சந்திரமுகி பரபரப்பு முடிவதற்குள்ளே எவருமே எதிர்பாராத அறிவிப்பு ரஜினியின் அடுத்தப் படத்தை ஷங்கர் இயக்குவதாக. Image Credit
ரசிகர்கள் அனைவரும் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.
ஷங்கர்
காரணம், ஷங்கர் ஒரு ஃபாண்டஸி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும், அதுவும் இல்லாமல் அவரது படங்களில் நாயகனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.
பலரும் ரஜினி ஷங்கர் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் இப்படி அதிரடியாக உடனே அறிவிப்பு வந்ததைப் பலரும் எதிர்பார்க்கவில்லை.
என்னைப் போல ஷங்கர் படம் பிடிக்கும் ரசிகர்களுக்குச் சொல்லவே தேவையில்லை.
படத்திற்குப் பூஜை எல்லாம் மிகவும் எளிமையாகவே நடந்தது. படம் எடுக்கத் தாமதமானாலும் படம் நன்றாக வரும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை.
காரணம், ஷங்கர் திரைக்கதை அமைப்பதில் வல்லவர்.
படத்தை முதலில் இருந்து கடைசி வரை விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு செல்பவர்.
இவருடன் வந்த இயக்குனர்கள் பலர் சரக்கு தீர்ந்து போய் விட இவர் மட்டும் பட்டய கிளப்பிட்டு இருக்காரு.
IBN live
சிவாஜி படத்திற்கு வட மாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்த்துப் பல “கான்” களுக்குத் தூக்கம் போய் இருக்கும்.
அந்த அளவிற்குப் போட்டி போட்டுச் சிவாஜி செய்திகள் கூறின.
அதுவும் IBN live அறிவிக்கப்படாத ரஜினி டிவி யைப்போலச் செயல்பட்டது.
சிவாஜி
படம் வெளியான வாரத்தில் எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் விட்டது.
எனக்குச் செம கடுப்பு. என்னய்யா! இது தலைவர் படம் வரும் நேரத்தில் இப்படியொரு சோதனையா என்று. இதற்கு டிக்கெட் வாங்க அலைந்ததைப் போல எதற்கும் அலைந்தது இல்லை.
இந்தப் படத்தை என் அலுவலக நண்பன் (அதி தீவிர ரசிகன்) எப்படிப் பார்த்தான் என்று கூறினால் ரசிகர்கள் அல்லாதவர்கள் செம டென்ஷன் ஆகி விடுவார்கள் 😉 .
படம் அதிகப் பட்ஜெட் என்பதால் படத்தை வெளியிடும் திரை அரங்குகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தினார்கள்.
மெலோடி
இதனால் இது வரை ரஜினி படம் வெளியாகாத திரை அரங்குகளில் கூடச் சிவாஜி வெளியாகியது.
ஹிந்தி படங்களே அதிகம் வெளியிடப்பட்ட மெலோடி திரை அரங்கில் சிவாஜி வெளியிடப்பட்டது.
அதில் எனக்குப் படம் வெளியாகும் நாளுக்கு முந்தைய நாளே டிக்கெட் கிடைத்தது.
இன்னொரு நண்பன் அழைத்தும் உடல் நிலை சரி இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை, செல்லவில்லையே தவிர என் எண்ணம் முழுவதும் படத்திலேயே இருந்தது.
படம் பார்த்த நண்பன் இடைவேளையின் போது போன் செய்து.. படம் சூப்பர் சூப்பர் னு சொல்ல எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அடடா! பேசாம போய் இருந்து இருக்கலாமேன்னு மண்டைய சொறிந்தேன்.
நண்பன் வேறு படம் செம ஸ்பீட் ..போவதே தெரியலை.. இடைவேளை வரை கலக்கல்! அது இதுன்னு பில்ட் அப் கொடுக்க எனக்குச் செம கடுப்பாகி விட்டது.
ச்சே! பேசாம போய் இருந்து இருக்கலாம் என்று சரியாகவே தூங்கலை.
அடுத்த நாள் வழக்கமாக நான் உடன் போகும் நண்பன் போன் செய்து டேய்! டிக்கெட் எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது னு சொன்னவுடன் டர்ர்ர் ஆகிட்டேன்.
வடை! போச்சே மாதிரி ஆகிட்டேன்.
பெரம்பூர் பிருந்தா
டேய்! எப்படியாவது வாங்கு வாங்கு என்று அவனை அனத்தி எடுக்க.. கடைசியில் அவன் நண்பர்களை எல்லாம் தொல்லை செய்து ஒருவழியா “பெரம்பூர் பிருந்தா” ல தான் இருக்காம் வாங்கட்டுமா” ன்னு கேட்டான்.
டேய்! என்னடா கேட்டுட்டு இருக்கே அவனைக் கோழிய அமுக்குற மாதிரி அமுக்கி டிக்கெட்ட வாங்கித் தொலைடா வெண்ணை! என்று திட்ட அப்புறம் வாங்கினான்.
சரி நீ சென்ட்ரல் வந்துடு அங்கே இருந்து ரயில்ல போய்டலாம் என்று சொல்ல, சரி! என்று கூறி விட்டேன்.
அம்மாக்கு என்னைப் பற்றி நல்லா தெரியும் என்பதாலும், என் உடல்நிலை பரவாயில்லை ரகமாக இருந்ததாலும் செல்ல அனுமதி கொடுத்தார்கள்.
இரண்டு பேரும் பிருந்தா சென்றால் அங்கேபேருந்து போகவே வழி இல்லை. திரை அரங்கு முன்பு செம கூட்டம், அந்தச் சாலை ஏற்கனவே ரொம்பச் சின்னது.
இதுல ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்ததால் நினைத்துப் பாருங்க. அந்த ஏரியாவே அதகளமா இருக்கு. எனக்கு உடல்நிலை வேறு சுமாராக இருந்ததால் நிக்க வேற முடியலை.
செம வெய்யில்! மண்டை காயுது.
1000 வாலா சரவெடி
டிக்கெட் கவுண்டர் கிட்ட ஒரு போர்களம் போல இருக்கு. திரை அரங்கும் வாசல் முன்பு ஒரு பெருங்கூட்டம் இருந்தது. திடீர்னு எல்லோரும் தெறிச்சு ஓடினாங்க! எங்களுக்கு ஒன்றும் புரியல.
சரி! போலீஸ் தான் லத்தி சார்ஜ் பண்ணுறாங்க போல என்று ஒரு ஓரமா ஒதுங்குனோம். அப்புறம் தான் தெரிந்தது யாரோ 1000 வாலா சரவெடி வைத்தாங்கன்னு.
பட்டாசு சத்தம் ரசிகர்கள் சத்தம் எல்லாம் சேர்ந்து என் வயிற்றையே கலக்கி விட்டது. [நல்ல வேளை நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் ஆகல 😉 ]
எங்களுக்கு முந்தைய காட்சி முடிந்த வருகிறவர்கள் எல்லாம் சட்டையைக் கழட்டி பிழிஞ்சுட்டு வராங்க. குளிச்ச மாதிரி ஒவ்வொருத்தரும் இருக்காங்க.
என்னையா! விசயம்னு கேட்டா உள்ளே AC வேலை செய்யலைன்னு சொல்லிட்டு படம் சூப்பர் சூப்பர் னு நம்ம கேட்டதையே காதுல வாங்கிக்காம போயிட்டு இருக்கானுக.
நண்பன் அப்பவே படம் நல்லா இருக்குன்னு சொன்னாலும் நமக்கு நிம்மதி ஆகுமா! சரி இவங்க கிட்டேயும் கேட்போம்னு கேட்டால்..! நான் கேட்பதையே காதுல எவனும் வாங்க மாட்டேங்குறான்.
அடப்பாவிகளா! படம் எப்படி இருக்குதுன்னு சொல்லி தொலைங்கடான்னு திட்டலாம்னு பார்த்தால், அந்த ஆளு அயோத்தி குப்பம் வீரமணி மாதிரி இருந்தாரு.
எதையாவது கேட்டு நம்ம மூஞ்சியைப் பேத்துட்டா என்ன செய்வது! என்று மேலும் கேட்கலாம் என்று இருந்த யோசனையைக் கை விட்டேன்.
இந்த முறை பால்கனில இடம் அதனால கொஞ்சம் வருத்தம், ஸ்க்ரீன் பக்கத்துல கிடைக்கவில்லை என்று.
பயங்கரச் சத்தம் & விசில்
விளம்பர சிலைடு போட்டு அதில் ரஜினி படம் வந்தாலே பயங்கரச் சத்தம், விசில். படம் ஆரம்பித்தவுடன் ஒண்ணுமே தெரியலை.
அட! ஆமாங்க.. எல்லோரும் சேர்ல ஏறி நின்னுட்டாங்க.
அடேய்! உட்காருங்க உட்காருங்க என்று கொஞ்சம் பேரை அமைதி செய்து உட்காரவைப்பதற்குள் படமே 5 நிமிடம் போய் இருக்கும். செம டென்ஷன் ஆகி விட்டது.
எவனும் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான். ரஜினி வந்ததையே பார்க்க முடியலை.
ஸ்டைல்! பாட்டு போட்டாங்க அவ்வளோ தான்.. ஏற்கனவே சுமாரா இருந்த நான், டோட்டல் டேமேஜ் ஆகிட்டேன்.
