கடந்த இரண்டு வருடங்களாக நவம்பர் மாதம் வந்தால், சபரிமலை போராளிகள் கிளம்பி விடுகிறார்கள். அதுவரை அவர்கள் இருக்கும் இடமே தெரியாது.
சபரிமலை போராளிகள்
திருப்தி தேசாய், ரெஹானா பாத்திமா, பிந்து போன்ற பெண்கள் எல்லாம் 100% விளம்பரத்துக்காகவே இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இவர்களுக்கு ஐயப்பன் மீதெல்லாம் பக்தியில்லை, தங்களைப் போராளிகளாகக் காட்டி பெண்ணுரிமை அது இதுன்னு பேசிட்டு இருப்பாங்க.
இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே, கடந்த வருடம் விளக்கமாக எழுதியுள்ளேன்.
இந்த ஒரு கோவிலில் தான் மொத்த பெண்ணுரிமையும் உள்ளது, அதைத்தான் நிலைநாட்டனும் என்று முயல்வதெல்லாம் கேப்மாரித்தனம் அன்றி வேறில்லை.
இப்பிரச்னைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வெறுமனே பரப்பும் செய்தி என்னவென்றால், ‘பெண்களை அனுமதிக்கவில்லை, பெண்களுக்குத் தடை‘ என்ற வடிகட்டின பொய்யைத் தான்.
பெண்களை யாருமே தடுக்கவில்லை, காலாகாலமாகப் பெண்கள் சென்று வந்து கொண்டுள்ளார்கள். எங்கள் வீட்டில் அக்கா, அம்மா சென்று வந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட வயது, காலத்துக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது, அதுவும் சபரிமலையில் மட்டுமே!
இந்தியா முழுக்க ஐயப்பன் ஏராளமான கோவில்களில் உள்ளார், சபரிமலையில் ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதான நிலை இல்லை.
ஐயப்பனுக்கு என்று தனிக்கோவில்களே ஏராளம் உள்ளன, சென்னையில் கூட இரு பிரபலமான கோவில்கள் உள்ளன.
அங்கெல்லாம் சென்று சாமி கும்பிட்டால், ஐயப்பன் அருள்பாலிக்க மாட்டார் என்று இவர்களிடம் கூறினார்களா?! பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கதறுவதும் அதை ஆதரிப்பதும் கொழுப்பு அன்றி வேறில்லை.
இவர்கள் நடந்து கொள்வது நியாயம் என்று கருதுகிறீர்களா?
முற்போக்குச் சிந்தனைவாதிகள்
இதையெல்லாம் செய்தால், ஆதரித்தால் நாம் போராளிகள், முற்போக்குச் சிந்தனைவாதிகள், மற்றவர்களை விட நாம் அறிவானவர்கள் என்ற ஒரு சிந்தனையை அவர்களுக்குள்ளேயே வளர்த்து இப்படிப் போலியாக நடந்து கொள்கிறார்கள்.
இவர்களை ஃபேஸ்புக், ட்விட்டரில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நிலைத்தகவல் முழுக்க இவை தான் இருக்கும் ஆனால், நிஜ வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றுகிறார்களா என்றால் அது உறுதியில்லை.
இவங்க வீட்டில் கேட்டால் இவங்க வண்டவாளம் தெரியும்.
இந்தியா முழுக்கப் பெண்களுக்கு எதிராக நிமிடத்துக்கு ஒரு சம்பவம் நடைபெற்று வருகின்றது. சபரிமலை போராளிகள் அதைப் பற்றி யோசித்து உள்ளார்களா?
ஒன்றுமில்லாத பிரச்சனைகளுக்குப் பொங்கியவர்கள் எல்லாம் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மவுனமாக இருக்கிறார்கள். எதற்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறதோ அதற்கு அனைவரும் விழித்து எழுந்து விடுவார்கள்.
பெண்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் ‘பெண்களை அனுமதிக்க வேண்டும்!!’ என்று போராட்டம் நடத்துபவர்கள் உலகிலேயே இந்தியாவில் தான் இருப்பார்கள்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//பெண்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் ‘பெண்களை அனுமதிக்க வேண்டும்!!’ என்று போராட்டம் நடத்துபவர்கள் உலகிலேயே இந்தியாவில் தான் இருப்பார்கள்.//
ஹா ஹா ஹா! நீங்கள் அப்படி இப்படி புத்திசாலி இல்லை, கேக்குறவன் எல்லாம் கேனையன் என்று நினைத்து கொண்டிருக்கும் அதி புத்திசாலி! அப்படியே உங்கள் தலைவரை போல!
ஆமா, எந்த அய்யப்பன் கோவிலிலும் இல்லாத என்ன ஒன்று இந்த கோவிலில் இருக்கிறது? பிடிவாதம் ஒன்றை தவிர? அப்படியே ஐயப்பன் கண்ணை குத்தினால் போகும் பெண்களை தானே குத்துவார்? அவர்களே பட்டு தெரிந்து கொள்ளட்டுமே, உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை? ஈகோவை தவிர?
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் , இவர் பல விஷயங்களில் மேதாவி நினைப்பில் கண்டதை சொல்வார், ஆனால் அமைதி தியானம் நிதானம் என பல கட்டுரை வரைந்து விட்டு யாராவது கருத்து சொன்னால், கோவம் இல்லாதவர் போல் வார்த்தையால் பொங்குவார்
(இவர்களை ஃபேஸ்புக், ட்விட்டரில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நிலைத்தகவல் முழுக்க இவை தான் இருக்கும் ஆனால், நிஜ வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றுகிறார்களா என்றால் அது உறுதியில்லை.)
கோவத்தை காட்டுவதும் இல்லாததை போல் நடிப்பதும் ஒண்ணுதான் ,அதற்கு அமைதி என்று பெயர் அர்த்தம் கிடையாது தலைவரே….
//இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் , இவர் பல விஷயங்களில் மேதாவி நினைப்பில் கண்டதை சொல்வார், ஆனால் அமைதி தியானம் நிதானம் என பல கட்டுரை வரைந்து விட்டு யாராவது கருத்து சொன்னால், கோவம் இல்லாதவர் போல் வார்த்தையால் பொங்குவார்
கோவத்தை காட்டுவதும் இல்லாததை போல் நடிப்பதும் ஒண்ணுதான் ,அதற்கு அமைதி என்று பெயர் அர்த்தம் கிடையாது தலைவரே….//
100% இதே கருத்து தான் என்னுடையதும்.
விஜய் cutout க்கு பால் ஊத்துகிறவனுக்கும் இவர் தலைவரை புகழ்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
விவேகானந்தரிடம் கற்றுக்கொண்டனத்தை விட, இவர் தினமும் ஒவ்வொரு பெண்களிடம் படுத்து எழுந்த இவர் தலைவரிடம் தான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளார்.
