பலரின் எதிர்பார்ப்பு, உழைப்பு பல கோடி முதல் என்று சமீபமாக இந்திய திரையுலகையே கலக்கிய எந்திரன் வெளியாகி விட்டது. சிங்கப்பூர் FDFS 🙂 .
ரோபோவை மனிதனின் உணர்வுகளுடன் தயாரிக்கும் விஞ்ஞானி. அவர் தொழில்நுட்பம் திருடப்பட்டு பிரச்சனைகள் உருவாகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
ரஜினியிடம் இருந்து இப்படியொரு படம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிவாஜியில் விட்டதை ஷங்கர் இதில் பிடித்து விட்டார்.
அதாவது அவரது படங்கள் அனைத்தும் ஷங்கர் படம் என்று கூறப்படும் சிவாஜி மட்டும் அதில் விதி விலக்கு.
ஷங்கர் படம்
இது ஷங்கர் படம் என்று நிரூபித்து விட்டார் கடைசி அரை மணி நேரம் தவிர ஆனால் கடைசி அரைமணி நேரம் அதன் முன்பு உள்ள மொத்த ஷங்கர் படத்தையும் ரஜினி தூக்கி சாப்பிட்டு விட்டார் கிராபிக்ஸ் தவிர்த்து.
ரஜினிக்கு இதில் அறிமுகப்பாடல் இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயிச வசனங்கள் இல்லை அனாவசியமான எந்தக் காட்சியும் இல்லை.
ரஜினியின் அறிமுகமே எந்த வித பில்டப்பும் இல்லாமல் வருகிறது என்றால் நம்ப முடியுமா! வேறு வழி இல்லை நம்பித்தான் ஆக வேண்டும்.
சிட்டி
ரோபோவாக வரும் சிட்டி வந்ததிலிருந்து படம் கலகலப்பாகப் போகிறது.
அவர் சிரிக்காமல் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கில் உள்ளவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. குழந்தைகளைச் சிட்டி ரோபோ வெகுவாகக் கவருவார்.
விஞ்ஞானி ரஜினியின் உதவியாளர்களாகச் சந்தானமும் கருணாசும் வருகிறார்கள் ஆனால், அவர்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்பில்லை.
நகைச்சுவை இருந்தாலும் அவர்களது முந்தைய படங்களோடு ஒப்பிட முடியாது.
அதிக அளவில் காட்சிகள் வைக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மிரட்டும் வில்லன் ரஜினி
படத்தில் வில்லன் ரஜினியாக வரும் ரஜினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
எவ்வளவு வருடம் ஆச்சு! இப்படியொரு வில்லன் ரஜினியைப் பார்த்து! இந்த வில்லன் சிரிப்பைத் தமிழ் திரையுலகம் இழந்தது எனக்கு இப்போது கூட வருத்தமாக உள்ளது.
எத்தனை வில்லன் இருந்தாலும் ரஜினியின் வில்லத்தனம் முன்பு ஈடாகாது. வில்லன் ரஜினியையே அதிகம் எதிர்பார்த்தேன் என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
ரஜினிக்கு இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் உள்ள காட்சிகளை வைத்து இருக்கலாம் என்று சிறு வருத்தம். ஒருவேளை ஓவர் டோஸ் ஆகி விட்டால் என்ன செய்வது என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
ஆனால், படத்தில் கடைசியில் வில்லன் ரஜினி அதகளம். ர
வில்லனாக வரும் டேனி டெங்ஸோங்பாவுக்கு நடிக்கப் பெரிய அளவில் வாய்ப்பில்லை, ரொம்ப எதிர்பார்த்தேன்.
பெரும்பாலும் ரஜினி படத்தில் வில்லனுக்கு அதிக வாய்ப்பு இருக்கும். ஒருவேளை வில்லன் ரஜினியே இருப்பதால் இவருக்கு அது போல அமைக்கப்பட்டதோ என்னவோ!
ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் மாணவியாகவும் ரஜினியின் காதலியாகவும் வருகிறார். படம் முழுவதும் வருகிறார் திணிக்கப்பட்டது போல இல்லை.
இவரின் நடனத்தை எப்படி பாராட்டுவது!
ரஜினி பேட்டியில் பல முறை ஒத்திகை பார்த்தேன் ஆனால், ஐஸ் நடனம் பார்த்து எல்லாம் மறந்து விட்டது என்று கூறி இருந்தார்.
அவர் கூறியதில் எந்த வித மிகைப்படுத்தலும் இல்லை என்று கிளிமாஞ்சாரோ பாடல் பார்த்தால் புரியும்.
இப்படியும் ஒருவர் நளினமாக ஆட முடியுமா! என்று வியப்படைய வைக்கிறார்.
ஆடுவது பெரிய விஷயம் இல்லை ஆனால், கஷ்டப்படாமல் இதெல்லாம் ஒரு விசயமாக என்று ஆடுவது உண்மையிலே வியப்பு தான்.
நடனம் என்று இல்லாமல் நடிப்பிலும் தன் பங்கைச் சரியாகவே செய்து இருக்கிறார்.
விஞ்ஞானி ரஜினி ரோபோவை உருவாக்கும் போது தாடி வளர்ந்து காணப்படுவார். அந்தச் சமயங்களில் ரஜினியின் வயது நன்கு தெரிகிறது. தாடியும் சரியாக இல்லை.
ஆனால், அதன் பிறகு ஷேவ் செய்து வரும் காட்சிகளில் இளமையாகக் காணப்படுகிறார்.
CG
கிராபிக்ஸ் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் ஏனென்றால், படத்தில் முக்கிய விசயமே இது தான். நிஜமாலுமே கிராபிக்ஸ் கலக்கல் தான்.
தீப்பிடிக்கும் காட்சியில் மட்டும் கிராபிக்ஸ் என்று தெளிவாகத் தெரியும் மற்றபடி வேறு குறையே கூற முடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாகச் செய்து இருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் ஹாலிவுட் படங்களில் வருவதைப்போல உள்ளது.
இப்படத்திற்கு மூலக்காரணமே அமரர் சுஜாதா அவர்கள் தான் ஆனால், படத் துவக்கத்தில் அவருக்குத் தகுந்த மரியாதை செய்யவில்லை.
ரோபோ ரஜினி தன் காதலை ஐஸ் இடம் கூறும் சமயம் மற்றும் சில இடங்களில் படம் மெதுவாகச் செல்கிறது.
இந்த இடங்களை ஷங்கர் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக்கி இருக்கலாம். துவக்க காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம்.
இதுவே என்னைப்பொறுத்தவரை படத்தின் பெரிய குறை.
இயல்பான காதாப்பாத்திரங்கள்
பொதுவாக ரஜினி படம் என்றால் பத்து பேரை அடிப்பார் பறந்து பறந்து செல்வார் என்று கிண்டலடிப்பார்கள் ஆனால், இந்தப்படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லாதவாறு காட்சிகள் உள்ளது.
ஒரு காட்சி கூடக் கதாப்பாத்திரத்தை மீறி இல்லை.
விஞ்ஞானி எந்த அளவு இருப்பாரோ அந்த அளவிற்கு மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. சண்டை கூடப் போடாமல் ஓடுவார் என்றால் முடிவு செய்து கொள்ளுங்கள்.
ரஜினி பேசும் போது “ஷங்கர் என்ன கூறினாரோ அதைச் செய்து இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.
சும்மா ஒரு பேச்சுக்குக் கூறினார் என்று நினைத்தேன் ஆனால், அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் பார்த்த பிறகு தான் புரிகிறது.
எந்திரன் இந்திய திரை உலகிற்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.
பட்ஜெட் இருந்தால் நாமும் சிறப்பாகக் கிராபிக்ஸ் காட்சிகளை அமைக்க முடியும் என்று இப்படம் உணர்த்துகிறது.
ரகுமான்
ரகுமான் பாடல்கள் ஏற்கனவே அனைத்தும் ஹிட் ஆகி விட்டது. படத்தில் இரும்பிலே ஒரு இதயம் பாடல் எடுக்கப்பட்ட விதம் திருப்தி அளிக்கவில்லை.
பிற்சேர்க்கை – தற்போது ரொம்பப் பிடித்து விட்டது குறிப்பாக ஐஸ் நடனம் 🙂 .
