மோடி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன்! ஏன்?

42
மோடி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன்

ந்தியா முழுக்க தற்போது பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர் என்றால் அது மோடி என்று சந்தேகமில்லாமல் கூறி விடலாம். Image Credit

இவர் பற்றிய பல விஷயங்கள் பலராலும் விவாதிக்கப்படுகிறது. இதில் என் கருத்துகளையும் தெரிவிக்க விருப்பப்படுகிறேன்.

மோடி எதிர்ப்பு

மோடிக்கு இரு பக்கங்களில் எதிர்ப்பு. ஒன்று அரசியல் ரீதியாக இன்னொன்று பொதுமக்களிடம் இருந்து.

அரசியல் ரீதியாக எதிர்ப்பு வர முக்கியக் காரணம், அவரது சமீப வளர்ச்சி அடுத்து முஸ்லிம்கள் வாக்கு வங்கி.

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வரக் காரணம் 2002 ல் நடந்த கலவரம்.

அரசியல் காரணங்கள் நமக்குத் தெரிந்தது தான். பொதுமக்கள் எதிர்க்கக் காரணம் இன்னும் அவர்களால் 2002 ல் நடந்த கலவரத்தை மறக்க முடியாதது தான்.

மோடி என்றாலே 2002 கலவரம் இல்லாமல் எதையும் பேசி விட முடியாது. அமெரிக்கா இன்று வரை இந்தக் காரணத்தை கூறி, மோடிக்கு விசா மறுத்து வருகிறது.

[கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரங்களைப் பற்றி விக்கி பீடியாவில் படித்து எழுதினேன்.

ஆனால், அது தேவையற்ற உணர்ச்சி தூண்டலாக, படிக்கும் இந்து முஸ்லிம் இருவருக்குமே அமையும் என்பதால், எழுதியதை பின் நீக்கி விட்டேன்.

இனி என்ன பண்ணலாம் என்பதைக் கூறவே இந்தக் கட்டுரை எழுத நினைத்தேன். பழைய விசயங்களை கிளறி பிரச்சனையை அதிகப்படுத்துவது என் எண்ணமல்ல.]

இந்தக் கலவரத்திற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையொட்டி, மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு நடந்த 2002 தேர்தலிலும் 2007 மற்றும் 2012 தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

மோடியும் சந்திரபாபு நாயுடும்

மோடியின் வளர்ச்சி / குஜராத் வளர்ச்சி பற்றி ஊடகங்கள் மிகைப்படுத்தி கூறுகின்றனர் என்பது சிலரின் குற்றச்சாட்டு. இதில் நிச்சயம் உண்மை இருக்கலாம்.

அதே போல மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது குஜராத் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

குஜராத் வளர்ச்சி பெறவில்லை என்பதற்கு காரணமாக, நிலவும் தண்ணீர் பிரச்சனை, அடிப்படை தேவைகளுக்கான காத்திருப்பு, தனியார் நிறுவனம் போல எதற்கும் கட்டணம், ஏழைகளுக்கு இலவசம் இல்லை போன்றவை குறையாகக் கூறப்படுகிறது.

குஜராத் 100 % வளர்ச்சி பெற்ற / தன்னிறைவு அடைந்த மாநிலமாக கூற முடியாது என்றாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க வளர்ச்சி / முன்னேற்றம் அடைந்து இருக்கிறது மற்றும் புதிய முயற்சிகளை எடுக்கிறது.

மோடி பற்றிக் கூறுவதை சந்திரபாபு நாயுடுவுடன் ஒப்பிடுகிறார்கள்.

சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தொடர்ந்து இரு முறை [1 Sep 1995 – 14 May 2004] முதலமைச்சர் பதவி வகித்து உள்ளார் மற்றும் அதிக நாட்கள் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து உள்ளார்.

உங்களுக்கு நினைவு இருந்தால், சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த போது நடந்த விஷயங்கள் பற்றி தெரிந்து இருக்கலாம்.

தற்போது மோடி பற்றி அனைவரும் கூறுவது போல, சந்திரபாபு நாயுடு அவருடைய ஆட்சி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்தார்.

ஹைதராபாத்

தற்போது குஜராத் அதிகம் செய்திகளில் அடிபடுவது போல அப்போது ஹைதராபாத் அதிகம் அடிபட்டது. சந்திரபாபு நாயுடு பல புதுமைகளை புகுத்தியதாக கூறப்பட்டது.

ஐடி துறை மிகப் பிரபலமாக இருந்தது.

மிகப்பெரிய நிறுவனங்கள், சாலைகள் என்று செய்திகளில் அடிக்கடி காண முடியும்.

சந்திரபாபு நாயுடு கம்ப்யூட்டரும் கையுமாகத் தான் இருப்பார். ஹைடெக் முதல்வர் என்று அனைவராலும் கூறப்பட்டார்.

இப்படி போய்க் கொண்டு இருந்த போது நடந்த சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடு ராஜசேகர் ரெட்டி [காங்] அவர்களிடம் தோல்வி அடைந்தார்.

இதற்கு முக்கியக் காரணம் இவர் தன்னுடைய கவனம் முழுமையும் ஹைதராபாத்தில் மட்டுமே வைத்து இருந்ததும், விவசாயம் பற்றி கண்டுகொள்ளாமல் போனதும் தான்.

ஆந்திரா, விவசாயிகள் அதிகம் நிறைந்த மாநிலம் ஆனால், இவர்களுக்கு எந்த லாபமும் சந்திரபாபு நாயுடுவால் கிடைக்கவில்லை.

இன்னும் கூறப்போனால் விவசாயிகளைப் பற்றி இவர் கவலை கொண்டதாகவே தெரியவில்லை. இதனால் இவர் தோல்வி அடைந்ததில் எந்த வியப்பும் இல்லை.

மோடியை இவருடன் ஒப்பிடுவது சரியில்லை என்பது என் கருத்து.

மோடி சந்திரபாபு நாயுடு போல குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே பலன் தரும்படி தனது ஆட்சியை நடத்தி இருந்தால், தொடர்ந்து நான்காவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்க முடியாது.

குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டாலும், தமிழகம் போல “இலவச” வாக்குறுதி அளிக்காமலே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாடு நாசமாக போவதற்கு இலவசமும் முக்கியக் காரணம்.

மோடி பலூன்

ஊடகங்களால் ஊதப்படும் மோடி பலூன், எப்போது வேண்டும் என்றாலும் வெடித்து விடும், அவரால் பிரதமராக முடியாது என்று கூறுகிறார்கள்.

மோடி பிரதமர் ஆவார் என்று எவ்வளவு பேர் நினைக்கிறார்களோ அதே போல அவர் ஆக மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது வரை எனக்கு நினைவு தெரிந்த வரையில், பாஜக வின் வாஜ்பாய் ஆட்சியில் தான் அடுத்ததும் வாஜ்பாய் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

“ஜெ” டெல்லியில் டீ பார்ட்டி முடிந்து ஆட்சியை கவிழ்த்த பிறகு நடந்த தேர்தலில், பாஜக வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இவருடைய காலத்தில் “தங்க நாற்கரச் சாலைத் திட்டம்” பிரபலமாக கூறப்பட்டது.

இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் அதிகம் ஊடகங்களில் வெளியிடப்பட்டது [இந்த விளம்பரத்திற்கு அரசாங்கம் செலவழித்த தொகை பலரை கடுப்படித்தது].

வாஜ்பாய் ஆட்சியிலும் பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரஸ் உடன் ஒப்பிடும் போது சிறப்பான ஆட்சியே!

எனவே, அடுத்த 2004 தேர்தலிலும் வாஜ்பாயே பிரதமராக வருவார் என்று அனைவராலும் நம்பப்பட்டது.

ஆனால், மாநிலங்களின் கூட்டணி மற்றும் பல காரணங்களால் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் கொஞ்ச காலம் முன்னர் தான் “ஜெ” கலைஞரை, முன்னாள் முதல்வர் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல், இரவில் கைது செய்து தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி

இதனால் திமுகவிற்கே அதிக சீட்டுகள், குறைந்தது 30 – 35 கிடைக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. இதில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று காங்கிரஸ்க்கு கூடுதல் கூட்டணி பலத்தை தந்தது.