//ஹா ஹா ஹா! நீங்கள் அப்படி இப்படி புத்திசாலி இல்லை, கேக்குறவன் எல்லாம் கேனையன் என்று நினைத்து கொண்டிருக்கும் அதி புத்திசாலி! //
Exactly. Well said
அரசியல் செய்வதற்கு சீசனுக்கு தகுந்தாற்போல ஏதேனும் ஓர் காரணம் தேவைப்படுகிறது அல்லது கிடைத்து விடுகிறது.
கிரி அவர்களே.
//இவர்களுக்கு ஐயப்பன் மீதெல்லாம் பக்தியில்லை, தங்களைப் போராளிகளாகக் காட்டி பெண்ணுரிமை அது இதுன்னு பேசிட்டு இருப்பாங்க.//
அவங்க எந்த காரணத்திற்கு வேணும்னாலும் போகட்டும். அவங்கள ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாருங்க?
கடவுள் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் வரக்கூடாதென்று தடை பண்ணினாரா? அப்படியென்றால் ரெபெரென்ஸ் காட்டுங்கள். அப்படியில்லையென்றால், கடவுளே சும்மா இருக்கும்போது அற்ப மனுஷ பயல்கள் யாருங்க தடை பண்றதுக்கு?
Honorable Supreme Court of India சொன்னதுக்கு அப்புறம், அதையும் தவறு என்று சொல்கிற நீங்கள் ரொம்ப தலைமை நீதிபதியை விட அதி புத்திசாலி தான்.
//இந்தியா முழுக்கப் பெண்களுக்கு எதிராக நிமிடத்துக்கு ஒரு சம்பவம் நடைபெற்று வருகின்றது. சபரிமலை போராளிகள் அதைப் பற்றி யோசித்து உள்ளார்களா?//
பெண்களுக்கு எதிராக நிமிடத்துக்கு ஒரு சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்க்கு தான் போலீஸ், கோர்ட் இருக்கிறது. ஒரு குற்ற சம்பவத்திற்கும், ஒரு உரிமைக்கு போராடுவதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்கிறீர்களே. நீங்கள் ரொம்ப புத்திசாலி தான்.
இதற்கெல்லாம் போராட ஆரம்பித்தால், அவர்கள் தூங்க கூட செய்யாமல் போராடிக்கொண்டு thaan இருக்கனும். இதெல்லாம் practical ஆ possible ஆ? ரொம்ப புத்திசாலி மாதிரி பேச வேண்டியது.
அவங்களுக்கு அங்கே போக விருப்பம். உரிமை மறுக்கப்பட்டதால், போராடினார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை?
வாவ்! நம்ம தள கருத்துப்பகுதி ரொம்ப நாளைக்குப் பிறகு களை கட்டி இருக்கு 🙂
செம.. விரைவில் பதில் அளிக்கிறேன்.
@raajshree_lk
“ஹா ஹா ஹா!”
அவ்வளோ பெரிய ஜோக் நான் சொன்ன மாதிரி தெரியலையே 🙂 .
“நீங்கள் அப்படி இப்படி புத்திசாலி இல்லை, கேக்குறவன் எல்லாம் கேனையன் என்று நினைத்து கொண்டிருக்கும் அதி புத்திசாலி!”
நீங்க கேனச்சி ன்னு சொல்லி இருக்கலாம்… பரவாயில்லை.
எல்லோரும் மாற்றி மாற்றிப் புத்திசாலின்னு சொல்லிட்டீங்க! கீழே ஒருத்தர் என்னை மேதாவின்னு வேற சொல்லி இருக்காரு. ரொம்ப நன்றி.
“அப்படியே உங்கள் தலைவரை போல!”
இங்கே ரஜினி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதா?
ஆனால், உங்களையெல்லாம் இப்படி 24 மணி நேரமும் எல்லா விஷயங்களிலும் சம்பந்தமே இல்லாமல் நினைக்க வைத்துக் கடுப்படிக்கிறார் என்பது மகிழ்ச்சி 🙂 .
“ஆமா, எந்த அய்யப்பன் கோவிலிலும் இல்லாத என்ன ஒன்று இந்த கோவிலில் இருக்கிறது?”
நான் கேள்வியைக் கேட்டால், பதில் கூறாமல், அதே கேள்வியை என்னிடம் கேட்கறீங்க. சரி நான் சொல்றேன்.. ‘ஜோதி’ என்று கூறப்படும் விளக்கு ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இது சபரிமலையில் மட்டுமே நடைபெறுகிறது.
அதோட யாருக்கும் ‘பாதிப்பில்லாத ஐதீகம்’ உள்ளது.
ஐதீகத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து இருந்தால், இந்தக் கேள்வியே வந்து இருக்காது.
“உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை? ஈகோவை தவிர?”
இதெல்லாம் நான் கேட்க வேண்டிய கேள்வி, என்னைக் கேட்டுட்டு இருக்கீங்க. இதைய அந்தப் பிந்து, திருப்தி தேசாய், ரெஹானா கிட்ட கேளுங்க.
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வயதில் தான் செல்வேன் என்பது ஈகோ இல்லை ஆனால், பெண்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அது ஈகோ. செம்ம
இந்தியாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள கோவில்கள் உள்ளது. அங்கே போய் ஆண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடுவதில்லை. அப்படி போராடினால் அது நியாயமுமில்லை.
கேரளாவில் பல கோவில்களில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் செல்ல வேண்டும், பெண்கள் புடவை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டு.
ஜீன்ஸ் அணிந்து சென்றால் சாமி கண்ணைக் குத்திடுமா? என்று கேட்பது போலத் தான் நீங்கள் பேசுவது உள்ளது.
//ஆனால், உங்களையெல்லாம் இப்படி 24 மணி நேரமும் எல்லா விஷயங்களிலும் சம்பந்தமே இல்லாமல் நினைக்க வைத்துக் கடுப்படிக்கிறார் என்பது மகிழ்ச்சி ? //.
நீங்கள் தனிப்பட்ட ரீதியில் “தலீவர்” புகழ் பாடி புளங்காகிதம் அடைந்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மெப்புக்கு பொங்கு பொங்கு என்று “தமிழ் பொங்கல்” பொங்கி விட்டு, ஐந்து கோடி தமிழர்களில் நாட்டை ஆள ஒருவருக்கு கூடவா தகுதி இல்லை என்று ஒரு சிறு ஆதங்கம் கூட இல்லாமல் இப்படி “தலீவருக்கு” காவடி தூக்கும் மனோநிலையை பார்த்து எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. தனிப்பட்ட ரீதியில் உங்கள் சொத்தை எழுதி கொடுங்கள் இல்லை உங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால், ஒரு சர்வதேச சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் ஒரு பதவிக்கு எப்படி இன்னொரு இனத்தவர் தகுதி உள்ளவராக இருப்பார்? அதற்காக இப்போ உள்ளவர் எதை கிழித்தார் என்று விதண்டாவாதம் செய்ய வேண்டாம், எதையும் கிழிக்கா விட்டாலும் சொந்த இனத்தில் ஒரு தலைவன் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய மானக்கேடு? இலங்கையிலும் மலேசியாவிலும் தமிழர்கள் உரிமைக்காக உயிரை கொடுத்து போராடுகிறார்கள். இங்கே ரஜனிகாந்த் வா, அஜித் குமார் வா என்று தன் இனத்தை தாழ்த்துவது என்ன வகையான மனநிலை?