எல்லோரும் ஆடிய ஆட்டத்தில் எனக்கு மயக்கம் வர மாதிரி ஆகி விட்டது, AC வேறு வேலை செய்யவில்லை.
ஓவரா கத்தியதில் தொண்டை வேறு கட்டி விட்டது. பாட்டு முடிந்தது அனைவரும் ஒன்ஸ் மோர் கேட்க ஆபரேட்டர் கண்டுகொண்டதாகவே தெரியலை.
கிழிந்த திரை
எல்லோரும் எழுந்து ஆபரேட்டர் அறையைப் பார்த்துக் கத்துறாங்க.ம்ஹீம் அவரு அசைந்தே கொடுக்கவில்லை.
போலீஸ் வேற முன் வரிசை ரசிகர்கள் பக்கம் லத்தியை சுழட்டிடு இருக்காங்க. திடீர்னு எதுவும் திரையில் தெரியவில்லை சத்தம் மட்டும் கேட்குது.
என்னடா இது!ன்னு திரும்பிப் பார்த்தால் ஒரு கடுப்பான ரசிகர் தன்னோட சட்டையைக் கழட்டி ப்ரொஜக்டர் ரூம் ஓட்டையை அடைத்து விட்டார் ஹா ஹா ஹா அப்புறம் எங்க படம் தெரியும்!
அப்புறம் அதை எடுக்கக் கூறி எடுத்த பிறகும் ரசிகர்கள் தொடர்ந்து கத்தியும் போடவில்லை.
பிறகு தான் அந்த ரணகளம் நடந்தது. கடுப்பான ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஸ்க்ரீனை நோக்கி வீச ஸ்க்ரீன் டர்ர்ர்ர்ர் ஆகி விட்டது.
ஆமாங்க! திரை கிழிந்து விட்டது!
இன்னும் ஆவேசமான ரசிகர்கள் சேர் எல்லாம் எடுத்துப் போட ஆரம்பிக்க.. பிறகு ஒரு சிலைடு வந்தது இப்படி “ரசிகர்கள் அமைதி காக்கவும், உங்கள் விருப்பத்திற்காக இந்தப் பாடல் மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்படுகிறது” என்று.
உடனே ஒரு ரசிகர்.. இதை முன்னாடியே செய்து இருந்தா ஸ்க்ரீனாவது கிழியாம இருந்து இருக்கும் என்று கமெண்ட் அடிக்க எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
அப்புறம் என்னால கத்த முடியல தொண்டை கட்டிக் கொண்டதால், வேற வழி இல்லாம கம்முனு உட்காந்துட்டேன்.
கண்டக்டரா பால்காரனா
தலைவர் கோர்ட்ல அனைத்தையும் இழந்து வெளியே வரும் போது, சுமன் அவரிடம் வந்து இனி என்ன வேலை செஞ்சு பிழைக்கப் போறே கண்டக்டரா, பால்காரனா, ஆட்டோ வா இப்படிக் கேட்டுக்கொண்டு இருக்கும் போது இருக்கிற அனைத்து “நல்ல” வார்த்தைகளும் சுமன் மீது.
செருப்பெல்லாம் ஸ்க்ரீன்க்கு பறக்குது. சுத்தி முற்றிப் பார்த்தேன் பெண்கள் யாரும் இல்லை.. நல்லவேளைடா சாமின்னு நினைத்தேன்.
சுமன் இதை எல்லாம் கேட்டு இருந்தா அவ்வளோ தான்.. வெறுத்தே போய் இருப்பாரு.
அதே போல ஸ்ரேயா தலைவரைக் கருப்புன்னு சொன்னவுடன் போச்சுடா! ஸ்ரேயா நிலைமை காலி ன்னு நினைக்கும் போது நல்லவேளை விவேக் அதைக் காமெடி செய்து நம் மக்களைக் கூல் செய்துட்டாரு.
இல்லைனா.. ஸ்ரேயா பரம்பரையையே இழுத்து இருப்பாங்க 🙂 . ரஜினியை சுமன் போலீஸ் ஸ்டேஷன்ல வைத்து அடிக்கும் போதும் மேற்கூறிய நிகழ்வு தான்.
மொட்டை பாஸ்
கடைசில ரஜினி மொட்டை பாசாக வரும் போது எழுந்த விசில் சத்தம் காது பஞ்சர் ஆகாது தான் பாக்கி. ரசிகர்களை அந்தக் காட்சி வெகுவாகக் கவர்ந்து விட்டது.
அதுவும் அந்தக் காட்சியில் ரஜினி ரொம்பக் கூலாக நடித்து இருப்பார்.
படம் பார்த்து விட்டு வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்தில் அக்கா கணவர் போன் செய்து கிளம்பி ரெடி ஆகி இரு மாயாஜால்ல பசங்க டிக்கெட் எடுத்து வைத்து இருக்காங்க நான் உன்னை வந்து கூட்டிகிறேன்னு சொன்னாரு.
ஆகா! மறுபடியுமா.. டேய்! கிரி உனக்குச் சங்கு தாண்டின்னு முடிவு செய்துட்டேன். என் அம்மா கிட்ட சொல்லிட்டு மறுபடியும் என் மச்சான் நண்பர்களுடன் திரும்ப ஒருமுறை.
ஆனால், அங்கே முதல் வரிசை, நான் ஏற்கனவே முக்கால்வாசி காலி மற்றும் தொண்டை வேறு கட்டி விட்டதால் பேசாம கம்முனு உட்காந்து வந்து விட்டேன்.
குசேலன்
அடுத்ததாக எந்திரன் படம் அறிவிப்பு வெளியானது அது முடிய தாமதமாகும் என்பதால் இடையில் ரஜினி அவரது குருநாதருக்காகச் செய்து கொடுத்த படம் தான் குசேலன்.
ரஜினி இதில், தான் 25% பகுதியில் தான் நடித்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார் அதையும் மீறி எதிர்பார்ப்புகள் வழக்கம் போல.
இங்கே சிங்கையில் நம்ம ஊரில் வெளியாகும் முன்பே குசேலன் வெளியாகி விட்டது.
நானும் முன்பதிவு செய்து படம் பார்த்தேன். சிங்கை என்பதாலும் இது முற்றிலும் ரஜினி படம் இல்லை என்பதாலும் ஆராவாரம் குறைவாகவே இருந்தது பெண்களும் அதிக அளவில் வந்து இருந்தனர்.
ஆனால், படம் முடிந்து வந்து எந்த எதிர்மறையான கருத்துக்களும் யாரும் கூறவில்லை.
ஆனால், அன்று மாலை விதி வேறு ரூபத்தில் வந்து விட்டது.
ரஜினி பெங்களூர் விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதற்காகக் கருத்துக் கூறப் போக, அதை ஊடகங்கள் பெரிய பிரச்சனையாக்கி விட்டன.
சன் டிவி
குறிப்பாகச் சன் டிவி தனக்கு டிவி பட உரிமை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ரஜினி மன்னிப்புக் கேட்டதாக ஃபிளாஷ் செய்தி போட, ஒட்டு மொத்த மக்களும் கோபம் அடைந்து விட்டார்கள்.
இதில் பல ரஜினி ரசிகர்களும் அடக்கம், அப்புறம் எங்கே மற்றவர்களைக் குறை கூறுவது. நம்ம மக்கள் தான் வச்சா குடுமி சரைச்சா மொட்டை ஆச்சே! எதையும் பொறுமையாகவே யோசிக்க மாட்டாங்க.
ரஜினிக்குக் கர்நாடகாவில் படம் வெளியாவதால் எந்த லாபமும் இல்லை, பலன் அடைவது விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மட்டுமே.
இதை யோசித்து இருந்தாலே போதுமானது.
ஆனால், ரஜினி இதற்கு விளக்கம் கொடுக்கத் தாமதமானதாலும் இதைப் பலர் உணரும் முன்பேயே படம் போதுமான அளவிற்குச் சேதத்தைச் சந்தித்து விட்டது.
பொதுவாகக் கோபமான மன நிலையில் இருக்கும் எவருக்கும் படம் பார்த்தால் கண்டிப்பாகப் படம் பிடிக்காது, அதுவே இந்தப் படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம்.
படத்தின் தோல்விக்கு நான் கருதும் காரணங்கள்
- ரஜினி பல முறை கூறியும் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
- குறைந்த காட்சிகளே வருகிறேன் என்று ரஜினி கூறியும் படம் முழுவதும் வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டது.
- அதிகத் திரை அரங்குகளில் வெளியிடக்கூடிய படமல்ல இது என்று கூறியும் அதிகத் திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
- ஒட்டு மொத்த ஊடகங்களும் ரஜினி என்னவோ இவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டதை போலத் தாறுமாறான செய்திகள் வழங்கின.
- உலகத்திலேயே எவரும் பண்ணாத சாதனையை நமது திரையரங்கு உரிமையாளர்கள் யாரோ தூண்டுதலில் செய்தார்கள்.
- அது.. படம் ஃப்ளாப் ஆகி விட்டது என்று படம் வெளியாகி நான்காவது நாளே போர்க்கொடி தூக்கினார்கள்.
நான்கு நாளில் படம் ஃப்ளாப் என்று நஷ்ட ஈடு கேட்டது உலகத்திலேயே இவர்கள் தான் முதலாக இருக்கும். இதற்காக இவர்களைக் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கலாம்.
