இந்தியாவும் உலக நாடுகளும்

4
இந்தியாவும் உலக நாடுகளும்

ஷ்யா உக்ரைன் போர் உலகநாடுகளைப் பெருமளவில் பாதித்துள்ளது. Image Credit

உலகமயமாக்கலால் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டைச் சார்ந்து இருப்பதால், ஒரு நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு மற்ற நாடுகளையும் பாதிக்கிறது.

இந்தியா மீதான விமர்சனம்

எப்படி மற்ற நாடுகளைப் போர் காரணமாகப் பணவீக்கம் பாதித்துள்ளதோ அதே போல இந்தியாவையும் பணவீக்கம் பாதித்துள்ளது.

இதற்குக் காரணம் அனைவருக்கும் தெரிந்த கச்சா எண்ணெய் விலையுயர்வு.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மற்ற பொருட்களின் விலையும் உயர்கிறது.

ஏன்?

பொருட்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல, மக்கள் இடம்பெயர வாகனம் அவசியம். அந்த வாகனத்துக்கு எரிபொருள் அவசியம்.

எனவே, எரிபொருள் விலை உயரும் போது தானாகவே அது சார்ந்த அனைத்து மூலப்பொருட்கள் விலையும் உயர்கிறது.

இவ்வாறு மூலப்பொருட்களின் விலை உயரும் போது நாம் வாங்கும் பொருட்களின் விலையும் உயர்கிறது. இது நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.

10 ரூபாய்க்குக் கிடைத்துக்கொண்டு இருந்த பொருள் 13 ருபாய் ஆகிறது. இது போல ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயரும் போது பணவீக்கம் ஏற்படுகிறது.

இந்நிலை இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கும் பிரச்சனை.

அமெரிக்கா இதுவரை இல்லாத பணவீக்கத்தினை எதிர்கொண்டு வருகிறது. இங்கிலாந்தும் பல்வேறு விலை உயர்வை எதிர்கொண்டு வருகிறது.

வல்லரசுகளே திணறும் போது ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் போன்ற சரியாகத் திட்டமிடாத நாடுகளின் நிலை மிகப்பரிதாபமாகி வருகிறது.

இந்தியாவிலும் பண வீக்கமுள்ளது ஆனால், சமாளிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது.

போர் ஏன் முடிவுறவில்லை?!

அமெரிக்கா, இங்கிலாந்து உட்படப் பல்வேறு ஐரோப்பா நாடுகளுக்கு ரஷ்யாவை பிடிக்காது. எனவே, இவர்கள் அனைவரும் உக்ரைனுக்கு ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

எனவே, போர் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா 1 பில்லியன் மதிப்புடைய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியது.

இவர்கள் அக்கறை உக்ரைன் மீதல்ல, மாறாக ரஷ்யா மீதான காண்டு.

வல்லரசுகள் மற்றும் ஐரோப்பா நாடுகள் உட்பட அனைவரும் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ஆனால், ரஷ்யாக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று தனது மக்களை வதைத்து வருகின்றன.

இவ்வளவு பிரச்சனைகளையும் செய்து, ஆயுதங்களையும் வழங்கிக்கொண்டு ரஷ்யாவிடம் எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொண்டு உள்ளார்கள்.

விரைவில் இவற்றை முற்றாக நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்கள்.

இவர்கள் 50% க்கு மேல் ரஷ்யாவிடம் வாங்கிக்கொண்டு இந்தியா வாங்கிய 5% எரிபொருளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது தான் ஆகப்பெரிய கொடுமை.

அமெரிக்கா இந்தியாவை எச்சரித்ததற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்த பிறகு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகள் வாயை மூடிக்கொண்டன.

முன்பு இந்தியாவை மிரட்டிக்கொண்டு இருந்த அமெரிக்கா தற்போது வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு வந்ததே இந்தியாவின் வளர்ச்சி.

உலக நாடுகளைப் போல ஈகோக்காக, மற்ற நாடுகளைத் திருப்தி செய்ய ரஷ்யாவை இந்தியா புறக்கணித்து இருந்தால் இந்தியாவின் நிலைமை பரிதாபமாகி இருக்கும்.