சரி உங்கள் “தலீவர்” ஒரு நடிகர், வேற்று மாநிலத்தவர் என்பதை கூட விட்டு விடுவோம். ஒரு நிறுவனத்திற்கு மேனேஜர் ஆக கூட அதற்கான பயிற்சியும் அனுபவமும் தேவை. ஒரு கட்சியை கூட நடத்தி அனுபவம் இல்லாதவர், எந்த ஒரு சிவில் நிர்வாகத்திலும் பயிற்சி இல்லாதவர் எப்படி ஒரு முதலமைச்சர் ஆக முடியும்?
கிரி, உங்களுக்கும் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்றவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! இதை ஏளனமாகவோ கோபமாகவோ சொல்லவில்லை, மிகுந்த மனவருத்தத்துடன் சொல்கிறேன்!
//கிரி, உங்களுக்கும் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்றவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! இதை ஏளனமாகவோ கோபமாகவோ சொல்லவில்லை, மிகுந்த மனவருத்தத்துடன் சொல்கிறேன்!//
நீங்க என் மன வருத்தம் அடைய நீங்க இந்த ரசிக கூமுட்டைகளை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
இந்த மாதிரி low class ரசிக கூமுட்டைகள் இருக்கிறதால தான் நமக்கு சுவாரஸ்யம். (எந்த நடிகனுக்கு ரசிகனாக இருந்தாலும்)
//கிரி, உங்களுக்கும் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்றவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! இதை ஏளனமாகவோ கோபமாகவோ சொல்லவில்லை, மிகுந்த மனவருத்தத்துடன் சொல்கிறேன்!//
நீங்க ஏன் மன வருத்தம் அடைறீங்க? நீங்க இந்த ரசிக கூமுட்டைகளை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
இந்த மாதிரி low class ரசிக கூமுட்டைகள் இருக்கிறதால தான் நமக்கு சுவாரஸ்யம். (எந்த நடிகனுக்கு ரசிகனாக இருந்தாலும்)//
இலங்கையிலும் மலேசியாவிலும் தமிழர்கள் உயிரைக்கொடுத்து உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் போது, இருக்கும் உரிமையையும் அடுத்தவன் கையில் தூக்கிகொடுக்க அலைகிறதே இந்த முட்டாள் ரசிக கூட்டம் என்ற கவலை தான்!
//அதோட யாருக்கும் ‘பாதிப்பில்லாத ஐதீகம்’ உள்ளது.//
பக்தியில் எல்லாமே ஐதீகம் மட்டும்தான், எந்த சாமியும் யாரையும் காத்ததாக சரித்திரம் இல்லை. மனுஷன் தான், தான் படைத்த கடவுளுக்கு போலீஸ் முதல் ராணுவம் வரை போட்டு காவல் காத்து கொண்டிருக்கிறான்.
“மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” இது மானமுள்ள தமிழனுக்கு அவ்வை சொன்னது. எனது கருத்தும் இதுதான். நம்மை மதிக்காத கடவுளிடம் நாம் போக வேண்டியதில்லை. ஆனால் அதை கடவுள் சொல்லட்டும், ஆசாமிகள் எதற்கு சொல்ல வேண்டும்?
@பெயரில்லாதவர்
“இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் , இவர் பல விஷயங்களில் மேதாவி நினைப்பில் கண்டதை சொல்வார்”
கண்டதையும் சொல்கிறேன் என்று தெரிந்தும், மேதாவியான என்னைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா! எனக்குப் பெருமை தானே 🙂 .
BTW நான் ‘கண்டதை’ தான் சொல்றேன்.. காணாததை சொல்வதில்லை.
‘கோவத்தை காட்டுவதும் இல்லாததை போல் நடிப்பதும் ஒண்ணுதான் ,அதற்கு அமைதி என்று பெயர் அர்த்தம் கிடையாது தலைவரே….’
அதெப்படி ஒன்று ஆகும் பாஸ்.
இப்ப எடுத்துக்காட்டுக்கு யாராவது இங்க வந்து கிறுக்கி / கிறுக்கன் மாதிரி பேசுறார் என்று வைத்துக்கொள்ளுங்க.
அவர் கிட்ட கோவத்தை காட்டுவது சேற்றின் மீது கல்லை வீசுவதுக்கு ஒப்பானது. நமக்குத் தான் சேதாரம். பொறுமையாக விளக்கியும் அதே மாதிரி பேசினால் ஒதுங்கிப் போய் விட்டால், கத்திட்டு அவரும் விலகி விடுவார் இல்லையா!
சரி… இதெல்லாம் இருக்கட்டும்.. எனக்குக் கோவம் வராதுன்னு உங்ககிட்ட யார் சொன்னா? 🙂 எனக்குக் கண்டபடி கோபம் வரும் ஆனால், அதை நான் பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை அவ்வளவே!
என்னுடைய கோபத்தை வெளிக்காட்டினால் என்னுடைய தள கருத்துப்பகுதி சண்டையில் சாக்கடையாகத் தான் இருக்கும், அதை நான் விரும்பவில்லை.
எடுத்துக்காட்டுக்கு நான் காண்டாகி உங்களை அசிங்கமா திட்டுனா நீங்க என்ன செய்வீங்க? பதிலுக்குக் கெட்ட வார்த்தை பேசுவீங்க, திட்டுவீங்க அல்லது ஒதுங்கிப் போவீங்க.
முதல் சொன்னதை செய்தால், அதனால் தான் நான் கோபமாக நடந்து கொள்வதில்லை. இரண்டாவதை செய்தால், அதை நான் ஏற்கனவே பின்பற்றுகிறேன் 🙂 .
கோபப்படாம இருக்க நான் புத்தரோ, விவேகானந்தரோ கிடையாதுங்க.. சராசரி மனுசன். கோபம், அவசரத்தால் நான் இழந்தது அதிகம். எனவே, கட்டுப்பாடோடு இருக்கேன்.. இதில் என்ன தவறை கண்டீர்கள்?!
நான் இங்கே ஒரு மாதிரி எழுதிட்டு வெளியே ஒரு மாதிரி இருப்பவன் அல்ல. பேச்சும் எழுத்தும் செயலும் எப்போதும் ஒன்றே தான். என்னுடைய நண்பர்களுக்குத் தெரியும் நான் எந்த மாதிரின்னு.
உங்க பெயர் கூடத் தெரியாத எனக்கு நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கறீங்க என்பது பற்றி எனக்கு எள்ளளவும் கவலையில்லை.
உங்ககிட்ட நான் அநாகரீகமாக நடந்து கொண்டால் கேள்வி கேட்கலாம்..கோபப்படாம பேசுறதுக்கெல்லாமா கேள்வி கேட்பீங்க! நியாயமா நீங்க என்னைப் பாராட்டணும் 🙂 .
