எந்திரன் படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வெற்றி பெற்று உள்ளது. ரஜினி ரசிகனாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழனாக அதை விட அதிக மகிழ்ச்சி. பாலிவுட்டை நொறுக்கிய எந்திரன் பற்றிப் பார்ப்போம்.
பாலிவுட்டை நொறுக்கிய எந்திரன்
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்று கூறினாலும் அது மற்ற நாட்டுடன் போட்டி என்று வரும்போது மட்டுமே என்னைப்போன்றவர்களுக்கு செல்லுபடியாகிறது.
அதே மாநிலம், மாவட்டம், நகரம் அதில் கிராமம், வார்டு என்று சென்று சென்று நம் அணி என்று வரும் போது அதற்கு ஆதரவு கொடுக்கும் சராசரி குடிமகன் நான்.
யார் வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன! என்று நினைக்கும் அளவிற்கு நான் ரொம்ப நல்லவன் கிடையாது.
அப்படிப்பட்ட நல்லவர்களாக நீங்கள் இருந்தால் இதோட நிறுத்திட்டு வேற ஏதாவது படிக்கப்போகலாம்.
வட இந்தியர்கள்
எனக்கு வட இந்தியர்களைச் சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது (வழக்கம்போல ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால், அது மிகக்குறைவு).
காரணம் அவர்களுக்குத் தென் இந்தியர்கள் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான்.
நம்மை மதிக்கவே யோசிப்பார்கள் கேலியும் கிண்டலுமாகத் தான் பேசுவார்கள். நான் பணி செய்த இடங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.
அதனாலே எப்போதெல்லாம் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோமோ அப்போதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தியாவில் திரைப்படங்கள் என்றால் முன்னணியில் இருப்பது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் தான் மற்ற படங்கள் எல்லாம் இதற்குப் பிறகு தான்.
வெளிநாடுகளிலும் இதற்கே அதிக வரவேற்ப்பு.
பாலிவுட்
இருப்பினும் இந்தியா என்றாலே பாலிவுட் தான் என்ற மாயையை வட இந்தியர்கள் தங்கள் ஊடகங்களால் உருவாக்கி விட்டார்கள்.
பெரும்பாலான வெளிநாட்டு மக்களும் இந்தியா என்றால் அது பாலிவுட் என்றே கருதிக்கொண்டு உள்ளார்கள் ஆனால், அவர்களுக்கு இந்தியாவில் இத்தனை மொழிகள், அதில் இத்தனைப்படங்கள் வருகிறது என்பதை அறியாதவர்கள்.
அதனால் ஊடகங்கள் பிரபலமாக்கிய பாலிவுட்டை, இந்திய திரைப்படங்களின் அடையாளமாக நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
இந்தியப்படங்கள் என்றால் அமிதாப், ஷாருக் கான் அமீர் கான் சல்மான் கான் சயிப்அலிகான் என்று கான்களைத்தான் நடிகர்களாக நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
ரஜினி கமல் படம் நன்றாக ஓடுகிறது என்றாலும் இந்திப் படங்களுடன் ஒப்பிடும் போது வரவேற்புக் குறைவு காரணம், இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் குறைவு ஆனால், இந்தியின் வீச்சு அதிகம்.
எனவே, ரஜினி கமல் படங்கள் இந்தியாவில் வெளியானால் அது தமிழ்நாட்டில் மட்டும் ஓட முடியும்.
அதிகபட்சமாகத் தென் மாநிலங்கள் ஆனால், இந்திப் படங்களுக்கு அப்படி இல்லை இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது.
வெளிநாடுகளிலும் இந்திப்படங்கள் தான் இந்தியப்படங்கள் என்றாகி விட்டது.
வருடாவருடம் துபாயில் இந்தி(ய)த் திரைப்பட விழா என்று கூறி தென் மாநில படங்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிப்பார்கள்.
நல்ல படங்கள்
இந்தியில் நல்ல படங்கள் வருகிறது, அதற்குச் சற்றும் சளைக்காமல் தென் இந்தியாவிலும் நல்லப் படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
இங்கே அவர்கள் கிண்டலடிக்கும் படி படங்கள் வந்தாலும், அதையும் மீறிப் பல நல்லப் படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
இவர்கள் என்னவோ ஒழுங்கு போலப் பேசிக்கொண்டு உள்ளார்கள். அவர்களிலும் பல குப்பை படங்களைத் தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இவர்கள் படத்தைப் பார்த்தால் வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக நினைத்துக்கொள்வார்கள்.
இந்தியப்படங்கள் என்று கூறி முழுவதையும் வெளிநாட்டில் எடுத்து இருப்பார்கள். வெளிநாட்டில் சென்று விருது வேறு அதுவும் நமது படங்களைப் புறக்கணித்து.
இதை ஒருமுறை விருந்தினராகச் சென்ற மம்முட்டி, அவர்களை நாக்க புடுங்கற மாதிரி நறுக்குன்னு கேட்டார்.
இப்ப எல்லாவற்றிக்கும் சேர்த்து வைத்து அவர்கள் வாயை நவதால் பூட்டு போட்டுப் பூட்டி இருக்கிறது நமது தமிழகத்தின் எந்திரன்.
அதிகமாகப் பேசியவர்கள் எல்லாம் வாயை இறுகக்கட்டிக்கொண்டு உள்ளார்கள்.
வட இந்திய ஊடகங்கள்
கான்களுக்கு எல்லாம் புகைந்து கொண்டு இருக்கிறது.
தென் இந்தியாவை கிண்டலடிக்கும் வட இந்திய ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எந்திரனைப் பற்றிச் செய்திகளாகவும்ஆவணப்படமாகவும் போட்டுத் தாக்கிக்கொண்டுள்ளன.
இந்தியாவின் அதிகபட்ச வசூலை எடுத்த 3 இடியட்ஸ் மற்றும் டபாங் படங்களை அசால்ட்டாகப் பின் தள்ளியிருக்கிறது ஒரு மாநில மொழிப் படமான எந்திரன்.
இதுவரை இந்தியப்படம் என்றால் அது பாலிவுட் படம் தான் என்று நினைத்துக்கொண்டு இருந்த பல வெளிநாட்டுக்காரர்கள் தமிழ்ப்படம் என்று ஒரு மாநில மொழிப் படமும் உள்ளது என்று தெரிந்துகொண்டுள்ளார்கள்.
