பின்னூட்டங்களிலும் மின்னஞ்சலிலும் போன பதிவு சிறியதாக!! எழுதி விட்டீர்கள். அடுத்தப் பதிவு இன்னும் விரிவாக எழுதவும் என்று அன்பு கட்டளை இட்ட நண்பர்களுக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம்.
பாபா
படையப்பா படம் ஏகத்துக்கும் நம்மை ஏற்றி விட்டு இருந்ததால், அடுத்தப் படமான “பாபா” க்கு எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
படம் எப்படா வெளிவரும் என்று ஆகி விட்டது, டிக்கெட் வேறு கிடைக்கவே இல்லை.
அப்புறம் எப்படியோ நண்பன் வாங்கி இருவரும் உள்ளே சென்று விட்டோம் (இந்தப் படம் மட்டும் தான் இது வரை நான் பிளாக்கில் பார்த்த படம்).
அப்போது வேறு பா மா க சண்டை என்று பரபரப்பான தருணம்.
ஊடகங்கள் வேறு தங்கள் விற்பனைக்காகப் பாபா செய்திகளா போட்டு ஏகத்திற்கும் காசு பார்த்ததோடு இல்லாமல் எதிர்பார்ப்பையும் தாறுமாறா எகிற வைத்து இருந்தது.
படம் போட்டவுடன் (ஆல்பட்) திரை அரங்கே அதிர்ந்து விட்டது அவ்வளவு சத்தம் பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது.
பொதுவாகப் பெண்கள் முதல் காட்சிக்கு வரமாட்டார்கள் ஒரே ரகளையாக இருக்கும் என்பதால், ஆனால், ரஜினி படம் மட்டும் விதிவிலக்கு.
ரஜினி வருகிறார் என்று எல்லோரும் ஆர்ப்பரிக்க வந்தது கவுண்டமணி எல்லோரும் புஸ்ஸ் னு ஆகிட்டாங்க.
லாங் ஷாட்
கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் பார்த்தால் தலைவர் ஆனால் லாங் ஷாட் எனக்குச் சப்புனு ஆகி விட்டது.
இருந்தாலும் விசில்.. சரி! மனசை தேத்திகிட்டுப் படம் பார்த்தா தலைவருக்கு மேக்அப், உடை எதுவும் சரி இல்லை, படமும் எனக்குப் பிடிக்கலை.
கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை சரியாக இல்லை, செட்டிங் ம் எல்லாம் மொக்கையாக இருக்கக் கடுப்பாகி விட்டது.
என்னைப் போலவே பலத்த எதிர்ப்பார்ப்பில் வந்து இருந்த பல ரசிகர்கள் ஆராவாரம் எல்லாம் அடங்கிக் கொஞ்ச நேரத்திலேயே அமைதியாகி, சோகமாகி விட்டார்கள்.
ஷியாஜி ஷிண்டே
இடைவேளையின் போது ஷியாஜி ஷிண்டே தலைவரைக் குகைக்குள்ள கூட்டிட்டு போனாரு பாருங்க… அதோடு அனைவரும் காலி.
நம்ம ஆளுங்க எல்லோரும் திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க, அவனவன் ஒவ்வொருத்தன் மூஞ்சிய பாத்துட்டு இருக்காங்க.
இத்தனை ரகளை களேபரம் நடந்தாலும் ஒரு சில மனம் தளராத ரசிகர்கள் இன்னும் அடங்காமல் விசில் தான் 🙂 .
அவர்களைப் பொறுத்தவரை ரஜினி வந்தால் போதும் அவ்வளோ தான்..படம் எப்படி இருந்தாலும் சரி.
அவங்க கிட்ட போய் என்னப்பா! படம் சுமாரா இருக்குன்னு எவனாவாது தெரியாம சொல்லிட்டான்.. மவனே! செத்தான்.
அங்கேயே போட்டு நொக்கி எடுத்துடுவாங்க! வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்.
அவர்கள் எல்லோரும் கொலை வெறி ரசிகர்கள் (பக்தர்கள்) ரஜினி கெட் அப் ல தான் படத்திற்கே வருவாங்க..ஹா ஹா ஹா 🙂 .
ரசிகர்களைக் கவரவில்லை
இடைவேளை விட்டார்கள் அவ்வளோ தான் எல்லோரும் கழிவறை மற்றும் வராண்டா கிட்ட வந்து புலம்பி தள்ளி விட்டார்கள்.
மச்சான் என்னடா இது! படம் இப்படி ஆகிடுச்சு..தலைவர் என்னடா! இப்படிப் பண்ணிட்டாருன்னு ஒரே புலம்பல் காட்சிகள்.
ஒரு சில அதி தீவிர ரசிகர்கள் அழுகாத குறை தான் 🙂 .
சரி விடு மச்சான் அடுத்தப் படத்துல பார்த்துக்கலாம் என்று ஒரே சோக கீதங்களாக இருக்க.. இடைவேளை பிறகும் படம் ரசிகர்களைக் கவரவில்லை.
படம் முடிந்து வெளியே வந்து படம் சரி இல்லை என்பதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எல்லாம் நொந்தே போய்ட்டாங்க..
படம் சங்கு ஆனதை விட மற்ற நடிகர்கள் (குறிப்பாகக் கமல்) ரசிகர்கள் கிண்டலடிப்பார்களே என்ற கடுப்பு வேறு 🙂 .
முகம் எல்லாம் தொங்கி போய் அனைவரும் வெளியே வருகிறார்கள் (ஹி ஹி ஹி நாங்களும் தான்).
அப்புறம் கொஞ்ச நாள் ரசிகர்கள் பட்டபாடு அவர்களுக்குத் தான் தெரியும் 🙂 டாரு டாரு ஆகிட்டாங்க.
மேலே கூறியது எனக்குப் பாபா படத்தில் கிடைத்த அனுபவம், இது உங்களை (ரசிகர்களை) காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
பாபா படத்தால் ரசிகர்கள் பலர் மண்டை காய்ந்துபோய் விட்டார்கள், அதுவுமில்லாமல் ஒண்ணுமில்லாதவன் எல்லாம் இது தான் சாக்குன்னு ரஜினியை போட்டு தாக்கிட்டாங்க.
ரஜினி இனி அவ்வளோ தான், ரஜினி சகாப்தம் முடிந்தது என்று வெளிப்படையாக அனைவரும் கூற தொடங்கி விட்டார்கள், இதனால் உண்மை ரசிகர்கள் பலர் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள்.
இதற்கு பதிலடியாக ரஜினி “குதிரை” கதை சொன்னது இன்று வரை பிரபலம்.
சந்திரமுகி
இந்தச் சமயத்தில் வெளியானது தான் சந்திரமுகி, பொதுவாகச் சமீப ரஜினி படங்கள் பெயர் ரஜினியின் கதாப்பாத்திரம் பெயராகவே இருக்கும்.
இதில் ஒரு பெண்ணின் கதாபாத்திரம் பெயர் அதுவும் இல்லாமல் இதுவும் பாபா படத்தைப் போலவே மந்திரம் தந்திரம் என்று இருக்கும்.
எனக்கு இன்றும் வியப்புண்டு, எப்படி மறுபடியும் இதைப் போன்ற கதையை நெருக்கடியான சமயத்தில் தேர்ந்தெடுத்தார் என்று.
அதனால் பலரும் இந்தப் படம் ஓடாது என்றே முடிவு செய்து விட்டார்கள், அதனால் படத்திற்கு எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை.
ரஜினி காலி என்று அனைவரும் முடிவு செய்து விட்டார்கள்.
பார்ட்டி
பாபா படம் தோல்வி அடைந்ததைத் திரை உலகில் ஒரு சிலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடியதாகச் செய்திகள் உண்டு.
மற்றவர்கள் கஷ்டத்தில் என்றும் மகிழ்ச்சியடையாத விரும்பாத ரஜினி தன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்குத் திரை அரங்கு உரிமையாளர்கள் எவ்வளவு நஷ்டம் கூறினார்களோ அதை அப்படியே திருப்பிக் கொடுத்தார்.
