Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி ராகுல் மற்றும் அண்ணாமலை கொடுத்த விளக்கங்கள் இணையத்தில் புயலைக் கிளப்பி விட்டது.
Artificial Intelligence
இந்தாவாயின்கோ என்ற ட்விட்டர் பயனர், ராகுல் அவரது ஆதரவாளர்களிடையே கூறியதையும், சென்னை IIT யில் மாணவர்களின் கேள்விக்கு அண்ணாமலை கூறிய பதிலையும் பகிர்ந்தார். Image Credit
இதன் பிறகு பலரும் இந்த இரண்டு காணொளிகளையும் தொடர்ச்சியாகப் பகிர்ந்து, அது YouTube லும் பலரைச் சென்றடைந்து விட்டது.
இவ்வளவு பரபரப்பாகக் காரணம் என்னவென்றால், ராகுல் கூறிய விளக்கமும், அண்ணாமலை கூறிய விளக்கமும் தான்.
ராகுல் கூறியது தெளிவு இல்லாமல், புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. அதோடு அவசியம் இல்லாமல் நெட்ஒர்க் என்றெல்லாம் பேசிக் குழப்பி விட்டார்.
ஆனால், அண்ணாமலை கூறிய பதில் AI பற்றிய புரிதல் இல்லாதவருக்குக் கூடப் புரியும் படி இருந்ததோடு, நகைச்சுவையோடு கூறியது பலரைக் கவர்ந்தது.
இக்காணொளி பதிலுக்குப் பதில் அல்ல. இருவருமே தனித்தனி சூழ்நிலைகளில் பேசியது. சொல்லப்போனால் இருவருக்குமே இருவர் பேசியதும் தெரியாது.
அமெரிக்கா சீனா பொருளாதாரம்
அமெரிக்கா, சீனா பொருளாதார இடத்தை அடைய இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்று அண்ணாமலை கூறிய போது கிறுகிறுத்து விட்டது.
இவ்வளவு நாட்களாக இந்தியா இன்னும் 15 – 20 வருடங்களில் அவர்களைப் பிடித்து விடும் என்று நினைத்து இருந்தேன் ஆனால், அண்ணாமலை கூறிய விளக்கத்தைக் கேட்டால், அது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அதோடு எப்படிப்பட்ட உயரத்தில் இருக்கிறார்கள் என்பதையும் உணர வைத்தது.
உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு வந்து விட்டோம், இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு வந்து விடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
15 – 20 வருடங்களில் இவர்களையும் பிடித்து விடலாம் என்று நினைத்தேன் 😀 .
ஆனால், எவ்வளவு முட்டாள்தனமான புரிதலிலிருந்துள்ளேன் என்று இதைக்கேட்டபோது வெட்கமாகி விட்டது.
பொருளாதாரத்தில் இந்தியாவை விட 10+ மடங்கு உயரத்தில் சீனா உள்ளது. இதை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பட்டியலிட்ட போது தான், இந்தியா எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதே புரிந்தது.
அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கணக்கிட்டால், மூச்சு முட்டி விட்டது.
இவ்வளவு கடினமான தலைப்பை அண்ணாமலை அனைவருக்கும் புரியும் படியான எளிமையான ஆங்கிலத்தில் விளக்கியதிலேயே அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இவ்வாறு இலக்கை அடைய AI வகிக்கப் போகும் பங்கை இணைத்துக் கூறி, அதன் முக்கியத்துவத்தைக் கூறிய போது மாணவர்களது கைத்தட்டல்களைப் பெற்றார்.
IIT மாணவர்கள்
போகிற போக்கில் IIT மாணவர்கள் இந்தியாவை புறக்கணித்து அமெரிக்காவுக்குப் பணிக்குச் செல்வதையும் நகைச்சுவையுடன் குத்திக்காட்டத் தவறவில்லை.
இந்தியா ஒரு IIT மாணவரை அதிகப் பணம் செலவழித்து திறமையானவராக மாற்றி அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கிறது.
முதலீடு செய்வது இந்தியா ஆனால், பலனை அனுபவிப்பது அமெரிக்கா.
காரணம், தாங்கள் படித்த படிப்புக்கு, சம்பளமும், அங்கீகாரமும் அமெரிக்காவில் கிடைக்கும் என்று மாணவர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
இதைத் தவறு என்று கூற முடியாது.
இந்தியாவிலும் அவர்கள் பணிக்கான அங்கீகாரம், ஊதியம் கிடைக்கும் போது இந்தியாவிலேயே தொடர்வார்கள், அந்நிலை நிச்சயம் இந்தியாக்கு வரும்.
தற்போதைய அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அவர்கள் இதில் திறமையானவர்கள் என்பதையும், எதனால் படித்த இளையோர் இந்திய அரசியலுக்குத் தேவை என்பதையும் மனம் கோணாமல் அவர்களுக்குக் கூறினார்.
மோடி இவ்வளவு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி, மாற்றங்களைக் கொண்டு வந்தே நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனும் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், பல வருடங்கள் பின் தங்கி இருப்போம்.
அண்ணாமலை
அண்ணாமலைக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகம் அல்லாது வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவருடைய பேச்சுக்கும், புத்திசாலித்தனமான பதில்களுக்கும் பெரும் ரசிகர் படையுள்ளது. இவருடைய செய்தியாளர் சந்திப்பில் நிச்சயம் ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
வழக்கமான அரசியல்வாதிகளின் ஸ்டீரியோ வகைப் பேச்சாக இல்லாமல், தான் சொல்ல வரும் கருத்தை மிகத்தெளிவாக, எளிமையாகக் கூறுவதே இவர் சிறப்பு.
இப்படிப்பட்ட ஒரு மனிதரைத் தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையுள்ளது. ஏனென்றால், இவர் போராடுவது சாதாரண நபர்களோடு அல்ல.
பலரும் எதிர்பார்க்கும் அந்த ஒரு நாளுக்காக நானும் காத்துக்கொண்டுள்ளேன்.
இக்காணொளி பார்ப்பவர்கள் காணொளியில் வந்துள்ள கருத்துகளையும் படிக்கவும், அண்ணாமலை எப்படி அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது புரியும்.
கொசுறு
செயற்கை நுண்ணறிவு துறையை ஊக்குவிக்க மத்திய அமைச்சரவை ₹10,371 கோடியை ஒதுக்கியுள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அமெரிக்கா / சீனா பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரதோடு ஒப்பிட முடியாது. இதற்கு வெவ்வேறு காரணிகள் உள்ளது.. இதுவரை என்னுடைய புரிதல் சரியா? என்று இந்த காணொளியை கேட்டால் தான் தெரியும்.. இந்த காணொளியியை இது வரை கேட்கவில்லை.. விரைவில் கேட்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.. கிரி.
@யாசின்
“அமெரிக்கா / சீனா பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரதோடு ஒப்பிட முடியாது. ”
ஒப்பிட முடியாது ஆனால், இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர்களை இந்தியா பிடிக்கும் / பிடிக்கலாம் என்பதைக் கூறலாம்.