அது எப்படியா! ரஜினி படத்தை வைத்து இது வரை எவ்வளோ சம்பாதித்து இருப்பீங்க.
அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் எப்படி உங்களால் இப்படிப் பணம் பணம் என்று கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடிகிறது.
ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் இதற்காகக் கண்டிப்பாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இன்னொரு பகுதி… படத்தில்
படத்தில் வடிவேல் சம்பந்தப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் சில காட்சிகள், தேவையில்லாமல் வாசு புகுத்தி தாய்க்குலங்களின் வெறுப்பைச் சம்பாதித்து விட்டார்.
கேள்வி பதில் வைக்கிறேன் என்று நான் படத்திற்காகத் தான் கூறினேன் என்று கூறிய வசனம் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துவிட்டது.
மற்றபடி குசேலன் நல்ல படமே! தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் இந்தப் படம் தோல்வி அடைய செய்யப்பட்டது (தோல்வி அடையவில்லை).
பதிவர்கள்
வலை உலகத்தில் பொதுவாக ரஜினியை கிண்டல் செய்து பதிவுகள் வரும் அதுவும் இந்தச் சமயத்தில் வந்த பதிவுகளில் மிக மிக அசிங்கமாகத் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.
குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் அனைவரும் தாறுமாறாகப் பதிவுகள் எழுதினார்கள், புதியவர்களுக்கு இது பற்றித் தெரியாது.
இந்தப் படத்தை என்னவோ ஷகிலா பட ரேஞ்சுக்கு பேசியதை நினைத்து வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.
அப்போது நான் நினைத்தது “ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்பச் சிரமம்” என்று
rajinifans.com சுந்தர் வினோ
இந்த நேரத்தில் ரஜினி ரசிகர்கள் அடைந்த மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல, இந்தச் சமயத்தில் ரசிகர்களுக்குத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்தது rajinifans.com, சுந்தர்(onlysuperstar.com) மற்றும் வினோ(envazhi.com).
இவர்கள் மட்டும் எதுவும் கூறவில்லை என்றால் ரசிகர்கள் பலர் வாழ்க்கையே வெறுத்து போய் இருப்பார்கள்.
அந்த அளவிற்கு அனைவரும் ஒரு வழி ஆகி விட்டார்கள் மற்றவர்கள் கிண்டலாலும் மற்றும் சரியாகப் புரிந்து கொள்ளாததாலும்.
இதற்காக இவர்களுக்கு எவ்வளோ நன்றி கூறினாலும் பத்தாது.
தற்போது பல நிகழ்ச்சிகளைத் தாண்டி வந்தாச்சு, காலமே காயத்திற்கு மருந்து என்பதைப் போல அந்த மிக வருத்தமான சம்பவங்கள் தற்போது ஆறிவிட்டன.
அனைவரும் நினைத்துக் கொள்வது எந்திரன் படத்திற்கு இந்தப் படம் திருஷ்டி கழிந்து விட்டதாக என்பது தான்.
ஃபீனிக்ஸ் பறவை ரஜினி
இத்தனை நடந்தும் பலர் கிண்டல் செய்தும் ரஜினி இன்னும் அதே உச்சத்தில் இருப்பது, நிஜமான ஃபீனிக்ஸ் பறவை ரஜினி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதே வேறு ஒருவராக இருந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை.
அனைத்து எதிர்ப்புகளையும் சகதிகளையும் ஏச்சு பேச்சுகளையும் மன உளைச்சல்களையும் தைரியமாக எதிர் கொண்டார்.
குறிப்பாக எந்த ஒரு இடத்திலும், நிலையிலும் தன்னைப் பற்றி அவதூறு கூறியவர்களை அநாகரீகமாக ஒரு வார்த்தை கூறவில்லை.
தலைவா! இதற்காகத் தான் மீது பலர் உன் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். பொறுமை என்னவென்று ரஜினியை பார்த்தால் போதும்.
குசேலனில் நடந்த சங்கடங்கள் எந்திரனில் கண்டிப்பாகத் தீரும் என்று நம்புவோம்.. எந்திரன் படம் 2010 ஏப்ரல் வெளியாகும் என்று நினைக்கிறேன்.
குசேலன் சமயத்தில் நம்மிடம் கேவலமாக நடந்து கொண்டவர்களுக்கு எந்திரன் படம் வெளியாகி வெற்றி பெரும் நாள் அன்று இருக்கு “தீபாவளி” [அது ஏப்ரல் மாதமாக இருந்தாலும் 😉 ].
இந்தக் காணொளி ஒன்று போதும் என்று நினைக்கிறேன். எதுக்குன்னு நீங்களே முடிவு செய்துக்குங்க 😉 .
இது வரை எனது அனைத்து பாகத்திற்கும் உற்சாகமளித்த ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
முதலில் ஒரு பதிவு தான் எழுத நினைத்து இருந்தேன், பின்னர் இரண்டு தற்போது மூன்றாவது பாகம் வரை வந்து விட்டது.
தலைவரின் அன்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்காக.
என் தளம் ரஜினி ரசிகர்களை மட்டுமே கொண்டதல்ல.
ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களும் படிப்பதால் இதற்கும் மேல் தொடர்ந்தால் அது அவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் என்பதால் இதோடு மனநிறைவுடன் முடித்துக் கொள்கிறேன்.
இன்னொரு சமயத்தில் மறுபடியும் தலைவரின் பக்காவான கட்டுரையுடன்சந்திக்கிறேன்
அன்புடன்
கிரி
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 1)
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 2)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//, அது.. படம் ஃப்ளாப் ஆகி விட்டது என்று படம் வெளியாகி நான்காவது நாளே போர்க்கொடி தூக்கினார்கள்.//
அது ஒரு ஜாலி…
அவ்வளவுதான்
//கேள்வி பதில் வைக்கிறேன் என்று நான் படத்திற்காக தான் கூறினேன் என்று கூறிய வசனம் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துவிட்டது.
//
ரஜினி ரசிகர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்
//எந்திரன் படம் வெளியாகி வெற்றி பெரும் நாள் அன்று இருக்கு “தீபாவளி” [அது ஏப்ரல் மாதமாக இருந்தாலும் ;-)].
//
அரசியல் வசனம் மாதிரி இருக்கே தல,,,
அதுனாலதான் சொல்றேன் , இனிமே அவரும்,கமலும் ஹீரோவாத்தான் நடிப்போம்னு அடம்பிடிக்காம ஹிந்தியில் அமிதாப் செய்வது போல் வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் செஞ்சு கலக்கனும்
//தொலைகாட்சி நிறுவனங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து பல “கான்” களுக்கு தூக்கம் போய் இருக்கும்,//
அதனால் அவர்கள் ”மான்”களை வேட்டையாட போய்விட்டனரோ!
//நான் நினைத்தது “ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்ப சிரமம்” என்று //
தத்துவம் நம்பர் 3339!
//SUREஷ் said…
ரஜினி ரசிகர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்//
🙂
//அரசியல் வசனம் மாதிரி இருக்கே தல//
அப்படியா! ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்
============================================================
//எம்.எம்.அப்துல்லா said…
அண்ணே ஒரு டவுட்டு!!! யார் ரசிகர்களுக்கு நன்றி? என்னைய மாதிரி உங்க ரசிகர்களுக்கா?? இல்லை ரசினி ரசிகர்களுக்கா???//
:-))) எனக்கு நண்பர்கள் தான் அதிகம் ரசிகர்கள் குறைவு
//கரெக்ட்டா சொன்னீங்க. அதுனாலதான் சொல்றேன் , இனிமே அவரும்,கமலும் ஹீரோவாத்தான் நடிப்போம்னு அடம்பிடிக்காம ஹிந்தியில் அமிதாப் செய்வது போல் வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் செஞ்சு கலக்கனும்//
கமல் அப்பப்ப பண்ணிட்டு தான் இருக்காரு… ரஜினிக்கு என்ன பிரச்சனைனா அவர் மாஸ் ஹீரோ
============================================================
//Rajkumar said…
ஏன் அடுத்தவருக்கு பல்லக்கு தூக்கும் முட்டாளாக இருக்கிறீர் !!//
:-))) நான் முட்டாளாக இருந்து கொள்கிறேன்(ரொம்ப புத்திசாலியாக இருந்தாலும் பிரச்சனைதாங்க ராஜ்குமார்) … புத்திசாலியான நீங்க இதை போல பதிவுகளில் நேரத்தை செலவிட்டு முட்டாளாகாதீர்கள்
//உங்கள் திறமையை வெளிப்படுத்தி நீங்களும் உங்கள் துறையில் சூப்பர் ஸ்டார் ஆகுங்கள்//
உங்கள் அறிவுரைக்கு நன்றி கூடவே உங்கள் முதல் வருகைக்கும்
=========================================================
எனக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் அப்துல்லா அண்ணனனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி 🙂
=========================================================
//வால்பையன் said…
அதனால் அவர்கள் ”மான்”களை வேட்டையாட போய்விட்டனரோ!//
ஹி ஹி ஹி அவங்க ரேஞ்சே வேற
//தத்துவம் நம்பர் 3339!//
:-)))))
=========================================================
//Nags said…
வரிக்கு வரி இனிமை …சுந்தர் மற்றும் வினோ credit கொடுத்தது பாராட்டுக்கு உரியது …. வீடியோ டாப் !! …பழைய நினைவுகளை அசைபோடவைத்தமைக்கு கிரிக்கு நன்றி.//
தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி Nags
Giri, that video is superb!!! I have no words, thanks! I am a Rajini fan, but believe me I never watched any of his movies on first day. Reading your experience I feel I missed many…
ellaam ok anaalum kuselan padathukku rajini kannada makkalidam mannippu kettathu entha vithathil niyaayam? illai endru koora vendaam, NDTV yil video kaatinaargale?? naan Rajinikku ethiranavan illai anaal avar seigaigal ennai kaayappaduthivittathu.
“ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்ப சிரமம்” sariyaga sooninge kiri
அனுபவக் கட்டுரை என்பதை விட இது ஒரு ஆய்வுக் கட்டுரை என்று சொல்லலாம் போல் இருக்கிறது:)!
‘முள்ளும் மலரும்’ மிக நல்ல படம்.
பதிவு அட்டகாசம்…இந்த முறை கொஞ்சம் பெருசாக போட்டதற்கு மிக்க நன்றி….தலைவர் விஷயத்துல எவ்ளோ பெருசா சொல்லிக்கொண்டேபோனாலும் அது அமிர்தம் தான்…
அது சரி அதிரடி பாடலை பற்றி ஒரு வரி கூட போடவில்லை…..கூடவே பஜ்ஜி சீன் பற்றியும் குறிப்பிட வில்லை …ஏன்???? இன்னொரு பதிவு போடலாம்ல….
/Muthu said…
Giri, that video is superb!!! I have no words, thanks! I am a Rajini fan, but believe me I never watched any of his movies on first day. Reading your experience I feel I missed many…//
வாங்க முத்து. ரஜினி ரசிகர்கள் அனைவருமே முதல் காட்சி பார்க்கும் நபர்கள் அல்ல.. ஒரு சிலருக்கு இது பிடிக்காது.
============================
//DHANS said…
ellaam ok anaalum kuselan padathukku rajini kannada makkalidam mannippu kettathu entha vithathil niyaayam?//
இன்று வரை ரஜினி பேசியதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், இனி நான் கொடுக்கும் விளக்கமும் பயனில்லை.
=========
//Bleachingpowder said…
ஆபிஸ்ல தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க, இனி அது வீட்டுக்கு போய் அண்ணாமலை, பாட்ஷா, சிவாஜினு எதாவது ரஜினி படம் பார்த்தா தான் அது சாந்தமாகும் :).//
ஹா ஹா ஹா ஹா அப்பாடா! அருண் திருப்தி ஆகிட்டாரு
//பேப்பர்ல ஃபோட்டோ வந்ததுக்கெல்லாம் எவனாவது காசு செலவழிப்பானானு//
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு :-))
//வாயில மட்டும் ஒரு தம்ம பத்த வச்சிருந்தா, இன்னும் பட்டய கிளப்பிருக்கும், ராமதாஸ் நாசமா போகட்டும்.//
:-)))))))))
//கோயமுத்தூர்ல எவ்வளவு கத்துனாலும், எந்த பாட்டையும் திரும்ப போடவே மாட்டானுங்க//
எனக்கும் சிவாஜி ல தான் அந்த வாய்ப்பு கிடைத்தது
//எந்திரனுக்கு புரொஜ்கட்டர் கிட்ட சீட் கேட்டு வாங்கி extra சட்டை, வாட்டர் பாட்டிலோடு போயிட வேண்டியது தான் :)//
ஹா ஹா ஹா ஹா ஹா
//ஸ்டைல உள்ள வந்து சரத்பாபுவை எழுப்பிட்டு அந்த சேர்ல உட்காருவாரு பாருங்க//
ஏங்க! அதெல்லாம் கலக்கலோ கலக்கல்
=================================
//புதுவை சிவா♠ said…
கிரி வீடியோ ஒன்னும் தெரியல//
அப்படியா! எனக்கு சரியாதான் இருக்கு..இருங்க செக் பண்ணுறேன்
================================================================
//puyal said…
“ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்ப சிரமம்” sariyaga sooninge kiri//
என்னங்க பண்ணுறது! பாடா படுத்துறாங்க
===================================
//ராமலக்ஷ்மி said…
அனுபவக் கட்டுரை என்பதை விட இது ஒரு ஆய்வுக் கட்டுரை என்று சொல்லலாம் போல் இருக்கிறது:)!//
:-)))) அலசி தள்ளிட்டேனோ!
//’முள்ளும் மலரும்’ மிக நல்ல படம்.//
செம படங்க..அதுல இசையும் அசத்தலாக இருக்கும்..(குறிப்பாக க்ளைமாக்ஸ்)
======================================
//Srinivas said…
பதிவு அட்டகாசம்…இந்த முறை கொஞ்சம் பெருசாக போட்டதற்கு மிக்க நன்றி//
அப்பாடா! ஸ்ரீநிவாஸ் திருப்தி ஆகிட்டாரு..
//அது சரி அதிரடி பாடலை பற்றி ஒரு வரி கூட போடவில்லை…..கூடவே பஜ்ஜி சீன் பற்றியும் குறிப்பிட வில்லை …ஏன்???? இன்னொரு பதிவு போடலாம்ல….//
ஆஹா! ஸ்ரீவாஸ் மறுபடியும் கிளம்பிட்டாரே..உங்களை திருப்தி படுத்துறது ரொம்ப கஷ்டம் போல .. பரவாயில்ல விடுங்க அடுத்த வாய்ப்புல பட்டய கிளப்பிடுறேன். ரொம்ப நன்றிங்க ஸ்ரீநிவாஸ் உங்கள் அன்பான ஆதரவிற்கு.
தொடர் பதிவுகள் வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். ஓட்டுப்போட்டுட்டேன்
//உற்சாகமளித்த ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். //
அண்ணே ஒரு டவுட்டு!!! யார் ரசிகர்களுக்கு நன்றி? என்னைய மாதிரி உங்க ரசிகர்களுக்கா?? இல்லை ரசினி ரசிகர்களுக்கா???
:))
உலகிலேயே படு முட்டாள் தனமானது என்ன தெரியுமா?
தம்முடைய விலை மதிக்க முடியாத நேரத்தையும் , பணத்தையும் மற்றவர் உயர்வுக்காக செலவிடுவதும்,
நிழலை நிஜம் என்று ஏமாறுவதும் !!
எவ்வளவோ கண்ணுக்கு தெரியாத எதிரிகளை ஜெயிக்கும் அவர் தம் தந்தையை விட வேறு யார் சூப்பர் ஸ்டார்?
எந்த நடிகனாவது அவருடைய குடும்பத்தை விடு மற்றவர் நலனில் அக்கறை கொள்வதுண்டா ?
ஏன் அடுத்தவருக்கு பல்லக்கு தூக்கும் முட்டாளாக இருக்கிறீர் !!
உங்கள் திறமையை வெளிப்படுத்தி நீங்களும் உங்கள் துறையில் சூப்பர் ஸ்டார் ஆகுங்கள் !!!!
//ஏன் அடுத்தவருக்கு பல்லக்கு தூக்கும் முட்டாளாக இருக்கிறீர் !!
உங்கள் திறமையை வெளிப்படுத்தி நீங்களும் உங்கள் துறையில் சூப்பர் ஸ்டார் ஆகுங்கள் !!!!
//
நண்பர் ராஜ்குமார், நீங்கள் இதன் முதல் பாகத்தின் முதல் வரியை படிக்கவில்லை என நினைக்கிறேன். அப்புறம் இதை எழுதிய நண்பர் கிரி வெறும் டிப்ளோமோ மட்டுமே படித்தவர். ஆனால் அவர் இன்று சிங்கையில் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் செய்ய வேண்டிய வேலை.
பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.
வரிக்கு வரி இனிமை …சுந்தர் மற்றும் வினோ credit கொடுத்தது பாராட்டுக்கு உரியது …. வீடியோ டாப் !! …பழைய நினைவுகளை அசைபோடவைத்தமைக்கு கிரிக்கு நன்றி.
ஆபிஸ்ல தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க, இனி அது வீட்டுக்கு போய் அண்ணாமலை, பாட்ஷா, சிவாஜினு எதாவது ரஜினி படம் பார்த்தா தான் அது சாந்தமாகும் :).
சிவாஜி படத்தோட ஷூட்டீங் முத நாள் அன்னைக்கு AVM தலைவர் படத்தோட ஸ்டில் ஒன்னை வெளியிட்டார்கள், தலைவர் அதுல செம ஸ்டைலா இருப்பாரு. காலையில பதினோரு மணிக்குள்ள எனக்கு ஒரு இருபது மெயிலாவது வந்திருக்கும், நானும் அது ஒரு நூறு பேருக்காவது அனுப்பியிருப்பேன். அன்னைக்கு நைட் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பார்ட்டி குடுடான்னு படுத்தி எடுத்து கூட்டிட்டு போயிட்டாங்க. இது தெரிஞ்சு வீட்டுல செம ரெய்டு, பேப்பர்ல ஃபோட்டோ வந்ததுக்கெல்லாம் எவனாவது காசு செலவழிப்பானானு.
