Singapore Formula 1 Grand Prix போட்டிகளைப் பற்றி எழுதிய போது படங்களையும் பதிவிடுகிறேன் என்று கூறி இருந்தேன்.
ஆனால், நண்பன் பாபு “நான் ரொம்ப பிஸ் பிஸ் என்று கவுண்டர் பாணியில் கூறி படம் தராமல் இழுத்தடித்து தற்போது தான் கொடுத்தான்.
அது கூட.. யோவ்! இவ்வளோ நாள் செய்தா அடுத்த Formula 1 போட்டியே வந்துடும் போல இருக்குனு கூறிய பிறகு தான் கொடுத்தான்.
இவனை நம்பி வேற நான் ஃபோட்டோ வேற எடுக்கல ஆனா இவன் சொல்லித்தான் போட்டியைப் பார்க்கவே சென்றதால்… மன்னித்து விடுகிறேன் 🙂 .
Singapore F1 Grand Prix
நீங்கள் இது வரை சிங்கப்பூர் Formula 1 Grand Prix 2010 பற்றிய என் இடுகைகளைப் படிக்காமல் இருந்தால் படித்த பிறகு இந்தப்படங்களைப் பார்க்கவும் அப்போது தான் படத்தை உங்களால் ரசிக்க முடியும்.
1. அலறப்போகும் சிங்கப்பூர் – F1 Grand Prix 2010 கோலாகலம்
2. சுவாரசியமான சிங்கப்பூர் Formula 1 Grand Prix 2010
சிங்கப்பூர் அரசாங்கம் கார் பந்தயம் நடத்துகிறது என்றால் அந்தப்போட்டியை மட்டுமே நடத்துவதில்லை உடன் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்து இருக்கும் வெளிநாட்டு உள்நாட்டு பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்துவார்கள்.
அதில் ஒன்று தான் இந்த பழைய கார் அணிவகுப்பு. கார் பழையதாக இருந்தாலும் டக்கரா இருக்கு பாருங்க! 🙂
போட்டி நடக்கும் போது பாதுகாப்பு பணியில் பலர் ஈடுபட்டு இருப்பார்கள் அதில் ஒருவரே இவர். சும்மா நச்சுனு இருக்காரு! இந்த கெட்டப்புல
போட்டியைப்பார்க்க சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். இதில் வயது வித்தியாசம் எதுவுமில்லை.
இந்தப்போட்டியைக் காண வெளிநாட்டில் இருந்து வந்து இருந்த ஒரு குடும்பம் இது.
தனது தந்தையின் தோள் மீது அமர்ந்துகொண்டு காதுக்கு பாதுகாப்பு சாதனம் அணிந்து கொண்டு போட்டியை கவனிக்கும் ஒரு பொடியன்.
இவர் தாங்க ஜிம்பலக்கடி பம்ப்பா ஆப்ரிக்கா அங்கிள் 🙂 .
ஹி ஹி செம ஆட்டம் போட்டாரு! இவங்க இசையமைத்த ஆப்ரிக்க நாட்டு இசைக்கு… ஆடாதவன் கூட ஆடிடுவான் போல! அந்த அளவிற்கு ஒரு அற்புதமான இசை.
போட்டியைப்பார்க்க நேரமானதால் நண்பன் அழைக்கவே வேறு வழி இல்லாமல் செல்ல வேண்டியதாகி விட்டது.
அப்படியும் அவனை 10 நிமிடம் நிற்க வைத்து நடனத்தையும் இசையையும் கொஞ்சம் ரசித்த பிறகே கிளம்பினேன்.
இசை
நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க! மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தும் இசை. எவ்வளவு நேரம் இதைப்பார்த்தாலும் கேட்டாலும் நமக்கு சலிக்காது போல.. அப்படி இருக்கிறது.
இன்னமும் எனக்கு அந்த நிகழ்ச்சியை நேரமின்மையால் முழுதும் ரசிக்க முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கம் உள்ளது. இதை எழுதும் போது கூட அவ்வளவு கஷ்டமாக உள்ளது.
ஏனென்றால் நான் இதைப்போல நடனங்களின் இசையின் தாறுமாறான ரசிகன். நடனம் ஆடும் போது இவர் பார்வையாளர்களை ஆடக்கூறி அவர்களையும் இவர்களது இசைக்கேற்ப ஆட வைத்தது அருமை.