பல நாடுகளில் எந்திரன் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
தென் இந்திய ஊடகங்கள்
தென் இந்திய ஊடகங்கள் பல சன் டிவி மீதுள்ள கடுப்பிலும் ரஜினி மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்விலும் எந்திரனை பற்றி அவதூறான செய்திகளைக் கொடுத்தாலும் அது எந்த விதத்திலும் எந்திரனின் வெற்றியைப் பாதிக்கவில்லை.
சன் டிவி படம் என்பதால் வட இந்திய ஊடகங்கள் எந்திரனைப் பற்றிய செய்திகளைப் புறக்கணிக்கும் என்று நினைத்து இருந்தேன் ஆனால், அதற்குச் சம்பந்தமே இல்லாமல் போட்டிப்போட்டுக்கொண்டு எந்திரன் புகழ் பாடிக்கொண்டுள்ளன.
நம்மைக் கிண்டலடிப்பவர்கள் வாயாலே நம் மாநிலப்படம் புகழப்படும் போதும் ரஜினி ரசிகன் என்பதைத்தாண்டி தமிழனாக எனக்கு அதிக மகிழ்ச்சி.
வட இந்திய ஊடகங்கள் ரஜினியை தாறுமாறாக உயர்த்தி பேசுவதற்கு ஒரு முக்கிய காரணம், ரஜினியின் அடக்கம் மற்றும் அலப்பறை இல்லாத நடவடிக்கையாகும்.
வட இந்திய பெரிய திரை நாயகர்கள் ஊடகங்களிடம் பந்தாவுடனே நடந்து கொள்வார்கள்.
செய்தியாளர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டவர்கள் பலர் ஆனால் ரஜினியின் எளிமை வெளிப்படையான பேச்சு என்று பல விஷயங்கள் அவர்களுக்குப் பாலிவுட் நடிகர்களை ஒப்பிடும் போது இவர்களுக்கு வியப்பாகவே இருந்தது.
அதனுடன் படமும் மாபெரும் வெற்றி பெற்றதால் பாலிவுட்டே வயிறு எரியும் அளவிற்கு ஊடகங்கள் புகழ்ந்து விட்டார்கள்.
ரஜினியை கிண்டலடித்துக்கொண்டு இருந்த பலர் கூட எந்திரனுக்குப் பிறகு ரஜினியின் ரசிகர் ஆகி விட்டார்கள்.
தமிழனின் பெருமையைத் தரணியெங்கும் உயர்த்திய எந்திரன் மேலும் பல வெற்றி பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன்.
சன் டிவி & ஷங்கர்
என்னதான் ரஜினி என்ற காந்தம் இருந்தாலும் எந்திரன் படம் மாபெரும் வெற்றி பெற சன் டிவி யும் ஷங்கரும் ஒரு முக்கிய காரணமாகும்.
சன் டிவி இல்லை என்றாலும் எந்திரன் வெற்றி பெற்று இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு பெரிய வெற்றி அடைய சன் டிவி யும் ஒரு காரணமாகும்.
படத்திற்கு தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களிலும் சிறப்பாக மார்க்கெட்டிங் செய்தார்கள்.
ரஜினியின் புகழ் பெருமளவில் சென்றடைய இவர்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
இதற்காக ஒரு ரஜினி ரசிகனாகச் சன் டிவி க்கு நன்றி தெரிவிக்கிறேன் (பல கோபங்கள் இருந்தாலும்)
எந்திரனை கிண்டலடிப்பவர்களே! நீங்கள் கிண்டலடித்த, திட்டித்தீர்த்த படம் தமிழனின் பெருமையைப் பல நாடுகளில் பறை சாற்றியிருக்கிறது என்பதை பிடிக்கின்றதோ இல்லையோ! ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ரஜினி, சன் டிவி எதிர்ப்பு என்ற அளவில் யோசிக்காமல் ஒரு தமிழ்ப்படம் என்ற அளவில் பாருங்கள் பெருமையை உணர்வீர்கள்.
ரஜினியை திட்டிக்கொண்டு இருப்பவர்கள் பின் வரும் ஜென் கதையைப் படியுங்கள். ரஜினி ஏன் பலர் ஏசும் போது அமைதியாக இருக்கிறார் என்று புரியும்.
ஜென் கதை
(நன்றி http://www.tamilpaper.net)
ஒரு ஜென் துறவி மல்யுத்தத்தில் கைத்தேர்ந்தவர்.
அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார்.
தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது.
இந்தக் கோபக்காரருக்கு ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை. ‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.
அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார். ‘நீ தைரியமான ஆளா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.
துறவி மெல்லப் புன்னகை செய்தார் ஆனால், ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது. ‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.
அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.
இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
வணக்கம் கிரி அவர்களே
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ரஜினி ரசிகனாக மட்டுமல்ல ஒரு தமிழனாக நாம் எல்லோருக்கும் பெருமைதான்.மேலும் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் இடையில்கணிசமான இடைவெளி விடுகிறீர்கள்.இப்படி ஒரு பதிவுக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் என்ன செய்வோம்.
நன்றி
அன்புடன்
இளவரசன்
கலக்கிட்டிங்க… சூப்பர்..
தமிழுக்கும் நம் தமிழருக்கும்
கிடைத்த பெருமை…….
நம் சூப்பர் ஸ்டார் ரஜினி……
நல்ல இடுகை கிரி. இந்தவாரம் சிவாஜி, தலைவரோட பேட்டி அப்புறம் தீபாவளி… 🙂
கத சூப்பர் 🙂
தமிழ்நாட்டை இந்தியாவில் ஒரு அங்கமாக கருதுகிறார்களா, என்று எனக்கு சந்தேகம் உண்டு .இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக வேறு மாறி இயங்குகிறது .
ரஹ்மான் , தலைவர் போன்ற சிலரால் தான் கொஞ்சமாவது வாடா இந்தியர்கள் தமிழ் நாட்டின் முக்கியத்துவத்தை அறிகின்றனர் .
wowwwwwwwwwwwwwwwwwwwww கிரி எவளவு நாள் ஆச்சு இப்படி ஒரு கலக்கல் பதிவ பாத்து……
அதுவும் தலைவர் ஸ்டைல் ல finishing ல ஒரு குட்டி கதை பிண்ணிடீங்க தல
ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துகள் உங்க பையனுக்கு
இடது பக்கம் நான்குபேர் தேவையில்லாமல் மூக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். படிக்க இடைஞ்சலாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது ஒரு மூலையில் இட ஒதுக்கீடு செய்துவிடுங்களேன்.