அப்போது, தெரிந்தே கிணற்றில் விழுவது போல பாஜக அதிமுக வுடன் கூட்டணி வைத்தது. இது போல கூட்டணி கட்சிகளின் பலமும் காங்கிரஸ் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

மன்மோகன்

இதன் பிறகு வந்த காங்கிரஸ் மன்மோகன் தலைமையில் வந்தது.

யார் பிரதமராகப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சோனியா, மன்மோகன் அவர்களைப் பிரதமராக அறிவித்தார்.

அப்போது மன்மோகன் மிகச்சிறந்த பொருளாதார மேதை என்று அனைவராலும் அறியப்பட்டு இருந்தார்.

அதோடு அதிகம் படித்த பிரதமர் என்ற அளவிலும் மன்மோகன் அவர்கள் அனைவரிடையேயும் மதிப்பு பெற்று இருந்தார்.

முதல் முறையாக அதிகம் படித்த ஒருவர் இந்திய பிரதமர் ஆனது குறித்து அப்போது பலராலும் சிலாகித்து பேசப்பட்டது.

மன்மோகன் திறமையானவராக இருந்தாலும் ஜெ கட்டுப்பாட்டில் இருந்த பன்னீர் செல்வம் போல சோனியாவிடம் இருக்கிறார்.

இதன் காரணமாக மன்மோகன் நல்லவராக இருந்தும், அவரால் எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை.

வெறும் பொம்மையாக மட்டுமே இருக்கிறார் என்று அனைவராலும் குற்றம் சாட்டப்படுகிறார். இது உண்மையும் கூட.

ஒரு நாட்டை ஆள நல்லவராக இருந்தால் மட்டும் போதாது திறமையானவராகவும் இருக்க வேண்டும் ஆனால், மன்மோகன் அவ்வாறு இல்லை ஆனாலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் மன்மோகன் அவர்களே பிரதமரானார்.

இரு ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றிய துறைகளை எழுதினாலே ஒரு கட்டுரை வந்து விடும்.

எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் அனைத்திலும் ஊழல் புரிந்து ஊழலில் மிகபெரிய சாதனையே செய்து இருக்கிறாஉள்ளார்கள.

எப்போதுமே ஒரு கட்சியே தொடர்ந்து இரு முறை வந்தால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் கூடுதலாக நடக்கும், அது தான் இவர்களது ஆட்சியிலும் நடந்தது.

இந்த எடுத்துக்காட்டு தமிழகத்திற்கும் பொருந்தும்.

மன்மோகன் எதற்குமே அசைந்து கொடுக்காதவராக இருக்கிறார். எதற்கும் ஒரு பொறுப்பான பதிலை இவரிடம் பெற முடியவில்லை.

அவர் முதல் முறை பிரதமராக ஆன போது எவ்வளவு மதிப்பை மக்களிடம் பெற்று இருந்தாரோ அதற்கு நேர் மாறாக தற்போது உள்ளார்.

“பொருளாதார மேதை” என்று கூறப்பட்ட மன்மோகன் ஆட்சியில் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கிடக்கிறது.

விலைவாசி விண்ணை முட்டுகிறது. மக்களின் வருமானம் உயரவில்லை ஆனால், செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில், தான் மத்திய அரசில் அங்கம் வகிக்காவிட்டாலும் சமீப வருடங்களில் குஜராத் முதல்வர் மோடி தன்னுடைய மாநில வளர்ச்சியை திரும்பி பார்க்க வைத்தார்.

குஜராத் ஒரு உதாரண மாநிலமாக கூறப்படுகிறது, அதில் குறைகள் இருந்தாலும், புதிய முயற்சிகளை எடுக்கிறார், ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது.

எனவே, மக்களிடையே குறிப்பாக நகரத்து மக்களிடையே பிரபலம் ஆனார்.

மோடி பிரதமராக தகுதியானவரா?

மோடி பிரதமராக எதிர்ப்பவர்கள், அனைவரும் கூறும் காரணம் 2002 கலவரம் தவிர வேறு இருக்க முடியாது.

இந்தக் கலவரம், இதில் இறந்தவர்கள் பற்றிய நிலை ஆறா வடுவாக பலர் மனதில் பதிந்து விட்டது.

கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எவ்வளவு பாவமோ அதே போல ரயில் எரிப்பில் கொல்லப்பட்ட இந்துக்களும்.

அதிகாரப் பூர்வமாக 58 இந்துக்கள் “கோத்ரா” ரயில் எரிப்பிலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 790 பேரும் இந்துக்கள் 254 பேரும் கொல்லப்பட்டனர். 223 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை.

அதிகாரப்பூர்வமற்ற வகையில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். தகவல் உதவி – http://www.wikipedia.org

பெரும்பான்மையர் உள்ள இடத்தில், சிறுபான்மையினர் இது போல ஒரு ரயில் எரிப்பு சம்பவத்தில் [கொல்லப்பட்டதில் 25 பெண்களும் 15 குழந்தைகளும் அடங்குவர்] ஈடுபட்டால் அது எப்படிப்பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இதை செய்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிறு சாதி பிரச்சனைக்கே தமிழகம் இரு வாரம் பெரும் பிரச்னையை சந்திக்கும் போது, மதக்கலவரம் அதை விட பல மடங்கு மோசமானது.

இதைக் கூற சங்கடமாகத் தான் உள்ளது ஆனால், இது கசப்பான உண்மை.

இந்தக் கலவரத்தை மோடியின் வழிநடத்துதலில் செய்தார்கள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுவதால் மோடி பிரதமராகக் கூடாது என்று கூறுகிறார்கள்.

இந்தக் கலவரம் நடந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதன் பிறகு எந்தக் கலவரமும் குஜராத்தில் இது வரை நடக்கவில்லை.

மூன்று தேர்தல்களும் முடிந்து அதில் மோடியும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விட்டார்.

மோடி பிரதமர் ஆகும் முயற்சியில் இருப்பதால், இனி கலவரம் நடந்தால் அது அவர் பிரதமராவதை தடுக்கும் உள் நோக்குடன் நடத்தப்பட்டால் தான் உண்டு.

தற்போது இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. ஊழல்கள் மலிந்து விட்டன. விலை வாசி கண்டபடி உயர்ந்து விட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஒரு காட்டுப்பாடே இல்லாமல் போய் விட்டது. இது பற்றிக் கூறவே வெறுப்பாக உள்ளது.

இந்தியா சரியான தலைவர் இல்லாததால் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுமோ என்ற நிலையில் தான், மோடி தனது நிர்வாகத் திறனால் நம்பிக்கை அளிக்கிறார்.

பாஜகவில் மோடியைத் தவிர வேறு யார் மீதும் நம்பிக்கையில்லை.

நடைமுறை எதார்த்தம்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மிக மோசமான நிலைக்கு சென்று விடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.

காங்கிரஸ் வரக் கூடாது என்றால் அடுத்த இரு வாய்ப்புகள் பாஜக மற்றும் மூன்றாவது அணி.

பாஜகவில் மோடி வந்தால் மட்டுமே ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது, இது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கு.

அடுத்தது மூன்றாவது அணி. மூன்றாவது அணி வருவதற்கு காங்கிரஸே ஆட்சியில் இருந்து விடலாம்.

மூன்றாவது அணியில் உள்ளவர்கள், யார் பிரதமர் என்ற சண்டையிலும் பதவிக்கு அடித்துக் கொள்வதிலும் இந்தியா நாசக்கேடாக போய் விடும், நிலையற்ற தன்மை இருக்கும்.

இந்தியா நிலை மிக மோசமாகி விடும்.

அரசியலில் மக்களுக்கு இருக்கும் வாய்ப்பு, இருப்பதில் குறைவான ஊழல் செய்பவர் யார் என்று பார்த்து தேர்வு செய்யக் கூடிய நிலையில் தான் உள்ளது.

காங்கிரஸ், குஜராத் கலவரம் பற்றி ஓயாமல் பேசுகிறது ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட சீக்கியர்களை பற்றிப் பேசுவதில்லை.

