திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி சமீபத்தில் பேசிய மேடைப் பேச்சு சர்ச்சையானது.
‘பட்டியலின மக்கள் நீதிபதியானது திமுக போட்ட பிச்சை, ஊடகங்கள் மும்பை விபச்சார விடுதிகள் போலச் செயல்படுகிறது, H ராஜா பார்ப்பன நாய்‘ என்று பேசி இருந்தார்.
இவர் பேசிய சமயத்தில் எந்த ஊடகத்திலும் இது பற்றிப் பேசப்படவில்லை, யாருமே இதைப் பொருட்டாகக் குறிப்பிடவில்லை ஆனால், யாரோ இவர் பேசிய காணொளியைச் சமூகத்தளத்தில் போட.. காட்டுத்தீ போலப் பற்றிக்கொண்டது.
இதன் பிறகே ஊடகங்கள் தற்போது தான் தெரிந்தது போல ஒவ்வொருவராக ‘ஓஹோ.. அப்படியா?‘ என்று தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இருந்தார்கள்.
ரத்தமும் தக்காளி சட்டினியும்
ஆர் எஸ் பாரதி பேசியது அநாகரிகமான பேச்சு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
விமான நிலையத்தில் ரஜினியை வேண்டும் என்றே எரிச்சலூட்டும்படி கேள்வி கேட்டு அவரை ஆத்திரப்படுத்தினார்கள்.
அவரும் கோபத்தில் ‘ஹே.. அடுத்தது என்ன?‘ என்று கேள்வி கேட்க, உடனே மொத்த தமிழ் ஊடகமும், ஊடகவியலாளர்களும் ரஜினி மீது பாய்ந்து குதறினார்கள்.
ரஜினி பற்றிய செய்தி என்றால், தூங்காமல் அதிகாலையிலும் ரஜினியைத் திட்டி ஊடகவியலாளர்கள் ட்விட்டரில் கருத்திடுவார்கள்.
ஆனால், அதே திமுக பற்றிய சர்ச்சைக்குக் கேள்வி கேட்டால் ‘எனக்கு வேலை பளு அதிகம், பூட்டை ஆட்டாதீங்க‘ என்பார்கள்.
சொல்லி வைத்த மாதிரி பெரும்பாலான ஊடகவியலாளலர்கள் கொஞ்சம் கூடச் சூடு சொரணை வெட்கம் மானம் எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆர் எஸ் பாரதி பேசியதை ‘கருத்துரிமை‘ என்று கூறி ஊடகவியலாளர் ஒருவர் அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.
இவர்களுக்குத் தேவையானவர்கள் இவர்களையே காறித்துப்பினாலும் அது ஒன்றுமில்லை ஆனால், அடுத்தவன் என்ன பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. என்ன பிழைப்போ!
90% ஊடகங்கள் திமுக ஆதரவு ஊடகங்கள் தான். அப்படி இருக்கையிலேயே ஆர் எஸ் பாரதி இப்படிச் சொல்றாரே.. ஒருவேளை மாறி இருந்தால், இன்னும் என்னென்ன சொல்லி இருப்பாருன்னு யோசித்துப்பார்த்தேன்… யம்மாடி 🙂 .
யார் பார்க்கிறார்கள்?
ஊடகங்களில் பாலிமர் மட்டுமே ஓரளவு நியாயமாக நடந்து வருகிறது என்பது விமர்சனங்களைப் பார்த்தால் புரிகிறது. இதனால் தான் என்னவோ, தொடர்ந்து பல காலமாகச் செய்தி TRP யில் இவர்களே முன்னணியில் இருக்கிறார்கள்.
விவாதம் என்ற பெயரில் வன்மத்தை வெளிப்படுத்தும் விவாத மேடை போலப் பாலிமர் தொலைக்காட்சியில் இல்லை என்று நினைக்கிறேன், நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை.
இப்படி அடுத்தவனைத் திட்டி விவாதம் செய்யும் தொலைக்காட்சிகளை மக்கள் ஆதரிப்பதில்லை என்று வெளிப்படையாகத் தெரிகிறது.
பின் ஏன் அதையே திரும்பச் செய்துகொண்டுள்ளார்கள்?
ஒரு பேச்சுக்கு ரஜினி மட்டும் இதில் ஏதாவது ஒன்றையாவது கூறி இருக்கட்டுமே…! இந்நேரம் பொங்கி 24/7 கதறி, வித விதமான தலைப்புகளில் கிழித்துத் தொங்க விட்டு இருப்பார்கள்.