//இப்படி ஒரு பதிவுக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் என்ன செய்வோம்//
இப்படியெல்லாம் பிரஷர் கொடுக்கக்கூடாது. நேரம் கிடைக்கும்போது எழுதினால்தான் ஜாலியா இயல்பாக இருக்கும்.
//இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’//
அருமை…
எத்தனை நாளுக்குத்தான் – “ஓம் சாந்தி ஓம்” படத்துல வர மாதிரி – தென்னிந்திய படங்களை, “ராஸ்கல் – mind it ” னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க…
இந்த சவுக்கடி தேவைதான். 🙂
போடா லுசுப்பயலே… நீயும் உன் செய்தியும்…
கிரி….
வழக்கம் போல் கலக்கி விட்டீர்கள்……
ரஜினி போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் தான், பாலிவுட் போன்ற மலைகளுக்கு ஈடு கொடுத்து கோலிவுட்டும் பதிலடி கொடுக்க முடிகிறது என்பது உண்மை…
யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கோள்ளா விட்டாலும், “எந்திரன்” படைத்த சாதனை மகத்தானது என்பதை மறுப்பதற்கில்லை….
உண்மையான, நேர்மையான வசூல் விபரம் தெரிய வந்தால், எனக்கு தெரிந்த வரை, இது வரை ”எந்திரன்” 400 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்க வாய்ப்பிருக்கிறது….
பிரமாதம் கிரி 🙂
மேலே யாரோ சொன்னது போல, கிரி ஸ்டைலில் இப்படி ஒரு பதிவை படித்து கொஞ்ச நாள் ஆகியதை போல உணர்ந்தாலும், இந்த பதிவு அந்த நினைவை அழித்து விட்டது.
அந்த மல்யுத்த கதை அருமை, இதையே சுவாமி விவேகானந்தர் ” மவுனமே மிக பெரிய தண்டனை” என்று சொல்லி இருக்கிறார்.
இன்று உங்களுக்கு என் இரண்டாவது நன்றி :-).
கமலின் படம் 60 கோடி போட்டு 250 கோடி வசூலானது (417 விழுக்காடு).
ரஜினி படம் 165 கோடி போட்டு இதுவரை 300 கோடி வசூல் என்றாலும் 417 விழுக்காடு தாண்ட 688 கோடி வரவேண்டுமே.
உண்மைதான்
க க போ
IT TRUE INDIANS FILEM AR NO BOLLWOOD THEY ARE CHEATING IN SINGAPORE TOO THE SAME BUT OUR TAMILA TOO CONDEM TAMIL FILEM AND PRAISE HINDI FILEM
எனக்கு பொதுவா வட இந்தியர்களை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது காரணம் அவர்களுக்கு தென் இந்தியர்கள் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான். நம்மை மதிக்கவே யோசிப்பார்கள் கேலியும் கிண்டலுமாகத் தான் பேசுவார்கள். நான் பணி செய்த இடங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். அதனாலே எப்போதெல்லாம் நாம் அவர்களை விட உயர்ந்து நிற்கிறோமோ அந்த சமயங்களில் எல்லாம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.
சரியா சொன்னீங்க கிரி எனக்கு அந்த அனுபவம் உண்டு
நம்மை கிண்டலடிப்பவர்கள் வாயாலே நம் மாநிலப்படம் புகழப்படும் போதும் ரஜினி ரசிகன் என்பதைத்தாண்டி தமிழனாக எனக்கு அதிக சந்தோசம் என்பது சற்றும் மிகையல்ல.
repeat
எல்லா புகளும் ரஜினிக்கே…
>>எனக்கு பொதுவா வட இந்தியர்களை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது (வழக்கம்போல ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் அது மிகக்குறைவு) காரணம் அவர்களுக்கு தென் இந்தியர்கள் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான். நம்மை மதிக்கவே யோசிப்பார்கள் கேலியும் கிண்டலுமாகத் தான் பேசுவார்கள்.
கிரி, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சமீபத்தில் வெளி வந்த 3 idiots படத்தில் கூட ‘சதுர் ராமலிங்கம்’ என்ற பெயரில் silencer என்று ஒரு மட்டமான நகைச்சுவை.
பொருத்தமான ஜென் கதை.
உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!
kimi
//போடா லுசுப்பயலே… நீயும் உன் செய்தியும்…//
குழந்தை kimi ; நீங்க ஒரு தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒரு வட இந்தியர் என்பது எமக்கு புரிகிறது. அதுதான் இந்தளவுக்கு உங்களுக்கு கடுப்பு வருகிறது போலும். ஆனாலும் ரஜினி உங்களைபோன்றவர்களுக்கு இம்புட்டு பெரிய ஆப்பை வைக்ககூடாத இடத்தில வைச்சிருக்க கூடாது, உங்களால அந்த ஆப்படிச்ச இடத்து எரிவை தாங்க முடியலயில்ல?
ஆப்பு வெரி வெரி ஸ்ராங்………………………
Jeya Ganesh
//கமலின் படம் 60 கோடி போட்டு 250 கோடி வசூலானது (417 விழுக்காடு).
ரஜினி படம் 165 கோடி போட்டு இதுவரை 300 கோடி வசூல் என்றாலும் 417 விழுக்காடு தாண்ட 688 கோடி வரவேண்டுமே.//
சூப்பர் காமடி பாஸ், இந்த 250 கோடிய விக்கிபீடியாவில யாரோ ஒருத்தன் போட்டதும் போட்டான், இங்க சிலபேரு இம்சை தாங்க முடியல.
கண்ணா சிவாஜி வசூலை தசாவதாரம் தாண்டினதுக்கு உங்க கிட்ட இருக்கிற ஒரே சாட்சி விக்கிபீடியாவில இருக்கிற லிங்தான். இதை வேறு சில கமல் ஆதரவு இணையதலன்கால் அப்பிடியே காப்பி பேஸ்ட் செய்திருந்தன.
இந்த ரிப்போட் எவளவு காமடியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் என்கிறதை
அந்த லிஸ்டில பத்தாவது இடத்தில திருட்டுபயலே இருக்கிறத பாத்தாலே புரிஞ்சிக்கலாம்.