ஒரு சிலர் நஷ்டம் அடைந்ததற்கு மேல் இது தான் சாக்குன்னு அதிகம் கேட்டு வாங்கினார்கள், அதையும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.
இது திரை உலகில் பலரின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது.
ஒரு சில உண்மை திரை அரங்கு உரிமையாளர்கள் “சார்! எங்களுக்குப் பணம் திருப்பித் தர வேண்டாம். அடுத்தப் படம் நடித்துக் கொடுத்துடுங்க” என்ற போது.. “கடனிற்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது” என்று கண்டிப்பாகக் கூறி விட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி
“சந்திரமுகி” தயாரிப்பு நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நிறுவனம்.
அந்தச் சமயத்தில் அவர்களது குடும்பம் கடன் நெருக்கடியில் இருந்தது, இவர்களுக்குப் படம் செய்ய ரஜினி ஒப்புக்கொண்டார்,
அனைவரின் நல்ல மனசு போலவே படமும் வந்தது. அதே போல இந்தப் படத்தின் வெற்றி யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
திருட்டு VCD புழக்கம் அதிகமாக இருந்த போது பெரும்பான்மை மக்களைத் திரை அரங்கிற்கு அழைத்த பெருமை “சந்திரமுகி” படத்திற்கு உண்டு.
ப்ரிவியு காட்சி
நண்பன் எப்படியோ ஏப்ரல் 13 ப்ரிவியு காட்சிக்கே டிக்கெட் வாங்கி விட்டான். எனக்கு வியப்பு தாங்கவில்லை.
சரி! என்று சாந்தம் திரை அரங்கில் சென்று உட்காந்து விட்டோம். நான் பரபரப்பா இருக்கிறேன் திரையரங்கமே அமைதியாக இருக்கிறது.
ப்ரிவியு காட்சி என்பதால் எல்லாம் பெரிய தலைகளாக இருக்கிறார்கள்.
பிரபு அவர்கள் படம் என்பதால், அவர் எல்லோரையும் வந்து விசாரித்துச் செல்கிறார், உள்ளே வருகிறவர்களை வரவேற்றுக்கொண்டு இருக்கிறார்.
படம் ஆரம்பம் ஆகியது தலைவர் பேர் சொயிங் சொயிங் ன்னு வருது ஒரு பய கூடச் சத்தம் போடலை, விசில் அடிக்கலை.
என்னையா இது! ஒரு விசில் கூட இல்லை என்று நொந்தே போய்ட்டோம்.
நினைத்துப் பாருங்க.. ரஜினி படம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் நம்பவே முடியலை.
இப்படி சப்புனு படம் பார்க்கவா இப்படி அடிச்சு பிடிச்சு வந்தோம்னு செம டென்ஷன் ஆகி விட்டது.
டீசன்ட்டாம்
படம் பாக்கிற ஆர்வமே போய் விட்டது. படம் முடியும் வரை ஒரு பய கூடச் சத்தம் போடலை, கத்தலை, பிடிச்சு வைத்த பிள்ளையார் மாதிரி உட்காந்து இருக்கானுக.
என்னையா மேட்டருன்னு பார்த்தா டீசன்ட்டாம்.
அடப்பாவிகளா! உங்க கோஷ்டில நாங்க தான் தெரியாம மாட்டிகிட்டோமான்னு நினைத்துக்கொண்டு எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் படம் பார்த்தோம்.
அட! வடிவேல் நகைச்சுவைக்குக் கூடக் குசுகுசுன்னு சிரிக்கறாங்கப்பா! என்னத்தைச் சொல்றது!
ஆர்வம் இல்லாமல் படம் பார்த்ததாலும், இந்த “நல்லவங்க” கோஷ்டிக கூடப் பார்த்த கடுப்பிலும் மறுபடியும் மந்திரம் தந்திரம் என்று வந்ததாலும் படம் ஊத்திக்கிச்சு என்று முடிவே செய்து விட்டோம்.
படம் முடிந்து அப்படியே கிளம்பி ஒரே சோகப் பாட்டு பாடிட்டு இரண்டு பெரும் எங்க அறைக்கு வந்துட்டோம்.
நாங்க இரண்டு பேரும் புலம்பியதை ரஜினி ரசிகர் அல்லாதவர் யாராவது கேட்டு இருந்தால் காதில் ரத்தம் வந்து இருக்கும் 🙂 .
அலுவலகத்தில் நான் ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், அன்று ஏப்ரல் 14 புத்தாண்டு என்பதால் பலர் அலுவலகம் வரவில்லை என்பதால் தப்பித்தேன்.
உதயம்
ஒரு 10 மணி இருக்கும்.. மறுபடியும் அறை இன்னொரு நண்பன் போன் செய்து “கிரி! நான் உங்க இருவருக்கும் சேர்த்து உதயம்ல டிக்கெட் வாங்கி இருக்கேன் கிளம்பி வாங்க” என்று கூறினான்.
நான் ஏற்கனவே காஞ்சு போய் இருந்ததால், எனக்குப் படம் பிடிக்கல நான் வரலைன்னு சொல்லிட்டேன்.
அவனும் விடாம.. “கிளம்பி வாங்க! ஏகப்பட்ட பேர் கூட இருக்காங்க என்ஜாய் பண்ணலாம்” என்று ஆசைய வேற கிளப்பி விட்டான்.
சரி போய் வருவோம்! என்று மறுபடியும் படம் பார்க்கக் கிளம்பி விட்டேன்.
உதயம் காம்ப்ளெக்ஸ் சென்றால் அங்கே ஒரே ரணகளமா இருக்கு. ஒரே ஆட்டம் பாட்டம் என்று நொறுக்கி தள்ளிட்டு இருக்காங்க.
நண்பனின் நண்பர்கள் வேறு, ஒரு மூட்டை நிறையப் பூ, காகிதம் அது இதுன்னு ஏகப்பட்டது வைத்து இருக்காங்க.
எனக்கு வேறு பயம் இவங்க கிட்ட படம் சரி இல்லைன்னு சொன்னா அங்கேயே அடித்து விடுவானுக போல, பின் கலவரம் ஆகி எதுக்கு வம்புனு எதுவும் கூறாமல் இருந்து விட்டேன்.
உள்ளே போக இடமே இல்லை, அவனவன் அடித்துக் கொள்கிறான்.
படம் பார்த்து வருகிறவன் எல்லாம் மச்சான் படம் சூப்பர்டா சூப்பர்டா னு படம் பார்க்க வருகிறவனைக் கட்டி பிடித்துக் கொள்கிறார்கள்.
நாம தான் சரியா பார்க்கலையா!
எனக்கும் என் நண்பனுக்கும் ஒன்றும் புரியலை. “டேய்! என்னடா இது! இவனுக இப்படிப் பண்ணுறாங்க.
நாம தான் சரியா பார்க்கலையா! சரி வா உள்ளே போகலாம்” என்று இருந்தால்.. அதற்கு வேலையே வைக்காமல் நம்மை அப்படியே உள்ளே தள்ளிட்டே போய்ட்டாங்க..
உள்ளே போனா திரையரங்கு முழுவதும் காகிதம், பூ நிறைந்து கிடக்கிறது.
நாங்களும் ரொம்ப ஆர்வமாகிட்டோம், கொஞ்ச நேரத்தில் ஒரே பரபரப்பு என்னடான்னு பார்த்தால் தனுஷ், ஐஸ்வர்யா (உடன் சவுந்தர்யா வும் என்று நினைக்கிறேன்) உள்ளே வந்துட்டு இருக்காங்க.
அந்த பக்கம் இருந்த ரசிகர்கள் இன்னும் அதிகமாக விசில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கொஞ்ச நேரம் தான் அப்புறம் அவர்களை யாரும் கண்டுக்கவில்லைக் காரணம் படம் போட்டது தான்.
தலைவர் பெயர் போட்டதுமே திரை அரங்கமே அதிருது, காகிதம் பூ ன்னு பறக்குது நாங்களும் ஒரே குஷி ஆகிட்டோம்.