படத்துல மொட்ட பாஸ் entry எல்லாம் பண்றதுக்கு தலைவர வுட்டா இந்தியாவுல எவனுமில்ல. வாயில மட்டும் ஒரு தம்ம பத்த வச்சிருந்தா, இன்னும் பட்டய கிளப்பிருக்கும், ராமதாஸ் நாசமா போகட்டும்.
பாபா படத்தில் தலைவர் சிகரெட் குடிக்கறதை பாமக எதிர்த்த போது, அது சரி தான்கிற மாதிரி கமலும், அஜித்தும் அப்போ பேட்டி கொடுத்திருந்தாங்க, நானெல்லாம் படத்துல குடிக்கிற மாதிரியோ இல்லை சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன்னு. அதுக்கப்பறம் வந்த விருமாண்டில படம் முழுவது மொட குடியனா வந்தாரு. அதே மாதிரி போன வாரம் அசல் படத்தோட எல்லா ஸ்டில்லையும் அஜித் வாயில ஊதுபத்தியை வச்சுட்டு போஸ் கொடுக்குறாரு.
//பிறகு ஒரு சிலைடு வந்தது இப்படி “ரசிகர்கள் அமைதி காக்கவும், உங்கள் விருப்பத்திற்காக இந்த பாடல் மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்படுகிறது” என்று//
கோயமுத்தூர்ல எவ்வளவு கத்துனாலும், எந்த பாட்டையும் திரும்ப போடவே மாட்டானுங்க. எந்திரனுக்கு புரொஜ்கட்டர் கிட்ட சீட் கேட்டு வாங்கி extra சட்டை, வாட்டர் பாட்டிலோடு போயிட வேண்டியது தான் 🙂
//கடைசில ரஜினி மொட்டை பாசாக வரும் போது எழுந்த விசில் சத்தம் காது பஞ்சர் ஆகாது தான் பாக்கி. ரசிகர்களை அந்த காட்சி வெகுவாக கவர்ந்து விட்டது. அதுவும் அந்த காட்சியில் ரஜினி ரொம்ப கூலாக நடித்து இருப்பார்..///
கரெட்டு கிரி, ஆனா என்னோட அனுபவத்துல அண்ணாமலை படத்துல ஹோட்டல் சங்க தேர்தல்ல ரஜினி பேரை சொன்னவுடன் liftல இருந்து கோட் ஷூட்ல வாயில மோர் சிகரட்டை பிடிச்சுட்டு ஸ்டைல உள்ள வந்து சரத்பாபுவை எழுப்பிட்டு அந்த சேர்ல உட்காருவாரு பாருங்க. கோவை ராகம் தியெட்டர்ல பூகம்பம்பமே வந்த effect. இப்ப வரைக்கு இது தான் தலைவர் படத்துலையே எனக்கும் பிடிச்ச சீன். பார்க்கனும்னா இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க http://www.youtube.com/watch?v=bK-i_FAcpoY
கிரி வீடியோ ஒன்னும் தெரியல.
“இந்த படத்தை என்னவோ ஷகிலா பட ரேஞ்சுக்கு பேசியதை நினைத்து வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை”
:-)))))))))
வாவ்… அருமை… கிரி!
முன்னிரு பதிவுகளையும்விட, இந்தப் பகுதி மிகச் சிறப்பாக இருந்தது கண்ணா…
குறிப்பாக குசேலன் பற்றிய உங்கள் கருத்தைதான் நான் ஆரம்பம் முதல் கூறி வந்திருக்கிறேன்.
கூடவே பிறந்தது… என்னிக்கும் மாறாததுன்னு தலைவர் அடிக்கடி சொல்வார். பெருந்தன்மை அவர் கூடப்பிறந்தது. குசேலன் போன்ற நெருக்கடி, கூட இருந்தவர்கள் செய்த துரோகத்திலும்கூட அவரிடத்தில் அந்தப் பெருந்தன்மை மாறவில்லை.
ரொம்ப அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தீர்கள்.
மகிழ்ச்சி… பிடிங்க, ரஜினி ரசிகர்கள் சார்பாக ஒரு பூங்கொத்தை!
வினோ
என்வழி
மூன்று பகுதிகளுமே முத்தான பதிவுகள்…
மீண்டும் வந்து கலக்க வாழ்த்துக்கள்
முதல் இரு பதிவுகளையும் விட இந்த பதிவு கொஞ்சம் அதிகமாகவே நல்லா இருக்கிறது.
//எம்.எம்.அப்துல்லா said…
அண்ணே ஒரு டவுட்டு!!! யார் ரசிகர்களுக்கு நன்றி? என்னைய மாதிரி உங்க ரசிகர்களுக்கா?? இல்லை ரசினி ரசிகர்களுக்கா???//
:-))) எனக்கு நண்பர்கள் தான் அதிகம் ரசிகர்கள் குறைவு //
அட ரசிகர்கள் எண்ணிக்கை கூடிட்டே போகிறதே.
//இந்த சமயத்தில் ரசிகர்களுக்கு தெளிவான விளக்கங்களை கொடுத்தது rajinifans.com, சுந்தர்(onlysuperstar.com) மற்றும் வினோ(envazhi.com) இவர்கள் மட்டும் எதுவும் கூறவில்லை என்றால் ரசிகர்கள் பலர் வாழ்க்கையே வெறுத்து போய் இருப்பார்கள்//
அதென்றால் உண்மை தான். நன்றி
//தமிழ்நெஞ்சம் said…
தொடர் பதிவுகள் வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். ஓட்டுப்போட்டுட்டேன்//
நன்றி தமிழ் நெஞ்சம்! உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு
============================================================
//Vaanathin Keezhe… said…
வாவ்… அருமை… கிரி!
முன்னிரு பதிவுகளையும்விட, இந்தப் பகுதி மிகச் சிறப்பாக இருந்தது கண்ணா//
வினோ அண்ணா! நன்றிங்க அண்ணா! 😉
//மகிழ்ச்சி… பிடிங்க, ரஜினி ரசிகர்கள் சார்பாக ஒரு பூங்கொத்தை//
வேறு ஏதாவது கொடுப்பீங்கன்னு பார்த்தேன் 😉
=================================================================
//வாசுகி said…
முதல் இரு பதிவுகளையும் விட இந்த பதிவு கொஞ்சம் அதிகமாகவே நல்லா இருக்கிறது./
ஹலோ! வினோ இங்க வாசுகி சொல்ற ஸ்டைல கவனிங்க :-)))
//அதுவும் குசேலன் பட பிரச்சினையின் போது ஞானி என்பவர் செய்த நரி வேலை இருக்கே….மறக்கவே முடியாது.//
ஹா ஹா ஹா ஹா
//ரசிகர்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம்.pls tell//
அதை உங்களுக்கு மின்னஞ்சலில் கூறுகிறேன் 😉
//எனக்கென்னவோ சங்கர் கறுப்புபணம் பற்றி நல்ல கதை சொல்ல வந்து,
ரஜினி style முன்னால் கதை பெரிதாக பேசப்படாமல் போய்விட்டது போல் உணர்வு.//
சரியா சொன்னீங்க..அனைவரும் ஷங்கர் படம் என்று சொல்வார்கள் என்று ஷங்கர் நினைத்தார்..வழக்கம் போல ரஜினியே ஆதிக்கம் செய்து விட அவருக்கு இதில் பலத்த ஏமாற்றம். எந்திரனில் வெற்றி பெற வாழ்த்துவோம்
//ரஜினி பற்றிய பதிவுக்கு நன்றி.
பலரது அனுபவங்களை உங்களது பதிவின் மூலமும் பின்னூட்டங்களின்
மூலமும் ரசிக்ககூடியதாக இருந்தது.//
இவை அனைத்தும் உங்களை போல வாசகர்கள் கொடுத்த உற்சாகம் தான்.
//இதை போல முன்பு யாரோ எழுதியதற்கு ரசிகர்கள் பலபேர்,
"ஹீரோவாக டூயட் பாடி நடிப்பதென்றால் மட்டும் நடிக்கட்டும்.
இல்லை எனில் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வீட்டில் இருக்கட்டும்."
என கொஞ்சம் காரமகவே பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.
