Aavesham (2024 Malayalam) | A Comedy Gangstar

2
Aavesham

டிப்பில் அசத்தி வரும் பகத் பாசில் படமான Aavesham எப்படி உள்ளது என்று பார்ப்போம். Image Credit

Aavesham

கல்லூரியில் ஜூனியர் மாணவர்களைச் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்கிறார்கள். இதில் பிரச்சனையாகி ஜூனியர் மாணவர்களைச் சீனியர் மாணவர்கள் பொளந்து விடுவார்கள்.

இதனால், கடுப்பான ஜூனியர் மாணவர்களில் மூவர், சீனியர் மாணவர்களைக் கேங்ஸ்டர் வைத்து அடிக்கத் திட்டமிடுவார்கள்.

அவ்வாறு திட்டமிட்டு கேங்ஸ்டர் வரும் இடங்களான மதுபானக் கூடங்களுக்குச் செல்வார்கள். அங்கே வரும் கேங்ஸ்டர் பகத்திடம் உதவி கேட்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது? பகத் நட்பைப் பெற்றார்களா? சீனியர் மாணவர்களுக்கு என்ன ஆனது? என்பதை நகைச்சுவை கலந்து கூறி இருப்பதே Aavesham.

நகைச்சுவை கேங்ஸ்டர்

எந்தக்கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக செய்பவர் பகத். இக்கதாபாத்திர உடல் இவருக்குப் பொருத்தமில்லையென்றாலும், ஓரளவு நம்பும் படி செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக அவர் இளைமை காலகட்டத்தில் அவருடைய Short Haircut அவரை அப்படியே வேறு தோற்றத்தில் காட்டுகிறது.

பகத்துக்கு உண்மையாகவே சண்டை போடத் தெரியுமா? தெரியாதா? என்பதை இறுதிவரை சந்தேகத்துடனே நம்மை வைத்துள்ளார்கள். இதற்கு கூறும் காரணம் இறுதியில் கதை முடிவுக்கும் வலு சேர்க்கிறது.

பகத்தை பெங்களுரு கேங்ஸ்டராக காட்டுகிறார்கள். எல்லோருமே மலையாளம் பேசுகிறார்கள் என்று இருக்கையில் எதற்கு பெங்களூரு?

கேரளாவில் நடக்கும் கதையாகவே காட்டியிருக்கலாம் காரணம், குறிப்பிடத்தக்க எந்தக்காட்சியும் பெங்களூரையோ கர்நாடகாவையோ நியாயப்படுத்தவில்லை.

நம்ம ஊர் மன்சூரலிகான் இங்கே போன்றே தலையாட்டித் தலையாட்டி அங்கேயும் ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

திரைக்கதை

படம் ஆரம்பத்திலிருந்து குடியாகவே உள்ளதோடு மாணவர்களையும் அதே போல தம்மு, தண்ணி, அடிதடி என்று காட்டுவது கவலையை ஏற்படுத்துகிறது.

இப்படித்தான் உண்மையாகவே உள்ளதா? அல்லது மிகைப்படுத்திக் காட்டுகிறார்களா? என்று தோன்ற வைக்கிறது.

இப்படம் ₹150 கோடி வசூல் செய்துள்ளது ஆனால், இறுதி 30 நிமிடங்கள் தவிர அந்த அளவுக்குப் படத்தில் குறிப்பிட்டு பெரிதாக என்னைக்கவரவில்லை.

திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரே மாதிரி தான் செல்கிறது. மொத்தப்படத்தையும் இறுதிக்காட்சிகள் பரபரப்பாக்கி வெற்றி பெற வைத்துள்ளது.

Hit அல்லது Flop என்ற எல்லையில் உள்ள கதையே! அதாவது ரிஸ்க் உள்ள கதை ஆனால், திரைக்கதையின் மூலம் வெற்றியாக்கி விட்டார்கள்.

சுருக்கமாக எதிர்பாரா வெற்றியாகத்தான் இருக்க வேண்டும்.

இதில் வரும் ஒரு பின்னணி இசை ஒரு தமிழ்ப் படத்தினை நினைவு படுத்துகிறது ஆனால், என்ன படமென்று நினைவுக்கு வரவில்லை.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, பின்னணி இசை ஓகே ரகம்.

யார் பார்க்கலாம்?

Aavesham மிகப்பெரிய வெற்றிப்படம் தான் ஆனால், தமிழ் பார்வையாளர்களுக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகமே.

திருப்பங்களின்றிச் சென்றாலும், இறுதிக்காட்சிகள் படத்தின் மீதான மன நிறைவைக் கொடுப்பது என்னவோ உண்மை தான்.

இன்னும் பார்க்கவில்லையென்றால், எதிர்பார்ப்புகளின்றிப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

பகத்துக்கு சுக்கிர திசை போல, நடிப்பு, தயாரிப்பு என்று இரண்டிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

Amazon Prime ல் பார்க்கலாம்.

Directed by Jithu Madhavan
Written by Jithu Madhavan
Produced by Nazriya Nazim, Anwar Rasheed
Starring Fahadh Faasil, Hipzster, Mithun Jai Shankar, Roshan Shanavas, Sajin Gopu
Cinematography Sameer Thahir
Edited by Vivek Harshan
Music by Sushin Shyam
Release date 11 April 2024
Running time 161 minutes
Country India
Language Malayalam

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த முதல் படத்தில் Kaiyethum Doorath சில காட்சிகளை பார்த்தேன்.. உண்மையில் வியப்பாக இருந்தது.. அவரா இவர் என்பது போல தற்போது படங்களை தேந்தெடுத்து நடித்து வருகிறார்.. இந்த படத்தை நான் ஊரில் இருந்ததால் இதுவரை பார்க்கவில்லை.. பின்பு பார்க்க முயல்கிறேன். இவரின் நடிப்பு என்பது கொஞ்சம், கொஞ்சமாக தன்னை மெருகேற்றி கொண்டு தற்போது மிக சிறந்த நடிகராக உள்ளார்.. இது ஒரு ஆண்டிலோ / சில மாதங்களிலோ நடந்தது அல்ல..

    Kumbalangi Nights படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்.. இந்த ஒரு சிறிய காட்சியிலே செமையா நடித்து இருப்பார்..

    https://www.youtube.com/watch?v=NELPaSD-Fv8

    தயாரிப்பாளராக சில நல்ல படங்களை நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்து உள்ளார்.. பிரேமலு படத்தின் பட்ஜெட் 3 கோடி.. வசூல் 130 கோடிகள் என்பதை உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.. இவரது தயாரிப்பில் வரம் படங்கள் 90% வெற்றி படம் என்பதில் ஐயமில்லை.. தமிழிலும் இவருக்காக ரசிகர் பட்டாளம் இருக்கிறது..

  2. @யாசின்

    இவரைக் கவனித்தால், ஒரு படம் மிகப்பெரிய இலாபத்தைக் கொடுத்தது என்று உடனே மிகபிரம்மாண்டமாக செலவு செய்து அடுத்த படம் எடுக்காமல், திரும்ப அதே போலக் குறைத்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி பெறுகிறார்.

    நம் தமிழ் தயாரிப்பாளாளர்கள் இதைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    உண்மையிலேயே ஒரு தரமான பிரம்மாண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்று செயல்படுவது வேறு, பணம் இருக்கிறதே என்று படம் எடுப்பது வேறு.

    எந்திரன் போன்ற படங்கள் இன்றும் தமிழர்களுக்கு பெருமையளிக்கும் படமாக உள்ளது. எனவே, கதைக்கு, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால், எவ்வளவு பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றி பெறும்.

    ஃபஹத் வித விதமான படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!