இதே விக்கி பீடியாவில http://en.wikipedia.org/wiki/Kamal_Haasan இந்த லின்கில
‘2000s: Hey Ram and onwards’ என்கிற தலைப்பில எந்திரன் ரிலீசிக்கு முன்னாடியே
//In 2008, Haasan appeared in K. S. Ravikumar’s Dasavathaaram portraying ten distinct roles in the venture, which remains one of the most expensive Indian films ever made.[26] Featuring Haasan opposite Asin Thottumkal, the film became the ***second highest grossing film ever*** in Tamil cinema and won Haasan critical praise for his performance //
அப்பிடின்னு போட்டிருக்கிறாங்க.
இது எப்பிடி இருக்கு, இதுக்கு என்ன சொல்லுறீங்க?
கண்ணா விக்கி பீடியாவை யாரும் எடிட் செய்யலாம் என்கிறது உங்களுக்கு தெரியுமா? அத கன்ரோல் பண்ணிறவர் கமல் ரசிகா இருந்தா 250 கோடியென்ன 5000 கோடின்னும் போடலாம். ஒட்டு மொத்த தமிழ் இண்டஸ்ரியும் மீடியாக்களும் சிவாஜியை ஆல் டைம் பாக்ஸ் ஆபீஸ் அளவீடா கணிக்கும்போது ஒன்றிரண்டு இலத்திரனியல் ஊடகங்கள் மட்டும் தசாவதாரம்தான் என்றால் அது முழு சோத்தில பூசணிக்காயை மறைக்கிற மாதிரி, அதுகூட விக்கிபீடியா நியூசிட காப்பி பேஸ்ட்தான்.
கந்தசாமி, வேட்டைக்காரன், அயன், ஆதவன் என எல்லா படங்களுமே தங்களோட வெற்றியின் அளவை எதுக்கு சிவாஜி கூட எதுக்கு கம்பார் பண்ணிக்கணும்? தசாவதாரம் கூட யாருமே எதுக்கு கம்பார் பண்ணிக்கல?
கலைப்புலி சேகரன் ஆதவன் திரைப்படம் சிவாஜி வசூல மிஞ்சிவிட்டதா கதை வந்தபோது சொன்னது “முதல்ல சந்திரமுகியோட வசூலை ஏதாவதொரு படம் தாண்டட்டும் அப்புறம் சிவாஜியை பாத்துக்கலாம்” என்கிறதுதான். கமலஹாசன், ரவிக்குமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் உட்பட தமிழ் சினிமாவில இருக்கிற அத்தினை பேருக்கும் இந்த உண்மை தெரியும்.
அப்புறம் இந்த பசங்க படம் 1 கோடிக்குள்ள தயாராகி பத்து கோடிக்குமேல வசூலிச்சிது, அதோட விழுக்காடு 1000 இக்கு மேல அப்பிடின்னா தசாவதாரம் 600 கோடிக்கு அதிகமாவா வசூலை எடுத்திது?
காமடி பண்ணலாம் அதுக்காக இப்பிடியா?
ரஜினிதான் இந்திய சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்பது “சூரியன் கிழக்கிலே உதிக்கும்” என்று கூறுவது போன்றது, இல்லை சூரியன் வடக்கில்தான் உதிக்கிறதென்று நீங்கள் சொன்னால் உங்களை யாரும் இனி எதுவும் கேட்க்க மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு புரியும்.
தலைவா நான் காமெடி பண்ணல. தசாவதாரம் பற்றி தொழில் முறையாக எனக்கு தெரிந்ததை சொன்னேன். விக்கி பற்றியும் நன்றாகவே தெரியும்.
எந்திரனை பற்றி நான் விவாதம் செய்தால் படத்தின் சில விசயங்களைப் பற்றி நீங்களும் கொஞ்சம் யோசிப்பீர்கள் நண்பரே…..
ரஜினிதான் இந்திய சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றால் அவர் வந்த ஒரு படத்தின் மூலமாக பிரமிட் சாய்மிரா என்னும் நிறுவனம் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதே.
நம் தமிழும், சூப்பர் ஸ்டாரும் ஜப்பானில் எப்படி உள்ளது என்று பாருங்கள்.
//தசாவதாரம் பற்றி தொழில் முறையாக எனக்கு தெரிந்ததை சொன்னேன். விக்கி பற்றியும் நன்றாகவே தெரியும். //
அப்பிடி தெரிந்திருந்தால் 250 கோடி வசூலு, விழுக்காடு அப்பிடி இப்பிடின்னு காமடி பண்ணியிருக்க மாட்டீங்க நண்பா.
//எந்திரனை பற்றி நான் விவாதம் செய்தால் படத்தின் சில விசயங்களைப் பற்றி நீங்களும் கொஞ்சம் யோசிப்பீர்கள் நண்பரே…..//
விவாதத்திற்கு நான் தயார், என்னத்தை விவாதம் செய்தாலும் எந்திரன் வசூல் சாதனை படைத்த சரித்திரத்தை மாற்ற முடியாது கண்ணா.
//ரஜினிதான் இந்திய சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றால் அவர் வந்த ஒரு படத்தின் மூலமாக பிரமிட் சாய்மிரா என்னும் நிறுவனம் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதே.//
உங்கள் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது, பிரமிட் சமீரா இல்லால்போனதுக்கு நிறைய படங்கள் காரணம் கண்ணா. இருந்தாலும் குசேலனை எடுத்துக் கொண்டால் ரஜினி எவளவோ சொல்லியும் அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டப்பட்டது சமீராவின் பிழையான வியாபார அணுகுமுறை, ரஜினி வடிவேலுக்கும் எனக்கும் 25 வீதம் பசுபதிக்கு 50 வீதம் படத்தில் பங்கு என்பதை பல தடவை வெளிப்படையாக கூறியபிறகும் சமீரா அதிக விலை கொடுத்து வாங்கியதில் ரஜினியின் தவறு என்ன இருக்கிறது? .
அப்படி பார்த்தால் அது கவிதாலயாவினதும் சமீராவினதும் தவறுதான், தங்க முட்டை இடும் வாத்து கிடைத்தது என்பதற்காக ச்டமீரா வாத்தை வெட்டி அதிக முட்டையை ஒரீநாளில் தேடினால் பிழை வாத்துமேலா? வெட்டியவன் மேலா?
ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்பதற்காக எல்லா படங்களுமே சாதனைகளை முறியடிக்க வேண்டுமென்றில்லை கண்ணா, அப்படி உலகில் எந்த நடிகருமில்லை. ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு சிறந்த உதாரணம், ரஜினியின் படு தோல்விப்படமான பாபாவின் வசூலையும் குசேலனின் ஓப்பினிங்கையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
அப்புறம் கமலால காணாம போனவங்க பட்டியல் ரொம்ப ரொம்ப பெரிசு கண்ணா……
//நம் தமிழும், சூப்பர் ஸ்டாரும் ஜப்பானில் எப்படி உள்ளது என்று பாருங்கள்.//
ஹி ஹி கல்லை கல்லா பார்த்தா கல்லு, அதையே கடவுளா பார்த்தா அது கடவுள், அது பாக்கிறவன் கண்ணில்தான் இருக்கு, நொள்ளை கணால பார்த்தா எல்லாமே நொள்ளயாத்தான் தெரியும்.
வேற யாரவது இந்திய நடிகர்களை ஜப்பானியர்களுக்கு தெரியுமா? இந்த வீடியோவை காமடியாகவே வைத்துக்கொள்ளுங்கள், ரஜினியை அத்தனை பேருக்கும் தெரிந்திருக்காவிட்டால் அப்படி ரியாக் பண்ணியிருப்பார்களா? இதிலிருந்தே ரஜினி ஜப்பானியர்களுக்கு நன்கு பரிச்சியமானவர் என்பது தெட்டத்தெளிவு.
எம்.ஜி.ஆர் சிவாஜியை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடினா கூடத்தான் தமிழ் நாட்டில சிரிச்சு பாக்கிறாங்க என்கிறதுக்காக அது காமடியில்லை கண்ணா. அதையே ஜெமினி மாதிரியோ ஜெயசங்கர் மாதிரியோ இமிட்டேட் பண்ணினா யாராவது கணக்கெடுப்பாங்களா ? அதேமாதிரித்தான் ஜப்பானில் ரஜினியும், ரஜினிதவிர இந்திய நடிகர்கள் யாரையாவது இமிட்டேட் பண்ணினா யாருக்கும் தெரியாது கண்ணா.
//ஹி ஹி கல்லை கல்லா பார்த்தா கல்லு, அதையே கடவுளா பார்த்தா அது கடவுள், அது பாக்கிறவன் கண்ணில்தான் இருக்கு, நொள்ளை கணால பார்த்தா எல்லாமே நொள்ளயாத்தான் தெரியும்.
அப்புறம் கமலால காணாம போனவங்க பட்டியல் ரொம்ப ரொம்ப பெரிசு கண்ணா…… //
நண்பரே நான் ஒன்றும் கமல் ரசிகன் இல்லை. ரஜினியைப் பற்றி மட்டுமே நான் பேச விரும்புகிறேன். வசூலில் சாதனை என்பதை இனி யாராலும் மாற்ற முடியாது.
ஜப்பான் விசயத்தையும் நான் வெறும் mimic ஆகத் தான் பார்த்தேன்.
//நண்பரே நான் ஒன்றும் கமல் ரசிகன் இல்லை. ரஜினியைப் பற்றி மட்டுமே நான் பேச விரும்புகிறேன். வசூலில் சாதனை என்பதை இனி யாராலும் மாற்ற முடியாது.//
தசாவதாரத்தோட வசூலோடு எந்திரனது வசூலை விழுக்காடு போட்டு ஒப்பிட்டதால் கமல் ரசிகர் என கருதவேண்டி வந்தது, நன்றி.
போங்க டா…..முட்டாள்கள்………கமல் 60 கோடி போட்டு 250 கோடி எடுதததுல்லாம் சும்மா…முதல்ல 150 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுத்தா… முதல் எடுக்கறதே கஷ்டம் டா……..மங்கூஸ் மண்டைங்கள…..அது தலைவர் ஒருவரால் மட்டுமே முடியும் டா…
முடிந்தால் எவனையாவது வச்சு படம் பண்ணி பாருங்க ….முடிவே இதே blog ல விவாதிப்போம் ……….
NDTV சர்வே கருது கணிப்பு சொல்லுயது யார் இந்திய திரையுலகின் முதல்வன் என்று…
அன்புடன்
மதுரை மாவட்ட சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்தின் புகழ் பரப்புகுழு……
மதுரை மாவட்ட ரஜினி மக்கள் பொது நல இயக்கம்……..
பதிவு தலைவர் படம் மாதிரி கலக்கல். சூப்பர்…..
Luckily in Singapore and Malaysia, tamilan population is higher than Hindi speaking people. 🙂
entha pottiyum illama intha ore oru padam mattum oor poora oodina 100 aayiram kodi vasool pakkalam
போடா panni
இனி சன் டிவி ஆட்டம் தங்க முடியாது நண்பா… கடுப்பா இருக்கு… எல்லாம் தலைவரோட நல்ல மனசு தான் காரணம்… இனி அவர் அவங்க கூட படம் பண்ண கூடாது..வேற நல்ல தயாரிப்பாளர வளர்த்து விடனும், அது தலைவரால் தான் முடியும்…
கிரி,
நல்ல பதிவு.. வட இந்தியர்களை பற்றிய உங்கள் கருத்து அருமை.. நம்மவர்கள் அந்த்ராவில் இருந்து வந்தாலும், கேரளாவில் இருந்து வந்தாலும் அங்கே போனால் மதராசி தான்.
சாமியோவ் இன்னும் எத்தனை நாளைக்கு தசவதாரம்னு சொல்ல போறீங்க.. மொதல்ல பழைய பெருமை பேசறது நிறுத்துங்க.. எப்போ பார்த்தாலும், நாயகன், மூன்றாம் பிறை, அபூர்வ சஹோதரர்கள், தேவர் மகன் ஹைதர் காலத்து படம் சொல்ல போறேன்களோ தெரியல.. நம்ம கோமாளிக்கு சரக்கு ஸ்டாக் தீர்ந்து ரொம்ப நாளாச்சு… அவரும் கதை எழுதினர், எழுதறார், எழுதுவார் .. வெறும் கதை தான் அது சினிமாவா வருமா வராத… வடிவேலு காமெடி பீஸ் மாதிரி … வரும் ஆனா வராது தான்” தசவதாரம் தயாரிச்சா ஆஸ்கார் ரவி கம்முனு கிறார்… நீங்க ஏன் சார் கடந்து அல்லாடறீங்க … அடுத்து என்ன படம் அது,… மன்மதன் அம்பா… நசுங்கின சொம்பா வரட்டும் பாக்கலாம். எந்திரன் தமிழர் பெருமையை உலகெங்கும் பெசவேச்சத பத்தி பதிவு போட்ட அத பத்தி பேசுங்க அத விட்டு…என்னமோ போங்க பாஸ்.. அந்தாளு ரசிகரும் கோமாளி மாதிரி தான் போல… காமெடி பிசுங்க..