ரஜினியும் ரசிகர்கள் சந்திப்பில், ரசிகர்களின் விருப்பத்தினால் தான் இப்படி நடிப்பதாக கூறியதாக நினைவு.//
கில்லாடியா இருக்கீங்க.. நீங்க கூறுவது சரி தான்..சுந்தர் தளத்தில் ஒரு பதிவில் இப்படி கூறி இருந்தார்கள் (வெப்துனியா எழுதிய கட்டுரைக்கு) அதனால் தான் நானும் அடக்கி வாசித்து விட்டேன், இல்லை என்றால் என்னை கொத்து பரோட்டா போட்டுவிடுவார்கள் ;-)))))))))))
=============================================================
//M Arunachalam said…
Fantastic narration on your Sivaji & Kuselan release-time experiences.//
நன்றி அருண் (வேலையாக இருக்கீங்க போல)
=============================================================
//உருப்புடாதது_அணிமா said…
மூன்று பகுதிகளுமே முத்தான பதிவுகள்…
மீண்டும் வந்து கலக்க வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றிங்க அணிமா
=============================================================
//ஈ ரா said…
நீங்கள் பாராட்டி இருக்கும் நண்பர்களும், உங்களைப் போல உண்மையான ரசிகர்களும்தான் ரஜினி என்னும் மனிதனின் வெற்றியும் பலமும்//
உண்மை தான் ஈ ரா கூடவே அவரது பொறுமையும்
//எது எதுக்கு எப்போ எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியும்//
அது அறிந்ததுனாலே நான் தெளிவாக இருக்கிறேன்
//இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..//
:-))) நீங்க தான் அருணாச்சலம் பாட்டிற்கே முதல் பதிவில் விளக்கம் கொடுத்து விட்டீர்களே! மறக்க மாட்டேன் 🙂
//மீண்டும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்//
நன்றி ஈ ரா உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு
hello brother, I read whole article of this part with comments, below one, i like very much. anyhow i m not rajani fan but i too like rajani after involve web browsing……10:29 AM, April 24, 2009 எம்.எம்.அப்துல்லா on 10:53 AM, April 24, 2009 said… //ஏன் அடுத்தவருக்கு பல்லக்கு தூக்கும் முட்டாளாக இருக்கிறீர் !!உங்கள் திறமையை வெளிப்படுத்தி நீங்களும் உங்கள் துறையில் சூப்பர் ஸ்டார் ஆகுங்கள் !!!!//நண்பர் ராஜ்குமார், நீங்கள் இதன் முதல் பாகத்தின் முதல் வரியை படிக்கவில்லை என நினைக்கிறேன். அப்புறம் இதை எழுதிய நண்பர் கிரி வெறும் டிப்ளோமோ மட்டுமே படித்தவர். ஆனால் அவர் இன்று சிங்கையில் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் செய்ய வேண்டிய வேலை.பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.
அதுவும் குசேலன் பட பிரச்சினையின் போது ஞானி என்பவர் செய்த நரி வேலை இருக்கே….
மறக்கவே முடியாது.
//இந்த படத்தை என் அலுவலக நண்பன் (அதி தீவிர ரசிகன்) எப்படி பார்த்தான் என்று கூறினால் ரசிகர்கள் அல்லாதவர்கள் செம டென்ஷன் ஆகி விடுவார்கள் ;)//
ரசிகர்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம்.pls tell
//கடைசில ரஜினி மொட்டை பாசாக வரும் போது எழுந்த விசில் சத்தம் காது பஞ்சர் ஆகாது தான் பாக்கி.//
சிவாஜி என்றாலே மொட்டை பாஸ் தான் ஞாபகம் வருகிறது. அதுவும் அந்த style….super
எனக்கென்னவோ சங்கர் கறுப்புபணம் பற்றி நல்ல கதை சொல்ல வந்து,
ரஜினி style முன்னால் கதை பெரிதாக பேசப்படாமல் போய்விட்டது போல் உணர்வு.
//குறிப்பாக எந்த ஒரு இடத்திலும், நிலையிலும் தன்னை பற்றி அவதூறு கூறியவர்களை அநாகரீகமாக ஒரு வார்த்தை கூறவில்லை., //
அது தான் ரஜினி.
வீடியோ super.
ரஜினி பற்றிய பதிவுக்கு நன்றி.
பலரது அனுபவங்களை உங்களது பதிவின் மூலமும் பின்னூட்டங்களின்
மூலமும் ரசிக்ககூடியதாக இருந்தது.
நீங்கள் ரஜினி ரசிகராக இருப்பது பதிவுலக ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பலமாக இருக்கும் என நினைக்கிறேன்.
//ஹிந்தியில் அமிதாப் செய்வது போல் வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் செஞ்சு கலக்கனும்//
இதை போல முன்பு யாரோ எழுதியதற்கு ரசிகர்கள் பலபேர்,
“ஹீரோவாக டூயட் பாடி நடிப்பதென்றால் மட்டும் நடிக்கட்டும்.
இல்லை எனில் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வீட்டில் இருக்கட்டும்.”
என கொஞ்சம் காரமகவே பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.
ரஜினியும் ரசிகர்கள் சந்திப்பில், ரசிகர்களின் விருப்பத்தினால் தான் இப்படி நடிப்பதாக கூறியதாக நினைவு.
படிக்கும் போதே படம் பார்த்த நினைவுகள் வந்தது. சூப்பர் பிளாஷ்பேக். அப்படியே நம்ம பிளாஷ்பேக்சிவாஜி படம் மறக்க முடியாத ஒன்று. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினால் எந்த தமிழ் படமும் பெங்களூரில் ரிலிஸ் ஆகாத நேரம். வழக்கம் போல் சிவாஜிக்கும் எதிர்ப்பு. படம் ரிலிசுக்கு 2 நாள் முனனாடி வரை உறுதி ஆகவில்லை. படத்துக்கு கட் அவுட் வைக்க தடை வேறு. வியாழன் PVR ல் யாரோ டிக்கட் கொடுக்குறாங்கன்னு புரளி கிளப்பி விட 4 புளோருக்கு கூட்டம். தியேட்டர் காரர்கள் ரிலிஸ் கன்பார்ம் ஆகவில்லை என கூறியும் யாரும் கலைந்து போக வில்லை. கடைசியில் போலிஸ் வந்துதும் கலைந்து போனார்க்ள. ஆனால் ஒரு நாள் முன்பு வழக்கம் போல் கட் அவுட்டுடன் தியேட்டர் களை கட்டியது.நான் சந்திரமுகி படத்துக்கு சில பேருக்கு டிக்கட் வேறு வாங்கி கொடுத்ததானால் சிவாஜிக்கு டிக்கெட் கேக்க ரெம்ப கஷ்டப்பட்டேன். கடைசியில் 25 டிக்கெட்டுக்கு 20 ரசிகர் டிக்கட் தான் கைக்கு வந்த்து. 5 பேருக்கு என்ன பண்ணுறது தெரியல. நல்ல வேளை வாணியம்பாடி ரசிகர் மண்ற தலைவர் முதல் நாள் நைட் பிரிமியர் ஷோ போடுறோனு கடசி நேரத்துல சொல்ல 6 மானிக்கு டிக்கெட் கொடுக்க முடியாத 5 பேரையும் கூட்டிக்கிட்டு பைக்கில் வானியாம் பாடி போய் படம் பார்த்துட்டு காலையில் 6 மணிக்கு வந்தோம். வந்தவுடன் உடனே லட்சுமி தியேட்டர்ல் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் படம் பார்க்குறப்பா கூட கலாட்டாவிற்கு குறைச்சல் இல்லை. நிறைய சொல்ல்லாம் பதிவு தான் இல்ல.சிவாஜி படத்தை பெங்களூரில் ரிலிஸ் ஆனா எல்லா தியேட்டர்லையும் பார்த்தேன். 2 வாரத்தில் சென்னை,திருச்சி, தஞ்சாவூர்னு சுத்தி சுத்து பார்த்த படம். உன்மையாக மறக்க முடியாத வசந்த காலம். அமெரிக்காவில் குசேலன் படத்த தான் முதல்ல பார்க்கணும்னு 10 மாசம் தியேட்டர் பக்கம் போகல. முதல் ஷோ சனிக்கிழமை தான் சொல்லிட்டாங்க. 2 நாள் நெட் பக்கம் போகாம சனிக்கிழமை 2 ஷோ தொடர்ந்து பார்த்து விட்டு வந்தேன். ரெம்பா நாளைக்கு பிறகு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஃபேம்லி ஆடியண்சோட பார்த்த படம். எனக்கு ரெம்ப பிடித்திருந்தது (சில வடிவேல் ஜோக்? தவிர) 1 வாரம் கழித்து படம் பிளாப்னு கடுப்பேத்தி எப்படிடா நீ ரெண்டு தடவ பார்த்தேனு கடுப்பேத்திட்டானுங்க. மிண்டும் ரஜினி, சங்கர்,ரஹ்மான். ம் எந்திரனுக்காக காத்திருப்போம்.
ரஜினி பட பூஜை, வெள்ளி விழா நிகழக்கு போனது உண்டா. அப்படி இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Giri,
Fantastic narration on your Sivaji & Kuselan release-time experiences.
Keep it up.
Arun
கிரி.
பிரமாதம்.
வழ்க்கமா அந்த விடியோ சீனை பார்க்கும் போது ரசிக்கத்தான் செய்வேன்… இப்போ உங்கள் இடுகையில் தலைவருக்கு வந்த சோதனைகளைப் (எனக்கு நன்றாகவே தெரிந்து இருந்தாலும்) உங்கள் எழுத்துக்களில் படித்து விட்டு அந்த விடியோவைப் பார்க்கும் போது என்னை அறியாமலே கண் கலங்கி விட்டது…..
நீங்கள் பாராட்டி இருக்கும் நண்பர்களும், உங்களைப் போல உண்மையான ரசிகர்களும்தான் ரஜினி என்னும் மனிதனின் வெற்றியும் பலமும்… ஒரு சிலரின் வெறுப்புக்காக நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யாமல் இருக்க வேண்டியதில்லை.. உண்மையான ரஜினி ரசிகனுக்கு, எது எதுக்கு எப்போ எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியும்.
நீங்கள் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை.. இன்னும் சில காலத்தில் ரஜினியைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வதே பெருமையாக நினைப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெரியதாகப் போகிறது. இது உண்மை… இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்
ஈ ரா
கிரி அருமை
ஏற்கனவே கூறியதுபோல், பழைய நினைவுகளை கிளறி விட்டது.