எல்லோருக்கும் பிடித்த மாதிரி, எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது போல எழுதுவது என்னுடைய வேலை அல்ல பாஸ், என் மனசாட்சிக்கு சரின்னு படுவதை பயப்படாமல் எழுதுவேன் அதனால் தான் என்னுடைய கருத்துரை பகுதிக்கு மட்டுறுத்தல் செய்யவில்லை, இவ்வளவு வருடங்களாக.
நான் எழுதிய கட்டுரைக்குத் தைரியமாகப் பதில் கூற என்னால் முடியும். சிலர் உங்களைப்போலப் பெயர் இல்லாமல் வருபவர்களுக்குப் பதில் அளிக்க முடியாது என்று கூறுவார்கள் ஆனால், நான் கேட்கப்படும் கேள்வி நாகரீகமாக இருந்தால் போதும் என்று தான் நினைப்பேன்.
BTW உங்க சொந்தப் பெயரை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், ஏதாவது ஒரு பெயரை வைத்துக்கொள்ளுங்கள். பெயரில்லாதவர் என்று சொல்வது அசிங்கமா இருக்கு.
@Karunai நீங்கள் இதுவரை கருத்து இட்டவை 80% ரஜினியை திட்டித்தான் அதுவும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லாம. என்ன கொடுமை சார் 🙂 .
“விஜய் cutout க்கு பால் ஊத்துகிறவனுக்கும் இவர் தலைவரை புகழ்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை.”
அப்படியா.. இருந்துட்டு போகட்டும். உங்களிடம் இருந்து சான்றிதழ் எனக்குத் தேவையில்லை.
“விவேகானந்தரிடம் கற்றுக்கொண்டனத்தை விட, இவர் தினமும் ஒவ்வொரு பெண்களிடம் படுத்து எழுந்த இவர் தலைவரிடம் தான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளார்.”
உங்களுக்கு ஒரு கதை 😉
பீஷ்மர் (என்று நினைக்கிறேன்) தர்மனிடம் ஒரு கெட்டவனை பார்த்து வந்து என்னிடம் சொல் என்றாராம், துரியோதனினிடம் ஒரு நல்லவனை கண்டு வந்து சொல் என்றாராம்.
தர்மன் திரும்பி வந்து நான் கெட்டவராக யாரையுமே பார்க்கவில்லை, எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றாராம். துரியோதனன் திரும்பி வந்து எல்லோருமே கெட்டவர்களாக இருக்கிறார்கள் ஒருத்தர் கூட நல்லவர் இல்லையே என்றாராம்.
கருணை அவர்களே! உங்களுக்கு ஏதாவது இக்கதையில் புரிந்ததா? 🙂 . எண்ணம் போல வாழ்க்கை.
முதல் கருத்து 3:17 PM இரண்டாவது கருத்து அதே கட்டுரைக்கு 8:23 PM
செம்ம காண்டுல இருப்பீங்க போல ROFL 😀 .
@சேலம் தேவா ஆமாம் 🙂 .
@செல்வன்
“அவங்க எந்த காரணத்திற்கு வேணும்னாலும் போகட்டும். அவங்கள ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாருங்க?”
அவங்க எந்த காரணத்துக்கு வேண்டும் என்றாலும் செல்லட்டும்.. அதே போல நானும் என்னோட கருத்தை சொல்வேன்.. சொல்லக்கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாருங்க!
“கடவுள் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் வரக்கூடாதென்று தடை பண்ணினாரா? அப்படியென்றால் ரெபெரென்ஸ் காட்டுங்கள்.”
அடேங்கப்பா! பயங்கரமா இருக்கே 🙂 செம பாஸ். நீங்க ஐயப்பன் வரலாறை மேலோட்டமாகப் படித்தால் கூட இதற்கான காரணத்தை அறியலாம் ஆனால், நீங்க தான் அதையெல்லாம் ஏற்றுக்க மாட்டீங்களே!
“அப்படியில்லையென்றால், கடவுளே சும்மா இருக்கும்போது அற்ப மனுஷ பயல்கள் யாருங்க தடை பண்றதுக்கு?”
அதானே பாருங்க.. உங்களுக்கு தெரியுது.. நீங்க புத்திசாலின்னு சொல்ற என்னைப்போல இருப்பவர்களுக்கு தெரியலையே!
“Honorable Supreme Court of India சொன்னதுக்கு அப்புறம், அதையும் தவறு என்று சொல்கிற நீங்கள் ரொம்ப தலைமை நீதிபதியை விட அதி புத்திசாலி தான்.”
குற்றம் இழைத்தவர்கள் பலர் நீதிமன்றத்தின் மூலமாக நீங்க சொல்ற சட்டப்படி வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களை மக்கள் கடுமையாக விமர்சிப்பதில்லையா..!
நீதிமன்ற உத்தரவுப் படி தானே வெளியே வந்தார்கள்.. மக்கள் ஏன் விமர்சிக்கனும்?!
உங்கள் பார்வையில் இவர்கள் எல்லாம் புத்திசாலிகள் தானே.. பத்தோட பதினொன்றா நானும் இருந்துட்டு போறேன்… என்ன இப்ப.
நீங்க கேட்ட ‘ரெஃபரென்ஸ்’ மாதிரி, அயோத்தில என் கோவில் இருந்ததுன்னு ராமர் Honorable Supreme Court of India க்கு ‘ரெஃபரென்ஸ்’ கொடுத்தாரா? ஆய்வின் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது, ராமர் கொடுத்த ‘ரெஃபரென்ஸ்’ வைத்தல்ல.
ஐயப்பனுக்கு ஒரு தீர்ப்பு ராமருக்கு ஒரு தீர்ப்பா? என்ன பாஸ்?!
“பெண்களுக்கு எதிராக நிமிடத்துக்கு ஒரு சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்க்கு தான் போலீஸ், கோர்ட் இருக்கிறது.”
‘இருக்குது’.. நான் இல்லைனு சொல்லவே இல்லையே!
‘ஒரு குற்ற சம்பவத்திற்கும், ஒரு உரிமைக்கு போராடுவதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்கிறீர்களே.”
லாஜிக்கலான கேள்வி.. ஏற்றுக்கொள்கிறேன்.
இவங்கெல்லாம் உரிமைக்கு போராடுறாங்களா.. அப்படி என்ன உரிமையை பறித்துட்டாங்க?! இதனால இவங்க வாழ்க்கை சீரழிந்து விட்டதா? முன்னேற்றம் தடுக்கப்பட்டதா?
அனுமதி இருக்குனு சொல்றேன்.. திரும்ப உரிமையைப் பறித்துட்டாங்கன்னு பேசிட்டு இருக்கீங்க. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்னா என்னங்க பண்ணுறது?
அதெல்லாம் இல்லை.. இவங்க உரிமைக்கு போராடுறாங்க என்றால்.. சொல்லிட்டு போங்க.. எனக்கு என்ன?!
என்னுடைய கருத்தைக் கூறுவது என்னுடைய உரிமை. அதைத் தடுக்க நீங்க யார்?