கிரி, என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் நம் சக நண்பர்களுக்கும்
காமேஷ்
Thalaivar padam maathiriye viruvirupana padhivu. ENDHIRAN vetri tamizhargaluku perumai enbadhai yarum marukka mudiyadhu.
Kadhai vegu arumai.
Thank u sir.
HAPPY DEEPAVALI
kimi
//போடா லுசுப்பயலே… நீயும் உன் செய்தியும்…//
கிமி ஓடி போய்டு …,மறுபடியும் இந்த ப்ளாக் பக்கம் வராதே …,நான் முதல்ல மரியாதையா கமெண்ட் போடுவேன் …,மறுக்கா வந்தே …,அம்புடுதேன் சொல்லிட்டேன் …,
கிரி ,
பதிவு கலக்கல் …,இத இத தான் எதிர் பார்த்தேன் ….,
உங்களுடைய இந்த தென்னிந்திய மற்றும் தமிழ் இன உணர்வு இந்த தமிழனை அப்படியே புல்லரிக்க வைத்து விட்டது. இன்னமும் சொரிந்து கொண்டே இருக்கிறேன்.
எந்திரன் ஓடியதை வட இந்திய தொலைகாட்சிகள் புகழ்ந்து கொண்டே இருக்கட்டும் விடுங்கள். இங்கே தமிழ்நாட்டில் சன் குழும தமிழ், தெலுங்கு தொலைகாட்சிகளைத் தவிர பொதிகை, விஜய், ராஜ், ஈ, மா, ஜி என நிறைய தொலைகாட்சிகள் உள்ளன. ஒரு மாத காலம் ஆகியும் எதிலும் ஒரு டிரைலர்/பாடல் கூட வரவில்லையே ஏன்? இந்த எல்லா தமிழ் தொலைகாட்சிகளிலும் எந்திரனில் ரஜினியின் உதவியாளராக வந்த சந்தானம்தான் வருகிறார் போங்க. எந்திரன் நூறு நாள் ஓடுவதற்காக கலாநிதி மாறனும், சக்சேனாவும் சொன்னால் திரை அரங்க வாசலில் நின்று கொண்டு நுழைவுச்சீட்டைக்கூட சூப்பர் ஸ்டார் கிழித்துக்கொடுக்க வேண்டிய நிலைமையில்தான் தமிழனின் பெருமையை தரணியெங்கும் உயர்த்திய எந்திரன் படத்தின் இன்றைய அவலமான நிலைமை தமிழகத்தில்.
வட இந்திய தொலைகாட்சிகளுக்கு கஷ்மீரில் குண்டு வெடிப்பதுதான் செய்திகளாக எப்போதும் தெரியும். ஆனால் இங்கே ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கொல்லப்படுவது செய்திகளாக தெரியாது. கிரிக்கெட்டிலும் மும்பை அணி தோற்றது என்றுதான் கீழே போடுவார்கள் ஓட விடுவார்கள். சென்னை அணி கோப்பை வென்றது என்று சொல்ல மாட்டார்கள். அப்படிபட்டவர்களா எந்திரனை புகழ்கிறார்கள் என்பதில் ஏதோ உள்விசயம் இருக்கிறதே. வட இந்திய தொலைகாட்சிகள் எந்திரனை புகழ்வதின் அர்த்தம் உங்களுக்கு இன்னமுமா புரியவில்லை. ரஜினி தன்னை பால் தாக்கரேயின் பக்தர் என்று சொன்னதால் என்னவோ அவர்கள் ரஜினியை இன உணர்வுடன் வட இந்திய சிவாஜிராவ் கைக்வாட் என்று நினைவுபடுத்தி எடுத்துக்கொண்டு எந்திரனை புகழ்கிறார்கள் போல தெரிகிறது.
எந்திரனை அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு விட்டு முதல் நாளிலேயே நான்கு காட்சிகளையும் பார்த்து விட்டுதான் இதை எழுதுகிறேன். ரஜினியை எனக்கும் நிறைய பிடிக்கும் நடிகனாக மட்டுமே. முன்பு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவர்கள் இப்பொழுது எந்திரனுக்காக பிளாட்டினம் கொடுத்திருக்கிறோம். இன்னமும் வைரமும், கோமேதகமும் தருவோம். ஆனால் சில காரணங்களால் தமிழர்களாகிய நம்மை விட்டு அவர் விலகி நிற்பதால் கொஞ்சம் மன வருத்தமே தவிர ரஜினி மேல் வேறொரு கோபமும் கிடையாது. அறுபது வயது ஆகியபின்னும், பேரக்குழந்தைகளை பார்த்த பின்னும் இன்னும் எனக்கு மன அமைதி வரவில்லை அதை தேடி இமயமலைக்கு செல்கிறேன் என்கிறார். அவருக்கு அமைதி எங்கே கிடைக்கும் என்று இன்னும் தெரியவில்லை என்றால், சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தில்லாலங்கடி படத்தின் கருவை புரிந்து கொண்டாலே போதும்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். ஆனால் சொல்லிக்கொண்டே இருக்காமல் கட்சி ஆரம்பித்த அந்த துணிச்சல் இன்னும் ரஜினிக்கு வரவில்லையே. “விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி” என்று சொன்ன ரஜினி எதற்கெடுத்தாலும் அந்த விதியையே குறிப்பிட்டு துரோணர் பாலசந்தரிடமும் பதில் அளிப்பது வருத்தமே. குசேலன் படத்திற்காக கர்நாடகத்திடம் நம்முடைய தமிழில் மன்னிப்பு என்று சொல்ல முடியாத மன்னிப்பு கேட்டதும் ரஜினி சொல்லும் தலைவிதிப்படிதானோ. நாம் எந்திரனை ஓடவைப்பதும் அதே தலைவிதிப்படிதானோ.
பிரபு அவருடைய வீட்டு கல்யாணத்திற்கு ரசிகர்ளுக்கு விருந்து வைத்தார். இவரோ கூட்ட நெரிசல் இருக்கும் யாரும் வரவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். உரிமையுடன் நாமெல்லாம் கேட்ட பின்பு, விருந்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
சத்யராஜ் பணமே வாங்கிக் கொள்ளாமல் அவருடைய கொள்கைக்காக பெரியார் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். ரஜினியோ குரு மகாஅவதார் பாபாஜி பற்றி படம் எடுக்கிறேன் என்று சொல்லி படம் எடுத்து அதை 120 கோடிக்கு வியாபாரம் செய்து பின்னர் அடிபட்டு 40 கோடியை திருப்பிக்கொடுத்தார். இந்த கொள்கை வித்தியாசத்தில் அவர் ரொம்பவே விலகிச்சென்று விட்டார்.
