங்களும் என்று இருக்கும்.

புதுசா வருகிறவர்கள் இது ரஜினியின் திரை அரங்கா என்று சந்தேகம் வருமளவிற்கு இருக்கும். ரஜினியின் அனைத்து படங்களும் வெளியாகி விடும்.

முத்துப் படம் இங்கு வெளியாகவில்லை (அப்போது பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டு இருந்தன, அதனால் தேவியில் வெளியாகியது).

அதே போலச் சாந்தியில் (சிவாஜி தயாரிப்பு) சந்திரமுகி வெளியானதால் அந்தப் படமும் இங்கு வெளியாகவில்லை.

படையப்பா

அதன் பிறகு சென்றது “படையப்பா” அபிராமி திரை அரங்கில், சும்மா படம் பின்னிவிட்டது, கலக்கலான திரைக்கதை, காட்சி அமைப்புகள், ஸ்டைல் தாறுமாறு.

திரைஅரங்கில் செம ஆட்டம், முதன் முதலா திரை அரங்கில் ஆடியது இந்தப் படத்திற்குத் தான். சண்டைக் காட்சிகளும் பஞ்ச் வசனங்களும் இதில் ரொம்பப் பிரபலம், சரவெடியா இருக்கும்

மாலை ஐந்து மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கி (அதுக்குத் தான் கிடைத்தது) சென்று இருந்தோம்.

சாதாரணப் படம் அல்லது படம் வெளி வந்து ரொம்ப நாள் ஆகி படம் ஆரம்பிக்க நேரமானாலே ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள் 🙂 .

அதுவும் தலைவர் பட முதல் நாள் படத்திற்குச் சொல்லவே தேவையில்லை.

மணி 5.10 ஆகியும் உள்ளேயே விடவில்லை, எல்லோரும் தள்ளுதள்ளுனு தள்ளறாங்க.

கண்ணாடி கதவு

முன்னாடி வேறு கண்ணாடி கதவு…..திறக்கவில்லை என்றால் அழுத்தம் தாங்காமல் உடைந்து விடும் நிலைமை. அவனவன் பொறுமை இழந்து கத்த ஆரம்பித்து விட்டான்.

முந்தையக் காட்சி இன்னும் நேரப்படி முடியாததால் அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள்..நேரம் ஆக ஆகத் தள்ளுமுள்ளு அதிகம் ஆகி விட்டது.

இன்னும் கொஞ்சம் நிமிடம் தாமதம் செய்தாலும் கண்ணாடி கதவு உடைந்து விடும் போல நிலைமையில் கதவு திறந்து விட்டார்கள்.

அவ்வளோ தான் டிக்கெட் கலெக்டர் ஒரு வழி ஆகிட்டாரு விதியை நொந்துட்டே எல்லோரையும் அனுப்பி வைத்தாரு.

ரம்யாகிருஷ்ணன்

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை அருமை.

ரம்யா கிருஷ்ணன் கடைசியில் எல்லோரும் பேசும் வழக்கமான வசனத்தையே பேச.. நாங்களும் வழக்கம் போல அதைப் பற்றி எல்லாம் கண்டுக்காம பார்த்துட்டு இருக்கும் போது…

திடீர்னு “அப்படின்னு சொல்லுவேன்னு நினைத்தியா” ன்னு கேட்க, எல்லோரும் மறுபடியும் பரபரப்பாகிட்டாங்க.

அதன் பிறகு ரம்யாகிருஷ்ணன் சொல்லும் வசனமும் அதற்கு ரஜினி சொல்லும் வசனமும் அசத்தலாக இருக்கும்.

ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி, படம் சூப்பர் சூப்பர்ன்னு.

இந்த இரண்டு படங்களும் நல்ல அனுபவம்.. ஆனால், அடுத்தப் படம் “பாபா” பப்படம் ஆகி விட்டது.

எண்ணையில் பொறித்த வாழைக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிட்டாங்க படம் பார்த்தவங்க எல்லோரும்.

அப்போது அது பெரிய சோக நிகழ்வாக!! இருந்தாலும் அதை இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது.. அது பற்றிய அனுபவங்கள் எனது அடுத்த கட்டுரையில் 🙂 .

“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 2)

“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (இறுதி பகுதி)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

55 COMMENTS

  1. //ஏன் இப்படி இருக்கறீங்க? திரையில் மட்டும் ரசிகனாக இருங்க. நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்? இந்த மாதிரி நடிகர்களை தூக்கி வைத்து ஆடுவதை எப்போது தான் நிறுத்த போகிறீர்களோ! நீங்கெல்லாம் எப்ப தான் திருந்த போறீங்களோ!!!!!//

    ரிப்பீட்டேய்

    நீங்க எழுதினதுக்கு தான்!

  2. //அதன் பிறகு சென்றது “படையப்பா” அபிராமி திரை அரங்கில்,//

    படையப்பா படம் ஆல்பர்ட் தியெட்டரில் ரீலீஸ் ஆகியது.

    முதல் காட்சியிலே ஒரு தீவிர! ரசிகர் ஸ்கிரினை கிழித்து விட்டார்!

  3. உங்களை சின்ன ரஜினின்னு மக்கள் சொல்றதுல தப்பே இல்ல :)))))))))))))))))))

  4. //Mahesh said…
    உங்களை சின்ன ரஜினின்னு மக்கள் சொல்றதுல தப்பே இல்ல :)))))))))))))))))))//

    🙂

    =============================================================

    //வெங்க்கி said…
    மறக்க முடியாத என் அனுபவம்…

    அபிராமி தியேட்டர் ல் “தர்ம துரை” முதல் காட்சிக்கு என் “ரஜினி ரசிக நண்பனுடன்” சென்று வாயை விட்டு “தர்ம அடி” வாங்கி கட்டிக்கொண்டது தான்.. //

    வாங்க வெங்கி எப்படி இருக்கீங்க! ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க.. வந்தோட இல்லாம தலைவர வேற நல்லா வாரி இருக்கீங்க :-)))

    ஆஸ்திரேலியாவிற்கு ஆட்டோ அனுப்பனுமா :-))))

    ==============================================================

    //Suresh said…
    oru padathukum ennoda anbupavum appadiyae than.. arumiaya iruku//

    பலருக்கும் இதே அனுபவம் இருக்கும் 🙂

    ==============================================================

    //வால்பையன் on 10:48 AM, April 16, 2009 said…
    ரிப்பீட்டேய்
    நீங்க எழுதினதுக்கு தான்!//

    ஹா ஹா ஹா அருண் தெரியும் நீங்கெல்லாம் இப்படி சொல்லுவீங்கன்னு …

    //படையப்பா படம் ஆல்பர்ட் தியெட்டரில் ரீலீஸ் ஆகியது//

    சென்னையில் வழக்கமாக ரஜினி படம் வெளியாகும் திரை அரங்கில் இவை அனைத்தும் அடக்கம்.

