ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா

4
ரொக்கமில்லா பரிவர்த்தனை

மின்னணு பரிவர்த்தனையின் அளவு இந்தியாவில் உயர்ந்துகொண்டே செல்வதால் ரொக்கமில்லா பரிவர்த்தனை தவிர்க்க முடியாத வளர்ச்சியாக மாறி வருகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனை

பாஜக அரசு 2014 ல் ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிட்டல் இந்தியா என்ற மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஆரம்பித்தது ஆனால், ஓரளவே வெற்றிப் பெற்றது மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. Image Credit

இதனால் எதிர்க்கட்சிகள் உட்படப் பலர் கிண்டலடித்து வந்தனர்.

2016 ஏப்ரலில் UPI என்ற Unified Payment Interface என்ற வசதி அறிமுகமாகி, ஆகஸ்டில் வங்கிகள் இதைச் செயலிகளாக அறிமுகப்படுத்தின.

ஆனால், மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதன் பிறகு நவம்பர் 2016 ல் பணமதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது வேறு வழியில்லாத காரணத்தால், மின்னணு பரிவர்த்தனை மக்களிடையே அதிகரித்தன.

UPI எளிமையாக இருந்ததாலும், நேரடியாக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படுவதாலும் மக்களிடையே பிரபலமடையத் துவங்கியது.

இதையொட்டி BHIM செயலியை அரசு அறிமுகப்படுத்தி இருந்தாலும், PhonePe & Google Pay அறிமுகமான பிறகே UPI வளர்ச்சி பெற்றது.

இவர்கள் தரும் சலுகைகளுக்காகத் துவக்கத்தில் பயன்படுத்தத் துவங்கியவர்கள், எளிமை காரணமாகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அபார வளர்ச்சியில் UPI

ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்த UPI பரிவர்த்தனை, 2021 அக்டோபர் மாதம் 100 பில்லியனை கடந்து சாதனை படைத்தது.

உலகளவில் Master, Visa, PayPal போன்றவற்றின் வரிசையில் வந்துள்ளது.

மற்றவை உலகம் முழுக்க நடக்கும் பரிவர்த்தனையாகும் ஆனால், UPI இந்தியாவில் மட்டுமே நடக்கும் பரிவர்த்தனையாகும்.

தற்போது இந்தியாவில் கடனட்டை (கிரெடிட் கார்டு) பயன்பாடு குறைந்து UPI பரிவர்த்தனையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

இதன் எளிமை காரணமாக அனைவரும் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

சிலர் வேறு வழியில்லாததாலும் வாடிக்கைகையாளர் வசதிக்காக வைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை மளிகைக் கடைகளில் மட்டுமே UPI வசதி அதிகமில்லை. மற்றபடி சாலைக்கடைகளில் கூட வந்து விட்டது.

என்றைக்கு மளிகைக்கடைகளில் UPI வசதி பரவலாக வருகிறதோ அன்று பெரும்பாலான இடங்களில் வந்து விட்டதாகக் கருதலாம்.

ஜன்தன் வங்கிக்கணக்குகள்

மத்திய அரசு அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற திட்டத்துக்காக ஜன்தன் என்ற குறைந்தபட்ச இருப்பு இல்லாத வங்கிக்கணக்கை துவங்கியது.

தற்போது வரை 45 கோடிக்கும் அதிகமான வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

துவக்கத்தில் இக்கணக்குகளையும் பலர் கிண்டலடித்தனர் ஆனால், தற்போது இக்கணக்குகள் பெரு வெற்றி பெற்றுள்ளன.

மக்கள் ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

மானியங்கள் இதன் மூலமாகவே செலுத்தப்படுகின்றன.

தற்போது அனைத்து அரசு சேவைகளும் இணையமாக்கப்பட்டு வருவதால், மக்களுக்கும் இதில் பணம் செலுத்துவதே எளிமையாக உள்ளது.

தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது இலஞ்சம், ஊழலுக்கான வாய்ப்புகள் குறைகின்றன.

சுங்கச்சாவடி வசூலை FasTag க்கு கட்டாயமாக்கிய பிறகு மிகப்பெரிய ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை போலிக்கணக்கு காட்டி, வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து காட்டி வந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இணைய வழி பணப்பரிவர்த்தனை

இணையம் வழியே பணப்பரிவர்த்தனை நடக்கும் போது அனைத்துமே கணக்குகளுக்குள் வருகிறது, வரியை ஏமாற்ற முடியாது.

மின்னணு பரிவர்த்தனை எளிதாக இருப்பதால், மக்களும் அதிகளவில் இதைப்பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, நாளுக்குநாள் மின்னணு பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

பாம்பாட்டி நாடு என்று கூறப்பட்ட இந்தியா, தற்போது மின்னணு பரிவர்த்தனையில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

இவையனத்துக்கும் UPI முக்கியக் காரணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு தலைமுறை மட்டுமே காகிதப் பணவர்த்தனையை பயன்படுத்தும். பின்னர் அனைத்துமே மின்னணு பரிவர்த்தனையாகி பணம் அச்சடிப்பதே நிறுத்தப்படும்.

காகிதப் பணத்தைப் பார்க்கும் கடைசித் தலைமுறையாக நாம் இருப்போம் அல்லது அதிகபட்சம் அடுத்தத் தலைமுறை.

UPI பரிவர்த்தனையை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?

தொடர்புடைய கட்டுரைகள்

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

e-Rupi சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. எங்கள் குடியிருப்பில் பால் வழங்குபவர் கூட upi க்கு மாறிவிட்டார்.

  2. UPI செயலிகள் பலநேரங்களில் வேலை செய்வதில்லை.இரண்டு முறைகூட பணம் சென்றுவிடுகிறது.இரண்டு வங்கி கணக்கில் தொலைபேசி எண் கொடுக்கபட்டல் UPI வேலை தசெய்யாது.ன்

  3. ஆமாம்… Paytm மட்டும். BHIM முயற்சித்தேன்…. அமையவில்லை
    விட்டு விட்டேன்

  4. @வடுவூர் குமார்

    நல்ல மாற்றம் 🙂 . இது போல பலர் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    @விஜயகுமார் இதற்கு நீங்கள் என்ன வங்கியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். சில வங்கிகள் சேவை சரியில்லையென்றால், இப்பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

    இதற்கு பெரும்பாலும் UPI செயலிகள் காரணமல்ல.

    இக்கட்டுரை படித்துப்பாருங்கள்.. கூடுதல் புரிதல் கிடைக்கும் https://www.giriblog.com/phonepe-google-pay-paytm-which-is-best-upi/

    @CT ALAGAPPAN Paytm சிறப்பான சேவை. பெட்ரோல் நிலையங்கள், கடைகள் ஆகிய இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறேன்.

    BHIM ஒப்பீட்டளவில் மற்ற செயலிகளை விட குறைவே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!