Signal App | தற்காலிக பரபரப்பா? நிரந்தர மிரட்டலா?!

0
signal app

ன் கொள்கைகளை 2021 பிப் 8 க்குள் பயனாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், கணக்கை முடக்கப்போவதாக WhatsApp அறிவித்துள்ள நிலையில் Signal App பிரபலமாகி வருகிறது. Image Credit

Signal App

இலாப நோக்கமற்ற Signal நிறுவனத்தை Moxie Marlinspike & Brian Acton உருவாக்கினார்கள். WhatsApp உருவாக்கியவர்களில் ஒருவர் Brian Acton.

Signal நிறுவனம் முன்பே துவங்கப்பட்டாலும், பலருக்குத் தெரியவில்லை. இதன் பாதுகாப்பு அம்சம் உணர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் WhatsApp தனது கொள்கையை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் வேறு Messenger செயலிக்கு (App) மாற முயற்சித்தார்கள்.

உலகின் தற்போதைய (ஜன 2021) முதல் பணக்காரரான Elon Musk போட்ட Use Signal என்ற ட்வீட் பெரும் அதிர்வலைகளை உலகம் முழுக்க ஏற்படுத்தியது.

ஏற்கனவே, பயனாளர் தகவல்களை ஃபேஸ்புக் விற்றதில் ஏற்பட்ட சர்ச்சையில் கடுப்பாகி, பல மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட Space X ஃபேஸ்புக் பக்கத்தை Elon Musk நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Elon Musk ட்வீட்டுக்குப் பிறகே பலரும் Signal App இருப்பதையே அறிந்தார்கள்.

இதன் பிறகு அனைவரும் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்ய ஆரம்பிக்க, திடீர் கூட்டத்தால், Signal App திணறி OTP கிடைப்பதில் தாமதமானது.

Signal பயன்படுத்துவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து, இந்தியா உட்படச் சில நாடுகளில் Google Play Store, Apple Store ல் முதல் இடத்துக்கு வந்து விட்டது.

WhatsApp ல் என்ன பிரச்சனை?

WhatsApp ல் நடக்கப்போவது உலகில் நடக்காத ஒன்று இல்லை. ஏற்கனவே, அனைத்து நிறுவனங்களும் செய்துகொண்டு இருக்கும் தகவல் திருட்டு தான்.

பிப் 8, 2021 க்கு பிறகு WhatsApp ல் பயனர்கள் தாங்கள் விவாதிப்பது தொடர்பான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் வரும்.

இதோடு மேலும் தகவல்களுக்கு உங்கள் தகவல்களை (IP Address, Mail, Transaction Data, Mobile Device information) ஃபேஸ்புக் பயன்படுத்திக்கொள்ளும்.

இதை ஏற்கனவே, கூகுள் செய்துகொண்டு தான் உள்ளது, வேண்டாம் என்று கூற வாய்ப்பையும் தந்துள்ளது ஆனால், WhatsApp ல் அப்படியில்லை.

ஏற்றுக்கொள் அல்லது வெளியேறு‘ என்று முகத்தில் அடித்தால் போல் கூறுகிறது.

கூகுள் தன் நிறுவன சேவைகளை மேம்படுத்தப் (மட்டுமே) பயனர் தகவல்களைப் பலகாலமாகப்  பயன்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் மற்றவர்களுக்குப் பணத்துக்கு பயனர் தகவல்களை விற்று, சர்ச்சையாகி நீதிமன்றம் வரை சென்று அசிங்கப்பட்டது.

இதுவே கூகுளுக்கும் ஃபேஸ்புக்குக்கும் உள்ள வித்யாசம். மற்றபடி இரு நிறுவனங்களுமே பயனர் விவரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

Signal App எப்படியுள்ளது?

பயனர் தகவல் (User Detail) என்று Signal பெறுவது மொபைல் எண் மட்டுமே!

வடிவமைப்பில் கிட்டத்தட்ட WhatsApp போலவே உள்ளது, பெரிய வித்யாசம் இல்லை.

எனவே, இரண்டையும் ஒப்பிடுவதை விட, WhatsApp ல் இருக்கும் வசதி, இதில் என்னென்ன இல்லையென்று பார்ப்போம்.

  • பலரும் விரும்பும் Sticker வசதி இதில் WhatsApp போல ரசிக்கும்படியில்லை ஆனால், எளிதாக WhatsApp போல Signal நினைத்தால் மாற்ற முடியும்.
  • Status வசதியில்லை. இதற்காகவே WhatsApp பயன்படுத்துபவர்கள் உள்ளார்கள். இவ்வகைப் பயனாளர்கள் அவ்வளவு விரைவில் மாற மாட்டார்கள்.
  • Last seen & Online வசதியில்லை.
  • Backup எடுக்கும் முறை எளிதாக இல்லை.
  • PIN கட்டாயமாக உள்ளது. ஒவ்வொருமுறையும் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இல்லை.
  • WhatsApp அனைத்து தரப்பினரிடையே செல்லக் காரணமே அதன் எளிமை தான். Signal கொஞ்சம் Technical ஆக உள்ளது.

இவை கூட, பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே!

Signal வெற்றிபெறுமா?

ஃபேஸ்புக் போட்டியாகக் கூகுள்+ வந்த போது, இதே போலப் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் இதற்கு மாறுவார்கள் என்று கருதப்பட்டது ஆனால், நடக்கவில்லை.

இறுதியில் இப்படியொரு சேவை இருக்கிறது என்று பலருக்கு தெரியும் முன்னரே கூகுள்+ க்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டது.

ஆனால், Signal பிரச்சனையில் Privacy என்ற விஷயம் கூடுதலாக இருப்பதால், கூடுதல் ஆதரவு இருக்க வாய்ப்புண்டு.

மேற்குறிப்பிட்டபடி, ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். அதைக் கொண்டு வராமல் அனைவரையும் கவர்வது எளிதல்ல.

பெரும்பாலானவர்கள் WhatsApp ல் இருப்பதால், புதிய செயலிக்கு மாறி அனுப்புவது சிரமம். இதற்காகவே WhatsApp ல் பலர் தொடர்வார்கள்.

இறுதியாக, பில்லியன் கணக்கில் பயனாளர்களை வைத்துள்ள WhatsApp யை முந்துவது எளிதல்ல. இந்தியாவில் மட்டுமே 400 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.

Signal தற்காலிக பரபரப்பா? நிரந்தர மாற்றமா?! என்பதை வரும் காலம் கூறும்.

பிற்சேர்க்கை

எதிர்ப்புகளால் பிப் 8 என்று இருந்ததை, மே மாதத்துக்குத் தள்ளி வைத்து விட்டது.

பயன்படுத்த விரும்புபவர்கள் –> https://signal.org/install

தொடர்புடைய கட்டுரைகள்

ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா?

கூகுள் Vs ஃபேஸ்புக்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!