இவ்வளவு களேபரம் நடந்துள்ளது, இவர்கள் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் ஆனால், தற்போதும் தந்தி டிவி அதைப் பற்றிப் பேசாமல் ‘ரஜினி மக்கள் மன்றம் 12 மாதங்களாகச் செயல்படாமல் உள்ளது‘ என்ற வடிகட்டின பொய்யை விவாதம் செய்து கொண்டுள்ளார்கள்.
இவர்களை ஆர் ஆஸ் பாரதி சொன்னது.. எதுக்கு.. விடுங்க. அதை நம்ம வாயால சொல்லிட்டு.
திருமாவளவன்
திருமாவளவன் இன்று வரை வாயே திறக்கவில்லை. இதே வேறு யாராவது கூறி இருந்தால், இப்படித்தான் திருமாவளவன் அமைதியாக இருப்பாரா?!
பிச்சைக்காரன் என்றே நேரடியாகக் கூறி இருக்கிறார் ஆனால், அமைதியாக இருக்கிறார்!
கண்டனம் தெரிவித்த சிலரும் வலிக்கும் என்பது போலத் தடவிக் கொடுத்து வருகிறார்கள்.
இணைய ஊடகங்கள்
முரசொலியாகவே மாறி விட்ட விகடன், ஒரு படி மேலே போய் ஆர் எஸ் பாரதி கூறியதை ‘ஜெயலலிதாவையே உள்ளே வைச்சவன் நான்… எதுக்கும் பயப்படமாட்டேன்‘ என்று கெத்தாகத் தலைப்பு வைத்துள்ளது.
ஒரு காலத்தில் எப்படி சுயமரியாதையோடு இருந்த விகடன்.. தற்போது இப்படியுள்ளது.
எதுக்கு இப்படியொரு தலைப்பு உங்க தளத்தில் என்று சிலர் யோசித்து இருப்பீங்க.
திமுக ஆதரவு தளமான ‘ஒன் இந்தியா’ திமுக ஆதரவு செய்தி என்றால், இப்படித்தான் தலைப்பு வைப்பார்கள். இன்னமும் வைக்கிறார்களா என்று தெரியாது.
மார்ச் 2020 வந்தால் நான் இந்தத் தளம் சென்று இரண்டு வருடங்கள் முடிகிறது.
எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சென்ற பதிவில் அமேசான் பே குறித்து எழுதி இருந்தீங்க. இப்போது தொலைக்காட்சி பார்வையாளர்கள் குறித்து சொல்லி இருக்கீங்க. இதன் இணைப்பை கொடுத்து விடுங்க. உள்ளே சென்று வேறு சில ஆராய்ச்சி செய்ய விரும்புவர்களுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?
அப்புறம் உங்கள் பதிவுக்கு வரும் விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் அடுத்த நாளே கொடுங்க. சூடு ஆறிப்போனால் அது நன்றாக இருக்காது.
ஜோதிஜி இணையத்தில் இதை எளிதாகத் தேடி எடுக்கலாம், இருப்பினும் நீங்கள் கூறியதை கவனத்தில் வைத்துக்கொள்கிறேன்.
நீங்க கேட்ட சுட்டி – https://www.barcindia.co.in/statistic.aspx
நீங்கள் கூறிய பதில் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்குப் பதில் அளிப்பதே வெகு சிலர் தான்.. நிறைய வந்தால், உடனுக்குடன் பதில் அளிக்கலாம் 🙂 . தாமதமாக இருந்தாலும், நிச்சயம் பதில் அளிப்பேன்.
அதோடு நான் எழுதுவது ஒரு Passion காகத்தான். எனவே, உடனுக்குடன் என்பது இயலாத காரியம். இருப்பினும் சுவாரசியத்தை பொறுத்து சில நேரங்களில் உடனுக்குடன் பதில் அளிப்பேன்.
சர்ச்சையான விவாதங்களில் தாமதம் செய்து பதில் அளிப்பேன். காரணம், உடனே பதில் அளித்தால் கோபமான மனநிலையில் இருந்தால் உணர்ச்சிகரமாகப் பதில் அளிப்பார்கள். அது முடிவற்ற விவாதமாக இருக்கும்.
அதே கொஞ்சம் தள்ளிப்போகும் போது கொஞ்சம் நிதானமாக யோசித்து பதில் அளிப்பார்கள். இதுவும் ஒரு காரணம்.
மற்றபடி கருத்துகளின் முக்கியத்துவத்தை பொறுத்து பதில் அளித்து வருகிறேன்.
எந்தப் பொருட்கள் அதிக நேரம் விளம்பரம் செய்துள்ளார்கள் என்பதனைப் பார்த்தேன். அதிக சுவராசியம். மக்களுக்கு பலன் இல்லாத தேவையில்லாத பொருட்கள் தான் விளம்பர சந்தையில் அதிகம் இடம் பிடித்துள்ளது.