அயன் (2009) அசத்தல்

26
ayan movie அயன்

ரப்பான திரைக்கதையில் வெளிவந்துள்ளது அயன். Image Credit

பிரபு கடத்தல் தொழில் செய்பவர் நன்கு படித்து இருந்தும் அவருக்கு வலது கரமாக இருப்பவர் சூர்யா. இவருடைய தொழில் போட்டியாளர் நேர்மையாக இருந்தாலும் அவருடைய மகன் பிரபுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

சூர்யா எப்படி கையாண்டு வெற்றி பெறுகிறார் என்பதை கதை.

இவர்கள் கும்பலில் கருணாசும் உண்டு ஆனால், நடிக்க வாய்ப்பில்லை.

சூர்யா நண்பராக விஜய் டிவி கடவுள் பாதி மிருகம் பாதி நண்டு நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை, இவருடைய தங்கை தமன்னா.

தமன்னாவிற்குப் பெரிதாக நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை ஒரே ஒரு முறை CID சங்கர் போல வேலை செய்வதைத் தவிர்த்து.

சூர்யா அசத்தலாக நடித்துள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவரது நடிப்பு நல்ல சுறுசுறு விறுவிறு.

காதல் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறார். அடடா! இப்படியொரு ஆள் கிடைத்தா நல்லா இருக்குமே என்று பல பெண்களை ஏங்க வைத்து விடுவார்.

காங்கோ

ஹிந்தி தெலுங்கு உட்பட அனைவரும் அமெரிக்கா, சுவிசர்லாந்து, லண்டன் என்று ஒரே இடமாகச் சென்று மொக்கை போட்டு வெள்ளைகாரர்களையே காட்டி கொண்டு இருக்க, யோவ்! காங்கோ மாதிரி வித்யாசமான இடங்களும் நிறையா இருக்குன்னு நம்மை அங்கே அழைத்துச் சென்று புது வித அனுபவத்தைக் கொடுத்து விட்டார்கள்.

காங்கோ சம்பந்தப்பட்ட காட்சிகளை ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.

அதிலும் அங்கே நடக்கும் சேசிங் காட்சிகள் அசத்தல், கேமரா கலக்கி இருக்கிறது.

அங்கே உள்ள பல பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் போலவும் எய்ட்ஸ் அதிகம் போலவும், திருட்டு அதிகம் போலவும் காட்டி இருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தது. முதலில் பிடிக்கவில்லை ஆனால், தொடர்ந்து கேட்ட பிறகு பிடித்த பாடல்களாகி விட்டன.

சூர்யாவை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று அவரது ஷு வை கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன் சேதப்படுத்தி விட அதற்குப் பதிலாக அவர் வேறு பெறுவது,  நம்பும்படி இல்லை என்றாலும் ரசிக்கும்படி இருந்தது.

படத்தில் லாஜிக் பல இடங்களில் உதைக்கிறது, அதுவும் சூர்யா அனாசியமாக அனைத்து பொருட்களையும் கடத்தி கொண்டு வருகிறார்.

மலேசியா

மலேசியாவில் சேசிங் காட்சியில் விமான நிலையத்திலிருந்து துரத்தி வருவது போலக் காட்சி, அப்போது சூர்யா உடன் அவரது பொருட்களை விட்டு விடுவார்.

ஆனால் திரும்ப அவரது பாஸ்போர்ட் எப்படிப் பெறுகிறார் என்று தெரியவில்லை.

வில்லன் குரலுக்கு டப்பிங் ஆதி தான். சீரியல் போலவே இதிலையும் கத்து கத்துனு கத்துறாரு.

வில்லன் சேட்டு பையன் என்பதால் தமிழ் சரியா பேசத் தெரியாத ஆள் வேண்டும் என்று நினைத்த போது இவர் நினைவு வந்து இருக்கலாம் 🙂 .

நன்றாக நடித்து இருக்கிறார், முதல் படம் போலத் தெரியவில்லை.

ஆரம்பக் காட்சிகளில் முக்கியத்துவம் இல்லாத மாதிரி தெரிந்து பின் வர வர நல்ல வாய்ப்பு அவருக்கு.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் நல்ல ஜாலியா படம் பார்க்க உத்தரவாதமான படம் அயன்.