நண்பனைக் காணவில்லை
ஆஹா! இப்படித் தான்யா படம் பார்க்கணும் என்று நான் கத்திட்டு திரும்பிப் பார்க்கிறேன், நண்பனைக் காணவில்லை.
சுத்தி முற்றி பார்த்தால் வேறு பக்கம் ஒரு கோஷ்டியோடு செம குத்து குத்திட்டு இருக்கான்.
அவனைக் கத்தி கூப்பிட்டு பார்த்தும் திரும்பாததால் நானும் அவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டேன் 🙂 .
பல முறை ரசிகர்கள் கலாட்டா செய்தும் போலீஸ் உதவியுடன் பாடலை ஒன்ஸ் மோர் போட மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.
ரஜினி வந்தவுடன் எழுந்த சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து விடும் போல இருக்கு. நாங்கள் வேறு ஸ்க்ரீனுக்கு 6 வரிசை முன்னாடி.. கேட்கனுமா!
ரசிகர்களுடன் படம் பார்த்த பிறகு முடிவு செய்தேன்.. மவனே! இந்த டீசென்ட் கோஷ்டிக கூட மட்டும் மறந்தும் ரஜினி படம் FDFS பார்க்கக் கூடாது என்று.
ரசிகர்களோடு பார்த்த பிறகு படம் பட்டாசா இருக்கு. ஒரே படத்திற்கு இரு வேறு அனுபவங்கள். இதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கும்.
படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் மறக்கவே முடியாது.
ரசிகர்கள் பூ, காகிதம் மற்றும் சாக்லேட் என்று வீச, கொண்டு வந்த ஹெல்மெட்டை தலைக்கு மாட்டிக்கொண்டு பார்த்த அனுபவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது.
பதிவு போர் அடிக்கவில்லை என்று நம்புகிறேன்.
எனது அடுத்த இறுதி பதிவில் சிவாஜி யில் நடந்த அனுபவங்களைக் கூறுகிறேன்.
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 1)
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (இறுதி பகுதி)
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//இந்த பதிவு சாதாரண திரை ரசிகனாக இருந்து எழுதியது.//
பாகம் 1 ல் நீங்கள் எழுதுயது நண்பரே….ஹிஹிஹி
இத படித்ததும் அப்படிதான் இருக்கு
//ஆ.ஞானசேகரன் said…
//இந்த பதிவு சாதாரண திரை ரசிகனாக இருந்து எழுதியது.//
பாகம் 1 ல் நீங்கள் எழுதுயது நண்பரே….ஹிஹிஹி
இத படித்ததும் அப்படிதான் இருக்கு//
:-)))) வாங்க ஞானசேகரன்
சரியா தானே எழுதி இருக்கேன். அந்த பதிவின் தொடர்ச்சி (பாகம் 2) தானே இது, இதற்கும் அது பொருந்தும் தானே.
ஒவ்வொரு பதிவிற்கும் இதை கூற முடியாதே..
எப்படியோ! என்னோட இரண்டு பதிவையும் படித்துட்டீங்க..ஹி ஹி ஹி ரசிகர்கள் பொறுமையாக படிப்பது பெரிய விஷயம் இல்லை………… 😉
//எப்படியோ! என்னோட இரண்டு பதிவையும் படித்துட்டீங்க..ஹி ஹி ஹி ரசிகர்கள் பொறுமையாக படிப்பது பெரிய விஷயம் இல்லை………… ;-)//
படிக்க கூடாதுனுதான் எழுதுகின்றீர்களா?
இந்த பதிவு சாதாரண திரை ரசிகனாக இருந்து எழுதியது என்பதன் விளக்கம் சரியா விளங்கல…
ரஜினி ரசிகனா எழுதினா என்ன பிரச்சனை?… அப்படி சாதாரண திரை ரசிகன் எழுதியது என்பதுபோல் என் அறிவிக்கு புரியவில்லை நண்பா?
//படிக்க கூடாதுனுதான் எழுதுகின்றீர்களா?//
பிடித்து படிப்பது வேறு வேண்டா வெறுப்பா படிப்பது வேறு ..அதை கூறினேன். பொதுவாக ஒரு சிலருக்கு இதை போல பதிவுகள் பிடிக்காது அதனால் கூறினேன்.
//ரஜினி ரசிகனா எழுதினா என்ன பிரச்சனை?… அப்படி சாதாரண திரை ரசிகன் எழுதியது என்பதுபோல் என் அறிவிக்கு புரியவில்லை நண்பா?//
ஒரு பிரச்சனையும் இல்லை. இரண்டும் ஒன்று தாங்க.. 🙂 பதிவே அவரை பற்றியது தானே.
//ஒரு பிரச்சனையும் இல்லை. இரண்டும் ஒன்று தாங்க.. 🙂 பதிவே அவரை பற்றியது தானே.//
ஒரு ரசிகனின் அலசல் என்று சொல்லி இருக்கலாமே
//ஈ ரா said…
நூன் ஷோ முடிஞ்சு வந்தவுங்க…மூஞ்சிய பாவமா வச்சுக்கிட்டு பாபா முத்திரையைக் காட்டி கதம் கதம்னு சொல்லிக்கிட்டே போனாங்க//
ஹா ஹா ஹா ஹா
//உஷார் படுத்தி இருந்தால் யாரும் ஆக்க்ஷனை எதிர்பார்த்து போய் ஏமார்ந்து இருக்க மாட்டார்கள். //
அப்பாவும் இப்படி தாங்க இருக்கும்..குசேலனுக்கு கூட அப்படி தான் கூறினார்..யார் காதுல வாங்குறா 🙂
//திரைக்கதை தான் (தலைவரே எழுதிட்டாரு என்ன பண்றது… ஹும் )//
:-)))) No Comments
//அவைகளை விட பாபா எத்தனையோ மடங்கு மேல்//
:-))) ஹா ஹா இப்படி வேற மனசை தேத்திக்கறோமா
===============================================================
//ஆ.ஞானசேகரன் on 6:46 AM, April 21, 2009 said…
ஒரு ரசிகனின் அலசல் என்று சொல்லி இருக்கலாமே//
நான் தான் டிஸ்கி போட்டு இருந்தேனே…. இதற்க்கு மேல நான் என்னங்க பண்ணுறது…. தலைப்பே அப்படி தானே இருக்கிறது, ரசிகர் அல்லாதவர் யாரும் இதை போல எழுதுவாங்களா!
பொதுவாகவே ரஜினி படம் பார்ப்பது என்பது சரித்திர நிகழ்வுதான்…
பாபா சி.டி. 500ரூபாய்க்கு மேல சொன்னாங்க பாஸ்
//சுரேஷ் கிருஷ்னாக்கு ஆளவந்தான், கஜேந்திரான்னு ரெண்டு சூப்பர் ஹிட் படங்கள் (????) //
தமிழ் திரையுலக வரலாற்றில் முதலிடத்தில் இருக்கும் மூவரை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஓரே இயக்குனர் அவர்தான் என்று நினைக்கிறேன்
சூப்பரப்பு…
நான் பாபா முதல் நாள் மேட்னி போனேன்.. நூன் ஷோ முடிஞ்சு வந்தவுங்க…மூஞ்சிய பாவமா வச்சுக்கிட்டு பாபா முத்திரையைக் காட்டி கதம் கதம்னு சொல்லிக்கிட்டே போனாங்க…. எனக்கு ஒண்ணுமே புரியல….உள்ள போனாதான் மேட்டர் தெரிஞ்சது…
தலைவர் மட்டும், முன்னாடியே, இது ஆன்மீகப் படம்னு சொல்லி உஷார் படுத்தி இருந்தால் யாரும் ஆக்க்ஷனை எதிர்பார்த்து போய் ஏமார்ந்து இருக்க மாட்டார்கள்.
எப்படி இருந்தாலும் நீங்க சொன்னபடி பாபா கதை சரிதான்… திரைக்கதை தான் (தலைவரே எழுதிட்டாரு என்ன பண்றது… ஹும் )
(ஒரு விஷயம் கவனிசீங்களா பாபாக்கு அப்புறமா, சுரேஷ் கிருஷ்னாக்கு ஆளவந்தான், கஜேந்திரான்னு ரெண்டு சூப்பர் ஹிட் படங்கள் (????) அமைந்ததே..அவைகளை விட பாபா எத்தனையோ மடங்கு மேல்..)