பாபா படத் தகராறுக்காக அமைதியாக இல்லாமல் பா.ம.க.வைத் தோற்கடிக்க எதிர்த்து நம்மை வேலை பார்க்க முழு வீச்சில் சொல்லாமல் சொன்ன, கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பகவான் கிருஷ்ணனின் தத்துவத்தையே மாற்றி கடமையை செய் பலனை எதிர்பார் என்று சொன்ன அந்த ரஜினியா இந்த ஜென் துறவி. நல்ல ஒப்பீடுதான் போங்க.
இதேநேரத்தில் விடுதலைப்புலிகள் பற்றிய ரஜினியின் உரை இந்த தமிழனை உற்சாகப்பட வைத்ததையும் உங்களிடம் சொல்லியாக வேண்டும்.
உங்களை மாதிரியான ரசிகர்களோ ரஜினிதான் ஒரே நடிகர். மற்றவர்களோ யாரும் அவர் அருகில்கூட வரமுடியாது என்கிற மாதிரி மற்றவர்களுடன் தகாத அளவிற்கு திட்டி சண்டை போடுகிறீர்கள். இதை பார்த்தால் எனக்கு நிறைய ஜென் கதைகள் மறந்தே போய்விடுகின்றன.
எந்திரன் என்ற வார்த்தை தமிழ் என்று வரிவிலக்கு கேட்பதால் இனி இந்தியா=எந்தியா, இலங்கை=எலங்கை, இந்திராகாந்தி =எந்திராகாந்தி என்றுதான் நம் தமிழில் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட உங்கள் தமிழ் உணர்வும் என்னை மேலும் பெருமைப்பட வைக்கிறது.
நான் உங்கள் யாரையும் கலாய்க்கவில்லை. ஆனால் கலாய்த்து விட்டேன் என்று நீங்கள் நினைத்தால் இந்த தமிழன் சிறிதும் பொறுப்பில்லை.
அனைவருக்கும் சன் படி சொன்னால் தீபாவளி, கலைஞர் படி சொன்னால் தீப ஒளி வாழ்த்துகள். இந்த தமிழனுக்கு நவம்பர்5 அக்டோபர்1 அன்றே முடிந்து விட்டது.
குமார் சார்,
ரஜினிக்கு, கர்நாடக கிட்டே வருத்தும் தெரிவிச்சா இங்க தமிழ்நாட்ட்லே அவருக்கு என்ன பிரச்சினை வரும்னு தெரியாதுன்னு நினைகிறங்க்லா?
எல்லாம் தெரிஞ்சும் அவர் வருத்தும் தெரிவிசார்ன்னு சொன்னா, அங்கே படம் ரிலீஸ் ஆகர அன்னைக்கி யாருக்கும் முக்கியமா படம் பார்க்க வரும் ரசிகருக்கு எந்த பிரச்சினயும் வரகுடதுன்னுதன் சார்.!!!
குமார் சார், சப்ப காமெடி சார் நீங்க..
//ரஜினி தன்னை பால் தாக்கரேயின் பக்தர் என்று சொன்னதால் என்னவோ அவர்கள் ரஜினியை இன உணர்வுடன் வட இந்திய சிவாஜிராவ் கைக்வாட் என்று நினைவுபடுத்தி எடுத்துக்கொண்டு எந்திரனை புகழ்கிறார்கள் போல தெரிகிறது.//
சூப்பர் காமெடி சார் நீங்க. வடஇந்திய மிடியாக்கள் எந்திரன் வெளியாவதற்கு முன்பிலிருந்தே (பால் தாக்கரேவை பற்றி கூறியதற்கு முன்பே) புகழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நீங்கள் எந்திரனை பற்றி பேசுவதை மட்டும் தான் வடஇந்திய மிடியக்கலில் பார்த்தீர்கள் போல. ரஜினி சார் படம் பூஜைப்போட்டு தொடங்க ஆரம்பித்த உடனேயே வடஇந்திய மிடியக்கலில் அதை பற்றி செய்திகள் பெருமளவில் வரும்…..(பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உட்பட) நீங்கள் எந்திரனை காண்பிப்பது மட்டும்தான் பார்த்திர்கள் போல பாவம்.
உங்களுக்கெல்லாம் அவரை பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு உரிமை இருக்கு. ஆனால் அவருக்கு (ரஜினி சார்க்கு) பிடித்தவர்களை பற்றி கருத்துக்கூற அவருக்கு உரிமை இல்லை. அப்படித்தானே? நல்ல நியாயம் சார். அவர் இதுவரைக்கும் யாருக்கு என்ன கெடுதல் பன்னாரு? இவளோ விமர்சனம் பண்றிங்களே?!! அவர் வேலைய சரியாய் செஞ்சிட்டு இருக்காரு. அரசியலுக்கு வராமலேயே எவளவோ நல்லது பண்ணிருக்காரு. அவரோட ஒரு ஒரு அசைவையும் பார்த்துட்டு இருக்குற எங்கலுக்கு தெரியும் அவரப்பத்தி.
அவர் அரசியலுக்கு எப்போதுவேண்டுமானாலும் வரட்டும். வரும்போது ஆதரிப்போம்…………
//பிரபு அவருடைய வீட்டு கல்யாணத்திற்கு ரசிகர்ளுக்கு விருந்து வைத்தார். இவரோ கூட்ட நெரிசல் இருக்கும் யாரும் வரவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். உரிமையுடன் நாமெல்லாம் கேட்ட பின்பு, விருந்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.//
கூட்ட நெரிசல், ரசிகர்களின் பாதுகாப்பு, ரசிகர்களின் போக்குவரத்து செலவு, இவை அனைத்தையும் மனதில் வைத்து தான் ரசிகர்கள் வரவேண்டாம் என்று சொன்னார். மேலும் தமிழக முதல்வர் முதல், நாட்டில் உள்ள அணைத்து வீ ஐ பி க்களும் வருகிறார்கள். 2000 பேருக்கு பாதுகாப்பு குடுக்கலாம், ரசிகர்கள் 10 லட்சம் பேர் வர தயாராக இருந்தார்கள். 10 லட்சம் பேருக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பது?? ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தீவிரவாதிகள் உள்ளே புகுந்தால் என்ன செய்வது? அனைவரையும் ஒரே நேரத்தில் வரவைத்தால் பெரும் பெரச்சனை ஏற்படும். அதனால் தான் ரசிகர்கள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
திருமணம் முடிந்தகையேடு ரசிகர்களுக்கு தனியாக விருந்து வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று சொன்னார். ரசிகர்கள் வற்ப்புறுத்தி அவர் விருந்தை அறிவிக்க வில்லை. அதிலும் கூட அணைத்து ரசிகர்களையும் ஒரே இடத்தில் வரவைத்தால் அவர்களுக்கு பெரச்சனை என்று நான்கு இடங்களாக (சென்னை, மதுரை, கோவை, திருச்சி) பிரித்து அவர் அவர்களுக்கு அருகில் உள்ள இடங்களில் ரசிகர்களை வரவைத்து விருந்து வைக்க திட்டமிட்டுள்ளார்.