எரிபொருள் மட்டுமல்ல, நிலக்கரி வாங்குவது, ரூபாயில் பணப்பரிவர்த்தனை செய்வது என்று மிகப்பெரிய திட்டங்களுடன் இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்தியா கொடுத்த பதிலடி

ரஷ்யாவில் எரிபொருள் வாங்குவதற்கு உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த போது,

எங்களால் எங்கள் நாட்டு மக்களை விலை உயர்வால் கஷ்டப்படுத்த முடியாது. நாங்கள் ரஷ்யாவிடம் வாங்குவதை மற்ற நாடுகள் தடுக்க முடியாது

என்று இந்தியா கூறியதோடு நிற்காமல், தள்ளுபடி விலையில் பெறும் எரிபொருள் அளவை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

இவ்வளவையும் இந்தியா செய்து விட்டு மற்ற நாடுகளுடன் நட்புறவிலும் உள்ளதே இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

இதன் காரணமாகவே உலக நாடுகள் பணவீக்கத்தில் மோசமாகச் சிரமப்பட்டாலும், இந்தியா சமாளிக்கக்கூடிய அளவிலேயே பண வீக்கத்தினைச் சந்தித்து வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்காத அமெரிக்கா இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முயல்கின்றன.

இவர்கள் நாட்டிலேயே ஆயிரம் பிரச்சனைகள் ஆனால், இந்தியாக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்!

ஆனால், இவ்விமர்சனங்களை இந்தியா அசால்ட்டாக கையாண்டு வருகிறது.

என்றாவது மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் சம்பந்தம் இல்லாமல் இந்தியா தலையிட்டுப் பார்த்துள்ளீர்களா?! கிடையாது. அது தான் இந்தியாவின் சிறப்பு.

சாதிக்கும் இந்தியா

ஒரு மாதமாக இந்தியாவில் எரிபொருள் அதே விலையில் இருப்பது சாதாரணச் செயல் என்று கருதுகிறீர்களா? கருதினால் உலக அரசியல் படிக்காமல் RSB ஊடக செய்திகளை மட்டும் படித்துக்கொண்டுள்ளீர்கள் என்று பொருள்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையைப் பாராட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒருமுறையல்ல, இருமுறை பாராட்டியது எதேச்சையானது அல்ல.

இங்குள்ள முட்டாள்கள் மோடியை எதிர்ப்பதாக நினைத்து பணவீக்கத்தால் இந்தியாவே அழிந்து விட்டது போலவும், அடுத்த ஸ்ரீலங்காவாக இந்தியா மாறப்போகிறது என்றும் உளறி வருகிறார்கள்.

சொல்லப்போனால் இந்தியா அழிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோடி, பாஜக மீதான வன்மம் சொந்த நாடான இந்தியாவே நாசக்கேடாக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்குச் செல்கிறது.

இந்திய அரசு மற்ற எந்த நாட்டையும் விட மிக மிகத்திறமையாகப் பிரச்சனைகளைக் கையாண்டு வருவதற்கு அனைவரும் நியாயமாகப் பெருமைப்பட வேண்டும்.

ஊழல் இல்லை

தற்போதைய நிலையில் காங் மட்டும் ஆட்சியில் இருந்தால், இந்தியாவின் நிலையைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.

ஊழல் மற்றும் நிர்வாகக் கோளாறுகளால் நிச்சயம் ஸ்ரீலங்கா அடைந்த நிலையை அடைந்து இருக்கலாம் அல்லது அடைந்து விடலாம்.

கொரோனா இழப்புகளையும் திறமையாகக் கையாண்டு, கச்சா எண்ணெய் விலை உயர்வையும் பெரியளவில் சிக்கல் இல்லாமல் இந்தியா கடந்து வருகிறது.

2014 ல் மோடியை நான் ஆதரித்த முழுக்காரணம், காங் அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவையே மற்றபடி பாஜக என்ற கட்சியின் மீதான விருப்பத்தில் அல்ல.

ஆனால், தற்போது மோடி தலைமையில் செய்து வரும் சீர் திருத்தங்கள், பொருளாதார மாற்றங்கள், மின்னணு பரிவர்த்தனைகள் என்று இவர்கள் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது.

மோடி மீது பல குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் அவர் ஆட்சியில் மத்தியில் ஊழல் நடந்தது என்று இதுவரை ஒரு குற்றச்சாட்டைக் கூட முன் வைக்க முடியவில்லையே!

எதிர்ப்பையே 24 மணி நேர அரசியலாக வைத்துள்ளவர்களுக்கு ஒரு ஊழல் கூடவா கடந்த எட்டு வருடங்களில் கிடைக்கவில்லை?!