ஈ ரா
//SUREஷ் said…
பொதுவாகவே ரஜினி படம் பார்ப்பது என்பது சரித்திர நிகழ்வுதான்//
இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று நம்புறேன் 🙂
//தமிழ் திரையுலக வரலாற்றில் முதலிடத்தில் இருக்கும் மூவரை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஓரே இயக்குனர் அவர்தான் என்று நினைக்கிறேன்//
இதுல சுரேஷ் கிருஷ்ணா தலையீடு மட்டும் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஓரளவு வெற்றி கொடுத்து இருப்பார், இந்த அளவிற்கு மோசம் அடைந்து இருக்காது.
=====================================================
//Nags said…
என்ன கிரி பெரிய பதிவுன்னு சொல்லி சின்ன பதிவு போட்டீங்க ? எனினும் ரசிக்கும்படியாக இருந்தது …//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதை விட பெருசாசாசாசா..எனக்கு இதே கண்ணை கட்டுது
======================================================
//எம்.எம்.அப்துல்லா 2009 said…
//இந்த படம் மட்டும் தான் இது வரை நான் பிளாக்கில் பார்த்த படம் //
அப்பிடியா??? நான் பார்த்தப்ப கலர்லதான இருந்துச்சு!!!//
இந்த கடிக்கு “பாபா” படமே பரவாயில்ல போல இருக்கே 😉
//படம் சரியில்லை..ஓடல. ஆனா மருத்துவர் ங்கொய்யா சாரி அய்யா “நான் பார்க்க வேண்டாம்னு சொன்னதாலதான் தமிழ்நாட்டு மக்கள் அந்த படத்த புறக்கணிச்சுட்டாங்க” அப்படின்னு மில்லினியம் காமெடி அடிச்சாரு//
ஹா ஹா ஹா ஆமாம் செம காமெடி அது ..இதுக்கு பேர் தான் சந்துல சிந்து பாடறது போல இருக்கு
//அந்த படத்தப் பார்த்துட்டு நான் அதிர்ந்துட்டேன். இந்த லட்சனத்துல கல்யாணம் முடுஞ்சு வீட்டுக்காரியோட போன மொதப் படம் அது//
:-)))) ரொம்ப கஷ்டம்
========================================================
//Bleachingpowder said…
நாலு நாளா ரெண்டாம் பாகத்திற்காக வெயிட் பண்ணுன எனக்கு இதெல்லாம், யானை பசிக்கு சோள பொறி மாதிரி//
ஐயயோ! நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!
//சந்திரமுகி படம் பார்த்து சந்தோச பட்டதை விட அன்னைக்கு நைட் ஷோ மும்பை எக்ஸ்பரஸ் பாத்து தான் ரொம்ப சந்தோச பட்டேன்//
:-))))))) அப்பாடா! ன்னா
//அதுக்கப்பறம் ரெண்டு மாசம் நான் தியேட்டருக்கு போகும் போதெல்லாம் தியேட்டரில் மல்லிகை பூ வாசம் தான்//
:-)))))
//கேண்டின், சைக்கிள் ஸ்டாண்ட் காரர்கள் ஜாக்பாட் அடித்து பார்த்தது இந்த படத்தில் தான்//
உண்மை ..இதை பற்றி பலர் கூற கேட்டு இருக்கிறேன். காத்திருந்து கருத்து சொன்ன அருண் அவர்களுக்கு என் நன்றி
கிரி
பழைய நினைவுகளை கிளறிய பதிவு.
நான் துபாய் வந்த ஒரு மாதத்தில் ரிலீசான படம் “பாபா”. நிறைய பேர் குடும்பத்தோடு வந்து பார்ப்பது, ரஜினி மற்றும் கமல் படங்களை. “பாபா”விற்கும் பெரிய அளவில் கும்பல் இருந்தது. படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் அந்த உற்சாகம் (???) வடிந்து விட்டது.
ஏனைய மலையாளிகள் வேறு, ரஜினியை பயங்கர காமெடி பண்ணினார்கள். ஆனாலும், அந்த தோல்வியை தன் “சந்திரமுகி”யால் தலைவர் சரி கட்டினார். இங்கு சந்திரமுகி மற்றும் சிவாஜி பிரம்மாண்ட வெற்றி பெற்றது என்றால் மிகையாகாது.
இன்று வரை நான் ரஜினி படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை தெரியுமா…? :-))))))
என்ன கிரி பெரிய பதிவுன்னு சொல்லி சின்ன பதிவு போட்டீங்க ? எனினும் ரசிக்கும்படியாக இருந்தது …
//இந்த படம் மட்டும் தான் இது வரை நான் பிளாக்கில் பார்த்த படம் //
அப்பிடியா??? நான் பார்த்தப்ப கலர்லதான இருந்துச்சு!!!
//அடுத்த பதிவு இன்னும் விரிவாக எழுதவும் என்று அன்பு கட்டளை இட்ட நண்பர்களுக்காக இந்த பதிவு சமர்ப்பணம்//
நாலு நாளா ரெண்டாம் பாகத்திற்காக வெயிட் பண்ணுன எனக்கு இதெல்லாம், யானை பசிக்கு சோள பொறி மாதிரி. சந்திரமுகி படம் பார்த்து சந்தோச பட்டதை விட அன்னைக்கு நைட் ஷோ மும்பை எக்ஸ்பரஸ் பாத்து தான் ரொம்ப சந்தோச பட்டேன், அது வரைக்கும் எனக்கும் டவுட்டாக தான் இருந்துச்சு. ரெண்டு நாள் கழித்து என்னோட அப்பா, அம்மா, அக்கா குழந்தைகளை அழைத்து கொண்டு போனேன். அம்மாவிற்கும் குழந்தைகளுக்கும் படம் ரொம்ப பிடிச்சி போச்சு. அதுக்கப்பறம் ரெண்டு மாசம் நான் தியேட்டருக்கு போகும் போதெல்லாம் தியேட்டரில் மல்லிகை பூ வாசம் தான்.சும்மாவே தலைவர் படத்துக்கு தாய்குலங்களோட ஆதரவு களை கட்டும் இந்த படத்துக்கு கேட்க்கவே வேண்டாம்.
கேண்டின், சைக்கிள் ஸ்டாண்ட் காரர்கள் ஜாக்பாட் அடித்து பார்த்தது இந்த படத்தில் தான்.
//அப்போது வேறு பா மா க சண்டை என்று பரபரப்பான தருணம் //
படம் சரியில்லை..ஓடல. ஆனா மருத்துவர் ங்கொய்யா சாரி அய்யா “நான் பார்க்க வேண்டாம்னு சொன்னதாலதான் தமிழ்நாட்டு மக்கள் அந்த படத்த புறக்கணிச்சுட்டாங்க” அப்படின்னு மில்லினியம் காமெடி அடிச்சாரு
:))
//படம் போட்டவுடன் (ஆல்பட்) திரை அரங்கே அதிர்ந்து விட்டது //
அந்த படத்தப் பார்த்துட்டு நான் அதிர்ந்துட்டேன். இந்த லட்சனத்துல கல்யாணம் முடுஞ்சு வீட்டுக்காரியோட போன மொதப் படம் அது.
//படம் சங்கு ஆனதை விட மற்ற நடிகர்கள் (குறிப்பாக கமல்) ரசிகர்கள் கிண்டலடிப்பார்களே என்ற கடுப்பு வேறு :-))) //
அட எல்லாருமே இப்படித்தானோ.
உங்கள் அனுபவ கட்டுரை அருமை கிரி. மேலும் இது போல் எழுதுங்கள். நன்றி ஜெட்லி
எனக்கும் பாபா படத்திற்க்கு அதே மன நிலை தான் ஏற்பட்டது..இருந்தாலும் நான் 48 முறை பார்தேன்.( சிதம்பரத்தில் அந்த படம் அவ்ளோ நாள் தான் ஓடிச்சி)
Giri,
Both your posts on FDFS of Thalaivar movies are rocking. You do have the knack to describe the events nicely & I felt as if I am present their & watching the same. Thanks for sharing your experiences & describing the same in a matter of fact way. Kudos to you.