//சில காரணங்களால் தமிழர்களாகிய நம்மை விட்டு அவர் விலகி நிற்பதால் கொஞ்சம் மன வருத்தமே//
எந்த காரணங்களால் சார் அவர் நம்மை விட்டு விலகி நிற்கிறார்?
அவர் தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார், அவர் மகள்களுக்கு தமிழ் நாட்டில் தான் திருமணம் செய்துகொடுத்தார். அவர் வாழ்ந்துகொண்டிருப்பதும் தமிழ்நாட்டில் தான். அவரால் வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழ் திரைகுடும்பங்கள் பல….. பலதடவை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிஇருக்கிறார், நடந்தும் இருக்கிறார்….. அவர் சொந்த ஊருக்குக்கூட பொய்ட்டுவரக்கூடாது போல, பிறந்த இடத்துக்காக சின்ன நல்லதுகூட செய்யக்கூடாதுபோல உடனே தமிழர்களை விட்டு விலகி நிற்கிறார்னு சொல்வீங்க. நல்ல நியாயம் சார் போங்க.
//உங்களை மாதிரியான ரசிகர்களோ ரஜினிதான் ஒரே நடிகர். மற்றவர்களோ யாரும் அவர் அருகில்கூட வரமுடியாது என்கிற மாதிரி மற்றவர்களுடன் தகாத அளவிற்கு திட்டி சண்டை போடுகிறீர்கள்//
நாங்கள் யாரிடமும் சண்டைபோடவில்லை. ரஜினி சார் கஷ்டப்பட்டு உழைத்து இந்த (Superstar) நிலையை அடைந்திருக்கிறார். மற்றவர்கள் அப்பா செல்வாக்கிலும், அரசியல் செல்வாக்கிலும் உள்ளே நுழைந்து, எந்த கஷ்டமும் படாமல், வந்தவுடனே Superstar ஆகா நினைகிறார்கள். நேற்று முளைத்த காளான்களையெல்லாம் அவருக்கு நிகராக வைதுப்பார்கமுடியாது.
உங்களுடைய பல கேள்விகள் குழந்தைத்தனமாக இருக்கிறது. அதற்க்கெல்லாம் பதில் சொல்வதே முட்டாள்தனம்.
ரஜினி சாரை நடிகராக எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதைவிட பலமடங்கு நல்ல மனிதராக பிடிக்கும்…………
நானும் ஒரு ரஜினிரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்………… -ஆனந்த்
நீங்கள் கூரியது உண்மை
super கிரி சார்…
குட் ஆர்டிக்கல்…
பாலிவுட்டை மட்டும் அல்ல, பணமும் வாய்ப்பும் அமைந்தால் நம் தலைவரின் படம் ஹாலிவுட்டையே நொறுக்கிவிடும்.
ரஜினி படம் பார்க்கும் போது வரும் புத்துணர்ச்சி, மிகையான சந்தோசம் மற்றும் நல்ல அனுபவம் வேற எந்த படத்திலும் கிடைப்பதில்லையே…..
மேலும் எந்திரன் உருவான விதத்தை (Making of Enthiran) தீபாவளியன்று டிவி இல் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை. தலைவர் பட்ட கஷ்டங்களை பார்த்து கண்கள் கலங்கியது. பட்ட கஷ்டங்களுக்கு பலனாக மாபெரும் வெற்றியை ஆண்டவனே கொடுத்துவிட்டான்.
எந்திரன் உருவான விதத்தை பற்றி நீங்க ஒரு ஆர்டிக்கல் எழுதுங்க கிரி சார் ப்ளீஸ்…
டேய் ***** முதல்ல கன்னட ***க்கு காவடி தூக்குறத நிறுத்து. நீ தமிழன் என்று அப்புறம் சொல்லலாம்.
ம்ம்ம்… ஜென் கதையெல்லாம் போட்டு அசத்துறீங்க…
இங்க பாருங்க நான் கமலின் தீவிர ரசிகன் . நான் யார்க்கும் காவடி தூக்க விரும்பல .ரஜினி நடிச்ச தனல தான் படம் நல்ல ஹிட்.அதே நேரத்ல .ஹாலிவுட் படத்த வாய் பிளந்து பார்த்த காலம் மலையேற போகுது.
சூப்பர் ஸ்டார் எங்கோகோகோகோகோகோ! வி ஆர் ப்ரௌட் ஒப் இந்தியன்ஸ்.you ஓனே know rajini birth place TN Krishnagiri
ஏய் பாலா முருகன் அவர்களே, கன்னடம், தமிழ் என்று பிரித்து பார்த்து ரஜினியை ஒதுக்க வேண்டாம் ஏனென்றால் தமிழன் என்று கூறும் கமல் தமிழ் படத்தை வெளி நாடுகளான ஜப்பானில் பெருமை paduthinnana என்று பார்க்க வேண்டும் பிறகு பேச வேண்டும் ரஜினியின் பல படங்கள் மொழி தாண்டி வெற்றி பெற்றதை தமிழன் நன்றி வைக்க வேண்டும். பாலா முருகன் பார்த்து பேசுங்கள் வார்த்தைகளை கன்னடம் தமிழ் என்று பிரிக்காமல் இந்தியன் என்று பாருங்கள். இந்தியா வேர்ல்ட் கப் வெற்றி பெற்ற பொது அஷ்வின் டீமில் இல்லை என்றாலும் நாம் இந்தியன் என்று பெருமை பட்டோமே