எதிர்கால இந்தியா

இந்தியாவின் எதிர்காலம் தற்போதைய நிலைக்குப் பிரகாசமாக உள்ளது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏராளமான முன் யோசனையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா தவிர உலகமே பண மதிப்பு வீழ்ச்சியில் திண்டாடி வருகிறது. என்னவோ இந்தியா மட்டும் தான் இப்படியானது போலப் பல குற்றச்சாட்டுகள்.

இதன் பின்னால் உள்ள எந்தப் பிரச்சனையும் உணராமல் ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டதைப் பலரும் விமர்சிப்பது முட்டாள்தனம்.

USD பணப்பரிவர்தனைக்கு இருக்கும் தேவை காரணமாகவே USD மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக்காரணங்களில் ஒன்று கச்சா எண்ணெய்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படும். இதன் பிறகு இயற்கை, மின்சார எரிபொருளே இந்தியாவில் பயன்படுத்தப்படும்

என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதெல்லாம் நடக்கும் போது USD பயன்பாடு, தேவை பெருமளவு குறையும்.

அதோடு அல்லாமல், தற்போது ரூபாயை உலகளவில் பரிவர்த்தனை பணமாக மாற்றும் நடவடிக்கையை RBI முன்னெடுத்துள்ளது. 

இதுவும் ரூபாயின் பண மதிப்பு உயர காரணமாக இருக்கும்.

மத்திய அரசு செய்துகொண்டுள்ள திட்டங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பதால் சுய இன்பம் மட்டுமே அடையலாம் மற்றபடி அதனால் எந்தப் பயனுமில்லை.

Organic வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி Organic வளர்ச்சியாகும். எதிர்காலப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறன.

இதில் பல செயல்பாட்டுக்கு வரும் போது தான் இதன் சிறப்புப் புரியும்.

செயல்படுத்தப்படும் திட்டங்களும் காலதாமதம், சமரசம் இல்லாமல் விரைவாக நடைபெற்று வருகின்றன.

ஆதார், ஜன்தன் வங்கிக்கணக்குகள், டிஜிட்டல் இந்தியா, GST, பண மதிப்பிழப்பு, UPI, தற்சார்பு, DigiLocker என்று ஏராளமான திட்டங்கள் ஆரம்பிக்கபட்ட போது எழுந்த எதிர்ப்புகள் கிண்டல்கள் எத்தனை?!

ஆனால், தற்போது இவை கொடுக்கும் பலன்கள், சேமிக்கப்பட்ட பல லட்சம் கோடி வரிப்பணம், மக்களுக்குக் கிடைத்த வசதிகளைக் கணக்கிட்டால் தலை சுற்றிவிடும்.

எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு.

ஆதார் இணைப்பால் நியாயவிலை (Ration) பயனாளர்களில் 10 லட்சம் போலி பயனாளர்கள் தமிழகத்தில் மட்டும் நீக்கப்பட்டார்கள்.

இதில் இழந்த மக்கள் வரிப் பணத்தை மட்டும் கணக்குப் போட்டுப்பாருங்கள், கிறுகிறுத்து விடும்.

தூங்குறவரை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிப்பவரை எப்படி எழுப்ப முடியும்?!

நிச்சயம் எதிர்காலத்தில் உலக நாடுகளை விட இந்தியா மிகச்சிறந்த நிலையில் இருக்கும். இது நடக்கத்தான் போகிறது.

இந்தியாவில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், அதன் பயன்பாட்டை உணர்ந்ததன் அடிப்படையிலேயே இதைக்கூறுகிறேன்.

முன்பு கிண்டலடிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட திட்டங்களின் பலனைத் தற்போது உணர்வது போல, மற்றவற்றையும் உணரும் காலம் இதே போல வரும்.

தொடர்புடைய கட்டுரை

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. அலுவலகத்தில் என்னுடைய உயரதிகாரி இலங்கையை சேர்ந்தவர் (நான் தமிழ் என்பதால்) ஆரம்பத்தில் எனக்கும் அவருக்கும் 7 1/2 தான் இருப்பினும், போக, போக என் குணம், வேலை திறன் & என்னை பிடித்து போனதால் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை.. தீவிர ராஜபக்சே ஆதரவாளர்.. ஆனால் இன்று முற்றிலும் அவர்களை வெறுத்து விட்டார்.. இவர் ஊரில் நல்ல வசதியாக இருக்கும் பின்னணி கொண்ட குடும்பம்.. ஆனால் அடுத்தது என்ன நடக்குமோ?? என்று தெரியாமல் ஒவ்வொரு நாட்களையும் கடத்தி வருவதாக சொல்லி புலம்புகிறார்..