Permit me to share some of my experiences too while watching Thalaivar's movies (though none of them FDFS since I deliberately avoid that).
I faced the same dilemma (or confusion) in Padayappa (not FDFS) as you faced for Baba. Though I saw Padayappa in Bangalore's Naga theatre during second or third week-end, my first impression after watching it was tooooooo long a movie & believe me, I got severe headache while & after watching it. But, my daughter thoroughly enjoyed it. But, the same Padayappa, when I watched it after a few weeks in VCD in my relative's place, I didn't feel bored even for a second. Till date, I don't know how come I could not enjoy it the first time (!). Subsequently I have watched it at least a dozen times & it has become one of my Top 5 favourite Thalaivar movies & I have it in my iPod too so that I can watch it whenever I feel like (!).
Like Arunachalam & Padayappa, I watched CM also for the first time with my wife & daughter. But, this time it was First Day Night Show in Bangalore's Urvashi theatre. Though I know CM was a remake of an old Malayalam movie about MPD, etc. I didn't know the full story or back-ground info & hence coolly booked for FDNS.
That day, even to enter Urvashi theatre in my car was a herculean effort due to the massive crowd which had gathered & created traffic chaos at that junction. Even while managing to enter inch by inch into the theatre premises, I enquired about the movie to people coming out of Eve Show & all of them were happily showing victory sign or shouting "Super". My wife was cursing me to be watchful while driving the car instead of talking to oncoming crowd & enquiring about the movie. She was bothered by her worry that I should drive inside & park safely without hitting anyone. I was worried about how CM is going to be & if the crowd gets to like it or not. After all, people have their own priorities in life, isn't it?
Inside the auditorium it was all commotion, commotion & more commotion. People (fans) were dancing on stage (for Devuda song) & there were tons of bit papers strewn around the auditorium. Of course, there was Karpoora Arathi on Pumpkin to Thalaivar's close-ups in Devuda song. But, the entire atmosphere turned upside down & the whole theatre became totally silent post-interval. I literally felt the crowd (mine included) got a jolt of their life (sort of) in the cot-lifting scene & of course, the climax. I felt it was one of the most gripping stories I have seen recently in Tamil. I was also pleasantly surprised that CM was a non-typical Rajini movie. I instantly felt CM is going to be a super hit; though I never thought it will go on to break long-standing collection & longest-running records & set new benchmarks for Tamil movie's collection standards..
However, while watching CM, my daughter panicked & didn't watch many scenes post-interval due to fear. In fact, for next two days she suffered from fever & nausea & even today she refuses to watch Ra Ra song or the above two scenes inspite of my goading & encouragement.
I again saw CM the next week-end in PVR Multiplex. I got seat in the first row & I utilised the opportunity to "watch" how the audience panics while watching CM. (Don't think that I wanted to avoid seeing those cot-lifting or climax scenes, Ok?). Whoever was laughing out loud & otherwise enjoying loudly during the first half, became totally silent & their eyes were glued to the big screen & with the screen light I could "see" fear in those pairs of eyes – at least for the first few rows. Though there were no dancing, etc. in PVR (degent crowd
இதெல்லாம் ஓவர் …நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன்…
பாபா அட்டகாசமான படம்….இப்போது பார்த்தால் கூட படம் அட்டகாசமா இருக்கும் ..நான் போன வாரம் மூன்று முறை பார்த்தேன் ….சக்தி கொடு பாடல் அட்டகாசம்….
நானே ஓட்டியிருக்கேன்…தலைவர் 7 மந்திரத்தில் ஒரு மந்திரத்தை யூஸ் பண்ணி படம் ஹிட்டாகனும்ன்னு வேண்டியிருக்கலாம் என்று..எனக்கு படம் பிடிக்கவே செய்தது….குறிப்பாக இரண்டாம் பாதி…
//வாசுகி said…
அட எல்லாருமே இப்படித்தானோ.//
இது அனைவருக்கும் பொது 😉
==============================================================
//R.Gopi said…
ஏனைய மலையாளிகள் வேறு, ரஜினியை பயங்கர காமெடி பண்ணினார்கள்//
அவங்களுக்கு வயித்தெரிச்சலா இருக்கும்..
//சந்திரமுகி மற்றும் சிவாஜி பிரம்மாண்ட வெற்றி பெற்றது என்றால் மிகையாகாது.//
சந்திரமுகி பற்றி தெரியவில்லை ஆனால் அங்கு சிவாஜி பெரிய வெற்றி பெற்றது என்று இணையத்திலும் செய்திகளிலும் படித்தேன்
=========================================================
//’டொன்’ லீ said…
இன்று வரை நான் ரஜினி படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை தெரியுமா…? :-))))))//
நல்ல வேளை ரஜினி படமே பார்த்து இல்லைன்னு சொல்லாம இருந்தீங்களே.. :-))
========================================================
//M Arunachalam said…
Giri,
Both your posts on FDFS of Thalaivar movies are rocking. You do have the knack to describe the events nicely & I felt as if I am present their & watching the same. Thanks for sharing your experiences & describing the same in a matter of fact way. Kudos to you.//
நன்றி அருண். உங்களை போன பதிவிற்கே எதிர்பார்த்தேன்..என்னடா! இது ஆளை காணோமே என்று 🙂
// have it in my iPod too so that I can watch it whenever I feel like (!).//
🙂
//My wife was cursing me to be watchful while driving the car instead of talking to oncoming crowd & enquiring about the movie//
ஹா ஹா ஹா ஹா ..கற்பனை செய்து பார்த்தேன்..
//After all, people have their own priorities in life, isn't it?//
சந்தேகமில்லாமல்
//I was also pleasantly surprised that CM was a non-typical Rajini movie.//
இது தான் விசயமே
//However, while watching CM, my daughter panicked & didn't watch many scenes post-interval due to fear. In fact, for next two days she suffered from fever & nausea & even today she refuses to watch Ra Ra song or the above two scenes inspite of my goading & encouragement//
இது பலருக்கும் நேர்ந்த ஒன்று.
// am really sorry about this loooooooong comment //
அருண் இப்படி எல்லாம் சொல்லாதீங்க..இதை போல கமெண்ட் போடுவதையே பதிவு எழுதும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். காரணம் நம் பதிவு ஒருவரை கவர்ந்து இவ்வளோ பெரிதாக கமெண்ட் கூறி இருக்கிறாரே என்பதே அவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சியாகும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
// have ti blame your post only for inspiring me to immediately comment about my experiences.//
இதை போல வார்த்தைகளே எழுதும் பலருக்கும் ஊக்கம் அளிப்பவையாக உள்ளன. ரொம்ப நன்றி அருண் உங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு,
================================================================
//Srinivas said…
இதெல்லாம் ஓவர் …நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன்…
பாபா அட்டகாசமான படம்….இப்போது பார்த்தால் கூட படம் அட்டகாசமா இருக்கும் ..நான் போன வாரம் மூன்று முறை பார்த்தேன்//
ஸ்ரீநிவாஸ் உங்களை போன்ற ரசிகர்களுக்காக தான் பதிவிலேயே கூறி விட்டேனே..நான் கூறுவது பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையை.
//நானே ஓட்டியிருக்கேன்…தலைவர் 7 மந்திரத்தில் ஒரு மந்திரத்தை யூஸ் பண்ணி படம் ஹிட்டாகனும்ன்னு வேண்டியிருக்கலாம் என்று//
ஹா ஹா ஹா ஏங்க! இதுக்கு நானே பரவாயில்ல :-)))))))
===============================================================
//ஜெட்லி said…
உங்கள் அனுபவ கட்டுரை அருமை கிரி. மேலும் இது போல் எழுதுங்கள்.