இவர்களை ஆதரிக்க உங்களைப் போல 100 பேர் இருந்தால், எதிர்க்க 10 பேர் இருக்க மாட்டார்களா?!
விமர்சனம் வைங்க.. பதில் சொல்கிறேன். அதை விட்டுட்டு கேள்வி கேட்க நீங்க யாருன்னா..? அவர்களுக்கு போராட எவ்வளவு உரிமையுள்ளதோ அதை நியாயமான முறையில் எதிர்க்க எனக்கு முழு உரிமையுள்ளது.
“இதற்கெல்லாம் போராட ஆரம்பித்தால், அவர்கள் தூங்க கூட செய்யாமல் போராடிக்கொண்டு thaan இருக்கனும். இதெல்லாம் practical ஆ possible ஆ?”
நியாயமான கேள்வி! நடைமுறையில் சாத்தியமில்லாதது.
இவ்வளவு Practical ஆ பேசுற நீங்க.. இதே கோவிலுக்குப் பெண்களுக்கு அனுமதியுள்ள காலங்களில் செல்லாம் என்ற நிலையை Practical ன்னு ஏன் எடுத்துக்க முடியலை?
முழுவதும் மறுக்கப்பட்டால் தான் நீங்க கேட்பது சரி. கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதிக்கு என்ன பிரச்னை?
மேலே ஏற்கனவே கூறியபடி, கேரளாவில் சில கோவில்களில் ஆண்கள் வேட்டி மட்டுமே அணிந்து செல்ல வேண்டும், மேல் சட்டை அணியக் கூடாது. பெண்கள் புடவை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும்.
அங்கே சென்று, ‘ஜீன்ஸ் அணிந்து வருவது என்னுடைய உரிமை, எந்த உடையை அணிய வேண்டும் என்று நான் தான் தீர்மானிப்பேன்’ என்று வசனம் பேசினால் எப்படி?
ஜீன்ஸ் அணியக் கூடாது என்று கடவுள் சொன்னதுக்கு ‘ரெஃபரென்ஸ்’ காட்டுங்க என்றால்.. எங்கே செல்வது!
ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு. பிடித்தால் கட்டுப்பாடை பின்பற்றுங்க, பிடிக்கலைன்னா வராதீங்க. இது எதுவுமே கட்டாயமில்லை, அவரவர் விருப்பம் தான்.
அந்த ரெஹேனா கருப்பு வேட்டியை அரைகுறையாகக் கட்டிக்கொண்டு படு மோசமா போஸ் கொடுத்து இருக்காங்க.. அவருக்கு உரிமை மீட்டு தரப் போராடுறீங்க! சூப்பருங்க
இருமுடிக்குள்ள தேங்காய் இருக்கும்.. இந்தம்மா கொய்யாக்கா கொண்டு போறாங்க. தெரியுமா செல்வன்? இவர்களா உரிமையை நிலைநாட்ட போராடுறாங்க?!
“அவங்களுக்கு அங்கே போக விருப்பம். உரிமை மறுக்கப்பட்டதால், போராடினார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை?”
திரும்பத்திரும்ப சொல்றேன் பெண்கள் உரிமை மறுக்கப்படவில்லை, அவர்களுக்கான காலத்தில் செல்லலாம் என்று கூறுகிறேன். உங்களுக்கு என்ன பிரச்னை?!
//அவங்க எந்த காரணத்துக்கு வேண்டும் என்றாலும் செல்லட்டும்.. அதே போல நானும் என்னோட கருத்தை சொல்வேன்.. சொல்லக்கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாருங்க!//
உங்களுக்கு அவங்கள பத்தி கருத்து சொல்ல உரிமை இருந்தால், எனக்கும் உங்களை பத்தி (இந்த பதிவை பற்றி) கருத்து சொல்ல உரிமை இருக்கு.
//குற்றம் இழைத்தவர்கள் பலர் நீதிமன்றத்தின் மூலமாக நீங்க சொல்ற சட்டப்படி வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களை மக்கள் கடுமையாக விமர்சிப்பதில்லையா..!
நீதிமன்ற உத்தரவுப் படி தானே வெளியே வந்தார்கள்.. மக்கள் ஏன் விமர்சிக்கனும்?!//
மறுபடியும் அதே தவறு. ஒரு குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் வேணும். ஆதாரம் இல்லாமல் யாராலும் நிரூபிக்க முடியாது. குற்றம் இல்லாதவர்கள் என்று எப்படி முடிவு பண்ணினீர்கள்? குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. BTW இது குற்ற சம்பவம் அல்ல. இது உரிமை சம்பத்தப்பட்டது.
//‘இருக்குது’.. நான் இல்லைனு சொல்லவே இல்லையே!//
சபரிமலை போராளிகள் அதைப் பற்றி யோசித்து உள்ளார்களா? என்று கூறியுள்ளீர்கள். அதற்கா நான் சொன்னது. இது அவர்களை வேலையல்ல. அதற்குத்தான், Government போலீஸ் ஸ்டேஷன் வைத்துள்ளது. இது அவர்கள் வேலை.
//இவ்வளவு Practical ஆ பேசுற நீங்க.. இதே கோவிலுக்குப் பெண்களுக்கு அனுமதியுள்ள காலங்களில் செல்லாம் என்ற நிலையை Practical ன்னு ஏன் எடுத்துக்க முடியலை?
முழுவதும் மறுக்கப்பட்டால் தான் நீங்க கேட்பது சரி. கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதிக்கு என்ன பிரச்னை?//
13 முதல் 19 வயதுள்ள பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று படிக்க கூடாது என்று தடை பண்ணினினால் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே மாதிரி தான் இதுவும். அது தான் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி இருக்கிறதே (below 13 & above 19), என்ன பிரச்னை என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
//ஜீன்ஸ் அணியக் கூடாது என்று கடவுள் சொன்னதுக்கு ‘ரெஃபரென்ஸ்’ காட்டுங்க என்றால்.. எங்கே செல்வது!
ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு. பிடித்தால் கட்டுப்பாடை பின்பற்றுங்க, பிடிக்கலைன்னா வராதீங்க. இது எதுவுமே கட்டாயமில்லை, அவரவர் விருப்பம் தான்.//
கரெக்ட். உண்மையான பக்திக்கு உடையை பற்றிய கவலை இல்லை. இருந்தாலும், ஒரு ஒழுக்கத்திற்காக உடை கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். No problem. SCHOOL க்கு எப்படி சீருடை அனைத்து செல்லணுமோ அதே மாதிரி ஒரு சீருடை அணிந்து கோவிலுக்கு செல்லட்டும்.
//திரும்பத்திரும்ப சொல்றேன் பெண்கள் உரிமை மறுக்கப்படவில்லை, அவர்களுக்கான காலத்தில் செல்லலாம் என்று கூறுகிறேன்.//
என்னுடைய ஸ்கூல் உதாரணம் தான் உங்களுடடைய இந்த கேள்விக்கும்.
