பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 14 வது கட்டுரை. Image Credit
ஆண்டவன் குழந்தை
குழந்தையை ஆண்டவன் உங்கள் பொறுப்பில் விட்டுள்ளான். நீங்கள் அப்பொறுப்பை நிறைவேற்றப் போதிய சக்தியையும் கொடுப்பார்.
ஆகையால், உங்கள் வலிமையை உணருங்கள், அதில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சச்சிதானந்தா கூறுகிறார்.
தற்காலப் பெற்றோர்கள்
தற்காலப் பெற்றோர்கள் பலர் குழந்தையின் அருமை தெரியாமலே இருக்கிறார்கள்.
பழைய காலம் போல 3 – 4 குழந்தைகள் அல்லாமல், பொருளாதார சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் ஒரு குழந்தை, அதிகபட்சம் இரு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
ஆனால், தங்களுக்கு இருக்கும் பொறுப்புகள், தேவைகளால் ஏற்படும் மன உளைச்சல், கோபம் ஆகியவற்றைக் குழந்தை மீது பிரயோகிக்கிறார்கள்.
அன்பாகக் கூறி வழி நடத்துவதைத் தவிர்த்து ஆவேசமாகப் பேசி, சண்டையிட்டு, திட்டி, அடித்துச் சூழ்நிலையை மோசமாக்கி விடுகிறார்கள்.
தங்களின் தவறை, கையாலாகாத்தனத்தை மறைக்கக் குழந்தையின் தவறாக சித்தரிக்கிறார்கள். தங்களுடைய இயலாமையை மறைக்கக் குழந்தையின் குற்றமாகக் கருதுகிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறியது போல, ஒரு குழந்தையை நமக்குக் கடவுள் அளித்து இருக்கிறார் என்றால், அதன் மதிப்பை உணர்ந்து இருக்க வேண்டும்.
அதோடு குழந்தையை வளர்த்து ஆளாக்கும் திறமையையும் அளித்து இருப்பார், அதை உணராதவர்களே சிரமப்பட்டுக்கொண்டுள்ளார்கள்.
சரியான வழிமுறையை, பாதையைத் தேர்ந்தெடுக்காதவர்களே தாங்களும் சிரமப்பட்டு, குழந்தைகளையும் சிரமப்படுத்துகிறார்கள்.
சரியாக திட்டமிடுதல், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றைப் பின்பற்றினாலே அனைத்தும் சாத்தியமாகும். அதுவரை தங்களையும் வருத்தி, குழந்தைகளையும் வருத்திக்கொண்டு இருப்பார்கள்.
குழந்தையின் அருமை குழந்தை இல்லாதவர்களுக்குத் தான் அதிகம் தெரியும். எனவே, ஆண்டவன் கொடுத்த குழந்தையின் அருமையை உணருங்கள்.
அதே போல அதீதப் பாசம் காட்டி, செல்லம் கொடுத்துக் கெடுத்து விடாதீர்கள்.
தொடர்புடைய கட்டுரை
குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. நீங்கள் கூறியதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் தற்போதைய சூழலில் பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க திணறுகின்றனர்.. சில குடும்பங்களில் வளர்க்கவும் தெரிவதில்லை..குறிப்பாக நகரத்து பெற்றோர்களிடம் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.. சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள்.. உண்மையில் குழந்தைகள் இருப்பது ஒரு வரம்.. நீங்கள் கூறுவது போல் அது இல்லாமல் போகும் போது போது தான் அந்த வலி தெரியும்..
@யாசின்
“தற்போதைய சூழலில் பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க திணறுகின்றனர்”
சந்தேகமில்லை. காரணம், கோபம், பொறுமையின்மை.
“சில குடும்பங்களில் வளர்க்கவும் தெரிவதில்லை..குறிப்பாக நகரத்து பெற்றோர்களிடம் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.”
உண்மை.
“உண்மையில் குழந்தைகள் இருப்பது ஒரு வரம்.. நீங்கள் கூறுவது போல் அது இல்லாமல் போகும் போது போது தான் அந்த வலி தெரியும்..”
சமீபத்தில் ஒரு பெண் 9 வருடங்களாக குழந்தையில்லை என்று தற்கொலை செய்து கொண்டார் ஆனால், இங்கேயோ குழந்தையின் மதிப்பே தெரியாமல் உள்ளார்கள்.
எரிச்சலாக உள்ளது.