    ===========================================================

    //Bleachingpowder said…
    கலக்கல்ஸ் கிரி, இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம் பதிவை, சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு//

    கில்லாடி அருணா இருக்கீங்க ..நான் இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருந்தேன்.. ஹி ஹி படிக்கிறவங்க தூங்கிட்டாங்கன்னா என்ன பண்ணுறதுன்னு கொஞ்சம் எடிட்டிங் வேலை செய்துட்டேன் 😉 உங்களுக்காக அடுத்ததை கொஞ்சம் விரிவா எழுதறேன்

    //படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரைக்கும் கத்து கத்துனு கத்தி தொண்டையே வறண்டிடுச்சு //

    இது எனக்கு சிவாஜிக்கு ஏற்பட்டது

    //சிவாஜி படத்திற்கு முதல் நாள் மாலை காட்சிக்கு டிக்கட் எடுத்துட்டு தெரியாதனமா ப்ளாக்கை ஓப்பன் பண்ணீட்டேன் அங்க ஒரு வீனாபோனவன் படம் கடின்னு எழுதீட்டான்//

    ஹா ஹா ஹா ஹா இதுக்கே இப்படின்னா குசேலன் வெளியான அன்னைக்கு :-))))

    //எந்திரம் படம் வெளிவரதுக்கு முன்னாடி ரெண்டு நாள் பின்னாடி ரெண்டு நாள் இண்டெர்நெட் பக்கமே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்//

    :-)))))))) நானும் தான்

    //குசேலம் படம் முதல் நாள் பார்த்தாலும் தியேட்டர் சரியில்லை. ஏன்னா பார்த்தது பெங்களுர் பிவிஆர்ல ஒரு பயபுள்ளையும் விசிலடிக்கலை, இண்டர்வெலுக்கு அப்புறம் நானும் அடிக்கல :))//

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    ======================================================

    //saran said…
    ஏன் இப்படி இருக்கறீங்க? திரையில் மட்டும் ரசிகனாக இருங்க. நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்? இந்த மாதிரி நடிகர்களை தூக்கி வைத்து ஆடுவதை எப்போது தான் நிறுத்த போகிறீர்களோ! நீங்கெல்லாம் எப்ப தான் திருந்த போறீங்களோ!!!!!//

    என்னங்க சரண் பண்ணுறது? உங்களை மாதிரி நான் ரொம்ப டீசென்ட் இல்ல. பகுத்தறிந்து பார்க்க தெரிவதில்லை ..லோக்கல் கையி.. இது போன்ற சந்தோசங்கள் தான் எங்களுக்கு பெரிய சந்தோசங்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவரைக்கும் சரி என்பது என் கொள்கை.

    உங்கள் முதல் வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி

    ===========================================================

    //Bleachingpowder said…
    Nooooooooo இத நான் ஒத்துக்க மாட்டேன். நாங்கெல்லாம் முதல் நாள்ல ரெண்டு ஷோ பார்த்தோம். கவுண்டர் கலக்கிருப்பாரு, மந்திரம் தந்திரம்னு தலைவர் பேசும் போது மட்டும் தான் தலைய சொறிஞ்சோம் :))//

    ஹா ஹா ஹா ஹா

    அருண் நீங்க என்னோட அடுத்த இடுகையை படிங்க ..அதுல திரைஅரங்கில் நடந்த காமெடி பற்றி கூறி இருப்பேன்.. அதாவது ரசிகர்கள் மனநிலை :-))))

  5. //எம்.எம்.அப்துல்லா on 12:52 PM, April 16, 2009 said…
    வெயிட்…வெயிட்…வெயிட்… இன்னும் கொஞ்ச நாள்ல அவர பெரிய கிரின்னு சொல்லப் போறாங்க//

    ஹா ஹா ரெடி ஆகிட்டே இருக்காரு :-))

    //பிளீச்சிங் அண்ணே நீங்க உண்மையிலேயே பாபா படம் பார்த்தீங்களா??? டவுட்டாகீதே???//

    :-)))))) அருணை டென்ஷன் பண்ணுனீங்க ..அவ்வளோ தான்

    //ஆமாஆமா…நான் கூட போன படத்துகு டிக்கெட் வாங்க பிரதமர் கிட்ட மனு குடுக்கலாமான்னு யோசிச்சேன்.//

    ஹா ஹா ஹா ஹா

    அப்துல்லா இப்படி உங்க கட்சி கூட்டணி தர்மத்தை மதிக்காமல் அவர் சும்மா நாச்சிக்கும் தான் (உட்கார்ந்து) இருக்காரு எனபதை இப்படி பொதுவில் கிண்டல் பண்ணிய உங்களை வன்மையா கண்டிக்கிறேன் ஹி ஹி ஹி :-)))))

  6. கிரி

    தலைவரோட படம் பாத்தத பத்தி சொல்லனும்னா, அதுக்கு இந்த ஆயுளே போதாது.

    அப்படி ஒரு கலக்கல், நிகழ்வுகள், நினைவுகள்.

    1982 – தங்க மகன் – தீபாவளி முதல் காட்சி (தியேட்டரே அதிர்ந்தது)
    1983 – பாயும் புலி – பொங்கல் – முதல் காட்சி (இந்த படத்திற்கும், சண்டைகளுக்காக)

    இதுவே கலக்கல்னா, பின்னாளில் வந்த மற்ற கலக்கல் படங்களுக்கு என்னென்ன அலம்பல் பண்ணி இருப்போம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

    ஹ்ம்ம். அது ஒரு கனாக்காலம்.

    இப்போ கூட நான் துபாய் வந்து ஒரு மாதத்தில் “பாபா” ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் அன்று சாயங்காலம் நாங்கள் ஒரு 80 பேர் (நண்பர்கள்) பார்த்தோம். அடுத்த காட்சி, 140-க்கும் மேற்பட்ட நண்பர்கள் பார்த்தார்கள். ஒரே காட்சிக்கு 250 – 275 டிக்கட் கிடைக்காததால்.

    பின் சந்திரமுகி-யும் கலக்கல்தான். இது ஒரு 4-5 வாரங்கள் ஓடியது.

    அனைத்தையும் விட, சிவாஜி-யால் துபாய் அதிர்ந்தது என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. சாதாரணமாக எந்த ஒரு படத்தின், எந்த ஒரு காட்சிக்கும், 50-60 பேர் கூட வராத நிலையில், ஒரே நபருக்கு எவ்வளவு டிக்கட் கேட்டாலும் கொடுப்பார்கள் (ரஜினி படம் தவிர).

    ஆனால், சிவாஜி படத்திற்கு, முதன்முதலாக, நான் கண்ட ஒரு அறிவிப்பு (ரஜினிபான்ஸ்.காம்-ல் புகைப்படமாக இன்னும் உள்ளது) – ஒரு நபருக்கு 5 டிக்கட் மட்டும். நான் கவனித்ததில், துபாயில் 70 நாட்கள்+ ஓடியது, சிவாஜி மட்டுமே.

    சொல்ல ஆரம்பித்தால், நான் சொன்னதுபோல், இந்த ஆயுள் போதாது.

  7. //இது வரை நாங்கள் இருவரும் அனைத்து ரஜினி படமும் முதல் நாள் பார்த்து விட்டோம்//

    எனக்கு சிவாஜி படம் மட்டும்தானுங்க முதல் நாள் முதல் ஷோ மாட்டுச்சு:)அதுவும் முன்பதிவு வசதி இருந்ததால்.இப்ப கமலையும் விடறதில்லை,ரஜனியையும் விடறதில்லை

    முன்பு முண்டியடிச்சு முன்னுக்குப் போற ஷோக்கே தனிதான் என்றாலும் கிணற்றுவெள்ளம்தானே மெதுவாப் பிடிச்சா போச்சு நினைப்பிலே 10 நாள்,15 நாள் இடைவெளிதான் எப்பவுமே.

