UPI பணப்பரிவர்த்தனை முறை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் இந்தியா செயல்முறைக்கு UPI மிகப்பெரிய உதவியாக உள்ளது. இவற்றோடு UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் என்னவென்று பார்ப்போம்.
UPI பணப்பரிவர்த்தனை
துவக்கத்தில் பயன்படுத்தத் தயக்கம் இருந்த பலரின் தினப்பயன்பாட்டில் ஒன்றாகத் தற்போது UPI மாறி விட்டது. Image Credit
நவம்பர் 2020 UPI பயன்பாட்டில் 2.21 பில்லியன் பரிவர்த்தனை எண்ணிக்கையும் 3.91 ட்ரில்லியன் தொகையும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரணமாகப் பண்டிகை கால விற்பனை கூறப்பட்டாலும், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கோளாறு
வங்கிகளுக்கு UPI பரிவர்த்தனையில் பெரியளவில் வருமானமில்லை. எனவே, இதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்தாமல் வைத்துள்ளார்கள்.
கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் வழங்கிகள் (சர்வர்) திணறி வருகின்றன.
இதனால் பல பரிவர்த்தனைகள் செயல் இழந்துள்ளன குறிப்பாக SBI வங்கியில் அதிகம் நடந்துள்ளதால், சர்ச்சையாகியுள்ளது.
ICICI, HDFC & SBI வங்கிகளின் UPI பரிவர்த்தனையைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் HDFC & ICICI வங்கிகள் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.
அதாவது failed transaction எண்ணிக்கை மிகக்குறைவு.
SBI யை நம்பி அவசரத்துக்கு அனுப்ப முடியாத நிலை தான் தற்போது (டிசம்பர் 2020) உள்ளது குறிப்பாகப் பெரிய தொகையை.
NPCI (National Payments Corporation of India)
UPI பற்றிய அனைத்து விவரங்களையும், NPCI நிறுவனம் தனது தளத்தில் தெளிவாக வைத்துள்ளது .
எத்தனை வங்கிகள் இணைந்துள்ளன, யாரெல்லாம் உள்ளார்கள், failed transaction சதவீதம் உட்படப் பல்வேறு தகவல்கள் உள்ளன.
இதில் குறிப்பிட வேண்டியது இரு முக்கியத் தகவல்கள்.
- Business Decline – ஒருவர் UPI Pin தவறாகக் கொடுத்து இருக்கலாம், பாதியில் கேன்சல் செய்து இருக்கலாம், தவறான Beneficiary யைத்தேர்வு செய்து இருக்கலாம், Per Day Transaction Limit exceed ஆகி இருக்கலாம்.
- Technical Decline – இது முழுக்க வங்கி / NPCI / UPI App தொழில்நுட்ப கோளாறால் ஏற்படுவது.
இவையே failed transaction காரணிகளாகக் கூறப்படுகிறது. இதில் Technical Decline மட்டுமே நியாயமான காரணங்கள்.
https://www.npci.org.in/ தளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன.
UPI பரிவர்த்தனை பரிந்துரைகள்
எதிர்காலம் UPI (Unified Payments Interface) என்பதால், எங்குச் சென்றாலும் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எனவே, இதைப் பயன்படுத்தச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு வங்கி UPI கணக்கை நம்பி இருக்க முடியாது.
எனவே, ஒரு நபர் குறைந்தது இரு வங்கிகளிலாவது கணக்கு வைத்து இருக்க வேண்டும். UPI சேவைக்காக மட்டுமல்ல, மற்ற தேவைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இரு வங்கி கணக்குகள் அவசியமானது.
ஒரு வங்கியில் பணப் பரிவர்த்தனை செயல் இழந்தாலும் இன்னொரு வங்கியின் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
எனவே, பணத்தையும் ஒரே வங்கியில் வைத்துக்கொள்ளாமல் இரு வங்கிகளில் பிரித்து வைப்பது நல்லது.
இரு வங்கி கணக்குகள் எவ்வளவு முக்கியமோ அதே போல இரு யுபிஐ செயலியும் (UPI App) அவசியம். என் பரிந்துரை Amazon Pay, Google Pay & PhonePe.
கடைகளில் பணத்தைச் செலுத்தும் போது ஒரு செயலி (App) பிரச்சனை செய்தாலும் இன்னொன்றை பயன்படுத்திப் பணத்தைச் செலுத்தலாம்.
எதிர்காலம் மின்னணு பரிவர்த்தனை
எதிர்காலத்தில் UPI / மின்னணு பணப்பரிவர்த்தனையே ஆதிக்கம் செலுத்தும்.
நேரடியாகப் பணம் கொடுத்துச் செலவு செய்வது, கட்டணம் செலுத்துவது படிப்படியாகக் குறைந்து விடும்.
மின்னணு பரிவர்த்தனை இல்லாத வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கப்படும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் UPI யின் பங்கு மகத்தானது.
தொடர்புடைய கட்டுரைகள்
WhatsApp UPI யை செயல்படுத்துவது எப்படி?
UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு
மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
உண்மை தான் கிரி, UPI மிக வேகமான வளர்ச்சி.. அதுவும் கடந்த 2 / 3 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.. நகர்ப்புறம் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் இதன் நீட்சியை காண முடிகிறது.. தற்போது வேண்டுமானால் (வங்கிகளுக்கு UPI பரிவர்த்தனையில் பெரியளவில் வருமானமில்லை) ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறும்..
நான் முதன் முதலில் பிரமித்த விஷியம்.. நண்பனின் தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்பி இருந்தார்.. நான் கொஞ்சம் விவரமானவன் (நண்பனின் பார்வையில்) என்று பணத்தை எடுக்க, நண்பன் என்னை அழைத்து கொண்டு தலைமை தபால் நிலையம் சென்றோம்.. இந்த சேவை குறித்து ஒரு விளம்பர பேனர் பார்த்த நியாபகம்..எனக்கு இது போல ஒரு சேவை இருப்பது தெரியாத ஒன்று.. போகும் போது பல கேள்விகள் கேட்டு நண்பனை திணறடித்து விட்டேன்..
(ஏனென்றால் என்னால் அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அவன் தந்தை வெளிநாட்டில் பணம் கட்டுவாராம், பணம் அடுத்த நிமிடம் இங்கு கிடைக்குமாம்.. என்னடா ரீல் உடுறிங்க.. என நினைத்து இருந்தேன்). நான் கல்லுரி படிக்கும் போது தேர்வு சமயத்தில் வங்கியில் வரைவோலை எடுப்பதற்கு அரை நாள் நிச்சயம் விடுப்பு எடுக்க வேண்டும்… தபால் நிலையத்தில் நண்பனின் ID செக் பண்ணி விட்டு ஒரு கத்தை பணத்தை கொடுக்கும் போது ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது.. நான் கண்ட பிரமிப்பான முதல் டிஜிட்டல் இந்தியா காட்சி இது தான்..பகிர்வுக்கு நன்றி கிரி…
யாசின் “வெஸ்டர்ன் யூனியன்” வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத் துணையானது. சிங்கப்பூரில் இருந்த போது சம்பள நாளில் பலர் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசையில் நிற்பார்கள்.
வங்கிகளே transfer யை எளிதாக்கி விட்டாலும், கடை நிலை ஊழியர்களுக்கு வெஸ்டர்ன் யூனியன் பயனுள்ளதாக உள்ளது. தற்போதைய நிலை தெரியவில்லை.