// உங்களுக்கு என்ன பிரச்னை?!//
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த பதிவு பற்றிய விமர்சனம் மட்டுமே,
//கருணை அவர்களே! உங்களுக்கு ஏதாவது இக்கதையில் புரிந்ததா? //
கதை நன்றாக புரிந்தது ஆனால் நான் சொன்னது கும் இந்தக் கதைக்கும் தான் சம்பந்தம் இல்லை.
//நீங்கள் இதுவரை கருத்து இட்டவை 80% ரஜினியை திட்டித்தான் அதுவும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லாம//
இதுதான் உங்களது அதி புத்திசாலித்தனம்.
நான் இதுவரை ரஜினி பட்டி பேசினதும் இல்லை அவரை திட்டியதும் இல்லை. அவர் மேல் எனக்கு எந்த வெறுப்பும் வெறுப்பும் இல்லை. அவர் வேலை செய்கிறார் சம்பாதிக்கிறார் சாப்பிடுகிறார் என்னைப் போல் அவரும் ஒரு சாதாரண மனிதர் அவ்வளவுதான். அவரைப் பற்றி எந்த விமர்சனமும் எனக்கில்லை.
நான் திட்டுவது எல்லாம் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிற கூமுட்டை களை பற்றி தான்.
“உங்களுக்கு அவங்கள பத்தி கருத்து சொல்ல உரிமை இருந்தால், எனக்கும் உங்களை பத்தி (இந்த பதிவை பற்றி) கருத்து சொல்ல உரிமை இருக்கு.”
தாராளமா சொல்லுங்க… நான் வேண்டாம்னு சொல்லலையே. விமர்சனத்துக்கு பதில் கூறினேன்.
இங்கே யார் வேண்டும் என்றாலும் கருத்து சொல்லலாம். மதிக்கிறேன் அதனால் தான் பதிலும் கொடுக்கிறேன்.
“மறுபடியும் அதே தவறு. ஒரு குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் வேணும். ஆதாரம் இல்லாமல் யாராலும் நிரூபிக்க முடியாது. குற்றம் இல்லாதவர்கள் என்று எப்படி முடிவு பண்ணினீர்கள்? குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. BTW இது குற்ற சம்பவம் அல்ல. இது உரிமை சம்பத்தப்பட்டது.”
மறுபடியும் அதே தவறா 🙂
நான் கூறிய எடுத்துக்காட்டு நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கறீங்களே என்பதற்கு. வழங்கப்படும் தீர்ப்பு அனைத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ஆனால், மதிக்கப்படுகிறது.
அயோத்தி தீர்ப்பு பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால், மதிக்கப்படுகிறது.
“இது அவர்களை வேலையல்ல. அதற்குத்தான், Government போலீஸ் ஸ்டேஷன் வைத்துள்ளது. இது அவர்கள் வேலை.”
சபரிமலைல ‘மட்டும்’ தான் இவங்க உரிமை இருக்குனு எங்காவது கூறி இருக்காங்களா? கொஞ்சம் ரெஃபரன்ஸ் காட்டுங்களேன்.
மற்ற கோவிலுக்குச் சென்றால், ஐயப்பன் கண்டுக்க மாட்டாரா?!
இக்கோவிலுக்கு வந்தே ஆக வேண்டும் என்றால், கட்டுப்பாடை மதித்து வாங்க. அப்பகூட வரவேண்டாம்னு சொல்லலையே!
“13 முதல் 19 வயதுள்ள பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று படிக்க கூடாது என்று தடை பண்ணினினால் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே மாதிரி தான் இதுவும். அது தான் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி இருக்கிறதே (below 13 & above 19), என்ன பிரச்னை என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”
கோவிலுக்கு போவதையும் பள்ளிக்கு போவதையும் ஒப்பீடு செய்கிறீர்களே! எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?!
கோவிலுக்கு ஒருவர் செல்லவில்லை என்றால் (அதுவும் குறிப்பிட்ட கோவில் மட்டுமே) இழப்பது என்ன?
கோவிலுக்கு போகாம புறக்கணித்தால் ஒன்றும் குடி முழுகி போகப்போவதில்லை ஆனால், பள்ளிக்கு செல்லாமல் இருந்தால்..!
ஒப்பீட்டிலும் ஒரு நியாயம் வேண்டாமா!
“என்னுடைய ஸ்கூல் உதாரணம் தான் உங்களுடடைய இந்த கேள்விக்கும்.”
பள்ளி எடுத்துக்காட்டுக்கு நான் கூறிய பதில் தான் இதற்கும்.
“எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த பதிவு பற்றிய விமர்சனம் மட்டுமே”
இதற்கு ஏற்கனவே பின்வரும் பதிலை கொடுத்து விட்டேன்.
விமர்சனம் வைங்க.. பதில் சொல்கிறேன். அதை விட்டுட்டு கேள்வி கேட்க நீங்க யாருன்னா..? அவர்களுக்கு போராட எவ்வளவு உரிமையுள்ளதோ அதை நியாயமான முறையில் எதிர்க்க எனக்கு முழு உரிமையுள்ளது.
@கருணை “கதை நன்றாக புரிந்தது ஆனால் நான் சொன்னது கும் இந்தக் கதைக்கும் தான் சம்பந்தம் இல்லை.”
கட்டுரைக்குச் சம்பந்தம் இல்லாம கருத்து போடுற கருணைக்கே சம்பந்தம் இல்லையா 🙂 🙂
“நான் இதுவரை ரஜினி பட்டி பேசினதும் இல்லை அவரை திட்டியதும் இல்லை. அவர் மேல் எனக்கு எந்த வெறுப்பும் வெறுப்பும் இல்லை. ”
அப்புறம் ஏங்க அவரைப்பற்றியே பேசிட்டு புலம்பிட்டு இருக்கீங்க. பேச எவ்வளவோ இருக்கே!
எவ்வளவோ நல்ல விஷயங்கள் எழுதறேன் ஆனால், நீங்க சக்தியை வீணடிப்பது ரஜினி விஷயத்தில் தானே!
“நான் திட்டுவது எல்லாம் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிற கூமுட்டை களை பற்றி தான்.”
இந்த கூமுட்டைகளை திட்டுற நேரத்தை வேற நல்ல வழியில் செலவழிக்கலாமே! எதற்கு கூமுட்டை தனமா இதை பேசிட்டு புலம்பிட்டு இருக்கணும்.
நல்லதை படிக்க பேச உங்கள் நேரத்தை செலவிடலாமே!
//கோவிலுக்கு ஒருவர் செல்லவில்லை என்றால் (அதுவும் குறிப்பிட்ட கோவில் மட்டுமே) இழப்பது என்ன?
கோவிலுக்கு போகாம புறக்கணித்தால் ஒன்றும் குடி முழுகி போகப்போவதில்லை ஆனால், பள்ளிக்கு செல்லாமல் இருந்தால்..!.