அத்வானியை திட்டிக்கொண்டு இருந்தவர்கள் மோடி வந்து விடுவாரோ என்ற பயத்தில் தற்போது அத்வானியை ஆதரித்து பேசுகிறார்கள். இது தான் அரசியல்.

ஊழல்

முன்பெல்லாம் 10 கோடி ஊழல் என்றால் அது மிகப்பெரிய விசயமாக இருந்தது. தற்போது கோடி ஊழல் எல்லாம் கவுன்சலரே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

பெரிய தலைவர்கள் ஆயிரம், லட்சம் கோடி என்று உயர்த்தி விட்டார்கள்.

தற்போது ஏதாவது ஒரு அரசியல்வாதி 10 கோடி ஊழல் என்றால் உங்களுக்கு ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா!

ஜெ வின் பழைய வழக்கு கூட 15 – 25 கோடி ஊழலுக்கு ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதை தற்போது பார்த்தால் நமக்கு சிரிப்பாக இருக்கிறது. நம்முடைய மனநிலையை அந்த அளவிற்கு அரசியல்வாதிகள் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.

ஏன் அடுத்த நபரை தேட வேண்டும்?

மோடி தான் பிரதமராக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. மன்மோகன் சிறப்பான ஆட்சி வழங்கி இருந்தால், ஏன் அடுத்த நபரை தேட வேண்டும்? 

நடந்த கலவரம் மன்னிக்க முடியாது. கலவரத்தில் இந்து முஸ்லிம் இருவருக்குமே பங்குண்டு.

இதைப் பற்றிப் பேசினால், அதற்கு முடிவே கிடையாது.

நடந்தது நடந்து விட்டது. இனியும் அதையே பேசிக்கொண்டு இருப்பதில் என்ன பயன்?

இதை எளிதாகக் கூறி விட்டாலும் எதிர்ப்பவர்களுக்கு கடுப்பான வார்த்தையாகத் தான் இருக்க முடியும். புரிந்து கொள்ள முடிகிறது.

காங்கிரசின் மோசமான செயல் திட்டங்களால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

அந்நிய முதலீடு அனுமதியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை, நம் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு காட்டவில்லை.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவில்லை.

மக்கள் வரிப்பணத்தை வரைமுறையே இல்லாமல் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முன்னரே கூறியபடி, மோடி தான் வரவேண்டும் என்றில்லை அவரைப் போல நிர்வாகத்திறன் கொண்ட வேறு ஒருவரை காட்டுங்கள் போதும்.

சுருக்கமாக, காங்கிரஸ் மற்றும் மோடி வேண்டாம் என்பவர்கள் வேறு யாரை பரிந்துரைக்கிறீர்கள்? தெளிவான காரணங்களோடு விளக்குங்கள்.

மோடி பிரதமர் ஆக முடியுமா?

மோடிக்கு அரசியலிலும் பலத்த எதிர்ப்பு உள்ளது, பாஜகவிலேயே அத்வானி உட்பட.

மோடி பிரதமராகக் கூடாது என்று சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக தற்போது நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டார்.

இவர் உண்மையிலேயே கவலைப்பட்டு இருந்தால், 2002 கலவரம் நடந்த போதே கூட்டணியில் இருந்து வெளியே வந்து இருக்க வேண்டும்.

அதன் பிறகாவது வெளியேறி இருக்க வேண்டும் [நிதிஷ்குமார் 2002 ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தவர்].

இது முற்றிலும் வாக்கு வங்கியை மனதில் வைத்தே என்பது தெளிவாகிறது. உண்மையில் மோடியையாவது ஒரு வகையில் நம்பலாம்.

ஆனால், மோடியை விட செக்குலர் வேஷம் போடும் நிதிஷ்குமார் போன்றவர்களே மிக ஆபத்தானவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்.

நிதிஷ்குமார் தற்போதே விலகியது நல்லது. தேர்தல் சமயத்தில் விலகி இருந்தால் இன்னும் கூடுதல் குழப்பங்கள் தான் ஏற்படும்.

அதோடு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால், அதற்குள் பாஜக உட்கட்சி பூசல்களை சரி செய்ய முயற்சி எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இவை எல்லாம் ஒரு யூகம் தான்.

மோடி பிரதமர் வேட்பாளர்

தற்போது நிதிஷ்குமார் விலகியதால் ஏறக்குறைய மோடி பிரதமர் வேட்பாளர் ஆனது போல ஆகி விட்டது அல்லது கடைசி நேர அரசியல்களால் மாற வாய்ப்புள்ளது.

ஒருவேளை மோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அனைவரும் நினைப்பது போல மோடி அவ்வளவு எளிதில் பிரதமர் ஆகி விட முடியாது.

தனித்து பெரும்பான்மை பிடிப்பது என்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம், தற்போதைய நிலைக்கு [June 2013]. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருப்பதால் காட்சிகள் மாறலாம்.

பாஜக தென் இந்தியாவில் கர்நாடகா தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களில் அதிக வாக்கு வங்கியைப் பெறவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் தனித்து நின்றால் ஒரு சீட்டு கூட பெற முடியாது என்பது பாஜகவிற்கே தெரியும்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்து, மிக மோசமான உட்கட்சிப் பூசலால் ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்தது.

[கர்நாடகா] பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு சாதகம் என்றே நினைக்கிறேன்.

காரணம், மக்கள் எப்போதுமே மாற்றி மாற்றி தான் ஓட்டுப் போடுவார்கள். காரணம் நடப்பு ஆட்சியில் உள்ள அரசின் மோசமான செயல்பாடுகளால்.

இதன் காரணமாக தற்போதுள்ள காங்கிரஸ் அரசு எப்படியும் இந்த ஒரு வருடத்தில் சொதப்பும், உதவிக்கு மன்மோகன் உள்ளார்.

எனவே, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டுப் போட வாய்ப்புள்ளது.

மக்களுக்கே உள்ள சாபம், இந்தக் கட்சி இல்லை என்றால் அந்தக் கட்சி, வேறு வாய்ப்புகளே இல்லை. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

ஜெ

தமிழகத்தில் ஜெ ஏற்கனவே அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்கிறேன் என்று கூறி விட்டார். இவ்வாறு கூறினாலும் பாஜகவிற்கே ஆதரவு அளிப்பார்.

ஒருவேளை அதிக இடங்களை தனித்துப் பெற்றால், ஆட்சியில் உள்ளவர்களை மிரட்டலாம் என்ற யோசனையில் இதை செய்து இருக்கலாம்.

ஜெ வை என்றும் நம்ப முடியாது, யாரும் எதிர்பார்க்காமல் காங்கிரஸ்க்கே ஆதரவு அளித்தாலும் வியப்படைய எதுவுமில்லை.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தான் இன்னமும் உள்ளது. பாஜகவிற்கு ஓட்டுப் போட எவரும் யோசிப்பார்கள்.

இன்னும் பாஜக என்பது எதோ வட மாநில கட்சி என்ற அளவிலே தமிழக மக்களின் எண்ணம் உள்ளது, இதற்கு மொழிப் பிரச்சனையும் ஒரு காரணம்.

இதற்கு திராவிட கட்சிகளின் ஆதிக்கமும், பாஜக தன்னுடைய கட்சியை தமிழகத்தில் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்காமையும் ஒரு காரணம்.

சொல்லப்போனால் காங்கிரஸ்க்கு இருக்கும் வாக்கு வங்கியில் பாதி பங்கு கூட பாஜகவிற்கு கிடையாது.

காங்கிரஸ், காந்தி காலத்தில் இருந்தே இருப்பதால் அவர்களுக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது.

தற்போது ஈழத் தமிழர் மற்றும் பல்வேறு காரணங்களால் படு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் நிலை பற்றி எனக்கு ஐடியா இல்லை. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை.

இங்கு மட்டுமில்லை பல இடங்களிலும் கூட்டணியைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞர்களிடையே ஆதரவு

மோடிக்கு இளைஞர்களிடையே ஆதரவு காணப்படுகிறது. ஃபேஸ்புக்கில் அவருக்கு ஆதரவு குவிகிறது ஆனால், இவை எல்லாம் ஓட்டாகப் போவதில்லை.

இங்கு பேசுபவர்கள் மோடியை ஆதரிப்பவர்களில் 80 % பேர் ஓட்டுச் சாவடி பக்கமே வராதவர்கள்.