மீண்டும் இதுபோன்றதொரு பதிவை எதிர்பார்க்கிறேன்.
சூப்பர்…! நான் இதுவரை மு.நா.மு.ஷோ. பார்த்ததில்லை. ஆனால் அந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து நானும் தியேட்டர் டிக்கெட் சிதறல் நடுவே இருந்தது போல் செய்து விட்டீர்கள். தலைவர் பற்றி இன்னும் எழுதுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.
//Asfar said…
i m not rajani fan but i too like rajani after involve web browsing……//
நன்றி Asfar உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===============================================================
//Raja said…
படிக்கும் போதே படம் பார்த்த நினைவுகள் வந்தது. சூப்பர் பிளாஷ்பேக். அப்படியே நம்ம பிளாஷ்பேக்
சிவாஜி படம் மறக்க முடியாத ஒன்று. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினால் எந்த தமிழ் படமும் பெங்களூரில் ரிலிஸ் ஆகாத நேரம். வழக்கம் போல் சிவாஜிக்கும் எதிர்ப்பு.//
நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா!
//வியாழன் PVR ல் யாரோ டிக்கட் கொடுக்குறாங்கன்னு புரளி கிளப்பி விட 4 புளோருக்கு கூட்டம்//
ஹி ஹி ஹி கிளம்பிட்டாங்களா!
//நான் சந்திரமுகி படத்துக்கு சில பேருக்கு டிக்கட் வேறு வாங்கி கொடுத்ததானால் சிவாஜிக்கு டிக்கெட் கேக்க ரெம்ப கஷ்டப்பட்டேன்//
எனக்கு கூட இதை போல ஆனது. என்னையும் பெரிய ஆளாக கருதி ..டிக்கெட் வாங்கி கொடுங்க என்று அன்பு தொல்லை..
//2 நாள் நெட் பக்கம் போகாம சனிக்கிழமை 2 ஷோ தொடர்ந்து பார்த்து விட்டு வந்தேன்.//
நல்ல காரியம் செய்தீங்க 🙂
//ரஜினி, சங்கர்,ரஹ்மான். ம் எந்திரனுக்காக காத்திருப்போம்//
வழிமொழிகிறேன்
//ரஜினி பட பூஜை, வெள்ளி விழா நிகழக்கு போனது உண்டா. அப்படி இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
இல்லைங்க ..இதை போல வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. வினோ போன்றவர்களுக்கு கிடைத்து இருக்கலாம்.
==============================================================
//R.Gopi said…
கிரி அருமை
ஏற்கனவே கூறியதுபோல், பழைய நினைவுகளை கிளறி விட்டது.
மீண்டும் இதுபோன்றதொரு பதிவை எதிர்பார்க்கிறேன்.//
நன்றி கோபி. முயற்சி செய்கிறேன்
===============================================================
//இரா. வசந்த குமார். said…
சூப்பர்…! நான் இதுவரை மு.நா.மு.ஷோ. பார்த்ததில்லை. ஆனால் அந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து நானும் தியேட்டர் டிக்கெட் சிதறல் நடுவே இருந்தது போல் செய்து விட்டீர்கள்.//
நன்றி வசந்த குமார்
//தலைவருக்கு ப்ரச்னை வந்த போது எழுதிய சில பதிவுகள் //
அருமையாக எழுதி இருக்கிறீர்கள் வசந்த குமார். நானும் உங்கள் ஒரு பதிவில் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்து இருக்கிறேன், ஆனால் இப்போது யோசித்தால் ஏன் என்று எனக்கு புரியவில்லை (உண்மையாகவே.. நம்புங்கள்) தற்போது அதை பார்த்தால் எனக்கே அவ்வாறு பின்னூட்டம் போட்டது தர்மசங்கடமாக இருக்கிறது. அப்போது இருந்த சூழ்நிலையில் எதோ ஒரு எண்ணத்தில் போட்டு இருக்கலாம், தற்போது அதற்க்கு காரணம் நினைவில்லை.
உண்மையில் சொல்லப்போனால் என்னை விட (ரஜினி பற்றி) பல பதிவுகள் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், ஆனால் ரஜினி ரசிகர்கள் தளத்தில் உங்கள் கமெண்ட்கள் இல்லாததால் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாமல் போய்விட்டீர்கள் என்பதே உண்மை. உண்மையில் உங்கள் பதிவுகள் முன்பு நான் ஒன்றுமே இல்லை (எதோ கூற வேண்டும் என்று கூறவில்லை)
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த குமார்
This is my first visit Giri…Its very nicely narrated experience Neenga solrapa atha apdye thetrela irunthu pakra mathri iruku…
நானும் எங்க “தல” அஜித்தின் எல்லா படங்களையும்(அமர்க்களம் முதல்) முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்.. நமக்கு புடிச்ச நடிகரோட படத்த முதல் நாள் பாக்குற experience செம குஷியா இருக்கும்…. எனக்கு தெரிஞ்சி இப்போதைக்கு ரசிகர்களின் ஆரவாரம் அதிகமா இருக்குனா அது “தல” படம்தான் இருக்கும்(though u hate ajith and his huge fans group, u should accept this)… ஆனா ரஜினிக்கும் எங்க தலைக்கும் இருக்குற பெரிய வித்தியாசம் family audience and general audience … அதுல ரஜினிய அடிச்சிக்க இந்தியா வுலையே யாரும் கெடையாது…. but if you speak about opening show and opening week collection, ajith already overtake rajini. And a big point here is, rajini alwayz (atleat 90%) gave hit and satisfies his fans but thala gives lot of flops(i thing in his last 15 films 9 are utter flops), but still he managed the opening king image. i really amazing about thala ajith fans rather than any actors fans including rajini.
//hari on 1:44 AM, April 26, 2009 said…
This is my first visit Giri…
Its very nicely narrated experience
Neenga solrapa atha apdye thetrela irunthu pakra mathri iruku…//
நன்றி ஹரி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
=================================================================
//புலியூரான் “ராஜா” on 12:46 PM, April 28, 2009 said…
நமக்கு புடிச்ச நடிகரோட படத்த முதல் நாள் பாக்குற experience செம குஷியா இருக்கும்…. //
உண்மை தான் ராஜா
//if you speak about opening show and opening week collection, ajith already overtake rajini//
No Comments 🙂
//i really amazing about thala ajith fans rather than any actors fans including rajini.//
🙂 வரும் மே 1 ம் தேதி பிறந்த நாள் காணும் உங்கள் “தலை”க்கு என் வாழ்த்துக்கள்
கிரி, உங்கள் அனுபவஙகள் எல்லாம் தலைவர் படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான். இருந்தாலும் நீங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. கடைசி முள்ளும் மலரும் காட்சி அருமையானது. அந்தப் படத்தினை பற்றிய ஒரு சுவையான செய்தி. படத்தினை முக்கால்வாசி எடுத்திருந்த நிலையில் மீதி படத்தினை எடுக்க பணம் இல்லாத நிலை. படத்தினை நிறுத்தி விட்டனர். அப்பஒழுது அதனை கேள்விப்பட்ட கமல் இயக்குனர் மகேந்திரனை சந்தித்து படம் எடுக்க மீதித் தொகையை தானே அளித்ததுடன் அதற்கு ஈடாக தயரிப்பளர் கொடுத்த விநியோக உரிமையை கூட ஏற்க மறுத்து விட்டார். அவர்களது நட்பு அத்தகையது. ரசிகர்கள் தான் அதனை புறிந்து கொள்ளவில்லை.
கிரியாரே, இதுதான் டாப்பு போஸ்ட்டு (மூன்று பாகங்களில்).
//மோகன் on 8:39 PM, April 29, 2009 said…
கிரியாரே, இதுதான் டாப்பு போஸ்ட்டு (மூன்று பாகங்களில்).//
நன்றி மோகன்
மோகன் உங்களோட பிளாகர் ஐ டி ல உங்க புதிய வோர்ட்ப்ரஸ் முகவரிய நீங்க இன்னும் மாற்றவில்லை, மாற்றவும்.
===================================================================
//SathyaPriyan on 2:03 AM, April 30, 2009 said…
கிரி, உங்கள் அனுபவஙகள் எல்லாம் தலைவர் படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான். இருந்தாலும் நீங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமையாக இருந்தது//
நன்றி சத்யப்ரியன்
//கடைசி முள்ளும் மலரும் காட்சி அருமையானது//
நீங்கள் கூறியதை செய்திகளில் படித்து இருக்கிறேன்..நெகிழ வைத்த சம்பவம்.
//ரசிகர்கள் தான் அதனை புறிந்து கொள்ளவில்லை//
நீங்க கூறுவது முற்றிலும் சரி.
அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தங்கள் நட்பை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தொடர்கிறார்கள், ஆனால் அவர்களது ஒரு சில ரசிகர்களோ மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். படமும் அதன் நாயகர்களும் ரசிக்க தானே தவிர இப்படி அவர்களை வைத்து சண்டை போல அல்ல. ஆனால் இதை பலர் உணர்ந்ததை போலவே தெரியவில்லை.