  8. //சிவாஜி படத்திற்கு முதல் நாள் மாலை காட்சிக்கு டிக்கட் எடுத்துட்டு தெரியாதனமா ப்ளாக்கை ஓப்பன் பண்ணீட்டேன் அங்க ஒரு வீனாபோனவன் படம் கடின்னு எழுதீட்டான், கடுப்பாயிடுச்சு. எந்திரம் படம் வெளிவரதுக்கு முன்னாடி ரெண்டு நாள் பின்னாடி ரெண்டு நாள் இண்டெர்நெட் பக்கமே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்//

    இஃகி.கீ.கீய்

  9. மறக்க முடியாத என் அனுபவம்…

    அபிராமி தியேட்டர் ல் “தர்ம துரை” முதல் காட்சிக்கு என் “ரஜினி ரசிக நண்பனுடன்” சென்று வாயை விட்டு “தர்ம அடி” வாங்கி கட்டிக்கொண்டது தான்..

    ரஜினியை படத்தில் முதல் சீனில் பார்த்தவுடன் என் நண்பனிடம் மெல்ல ” எண்டா, கிழவனை கிழட்டு வேஷம் போட்டு காண்பிக்கிறாங்க” அப்படின்னு சொல்லிட்டேன்.. பின்னல் இருந்து ரசிக கூட்டம் எனக்கு..தர்ம அடி ….நண்பன் தலையிட்டு…”அவரே வருத்தப்படறாரு ..ஏன்யா அவரை அடிக்கிறீங்க” என்று சமாதான படுத்த..தப்பித்தேன்….அதன் பின்பு, ரஜினி படம் முதல் காட்சி போவதில்லை …”அடிக்கு பயந்து தான்”

  10. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படையப்பா க்ளைமாக்ஸ் எல்லோரும் ரசித்த ஒன்றாகும்:)!

  11. கலக்கல்ஸ் கிரி, இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம் பதிவை, சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு.

    நான் அண்ணாமலை படத்திலிருந்து குசேலன் வரைக்கும் தலைவர் படம் எல்லாமே முதல் நாள் தான். பாபா படம் இன்னும் Special காலை காட்சி, இரவு காட்சி ஒரே நாளில். படையப்பா படம் கோவை கே.ஜி ராகம் தியேட்டரில் இரவு காட்சிக்கு டிக்கட் எடுத்துட்டு மத்தியானமே போயிட்டோம், படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரைக்கும் கத்து கத்துனு கத்தி தொண்டையே வறண்டிடுச்சு :)).

    சிவாஜி படத்திற்கு முதல் நாள் மாலை காட்சிக்கு டிக்கட் எடுத்துட்டு தெரியாதனமா ப்ளாக்கை ஓப்பன் பண்ணீட்டேன் அங்க ஒரு வீனாபோனவன் படம் கடின்னு எழுதீட்டான், கடுப்பாயிடுச்சு. எந்திரம் படம் வெளிவரதுக்கு முன்னாடி ரெண்டு நாள் பின்னாடி ரெண்டு நாள் இண்டெர்நெட் பக்கமே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்

    குசேலம் படம் முதல் நாள் பார்த்தாலும் தியேட்டர் சரியில்லை. ஏன்னா பார்த்தது பெங்களுர் பிவிஆர்ல ஒரு பயபுள்ளையும் விசிலடிக்கலை, இண்டர்வெலுக்கு அப்புறம் நானும் அடிக்கல :))

    தலைவரோட ஒவ்வொரு படத்தோட முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை தனித்தனி பதிவாகவே எழுதலாம்.

  12. //முதல் காட்சியிலே ஒரு தீவிர! ரசிகர் ஸ்கிரினை கிழித்து விட்டார்!//

    இதெல்லாம் முதல் நாள்ல ரொம்ப ஜகஜம் வாலு. மதுரையில ரஜினி வரும் முதல் காட்சியில் கிட்ட தட்ட ஒரு இருபத்தி அஞ்சு பேரு ஸ்கிரின் முன்னாடி நின்னு கையில சூடத்தை பத்த வச்சு ஆரத்தி எடுப்பாங்க 🙂

  13. //படம் “பாபா” பப்படம் ஆகி விட்டது, எண்ணையில் பொறித்த வாழைக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிட்டாங்க படம் பார்த்தவங்க எல்லோரும்//

    Nooooooooo இத நான் ஒத்துக்க மாட்டேன். நாங்கெல்லாம் முதல் நாள்ல ரெண்டு ஷோ பார்த்தோம். கவுண்டர் கலக்கிருப்பாரு, மந்திரம் தந்திரம்னு தலைவர் பேசும் போது மட்டும் தான் தலைய சொறிஞ்சோம் :))

  14. //இந்த பதிவு சாதாரண திரை ரசிகனாக இருந்து எழுதியது. எனவே இதை படித்து விட்டு ஏன் இப்படி இருக்கறீங்க? திரையில் மட்டும் ரசிகனாக இருங்க. நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்? இந்த மாதிரி நடிகர்களை தூக்கி வைத்து ஆடுவதை எப்போது தான் நிறுத்த போகிறீர்களோ!//

    ம்ம்ம்ம் எப்பதான்…. நன்றாக உள்ளது

  15. //தலைவர் படம் என்றால் அது பற்றி சந்தேகமே தேவையில்லை.//

    யாருக்கு தலைவர்? ஏன் தலைவர்? என்று சொல்லாதது குறையா இருக்கு நண்பா…

  16. // இந்த பால் ஊத்துறது, கொடி பிடிக்கிறது, கட் அவுட் வைக்கிறது இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. நம்ம சும்மா விசில் அடிப்பது கூட்டத்தோடு கூட்டமா ஒரு ஆட்டம் போடுவது இது தான் நம்ம வழக்கம். இந்த அளவோடு என் கொண்டாட்டம் முடிந்து விடும்.//
    இரண்டுக்கும் குறைந்த பச்ச வித்தியாசம்?

  17. //R.Gopi said…
    இதுவே கலக்கல்னா, பின்னாளில் வந்த மற்ற கலக்கல் படங்களுக்கு என்னென்ன அலம்பல் பண்ணி இருப்போம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க//

    🙂 எனக்கு அப்ப எல்லாம் நண்பர்கள் வட்டம் குறைவு ..அதனால் எனக்கு வாய்ப்பில்லை

    //1982 – தங்க மகன் – தீபாவளி முதல் காட்சி (தியேட்டரே அதிர்ந்தது)
    1983 – பாயும் புலி – பொங்கல் – முதல் காட்சி//

    உங்களை போல எனக்கு கம்பெனி கிடைத்து இருந்தால் இன்னும் கலக்கலாக இருந்து இருக்கும்

    //அனைத்தையும் விட, சிவாஜி-யால் துபாய் அதிர்ந்தது என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை//

    உண்மை தான். இதை பலர் கூறி இருக்கிறார்கள். rajinifans.com லும் இதை பற்றி போட்டு இருந்தார்கள்.