மற்ற அனைத்து பாடல்களும் அசத்தல் ரகம் அதுவும் காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ மற்றும் அரிமா அரிமா பட்டய கிளப்புகிறது.
பின்னணி இசை
ரகுமான் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு அமைத்து இருக்கும் பின்னணி இசை நிஜமாகவே உலகத்தரம்.
இதுவரை இதைப்போலப் பிரம்மாண்டமான இசையை ஹாலிவுட் படங்களில் மட்டும் கேட்டுள்ளேன். ரகுமான் தூள் கிளப்பி விட்டார்.
கேமரா ரத்னவேல் மற்றும் கலை சாபு சிரில் அருமையாகச் செய்து இருக்கிறார்கள். காதல் அணுக்கள் பாட்டில் கேமரா அசத்தி இருக்கிறது.
சாபு சிரில் செட்டிங்ஸ் எது என்று சொன்னால் தான் நமக்குத் தெரியும்.
ஷங்கர் பற்றிக் கூற எதுவுமில்லை ஏனென்றால், அவர் இல்லை என்றால் எந்திரன் படமே இல்லை.
எந்திரன் அனைத்து தரப்பினரையும் கவருவான்.
Directed by S. Shankar
Produced by Kalanithi Maran
Written by S. Shankar
Starring Rajinikanth, Aishwarya Rai Bachchan, Danny Denzongpa
Music by A. R. Rahman
Cinematography R. Rathnavelu
Edited by Anthony
Distributed by Sun Pictures
Release date 1 October 2010
Running time 166–177 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Good Review giri …,
ஆஹா அற்புதம் …
நாளை காலை ஏழு மணி காட்சி!!! பார்த்து விட்டு வருகிறேன்…. மதியம் இரண்டு மணி காட்சியும் செல்கிறேன்…
//// படத்தில் வில்லன் ரஜினியாக வரும் ரஜினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எவ்வளவு வருடம் ஆச்சு! இப்படி ஒரு வில்லன் ரஜினியைப் பார்த்து. இந்த வில்லன் சிரிப்பை தமிழ் திரையுலகம் இழந்தது எனக்கு இப்போது கூட வருத்தமாக உள்ளது.////
எனக்கும் இந்த வருத்தம் இருக்கு கிரி …,அந்த சந்திரமுகி படத்துல வேட்டையன் சான்ஸ்லெஸ்…,
அருமை
//// பொதுவாக ரஜினி படம் என்றால் பத்து பேரை அடிப்பார் பறந்து பறந்து செல்வார் என்று கிண்டலடிப்பார்கள்.////
வயித்தெரிச்சல் பார்டிகளுகெல்லாம் இந்த வரி பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்……………,
நானும் பாத்தாச்சு, கடைசி 30 நிமிடத்தால் முதல் 2 மணி நேரத்தை ஞாபகபடுத்துவது கடினமாக இருக்கிறது. ஷங்கருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். இத்தனை மாஸ் இருந்தும் கதைக்கு அடங்கி நடிக்கும் தலைவர் சினிமாவில் எல்லோருக்கும் முன்னுதாரணம்தான். கடைசி ரஜினி? ரஜினி தவிர யாராலையும் முடியாது.
ஐயா ,
எப்பூடி …,விஷயத்தை மட்டும் சொல்லாத தல …,
ரொம்ப நன்றி தல.. டென்ஷன் குறைஞ்சு இருக்கு இப்ப தான்
நாளைக்கு நானும் பாதுடுவேன்
//படத்தில் இரும்பிலே ஒரு இதயம் பாடல் எடுக்கப்பட்ட விதம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.//
எனக்கும்தான், வரிகளுக்கேற்றால்போல படமாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Nice Review Giri. I’ll Watch Today First Show…
mr. giri,
ungal anbirku nandri. felt relieved after your review.
I will be happy and satisfied only when i hear that endhiran has broken all the records of shivaji.
rajesh.v
கிரி!!!
முதல் ரிவியூ எழுதி கெளப்பீட்டீங்க! 🙂 நல்லா இருக்கு! :)))
கதை உருவாக்கம் என்பது போல் போட்டு டைட்டிலில் சுஜாதா, ஷங்கர் மற்றும் இன்னொருவர் பெயர் வருகின்றது. படம் கலக்கல்!
இன்னைக்கு விட்டுட்டோம், நாளைக்குப் பார்த்துருவோம், முன்பதிவு செய்தாகிவிட்டது. திரையரங்கில் சென்று சிவாஜி பார்த்தேன், அதற்கு பின்னர் எந்திரன். 🙂 கலக்கலாக எழுதி இருக்கீங்க கிரி சார். மிகைப்படுத்தல் இல்லாமல் ஒரு அருமையான விமர்சனம்.
இரும்பிலே ஒரு இதயம் தான் என்னோட Favourite…இப்புடி பண்ணிட்டாரே ஷங்கர்….
.கடைசி ரஜினி ஜோகர் மாதிரி பண்ணி இருக்குரமே????
அரிமா அரிமா பாட்டு தான் ஸ்பெஷல் என்று நினைகுறனே….
என்னால வெயிட் பண்ண முடியல பாஸ் நாளைக்கு நைட் ஷோ LA ல பார்க்க போறேன்
Unga vimarsanam padichu eadhirparpu adhigamayiduchu.
டிக்கெட் ஏற்பாடு செய்து… உடன் இருந்து கண்டு மகிழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி கிரி…
படம் பட்டாசு…
ரஜினி அனைத்து பாத்திரங்களிலும் தூள் பரத்தியுள்ளார். ரோபோ ரஜினியின் முதல் பாதி நகைச்சுவையும், இரண்டாம் பாதி வில்லத்தனமும் அதகளம்.
யாரு சொன்னா இதுல பஞ்ச் டயலாக் இல்லையின்னு…. ரோபோ ரஜினி தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்ளும் காட்சியும் அவரது ஸ்டையிலால் பஞ்ச் டயலாக் ஆகிப்போனது… 😉
ஐஸ்வர்யாவின் நளினத்தில் நான் மீண்டும் மீண்டும் சொக்கிப்போகிறேன்.
நடுநிலையான விமர்சனம்.
பாராட்டுக்கள்.
🙂
படம் நோர்மல் தான். ஏற்கனவே ஆங்கில படங்களில் வந்த சீன்ஸ் தான். படம் ஓடுமா என்பது சந்தேகம்!
Good Review Giri… எனக்கு இன்னும் ticket கிடைக்கல 🙁 ………
நிறையுடன் குறைகளும் சுட்டிக் காட்டும் அருமையான விமர்சனம். முடிவாய் சொல்லப்பட்ட கருத்தையே பலரும் முன் வைத்துள்ளார்கள்.
கிரி, முதல்ல எனக்கும் என் நண்பருக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி! முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
படத்தில் முதல் பாதியில் ரஜினி பண்ணும் காமெடி அருமை. அதே போல் பின் பாதியில் ரஜினியின் நெகட்டிவ் ரோலும் அருமை. ரஜினி படத்தின் வழக்கமான விஷயங்கள் இல்லாததும் கூட ஒரு அழகுதான். இருந்தும் எதுவோ ஒன்று மிஸ் ஆவது போல் இருந்தது. மற்றபடி டெக்னிக்கலி படம் அசத்தல்தான் (மேக்கிங்கும் கூட). அந்த அப்பாவி ரோபோ தோற்றம் என் மனதை விட்டு அகல மறுக்கின்றது (நேற்றைய என் தூக்கத்தை கெடுத்ததும் அதே ரோபோ ரஜினிதான்). 🙂
Thanks Giri
best preview compare to others
நன்றி,
நான் எதிர்பார்த்ததில் ஒன்று இரும்பிலே… அது போச்சா. அப்றம் ஒன்று ரசூல் பூக்குட்டி. ட்ரெயிலரிலேயே அந்த துப்பாக்கி சுடும் சப்தங்களில் வித்தியாசம் தெரிந்தது. இவரைப் பற்றி நீங்கள் எதும் சொல்லவில்லையே?
கிரி,
படம் பிரமாதம், நிச்சயம் தமிழ் சினிமாவின் மைல்கள்.
சிறப்பான விமர்சனம்.
Movie rocks, descent family entertainer. Kids going to gaga over it which will result bringing back family audience back to theaters
Giri,
thanks bro for a fine review (without touching the storyline and not revealing important things) good will go and watch the movie (hindi version) they say it will be released here in a week or two.