இருவர் சந்தித்தால் இது பற்றி விவாதிப்பார்களே தவிர, ஓட்டு என்று வந்தால் சோம்பேறித்தனப்பட்டு வாக்குச் சாவடி செல்ல மாட்டார்கள்.

இதற்கு உதாரணம், நகரங்களில் விழும் குறைவான சதவீத ஓட்டுகள்.

இவ்வளவு பேசும் நானே வெளிநாட்டில் தான் இருக்கிறேன், அடுத்த தேர்தலுக்கு என்னால் வாக்களிக்க முடியாது. இது தான் நிதர்சனம்.

“ஒருவேளை” மோடி பிரதமரானால்…

மோடி பிரதமர் ஆனால், எவ்வாறு நடந்து கொள்வார்? சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொள்வாரா? என்ற அச்சம் இருக்கலாம், நியாயமான உணர்வு கூட.

வாஜ்பாய் பிரதமர் ஆன போதும், அனைவரும் இதையே நினைத்தார்கள் ஆனால், அவர் அது போல ஆட்சி நடத்தவில்லை.

வாஜ்பாய் மற்றும் மோடியை ஒப்பிட்டு பேச முடியாது இருந்தாலும் மோடி பிரதமர் ஆனால், நினைத்தபடி எல்லாம் செய்து விட முடியாது.

அது அந்தப் பதவிக்கே உண்டான சிரமங்கள்.

இன்னும் கூறப்போனால் குஜராத்தில் மோடி முதலமைச்சராக எப்படி சுதந்திரமாக செயல்பட்டாரோ அது போல பிரதமராக செயல்பட முடியாது.

கூட்டணி கட்சிகளின் நெருக்கடி, பாஜகவின் கட்டுப்பாடுகள் என்று நடைமுறை சிக்கல்கள் உண்டு.

நினைத்தபடி, குஜராத் போல செய்து விட முடியாது ஆனால், மன்மோகன் போல ஒரு செயல்படாத பொம்மை பிரதமராக இருக்க மாட்டார் என்று நம்பலாம்.

மோடி வந்தால் உடனே இந்தியாவையே புரட்டிப் போட்டு வளம் கொழிக்கும் நாடாக மாற்றி விடுவார் என்று யாரும் நம்பினால் அது அறிவீனம்.

ஆனால், நிச்சயம் மாற்றம் கொண்டு வருவார் என்று நம்பலாம் என்பது என் கருத்து. சரியோ தவறோ ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

எந்த முடிவையும் எடுக்காமல் நடுவில் நின்று கொண்டு இருப்பது எதையும் விட ஆபத்தானது [உருப்படாத மூன்றாவது அணிக்குத் தான் வழி வகுக்கும்].

மேற்கூறிய காரணங்களால், தற்போதைய நிலையில் மோடியைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை அளிக்கவில்லை என்பதால், மோடி பிரதமர் ஆவதை நான் ஆதரிக்கிறேன்.

42 COMMENTS

 1. மோடி ஒருமுறை நேரடி பேட்டியின் போது, முதல்வன் ரகுவரன் ஸ்டைலில் கரன் தபாரை பேட்டியை முடிக்கச் சொன்ன விதம் கலக்கல். நடந்ததை மீண்டும் கிளற வேண்டாம் என்று நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  எனக்கு மோடியை ஏனோ ரொம்பப் பிடிக்கும்… அதுவும் கோத்ரா ரயில் எரிப்பை மறைத்துவிட்டு அதன் பின்னர் நடந்த கலவரத்தை மட்டும் இவர்கள் ஊதிப் பெரிதாக்க பெரிதாக்க அவர்தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று எனக்கு ஆசை வந்துவிட்டது…

  எது எப்படியோ, 2014 ல் மறுபடியும் காங்கிரஸ் வெற்றி பெற்றால், PR வாங்கிக்கொண்டு சிங்கப்பூரிலேயோ அல்லது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோ என் வாழ்க்கையைத் தொடரலாம் என்று இருக்கிறேன்…

  • “எது எப்படியோ, 2014 ல் மறுபடியும் காங்கிரஸ் வெற்றி பெற்றால், PR வாங்கிக்கொண்டு சிங்கப்பூரிலேயோ அல்லது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோ என் வாழ்க்கையைத் தொடரலாம் என்று இருக்கிறேன்…”
   – அதேதான் இங்கேயும். 2014-ல மறுபடியும் காங்கிரஸ் வந்தா, நம்ப கிரிகிட்டதான் சிங்கபூர் விசாக்கு sponser கேக்கணும் 🙂

 2. மோடியை விட்டால் காங்கிரசை எதிர்க்க சரியான ஆள் கிடையாது.

 3. பாஜக-வின் மதசார்பை மட்டும் பேசியே காங்கிரஸ் ஓட்டுவாங்க முயற்சி செய்யும்.
  10 வருடங்கள் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று கூறினால் ஓட்டுவிழாது அடிதான் விழும்…..

 4. //[உருப்படாத மூன்றாவது அணிக்குத் தான் வழி வகுக்கும்]…//
  மோடிக்கும், காங்கிரசுக்கும் மூன்றாவது குழப்பம் எவ்வளவே பரவயில்லை…

 5. எது எப்படியோ, 2014 ல் மறுபடியும் காங்கிரஸ் வெற்றி பெற்றால், PR வாங்கிக்கொண்டு சிங்கப்பூரிலேயோ அல்லது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோ என் வாழ்க்கையைத் தொடரலாம் என்று இருக்கிறேன்…

  எங்களுக்கு அந்த வாய்பில்லை முத்துக்குமார். அம்மா உணவகத்திற்குப் பிறகு பாட்டி உணவகம் யாராவது தொடங்குவார்கள் என்று காத்திருப்போம்.

  கிரி உங்கள் உழைப்பு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. வாழ்த்துகள்.

 6. தனக்கு பிடித்த ஒன்றை நியாயப்படுத்தும் சப்பைக்கட்டு பதிவு, நன்றாக பூசி மெழுகி இருக்கிறீர்கள். மோடியைப் பற்றிய முக்கியான ஒன்றை மறந்து இல்லை மறைத்து விட்டிருக்கிறீர்கள். குஜராத் கலவரம், கோத்ராவிற்கு பதிலடி என்பதால் அதை அப்படியே விட்டு விடலாம் என்கிறீர்கள். காங்க்கிரஸ் அரசால் உமக்கு விலைவாசி கூடுவதை பொறுக்க முடியாததால் மோடி வரவேண்டும் என்கிறீர்கள். மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து, உமக்கென்ன, சுகமாய் வாழலாம் அல்லவா?

  விஷயத்திற்கு வருகிறேன். நமது நாட்டில் சட்டம் நீதி என்று ஒன்று உள்ளது தெரியுமா? கோத்ரா எரிப்பிற்கு வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது தெரியுமா? அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட குஜார்த் கலவர வழக்குகள் என்னவானது என்றாவது உங்களுக்கு தெரியுமா? கலவரத்தில் திருவாளர் மோடிக்கு பங்கில்லை என்றே வைத்துக் கொண்டாலும் கலவர வழக்குகளை நியாயமாக நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

  சட்டத்தை விடுங்கள். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு இல்லையா? (ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு சட்டத்தை வளைப்பதும் ஏமாற்றுவதும் சாத்தியமில்லை என்று நினைக்கிறீர்களா?)

  ஊழல் புரிந்துவிட்டு சட்டத்தை வளத்து தப்பும் அரசியல்வாதியைவிட கலவரம் (அல்லது இனவழிப்பு) ஒன்றை திட்டமிட்டு நடத்திவிட்டு, மிக தந்திரமாக சட்டப்படியான ஆதாரமே இல்லாமல் தப்பி, அதையும் மீடியாக்கள் புகழும் படி வைக்கும் ஒரு அரசியல்வாதி மிகுந்த ஆபத்தானவராக தோன்றுகிறார் எனக்கு. உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம், ஏனென்றால் மோடியால் இந்துக்களுக்கு எந்த பாதகமும் இல்லை அல்லவா?