ஒப்பீட்டிலும் ஒரு நியாயம் வேண்டாமா//
[“கோவிலுக்கு ஒருவர் செல்லவில்லை என்றால் (அதுவும் குறிப்பிட்ட கோவில் மட்டுமே) இழப்பது என்ன? கோவிலுக்கு போகாம புறக்கணித்தால் ஒன்றும் குடி முழுகி போகப்போவதில்லை”]
இதையே, சபரிமலை செல்கிற வயோதிக பெண்களுக்கும் சிறுமிகளுக்கும், ஏன், ஆண்களுக்கும் கூட கேட்கலாம்? இவர்கள் செல்வதற்கு என்ன காரணமோ காரணமோ அதே காரணம் தான் மத்திய வயது பெண்களுக்கும்.
//பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்னா என்னங்க பண்ணுறது?//
எல்லா பெண்களும் தடை செய்யப்பட்டாலும், உங்களது இந்த வாதத்தை வைத்து நியாப்படுத்தலாம், இந்தியா முழுவதும் கோவில்கள் உள்ளதே, இந்த கோவிலுக்கு மட்டும் பெண்கள் ஏன் போக வேண்டும் என்று. நியாப்படுத்துதல் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டால், கொலைகாரன் கூட அவன் ஒரு நியாயத்தை சொல்வான்.
நீங்கள் சொல்கிற பெண்கள் பற்றி எனக்கு தெரியாது. பொதுவாக எல்லா பெண்களும் அங்கெ செல்ல உரிமை உள்ளது என்பதே என் கருத்து.
//கோவிலுக்கு ஒருவர் செல்லவில்லை என்றால் (அதுவும் குறிப்பிட்ட கோவில் மட்டுமே) இழப்பது என்ன?
கோவிலுக்கு போகாம புறக்கணித்தால் ஒன்றும் குடி முழுகி போகப்போவதில்லை ஆனால், பள்ளிக்கு செல்லாமல் இருந்தால்..!.
ஒப்பீட்டிலும் ஒரு நியாயம் வேண்டாமா//
[“கோவிலுக்கு ஒருவர் செல்லவில்லை என்றால் (அதுவும் குறிப்பிட்ட கோவில் மட்டுமே) இழப்பது என்ன? கோவிலுக்கு போகாம புறக்கணித்தால் ஒன்றும் குடி முழுகி போகப்போவதில்லை”]
இதையே, சபரிமலை செல்கிற வயோதிக பெண்களுக்கும் சிறுமிகளுக்கும், ஏன், ஆண்களுக்கும் கூட கேட்கலாம்? இவர்கள் செல்வதற்கு என்ன காரணமோ காரணமோ அதே காரணம் தான் மத்திய வயது பெண்களுக்கும்.
//பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்னா என்னங்க பண்ணுறது?//
எல்லா பெண்களும் தடை செய்யப்பட்டாலும், உங்களது இந்த வாதத்தை வைத்து நியாப்படுத்தலாம், இந்தியா முழுவதும் கோவில்கள் உள்ளதே, இந்த கோவிலுக்கு மட்டும் பெண்கள் ஏன் போக வேண்டும் என்று. நியாப்படுத்துதல் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டால், கொலைகாரன் கூட அவன் ஒரு நியாயத்தை சொல்வான்.
நீங்கள் சொல்கிற பெண்கள் பற்றி எனக்கு தெரியாது. பொதுவாக எல்லா பெண்களும் அங்கெ செல்ல உரிமை உள்ளது என்பதே என் கருத்து.
//முதல் கருத்து 3:17 PM இரண்டாவது கருத்து அதே கட்டுரைக்கு 8:23 PM
செம்ம காண்டுல இருப்பீங்க போல ROFL ? //
ஒரே கட்டுரைக்கு இந்த மாதிரி இரண்டு நேர இடைவெளியில் கருத்து போடுறது உங்க ஊர்ல செம காண்டுல இருக்கிறதா எடுத்துக்குவாங்களா? ROFL ???
‘நீங்கள் தனிப்பட்ட ரீதியில் “தலீவர்” புகழ் பாடி புளங்காகிதம் அடைந்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.’
நீங்கள் ஆட்சேபனை கொண்டாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை.
“மெப்புக்கு பொங்கு பொங்கு என்று “தமிழ் பொங்கல்” பொங்கி விட்டு, ஐந்து கோடி தமிழர்களில் நாட்டை ஆள ஒருவருக்கு கூடவா தகுதி இல்லை என்று ஒரு சிறு ஆதங்கம் கூட இல்லாமல் இப்படி “தலீவருக்கு” காவடி தூக்கும் மனோநிலையை பார்த்து ”
என்னுடைய தமிழ் ஆர்வத்தையும் இதையும் நான் குழப்பிக்கொள்வதில்லை. தமிழ் ஆர்வம் இருப்பதால், உங்க கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை.
முதலில் நடைமுறை எதார்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆதங்கம் வேறு உண்மை நிலை வேறு.
எவரும் எதையும் விருப்பப்படலாம், எதிர்பார்க்கலாம் ஆனால், இருப்பதில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மட்டுமே எங்களுக்கு வாய்ப்புள்ளது. நான் இது வரை பலரை முயற்சித்து விட்டேன் அதாவது வாக்களித்து விட்டேன்.
2021 ல் நான் ரஜினியை தேர்ந்தெடுத்து உள்ளேன் அவ்வளவே!
சரி நீங்களே சொல்லுங்க யாரை தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுங்கள் என்று கூறினால் போதாது, யார் அந்தத் தகுதியான தமிழர் என்பதை அடையாளம் காட்ட வேண்டும்.
“ஒரு சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு பதவிக்கு எப்படி இன்னொரு இனத்தவர் தகுதி உள்ளவராக இருப்பார்?
45 வருடங்களாகத் தமிழகத்தில் வாழ்கிறார், தமிழ் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ் பசங்களுக்கு தன் மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தார். தமிழகத்தின் அடையாளமாக உள்ளார்.
எனக்கு இது தகுதியானதாக உள்ளது. உங்களுக்கு இது தகுதி இல்லையென்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
யார் கூறுவது சரி என்று அளவுகோல் வைக்க முடியாது. அவரவர்க்கு அவரவர் நியாயம்.
எடப்பாடி பழனிச்சாமி கூடச் சுத்தமான தமிழர் தான் ஆனால், அவர் சசிகலா காலில் விழுந்து தானே பதவியைப் பெற்றார். இந்த மானத் தமிழருக்கு என்ன சொல்றீங்க? இவர் தமிழர் தானே.. ஆதரிக்கலாமா?!
நீங்கள் பேசுவதை வைத்து நீங்கள் ஒரு ஈழத்தமிழர் என்று அறிகிறேன். இங்கே உள்ள நிலையைப் பற்றி இங்கு வாழும் எனக்குத் தெரியுமா அல்லது இலங்கையில் உள்ள உங்களுக்குத் தெரியுமா?
“சொந்த இனத்தில் ஒரு தலைவன் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய மானக்கேடு?”
அதற்கு நான் அல்லது ரஜினி காரணமா? ஒரு நல்ல தலைவர் தமிழகத்தில் இருந்து இருந்தால், ரஜினி வர வேண்டிய தேவையே இல்லையே.
