Sarkar (2005 இந்தி) | The Don of Don’s

2
Sarkar Movie

Don என்றால், முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பதை மாற்றி, அமைதியாக, புத்திசாலியாக இருந்தாலே போதும் என்று நிரூபித்தவர் Sarkar அமிதாப்.

இவருக்கென்றே அளவெடுத்துச் செய்த சட்டை போல அற்புதமான கதாப்பாத்திரம். இப்படம் God Father படத்தை Inspiration ஆக வைத்து உருவாக்கப்பட்டது.

Sarkar

பால்தாக்கரேவை மனதில் வைத்து அமிதாப் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டது.

அதிகாரவர்க்கத்துடன் போராட முடியாத, நீதி வேண்டும் என்று நினைக்கும் எளிய மக்களின் கடவுளாக இருப்பவர் அமிதாப் (சுபாஷ் நாகரே).

இவரின் வளர்ச்சி, வலிமை பொறுக்காத அதிகார வர்க்கத்தினர் இவரை அழிக்க நினைக்கிறார்கள் முடிவில் என்ன ஆனது என்பதே கதை.  Image Credit

அமிதாப்

பாட்ஷா ரஜினி ஆக்ரோஷ Don என்றால், சர்க்கார் அமிதாப் அமைதியான ஆனால், மிரட்டலான Don. ஆர்ப்பாட்டமில்லாத அமிதாப் உடல்மொழி செம மாஸ்.

படம் நெடுக இவரது நடிப்பை ரசித்துக்கொண்டே இருக்கலாம். முகத்தில் கெத்து, செயலில் அலட்சியம், பார்வையில் மிரட்டல் என்று அசத்தியிருப்பார்.

பணக்கார பையன் தன் மகளைச் சீரழித்து விட்டதாக நீதி கேட்டுச் சர்க்காரிடம் ஒரு பெரியவர் வந்து பேசும் போது, எந்த உணர்ச்சியையும் காட்டாமல், இவரது வலது கையிடம் கூறி அடித்துத் துவம்சம் செய்வது ரணகளம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தவறுச் செய்பவர்களை இது போலப் போட்டுத் துவைக்கணும் என்று நினைக்க வைக்கும் செம மாஸான காட்சி.

போதை மருந்து கடத்தல் செய்யும் ரஷீத், அமிதாப்பிடம் டீல் பேசுவது அட்டகாசமாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

அமிதாப்பின் கெத்து பார்த்துக் கடுப்பாகும் ரஷீத்தை அமைதியாக மேலும் கடுப்பாக்கும் அமிதாப் அசத்தல்.

நானும் செய்ய மாட்டேன், உன்னையும் செய்ய விட மாட்டேன்‘ என்று அமிதாப் கூறும் காட்சி செம மாஸ். அதை எதிர்பாராத ரஷீத் அதிர்ச்சி சிறப்பு.

அபிஷேக்

அபிஷேக் நடிப்பில் இதுவரை மிகக் கவர்ந்தது சர்க்கார் & சர்க்கார் ராஜ். இக்கதாப்பாத்திரத்துக்கு என்றே இருப்பவர் போல உள்ளார்.

அப்பா அமிதாப் அரசியல் சூழ்ச்சியில் சிக்க, அவரைக் காப்பாற்ற முனையும் போது எதிரிகளிடம் சிக்கும் காட்சிகள் எதார்த்தமாக இருக்கும்.

எதிரிகளைப் பழிவாங்கும் காட்சிகளில் ஸ்டைலிஷாக தூள் கிளப்பியிருப்பார். கொலை செய்வது, மிரட்டுவது எல்லாமே ஆர்ப்பாட்டம் இல்லாமல் தரமான செய்கை.

மிகை நடிப்பு செய்யாமல், கதாப்பாத்திரத்தின் மதிப்பைச் சிதைக்காமல் தன் நடிப்பை நியாயப்படுத்தியிருப்பார்.

கோட்டா சீனிவாச ராவ் & மற்றவர்கள்

ரஷீத் நடிப்பு அலட்டிக்கொள்ளாத ஆனால், குரூரமான நடிப்பாக இருக்கும். மிகச்சரியான தேர்வு.

இவருடன் தமிழராகக் கோட்டா சீனிவாச ராவ், அப்போதைய சந்திராஸ்வாமியை மனதில் வைத்து ஒரு கதாப்பாத்திரம், அரசியல்வாதி என்று அனைவரும் செம்ம பொருத்தம். கோட்டா சீனிவாச ராவ் நடிப்பு கலகலப்பாக இருக்கும்.

அபிஷேக் அண்ணன் அவசர குடுக்கை. இவரை வைத்து எதிரிகள் போடும் திட்டம் எல்லாம் பலே ரகமாக இருக்கும்.

யாரையுமே நடிப்பில் குறை கூற முடியாத அளவுக்கு இயக்குனர் வர்மா செதுக்கியிருப்பார்.

ஒளிப்பதிவு

Brown shade ல் வித்யாசமான நிறத்தில் ஒளிப்பதிவு. பெரியவர் வரும் துவக்க காட்சி முதல், இறுதிக்காட்சி வரை கோணங்கள் வித்யாசமாக இருக்கும்.

இக்காட்சிகளை எப்படி சிந்திக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும். பெரியவர் நடந்து வருவதை பின்னணி இசை இல்லாமல் பார்த்தால், சாதாரணமாக இருக்கும்.