    =============================================================

    //எம்.எம்.அப்துல்லா said…
    நான் “ஆடி மாசம் காத்தடிக்க “ அப்பிடின்னு ஸ்டைலா சிலுக்க லுக்குவுட்டுக்குட்டு பாடுனாருல்ல அப்ப ரசிகன் ஆனேன் (சிலுக்குக்கும் சேர்த்து)//

    ஹா ஹா நக்கலு

    //அண்ணே அதிகமான பணிகளால் கடந்த இரண்டு இடுகைகளில் பின்னூட்டம் போட முடியல. அதான் சேர்த்து வச்சு கும்மிட்டேன். கோபமில்லையே???//

    அதனால என்னங்க அன்பு மனசுல இருந்தா சரி.. 😉

    //உண்மையச் சொன்னா ஒத்துக்கிட்டுதான ஆகனும் :))//

    why blood same blood 🙂

    //சரிண்ணே கடமை அழைக்கின்றது. வருகிறேன். பை :))//

    சரிங்கண்ணே அப்துல்லா அண்ணே! நேரமிருக்கும் போது வாங்க

    ===============================================================

    //பரிசல்காரன் said…
    சூப்பர் பதிவு நண்பா..

    எந்திரனுக்காகக் காத்திருப்போம்.//

    வாங்க கே கே நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க நன்றி

    ===============================================================

    //ராஜ நடராஜன் said…
    எனக்கு சிவாஜி படம் மட்டும்தானுங்க முதல் நாள் முதல் ஷோ மாட்டுச்சு:)அதுவும் முன்பதிவு வசதி இருந்ததால்.இப்ப கமலையும் விடறதில்லை,ரஜனியையும் விடறதில்லை//

    நான் கமல் படம் இந்தியன் பார்த்தேன் ..

    //முன்பு முண்டியடிச்சு முன்னுக்குப் போற ஷோக்கே தனிதான் என்றாலும் கிணற்றுவெள்ளம்தானே மெதுவாப் பிடிச்சா போச்சு நினைப்பிலே 10 நாள்,15 நாள் இடைவெளிதான் எப்பவுமே//

    அடிச்சு பிடிச்சு போகிற த்ரில்லே தனி தான்

    ============================================================

    //Nags said…
    படிக்க படிக்க சலிக்காத பதிவு …என்னை முதல் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு அழைத்து வந்தது தலைவரை பற்றி நீங்கள் எழுதிய பதிவுதான் … எந்திரன் வரும் வரை ரஜினி பற்றிய பதிவுகள் இடைவெளி இல்லாமல் தொடரட்டும் ……//

    🙂 வாங்க Nags முடிந்த வரை பதிவிடுகிறேன். என் பதிவு உங்களை கவர்ந்தது எனக்கு சந்தோசமே

    =============================================================

    //வெங்க்கி said…
    அடங்கொய்யாளே தியேட்டர் ல வாங்கினது பத்தாம நீங்க வேற ஆட்டோ அனுப்பணுமா?? நான்தான் அங்கனையே வாயை குடுத்து …@%^&#^ புண்ணாக்கி கிட்டேனே ? அதுக்கு மேல என்ன வேணும்….:((//

    :-)))))))))

    ============================================================

    //ARASIAL said…
    எதுக்கு, யாருக்கு பயந்து பம்மி பம்மி எழுதறீங்க//

    அட! இதிலேன்னங்க பம்மி பம்மி எழுத இருக்கு…எனக்கு கிடைத்த அனுபவங்களே முதல் இரண்டு படத்தில் இவ்வளோ தான்

    //துள்ளலாக ஆரம்பித்துள்ளீர்கள். (அந்த முதல் பாரா தவிர) அடுத்த பதிவையும் போடுங்க…சீக்கிரமா!//

    அந்த பாராவ போடலைனு வைங்க.. இந்நேரம் பாதி கமெண்ட் அது தான் இருக்கும்..அதற்க்கு பதில் அளிப்பது போர். அதை போல கமெண்ட்களை குறைப்பதற்க்கே அதை எழுதினேன்..

    அடுத்த பதிவை இன்னும் கொஞ்சம் விரிவா எழுத முயற்சிக்கிறேன்

    ============================================================

    //ஷண்முகப்ரியன் said…
    :-)//

    வாங்க சார் எதுக்கு வம்புன்னு புன்னகையோட போய்ட்டீங்களா..:-))

    இது ரத்த பூமி ஹா ஹா ஹா (வடிவேல் ஸ்டைல் ல் படிக்கவும்)

    ============================================================

    //வெங்க்கி said…
    "அரசியல்" சொன்ன மாதிரி எழுதுங்க….சிங்கபூருக்கு "ஆட்டோ" வரும்…ஆனா…"வராது"…:))//

    :-)) அடுத்த பதிவுல எழுதிடுவோம்

    ============================================================

    //♠புதுவை சிவா♠ said…
    கிரி ஒயிட் அவுஸ் வேலை பார்க்கும் நண்பர் மூலமா எந்திரன் படத்திற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து இருக்கிறேன்//

    டிக்கெட் க்கு ஏற்பாடு செய்வது இருக்கட்டும் ..அவர் மூலமா ஏதாவது இந்த Layoff தொல்லை இல்லாத வேலை வாங்கி தரமுடியுமான்னு பாருங்க 😉 ஹி ஹி

    ============================================================

    //ராமலக்ஷ்மி said…
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படையப்பா க்ளைமாக்ஸ் எல்லோரும் ரசித்த ஒன்றாகும்:)!//

    பட்டாசா இருக்கும்.. ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் கவர்ந்த காட்சி

    ====================

  18. //Mahesh on 7:01 AM, April 16, 2009 said…
    உங்களை சின்ன ரஜினின்னு மக்கள் சொல்றதுல தப்பே இல்ல :)))))))))))))))))))

    //

    வெயிட்…வெயிட்…வெயிட்… இன்னும் கொஞ்ச நாள்ல அவர பெரிய கிரின்னு சொல்லப் போறாங்க.

  19. //என்னங்க சரண் பண்ணுறது? உங்களை மாதிரி நான் ரொம்ப டீசென்ட் இல்ல. பகுத்தறிந்து பார்க்க தெரிவதில்லை ..லோக்கல் கையி.. இது போன்ற சந்தோசங்கள் தான் எங்களுக்கு பெரிய சந்தோசங்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவரைக்கும் சரி என்பது என் கொள்கை.

    //

    அட இதுவும் ஜீப்ப்ப்ப்பரு

  20. //Bleachingpowder on 11:27 AM, April 16, 2009 said…
    //படம் “பாபா” பப்படம் ஆகி விட்டது, எண்ணையில் பொறித்த வாழைக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிட்டாங்க படம் பார்த்தவங்க எல்லோரும்//

    Nooooooooo இத நான் ஒத்துக்க மாட்டேன். நாங்கெல்லாம் முதல் நாள்ல ரெண்டு ஷோ பார்த்தோம். கவுண்டர் கலக்கிருப்பாரு, மந்திரம் தந்திரம்னு தலைவர் பேசும் போது மட்டும் தான் தலைய சொறிஞ்சோம் :))

    //

    பிளீச்சிங் அண்ணே நீங்க உண்மையிலேயே பாபா படம் பார்த்தீங்களா??? டவுட்டாகீதே???