    வெறும் 3 கோடிக்கு கீழ் இருக்கும் மக்கள் தொகையை வைத்து கொண்டு நாட்டை சரியான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை..இலங்கையில் ராஜ பக்சே குடும்பம் எல்லா இடங்களிலும் ஊழல் செய்து நாட்டை இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..

    இந்தியா போன்று மிக பெரிய தேசத்தை சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது சாதாரண காரியம் அல்ல.. அதுவும் வல்லரசு நாடுகளே திமிரும் இந்த தருணத்தில் நமது நாடு வளர்ந்து கொண்டு இருப்பதை, பார்க்கும் போது உண்மையில் நம் நாட்டின் வளர்ச்சியை கண்டு பிரமிக்கிறேன்.. மத்திய அரசு எடுத்து வரும் பல முயற்சிகளை வரவேற்கிறேன்..

    (2014 ல் மோடியை நான் ஆதரித்த முழுக்காரணம், காங் அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவையே மற்றபடி பாஜக என்ற கட்சியின் மீதான விருப்பத்தில் அல்ல.) கிட்டத்திட்ட பெருன்பான்மை மக்களின் எண்ணமும் இதுவாக தான் இருக்கும் என எண்ணுகிறேன்.. தனிப்பட்ட முறையில் மோடியின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் “ஒரு தலைவனாக” மோடியின் முடிவெடுக்கும் தன்மை எனக்கு பிடிக்கும்.. வேறு மற்ற கட்சிகளில் இவரை போல் முடிவெடுக்க யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. 2014 ல் மோடியை நான் ஆதரித்த முழுக்காரணம், காங் அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவையே மற்றபடி பாஜக என்ற கட்சியின் மீதான விருப்பத்தில் அல்ல. — என்னோட நிலைமையும் இது தான் கிரி.

    ஆனா இப்போ அடுத்த முறை பாஜக வரக்கூடாது என்னும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அதிகப்படியான வரி விதிப்பு , விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மத கலவரங்கள், பிற மாநில அரசை கவிழ்க்கும் அடாவடி செயல் எல்லாம் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்.

  3. @யாசின்

    “இலங்கையில் ராஜ பக்சே குடும்பம் எல்லா இடங்களிலும் ஊழல் செய்து நாட்டை இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..”

    அனைவருமே இணைந்து அளவற்ற ஊழல் செய்தது, அதிகப்படியான இலவசம் ஆகியவை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

    அதோடு முன்னேற்பாடு இல்லாமல் இயற்கை விவசாயத்துக்கு மாறியது, கொரோனாவால் இழந்த சுற்றுலா வருகை என்று பல காரணங்களும்.

    “இந்தியா போன்று மிக பெரிய தேசத்தை சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது சாதாரண காரியம் அல்ல.”

    இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்கள், பிரச்சனைகள், ஜனநாயக நாட்டைக் கொண்டுள்ள இந்தியாவை வழிநடத்துவது எளிதல்ல.

    “தனிப்பட்ட முறையில் மோடியின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் “ஒரு தலைவனாக” மோடியின் முடிவெடுக்கும் தன்மை எனக்கு பிடிக்கும்.”

    நீங்கள் கூறுவது சரி.

    “வேறு மற்ற கட்சிகளில் இவரை போல் முடிவெடுக்க யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்..”

    இவர் போல முடிவெடுக்கும் திறன் மற்ற கட்சிகளில் உள்ளவர்களுக்கு இல்லை அதே போல செயல்படுத்துவது.

    முடிவெடுத்தால் மட்டும் போதாது ஆனால், அதைச் செயல்படுத்த வேண்டும். இதிலேயே மோடி மற்றவர்களிடமிருந்து வித்யாசப்படுகிறார்.

    கடந்த 8 வருடங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளமானது ஆனால், பல ஊடகங்களால், மாநில அரசியலால் மறைக்கப்படுகின்றன.

  4. @payapulla

    “அதிகப்படியான வரி விதிப்பு , விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மத கலவரங்கள், பிற மாநில அரசை கவிழ்க்கும் அடாவடி செயல் எல்லாம் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்.”

    நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிகரமாக முடிவு செய்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

    சில விளக்கங்கள் தருகிறேன், ஏற்புடையதா என்று பாருங்கள்.

    முதலில் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் எந்த மாதிரியான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளன?