 7. தனக்கு பிடித்த ஒன்றை நியாயப்படுத்தும் சப்பைக்கட்டு பதிவு, நன்றாக பூசி மெழுகி இருக்கிறீர்கள். மோடியைப் பற்றிய முக்கியான ஒன்றை மறந்து இல்லை மறைத்து விட்டிருக்கிறீர்கள். குஜராத் கலவரம், கோத்ராவிற்கு பதிலடி என்பதால் அதை அப்படியே விட்டு விடலாம் என்கிறீர்கள். காங்க்கிரஸ் அரசால் உமக்கு விலைவாசி கூடுவதை பொறுக்க முடியாததால் மோடி வரவேண்டும் என்கிறீர்கள். மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து, உமக்கென்ன, சுகமாய் வாழலாம் அல்லவா?

  விஷயத்திற்கு வருகிறேன். நமது நாட்டில் சட்டம் நீதி என்று ஒன்று உள்ளது தெரியுமா? கோத்ரா எரிப்பிற்கு வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்க்கப்பட்டுவிட்டது தெரியுமா? அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட குஜார்த் கலவர வழக்குகள் என்னவானது என்றாவது உங்களுக்கு தெரியுமா? கலவரத்தில் திருவாளர் மோடிக்கு பங்கில்லை என்றே வைத்துக் கொண்டாலும் கலவர வழக்குகளை நியாயமாக நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

  சட்டத்தை விடுங்கள். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு இல்லையா? (ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு சட்டத்தை வளைப்பதும் ஏமாற்றுவதும் சாத்தியமில்லை என்று நினைக்கிறீர்களா?)

  ஊழல் புரிந்துவிட்டு சட்டத்தை வளத்து தப்பும் அரசியல்வாதியைவிட கலவரம் (அல்லது இனவழிப்பு) ஒன்றை திட்டமிட்டு நடத்திவிட்டு, மிக தந்திரமாக சட்டப்படியான ஆதாரமே இல்லாமல் தப்பி, அதையும் மீடியாக்கள் புகழும் படி வைக்கும் ஒரு அரசியல்வாதி மிகுந்த ஆபத்தானவராக தோன்றுகிறார் எனக்கு. உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம், ஏனென்றால் மோடியால் இந்துக்களுக்கு எந்த பாதகமும் இல்லை அல்லவா?

  • மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து…————-
   இல்லை,இல்லை உங்கள் கருத்து தவறானது. முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை…முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத்தான் ஆபத்து…முஸ்லீம் தீவிரவாதிகளும் முஸ்லீம்தான் என்றால் அதற்கு மோடி மட்டுமல்ல யாராலுமே ஒன்றும் செய்யமுடியாது…

   • முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத்தான் ஆபத்து. 100% true

 8. எனது விமர்சனம் ஸ்பேர்ம் பகுதிக்கு சென்று விட்டது என்று நினைக்கின்றேன்

 9. கில்லாடி,

  தற்போதைய நிலையில் மோடியைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை அளிக்கவில்லை என்பதால், மோடி பிரதமர் ஆவதை நானும் ஆதரிக்கிறேன்.

  விஜய்

 10. // இந்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் கொஞ்ச காலம் முன்னர் தான் “ஜெ” கலைஞரை, முன்னாள் முதல்வர் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல், இரவில் கைது செய்து தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தார் //

  செல்வி.ஜெயலலிதா கலைஞரைக் கைது செய்தது 2001 இல். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது 2004 இல். இடையில் சுத்தமாக 3 ஆண்டுகள் இருந்தது.

 11. கிரி, நீங்க குஜராத்துக்கு மோடி செய்ஞ்சத பத்தி குறைவா சொல்லிருக்கீங்க அல்லது குறைவா தெரிஞ்ரிக்கீங்க.

  • இந்திய அரசால் 4 முறை தடை செய்ய பட்ட இயக்கம், அடுத்த பிரதமரை அறிவிக்க நிர்பந்திகிரது என்றல் அவர்களை எப்படி பட்டவர்கள் என்று இந்துகள் ஆகிய உங்களிடம் விட்டு விடுகிறேன் சில
   ஒருவர் நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன் என்று பெருமிதத்தோடு முழங்க கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான்.
   இன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
   குஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்
   இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் போலீசு அதிகாரிகள் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன்தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார்.
   மோடியின் மீதான வழக்கே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது RSS VHP இந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே தொழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம்தான். “வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப்பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

  • you can check even wikipedia for checking human development index,child mortality rate,electrification ,transportation ,literacy rate and vaccination in all these gujarat is behind tamil nadu .even in nominal gdp

   if you won’t trust wikipedia check government report

   but some of modi’s followers are puting china’s rapid bus transit and showing it as gujarat’s capital bus stand. I can give no of modi’s hyped photos.

 12. Giri, நான் போட்ட 2 கம்மேன்ட்சும் வரல. moderate பண்றீங்களா என்ன?

 13. வோர்ட்ப்ரஸ் ல் புதியதாக அப்டேட் ஆன கமெண்ட் plugin கமெண்ட் அனைத்தையும் ஸ்பாம் ஆக கருதி ஸ்பாம் க்கு அனுப்பி விட்டது. மன்னிக்க. என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் இல்லை.

 14. மோடியை குறை கூறும் அனைவரும் ஒரு முறை இந்திய வரைபடத்தையும் உலக வரைபடத்தையும் நன்றாக பார்க்கவேண்டும் இந்தியா பாக் எல்லையில் குஜராத் நில மற்றும் கடல் எல்லைகளை கொண்டுள்ளது கடல் மூலம் வந்த தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தமுடிந்தது ஆனால் குஜராத்தில் அவர்களால் அங்கு விளையும் வெங்காயத்தைக்கூட புங்கமுடியாது என்பதுதான் உன்மை. இன்றைய நிலையில் குஜராத்தை காங்கிரசிடம் கொடுத்தால் அது தீவிரவாதிகளின் வரவேர்ப்பறையாக மாறிவிடும் என்பதுதான் உன்மை. நான் குஜராத்தில் ஒன்றறைவருடமாக வசித்துவருகிறேன் எனக்கும் அதைப்பற்றி அறிந்துகொள்ளும் அக்கறை இருக்கிறது.

  குஜராத் விவசாயத்திலும் குரிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது என்பதுதான் உன்மை இங்கு டாஸ்மாக்கும் இல்லை இலவசமும் இல்லை ஆனால் அமைதி இருக்கிறது அரசு பனிகளுக்கு பணம் கொடுக்கத்தேவை இல்லை பனியிடங்ககள் அனைத்தும் ஆன் லைன் மூலமே நிரப்ப படுகிறது. அரசு ஆசிரியர்கள் டியுசன் எடுத்தால் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக செலவழித்த தொகை வெறும் 1500 மட்டுமே அரசு மருத்துவமனையும் பொதுமக்களிடம் அரவனைப்புடனே நடந்துகொள்கிறது. நானே எந்த பிரச்சினை என்றாலும் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்வேண்.

 15. கோத்ரா ரயில் எரிப்புக்கு 3 மாதங்களுக்கு முன்பதாகவே குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளுக்கும் வீடுகளுக்கும் அடையாளக்குறி போடப்பட்டதையும், அப்பாவி மோடியின் தொண்டர்கள் வாள் போன்ற ஆயுதங்களை பட்டை தீட்டிய திட்டங்களையும் தெகல்கா ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்களே! அதை ஏன் எழுத மறந்தீர்கள்? பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சேகர் என்பவருக்கு 5000 ரூபாய் கொடுத்து கோத்ரா ரயில் நிலைய பிளாட்பார வியாபாரி ஒருவர்தான் தன்னிடம் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கியதாக அடையாளம் காட்டச் சொன்னார்கள், நான் அதற்கு முன் அவரைப் பார்த்தது இல்லை என தெகல்கா நிறுபரிடம் தகவல் சொன்னாரே! அதை தெகல்கா அப்பட்டமாக வெளியிட்டு ரயில் எரிப்பிற்கு யார் காரணம் என பூடகரமாக சொன்னார்களே! அதை ஏன் எழுத மறந்தீர்கள்? இதெல்லாம் தாத்தா கால டெக்னிக், 1950 லேயே அதை அவர்கள் துவங்கி விட்டார்கள். அதன்முதல்படி தான் தனக்கு சுன்னத் செய்து கொண்டு தன் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்ற கோட்சேவின் டெக்னிக். அன்றைக்கு மட்டும் கோட்சே உயிரோடு பிடிபடாமல் செத்திருத்தால் மொடி இன்றைக்கு செய்த அதே அரங்கேற்றம் அங்கே நிகழ்ந்திருக்கும். ஒரே ஒரு கேள்வி, முஸ்லிம்கள் பயந்து பயந்து சிறுபாண்மையினராக வாழும் நாட்டை பீஜேபி ஆளும் போது முஸ்லிம்கள் பொத்திக் கொண்டு இருக்க நினைப்பார்களா? அல்லது தங்களின் திறமையைக் காட்ட நினைப்பார்களா என்ற கேள்வி ஏன் யாருக்கும் எழ மாட்டேன் என்கிறது? நீங்கள் போட்டிருக்கும் காவிக் கண்ணாடி உங்கள் கண்ணை மறைக்கிறதோ?