  21. //பல சிபாரிசுகள் எல்லாம் வேண்டும் இதற்க்கு..பொய் கூறவில்லை, //

    ஆமாஆமா…நான் கூட போன படத்துகு டிக்கெட் வாங்க பிரதமர் கிட்ட மனு குடுக்கலாமான்னு யோசிச்சேன்.

  22. //எனக்கு முதல் காட்சி பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் இருந்தாலும் இந்த பால் ஊத்துறது, கொடி பிடிக்கிறது, கட் அவுட் வைக்கிறது இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. நம்ம சும்மா விசில் அடிப்பது கூட்டத்தோடு கூட்டமா ஒரு ஆட்டம் போடுவது இது தான் நம்ம வழக்கம். இந்த அளவோடு என் கொண்டாட்டம் முடிந்து விடும்.

    //

    அதே அதே

    :))

  23. //நான் பாட்ஷா படம் பார்த்ததில் இருந்து ரஜினி ரசிகன் ஆனேன், //

    நான் “ஆடி மாசம் காத்தடிக்க “ அப்பிடின்னு ஸ்டைலா சிலுக்க லுக்குவுட்டுக்குட்டு பாடுனாருல்ல அப்ப ரசிகன் ஆனேன் (சிலுக்குக்கும் சேர்த்து)

  24. அண்ணே அதிகமான பணிகளால் கடந்த இரண்டு இடுகைகளில் பின்னூட்டம் போட முடியல. அதான் சேர்த்து வச்சு கும்மிட்டேன். கோபமில்லையே???

    :))

  25. //அப்துல்லா இப்படி உங்க கட்சி கூட்டணி தர்மத்தை மதிக்காமல் அவர் சும்மா நாச்சிக்கும் தான் (உட்கார்ந்து) இருக்காரு எனபதை இப்படி பொதுவில் கிண்டல் பண்ணிய உங்களை வன்மையா கண்டிக்கிறேன் ஹி ஹி ஹி :-)))))

    //

    உண்மையச் சொன்னா ஒத்துக்கிட்டுதான ஆகனும் :))

  26. படிக்க படிக்க சலிக்காத பதிவு …என்னை முதல் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு அழைத்து வந்தது தலைவரை பற்றி நீங்கள் எழுதிய பதிவுதான் … எந்திரன் வரும் வரை ரஜினி பற்றிய பதிவுகள் இடைவெளி இல்லாமல் தொடரட்டும் ……

  27. //வாங்க வெங்கி எப்படி இருக்கீங்க! ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க.. வந்தோட இல்லாம தலைவர வேற நல்லா வாரி இருக்கீங்க :-)))

    ஆஸ்திரேலியாவிற்கு ஆட்டோ அனுப்பனுமா :-))))
    //

    அடங்கொய்யாளே தியேட்டர் ல வாங்கினது பத்தாம நீங்க வேற ஆட்டோ அனுப்பணுமா?? நான்தான் அங்கனையே வாயை குடுத்து …@%^&#^ புண்ணாக்கி கிட்டேனே ? அதுக்கு மேல என்ன வேணும்….:((

  28. எதுக்கு, யாருக்கு பயந்து பம்மி பம்மி எழுதறீங்க…நீங்க உண்மையாக யாரை ரசிக்கிறீர்களோ அவர்களைப் பற்றி தைரியமாக முழுமையாக எழுதுங்கள் கிரி. எவனுக்கும் அதை குறை சொல்லும் உரிமை கிடையாது.

    ரஜினியை திட்டினால்தான் அறிவுஜீவி என்று ஒப்புக் கொள்ளும் கும்பலுக்காக ரொம்ப யோசித்து பதிவு போட வேண்டாம். உங்கள் வலையின் பெயரே மனசாட்சிதான். அதற்கு மட்டும் பயந்தால் போதும்.

    ஒரு ரசிகனாக, உங்கள் அனுபவங்களை, வெறும் கமெண்டுகளுக்கு பயந்தெல்லாம் எழுதாமல், முழுமையாக எழுதுங்கள்!

    ஒருவர் ரஜினியைத் திட்டுகிறார் என்றால், அவர் வேறு ஒருவருக்கு ரசிகராக இருக்கிறார் என்பதே தமிழ் சினிமா ரசிக மனோபாவம்.

    அல்லது தன்னை எல்லோரும் கவனிக்க அப்படிச்சொல்வதாக அர்த்தம். ஏன்… ரஜினி விமர்சகர்கள் தங்கள் பதிவைப் பிரபலப்படுத்தக் கூட ரஜினி பெயைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

    அதனால் யாரைப் பற்றியும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

    ஜெயகாந்தன் சொல்வது போல, கிணற்றில் இறங்கியபிறகு முழுமையாக முங்கிக் குளிக்கப் பாருங்கள். இல்லாவிட்டால் அதுவே கேலிக்குரியதாகிவிடும்!

    துள்ளலாக ஆரம்பித்துள்ளீர்கள். (அந்த முதல் பாரா தவிர) அடுத்த பதிவையும் போடுங்க…சீக்கிரமா!

  29. “எந்திரன் படம் வரும் போது பாருங்கள்..எங்கெல்லாம் கூறி சிபாரிசு செய்து டிக்கெட் வாங்குகிறார்கள்”

    கிரி ஒயிட் அவுஸ் வேலை பார்க்கும் நண்பர் மூலமா எந்திரன் படத்திற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து இருக்கிறேன்.

  30. முன்பெல்லாம் இங்கு ஒரு படம் வெளிவந்தது பல மாதங்களுக்கு பிறகுதான் படம் வெளிவரும். அதற்கிடையில் அனைவரும் VCR இல் பார்த்து விடுவார்கள். (அந்த நேரம் cd இல்லை) அப்படியிருந்தும் நான் தலைவர் படங்களை காத்திருந்து தியேட்டரில்தான் பார்ப்பேன். புல்லரிக்கச்ச் செய்யும் மேற்கூறிய அனுபவங்களுக்காக
    பாபாதான் இந்தியாவில் வெளியாகும் அதே தினத்தில் இங்கும் வெளியானது அதிலுருந்து தலைவரின் ஒவ்வோர் படத்தையும் எப்பேர்ப்பட்ட வேலையிருந்தாலும் போட்டுவிட்டு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அதுவும் நம்மூரில் வெளியாகாது 26 km தள்ளி கண்டியில் வெளியாகும் இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டும்தான் படங்கள் 100 நாட்கள் தாண்டி ஓடும் அதுவும் கடைசியாக அப்படி ஓடிய படம் சிவாஜி இலங்கையில் கிட்டத்தட்ட 12 ற்கு மேற்பட்ட இடங்களில் 50 நாட்கள் ஓடியது.

  31. //உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்//

    Attakasam…..

    //பல சிபாரிசுகள் எல்லாம் வேண்டும் இதற்க்கு..பொய் கூறவில்லை, வேண்டும் என்றால் எந்திரன் படம் வரும் போது பாருங்கள்..எங்கெல்லாம் கூறி சிபாரிசு செய்து டிக்கெட் வாங்குகிறார்கள் என்று//

    பாபா படத்திற்கு ஆடியோ ரிலீஸ் செய்வதற்கே முன்பதிவு நடந்தது…எந்திரனுக்கு கேக்கவேண்டுமா??