Until then let me try to read more reviews. Once again thanks giri for a good review.
Kamesh
குசேலன் கூட சிங்கையில் முதல்நாள் பார்க்க முடிந்தது ஆனால் இன்று கொரியாவில் மாட்டிக்கொண்டேன் 🙁
படம் இன்னும் பார்க்கவில்லை பார்க்கும் வரை எந்த விமர்சனமும் படிபதில்லை என்று இருக்கிறேன் 🙂
ஆக, மொத்தம் படம் வெற்றி வெற்றி வெற்றி ….!
எப்பூடி மற்றும் ஜீவன்பொன்னிக்கு இங்கு ஒரு குறிப்பு 🙂
எந்திரன் பற்றி நொட்டை எழுதின மட்டைகளுக்கு எல்லாம் இப்ப போடுங்க ராசா பதில் பதிவு இடுகை எடக்கு எல்லாம் …. 🙂
பகிர்வுக்கு நன்றி கிரி படம் பார்த்துவிட்டு உங்கள் இடுகையை படிக்கிறேன்.
அதே தான் சிங்கக்குட்டி நண்பா, ஜப்பான்ல ரிலீஸ் செய்யுறாங்க இங்க செஞ்ச நல்ல இருக்கும்…படம் பக்கமா மண்டை வெடிச்சுடும் போல… அப்புறம் கொரியால எங்க இருக்கீங்க…
யாரப்பா இது? பெயரை சொல்லாமல் வருவது?
நீங்கள் தென்கொரியாவில் இருந்தால், உங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பவும் singakkutti@live.com
நன்றி!.
படம் பார்த்த பிறகு தான் நிம்மதி, ஏளனம் பேசியவங்க வாயில ஏறி மிதிக்கலாம் கம்பீரமாய்… 🙂
நல்லாத்தான் பார்த்திருக்கிறீங்க வாழ்த்துக்கள். உங்கள் நடு நிலைப்பார்வை தொடரட்டும். அத்தோட,தங்களை தொடரும் ௩௦௦ வது பதிவர் பெருமகன் அடியேன் தான். ஹீ ஹீ
நல்லாத்தான் பார்த்திருக்கிறீங்க வாழ்த்துக்கள். உங்கள் நடு நிலைப்பார்வை தொடரட்டும். அத்தோட,தங்களை தொடரும் 300 வது பதிவர் பெருமகன் அடியேன் தான். ஹீ ஹீ
நன்றி கிரி ரொம்ப சந்தோசமா இருக்கு நான் நாளை காலை 8 மணி ஷோ செல்கிறேன்
நன்றி
புறக்கணிப்போம் எந்திரனை
ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
சிந்தனைகளை முடக்கி
அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
அதில் தொழில் செய்து
தமிழை கொன்று
தமிழின வேதனைகளை
இருட்டடிப்பு செய்த
தொலைக்காட்சி சவப்பெட்டியின்
சங்கை நெறிக்க…!!
புறக்கணிப்போம் எந்திரனை
தமிழ் சமுதாயத்தின்
சாபக்கேடாகிப்போன
ஒரு தனிமனிதனிடமிருந்து..
திரயுலக்கத்தின்
மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
புறக்கணிப்போம் எந்திரனை
சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
IIFA வை புறக்கணித்து,
தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
அரிதார அழகியின் கோட்டம் அடக்க..!!
புறக்கணிப்போம் எந்திரனை
ஐயோ ஐயோ review படிச்சிட்டு பொருக்க முடியலை. இன்னைக்கு nite ஷோ போறேன். அது வரிக்கும் எப்படி pozhudha kazhikka porennu theriyalai.
nandri giri
ஐயா, ஜெகதீஸ்வரன் அவர்களே !
அழகான கவிதை , அழகான விமர்சணம், கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரியே !
இருந்தாலும் , எந்திரன் என்ன பாவம் பன்னினான், குறிப்பாக சாடுகிறிகளே !
அது தான் தவறு , அது அவர்கள் வேலை அவர்கள் செய்கிறார்கள் , கலையை வைத்து பணம் புகழ் சம்பாதிக்கிறார்கள் அது அவர்கள் தொழில் , நமது உரிமை அதை பார்க்காமல் இருப்பதும் பார்ப்பதும் ,
ஆனால், பொழுது போக்கு என்பது இல்லை என்றால் மனிதன் மிருகமாகிடுவான் அது தான் உண்மை ,
ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்கு , அதில் அடிமையாக கூடாது அவ்வளவே !
அறிவுரை சொல்லுங்கள் நாள் வழி காட்டுங்கள் உங்கள் பின்னால் அனைவரும் வருவார்கள் .
நல்ல கவிதை எழுதுங்கள் ரசிப்பார்கள் , பாராட்டுவார்கள் . தனி மனித விமர்சணம் தேவை இல்லாதது .
இதற்காக வரிந்து கட்டி காட்சி ஊடகத்தை பாழ் படுத்தும் சன் நெட்வொர்க்கை சாடுங்கள் தவறில்லை ,
காரணம் பகுத்தறிவு பேசும் குடும்பத்தில் இருந்துகொண்டு இவர்கள் பண்ணும் அலும்பல் தாங்களடா சாமீ
பணத்துக்காக என்ன வேணா பண்ணுவானுங்க இந்த சன் நெட்வொர்க் காரனுங்க. பாவம பணம் இல்லாத குறைக்கு இவர்கள் இடம் தஞ்சம் புக வேண்டி கட்டாயத்தில் தள்ளப்படுள்ளனர் .விமர்சணம்
படம் பார்த்து விட்டு எழது கிறேன் . எனக்கு இப்படி அடித்துக்கொண்டு கொண்டு பார்க்குமளவிற்கு
சினிமா அடிமை அல்ல ரஜினியை பிடிக்கும் , அது யார் நடித்தாலும் சிறந்த படமாக இருந்தால் பார்ப்பேன் .பார்த்த பிறகுமட்டுமே விமர்சணம் செய்வேன் . மீண்டும் சந்திக்கேறேன். கிரி விமர்சணம் நன்று .- பாலா
Thanks 4 sharing Your Review – உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
அய்யய்யோ ‘jegadeeswaran ‘ என்கிற காமடிபீசு இங்க வயிறு கடுப்பாகி கக்கா போயிக்கிட்டிருக்கிறாரு…… இவரைமாதிரி எத்தின காமடி பீசை பாத்திருப்பம், இது பத்தோட பதினொன்னு, எங்ககிட்டயேவா ?
இவர் மட்டுமில்ல இன்னும் நிறையபேரு இப்பிடித்தான் ரொம்……………ப கஷ்டப்படுறாங்க. சமூக அக்கறை என்கிறபேர்ல சின்னபுள்ளதனமா இருக்கிற இந்த சின்ன பொடியன்களை என்ன பண்ணுறது? இவங்களுக்கு தாங்கள்தான் அறிவாளிகளின்னும் மத்தவனெல்லாம் இவங்க அறிவுரையை எதிர்பார்த்து கியூவில நிக்கிறதாயும் நினைப்போ என்னமோ.
போங்கையா போயி புள்ள குட்டிகளை எந்திரனுக்கு கூட்டீற்றுபோற வேலையை பாருங்க.
கருப்பு ஆடுகளுக்கு இனி மே…..மே……மே….. (ஆடுகத்திற சவுண்டு) ட்ரீட்மென்ட்தான் சரிவரும்.