படம் போர் அடிக்காம நல்லா போகுது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் மெதுவாகப் போவதாக ஒரு சிலர் கூறினார்கள் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

Read : மாநகரம் [2017] த்தா… இது சென்னைடா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

26 COMMENTS

 1. கிரி

  “அயன்” படம் நான்கூட இங்கே துபாயில் பார்த்தேன். இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  படம் நன்றாகத்தான் உள்ளது (மற்ற நடிகர்களின் மசாலா படங்களை பார்க்கும்போது). தாராளமா (ஒரு தடவை) பாக்கலாம். அந்த காங்கோ நாட்டில் நடக்கும் சேசிங் சூப்பர். ஒரு ஜாக்கி சான் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

  எழுத்தாளர்கள் “சுபா” (சுரேஷ், பாலகிருஷ்ணன்) அவர்களின் கதையான “மாடிப்படி குற்றங்கள்” தான் கே.வி.ஆனந்த் கைவண்ணத்தில் “அயன்” ஆக உருவாகி உள்ளது. ஆனால், இந்த கதையும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் “CATCH ME IF YOU CAN” (TOM CRUISE நடித்தது) கதையும் ஒன்றே.

  ஒரு பேட்டியில் இது COINCIDENCE என்று கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்கள் “சுபா” சொன்னதாக ஞாபகம். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான எண்ணம் வந்து இப்படி ஒரே மாதிரியான கதை உருவானதாக எழுத்தாளர்கள் “சுபா” சொன்னார்கள்.

  இசை, சொல்லிக்கொள்ளும்படி இருந்தாலும், பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது வருத்தம்.

  இதே ரீதியில், அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் “ஆதவன்” என்றொரு அதிரடி படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் மூலம், சூர்யா அவரின் சரிசம வயதில் இருக்கும் (நடிக்கும் !!?? அல்ல) மற்ற உப்புமா நடிகர்கள் (நடிக்க தெரியலேன்னா கூட இப்படிதான்ப்பா கூப்பிட வேண்டியிருக்கு), வயத்தில் மூட்டை, மூட்டையாக புளியை கரைக்கிறார்.

 2. விரிவான சுவாரஸ்யமான விமர்சனம். அப்படியே நூற்றுக்கு எத்தனை என மார்க்கும் கொடுத்திடலாமே?

 3. கிரி….நான் சிங்கையில் பார்தத பெரும்பாலான படங்கள் அடிச்சி பிடிச்சு வாங்கின டிக்கட்டில் தான்…2 வது வரிசை, 3 வது வரிசை தான் பெரும்பாலும், முதல் வாரத்தில் செல்வதால் தான் இப்படி…

 4. \\படம் எடுக்கிறவர்கள் (ஹிந்தி தெலுங்கு உட்பட) அனைவரும் அமெரிக்கா, சுவிசர்லாந்து, லண்டன் என்று ஒரே இடமாக சென்று மொக்கை போட்டு வெள்ளைகாரர்களையே காட்டி கொண்டு இருக்க, யோவ்! காங்கோ மாதிரி வித்யாசமான இடங்களும் நிறையா இருக்குயான்னு நம்மை அங்கே அழைத்து சென்று புது வித அனுபவத்தை கொடுத்து விட்டார்கள், அதற்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நான் காங்கோ சம்பந்தப்பட்ட காட்சிகளை ரொம்ப ரசித்து பார்த்தேன்.\\

  இது ரொம்ப அருமையா இருக்கு கேட்க்க

 5. உண்மையில் இது ஒரு அசத்தலான விமர்சனம் தான்

  அயன் பாடல்கள், வரிகள், KARAOKE களுக்கு இந்த வலைத்தளத்தை நாடவும்

  http://tamil-mp3-download.blogspot.com

 6. படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறதா? ஏன் கேக்கறேன் என்றால், வழக்கம்போல சன் இதை டாப் டென் படங்களில் முதல் என்றுவிட்டார்கள். அதற்குத்தான் இப்போது நம்பகத்தன்மையே இல்லையே.

  தமிழ்ப் புத்தாண்டு (அ) சித்திரை செவ்வாய் வாழ்த்துக்கள்.

 7. உண்மையில் இது ஒரு அசத்தலான விமர்சனம் தான்

  அயன் பாடல்கள், வரிகள், KARAOKE களுக்கு இந்த வலைத்தளத்தை நாடவும்

  இங்கே

 8. சன் நிறுவனம் எடுத்த படம் எல்லாம் ஒரு டைப்பாத்தான் இருக்கும்னு சொன்னாங்க!
  இது மட்டும் தப்பிச்சிடுச்சா?

 9. Giri,

  Nice review.

  I have seen it twice already & am loving it. Am impressed with Surya (for the second time after his performance in Pithamagan).

  K.V.Anand has taken the movie in a very slick fashion & it is entertaining throughout. I enjoyed all the songs & their picturisation too. Though I felt comedy portions could have been increased a bit.