    //”படையப்பா” அபிராமி திரை அரங்கில், சும்மா படம் பின்னிவிட்டது, கலக்கலான திரைக்கதை, காட்சி அமைப்புகள், ஸ்டைல் தாறுமாறு.//

    அட போங்கப்பா அந்த கொடுமைய ஏன் கேக்க்கறீங்க?
    திருச்சி ரம்பா தியேட்டரில் வெள்ளிக்கிழமை மாலை 6:15 காட்சிக்கு மிதப்போடு 6:10 மணிக்கு சென்றோம்…டிக்கெட் இல்லை என்று சிம்பிள் ஆகா சொல்லி விட்டார்கள் …சரி டா என்று சனிக்கிழமை காலை சென்றோம் ..அப்போதும் அதே பதிலை சொன்னார்கள்…சரி என்று திருச்சியில் கொஞ்ச நேரம் சுத்தி விட்டு மதியம் வந்தோம் ….கொஞ்சம் சீகிரமாகவே….அப்போதும் அதே பதில்….போங்கடா என்று தியேட்டரிலேயே உட்கார்ந்து விட்டோம் …மாலை ஆனது…டிக்கெட் அனைத்தும் ரிசர்வ் ஆகி விட்டது என்றார்கள் ..என் அப்பாவிற்கு பயங்கர கோவம்…தியேட்டர் அதிகாரிகளை திட்டினார்….அடுத்த நாள்..சண்டே மார்னிங் ….ரூபாய் லஞ்சம் கொடுத்து உள்ளே போய் டிக்கெட் வாங்கி குடும்பத்துடம் பார்த்து ரசித்தோம் …

  32. இந்த தள்ளுமுள்ளுக்கு பயந்தே ரஜினி படங்களிற்கு முதல்நாள் போவதில்லை.

  33. எம்புட்டு தைரியம் இருந்தா கமெண்ட் மாடரேஸன் எடுத்து விட்டு இருக்கீங்க?

  34. //எம்புட்டு தைரியம் இருந்தா கமெண்ட் மாடரேஸன் எடுத்து விட்டு இருக்கீங்க?//

    Manusanga yaarum thappa comment panna maattaangan gara dhairiyamdhaan

  35. மிகச் சரியாக சொன்னீர்கள், கிரி.!
    தலைவரின் ஒவ்வொரு பட ரிலீஸும் ஒரு அனுபவம்.
    லண்டனில் நான் பார்த்த சந்திரமுகி,சிவாஜி இரண்டும் கலக்கல் அனுபவம்! அதுவும் சிவாஜி back to back shows! :)))

  36. //Srinivas said…
    பாபா படத்திற்கு ஆடியோ ரிலீஸ் செய்வதற்கே முன்பதிவு நடந்தது…எந்திரனுக்கு கேக்கவேண்டுமா?? //

    திருவிழா தான்

    //அடுத்த நாள்..சண்டே மார்னிங் ….ரூபாய் லஞ்சம் கொடுத்து உள்ளே போய் டிக்கெட் வாங்கி குடும்பத்துடம் பார்த்து ரசித்தோம் //

    நான் பாபா படத்திற்கு அதை போல சென்றேன் பிளாக்கில் 🙂

    =======================================================

    //ச்சின்னப் பையன் on 7:30 PM, April 16, 2009 said…
    :-))//

    வாங்க ச்சின்னப் பையன் சிரிப்போடு போயிடுறீங்க 😉

    =======================================================

    //மோகன் said…
    இந்த தள்ளுமுள்ளுக்கு பயந்தே ரஜினி படங்களிற்கு முதல்நாள் போவதில்லை.//

    மோகன் தலைவர் பட ரசிகனாக இருந்து கொண்டு இப்படி பயப்படலாமா..இப்படி எல்லாம் செல்வது ஒரு தனி த்ரில்

    //எம்புட்டு தைரியம் இருந்தா கமெண்ட் மாடரேஸன் எடுத்து விட்டு இருக்கீங்க?//

    ஹா ஹா ஹா

    நான் என்னோட 200 பதிவு எழுதியவுடனே எடுத்து விட்டேன். பிரச்சனை வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று. முன்பு போல இணையத்தில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை எனவே கமெண்ட் அனுமதிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    ====================================================

    //Srinivas said…
    //எம்புட்டு தைரியம் இருந்தா கமெண்ட் மாடரேஸன் எடுத்து விட்டு இருக்கீங்க?//

    Manusanga yaarum thappa comment panna maattaangan gara dhairiyamdhaan//

    :-))) ஒரு நம்பிக்கை தான்

    =====================================================

    //Raja said…
    //நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்?
    உங்க டிஸ்கி தான் கொஞ்சம் இடிக்குது. அப்புறமா இத பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.//

    வாங்க ராஜா. நம் பதிவுலகத்தை பற்றி தெரிந்துமா இப்படி கேட்கறீங்க? நாங்க எல்லாம் பதிவுலகத்தில் பிரச்சனைகளையே போர்வையா போர்த்தி தூங்கினவங்க :-))))

    //ஆல்பர்ட் தியேட்டர்ல படைப்பா படத்துடுக்கு திரைய கிழிச்சது எதுக்குன்னா தலைவர் படத்துல தலைவர் முதல்ல காமிக்காமா சிவாஜிய காண்பித்ததானால்.//

    ஐயய்யோ! அப்படியா!… ரசிக கண்மணிகளா ..சிவாஜி அவர்கள் ரஜினிக்கு அப்பா மாதிரி இதெற்கெல்லாம் உணர்ச்சிவசப்படாதீங்க

    //இதேபோல பாபா படத்திற்கு திருச்சி ரம்பா தியேட்டரில் கண்ணாடி உடைய போகுது உடனே போலிஸ் வரவும்னு மைக்ல கத்துனது தான் ஞாபகம் வருது. திருவிழா மாதிரி 2-3 நாளைக்கு மைக்லாம் கட்டி கூட்டத்த கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்//

    அதெல்லாம் ஒரு தனி கொண்டாட்டம் தான்

    //சுல்தானுக்கும், எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்குமா.//

    சுல்தானுக்கு அவ்வளவா எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன், அது கார்ட்டூன் படம் என்பதால் பெரிதாக ரசிகர்களை கவராது என்பதே என் எண்ணம்.

    எந்திரன் க்கு இப்பவே சொல்லி வைத்து விட்டேன் ஹி ஹி ஹி பலமான! ஆளாய் பிடித்து விட்டேன்

    ========================================================

    //Vijay said…
    மிகச் சரியாக சொன்னீர்கள், கிரி.!
    தலைவரின் ஒவ்வொரு பட ரிலீஸும் ஒரு அனுபவம்.
    லண்டனில் நான் பார்த்த சந்திரமுகி,சிவாஜி இரண்டும் கலக்கல் அனுபவம்! அதுவும் சிவாஜி back to back shows! :)))//

    வாங்க விஜய்.