நன்றி//
நன்றி ஜெட்லி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===============================================================
//உருப்புடாதது_அணிமா said…
எனக்கும் பாபா படத்திற்க்கு அதே மன நிலை தான் ஏற்பட்டது..
இருந்தாலும் நான் 48 முறை பார்தேன்.
( சிதம்பரத்தில் அந்த படம் அவ்ளோ நாள் தான் ஓடிச்சி)//
ஐயையோ! நிஜமா தான் சொல்றீங்களா..இருந்தாலும் இது நெம்ப ஓவரா இருக்கு. எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு
=============================================================
//MUTHU said…
இப்படியல்லாம் சொல்லிவிட்டால் விட்டு விடுவோமா பார்ட் 3 இன்னும் எதிர் பார்க்கின்றோம்//
ஏங்க! சத்யமா மூன்றாவது பாகம் எல்லாம் இவ்வளோ பெருசா போட முடியாது..எல்லோரும் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க போல. முடிந்த வரை சுவாராசியமா எழுத முயற்சிக்கிறேன் அது தான் என்னால முடிந்த ஒன்று.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதை விட பெருசாசாசாசா..எனக்கு இதே கண்ணை கட்டுது
இப்படியல்லாம் சொல்லிவிட்டால் விட்டு விடுவோமா பார்ட் 3 இன்னும் எதிர் பார்க்கின்றோம்
நன்றி
இத்தனை ரகளை நடந்தாலும் ஒரு சில மனம் தளராத ரசிகர்கள் இன்னும் அடங்காமல் விசில் தான் :-)).நாம இந்த ரகம் தான். திருச்சியில் விசில் பறக்க படம் பார்த்தப்ப எனக்கு ஒன்னும் போர் அடிக்கல. ஆனா 2வது தடவை படம் பார்த்துட்டு சுஜாதா வை அடிச்சு கொல்லனும் பேசுன ஞாபகம். அம்மா தான் ரஜினிய சன்டைக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்கல்லா.படத்தில் ரஜினி தியேட்டருக்கு வரும் போது லைட் போடுங்கப்பானு சொல்லும் போது தியேட்டரில் லைட் போடவச்சு கலக்கனுது தனி கதை. சந்திரமுகி பெங்களூரில் பார்த்த முதல் படம். முதல் ஃபைட்ல ஆரம்பிச்ச ஆரவாரம் கடைசி வரை இருந்தது. போட்ட ஆட்டத்தில் இன்டர்வெலில் 1 லிட்டர் பெப்ஸி குடிச்சதே தெரியல. பதிவு பெருசா இருந்தாலும் சுவராஸ்யமா தான் இருந்தது.
வேற மாதிரி எல்லாம் தெரிவிக்கத் தெரியாதுங்களே!..
//உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்
மன்னிக்கணும் வாத்யாரே. நான் இன்னும் உங்க போஸ்டை படிக்கலை. (சிலர் மாதிரி படிக்காமலே கமென்ட் போடும் பழக்கம் எனக்கில்லை. ஹி…ஹி…!!) ஜஸ்ட் ரெண்டு நாள் டயம் கொடுங்க. படிச்சிட்டு வந்து அக்கு வேறு ஆணிவேரா கமெண்ட்ல அளசிடுரேன். (நான் கமெண்ட் போடலைங்குறதுக்காக நம்ம சைட் வராம இருக்குறது நியாயமில்லை. ஆமாம்… சொல்லிபுட்டேன்…) – சுந்தர்Onlysuperstar.com
//ரசிகர்கள் பூ, காகிதம் மற்றும் சாக்லேட் என்று வீச, கொண்டு வந்த ஹெல்மெட்டை தலைக்கு மாட்டிக்கொண்டு பார்த்த அனுபவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது.//
தியேட்டருக்குள்ள ஹெல்மெட்டா! :)))))
//Raja said…
நாம இந்த ரகம் தான். திருச்சியில் விசில் பறக்க படம் பார்த்தப்ப எனக்கு ஒன்னும் போர் அடிக்கல.//
இதே தான் அனைவருக்கும்
//2வது தடவை படம் பார்த்துட்டு சுஜாதா வை அடிச்சு கொல்லனும் பேசுன ஞாபகம். அம்மா தான் ரஜினிய சன்டைக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்கல்லா.//
பாவங்க!
//போட்ட ஆட்டத்தில் இன்டர்வெலில் 1 லிட்டர் பெப்ஸி குடிச்சதே தெரியல//
ஹா ஹா ஹா கலக்கல்
//பதிவு பெருசா இருந்தாலும் சுவராஸ்யமா தான் இருந்தது//
நன்றி ராஜா
=============================================================
//தமிழ்நெஞ்சம் said…
வேற மாதிரி எல்லாம் தெரிவிக்கத் தெரியாதுங்களே!..//
இது உங்களுக்கில்ல தமிழ்நெஞ்சம், கண்டபடி கமெண்ட் போடுகிறவர்களுக்கு மட்டும் தான் 😉
=============================================================
//Srinivas said…
அது அப்படி இல்லை…படம் நன்றாக இருப்பது வேறு ஹிட்டவது வேறு….அன்பே சிவம் ஹே ராம் போன்ற படங்கள் நன்றாக இருக்கும்..ஆனால் தோல்வி படங்கள்…
எனவே பாபா வும் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னேன்//
அப்படியா! ஓகே ஓகே மன்னிக்கவும்
//அதெல்லாம் முடியாது….சிவாஜி பட அனுபவத்தையே நீங்கள் மூன்று அல்லது நான்கு பதிவாக போட வேண்டும்….ஓகே னா சீக்கிரம் பதிவ போடுங்க ….இல்லேன்னா கொஞ்சம் ஆபீஸ் ரூம் ல வெயிட் பண்ணுங்க:)//
:-))) ஏங்க! இதெல்லாம் ரொம்ப அநியாயம்.
=========================================================
//Simple_Sundar said…
ஜஸ்ட் ரெண்டு நாள் டயம் கொடுங்க. படிச்சிட்டு வந்து அக்கு வேறு ஆணிவேரா கமெண்ட்ல அளசிடுரேன்//
பொறுமையா வாங்க
//நான் கமெண்ட் போடலைங்குறதுக்காக நம்ம சைட் வராம இருக்குறது நியாயமில்லை. ஆமாம்… சொல்லிபுட்டேன்//
இது நெம்ப ஓவர் ..கடைசி பதிவு வரைக்கும் கமெண்ட் போட்டு இருக்கேன்
==========================================================
//ARASIAL said…
பாபா குறித்து நீங்கள் சொல்வதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அது ஒரு நல்ல படமே. எத்தனையோ முறை குடும்பத்தோடு பார்த்திருக்கிறாம்.//
வினோ நீங்க தவறா புரிந்து கொண்டீங்க.
நான் இந்த பதிவிலேயே கூறி இருக்கிறேன் கதை நல்ல கதை தான், திரைக்கதை தான் சரி இல்லை. எடுத்த விதம் சரி இல்லை அவ்வளோ தன்.
//மீடியாவின் கருத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதால் வந்த பிரச்சினை அது//
நீங்கள் கூறுவது உண்மை தான் என்றாலும்.. நான் கூறி இருப்பது என் சொந்த கருத்தே
//தொடருங்கள்… கமெண்டுகளை பொருட்படுத்த வேண்டாம்//
நன்றி
==============================================================
//Nags said…
ஒவ்வொருவருடைய அனுபவமும் பின்னோட்டத்தில் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது//
உண்மை உண்மை உண்மை
//கிரி இதை ஏன் தொடர் பதிவாக மாற்றி உங்கள் நண்பர்களை எழுத அழைக்கலாமே (after your part 3 )//
இல்லைங்க Nags .. இதை வினோ சுந்தர் போன்றவர்கள் செய்வது தான் சரியாக இருக்கும். என் பதிவில் அனைத்து விசயங்களையும் கூறுவேன், இது மட்டுமே என்றால் தொடர்ந்து படிக்கும் ரசிகர்கள் அல்லதாவர்களுக்கு சலிப்பாகி விடும். இதே நான் ஒரு பதிவு தான் எழுத நினைத்து இருந்தேன், அனைவரும் ஆர்வமாக கேட்டதால் மூன்றாவது பதிவு வரை வந்து விட்டது.