இப்படியொரு காட்சியை எடுக்கும் போது பின்னணி இசையை மனதில் வைத்து எடுப்பார்களா? முன்னரே திட்டமிடுவார்களா? எப்படி எடுக்கிறார்கள்?!

ராம் கோபால் வர்மா திரைப்படங்களில் கோணம் எப்போதும் வித்யாசமாக இருக்கும். இப்படமும் விதிவிலக்கல்ல.

இறுதிக்காட்சிகளில் அபிஷேக் பழிவாங்கும் நேரங்களில் ஒவ்வொன்றும் அவ்வளவு அசத்தலாக மரண மாஸாக இருக்கும். ஒளிப்பதிவு அட்டகாசம்.

பின்னணி இசை

பின்னணி இசைக்காகவே எவ்வளவு முறை பார்த்தேன் என்று நினைவில்லை 🙂 . ரொம்ப ரொம்ப பிடித்த பின்னணி இசை திரைப்படம்.

Don படத்துக்குப் பொருத்தமான பின்னணி இசை.

அபிஷேக்கை துரத்தும் காட்சிகளில், ரஷீத்தை பழிவாங்கும் காட்சியில் வரும் பின்னணி இசை, கோவிந்தா பாடல் எல்லாம் Goosebumps தான்.

படம் முழுக்கவே பின்னணி இசை அதகளம்.

Home Theater போல நல்ல தரமான சாதனத்தில் இப்படம் பார்த்தால், தாறுமாறாக இருக்கும். திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு (2005) கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

ராம் கோபால் வர்மா

Don, Gangster படங்கள் என்றாலே ராம் கோபால் வர்மா மனதில் வருவார். இவருடைய சத்யா, கம்பெனி படங்கள் Gangster மாஸ் என்றால், Sarkar Don மரண மாஸ்.

வர்மா திரைப்படங்கள் ராவாக இருக்கும். ரவுடிகள் கதாப்பாத்திரங்கள் நிஜ ரவுடிகளோ என்று நினைக்கும் அளவு இருப்பார்கள்.

எந்த ஒப்பனையும், செட்டிங்ஸும் இல்லாதது இயல்புத்தன்மையை கொடுக்கும்.

Don / Gangster என்ன வேறுபாடு?

நிழலுக வேலைகள் செய்யும் சிறு குழுக்களாகப் பல இருக்கும். அந்த ஒவ்வொரு குழுக்கும் உள்ள தலைவன் Gangster. Gangster க்கெல்லாம் இருக்கும் தலைவன் Don.

ராம் கோபால் வர்மா இளமைக்கால சம்பவங்கள் அவருக்கு ரவுடிகள் பழக்கத்தையும், அவர்கள் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே, அவற்றைத் தன் படங்களில் சம்பவங்களாக வைத்துக்கொள்கிறார்.

சர்க்கார் இரண்டாம் பாகமான சர்க்கார் ராஜும் இதே போல மிரட்டலாக இருக்கும். ஐஸ்வர்யா ராய் முக்கியக்கதாப்பாத்திரம். மூன்றாம் பாகம் சொதப்பி விட்டது.

Don, Gangster திரைப்படங்கள் மிகப் பிடித்தமானவை. சிறு வயதில் இருந்தே இப்படங்கள் மீது நாட்டம் அதிகம். எனவே, சர்க்கார் பிடித்ததில் வியப்பில்லை.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் சர்க்காருக்கும் இடம் உண்டு 🙂 . பொழுது போகவில்லையென்றால், சர்க்கார் தான்.

இதுவரை Sarkar பார்க்கவில்லையென்றால், தரமான Don படத்தைத் தவறவிட்டுள்ளீர்கள். தரமான ஒலி சாதனத்துடன் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Amazon Prime ல் உள்ளது.

Directed by Ram Gopal Varma
Produced by Ram Gopal Varma, Parag Sanghvi
Written by Manish Gupta
Screenplay by Ram Gopal Varma
Starring Amitabh Bachchan, Abhishek Bachchan, Kay Kay Menon, Supriya Pathak, Katrina Kaif, Tanisha Mukherjee, Anupam Kher, Kota Srinivasa Rao
Music by Amar Mohile
Cinematography Amit Roy
Edited by Nitin Gupta, Amit Parmar
Production company RGV Film Company
Release date 1 July 2005
Running time 123 mins
Country India
Language Hindi

தொடர்புடைய விமர்சனங்கள்

Guns & Thighs: The Story of My Life | Ram Gopal Varma

The Attacks of 26 / 11 | மும்பைத் தாக்குதல்

புதுப்பேட்டை [2006] “The King Of Gangster Movies”

பாட்ஷா (1995) The King Of Don

“தளபதி” நினைவுகள் [1991]

இந்த ட்ரைலரில் அமிதாப் நடிப்பு, ஒளிப்பதிவு, கோணம், பின்னணி இசை அனைத்தின் தரமும் காட்டப்பட்டு இருக்கும். இதுவே கூறும் படத்தின் தரத்தை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. படத்தை நீங்கள் ரசித்த விதம், உங்கள் எழுத்துக்களில் அழகாக வெளிப்படுகிறது. சர்க்கார் உண்மையில் அற்புதமாக திரைப்படம்.. மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி.

  2. நன்றி யாசின். சர்க்கார் எவ்வளவு முறை பார்த்தாலும் ரசிக்க முடியும். பின்னணி இசைக்காகவே பலமுறை பார்த்துள்ளேன்.

    இப்படத்தில் அனைத்துமே சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here