நீதிபதி ட்விட்டர் ஜேக் | Koo App

1
நீதிபதி koo Vs twitter

ந்தியாவில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் குடியரசு தின டிராக்டர் பேரணி, செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் கொடியேற்றியது தொடர்பான விமர்சனங்கள் ட்விட்டரில் சர்ச்சையானது.

ரிஹானா, மியா கலீபா போன்றவர்கள் ட்விட் செய்தது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகள், Tag வந்தன.

சர்ச்சை Tag & கணக்குகள்

சர்ச்சைக்குரிய Tag மற்றும் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்ட பிறகு கணக்குகளை முடக்கி பின்னர் ட்விட்டர் திரும்பப் பெற்றது. Image Credit

இதனால் கடுப்பான மத்திய அரசு மற்றும் தகவல் துறை அமைச்சகம், சர்ச்சைக்குரிய Tag, கணக்குகளை நீக்காவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டிப்புடன் அறிவித்தது.

இதன் பிறகு ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு 500+ கணக்குகளை முடக்கியதாக ட்விட்டர் அறிவித்தது.

ட்ரம்ப் சர்ச்சை

வன்முறையைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி, உலகிலேயே அதிகப் பின்தொடர்பவர்களை கொண்ட கணக்குகளில் ஒன்றான ட்ரம்ப் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

ட்ரம்ப் கணக்கைத் தற்காலிகமாக 3 / 6 மாதங்கள் என்று முடக்கலாம் ஆனால், நிரந்தரமாக முடக்குவது எப்படிச் சரியாகும்? என்பதே பலரின் கேள்வி.

ட்ரம்ப் கணக்கு போலப் பலரின் கணக்குகளும் இச்சமயத்தில் நிரந்தரமாக முடக்கப்பட்டன. ட்ரம்ப் நடந்து கொண்டது தவறானது அதோடு அவரது கிறுக்குத்தனங்களும் அனைவரும் அறிந்தது.

ஆனால், அவர் கணக்கின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகக்கடுமையாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

இடத்துக்கு இடம் வேறுபடும் நியாயம்

தற்போது இதே பிரச்னை உல்டாவாக வேறு காரணத்துக்காகச் சர்ச்சையாகியுள்ளது.

ட்விட்டர் போன்ற சமூகத்தளங்களில் பலர் மனநோயாளிகள் போலவே நடந்து வருகிறார்கள் என்பது ட்விட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்தது.

பொய்யான கருத்துகள், வன்மமான பேச்சு, ஆபாச விமர்சனம், தனிநபர் தாக்குதல் என்று தினமும் ஏராளம் நடந்து வருகிறது.

இது குறித்து ட்விட்டரில் புகார் அளித்தால், சில நாட்களுக்குப் பிறகு..

கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது ஆனால், ட்விட்டர் கொள்கைகளுக்கு விரோதமாக நடக்கவில்லை. எனவே, கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது‘ என்று பதில் வரும்.

ட்விட்டரில் புகார் அளிக்காமல் இருப்பவர் குறைவு எனவே, இந்நிலை அனைவரும் எதிர்கொண்டு இருப்பார்கள்.

அப்போதெல்லாம் தோன்றுவது, இவர்கள் என்ன கொள்கை வைத்துள்ளார்கள்? எது கருத்துரிமை? என்ற குழப்பம் வரும்.

ஆபாசமாகப் பேசுவதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் தான் ட்விட்டர் கொள்கையா? பிரிவினை வாதம் பேசுவது தான் கருத்துரிமையா?

நீதிபதி ஜேக்

ட்ரம்ப் பிரச்சனையில் இருந்தே ஜாக் தன்னைச் சமூகத்தள நீதிபதி போலக் கருதிக்கொண்டுள்ளார்.

இவர் வைத்தது தான் கொள்கை, கருத்துரிமை என்பது போல நடந்து வருகிறார்.

கொள்கை, கருத்துரிமை என்றால் அனைவருக்கும் பொது தான். ட்ரம்ப் செய்தது தவறு என்றால், இங்கே நடந்து கொண்டு இருப்பவர்களும் தவறு தான்.

ட்ரம்ப்புக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? வன்முறையை, பிரிவினையை யார் தூண்டினாலும் தவறு தானே!

Freedom Of Speech

இது போதாது என்று, போராளிகள், ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் கணக்குகளை முடக்க முடியாது என்று ஜேக் கூறியுள்ளார்.

இவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்துள்ளது? Freedom Of Speech என்ற பெயரில் எதை வேண்டும் என்றாலும் பேசலாமா?