சிங்கக்குட்டி
//எப்பூடி மற்றும் ஜீவன்பொன்னிக்கு இங்கு ஒரு குறிப்பு 🙂
எந்திரன் பற்றி நொட்டை எழுதின மட்டைகளுக்கு எல்லாம் இப்ப போடுங்க ராசா பதில் பதிவு இடுகை எடக்கு எல்லாம் …. 🙂 //
விடுங்கபாஸ், எல்லாருமே எந்திரனை பாத்ததுக்கப்புறம் செத்தபாம்பு ஆகியிருப்பாணுக, செத்தபாம்பை எதுக்கு நாம இனி அடிக்கணும்? நாம கொண்டாடுவம். வாங்க கொண்டாடலாம்…வாங்க கொண்டாடலாம்…..(நாங்க கொண்டாடுறதில 3 கோஸ் முடிச்சிட்டம்:-))
மக்களே,
படம் பாத்துட்டேன் சும்மா பட்டய கிளப்புது சிட்டி வாவ்!!! கண்டிப்பா தியேட்டர் ல எல்லாரும் குடும்பத்தோட பாக்கலாம்
இந்திரன் HOOLYWOOD டாட்டா கட்டலாம் . எல்லா புகல்லும் ரஜினி/சஹ்கர் /கலநீதிமாறன் .சேரும்
ஜி
அந்த வில்லன் நடிப்புக்காக எத்தனை முறை வேண்டுமாலும் பார்க்கலாம் .உண்மையிலயே இது ஒரு அனுபவம் தான் .இரண்டாவது பாதியில் இன்னும் கொஞ்சம் முறுக்கேற்றி இருந்தால் நன்றாக இருக்கும் .சில காட்சி அமைப்புகள் சற்று ஆங்கில படத்தை ஞாபக படுத்தினாலும் , ஷங்கரின் உழைப்பு அபாரமானது , இந்த கரு நிச்சயமா உலக சினிமாவில் கையாளப்படவில்லை .நல்ல பொழுது போக்கு சினிமா
படம் பார்த்து படத்த ரசிங்க ! விமர்சனம் பன்னாதிங்க ! சஸ்பென்ஸ் போயிரும் சார் !
Padam parthachu sir.
Kurai sonnavangale paaraattum alavu thalaivar pattaya kilapitaru.
Shankar thavira ivlo svarasyama eaduka yaralum mudiyadhu.
கிரி படம் பார்த்துட்டேன் அசத்தலா இருக்கு ரொம்ப சந்தோசம் எனக்கு
எப்பூடி
விடுங்கபாஸ், எல்லாருமே எந்திரனை பாத்ததுக்கப்புறம் செத்தபாம்பு ஆகியிருப்பாணுக, செத்தபாம்பை எதுக்கு நாம இனி அடிக்கணும்? நாம கொண்டாடுவம். வாங்க கொண்டாடலாம்…வாங்க கொண்டாடலாம்…..(நாங்க கொண்டாடுறதில 3 கோஸ் முடிச்சிட்டம்:-))
நன்பேண்டா ஹா ஹா
தெலுங்கில் ரோபோ வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக படம் குறித்து மோசமான செய்திகளைப் பரப்பியது ஒரு தெலுங்கு இணையதளம்.
இந்த செய்தியை பார்த்து உறக்கம் இல்லை 2 நாட்கள் … ஆபீஸ் வேலையை கூட சரிவர செய்ய முடியவில்லை … மிகவும் மனவருததின் விளிம்பிற்கு சென்று விட்டேன் …. கிரி மற்றும் என்வழி தள விமர்சனம் பார்த்த பின்பு தான் கொஞ்சம் உறக்கம் வந்தது ….எப்பொழுதும் கொஞ்சம் தாமதமாக விமர்சனம் எழுதும் கிரி , முதல் நாளே எழுதியமைக்கு அனைவரின் சார்பாக என் நன்றிகள்.. உண்மையிலயே இது ஒரு பெரிய மண ஆறுதலாக இருந்தது !
சனிகிழமை படம் பார்த்தேன்… முதல் பாதி chancea இல்லை …. பாராட்ட வார்த்தைகளே இல்லை … சலிப்பு இல்லாமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சிகள்…..இதன் பிறகு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது …ஐஸ் அழகு சொக்கி இழுத்தது … எனக்கும் sana வேணும் DOT
இரண்டாம் பாதி சில குறைகள் ….கொஞ்சம் முருகேற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ! Car stunt scene மற்றும் கொசு scene கொஞ்சம் extended ஆக உள்ளது …இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ song கதையோடு ஒட்டிய live song ஆக இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் ….ரஜினியின் வில்லதனத்திருகு ஒரு சபாஷ் போடலாம் …. “மே …மே ” இப்பொழுது ஒரு famous ஆன வார்த்தை … ஆடு கூட நினைத்திருக்காது ….!!!
இறுதியில் சிட்டியின் வார்த்தைகளால் என் கண்கள் நனைந்தன ….என் வாழ்நாளில் இனி இப்படி ஒரு படம் பார்போமா என்று ஏங்க வைத்துவிட்டது …படம் முடிந்த பின்பு எழுந்த கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது ….இப்பொழுது மீண்டும் தெலுங்கு ரோபோ செல்கிறேன் DOT
நண்பா, அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கோர்ட் ஸீன் இருக்கே. அந்த படத்தின் மகா காமெடி சீனென்றால் அது தான். எப்படி இப்படி மொக்கையா யோசிக்கமுடியுதோ….
படம் பார்த்து விட்டேன்… தமிழில் ஒரு நல்ல முயற்ச்சி… ஆனால் இதன் டெக்னாலஜி மூன்று ஆங்கில படங்களின் காப்பி (i-Robot, Transformer, Predator)
mr. vino,
just now i watched the movie in sangam theater chennai for first time. First half is like indian share market during the period 2007 and the second half upto arrima arrima song is like indian share market during the period 2008 and 2009. The second half from arrima arrima song is like indian share market during the peiod 2010.
In shivaji film, rajini had beaten director shankar. In endhiran also rajini had beaten shankar.
Rajesh. V
i am again going to watch endhiran on wednesday evening at abirami 7star, thursday evening at abirami 7 star, and noon show at devi on sunday .
Innocent chitti character had attracted me a lot more than scientist rajini and villain rajini. I shed tears when chitti dismantle himself in last scene. I like the villain rajini”s dialogue ‘mehhhhh’.
rajesh.v
நன்றி மறந்துவிட்டார் சங்கர் சுஜாதா சார் இல்லாம இவ்ளோ பெரிய இடத்துக்கு சங்கர் வந்திருக்க முடியாது அவருக்கு மரியாதை பண்ணாம விட்டுட்டார் மனசாட்சின்னு ஒன்று இருந்தால் அது சங்கருக்கு நிச்சயமா உறுத்தும் மத்த படி உலக தரம் வாய்ந்த தமிழ்படம். ஆதிராஜ்
நான் ரொம்ப ரசிச்சது ரோபோக்களோட டைனிங் ஹால்!
Thanks to Rajnikanth for doing such a matured character – without any heroism, close to reality. I really liked him. I expected the villain rajni would do some more in terms of mannerism or dialogue – Like lakalakalaka. But No indian actor can do or participate in such actions at the age of 60.
Thanks to the computer graphics team for some excellent, first-in-Indian movie scenes. Even the scenes where two rajnis interact one-to-one are done flawlessly. It gives a feeling as if two rajnis are there in real.
BIG BIG BIG thanks to die hard rajni fans world over, who are really making / made this movie a big blockbuster – hindi guys are feeling jealous and i am proud to say that the hindi robot has literally killed the latest hindi movie anjaana anjaani.
Now, some questions to Shankar:
There is nothing new in the concept. You have started developing this story in 2002 but it is an outdated concept today. Lot of English movies have come from 2002-2010 based on this and people are bored now. Why you have not upgraded?
What happened to your screenplay skills? Its damn boring in certain scenes. No fresh imagination. In shivaji, rajni fights with baddys for the heroine in music store and in endhiran he fights for aish in train – its a too long sequence. Not only this, many scenes are too lengthy and the characters just blink as to what to do next.
There is no credit to Writer Sujatha. His absence is clearly visible in dialogues.
You thought everything differently. But why are you adamant with songs compulsorily? 3 rajnikkum duet kudukkanumnu edhaachum rulaa?. You should have ignored songs and the money can be utilized for some more graphics. The visuals of Kaadhal anukkal and kilimanjaro does not impress. there is no scene of machubichu. Indiavulaye shooting panniyirukkalam.
When Villain rajni kidnaps aish from mandapam, the volkswagon collides with two cars and the bonnet part gets damaged. But there is no damage in the very next scene, how? Probably you got excited too much about the graphic portion that you forgot basics.
Danny dengzopa is a total waste. His dubbing and lip sync is completely mismatched in all scenes.
In total, it is neither Shankar movie, nor rajni movie, nor super hero movie, nor a tamil movie, – ARAI VEKKAADU.