“இங்கே ரஜனிகாந்த் வா, அஜித் குமார் வா என்று தன் இனத்தைத் தாழ்த்துவது என்ன வகையான மனநிலை?”
நான் யாரையும் தாழ்த்தவில்லை, தற்போதுள்ளவர்களில் எனக்குத் திருப்தியில்லை என்று கூறுகிறேன்.
“சரி உங்கள் “தலீவர்” ஒரு நடிகர், வேற்று மாநிலத்தவர் என்பதை கூட விட்டு விடுவோம். ஒரு நிறுவனத்திற்கு மேனேஜர் ஆக கூட அதற்கான பயிற்சியும் அனுபவமும் தேவை. ஒரு கட்சியை கூட நடத்தி அனுபவம் இல்லாதவர், எந்த ஒரு சிவில் நிர்வாகத்திலும் பயிற்சி இல்லாதவர் எப்படி ஒரு முதலமைச்சர் ஆக முடியும்?”
அதைப் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை?
ரஜினியை மக்கள் ஏற்றுக்கொண்டால் முதலமைச்சர் ஆகப்போகிறார், ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தோல்வியடைய போகிறார். நான் ரஜினி முதல் ஆவார் என்று எதிர்பார்க்கிறேன் நடக்கவில்லை என்றால் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.
ஆனால், அதைக் காலமும், மக்களும் தீர்மானிக்கட்டும். நீங்களோ நானோ அல்ல.
உங்களைப்போல ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து நான் எதையும் முடிவு செய்வதில்லை. ரஜினியை குறைத்து மதிப்பிடும் உங்களைப் போன்றோருக்கு ரஜினி களத்தில் இறங்கும் போது தெரியும்.
எனக்குக் கிடைக்கும் உறுதியான தகவல்களை வைத்தே முடிவு செய்கிறேன்! இவை நேரடி தகவல்கள். எனவே எனக்கு எந்தக் குழப்பமுமில்லை.
“கிரி, உங்களுக்கும் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்றவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! இதை ஏளனமாகவோ கோபமாகவோ சொல்லவில்லை, மிகுந்த மனவருத்தத்துடன் சொல்கிறேன்!”
நீங்க மனவருத்ததோடு சொல்றீங்களோ, ஏளனமா சொல்றீங்களோ, கோபத்துல சொல்றீங்களோ, கிண்டலா சொல்றீங்களோ அது பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.
விமர்சனத்தை நாகரீகமாக வைக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறேன்.
“எந்த சாமியும் யாரையும் காத்ததாக சரித்திரம் இல்லை.”
கடவுள் நம்பிக்கையில்லாத உங்களுக்கு அப்படி தோன்றுவதில் வியப்பில்லை.
“மனுஷன் தான், தான் படைத்த கடவுளுக்கு போலீஸ் முதல் ராணுவம் வரை போட்டு காவல் காத்து கொண்டிருக்கிறான்.”
மறுக்கவில்லை.
“மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” இது மானமுள்ள தமிழனுக்கு அவ்வை சொன்னது.”
சும்மா மானமுள்ள தமிழன், மானமில்லா தமிழன்னு சீமான் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க.
எங்களுக்கும் தமிழ் உணர்வு உள்ளது, தமிழை, தமிழகத்தை நேசிக்கிறேன். அதனாலே, சிங்கப்பூரில் நல்ல சம்பளத்தில் வேலை இருந்தும் மாற்றல் கேட்டு நான் விரும்பும் தமிழ்நாட்டுக்கு, சென்னைக்கு வந்தேன்.
தமிழ், தமிழன்னு பேசுவதால் உங்களுக்கு மட்டுமே தமிழ் உணர்வு உள்ளது அவை உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
“நம்மை மதிக்காத கடவுளிடம் நாம் போக வேண்டியதில்லை.”
கடவுளே மதிக்கலைனு சொல்றீங்க.. அப்புறம் கடவுள் எதற்குச் சொல்லணும்? எப்படி சொல்லும்?
@கருணை (aka) செல்வன்
ஆக, கருணை என்ற பெயரில் ரஜினி ரசிகர்களைத் திட்டிக் கருத்துகள், செல்வன் என்ற பெயரில் இன்னொரு அவதாரம்.
ரஜினி ரசிகனான நான் நாகரீகமான முறையில் விவாதம் செய்கிறேன் ஆனால், ரஜினி ரசிகர் அல்லாத நீங்கள் தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
இயல்பாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு பதட்டத்தில் கருணை, செல்வன் இருவருமே (ஒரே IP) ஒரே நபர் என்று காட்டி விட்டீர்களே!
ஒரே அடையாளத்தில் கருத்தைக் கூறினால், யார் என்ன செய்யப்போகிறார்கள்?
என்னுடைய பரிந்துரை, செல்வன் கேரக்டரையே தொடர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால், கருணை பேசுவதை விடச் செல்வன் பேசுவது நேர்மையான விவாதமாக உள்ளது.
ஸ்பிலிட் பர்சனாலிட்டியா இருக்கீங்க!
எந்தப்பெயரில் இருந்தாலும், முதலில் விவாதத்தில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் பின்னர் ரஜினி ரசிகனுக்கு அறிவுரை கூறலாம்.
BTW There is no low class and high class discussion Mr Karunai. How you are behaving with others and attitude are matter.
//ஒரே அடையாளத்தில் கருத்தைக் கூறினால், யார் என்ன செய்யப்போகிறார்கள்?//
யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. எனக்கு பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன்.
கிரி, இது open comment box . யார் வேண்டுமானாலும் comment போடலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அடைத்து விடுங்கள்.
//ஸ்பிலிட் பர்சனாலிட்டியா இருக்கீங்க!//
ஆமாம். கண்டிப்பாக. எல்லோரிடமும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது. பசுவிடம் நடந்துகொள்கிற மாதிரி, எருமையிடம் நடந்து கொள்ளக்கூடாது என்கிறது தான் என் பாலிசி.
//எந்தப்பெயரில் இருந்தாலும், முதலில் விவாதத்தில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் பின்னர் ரஜினி ரசிகனுக்கு அறிவுரை கூறலாம்.//
நான் யாருக்கும் அறிவுரை கூற விரும்பவில்லை. நீங்கள் ஒரு ரசிகனாக நடந்துகொளவதை விமர்சிக்க எனக்கு ஜாலி ஆக இருக்கிறது. அதனால் செய்கிறேன். நீங்கள் தனிப்பட்ட முறையில் நீங்கள் ஒரு ரசிகனாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதை பொதுவாக இணையத்தில் பதிவிடுவதால் தான் இந்த விமர்சனம்.
//BTW There is no low class and high class discussion Mr Karunai. //
Yes it is. This is my maximum etiquette for ரசிக குஞ்சுகள். Be happy that i didn’t derogate below this.
If you are a fan of Gandhi, Netaji, Vallabhai patel, Bagat singh Vivekanadar, or atleast our contemporary Modi etc, then my respect for you will be very high at different level. You are a fan of an actor. I will comment like this only. I didn’t regret. If you don’t like, you have all the right to moderate / delete my comments or close the comment section.