இவர்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், யாரும் கேட்கக்கூடாதா? இவர்கள் பேசுவதற்கு ட்விட்டர் கொள்கை விலக்கு அளித்துள்ளதா?

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் ட்விட்டரில் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்தாலே கடுப்பாகிறது.

கேவலமான ட்விட்டுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் போட்டுக்கொண்டுள்ளார்கள்.

புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்றே பதில் வருகிறது.

நிறுவனம் தீர்மானிக்க முடியாது

ஜேக் இடது சாரி சிந்தனை உள்ளவர், அதனால் தான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று விமர்சனம் வந்துள்ளது.

தற்போது மத்திய அரசு கடுமையாக எச்சரித்ததும், கொஞ்சம் ஜேக் இறங்கி வந்துள்ளார். வரும் காலங்களில் எப்படிப் போகும் என்று கணிக்க முடியவில்லை.

ட்விட்டர் ஜேக் தற்போது தனது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையால் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அரசின் கட்டுப்பாட்டை மீறி செய்ய முடியாது. யார் செய்தது சரி தவறு என்பதை ஒரு நிறுவனம், தனி நபர் தீர்மானிக்க முடியாது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும், அதற்கு நிறுவனங்கள் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்.

அரசு நடந்துகொள்வது தவறு என்று கருதினால், நீதிமன்றத்தை நாடலாம்.

இது தான் ஜனநாயகம்.

தங்கள் கொள்கை என்ற பெயரில் நிறுவனமே நீதியை தீர்மானிக்க முடியாது.

Koo App

இந்தச் சமயத்தில் இந்திய உருவாக்கமான, விருது பெற்ற ட்விட்டர் போன்ற சமூகத்தளமான Koo கவனம் பெற்று வருகிறது.

மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களை Koo வில் இணைத்து வருகிறார்கள், தங்கள் துறை சார்ந்தவர்களையும் இத்தளத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்.

இச்சேவையும் ட்விட்டர் போலவே உள்ளது. Signal செயலி திடீர் பிரபலம் ஆனது போல, Koo வும் பிரபலமாகி சர்வர் முடங்கி விட்டது.

Signal பரபரப்பாகப் பேசப்பட்டுப் பலரும் இணைந்தாலும், தற்போது பலர் WhatsApp தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

எனவே, Koo வும் இதே பட்டியலில் இணையுமா? வரவேற்பை பெறுமா? என்பது இனி தான் தெரியும்.

இடது சாரிகள் ட்விட்டர், வலது சாரிகள் Koo

தற்போது இடது சாரிகள் ஆதரவு ட்விட்டருக்கும், வலது சாரிகள் ஆதரவு Koo க்கும் உள்ளது.

Signal க்கு நடந்த அதே பிரச்சனை Koo விலும் உள்ளது. அதாவது தெரிந்தவர்கள் அனைவரும் ட்விட்டரில் இருக்க, Koo வில் என்ன செய்வது? என்று குழம்பியுள்ளார்கள்.

துவக்கத்தில் இருந்து இருப்பதால், ட்விட்டரில் அனைத்துத் தரப்பு பயனாளர்களும் உள்ளனர் ஆனால், Koo வில் வலது சாரிகள் மட்டுமே 95% உள்ளனர்.

பிரதமர் உட்பட மற்ற திரை, விளையாட்டு, அரசியல், எழுத்தாளர் பிரபலங்கள் Koo வில் இணைந்து தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்தால் மட்டுமே Koo அனைத்துத் தரப்புப் பயனாளர்களைப் பெறும்.

இல்லையென்றால், வலது சாரிகள் மட்டும் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

அனைத்து சமூகத்தளங்களிலும் giriblog தளத்தை இணைத்து இருப்பதால், அதன் தொடர்ச்சியாக Koo விலும் இத்தளம் இணைக்கப்பட்டுள்ளது.

விரும்புபவர்கள் தொடரலாம்.

https://www.kooapp.com/profile/giriblog

மற்ற சமூகத்தளங்கள்

https://twitter.com/giriblog.

https://www.youtube.com/giriblog

https://www.facebook.com/giriblog

https://www.instagram.com/giriblog

https://feeds.feedburner.com/giriblog

https://www.linkedin.com/company/giriblog

தொடர்புடைய கட்டுரை

Signal App | தற்காலிக பரபரப்பா? நிரந்தர மிரட்டலா?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. கிரி. எனக்கு இதுவரை தெரியாத செய்தி இது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here