இப்படி இவர்களுக்குள் அடித்து கொள்வதால் இவர்கள் சாதிக்க போவது என்னவோ! 🙁
கிரி, இப்போது தான் படித்து முடித்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். படிச்சவுடன் சிவாஜியை இன்னொரு முறை ரசிகர்களுடன் படம் பார்த்த (??!!) மாதிரி இருக்கு. சிவாஜி FDFS அனுபவத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் இது போல சுவாரஸ்யமான அனுபவங்கள் உண்டு. குறிப்பு: அட்டகாசமான நடை. நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுத முயற்சிக்க கூடாது? சீரியசாத்தான் சொல்றேன்….- சுந்தர்Onlysuperstar.com
7 தொகுதிக்கான தேர்தல் முடிவை வைத்து ஏதாவது பதிவு போட்டு இருப்பீர்கள் என்று வந்தேன். ஏமாற்றம். அதனால் தான் இந்த பதிவில் தேர்தல் பற்றிய என்னோட கருத்தை(கவிதையை) வைக்கிறேன்.
நேற்று வரை
இவன் இருந்தான்
வன்னியனாக !
இன்று முதல்
இவன் ஆக்கப்பட்டான்
அன்னியனாக !!
இவன் நம்மை
விட்டுப்போனான் ஏழரைச்
சனியனாக !!!
(2002 முதல் 2009 வரை 7,1/2 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்களை ஆட்டிப்படைத்த சனியன் இன்றுடன் ஒழிந்தது)
மாம்பழத்திற்க்கும் அதன் உரிமையாளர் ராமதாஸுக்கும் 7 தொகுதிகளில் கொட்டையெடுத்த அனைவருக்கும்,
நன்றி ! நன்றி !! நன்றி !!!
வாழ்க பாரதம்.
ஜெய் ஹிந்த்.
இவ்வளவு தூரம் வந்துட்டு (உங்க பதிவை படிச்சிட்டு) கருத்து சொல்லாம போனால் நல்லா இருக்குமா?
நான் பெங்களூரில் (லட்சுமி தியேட்டர்) சிவாஜி, குசேலன் படத்தை ரிலீஸ் தினத்தில் தொடர்ந்து நான்கு காட்சிகளும் (FDFS- First Day Four Show) பார்த்த நினைவுகளை எல்லாம் கிழப்பி விட்டீர்கள். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மாதிரி வராது தலைவா, திருவான்மியூர் தியாகராஜால பாபா பாத்தோமே அப்பப்பா (இதுவும் FDFS தான்). நீங்க சொன்ன மாதிரி சீட் மேல ஏறி நின்னு 10 நிமிசம் படம் பாத்தது, இடையில் சவுண்ட் கட்டானதால் வேறு ஒரு ரசிகர் ஆப்பரேட்டர அடிக்க போனது, வேஷ்டிய கழட்டி புரெஜெக்டர மறைச்சது, பெப்சி பாட்டிலை தூக்கி போட்டு விளையாடியது. ம்ம்ம்ம். எந்திரனோட FDFS – க்கு காத்துக்கிட்டு இருக்கேன்.
//Simple_Sundar on 5:19 PM, May 11, 2009 said…
சிவாஜி FDFS அனுபவத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் இது போல சுவாரஸ்யமான அனுபவங்கள் உண்டு//
கண்டிப்பாக.. 🙂
//குறிப்பு: அட்டகாசமான நடை. நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுத முயற்சிக்க கூடாது? சீரியசாத்தான் சொல்றேன்//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா! எனக்கு இந்த இடுகைகளே அதிகம் சுந்தர். இருப்பினும் உங்கள் அன்பிற்கு நன்றி
=================================================================
//காத்தவராயன் on 2:44 AM, May 17, 2009 said…
7 தொகுதிக்கான தேர்தல் முடிவை வைத்து ஏதாவது பதிவு போட்டு இருப்பீர்கள் என்று வந்தேன். ஏமாற்றம்.//
நன்றி காத்தவராயன் விருப்பமாக கேட்டதற்கு. தற்போது அனைவரும் கோபத்திலும் சந்தோசத்திலும் ஏகப்பட்ட இடுகைகளை எழுதி வருகிறார்கள், எனவே இவர்கள் ஓய்ந்த பிறகு எழுதி கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். தற்போது எழுதினால் கடலில் கரைத்த பெருங்காயமாகி விடும். பலரின் பார்வைக்கு சென்றடையாது.
//இந்த பதிவில் தேர்தல் பற்றிய என்னோட கருத்தை(கவிதையை) வைக்கிறேன்.//
உங்கள் கவிதை அருமை :-)))) குறிப்பாக அந்த 71/2 யை சரியாக கவனித்து குறிப்பிட்டதற்கு 🙂
//இவ்வளவு தூரம் வந்துட்டு (உங்க பதிவை படிச்சிட்டு) கருத்து சொல்லாம போனால் நல்லா இருக்குமா?//
நன்றி 🙂
//என்ன இருந்தாலும் மெட்ராஸ் மாதிரி வராது தலைவா//
100% சரி..சென்னை தான் கலக்கல் FDFS பார்ப்பதற்கு
//எந்திரனோட FDFS – க்கு காத்துக்கிட்டு இருக்கேன்.//
நானும் 🙂
காத்தவராயன் நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் ஏற்கனவே என் இடுகைகளை படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், பின்னூட்டம் இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி
Hi Giri,
Just came across your blog while reading other blogs. The one i opened first impressed me. So i just continued reading others. Style of writing is very nice. But
/*ஷங்கர் ஒரு ஃபாண்டஸி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்*/, Ethelaam konjam over. Orae kathayai vera vera hero potu edukirathu fantasyaa? or heroins sa kavarchiya katrathu fantasiya. Sonthama oru kathai eluthi(lanjam,oojhal illamae) , kavarchi illamal, piramanda nadikar/nadikai illama , 2 venam 3 masathalila padam eduka sollunga…
Renga
//Renga said…
Hi Giri,
Just came across your blog while reading other blogs. The one i opened first impressed me. So i just continued reading others. Style of writing is very nice//
உங்கள் பாராட்டிற்கு நன்றி
///*ஷங்கர் ஒரு ஃபாண்டஸி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்*/, Ethelaam konjam over. Orae kathayai vera vera hero potu edukirathu fantasyaa? or heroins sa kavarchiya katrathu fantasiya. Sonthama oru kathai eluthi(lanjam,oojhal illamae) , kavarchi illamal, piramanda nadikar/nadikai illama , 2 venam 3 masathalila padam eduka sollunga… //
ரெங்கா முதல்ல நீங்க ஃபாண்டஸி என்பதற்கு என்ன அர்த்தம் வைத்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நான் என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால் அவர் ஸ்டைலிஷாக படம் எடுப்பார், அவர் எடுக்கும் கதை பற்றி கூறவில்லை. அவர் ஒரே மாதிரியாக தான் பெரும்பாலும் படம் எடுக்கிறார் என்று தெரியும் ஆனால் அதை ஸ்டைல் ஆக எடுத்து இருப்பார்.
ரஜினியை இந்த படத்தில் போல ஸ்டைலிஷாக நீங்கள் எந்த படத்திலும் பார்த்து இருக்க முடியாது.. அவருடைய உடைகளாகட்டும் மேக்கப் ஆகட்டும் மற்றும் ஸ்டைல் பாட்டாகட்டும் மொட்டை பாஸகட்டும் கலக்கி இருப்பார்.
நான் இதையே ஃபாண்டஸி என்று கூறினேன்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி ரெங்கா
Giri Superb, Shivaji marubadyum FDFS pona ninaivu vandhathu.Most touching one is"ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்ப சிரமம்" Fully agree on this.Singai la Kuselam quiet a parthen nu pottu irukkeanga, we watched at Yihun and the usual Rajini FDFS galattas were there till the interval.Thanks to Gopi-Dubai for informing me about this blog, will now be a regular reader, keep it up Giri.Regards,Dharma
// rdharma said…
Giri Superb, Shivaji marubadyum FDFS pona ninaivu vandhathu.//
நன்றி தர்மா
//Fully agree on this.//
😉
//Singai la Kuselam quiet a parthen nu pottu irukkeanga, we watched at Yihun and the usual Rajini FDFS galattas were there till the interval.//
நானும் யிஷுன் ல தான் பார்த்தேன்
//hanks to Gopi-Dubai for informing me about this blog, will now be a regular reader, keep it up Giri.//
நன்றி தர்மா.. உங்களை பற்றியும் கோபி என்னிடம் கூறி இருக்கிறார்..ஆனால் உங்களை எந்த கமெண்ட்லையும் பார்த்தது இல்லை..அதனால வாய்ப்பு இல்லாம பொய் விட்டது.
சிங்கையிலே இருக்கோம் இன்னும் சந்திக்கவில்லை..விரைவில் சிந்திப்போம்.
கிரி உங்கள் பிளாகில் உங்களின் பழைய பதிவுகளை நேரம் கிடைக்கும்
போது படித்து கொண்டிருக்கிறேன் ரஜினி படங்கள் பற்றிய பதிவு படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு
🙂 நன்றி சரவணன்
கிரி, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் ஏனென்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்றாலும் மிகவும் நாகரிகமாக மற்ற நடிகர்களை திட்டுவதில்லை அனால் கமல் ரசிகர்கள் தன தலைவனை தலைக்கு மேல் துக்கி கொண்டடி கியே போடுவார்கள்