 16. தனக்கு பிடித்த ஒன்றை நியாயப்படுத்தும் சப்பைக்கட்டு பதிவு…..காவிக் கண்ணாடி உங்கள் கண்ணை மறைக்கிறதோ?……

 17. குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே ஒருவரை ஒரு நாட்டின் தலைமை பதவி ஏற்கும் அளவுக்கு தகுதியுடையவராக கருதிவிட முடியாது. அவருக்கு திறமை இருக்கலாம். ஆனால் பொறுமை இல்லை. தன்னுடைய கட்சியின் உள்ளேயே மூத்தவர்களை அனுசரித்துக்கொண்டு செல்லும் அளவுக்கும் மனப்பக்குவம் இல்லை. அவர் ஒரு சர்வாதிகார மனப்பாங்குடையவர் என்பதை அவருடைய கட்சி நண்பர்களே கூறுகின்றனர். எப்படி கணக்குப் போட்டாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றப் போவதில்லை. ஆனால் பதினேழு ஆண்டுகள் கூட்டணியில் இருந்த ஒரு கட்சியையே தக்க வைத்துக்கொள்ள முடியாமல் (விரும்பாமல் என்பதுதான் சரி) போன ஒருவரை நம்பி யார் கூட்டணி அமைக்கப் போகிறார்கள்? ஒரு வலுவான கூட்டணி இல்லாதவரை பா.ஜ.க. பார்லி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்கிறபோது மோடி பிரதமராவதைப் பற்றி பேசி என்ன பயன்? உங்களுடைய உழைப்பும் நேரமும்தான் வீண்.

 18. //மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து…————-
  இல்லை,இல்லை உங்கள் கருத்து தவறானது. முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை…முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத்தான் ஆபத்து…முஸ்லீம் தீவிரவாதிகளும் முஸ்லீம்தான் என்றால் அதற்கு மோடி மட்டுமல்ல யாராலுமே ஒன்றும் செய்யமுடியாது//

  சூப்பர்……..

 19. ஒரு நிர்வாகத்திறமை கொண்ட நபர் பிரதமராவதில் எனக்கும் உடன்பாடுதான். (ஒபாமா பிரசிடேண்டாக இருந்தாலும் தன் கீழ் உள்ள செனட் சபையையும் வால்ஸ்ட்ரீடையும் தாண்டி தன் அலுவலக சேரை கூட மாற்ற முடியாது) அதே தான் இந்தியாவிலும். இருந்தாலும் ஒன்னும் பேசாத MMS சை விட செய்ய தெரிந்த/துணியும் மோடி எவளவோ பெட்டர். உண்மையோ பொய்யோ தன் மீதுள்ள கறையை நீக்க அவர் முயற்ச்சித்தாலும் குற்றம் சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள். நாம் அவர்களை இந்திய சகோதரர்களாகத்தான் பார்கின்றோம் அனால் அவர்கள் அவர்களை அவர்களே அகதிகள் போல் கருதிக்கொள்வதை அவர்கள் தான் மாற்றிக்கொள்ளவேண்டும். எவ்வளவோ இடர்கள் வந்தாலும் அப்துல் கலாமை முதல் குடிமகனாக ஆக்கியதை ஏன் மறந்து விட்டார்கள். பாஜகவை இந்து கட்சி என்று தனிமை படுத்துபவர்கள் காங்கிரஸ்சுக்கு மாற்று கட்சி அகில இந்திய அளவில் பஜகாவை விட வேறொன்று இருக்கிறதா என்றோ சொல்ல சொல்லுங்கள். யார் வந்தாலும் இந்தியா ஒன்றும் அமைதி பூங்காவாக மாறபோவதில்லை. வேடுமெனில் சகோதரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியாவை தாக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம்.

 20. //////சிரிப்புசிங்காரம் June 21, 2013 at 9:34 PM

  மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து…————-
  இல்லை,இல்லை உங்கள் கருத்து தவறானது. முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை…முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத்தான் ஆபத்து…முஸ்லீம் தீவிரவாதிகளும் முஸ்லீம்தான் என்றால் அதற்கு மோடி மட்டுமல்ல யாராலுமே ஒன்றும் செய்யமுடியாது…
  /////

  நன்றி திரு சிரிப்புசிங்காரம் சார். மோடி அரசால் நேரடியாகவும், மறைமுகமாகவும் இனவழிப்பு கலவரத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்களும் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்ட பல்லாயிரம் முஸ்லிம்களும் தீவிரவாதிகளே என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். இதுவரை எத்தனை போலி என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களோ, இவர் பிரதமராகி இனி எத்தனை கலவரங்கள், போலி என்கவுண்டர்கள், போலி குண்டுவெடிப்பு கைதுகள் நிகழ இருக்கிறதோ….?

  மோடி வந்தால்தான் முஸ்லிம்கள் அடங்கி இருப்பார்கள் என்ற ரகசிய எண்ணமே பெரும்பாலான மோடி ஆதரவாளர்களிடம் இருக்கிறது. பொருளாதாரம், முன்னேற்றம் எல்லாம் வெறும் சாக்கு.

 21. கிரி என்ற காவி அயோக்கியனின் காவி வெறிமுகம் வெளியாகிவிட்டது

 22. கிரி நீங்கள் எழுதும் கண்டுரைகளை கண்டு பல முறை வியந்து இருகின்றேன். இன்று நீங்கள் எழுதி இருப்பதை கண்டு அவ்வாறு வியக்க முடியவில்லை. குஜராத் கலவரம் கோத்ரா ரயில் எரிப்பின் பின் விளைவு என்று வேறு சப்பை கட்டு கட்டுகின்றீர்கள். கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டது முஸ்லீம்கள் என்றே ஒரு பேச்சிற்கு வைத்து கொள்வோம். குற்றத்தில் ஈடுபட்ட அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா அதற்க்கு பதில் பலிக்கு பலி என ஒரு அரசு அங்கு இருக்கும் மக்களை தூண்டி மத கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்களை கொன்று குவிப்பதுதான் ஒரு முதல்வரின் வேலையா. ரயில் எரிப்பு நிகழ்ந்த உடன் அவர்களின் உளவு துறை என்ன செய்து கொண்டிருந்தது. கலவரம் ஏற்படும் அளவு கொந்தளிப்பான சூழல் இருக்கிறது என உளவு துறை கணித்து இருக்குமே.. அந்த கலவரம் ஏற்படாமல் இருக்க திருவாளர் மோடி எடுத்த நடவடிக்க என்ன. நடக்க இருக்கும் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாத இவரெல்லாம் என்ன நிர்வாக திறன் மிக்கவர். அல்லது மோடியும் அந்த கலவரத்தை எதிர் பார்த்து காத்திருந்தார.

 23. ” மோடியால் எவனோ முஸ்லிமுக்குத்தானே ஆபத்து…————-
  இல்லை,இல்லை உங்கள் கருத்து தவறானது. முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை…முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத்தான் ஆபத்து ”

  குஜராத்தில் கொள்ள பட்ட பெண்கள் குழந்தைகள் அனைவரும் தீவிரவாதிகளா?