Suggestions:
This movie can be made crisper by doing the following:
· Delete the 3 duet songs – 15 minutes saved
· Delete the train fight sequence – 15 minutes saved
· Trim the scene where robot saves people from fire – he saves at least 4 people. It can be trimmed to two (including that girl, which is the turning point) – 5 minutes saved
· Trim the action scene when villain rajni kidnaps aish since you have a full length show-stealer climax – 5 minutes saved
Now this movie will run for 2 hours and 10 minutes and a real Hollywood type thriller is ready.
We don’t want movies / visuals inspired or influenced by Hollywood. But we want movies which impacts / influence them, and you are capable of that.
௨ வீக்ஸ் ல அரங்கம் எம்ப்டி ஆயிடும்.
சாரி டு ரோபோ.
அதே நாளைய மனிதன் கதை தான்.இதில் கிராபிக்ஸ் இருக்கு அதில் இல்லை.மலையாளத்தில் ஐம்பது வருசத்துக்கு முன்னால் வந்த கதை தான்.அன்னைக்கு சயின்ஸ் இல்ல இணைக்கு இருக்கு.
கிரி, நம்ம தியேட்டர் அனுபவத்த இங்க வந்து பாருங்க:
http://muthalummudivum.blogspot.com/2010/10/blog-post.html
என்திரன் படம் ரெலீசெகு முன்னாடி படம் எடுத்து ஆடுச்சு.இப்ப பாவம் செத்த பாம்பு ஆயுடுச்சு.
உங்க விமர்சனம் நடுநிலையாத்தான் இருக்கும் என்பதை நிருபிக்கும் வகையில் உள்ளது. இப்பதிவு.
GRAPHICS IS VERY GOOD
ACTING IS VERY GOOD
MUSIC IS VERY GOOD
DIRECTION IS VERY GOOD
PRODUCTION IS ALLMOST GOODDDDDDDDDDDDDDDDDDD
அவருக்கு அதை விட்டால் வேறு என்ன தெரியும் … ஷங்கர் ஒரு திறமையான கண்கட்டி வித்தைக்காரர்… அந்த நொடியில் நாம் பிரமித்தாலும் அடுத்த நொடியே கொஞ்சம் யோசித்தாள் அதில் இருக்கும் அபத்தம் தெரியும்… காலம் காலமாய் மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு படம் எடுக்கும் திறமை அவரிடம் கிடையாது… அவரை தமிழ் சினிமாவின் அடையாளமாய் நம் மக்கள் நினைத்து கொண்டாடிக்கொண்டு இருப்பது தமிழ் சினிமாவை பிடித்த சாபக்கேடு…
எந்திரன் ராணுவ தேவைக்கு தானே உருவாக்கப் பட்டவன். (ஷங்கரின் கதைப்படி). அப்படீன்னா அவனுக்கு ஏன் பரதம், சங்கீதம் எல்லாம்? இந்திய எல்லைக்கு போய் கச்சேரி ஏதும் போட்டு எதிரிகளை தூங்க வச்சு யுத்தத்தை வெற்றி கொள்ளலாம் என யோசிக்கிற மூளை ஷங்கருக்கு மட்டும் தான் உண்டு என ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன்.
150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,
அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா – அஹரம் – விதை
நண்பா, அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கோர்ட் ஸீன் இருக்கே. அந்த படத்தின் மகா காமெடி சீனென்றால் அது தான். எப்படி இப்படி மொக்கையா யோசிக்கமுடியுதோ….
நண்பா, அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கோர்ட் ஸீன் இருக்கே. அந்த படத்தின் மகா காமெடி சீனென்றால் அது தான். எப்படி இப்படி மொக்கையா யோசிக்கமுடியுதோ….
அப்படி தானே சூப்பர் ஸ்டார் முதல் இணைய பதிவர்கர்கள் வரை இல்லாத பில்ட் அப் கொடுத்து வந்தார்கள். மேலும் 150 கோடி என்பது ஒரு தரமான ஹாலிவுட் படம் இந்தியாவில் எடுக்க போதுமான பட்ஜெட் தான். எடுக்க வாய்ப்பிருந்தும் கோட்டை
விட்டோம் என்பது தானே உண்மை.
முதல்ல ஒரு விஷயத்த மேலே உள்ள சில அதிபுத்திசாலிகள் புரிஞ்சிக்கணும்,
ஹாலிவுட் படங்கள் 1000 கோடிக்குமேல செலவுபண்ணி 1.30 மணிநேரம் ஓடுர படம் எடுப்பாங்க.
ஆனா நம்ப 162 கோடி ல 3 மணிநேரம் ஓடுர படம் எடுத்து ஹாலிவுட் படங்களுக்கு நிகரான( திரைகதைல ஹாலிவுட்டையே மிஞ்சியப்படம் ) படமா இதை கொடுதுருகோம்.
அத பாராட்டாம, குத்தம் சொல்ல வட்துட்டாங்க.
நம்ப ஆளுங்களே இப்படி பண்றீங்கலேபா?..
படம் நா இதுதான்யா படம். படம் ஆரம்பிச்சு முடிஞ்சவரைக்கும் எப்படி போசின்னே தெரியல. super entrainment…
ரஜினி சார் ஆக்டிங் எச்ற்றாவ்ர்டினரி………… the boss, the mass…………
ஷன்கர் சார் டேலன்ட், உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது…..
3 times பாத்துட்டேன்(woodlands, udhyam, kasi)… next சத்யம் theatre போகப்போறேன்…
எத்தன வாடிவேணா பாக்கலாம்…………
சூப்பர் சூப்பர் சூப்பர்…………
படம் நா இதுதான்யா படம். படம் ஆரம்பிச்சு முடிஞ்சவரைக்கும் எப்படி போசின்னே தெரியல. super entrainment…
ரஜினி சார் ஆக்டிங் Extraordinary………… the boss, the mass…………
ஷன்கர் சார் டேலன்ட், உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது…..
3 times பாத்துட்டேன்(woodlands, udhyam, kasi)… next சத்யம் theatre போகப்போறேன்…
எத்தன வாடிவேணா பாக்கலாம்…………
Super Star + Super Director = மெகா ஹிட்…………
சூப்பர் சூப்பர் சூப்பர்…………
படம் முழுக்க ஆக்கரமிக்கறது ரஜினி மட்டுமே !
இதுவும் ரஜினி படமே !
என்ன பன்ச் டைலாக் இல்ல , அறிமுக பாடல் இல்ல , ஆனால் முழுக்க ரஜினியின் ஆதிக்கமே படத்தை கொண்டு செல்கிறது .
படம் முழுக்க சங்கரை காணோம் .
காரணம் ரஜினின் ஆளுமையே ! முதல்
அழகு பதுமையாக ஐஸ்வர்யா ராய் ( சில இடங்களில் வயது தெரிந்தாலும் அழகு பதுமையே ) தமிழ் படங்களில் தவறாமல் நடிகைகள் செய்யும் வேலையை செய்துவிட்டு போகிறார் கொஞ்சம் அழகாக எல்லோரும் சொல்வதுபோல் பிரமாண்டமாக . இசை புயல் பாவம அவரும் ஏமாற்றி உள்ளார் ( பாடல்களில் ) எ சென்டர் மட்டுமே ஒரு வேலை விரும்பலாம் . இதுதான் ஆஸ்கர் ஹலிவுட் லெவல் என்கிறார்களே ! நான் நினைச்சேன் ( இந்தியாவுல ) தமிழ் நாட்டுல தரத்தில் ஹலிவுட் லெவல் என்று சொன்னார்களோ என்று . அந்த தரத்திலும் இல்ல என்பது வேறு கதை .