  BTB, can anyone tell if K.V.Anand is a chemical engineer, by chance? Why I doubt this is, in both his movies (this & Kana Kanden), he has introduced scenes depicting some chemical compounds & their reactions woven into the proceedings.

  Arun

 10. அண்ணே…
  நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.

 11. ////நட்புடன் ஜமால் on 2:14 PM, April 13, 2009 said…
  இது ரொம்ப அருமையா இருக்கு கேட்க்க//

  படத்தில் இந்த காட்சிகளை பார்க்கவும் நல்லா இருக்குங்க

  //இதுவே பெரிய விடயம்.//

  :-)) இப்போதைய நிலைமைக்கு நீங்கள் கூறுவது சரி தான்

  =======================================================

  //R.Gopi on 3:12 PM, April 13, 2009 said…
  படம் நன்றாகத்தான் உள்ளது (மற்ற நடிகர்களின் மசாலா படங்களை பார்க்கும்போது). தாராளமா (ஒரு தடவை) பாக்கலாம். அந்த காங்கோ நாட்டில் நடக்கும் சேசிங் சூப்பர். ஒரு ஜாக்கி சான் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.//

  உண்மையிலேயே நன்றாக எடுத்து இருந்தார்கள்

  //இந்த கதையும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் "CATCH ME IF YOU CAN" (TOM CRUISE நடித்தது) கதையும் ஒன்றே.//

  கோபி அது டாம் ஹேங்க்ஸ்

  //இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான எண்ணம் வந்து இப்படி ஒரே மாதிரியான கதை உருவானதாக எழுத்தாளர்கள் "சுபா" சொன்னார்கள்//

  இதை கேட்டவுடன் எனக்கு ஒன்று நினைவு வருகிறது (கிண்டலடிக்க அல்ல) இசையமைப்பாளர் தேவா விடம் உங்கள் பாடல் இசையும் Backsreet boys இசையும் ஒன்று போலவே இருக்கிறதே என்று கேட்டதற்கு ..ஜீனியஸ் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்று கூறினார்.

  //அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் "ஆதவன்" என்றொரு அதிரடி படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் மூலம், சூர்யா அவரின் சரிசம வயதில் இருக்கும் (நடிக்கும் !!?? அல்ல) மற்ற உப்புமா நடிகர்கள் (நடிக்க தெரியலேன்னா கூட இப்படிதான்ப்பா கூப்பிட வேண்டியிருக்கு), வயத்தில் மூட்டை, மூட்டையாக புளியை கரைக்கிறார்//

  கண்டிப்பாக. இதே போல யாரோ ஒருவர் கூறினார் என்னிடம். ஹரி கூட இன்னொரு படம் இருக்கிறது. சூர்யாவிடம் நீங்கள் எந்த பட்டப்பெயரும் வைத்து கொள்ள வில்லையே என்று கேட்ட போது, அதை போல விசயங்களில் எனக்கும் விருப்பமும் இல்லை அது போன்று வைக்க பிடிப்பதுமில்லை என்று கூறினார். வளர்க.

  =======================================================

  //ராமலக்ஷ்மி on 3:15 PM, April 13, 2009 said…
  விரிவான சுவாரஸ்யமான விமர்சனம். அப்படியே நூற்றுக்கு எத்தனை என மார்க்கும் கொடுத்திடலாமே?//

  நன்றி ராமலக்ஷ்மி. இப்போதெல்லாம் மார்க் போடுவது என்பது சரியாக வருவதில்லை, சமீபத்திய உதாரணங்கள் விகடன்.

  விமர்சனம் என்கிற பெயரில் படத்தை கொலை பண்ணாமல் இருக்கவே ரொம்ப சிரமப்படுகிறேன்..மார்க் எல்லாம் போட்டால் நான் காலி. :-))

  ========================================================

  //விக்னேஷ்வரி on 3:24 PM, April 13, 2009 said…
  நல்ல விமர்சனம். இதைப் படித்ததும், படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. முயற்சிக்கிறேன்//

  என் விமர்சனம் உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு படமும் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி விக்னேஸ்வரி

  =======================================================

  //Giri,
  Nice review.//

  நன்றி அருண்

  //I have seen it twice already & am loving it. Am impressed with Surya (for the second time after his performance in Pithamagan).//

  அருண் உங்களுக்கு சூர்யாவின் நகைச்சுவை நடிப்பு ரொம்ப பிடித்துள்ளது என்று நினைக்கிறேன்

  //K.V.Anand has taken the movie in a very slick fashion & it is entertaining throughout.//

  சந்தேகமில்லாமல்

  //BTB, can anyone tell if K.V.Anand is a chemical engineer, by chance? Why I doubt this is, in both his movies (this & Kana Kanden), he has introduced scenes depicting some chemical compounds & their reactions woven into the proceedings.//