 24. ஆஹா, முஸ்லிம்களுக்கு சப்போர்ட் செய்து எத்தனை கம்மேன்ட்சுகள். weldone தமிழா. ஆக, முஸ்லிமுக்கு எதிரானவர் மோடி, அவர் (குஜராத்தி) முஸ்லிம்களை கொள்வதற்கு அதரவாக இருந்தார். அதனால் அவரோ அவரை சார்த்த பிஜேபியோ ஆச்சிக்கு வரகூடாது, காங்கிரஸ்-தான் வரவேண்டும். மோடி ஒரு சர்வாதிகாரி.
  அப்போ சோனியா யாரு. சர்வாதிகாரி இல்லையா? தன் சொந்த கல்புனற்சிக்காக ஒரு இனத்தை கொலைசெய்யும், சோனியா யார்? ஹிட்லர், ஸ்டாலின் போன்றோர்களை விட மோசமான சர்வதிகாரி இல்லையா? லச்சகனக்கான தமிழர்களை கொன்ற காங்கிரஸ் ஆச்சிக்கு வந்தாலும் பரவாஇல்லை, பிஜேபி வரக்கூடாது. நாளை மோடி வந்தால் முஸ்லிம் மக்களை கொலை செய்வார் என்று, இன்று நம் மக்களை இனபடுகொலை செய்யும் ஒரு ஆச்சிக்கு ஆதரவு தரும் என் சகோதரர்களே, வாழ்க உங்கள் ஈரநெஜ்சம். பிஜேபி விட்டால் காங்கிரசுக்கு எதிர்ப்பு இல்லை என்று தெரிந்தும், பிஜேபி-க்கு அதரவு தர தயங்குவதை என்னென்று கூறுவது. இப்போதிருக்கும் பிஜேபி, மதவாத கட்சி என்றால் 10 வருடத்திற்கு முன்பு ஆட்சில் இருந்த பிஜேபி, மதவாத கட்சி இல்லையா? 5 வருடங்கள் நன்றாகத்தானே ஆட்சி செய்தார்கள். இப்போதிருக்கும் காங்கிரஸ்சைவிட நன்றாகவே ஆட்சி செய்தார்கள். உலக நாடுகள் முன் இந்தியா நிஞ்சை நிமிர்த்தும் பல bold decisions எடுத்தார்கள். அந்தமாதிரி காங்கிரஸ் bold decisions எடுக்குனும்ன இந்த்ராதான் திரும்ப வரணும்.

  “முஸ்லிம்கள் பயந்து பயந்து சிறுபாண்மையினராக வாழும் நாட்டை பீஜேபி ஆளும் போது முஸ்லிம்கள் பொத்திக் கொண்டு இருக்க நினைப்பார்களா? அல்லது தங்களின் திறமையைக் காட்ட நினைப்பார்களா என்ற கேள்வி ஏன் யாருக்கும் எழ மாட்டேன் என்கிறது”
  – நீங்கள் எந்த திறமையை கூறுகிறீர்கள்? தீவிரவாத திறமையையா? இந்த காங்கிரஸ் ஆட்சில் மட்டும் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்ன? தங்களின் (தீவிரவாத) திறமையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் இருந்ததும் பிஜேபி ஆட்சிதான், அப்போது இந்தியா ஹிந்து நாடு என்று கூறி இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களை இனபடுகொலை செய்தார்களா என்ன?

  கிரி, கூறியதைதான் நானும் கூறுகிறேன். காங்கிரஸ்-சை எதிர்க்க பிஜேபி அல்லாத வலுவான கட்சியை காட்டுங்கள், அதற்கு நான் ஓட்டுபோடுகிறேன். அதேபோல் பிஜேபி-யில் மோடி அல்லாத வலுவான தலைவரை காட்டுங்கள், நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 25. //.. அதனால் அவரோ அவரை சார்த்த பிஜேபியோ ஆச்சிக்கு வரகூடாது, காங்கிரஸ்-தான் வரவேண்டும்..//

  பிஜெபி இல்லைஎன்றால் காங்கிரஸ் வரவேண்டும் என்று அர்த்தமா?
  பிஜெபி காங்கிரசின் ஜெராக்ஸ். அவ்வளவு தான்.

  மோடி, சோனியா, பிஜெபி, காங்கிரஸ், எதுவுமே வேலைக்காகாது.

  இதை அவர்களுக்கு புரியவைக்க ஒரே வழி வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க வருப்பம் இல்லை என தெரிவிப்பது.. இல்லை சுயேசட்சைகளுக்கும் உதிரி கட்சிகளுக்கும் மானவாரியாக ஓட்டளித்து தேசிய கட்சிகளின் டங்குவாரை அறுத்துவிடுவது.

  தொஙுகு பாராளுமன்றம் அமையும், குதிரை பேரம் நடக்கும் .. ஊழல் நடக்கும், நடக்கட்டுமே… இதேல்லாம் இல்லாமல் ஒரே கட்சி இருந்து இந்த காங்கிரசு பிஜேபி திருடர்கள் கிழித்ததென்.ன…

  காங்கிரசின் ஊழல் முன் மற்ற ஊழல்களை சுண்டெலி போல் தோன்றிலாலும் அவர்ரவர் சக்திகேற்ப பிஜேபியும் சவபேடியில் இருந்து பலதில்கும் ஊழல் செய்த கட்சி தான்.

  இவர்களின் ஆட்சியில் ரயில் ரேடார் சைட்டை பாருங்கள்… இவர்க்ள் நாட்டை கவனிக்கும் உண்மை முகம் நன்கு தெரியும். வடக்கு பகுதியிலும் மேற்கு வங்கத்தில்கும் நூற்றுகணக்கான ரயில்கள் இருக்கும்ம்பொது , பெயருக்கு ஒன்றிரன்டு அதுவும் சிந்தியதை பிச்சைபோட்டதுபோல்… தென்னகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.

  அதிலும் பெரும்பான்மை கேரளாவில் இருந்து புரப்படும் வண்டிகளே.. தமிழகம் இவர்க்ளுக்கு வருமானம் தரும், அதேசமையம் கூடங்குளம், தேனி, என குப்பை கொட்டும் இடம்,

  இவர்கக்டு புத்தி கற்பிக்க வேண்டும் .. எனவெ அனைவரும் 100% வாக்கு பதிவு செய்து சுயேட்சைகளுக்கு ஓட்டளித்தால் .. அவரவர் தொகுதிக்காக பேசுவர். உண்மை ஜனநாயகம் நடக்க ஒரு வாய்பாவது கிடைக்கும்.

 26. “தொஙுகு பாராளுமன்றம் அமையும், குதிரை பேரம் நடக்கும் .. ஊழல் நடக்கும், நடக்கட்டுமே… ”

  அப்படி தொங்கு பாராளுமன்றம் அமைந்து, குதிரை பேரம் நடத்தால், யார் ஆட்சி அமைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அது காங்கிரஸாகதான் இருக்கும். பிஜபிக்கு அப்படி குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்கத்தெரியாது. அதற்கு அம்மாவின் famous டெல்லி பயணமே சாட்சி. அப்படி மூணாவது (கூட்டணி ) கட்சி ஆட்சியை பிடித்தாலும் அது கண்டிப்பாக 5 வருடம், ஏன் 1 வருடம்கூட ஆட்சியில் இருக்காது. அதற்கு தேவகவுடா ஆட்சியே சாட்சி. இப்படி ஒரு தேர்தலே வீனாபோவதற்கு பதில் பிஜேபி ஆட்சியைதான் 5 வருடம் பார்ப்போமே. அவர்கள் நன்றாகத்தான் ஆட்சி செய்வார்கள் என்று ஏற்கனவே prove செய்திருக்கிறார்கள்.

 27. போதுதுறையை விற்பதற்கென்றே மினிஸ்டரியை உலகில் முதல் கண்டுபிடிப்பாக செய்தது நல்ல ஆட்சியா ?

  பிஜேபி காங்… இரண்டுமே வேண்டாம்.