ஒன்று மட்டும் புரிய வில்லை, எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது காரணம் ஏன் என்று அவருக்கே தெரியும் . இந்த கதைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று அவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். படத்தில் போர் என்று எதை சொல்லலாம் விணான கிராபிக்ஸ் ஓவர் டோஸ் காட்சிகளே !!. திரை கதையில் சிறிய சிறிய ஓட்டை ( சிட்டி ஒரு ரோபோ ஓகே , அதற்கு கட்டளை இடும் சிப் வைக்கப்படுகிறது அதாவது ரோபோக்கு செய்முறை கட்டளை ஓகே , யோசிப்பதற்காக மேலும் ப்ரோக்ராம் மட்டுமே எழுதி இருக்கும், காதலிப்பது தெரிந்தால் அதை அகற்றி விடலாம் அல்லவா , பிறகு எதற்காக அதை அழிக்க நினைக்கிறார் ப்ரோபெர்சர் ரஜினி , அப்படி இல்லை தானாகவே யோசிக்கிறது என்றால் எதற்காக கடைசியில் ரெட் சிப் எடுத்து அதை நார்மல் ஆக்குகிறார் . கடைசி காட்சி ரொம்ப அபத்தம் , கிராபிக்ஸ் கட்சிகள் புரிந்து கொள்ளும் அறிவு ஜீவிகளாலே புரிந்து கொள்வது கடினம்( புரிதல் இல்லாத கிராபிக்ஸ் ). இன்னும் திரைகதையில் கவனம் சொலுத்தி இருக்கணும் . எதையும் யோசிக்காமல் பார்த்தால் முதல் பாதி ஓகே .இரண்டாவது சிட்டிய ( ரஜினி நடிப்பு ) தவிர அனைத்தும் என்ன சொல்ல டைரக்டர் சங்கரின் தீவிர ரசிகன் நான் என்னாலையே முடியல , அவருடை படங்கள் கண்டிப்பாக ஒரு மெசேஜ் சொல்லும் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் ( நன்றாக இருக்கும் ) என்று மக்களை யோசிக்க வைப்பார் . இந்த படத்தில் அனைத்தும் மிஸ்ஸிங் .
ரஜினியின் அசத்தலான நடிப்பு மட்டுமே படத்தை காப்பற்றி இருக்கு . யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை இல்லை கண்ணை மூடிக்கொண்டு பாராட்ட முடியாது . எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது. ……
இதனால் பலனடைந்தது என்னவோ சன் குடும்பம் மட்டுமே ! தமிழர்கள் விதத்தில் ஏமாற்றப் பட்டிருக்கின்றனர் . ஒன்று டிக்கெட் என்ற விதத்தில் , இதை கூட மன்னித்து விடலாம் . வரி சலுகை ( தமிழில் பெயர் வைத்தால் ) என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு ( பாவம் நலிந்த குடும்பத்தில் இருந்து தமிழ காபத்துறாங்க ) . நீயோ நானோ பத்து வரி கட்டலனாலும் கழுத்த நெறிச்சி வசூலிக்கும் அரசாங்கம் இப்படி கலை சேவை செய்கிறார்கள் ( இப்பொழுது சினிமா துறையில் ஆக்கிரமித்து உள்ளவர்கள் எல்லாம் சன்னும் , கலைஞ்சர் குடும்பம் மட்டுமே என்பது கூடுதல் தகவல் ).
நல்லது எதுவாக இருந்தாலும் பாராட்டுவோம் . தவறு என்றால் தைரியமாக வெளிபடுத்துவோம் , காரணம் அடுத்த முறை இதே தவறு செய்யாமல் இருக்க உதவும் ………..மேலும் /2010/10/blog-post_16.html
—– பாலா
ஐயா பாலா அவர்களே கிராபிக்ஸ் கட்சிகள் புரியவில்லையா? இன்னுரு முறை கிராபிக்ஸ்ஐ மட்டும் ஆ!! நு பாக்காம அதுல என்ன பண்றாங்கன்னு பாருங்க புரியும்.
”பாமரனுக்கும் புரியும் எந்திரன் திரைக்கதை”.
படத்தை நன்றாக புரிந்துபாருங்க சார்
( சிட்டி ஒரு ரோபோ ஓகே , அதற்கு கட்டளை இடும் சிப் வைக்கப்படுகிறது அதாவது ரோபோக்கு செய்முறை கட்டளை ஓகே , யோசிப்பதற்காக மேலும் ப்ரோக்ராம் மட்டுமே எழுதி இருக்கும், காதலிப்பது தெரிந்தால் அதை அகற்றி விடலாம் அல்லவா , பிறகு எதற்காக அதை அழிக்க நினைக்கிறார் ப்ரோபெர்சர் ரஜினி , அப்படி இல்லை தானாகவே யோசிக்கிறது என்றால் எதற்காக கடைசியில் ரெட் சிப் எடுத்து அதை நார்மல் ஆக்குகிறார்.)
-இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் படத்துலேயே இருக்கு.
நீங்க படத்துக்கு போகும்போது மூளைய வீட்லயே மறந்து வச்சிட்டு போய்டிங்க போலிருக்கு.!
மேலும் படம் எடுக்க ஆரம்பிக்கும் போதே ஷன்கர் சார், இந்த படம் இதுவரைக்கும் வந்த எனது எந்தபடத்தின் சாயலும் இதுல இருக்காதுன்னு சொல்லித்தான் படாத ஆரம்பிச்சாரு. இந்தப்படம் நல்ல பொழுதுபோக்கு படமா irukkum நு சொன்னாரு. அத நிருபிசிட்டாறு. 100% என்டேர்டைன்மென்ட்…………
#மேலும் படம் எடுக்க ஆரம்பிக்கும் போதே ஷன்கர் சார், இந்த படம் இதுவரைக்கும் வந்த எனது எந்தபடத்தின் சாயலும் இதுல இருக்காதுன்னு சொல்லித்தான் படாத ஆரம்பிச்சாரு.#
படம் எந்த லிஸ்ட்லயும் இல்லையே என்பதுதான் எங்க வருத்தம் மீண்டும் சொல்கிறேன் இது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படமே !!!
ஆனந்த் பாவம் நீங்க கார்ட்டூன் சேனல் தவிர வேற பாக்க மாட்டீங்க போல
ஓகே , ஓகே அது விஷயம் இல்ல இந்த விமர்சனமே எழுத கூடாதுந்தான் இருந்தேன்
பார்த்துட்டு எழுதுறேன்னு சொல்லி இருந்தேன் . அதனாலேயே .
நீங்க வேணா என்தன முறை வேண்டும் என்றாலும் பாருங்க ஆனந்த் .
ஆனால் இன்னொரு முறை பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்ல .
நீங்கபல முறை பார்த்து ஹலிவுட் லெவலுக்கு படத்த பாராட்டுங்க …
ஆன நீங்க ஹலிவுட் படத்த பார்த்து தெரிஞ்சுக்கோங்க எப்படி கிராபிக்ஸ் இருக்கனுமுன்னு .
தேவைக்கு மட்டுமே( அளவோடு செய்திருக்க வேண்டும் ஐந்து படத்துல கட்டவேண்டியது
ஒரே படத்துல போட்டு ஹலிவுட் லெவல் படன்னு சொல்ல கூடாது.
சரி விடுங்க, என்போல் உள்ளவர்கள் மன ஓட்டம் தான் இன்று அதிகம்.
சங்கர் சார் திறமைசாலி அதனாலேயே இந்த வருத்தம் . இதை படித்து யாராவது ஒருவர் சரி என்றாலே என்னுடைய விமர்சனம் சரியே . நன்றி ஆனந்த் உங்கள் ஆலோசனைக்கு . — பாலா
#ஆன நீங்க ஹலிவுட் படத்த பார்த்து தெரிஞ்சுக்கோங்க எப்படி கிராபிக்ஸ் இருக்கனுமுன்னு#
பாலா சார், இந்த படத்துக்கு அணிமேற்றாநிக்ஸ் பண்ணதே அவதார், டேரிமிநேடர் போன்றே ஹலிவுட் படங்கள்கு பண்ண கம்பெனி தான்.
ஷன்கர் சார் அவரோட வோர்க்க நல்லாத்தான் பண்ணிருக்காரு. நீங்க குறை சொல்லனும்ன அந்த கம்பெனிய சொல்லுங்க.
ஒரு சில நல்ல சினிமா வரும் பொது அத பாராட்டின தான் அடுத்த நல்ல படங்கள் தமிழ் சினிமாவுல வரும். அத விட்டுட்டு வர நல்ல படங்களயும் தப்பு சொல்றிங்களே?.
இந்த படத்துல சில கடுகளவு குறைகள் இருந்தாளும் (கிராபிக்ஸ்ல மட்டும்தான்) இந்த படம் இந்திய சினிமாவோட நிலைய உயர்த்தின படமா இருக்கும்.
இதே படத்த ஹலிவுட்ல பண்ணா அத ஆஹா ஓஹோ நு சொல்வீங்க.