  :-)))) உண்மை தான்

  ===========================================================

  //நகைக்கடை நைனா on 4:36 PM, April 13, 2009 said…
  அண்ணே…
  நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்//

  சொல்லிட்டீங்கல்ல வந்துடுவோம் 🙂

  ===========================================================

  //’டொன்’ லீ on 4:39 PM, April 13, 2009 said…
  கிரி….நான் சிங்கையில் பார்தத பெரும்பாலான படங்கள் அடிச்சி பிடிச்சு வாங்கின டிக்கட்டில் தான்…2 வது வரிசை, 3 வது வரிசை தான் பெரும்பாலும், முதல் வாரத்தில் செல்வதால் தான் இப்படி…//

  நான் இரண்டாவது வாரம் அதுவும் வெள்ளிகிழமை (புனித வெள்ளி) காலையிலே சென்றேன். போன முறை ஒரு படம் சென்று இருந்தேன், நண்பர் முன்பதிவு எல்லாம் செய்து உள்

 12. //எழுத்தாளர்கள் “சுபா” (சுரேஷ், பாலகிருஷ்ணன்) அவர்களின் கதையான “மாடிப்படி குற்றங்கள்” தான் கே.வி.ஆனந்த் கைவண்ணத்தில் “அயன்” ஆக உருவாகி உள்ளது. ஆனால், இந்த கதையும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் “CATCH ME IF YOU CAN” (TOM CRUISE நடித்தது) கதையும் ஒன்றே.//

  http://sridharshan.blogspot.com/2009/04/blog-post_13.html

 13. //எழுத்தாளர்கள் “சுபா” (சுரேஷ், பாலகிருஷ்ணன்) அவர்களின் கதையான “மாடிப்படி குற்றங்கள்” தான் கே.வி.ஆனந்த் கைவண்ணத்தில் “அயன்” ஆக உருவாகி உள்ளது. ஆனால், இந்த கதையும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் “CATCH ME IF YOU CAN” (TOM CRUISE நடித்தது) கதையும் ஒன்றே.//

  எனக்கேனோ அப்படித் தோன்ற வில்லை போக
  catch me if you can tom cruise நடித்த படம் இல்லை அயன் பற்றிய என் கருத்துக்களை
  இங்கே வந்து பாருங்களேன்

  http://sridharshan.blogspot.com/2009/04/blog-post_13.html

 14. இங்கேயுமா ஆதி வந்துட்டார். அடக் கொடுமையே.

  வித்தியாசமான விளக்கமான விமர்சனம்.நச்சுன்னு ஒரு பதிவு. ஓட்டுப்போட்டுட்டேன்.

  //வெள்ளைகாரர்களையே காட்டி கொண்டு இருக்க, யோவ்! காங்கோ மாதிரி வித்யாசமான இடங்களும் நிறையா இருக்குயான்னு

 15. //அருண் உங்களுக்கு சூர்யாவின் நகைச்சுவை நடிப்பு ரொம்ப பிடித்துள்ளது என்று நினைக்கிறேன்//

  I liked Surya’s coooool acting. I get irritated to see/hear Vijay’s “nganna” type dialogue-delivery. On the contrary, whenever Surya acts real cool, it is infective.

  I have also noticed that Surya’s acting in some scenes resembled either Vikram’s style in Anniyan or Thalaivar in Sivaji.

 16. //ஷண்முகப்ரியன் said…
  தெளிவான விமர்சனம் கிரி//

  நன்றி சார்

  ==========================================================

  //M Arunachalam said…
  I liked Surya’s coooool acting. I get irritated to see/hear Vijay’s “nganna” type dialogue-delivery. On the contrary, whenever Surya acts real cool, it is infective.//

  :-)))))

  சூர்யா தான் எந்த பில்ட் அப் பும் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டாரே! 🙂 ரொம்ப டீசன்ட்டா நடிக்கிறார்

  விஜய் பற்றி நோ கமெண்ட்ஸ் 😉

  //I have also noticed that Surya’s acting in some scenes resembled either Vikram’s style in Anniyan or Thalaivar in Sivaji.//

  உண்மை தான், படத்திலும் கூல் கூல் னு சொல்லிட்டு இவர்களும் ரொம்ப கூலாக தான் இருப்பார்கள்.