உங்கள் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் நன்றி
============================================================
//ராஜ நடராஜன் said…
தியேட்டருக்குள்ள ஹெல்மெட்டா! :)))))//
வாங்க நடராஜன். பைக் ல வரும் போது கொண்டு வந்த ஹெல்மெட்டை நான் எங்கே வைப்பது?..உள்ளே தானே எடுத்து வர முடியும்.
இப்ப ஓகே வா? 🙂
east or west our thalivar is always best,waiting for endhiran
//ஹா ஹா ஹா ஏங்க! இதுக்கு நானே பரவாயில்ல :-)))))))
//
அது அப்படி இல்லை…படம் நன்றாக இருப்பது வேறு ஹிட்டவது வேறு….அன்பே சிவம் ஹே ராம் போன்ற படங்கள் நன்றாக இருக்கும்..ஆனால் தோல்வி படங்கள்…
எனவே பாபா வும் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னேன் …
//நான் கூறுவது பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையை.
//
நானும் ஒப்புக்கொள்கிறேன் …எனக்கு பிடித்தது ….பெரும்பாலோர்க்கு பிடிக்கவில்லை….
//ஏங்க! சத்யமா மூன்றாவது பாகம் எல்லாம் இவ்வளோ பெருசா போட முடியாது..//
அதெல்லாம் முடியாது….சிவாஜி பட அனுபவத்தையே நீங்கள் மூன்று அல்லது நான்கு பதிவாக போட வேண்டும்….ஓகே னா சீக்கிரம் பதிவ போடுங்க ….இல்லேன்னா கொஞ்சம் ஆபீஸ் ரூம் ல வெயிட் பண்ணுங்க:)
“ரஜினி வந்தவுடன் எழுந்த சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து விடும் போல இருக்கு. நாங்கள் வேறு ஸ்க்ரீனுக்கு 6 வரிசை முன்னாடி, கேட்கனுமா! ரசிகர்களுடன் படம் பார்த்த பிறகு முடிவு செய்தேன்..மவனே! இந்த டீசென்ட் கோஷ்டிக கூட மட்டும் மறந்தும் ரஜினி படம் FDFS பார்க்க கூடாது என்று.. ரசிகர்களோடு பார்த்த பிறகு படம் பட்டாசா இருக்கு..ஒரே படத்திற்கு இரு வேறு அனுபவங்கள்..இதை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்….”
-100 சதவிகிதம் உண்மை.
பாபா குறித்து நீங்கள் சொல்வதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அது ஒரு நல்ல படமே. எத்தனையோ முறை குடும்பத்தோடு பார்த்திருக்கிறாம். டிவிடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது என் தந்தை இப்படிச் சொன்னார்:
“இந்தக் காலத்துல இப்படியெல்லாம் நல்ல விஷயங்களைச் (அன்னை- தந்தையை மதிக்கணும், புத்தியை வளர்க்கணும், வேலைதான் முக்கியம், காதல் தானா தேடிவரும்….) சொல்ல எந்த நடிகனுக்குடா தைரியம் இருக்கு… அப்படியே சொன்னாதான் எடுபடுமா… எம்ஜிஆருக்கு அப்புறம் ரஜினிக்குதான் அந்த பவர் இருக்கு…”
பாபா, குசேலன் இரண்டிலுமே மீடியாவின் வில்லத்தனம் அதிகம். நாம் நாமாக நம்மை வைத்துக் கொள்வதில்லை. மீடியாவின் கருத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதால் வந்த பிரச்சினை அது.
இந்தப் பதிவில் உங்கள் உதயம் திரையரங்க அனுபவம் சூப்பர். எனக்கு சின்ன வயதில் நான் பார்த்த போக்கிரிராஜா முதல் நாள் முதல் ஷோ நினைவுக்கு வந்துவிட்டது.
தொடருங்கள்… கமெண்டுகளை பொருட்படுத்த வேண்டாம்!
வினோஜாஸன்
என்வழி
ஒவ்வொருவருடைய அனுபவமும் பின்னோட்டத்தில் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது …. கிரி இதை ஏன் தொடர் பதிவாக மாற்றி உங்கள் நண்பர்களை எழுத அழைக்கலாமே (after your part 3 )
///படம் சங்கு ஆனதை விட மற்ற நடிகர்கள் (குறிப்பாக கமல்) ரசிகர்கள் கிண்டலடிப்பார்களே என்ற கடுப்பு வேறு :-)))///ஒரு படத்துக்கே உங்களுக்கு இப்படி என்றால் , அவர்களுக்க எத்தனை படங்கள் எத்தனை சோதனைகள் 🙁
//நன்றி அருண். உங்களை போன பதிவிற்கே எதிர்பார்த்தேன்..என்னடா! இது ஆளை காணோமே என்று :-)//
After reading your first post, I held back my urge to comment because I knew that my comment will go on like Hanumar Vaal & may irritate other readers. But, after seeing your second post & your "differing" experience on CM, I simply could not hold back from commenting because I too felt in a similar way in Padayappa & which better place to share that feeling than here where you too felt the same way, albeit for a different movie.
Regarding Baba, which I forgot to mention, I watched it alone on Day 2 in Kino theatre in Bangalore & the entire crowd enjoyed the movie. On its 2nd week-end, I once again watched it with my wife & daughter in Urvashi & we all ENJOYED the movie.
I am of the firm opinion that Baba's victory was stalled due to PMK goons' rowdism at all theatres screening Baba & the state Govt.'s inaction in controlling the same. This has prevented the general public from coming to theatres in the initial weeks because of which Baba's collection lost the crucial momentum, which ultimately prevented it from becoming a mega hit.
Even though some fans like you might not have liked Baba for whatever reason, I feel general public would have embraced it big time because of its content, if only it had been allowed the normal run by PMK rowdies & state Govt.
Arun
Thalaivaa arumaiyana pathivu anubavangalai putu vaithai … en thalaivan padam parkkum naal thiruvula than athae ennatha solla 😉 athu oru thani ulagam ada sorgam
Mr arunachalam commentum super
nammalum padiyappa trichy kaverila whole family oda appa amma nan thambi oda summa theater athira parthom … thalaivar antha ungjal elukkum scene than periya highligh even though we liked all scenes athula theatre kilinchiduchu
Thalaiva neer valga
Giri thanks for posting this
romba nalla pathivu giri nalla soli irukeenga.. innum perusa pathivu mudincha podunga giri
thalaivar padathula innum oru special yaravathu padathu ulla scena la thalaivar ra thittina pothum avalavu thann namma pasanga avanga kudumbathaiye undu illanu senchuduvanga. For example;
1. Vadivukarasi – Arunachalam
2. Nassar – Chandramukhi (Thalaivar ra adikura scene)
3. Anandraj – Badsha
4. Pnnayan, Sarathbabu – Muthu
Ivanga athana peraiyum tholachu yeduthutanga namma rasikar gal theater la:)
Thanks,
Arun
கிரி, எனக்கும் பாபா பிடித்திருந்தது… பாபா படத்தின் மூலம் ரசிகர்கள் ரஜினிக்கு உணர்த்தியது என்னவென்றால்1) ”real வாழ்க்கையில் எப்படி வேணும்னாலும் வா தலைவா; ஆனால் reel வாழ்க்கையில் மேக்கப், உடை இதெல்லாம் கலக்கலா இருக்கனும்”!2)அப்புறம், ஒரு சாமி ஒன்னொரு சாமியிடம் சக்தி கொடு என்று கேட்டதை ஒத்துக் கொள்ள முடியாது!சந்திரமுகி, லண்டனில் Himalayas தியேட்டரில் FDFS பார்க்கப் போகும் முன்னர், நம்ம ராம்கி அவர்களுக்கு போன் அடிச்சு ரிசல்ட் கேட்டு ஓடிப் போய் பார்த்தால் “பகீர்” என்று இருந்தது. இதே சமயத்தில் நண்பர்கள் (எதிரிகள்!) சிலர் சச்சின் இப்படத்தைக் கவுத்திவிடும் என்று வெறுப்பேத்தி விட்டனர்! . ஆனால், பிறகு நடந்தது உலகுக்கு தெரியும்!நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும். ரஜினி படம் ஜெயிக்கும் என்று சொல்லியிருந்தார்!! அது பலித்தது! 🙂
எந்திரன் FDFS சிங்கையில நம்ம சங்கத்த மொத்தமா கூட்டிக்கிட்டு போயி ஆடிருவோமா?