    என்னோட சந்திரமுகி சிவாஜி பட அனுபவங்களை கூறுகிறேன் கேளுங்க..செமையா இருக்கும்.

  37. //நன்கு படித்தும்! இதை போல ஏன் செய்கிறீர்கள்?
    உங்க டிஸ்கி தான் கொஞ்சம் இடிக்குது. அப்புறமா இத பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.

    ஆல்பர்ட் தியேட்டர்ல படைப்பா படத்துடுக்கு திரைய கிழிச்சது எதுக்குன்னா தலைவர் படத்துல தலைவர் முதல்ல காமிக்காமா சிவாஜிய காண்பித்ததானால்.

    //கண்ணாடி கதவு…..திறக்கவில்லை என்றால் அழுத்தம் தாங்காமல் உடைந்து விடும்

    இதேபோல பாபா படத்திற்கு திருச்சி ரம்பா தியேட்டரில் கண்ணாடி உடைய போகுது உடனே போலிஸ் வரவும்னு மைக்ல கத்துனது தான் ஞாபகம் வருது. திருவிழா மாதிரி 2-3 நாளைக்கு மைக்லாம் கட்டி கூட்டத்த கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
    //சுல்தானுக்கும், எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்குமா.

  38. கிரி

    நீங்க பாஷா முதல் நாள் பார்த்தப்புறமும் முத்து பார்க்கப் போலன்னா ஆச்சர்யம்தான்..

    அருணாசலம் பாடல்கள் சுமார்னு சொன்னதுக்கு ஒரு ஸ்மால் குட்டு உங்களுக்கு.. ஏன்னா
    இன்னும் கொஞ்ச நாள் கழித்து….(டைட்டில் சாங்கும், சிங்கம் ஒன்று புறப்பட்டதேயும் எல்லா இடத்துலயும் உங்க காதக் கிழிக்கப் போகுது.. ஹி ஹி ஹி )

    இப்போ என்னோட முதல் ஷோ அனுபவத்த சொல்றேன்..

    நான் முதல் நாள் பார்த்த முதல் படம் “தளபதி”. தீபாவளி அன்னிக்கு தளபதி பனியனை வாங்கி போட்ட ஒரே ஆள் நான்தான் இருப்பேன். எங்க ஏரியால…..

    எட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டு இருந்த எனக்கு தளபதியை எப்படியாவது சீக்கிரம் பார்க்கனும்னு ஆசை.. எங்க வீட்ல தீபாவளி அன்னிக்கு எங்க அம்மாவோட அத்தை வீட்டுக்கு போக சொல்லி எங்க மாமாவோட அனுப்பிச்சாங்க.. தூர்தர்ஷன் ல ராக்கம்மா ஸ்பெஷல் புது பாட்டு போட்டா மிஸ் ஆயிடுமேன்னு வருத்தத்துல இருந்தாலும் பெரியவங்க சொன்னதுக்காக அங்க போனேன். அங்க போனா, அவுங்க பையன், அப்போ சென்சார் போர்டுல எதோ போஸ்டிங்க்ல இருந்ததால மூணு டிக்கெட் ஸ்பெஷல் ஷோவ்க்கு இருக்குன்னாறு… பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி அவசர அவசரமா ஓடினோம் வூட்லாண்ட்ஸ் சிம்பொனிக்கு…

    சரியா படம் ஆரம்பிக்கும்போது போயிட்டோம். எனக்கு தலை கால் புரியல.. ஏற்கனவே வெளிநாட்டில் ரெக்கார்ட் ஆன முதல் பாடல் அப்பிடி இப்பிடின்னு பெரிசா எதிர்பார்த்து இருந்த ராக்கம்மா பாடலுக்கு, நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் கலாசலா டேன்ஸ் ஸ்டெப் வைக்க நான் எங்க மாமாங்களையும் மீறி விசில் அடிக்க ஆரம்பிச்சேன்…

    தலைவர் ஒரு கெட்ட போலிசை நாடு ரோட்டில வெட்டினப்ப ஷோபனாவை விட கதி கலங்கிட்டேன்… எனக்கு கொடுத்த பாப்கார்னைக்கூட முதல் முறையா தின்னாம ஆன்னு வாயப் பொளந்துட்டு ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் தலைவர தலைகீழா கட்டி வச்சு அடிக்கும்போது எல்லாம் நொந்தே போயிட்டேன்.. சுந்தரி பாடலுக்கு தலைவரோட கொண்டையும், அந்த வார் கெட்டப்பும் பார்த்து அசந்து போயிட்டேன்.

    அரவிந்த்சாமி, டிஎஸ்பி கிட்ட ரஜினி “இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது. அவர் பேசி முடிச்சதும் அரவிந்தசாமி “என்ன கத்தி முடிச்சுட்டீங்களா ?”ன்னு கேட்டதும் எல்லோரும் அசிங்கமா திட்ட நானும் ஒரு ரவுசு விட்டேன்.

    காட்டுக்குயிலு பாட்டுக்கு செம டான்ஸ்.. வீட்டுக்கு வந்தப்புறம் பாட்டு புக் வாங்கி நானும் என் தம்பியும் ரொம்ப நாள் அந்த பாட்ட யேசுதாஸ் மாதிரி ஒருத்தரும், எஸ்பிபி மாதிரி ஒருத்தரும் பாடி பக்கத்து வீட்டுக் காரங்களை நாராசமாய் நையப் புடைசிருக்கோம் .

    ஐயோ பாவம் அவன், பட்டாசு வெடிக்கறதுக்காக அத்தை வீட்டுக்கு வராதவன், நான் தளபதி பார்த்துட்டேன்னு ஒரு அணு குண்டைப் போட்டதும் ஆடிப் போயிட்டான்..)

    இவ்விதமாய் என் முதல் நாள் முதல் பட அனுபவம் இனிதே நிறைந்தது.. அதன் பிறகு எல்லா படங்களையுமே முதல் நாளோ அல்லது முன்கூட்டியோ போடப்படும் ஸ்பெஷல் ஷோவிலோ பார்த்துவிடுவேன்.

    பாஷா டிவிக்கள்ள பல முறை போட ஆரம்பிச்சப்புறம் தான் நான் தளபதியை டிவியில அடிக்கடி பார்க்குறதை நிறுத்தினேன்..

    என்னை பழைய நினைவுகளுக்கு கூட்டிக் கொண்டு போனதற்கு நன்றி கிரி…

    (பி. கு. : இப்படி முதல் ஷோ அனுபவத்தைக் கேட்பதன் மூலம், பல பேரின் குத்து மதிப்பான வயசு தெரிஞ்சுடும் போல இருக்கே, ஹி ஹி ஹி )

    அன்புடன்

    ஈ ரா

  39. //ஈ ரா on 10:04 AM, April 17, 2009 said…
    நீங்க பாஷா முதல் நாள் பார்த்தப்புறமும் முத்து பார்க்கப் போலன்னா ஆச்சர்யம்தான்//

    ஈ ரா நான் தான் சொன்னேனே! பாட்ஷா படம் பார்த்த பிறகு தான் ரசிகன் ஆனேன் என்று..எனவே அந்த படம் முதல் காட்சி பார்க்கவில்லை..படம் வெளியாகி ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன். முத்து படம் கோபியில் (எங்க ஊரில்) முதல் நாள் பார்த்தேன்..ஆனால் அது எல்லாம் ஜுஜுபி.. சென்னையில் பார்ப்பதை போல இருக்குமா..நான் அதை எல்லாம் கணக்கிலேயே வைத்து கொள்வதில்லை.