    உலகமே கொரோனா பிரச்சனையில் சிக்கி தவித்த போது அதை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்று பாருங்கள்.

    இந்தியாவில் 30, 40 லட்சம் மக்கள் இறப்பார்கள் என்றார்கள். இந்தியா கொரோனாவில் எழ முடியாத அளவுக்கு அழிந்து விடும் என்றார்கள்.

    தடுப்பூசி போட்டு முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும் என்றார்கள்.

    ஆனால், என்ன நடந்தது?

    ரஷ்யா, உக்ரைன் போரால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன.

    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகள் அனைத்தும் கடும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன.

    அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்தியாவிலும் விலையேற்றம் / பணவீக்கம் உள்ளது ஆனால், நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு கிடையாது.

    எப்பவுமே மற்ற நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது தான் சரியான ஒப்பீடு.

    இவற்றோடு ஏராளமான மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    சுயசார்பு உற்பத்தி மூலம் பெரியளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது போல கூற ஏராளமான விஷயங்கள் உள்ளது.

    நீங்கள் கூறும் வரி விதிப்பு ஏற்றுக்கொள்கிறேன். அதிகமே! இது குறித்து நானும் எழுதியுள்ளேன்.

    https://www.giriblog.com/central-bjp-govt-price-controversy/

    இதை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரியைக் குறைத்து அரசாங்கம் ஊழலைச் செய்து, எந்த முன்னோக்கிய திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருந்தால் எவ்வாறு நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?

    ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியைத் தான் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.

    ஒரு சில பிரச்சனைகளை வைத்து முழுவதும் சரியில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை.

    வேலைவாய்ப்பின்மைக்கு கொரோனா, போர் உட்பட பல்வேறு காரணிகள் உள்ளன.

    அதோடு எதிர்க்கட்சிகள் வேலைவாய்ப்பின்மையை பூதாகரமாக காட்டுவதாகவே எண்ணுகிறேன்.

    அவர்கள் கூறும் அளவுக்கு மோசமில்லை, ஊடகங்கள் பெரும்பாலும் அரசுக்கு எதிரானவை என்பதால், அதை மிகைப்படுத்தி காட்டுகிறார்கள்.

    “மதக்கலவரங்கள்”

    2020 வரை மதக்கலவரங்கள் இல்லை, இது குறித்து என் தளத்திலேயே எழுதி இருக்கிறேன்.

    ஆனால், மோடியை எதுவும் செய்ய முடியவில்லை என்ற காரணத்தால் பல இடங்களில் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    மதக்கலவரத்தை மட்டும் பார்க்காதீர்கள், அது எங்கே, எதனால் துவங்கியது என்பதையும் பாருங்கள் காரணம் புரியும்.

    மோடி அரசை எதுவும் செய்ய முடியவில்லை என்ற எரிச்சல் பலரை பல கலவரங்களை ஆரம்பிக்க வைத்துள்ளது ஆனால், அவையும் அவர்களுக்கு backfire ஆகி வருகிறது.

    இது குறித்து இங்கே விளக்குவது சரியானதாக தோன்றவில்லை.

    நீங்கள் கொஞ்சம் இது குறித்து விஷயம் தெரிந்தவருடன் நேரடியாக விவாதித்தால், இதில் உள்ள மறைமுக காரணங்கள் புரியலாம்.

    “பிற மாநில அரசை கவிழ்க்கும் அடாவடி செயல்”

    மஹாராஷ்ராவை வைத்து கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    இதற்கு முழுக்காரணம் உத்தவ் தாக்கரே தான்.

    2019 தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்து பாஜக பெரும்பான்மை பெற்றும், அவர்களை கழட்டி விட்டு காங் அரசுடன் கூட்டணி அமைத்து கொண்டது.

    இது பற்றி நீங்கள் யோசித்தீர்களா? இவர்கள் காங் உடன் கூட்டணி அமைத்து செய்தது என்ன?

    அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு, முட்டுக்கட்டை.

    ஷிண்டே நடந்து கொண்டது உட்கட்சி பூசல். இதற்கு பாஜக என்ன செய்ய முடியும்?

    அவர்கள் சண்டையைப் பாஜக பயன்படுத்திக்கொண்டது அவ்வளவே.

    நான் என் தனிப்பட்ட கருத்துகளை, புரிதலை, விளக்கங்களைக் கூறினாலும் உங்களுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள்.

    அதையே நான் பரிந்துரைப்பேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here