  =================================================

  //thevanmayam said…
  நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க!//

  நன்றி தேவா

  ==================================================

  //தமிழ்நெஞ்சம் said…
  இங்கேயுமா ஆதி வந்துட்டார். அடக் கொடுமையே.//

  ரொம்ப கொடுமைங்க :-((

  //வித்தியாசமான விளக்கமான விமர்சனம்.நச்சுன்னு ஒரு பதிவு. ஓட்டுப்போட்டுட்டேன்//

  நன்றிங்க தமிழ்நெஞ்சம்

 17. Giri Sir,
  “இப்ப நம்ம ஆளு அட! அது தாங்க என் பையன் வந்துட்டான் அதுனால அவன் கூட நேரம் செலவிடுவதையே விரும்புகிறேன். சுகமான சுமை.”

  Intha சுகமான சுமை pathi mudincha oru pathivu podunga unga style la..

  Thanks,
  Arun

 18. //arun on 1:44 AM, April 15, 2009 said…
  Intha சுகமான சுமை pathi mudincha oru pathivu podunga unga style la.. //

  :-))

  அருண் இன்னும் கொஞ்ச நாள் சென்றவுடன் அது பற்றி பதிவு எழுதுகிறேன். இது பற்றி நினைவு வைத்து கேட்டமைக்கு ரொம்ப மகிழ்ச்சி

  ===========================================================

  //ஈ ரா on 8:51 AM, April 15, 2009 said…
  சூரியா கலக்கிட்டே போறார்..அடுத்தடுத்த படங்களை வித்யாசமாகவே தருகிறார்.. //

  நிஜமாகவே. ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் அனைத்து வித படங்களிலும் நடிக்கிறார்.

  //அலட்டல் இல்லை, பந்தா இல்லை… நிச்சயம் இன்னும் பெரிசா சாதிப்பார்.. //

  நம்ம ஊர்ல மேற்கூறியவை இருந்தா தான் நம்ம “ரசிகர்கள்” சூப்பர் னு சொல்லுவாங்க.. அவை இல்லாமலே மற்றவர்களுக்கு சவாலாக இருப்பது பெரிய விஷயம் தான் (குடும்பம் அப்படி, அப்பா அப்படி)

  //உங்க விமர்சனம் பார்த்தும் சீக்கிரம் பார்த்துறலாம்னு நினைக்கிறேன்//

  கண்டிப்பா பாருங்க..ஜாலியா போகும் படம் ..இதே விறுவிறுப்புடன் படம் பார்க்கலாம் காரணம், முக்கியமான சஸ்பென்ஸ் கட்டம் எது பற்றியும் நான் என் விமர்சனத்தில் கூறவில்லை, எனவே படத்தில் பார்க்கும் போது இன்னும் நன்றாக இருக்கும்.

  //சன் பிக்சர்ஸ் என்திரன் வரை வேறு படங்களை வாங்கப் போவதில்லை என்று சொல்லப்பட்டது என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே?..//

  இல்லைங்க அவங்க அதிகாரபூர்வமா எதுவும் கூறவில்லை. தற்போது கூட “இடம் வலம்” என்ற படத்தை வாங்கி உள்ளார்கள். ஒருவேளை படம் வர இன்னும் ஒரு வருடம் இருப்பதால் இதை போல செய்கிறார்களோ என்னவோ!.

  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி ஈ ரா

 19. கிரி,

  சூபெர் விமர்சனம்.. சூரியா கலக்கிட்டே போறார்..அடுத்தடுத்த படங்களை வித்யாசமாகவே தருகிறார்.. அலட்டல் இல்லை, பந்தா இல்லை… நிச்சயம் இன்னும் பெரிசா சாதிப்பார்.. நான் இன்னும் பார்க்கலை.. உங்க விமர்சனம் பார்த்தும் சீக்கிரம் பார்த்துறலாம்னு நினைக்கிறேன்..

  அப்புறம், சன் பிக்சர்ஸ் என்திரன் வரை வேறு படங்களை வாங்கப் போவதில்லை என்று சொல்லப்பட்டது என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே?..

  அன்புடன்

  ஈ ரா

 20. //viswanatha on 5:42 PM, May 11, 2009 said…
  aathu sari, “ayan” enna artham. pls yaaravathu vilakkam kodukka mudiyuma. matthapadi, thalaippukkum kathaikkum ethum sambantham ullatha.//

  அயன் என்றால் பிரம்மா என்று அர்த்தம்.

  இந்த பெயர் எதற்கு வைத்தோம் என்று இயக்குனர் ஆனந்த் ஒரு பேட்டியில் கூறி இருந்தார், அது எனக்கு மறந்து விட்டது 🙂

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி

 21. aathu sari, “ayan” enna artham. pls yaaravathu vilakkam kodukka mudiyuma. matthapadi, thalaippukkum kathaikkum ethum sambantham ullatha. naan innum padam paarka villai.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here