//M Arunachalam said…
I am of the firm opinion that Baba's victory was stalled due to PMK goons' rowdism at all theatres screening Baba & the state Govt.'s inaction in controlling the same. This has prevented the general public from coming to theatres in the initial weeks because of which Baba's collection lost the crucial momentum, which ultimately prevented it from becoming a mega hit//
நீங்கள் கூறுவது முற்றிலும், படத்தின் வசூலே முதல் ஒரு வாரம் தான் அதுவும் படம் சுமாராக இருந்ததால் அதன் பிறகு வரும் கூட்டமும் குறைந்து விட்டது.
======================================================
//subra said…
east or west our thalivar is always best,waiting for endhiran//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுப்ரா
=======================================================
//Suresh 2009 said…
nammalum padiyappa trichy kaverila whole family oda appa amma nan thambi oda summa theater athira parthom//
:-)) எந்திரன் பார்க்க தயார் ஆகிடுங்க
=======================================================
//சோழ நாட்டான் said…
ஒரு படத்துக்கே உங்களுக்கு இப்படி என்றால் , அவர்களுக்க எத்தனை படங்கள் எத்தனை சோதனைகள் :(//
உண்மை தாங்க..ஆனால் வலையுலகத்தில் குசேலனுக்கு நடந்ததை நீங்க பார்த்தீர்களா என்று எனக்கு தெரியாது உங்கள் முதல் வருகைக்கு நன்றி
=========================================================
//ஜோசப் பால்ராஜ் said…
எந்திரன் FDFS சிங்கையில நம்ம சங்கத்த மொத்தமா கூட்டிக்கிட்டு போயி ஆடிருவோமா?//
எதுக்குங்க என்னை நடுவுல உட்கார வைத்து கிண்டல் செய்யவா! உங்க கூடெல்லாம் சத்யமா வர மாட்டேன் :-))))
எந்திரன் வெளியாகும் நேரம் நான் ஊருக்கு போய் தான் படம் பார்ப்பேன் சென்னையில், அதற்க்கு தகுந்த மாதிரி என் விடுமுறையை மாற்றி கொள்வேன்.
=========================================================
//arun said…
innum perusa pathivu mudincha podunga giri/
முயற்சி செய்கிறேன் அருண்
//thalaivar padathula innum oru special yaravathu padathu ulla scena la thalaivar ra thittina pothum avalavu thann namma pasanga avanga kudumbathaiye undu illanu senchuduvanga//
உண்மை தான் இதை படையப்பா படத்துலையே சொல்ல நினைத்து மறந்துட்டேன், சிவாஜி ல எனக்கு அது மாதிரி அனுபவம் ஆகி விட்டது. அதை படித்து பாருங்க 😉
======================================================
//Vijay said…
1) ”real வாழ்க்கையில் எப்படி வேணும்னாலும் வா தலைவா; ஆனால் reel வாழ்க்கையில் மேக்கப், உடை இதெல்லாம் கலக்கலா இருக்கனும்”!//
சரியா பாயிண்ட்ட பிடித்தீங்க 🙂
// இதே சமயத்தில் நண்பர்கள் (எதிரிகள்!) சிலர் சச்சின் இப்படத்தைக் கவுத்திவிடும் என்று வெறுப்பேத்தி விட்டனர்//
இதை நான் என் பதிவிலயே குறிப்பிட நினைத்தேன், பிறகு விஜயை எல்லோரும் கமெண்ட் ல் திட்டுவார்கள் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். கூட எனக்கும் திட்டு விழும் எதுக்கு விஜய் பற்றி எல்லாம் சொல்கிறீர்கள் என்று ஹி ஹி
“நான் கத்திட்டு திரும்பி பார்க்கிறேன் என் நண்பனை காணவில்லை..சுத்தி முற்றி பார்த்தால் வேறு பக்கம் ஒரு கோஷ்டியோடு செம குத்து குத்திட்டு இருக்கான்..அவனை கத்தி கூப்பிட்டு பார்த்தும் திரும்பாததால் நானும் ஹி ஹி அவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டேன்.”
:-))))))))))
பிவிஆர் மாதிரியான மல்டிப்ளெக்ஸ் எல்லாம் சமீப வருடங்களில் வந்த பிறகுதான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன் பெங்களூரில் என்றால் என்ன சொல்வீர்களோ:)!!!!!
வாங்க சிவா .. 🙂
==============================================================
//ராமலக்ஷ்மி said…
பிவிஆர் மாதிரியான மல்டிப்ளெக்ஸ் எல்லாம் சமீப வருடங்களில் வந்த பிறகுதான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன் பெங்களூரில் என்றால் என்ன சொல்வீர்களோ:)!!!!!//
மல்டிப்ளெக்ஸ் திரைஅரங்கிலும் இதே போல கலாட்டா முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இருக்கும்..ஆனால் ரொம்ப இருக்காது மற்ற திரை அரங்குகளை ஒப்பிடும் போது.
எந்திரனுக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை 😉
கிரி.. சூப்பர்… ரஜினி படம் மாதிரியே படிக்கறதுக்கு பரபரப்பா இருந்துச்சு… இன்னைக்குதான் உங்க blog பார்த்தேன்.. அதனாலே FDFS final part படிச்சுட்டுதான் 1st & 2nd part படிச்சேன்… கலக்கிருகிங்க.. அப்டியே தலைவர் படம் முதல் நாள் பாக்கற அனுபவத்தை கண் முன்னால கொண்டு வந்துடிங்க. இந்த high class peoples-கூட மட்டும் படம் பார்க்க கூடாது.. நமக்கு எப்பவும் லோக்கல்தான்.. செமையா என்ஜாய் பண்ணலாம் மாமே..ஒரு ரசிகனா enjoy பண்ணி படிச்சேன்..உங்க blogkuku வந்த்ருக்கற இவ்ளோ comments பார்த்தாலே தலைவரோட reach தெரியுது.. ச்சும்மா அதிருதுல்ல..தலைவர் தலைவர்தான்… நன்றி…
//Chandru on 9:20 PM, April 24, 2009 said…
கிரி.. சூப்பர்… ரஜினி படம் மாதிரியே படிக்கறதுக்கு பரபரப்பா இருந்துச்சு//
நன்றி சந்துரு
//இந்த high class peoples-கூட மட்டும் படம் பார்க்க கூடாது.. நமக்கு எப்பவும் லோக்கல்தான்//
உண்மை.. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்
//உங்க blogkuku வந்த்ருக்கற இவ்ளோ comments பார்த்தாலே தலைவரோட reach தெரியுது.. ச்சும்மா அதிருதுல்ல..தலைவர் தலைவர்தான்//
🙂
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சந்துரு
கிரி கலக்கிடீங்க சந்திரமுகி முதல் காட்சியில் உங்க கூட சேர்ந்து
படம் பார்த்த அனுபவம் கிடைச்சுது
எந்திரன் ரிலீஸ் க்கு சென்னை வந்துடுங்க கலக்கிடுவோம்
// r.v.saravanan said…
கிரி கலக்கிடீங்க சந்திரமுகி முதல் காட்சியில் உங்க கூட சேர்ந்து படம் பார்த்த அனுபவம் கிடைச்சுது //
நன்றி சரவணன் 🙂
//எந்திரன் ரிலீஸ் க்கு சென்னை வந்துடுங்க கலக்கிடுவோம்//
நான் சென்னையில் தான் பார்க்கனும்னு இருக்கிறேன்.. ஆனால் அந்த சமயத்தில் விடுமுறை கிடைக்குமான்னு தான் தெரியல 🙁