    //டைட்டில் சாங்கும், சிங்கம் ஒன்று புறப்பட்டதேயும் எல்லா இடத்துலயும் உங்க காதக் கிழிக்கப் போகுது.. ஹி ஹி ஹி//

    ஹா ஹா ஹா காத்திருக்கேன்

    //இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது//

    செம சீன் ங்க அது….தொட்ரா பார்க்கலாம் ..இதை என்னோட அண்ணன் அடிக்கடி இமிடேட் செய்துட்டே இருப்பாரு ரஜினி சமந்தப்பட்ட விவாதாங்களில் :-))

    //என்னை பழைய நினைவுகளுக்கு கூட்டிக் கொண்டு போனதற்கு நன்றி கிரி…//

    உங்களுக்கும் தான்

    //இப்படி முதல் ஷோ அனுபவத்தைக் கேட்பதன் மூலம், பல பேரின் குத்து மதிப்பான வயசு தெரிஞ்சுடும் போல இருக்கே, ஹி ஹி ஹி//

    அது என்னோட ஃப்ரோபைல் லையே இருக்கு :-)))

    உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஈ ரா

  40. Romba santhosam giri thalaivara pathi pathivu potta thukku. Adutha pathiva konjum perusave sollunga unga posting yellame yevalavu padichalum bore adikathu

    Thanks,
    Arun

  41. சூப்பர் தலை. சூப்பர்ஸ்டார் பத்திய சூப்பரான பதிவு. கலக்கிட்டீங்க.

  42. அட நம்ம ரஜினி பற்றிய பதிவு.
    ரஜினி படம் என்றால் சொல்லவா வேண்டும்.
    கொண்டாட்டம் தான்.
    எந்திரன் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கு.
    பதிவு கொஞ்சம் சின்னனாக போய்விட்டது.

  43. //puyal on 11:30 PM, April 17, 2009 said…
    giri naalaa irukku keee it up//

    நன்றி புயல் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

    ================================================================

    //arun on 2:26 AM, April 18, 2009 said…
    Romba santhosam giri thalaivara pathi pathivu potta thukku.//

    சரியா கவனித்து இருக்கீங்க அருண். ரொம்ப நாள் ஆச்சு தலைவர் பதிவு போட்டு

    //Adutha pathiva konjum perusave sollunga unga posting yellame yevalavu padichalum bore adikathu//

    :-)) அடுத்த பதிவு கண்டிப்பாக பெரிதாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி

    நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை பலர் இந்த அளவிற்கு ஆர்வமாக கேட்பீர்கள் என்று

    ==============================================================

    //வாசுகி said…
    அட நம்ம ரஜினி பற்றிய பதிவு.
    ரஜினி படம் என்றால் சொல்லவா வேண்டும்.
    கொண்டாட்டம் தான்.//

    :-))) அதிலும் இதை அனுபவித்தவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்

    //பதிவு கொஞ்சம் சின்னனாக போய்விட்டது.//

    ஆமாங்க பலர் சொல்லிட்டாங்க..நான் இதே பெரிதாக இருக்கும் ..போர் அடித்து விடும் என்று நினைத்தேன்..இந்த அளவிற்கு கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பதிவு பெரிதாக உள்ளது என்று யாரும் திட்டப்படாது ஆமா சொல்லிபுட்டேன் 😉

    =============================================================

    //தமிழ்நெஞ்சம் said…
    சூப்பர்ஸ்டார் பத்திய சூப்பரான பதிவு. கலக்கிட்டீங்க.//

    நன்றி தமிழ்நெஞ்சம்

  44. //நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை பலர் இந்த அளவிற்கு ஆர்வமாக கேட்பீர்கள் என்று //

    yennai ippadi soliteenga naan unga pathivu ku veriyan nu sollalam. Naan yennoda veetula kooda giri chennai vantha avaar veetuku pakathula nama vadakaiku veedu paakalam so that week ends avar kooda time spend pannalam nu sollitu iruken.. naan yetho comedy ku solluren nu ninakatheenga nejama mansara solluren..

    Thanks,
    Arun

  45. ஐயயையோ! அருண் இப்படி கூறி என்னை அதிர்ச்சி அடைய வைத்துட்டீங்களே..என் பதிவிற்கு கூட இப்படி ஒரு ரசிகரா.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க பெரும்பாலும் தாமதமாக இரவில் தான் கமெண்ட் போடுவீங்க.. அதனால நான் கூட நீங்க US ல இருக்கீங்கன்னு நினைத்துக்கொண்டேன் 🙂 பொதுவா அங்கே இருக்கிறவங்க தான் இந்த நேரத்தில் கமெண்ட் போடுவாங்க

    உங்கள் அன்பிற்கு நன்றி அருண்

    பின் குறிப்பு (மற்றவர்களுக்கு)

    யப்பா! இந்த அருண் வேறு ஒரு நபர் தான்.. நானே எனக்கு வேற பேர்ல கமெண்ட் போட்டுட்டேன்னு நினைத்துக்காதீங்க :-))))

  46. நமக்கு இந்த முதல் காட்சி படத்துக்கெல்லாம் போயி பழக்கமில்லீங்க. ஆனா சந்திரமுகி படத்தோட முதல் காட்சிக்கு என் நண்பணுக்காக போனேன் அதுவும் தியேட்டர்ல நமக்கிருக்க செல்வாக்க வைச்சு டிக்கெட் வாங்கிக்குடுக்க போனதுனால வந்தது.
    அப்போ முடிவு பண்ணுணேனுங்க இனிமே முதல் காட்சிக்கு எல்லாம் போகவே கூடாதுன்னு. பின்ன விசில் அடிச்சு அடிச்சு தொண்டை கம்மி போச்சுங்க, பேசுனா காத்துதான் வந்துச்சுங்க.
    நீ ஏண்டா எங்க தலைவர் படத்துக்கு விசில் அடிச்சன்னு கேட்ராதிங்க. சுத்தி எனக்கு கேட்டது விசில் சத்தம் மட்டும்தான். அதான் நானும் உணர்ச்சிவசப்பட்டு விசில் அடிச்சுப்புட்டேனுங்க.

  47. //Nellaitamil.com said…
    நெல்லைத்தமிழ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை இணைப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் தளத்திலும் இணைத்து ஆதரவளியுங்கள். நன்றி//

    உங்கள் தளத்திற்கு தொடுப்பு கொடுத்துள்ளேன் நன்றி.

    ==========================================================

    //ஜோசப் பால்ராஜ் said…
    அப்போ முடிவு பண்ணுணேனுங்க இனிமே முதல் காட்சிக்கு எல்லாம் போகவே கூடாதுன்னு. பின்ன விசில் அடிச்சு அடிச்சு தொண்டை கம்மி போச்சுங்க, பேசுனா காத்துதான் வந்துச்சுங்க//

    ஹா ஹா ஹா எனக்கு சிவாஜி படத்திற்கு அதை போல ஆனது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here