நம்ப அந்த லெவல்கு பண்ணா கார்ட்டூன்நு சொல்வீங்க.
அவதார் படம் 80 % அணிமேற்றாநிக்ஸ் தான். அது பக்கா கார்ட்டூன்.
ஹலிவுட்ல லாஜிக்கே இல்லாம எதகாட்டினாலும் அதபாக்க உங்கள மாதிரி கூட்டம் இருக்கு.
கிராபிக்ஸ் பொறுத்த வரைக்கும் ஹலிவுட் படங்கள்கு அடுத்ததுதான் எந்திரன் என்பத ஒத்துக்குறேன்.
என்னதான் ஹலிவுட் ஆளுங்கள வச்சி பண்ணாலும், ஹலிவுட் படங்கள் அளவுக்கு இதுல வொர்க் பண்ணிகுடுத்தா ஒரு இந்திய படம் (எந்திரன்) ஹலிவுட்டை மிஞ்சிவிடும் என்பதற்காகவே ஹலிவுட்கு அடுத்த லெவல்லதான் பண்ணிகுடுப்பாங்க. -இதுதான் நடைமுறை.
ஆனா கண்டிப்பாக இந்தப்படத்தோட ஸ்கிரிப்ட் & திரைகதை அமைப்பு உலக சினிமாவிற்கே சவால்.
எதுக்கு இவளோ வைத்தெரிச்சல்? நம்ப ஆளுங்க முன்னேருராங்கனா? மனசாட்சி இல்லாம இந்த படத்தோட கிராபிக்ஸ்ச கார்ட்டூன் லெவெலுக்கு கம்பேர் பண்றிங்களே?
இதுபோன்ற அறிவியல் சார்ந்த படங்கள் வரும்போது அத பராடுங்க… இதுபோல இன்னும் 100 நல்ல படம் நம்ப தமிழ் சினிமால வரும். அதவிட்டுட்டு இப்படி அனாவிசயமான விமர்சனங்கள் பண்ணா தமிழ் சினமாவுல எந்திரனே கடைசிப்படமா இருக்கும்.
ஒரு விஷயத்த குறை சொல்லன்னும்நே வர உங்களமாதிரி ஆளுங்க கிட்ட எவளோ புரியவச்சாலும் பிரியோஜனம் இல்ல.
தமிழ் சினிமா ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் படைத்தவர்கள் இத குறை சொல்ல மாட்டாங்க.
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைபடபோவதில்லை.
சில அதி புத்திசாலிகள் 3 % பேரைத்தவிர, 97 % மக்களுக்கு எந்திரன் புடிச்சிருக்கு, எந்திரன் இமாலய வெற்றி -இதுதான் உண்மை.
“போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்”
வாழ்க தமிழ் சினிமா… வாழ்க இந்திய சினிமா…
ஒரு விஷயத்த தெளிவு படுத்த நினைக்கறேன் . நான் என்றும் தமிழுக்கோ . தமிழ் படங்களுக்கோ , எதிர் ஆனவன் அல்ல , என்னுடைய ப்ளாக்ல கிரி அவர்களுடைய விமசனத்தை முதலில் என் ப்ளாக் ல போட்டு லிங்க் கொடுத்தது நான் போதுமா !! . நல்ல இருக்கணும் அனைவரும் பாக்கணும் . புது முயற்சி செய்வதை அங்கீகரிக்கனும் என்ற எண்ண ஓட்டமே காரணம் , ஆனால் தவறை சுட்டி கட்டினால் வைத்தெரிசலா ? .. இதற்கும் இன்னொரு முறை தவறு செய்ய கூடாது என்பதற்காகவே . கிராபிக் அவங்க தப்பா செய்தார்கள் என்று தயவு செய்து முட்டாள் தனமா பேசாதீர்கள் நாம் எண்ண சொல்கிறோமோ அதை அவர்கள் செய்து கொடுப்பார்கள் வேலை செய்வது மட்டுமே அவர்கள் வேலை , வேலை வாங்குவது பணம் கொடுப்பவனது வேலை இது தான் நியதி, நீங்கள் பாவம் எதோ ஆய்டுச்சி உங்களுக்கு பயம் வந்துடாது போல உண்மைய சொன்னால் கோவம் வருது . யாருக்கு வைத்தெரிச்சல் என்பது இதை படிப்பவர்களுக்கு தெரியும் , நல்ல கலையை வளர்க்கணும் தவறு இருந்தால் திருத்திகொல்லனும் , இதே நேரத்துல இன்னொரு செய்தி மறுபடியும் 3D காட்சிகள் சேர்த்து இன்னும் சொல்ல படாது ஒருத்தருக்கு வயறு அல்சர் ஆயிடும் நீங்க பாராட்டுங்க . சங்கர பாராட்டுறேன் தமிழனை உலகத்தில் கலையில் அடையாளம் காட்டினதா சொல்றங்க அதற்காக . ஆனால் தமிழனை அனைத்து நாடுகளிலும் கட்டம் கட்டுகிறான்களே அப்ப உங்க தமிழ் எண்ண பண்ணிக்கிட்டு இருக்கிங்க . தாய் தமிழ் நாட்டுல மீனவன சுண்டக்காய் நாடு ராணுவம் மீன் பிடிக்க விடாமல் கொல்ல படுகிறான் எங்க போனது ( மானாட மயிலாட (மரிராட) போனதா . தமிழனை முதல்ல காப்பாத்துங்க . அவனகொன்னுட்டு என்னத உலக லெவலுக்கு கொண்டு போக போறிங்க ? .
அட்லீஸ்ட் தமிழ் சினிமாவையாவது ரெண்டு குடும்பத்துகிட்ட இருந்து காப்பாத்துங்க . இல்லைன்னா நாம இப்படி விமர்சனம்கூட பண்ண முடியாது . நாட்டுல தான் தவற சுட்டி காட்ட கூடாது என்றால் ,
சினிமாவையுமா ? நாம எந்த ஊர்ல இருக்கோம் . ஓஒ புரிஞ்சி போச்சி …… கருத்துரிமை அற்ற தமிழ் நாட்டுல …. தமிழன காப்பத்துறேன்னு சொல்லிக்கிட்டு பினாடியே ஆப்பு வைக்கிற தமிழகத்துல உண்மைய சொன்னா வைதெருச்சல் ஓகே ஓகே …. அதுவா தானா அடங்கும் போது நாம எதுக்கு கூப்பாடு போட்டு . – பாலா
Coooooooooooooool ……….. எதுக்கு சார் இவளோ டென்ஷன்?
கடவுளே……. முடியல சாமீ……
நான் தமிழ்படங்கள் முன்னேற்றத்தப்பதி பேசனா, நீங்க ஒட்டுமொத்த தமிழர்கள் முன்னேற்றத்தப்பதி பேசறிங்களே?!! நல்ல விஷயம் தான். ஆனா ஒட்டுமொத்த தமிழர்கள் முன்னேற்றத்தப்பதி, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு தொரோகதப்பத்தி நாம வேற இடத்துல பட்டிமன்றம் வச்சி பேசலாம். நானும் உங்கப்பக்கம் பேசறேன். இது படங்கள் பத்தின பதிவு மட்டுமே. அதனால படங்கள் பத்தி மட்டும் பேசலாம்.
#நாம் எண்ண சொல்கிறோமோ அதை அவர்கள் செய்து கொடுப்பார்கள் வேலை செய்வது மட்டுமே அவர்கள் வேலை#
அந்த வேலைய ஒழுங்கா செய்யலனுதான் நான் சொன்னேன்.
இது ஷன்கர் சாரோட கனவு படம். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து தான் பண்ணிருப்பாரு. அப்படியிருக்கும் போது கிராபிக்ஸ்ல ஏன் கோட்டைவிடப்போறாரு???