 28. ரொம்ப வித்தியாசமான பார்வை ல அலசி இருக்கீங்க தல .. அதுக்கு முதல் ல வாழ்த்துக்கள்

  “நடைமுறை எதார்த்தம்” – இதை யோசிச்சா உங்க பதிவோட நியாயம் நல்லாவே புரியும்

  – அருண்

 29. “பிஜேபி காங்… இரண்டுமே வேண்டாம்”

  – இரண்டுமே வேண்டாம், இரண்டுமே வேஸ்ட் கட்சிகள்தான். ஆனால் இந்த இரண்டு கட்சியை விட்டால் வேறு நல்ல மாற்று இல்லை. இப்போது பிரச்சனையை இந்த இரண்டில் எது மோசத்தில் மோசம் இல்லை என்பதே. அதில் காங்கிரஸ்சை விட பிஜேபி எவ்வளோவோ மேல்.

 30. //… இப்போது பிரச்சனையை இந்த இரண்டில் எது மோசத்தில் மோசம் இல்லை என்பதே. அதில் காங்கிரஸ்சை விட பிஜேபி எவ்வளோவோ மேல்..//

  இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. கட்சிகள் தங்கள் தவறை உணர அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும் . அதிகம் மோசம் இல்லாதது எது என தெரிந்த்டுப்பது அவர்களை திருத்தாது .

  குழம்பில் மலம் விழுந்து விட்டது என்றால் அதை கொட்டத்தான் வேண்டும். வடித்தார் போல உற்றி சாப்பிடலாம் என்பது போல் உள்ளது மோசத்தில் மோசம் இல்லாததை தேடுவது ..

 31. “கட்சிகள் தங்கள் தவறை உணர அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்”
  – பாஸ், நான் திரும்ப திரும்ப சொல்றது என்னன்னா.. மக்கள் அவற்றை புறக்கணித்தால் என்ன ஆகும் என்பதே. partical-அ யோசிச்சுப்பாருங்க. ஒரு தேர்தலே வேஸ்ட் ஆகாதா? அப்போ மட்டும் ஒரு சூப்பர் டூபெர் கட்சி (அனைத்திந்திய கட்சி) உருவாக்கிட போகுதா? நீங்க சொல்றது Theoretical-அ, உணர்ச்சிவசப்பட்டு பேசறதுக்கு மட்டும்தான் உதவும்.

 32. //.. ஒரு தேர்தலே வேஸ்ட் ஆகாதா? அப்போ மட்டும் ஒரு சூப்பர் டூபெர் கட்சி (அனைத்திந்திய கட்சி) உருவாக்கிட போகுதா? ..//

  தேர்தல் இப்ப மட்டும் உருப்படியா இருக்க ? நாடு சுதந்திரம் அடைந்து 65 வருடம் ஆகியும் குடிநீர் இல்லாத கிராமங்கள் எத்தனை…?

  ஆனால் லட்சம் கோடிகளில் செய்யபட்ட ஊழல்கள் எத்தனை ?

  நீங்கள் சொல்வதுபோல் தேர்தேடுத்தால் …. அதை தான் இத்தனை நாள் செய்தோம்…
  அப்படி செய்தால் இது தான் தொடரும்… இதற்கு பதில் .. அனைத்து தொகுதியிலும் மொத்த பிஜெபி, வேட்பாளர்கள் டெப்பசிட் இழந்தால்… மொத்தலும் சுயேசை வந்தால்…. சுயேடசை மக்களு பதில் சொல்லியே ஆக வேண்டும்…தொகுதி பிரச்சனையை பேசியே தீர்வு கண்டே ஆக வேண்டும்..

  இப்போது இருப்பதை விட கொஞ்சமாவது நல்லா இருக்கும்.

  தேர்தலில் இப்படி நடந்தால் போது மக்களாகிய நமக்கு நல்லது தான். என்ன பீஜேபி, கங்கிரசு..கம்யுனிஸ்டுன்னு கட்சிகளுக்க்கு தான் சங்கு ஊதப்படும்…

  அதை பற்றி நமக்கு என்ன ? நம்மை பற்றி அவர்கள் இத்தனை நாள் கவலை பட்டார்களா என்ன ? தொலையட்டும் சனியண்கள் என நாம் நிம்மதியாக இருப்போம்…

 33. மக்கள் வாக்கு வங்கியாக இந்த் கட்சிக்கு தான் வாகளிப்பேன்னு இல்லாமல்.. செயல்பாட்டின் அடிப்படையில் வாககள்த்தால் ஏமாற்றும் எந்த கட்ச்யும் டெப்பசிட் வாங்காது.. அத்துடன் அதன் கதை முடிந்த கதை தான்.

  அப்போது கண்டிப்பாக ஒரு சூப்பர் டூபெர் கட்சி (அனைத்திந்திய கட்சி) உருவாக்கியே தீரும்…

  இந்த எழவெடுத்த சனியன்கள் தொலையும் வரை நிம்மதின்னு நினைச்சா.. நீங்க இதில் ஒண்ணை தேந்தெடுத்தேஆன வேண்டும்… அவற்றை வாழ வைத்தே ஆகவேன்டும்னா எப்படி..?

  இந்த மானங்கெட்டவர்களால் 91 க்கும் 2013 க்கு இடையில் எத்தனை கட்சி தாவல், எத்தனை ஊழல், எத்தனை தேர்தல்.. அதேல்லாம் வேஸ்ட் இல்லையா…

  அதில் நம்மக்கு என்ன உபயோகம் ? உண்மையில் செலவு தான்… அரசு செலவிட்டும் ஓவ்வொறு பைசாவும் நீங்களும் நானும் கொடுப்பது தான். நாம் விரும்பாவிட்டாலும் கொடுத்து தான் ஆகவேண்டும்.. நம் பணத்தை இப்படி குட்டிசுவர்காக்கும் இவர்களுக்காக பேசுறீக்ங்களே?

 34. “அனைத்து தொகுதியிலும் மொத்த பிஜெபி, வேட்பாளர்கள் டெப்பசிட் இழந்தால்… மொத்தலும் சுயேசை வந்தால்…. சுயேடசை மக்களு பதில் சொல்லியே ஆக வேண்டும்…தொகுதி பிரச்சனையை பேசியே தீர்வு கண்டே ஆக வேண்டும்..”

  – இதற்கு என்ன பத்தி சொல்வது? நீங்க நெஜமாவே இது நடக்குன்றீன்களா? மொத்த தொகிதியுலும் சுயேச்சை வந்தால்…. அவங்க எல்லோரும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியுமா? என்ன பாஸ் பேசறீங்க. சரி பாஸ் நீங்க சொல்றமாதிரியே நாம எல்லோரும் சேர்ந்து எல்லா தொகிதியுலும் சுயேச்சை ஆளுங்களையே தேர்ந்தெடுப்போம். அப்புரம் என்ன ஆகும்? ஒரு தேர்தலே வேஸ்ட் ஆகும். சரி, ஒரு தேர்தல்தான போனபோகுது. அதுக்கப்பறம் அடுத்த தேர்தல்லயும், நாம்ப சுயேச்சை ஆளுங்களையே தேர்ந்தேடுப்போம்னு நினைக்கிறீங்களா? இல்ல, அடடா பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லோருமே டெபொசிட் போய்டுச்சு, நாம ஒரு கட்சி ஆரம்பிப்போம்னு நானும், நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிக்கரோம்னு வையுங்க. அது அடுத்த தேர்தல்லையே ஆட்சிய பிடிக்கும்னு சொல்றீங்களா? அதுக்குள்ள நம்ப கட்சிக்கு, அஸ்ஸாம்ல ஒரு மூலைல இருக்குற ஒரு கிராம மக்கள், அந்த கட்சிய பத்தி தெரிஞ்சு, அதுக்கு ஓட்டு போட்டு ஜெய்க்க வெச்சுருவங்கலா?
  சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்.

 35. அஹ்மதாபாத்: குஜராத்தில் மோடியின் போலி எண்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி அல்ல என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

  எல்லா அரசியல்வாதிகளும் சுயநல வாதிகளையே. முற்போக்கு சிந்தனையுள்ள உங்கள் ஆதரவு வியப்பளிக்கிறது .

  மோடியால் குஜராத் பொருளாதரத்தில் முன்நேரிருக்கலாம் ஆனால் மோடியினுடைய மதவாதம் மிகவும் கொடூரமானது .இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.

 36. This is my next MP election status.next time we give this country in Congress ,India full country leased to American company’s .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here