பசங்க பொண்ணுக எல்லாம் உற்சாகமா ஆடியதை பார்த்த போது அந்த இடமே ஒரு ஒரு என்னது அது.. சரி எதோ ஒன்று! சூப்பரா இருந்தது.
போட்டியில் கலந்து கொண்ட கார்கள் எல்லாம் சீறியதை பார்த்த போது யப்பா! ராசாக்களா காரை ஓட்டுறீங்களா புயலை ஓட்டுறீங்களா! என்று நமக்கு சந்தேகம் வந்துடும் அந்த அளவிற்கு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்னு பறக்கறானுக.
கார் திரும்பும் போது முழுதாக பார்ப்பதற்குள் சர்ர்ர்னு போய் விடுகிறது… இதுல ஃபோட்டோ எங்க எடுக்கிறது அப்படியும் நம்ம ஆளு வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துத் தள்ளிட்டான்.
ஃபோட்டோ பார்த்து நல்லா இருக்குனு சொல்லிடுங்க!
“தமிழ்ப்படம்” ல வர மாதிரி “இந்தப்பாடலை பாடியவர் உங்கள் சிவா” என்று போடும் படி எங்களை மிரட்டினார் என்ற வசனம் உங்க நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
மேலும் படங்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அத்தனை படங்களும் அழகு. தெளிவு. தொகுத்தளித்த விதமும் ரசனை. ரகளை:)! பகிர்வுக்கு நன்றி.
கேள்திறனை காப்பாற்றிக்கொள்ள இம்மாதிரி போட்டிகளுக்கு காது பாதுகாப்பு சாதனத்தை எடுத்துச்செல்ல வலியுறுத்துவது நல்லது. தெரியாமல் பார்வையாளர்கள் மாட்டிக்கொள்ளப்போகிறார்கள். நன்றி.
அருமையான புகைப்படங்களின் தொகுப்பு…. சூப்பர்!
படங்கள் அனைத்தும் மிக அருமை கிரி, ஓடும் போது எடுக்கப்பட்டுள்ள அந்த இரு படங்களும் சூப்பர், டயர் கூட தெளிவாக உள்ளது 🙂
மற்ற படி என்னை சந்திக்க உங்கள் நேரத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி, ஆனால் அதிகம் பேச முடியவில்லை.
விரைவில் மீண்டும் சந்தித்து நிறைய பேசுவோம் 🙂
நன்றி!.
படங்கள் அனைத்தும் மிகத்தெளிவாகவும் பிரம்மிப்பு ஏற்படுத்தும் வகையிலும் பிரமாதமாக உள்ளது. தீபாவளி ஸ்பெஷல் மற்றும் இணையம் செய்திகள் போன்றவற்றை தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இனிய முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் கிரி சார்.
வாவ் சூப்பரா இருக்கு அண்ணாச்சி…. போட்டோ எடுத்த பெரிய்ய அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்…
ஆப்ரிக்கன் ஜிம்ம்பலக்கடி பம்பா போட்டோ பாக்கும்போதே யூகிக்க முடியுது என்னமா ஆடி இருப்பர்னு…..
மொத்ததுல எப்படி இருந்தது, அப்படி , இல்லப்பூ சூப்பரா இருந்தது…
“””சிங்க சிங்கபோரே போயடின்களா ??””””
கால் பண்றேன்னு சொன்னீங்க ஆனா ஒன்னும் வந்த போல இல்லையே பாஸ்….
@ராமலக்ஷ்மி நன்றி
@பிரபு அதற்குத்தான் முதல் இரண்டு இடுகையையும் படிக்க கூறி இருக்கிறேன்.
@சித்ரா நன்றி
@சிங்கக்குட்டி நேரத்தை ஒதுக்குனாங்களா! இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலை 🙂
அடுத்தவாட்டி வரும் போது “எங்களுக்கும்” கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க
@பிரவின் நேரம் இல்லாததால் எழுத முடியவில்லை. அடுத்த வாரம் இணையம் பற்றிய செய்திகளை எழுதுகிறேன்
@RK மொத்தத்துல கலக்கலா இருந்தது 🙂
சிங்கக்குட்டி ரொம்ப பிசி குட்டி 🙂
அத்தனை படங்களும் அழகு
ஹாய் கிரி,
புகைப்படங்கள் மற்றும் குறிப்புக்கள் நன்று.
நேரம் கிடைத்தவுடன் உங்களது முந்தைய பதிவுகளையும் படித்து முடித்து தாயிட்று…
அனைத்தும் சூப்பர்