கிராபிக்ஸ்ல சொதப்பிவிடக்கூடாதுனுதான் நம்ப ஆளுங்ககிட்ட குடுக்காம ஹலிவுட் படங்கள் பண்ற ஆளுங்ககிட்ட குடுத்ததே. நடைமுறைல என்ன நடந்ததுன்னு உங்களுக்கும் தெரியாது, என்னக்கும் தெரியாது. அதனால் தான் அனாவிசயமான விமர்சனங்கள் தேவைல்லைன்னு சொன்னேன். ((இந்தப்படத்தில் சில இடங்களில் மிகநன்றாக இருக்கும் கிராபிக்ஸ், சில இடங்களில் நன்றாக இல்லை. எல்லா இடங்களிலும் நல்லாபன்னித்தரலாம்லா?? ஏன் பண்ல??. நல்லா இருக்குற பகுதிகள அவங்க பண்ணாங்க, மற்ற பகுதிகள ஷன்கர் பண்ணாருன்னு சொல்விங்கபோளிருக்கே.!!)) நம்ப நாட்டு படங்களுக்கு இந்த அளவுதான் செஞ்சித்தருவாங்க.
காரனம் “இந்திய படம் ஹலிவுட்டை மிஞ்சிவிடும் என்பதற்காக”.
இந்தியாவுல எவளவோ நல்ல படங்கள் இருந்தும் ஏன் ஆஸ்கர் கிடைக்கல?
(ஆஸ்கர் விருதுளையும் அரசியல் நடக்குது அதான் காரணம்) அதுபோல் தான் இதுவும்.
“சலம் டாட் மில்லினியர்” ஆஸ்கர் விருது வாங்கியதேனு சொல்றிங்களா?
அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஹலிவுட்டை சேர்ந்தவர்கள். அதனால்தான் அந்தப்படத்திர்க்கும், அதில் இசையமைத்த நம் எ.ஆர்.ரகுமானுக்கும் கிடைச்சது. அதைவிட மிக நல்லா பாடல்கள் எவளவோ குடுத்துருக்காரு அப்போது ஏன் கிடைக்கல?
தெள்ளத்தெளிவாக புரியவைக்க இந்த ஒரு பதிவு போதாது நண்பரே.
புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
படம் உங்களுக்கு நல்லா இருந்த, நல்லா இருக்குனு சொல்லுங்க. உங்களுக்கு பிடிக்கலனா பேசாம விட்ருங்க. அப்படி உங்களால ஆதங்கம் தாங்கமுடியலனா எனக்குப்பிடிக்கல, நல்லா இல்லன்னு சொல்லிட்டுப்போங்களேன். அதை விட்டுட்டு நமக்கு முழுமையாக தெரியாத விஷயத்தை பற்றி விமர்சனமா? ((மன்னிக்கவும் உங்களுக்கு தெரிந்துருக்குமோ என்னவோ. என்னக்கு முழுமையாய் தெரிந்தால் மட்டுமே விமர்சனம் செய்வேன். மற்றபடி கதை அனைவருக்கும் நன்றாக புரியும்படி இயக்கியுள்ளார் ஷன்கர் சார். அறிவியல் வசனங்கள் சில தெரியாமல் போனாலும் அதை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை ஏற்ப்படுத்தி இருக்கிறார்)) ஐயா சாமீ நில்லுங்க நில்லுங்க. அதுக்காக விமர்சனம் செய்ய உரிமை இல்லையா? தவற சுட்டிக்காட்ட கூடாதா? கருத்துரிமை இல்லையானு மறுபடியும் கொடிய தூக்கிடாதிங்க. நீங்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்தான் ஒத்துக்கறேன்.
உங்களுக்கு விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கு.
முதலில் இதுபோன்ற பெரியபடங்களுக்கு விமர்சனம் செய்வதை விட, சின்ன படங்களுக்கு விமர்சனம் செய்ங்க. பாவம், அந்த விமர்சனம் அந்தப்படங்களுக்கு ஒரு விளம்பரமாகவாவது இருக்கும். (படத்தை பற்றி அனைத்து விஷயத்தையும் தெரிந்துக்கொண்டு, புரிந்துகொண்டு விமர்சனம் செய்வது நல்லது.)
கருத்துரிமை அற்ற தமிழ் நாடுன்னு சொன்னிங்களே? “கருத்து சொல்லவும் உரிமை இருக்கு, அதே நேரத்தில் சொல்லும் கருத்து தவறு என்றால், அதற்க்கு எதிர் கருத்து சொல்லவும் உரிமை இருக்கு”.
உண்மைய பொய்னு திரும்ப திரும்ப சொன்னா அது பொய்யாகிடாது சார்.
புரியாதவங்களுக்கு புரியவைகறது டைம் தான் வேஸ்ட்.
ok நண்பரே வருகைக்கு நன்றி. – ஆனந்த்
இது நான் எழதிய முதல் கருத்துரை இதற்க்கு பிறகாவது கொஞ்சம் ரூம் போட்டு யோசிங்க நண்பரே !
ஐயா, ஜெகதீஸ்வரன் அவர்களே !
அழகான கவிதை , அழகான விமர்சணம், கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரியே !
இருந்தாலும் , எந்திரன் என்ன பாவம் பன்னினான், குறிப்பாக சாடுகிறிகளே !
அது தான் தவறு , அது அவர்கள் வேலை அவர்கள் செய்கிறார்கள் , கலையை வைத்து பணம் புகழ் சம்பாதிக்கிறார்கள் அது அவர்கள் தொழில் , நமது உரிமை அதை பார்க்காமல் இருப்பதும் பார்ப்பதும் ,
ஆனால், பொழுது போக்கு என்பது இல்லை என்றால் மனிதன் மிருகமாகிடுவான் அது தான் உண்மை ,
ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்கு , அதில் அடிமையாக கூடாது அவ்வளவே !
அறிவுரை சொல்லுங்கள் நல் வழி காட்டுங்கள் உங்கள் பின்னால் அனைவரும் வருவார்கள் .
நல்ல கவிதை எழுதுங்கள் ரசிப்பார்கள் , பாராட்டுவார்கள் . தனி மனித விமர்சணம் தேவை இல்லாதது .
இதற்காக வரிந்து கட்டி காட்சி ஊடகத்தை பாழ் படுத்தும் சன் நெட்வொர்க்கை சாடுங்கள் தவறில்லை ,
காரணம் பகுத்தறிவு பேசும் குடும்பத்தில் இருந்துகொண்டு இவர்கள் பண்ணும் அலும்பல் தாங்களடா சாமீ
பணத்துக்காக என்ன வேணா பண்ணுவானுங்க இந்த சன் நெட்வொர்க் காரனுங்க. பாவம பணம் இல்லாத குறைக்கு இவர்கள் இடம் தஞ்சம் புக வேண்டி கட்டாயத்தில் தள்ளப்படுள்ளனர் .விமர்சணம்
படம் பார்த்து விட்டு எழது கிறேன் . எனக்கு இப்படி அடித்துக்கொண்டு கொண்டு பார்க்குமளவிற்கு
சினிமா அடிமை அல்ல ரஜினியை பிடிக்கும் , அது யார் நடித்தாலும் சிறந்த படமாக இருந்தால் பார்ப்பேன் .பார்த்த பிறகுமட்டுமே விமர்சணம் செய்வேன் . மீண்டும் சந்திக்கேறேன். கிரி விமர்சணம் நன்று .- பாலா
Coooooooooooooool ……….. எதுக்கு சார் இவளோ டென்ஷன்?
கடவுளே……. முடியல சாமீ……
முதலில் இதுபோன்ற பெரியபடங்களுக்கு விமர்சனம் செய்வதை விட, சின்ன படங்களுக்கு விமர்சனம் செய்ங்க. பாவம், அந்த விமர்சனம் அந்தப்படங்களுக்கு ஒரு விளம்பரமாகவாவது இருக்கும். (படத்தை பற்றி அனைத்து விஷயத்தையும் தெரிந்துக்கொண்டு, புரிந்துகொண்டு விமர்சனம் செய்வது நல்லது.)
“கருத்து சொல்லவும் உரிமை இருக்கு, அதே நேரத்தில் சொல்லும் கருத்து தவறு என்றால், அதற்க்கு எதிர் கருத்து சொல்லவும் உரிமை இருக்கு”.
உண்மைய பொய்னு திரும்ப திரும்ப சொன்னா அது பொய்யாகிடாது சார்.
புரியாதவங்களுக்கு புரியவைகறது டைம் தான் வேஸ்ட்.
இவை அனைத்தும் உங்களுக்கு பொருந்தும் . நண்பரே! ஓகே அதை விட்டுட்டு மறுபடியும் கொடிய தூக்கிடாதிங்க நண்பரே! – பாலா
என்திரன் அற்புதமான படம்