ஆண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும்!

19
how to walk ஆண்கள் பெண்கள்

ண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என்ற தலைப்பைப் பார்த்து நாங்க நடந்துக்கிறத பற்றி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்று கடுப்பாக வேண்டாம். இது அந்த நடக்கிறதில்லை “Walking” நடை 🙂 . Image Credit

நடக்கிறதுல என்ன இருக்கு?!

நம்ம ஊர்ல பெரும்பாலனவர்கள் ஒழுங்காக நடப்பதில்லைஎன்பது உங்களுக்குத் தெரியுமா!

நானெல்லாம் அதைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லைன்னு சொல்றீங்களா! சரியா போச்சு போங்க.

அழகா உடை உடுத்துவதும், உடலை உடற்பயிற்சி மூலம் சிறப்பா வைத்துக்கொள்வதும், ஒப்பனை மூலம் அழகு சேர்ப்பதும் மட்டுமே ஒருவரின் அழகை கூட்டி விடாது!

அதோட நமது நடையும் நம் அழகை மதிப்பைக் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்கள் நடை

அழகு என்றாலே அங்கே சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் பெண்கள் வந்து விடுவார்கள். இந்த விசயத்துல ஆண்களுக்கு இரண்டாம் இடம் தான்.

நடையில் ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

கவிஞர்கள் கூடப் பெண்களின் நடையை பற்றித்தான் அதிக பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். எனவே முதலில் பெண்களுக்கு..

பெண்கள் தங்கள் நடையில் மிக மிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அழகாக இருந்தால் மட்டும் போதாது நடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

பெண்கள் அழகாக இருப்பாங்க ஆனால், நடையை பார்த்தால் கேவலமாக இருக்கும்.

காலைப் பரப்பிட்டு நடப்பாங்க பார்க்கவே கேவலமா இருக்கும்.

பெண்கள் தங்கள் கால்களை எப்போதும் அகலமாக வைத்து நடக்கவே கூடாது, ரொம்ப ரொம்ப தவறான செயல்.

அது உங்கள் தோற்றத்தையே முற்றிலும் மாற்றி விடும் நீங்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும்.

கால்களை எப்போதும் நேராகத்தான் வைக்க வேண்டும் 11 போல, மறந்து கூட “V” போல வைக்க கூடாது.

அழகான உடலமைப்பு உள்ளவர்கள் “F” டிவியில் வருவது போலக் காலை மாற்றி வைத்து நடக்கலாம் இதற்குப் புடவை சுடிதார் மிடி என்று எந்த உடையும் பொருத்தமாக இருக்கும்.

ஆனால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது கண்டிப்பாக மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கும் அளவான உடலமைப்பை கொண்டவர்களுக்கும் மட்டுமே பொருந்தும், மற்றவர்கள் தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.

ஆண்கள் நடை

ஆண்களுக்கும் பெண்களுக்குக் கூறியதில் பெரும்பகுதி பொருந்தும் அதாவது காலை “V’ போல வைக்கக் கூடாது.

பெரும்பாலானவர்கள் இதைப்போலவே நிற்கிறார்கள் நடக்கிறார்கள்.

ஒரு சில ஆண்களைக் கவனித்தால் ஸ்டைல் ஆக நடக்கிறேன் பேர்வழி என்று கூன் விழுந்தது போல நடப்பார்கள்.

இது அவர்களுக்கு வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கக்கூடிய விசயமாக இருக்கலாம் ஆனால், மற்றவர்கள் பார்வைக்கு இது கேவலமாகவே இருக்கும்.

ஆண்கள் எப்போதும் நிமிர்ந்த நடையாக இருக்க வேண்டும் அதற்காக ரொம்ப முறுக்கிட்டு நெஞ்சை நிமித்திட்டு இருக்க வேண்டாம்.

கால்களை எப்போதும் நேராகவே வைத்து நிற்க நடக்க வேண்டும் “11” போல. இந்திய ஆண்கள் நிற்கும் போது பலர் சொங்கி மாதிரி நிற்பாங்க.

அதோட இடுப்புக்கு கைய கொடுத்து ஒரு விளங்காத போஸ்ல நிற்பாங்க, பார்த்தாலே எரிச்சலை கிளப்பும்.

பல நாட்டு மக்களிடையே கவனித்ததில் நம்ம இந்திய ஆண்கள் மற்றும் பெண்களே இடுப்புக்கு கையைக் கொடுத்து நிற்கிறார்கள்.

நிற்கிற போஸை வைத்தே சொல்லிவிடலாம் கண்டிப்பாக இது நம்ம மக்கள் என்று 🙂 .

எனவே, நடையில் என்ன இருக்கிறது? என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நம்முடைய தன்னம்பிக்கை முதல் கொண்டு நம் நடையை வைத்துக் கணிக்கலாம்.

எனவே, ஆண்கள் பெண்கள் இதைப்போலத் தவறுகளைச் சரி செய்து, மாற்றியமைத்து புதிய பொலிவை மற்றவர்களுக்குக் கொடுங்கள்.

போனஸ்: பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

  1. உங்க நடை ரொம்ப நல்லாருக்கு…:)) எழுத்து நடையைச்சொன்னேங்க…

  2. ஃபார்முலா 1, எந்திரன்-ன்னு போய்கிட்டு இருந்தது, இப்புடி திடீர்ன்னு நடையை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது ?

    எங்கையோ தப்பு நடக்குது சார்… அம்மா ஊட்ல இல்லைன்னு நெனைக்குறேன்…

  3. நடையைப் பார்த்தும், நிற்கின்ற அழகைப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வந்தராதீங்க. மனசுன்னு ஒன்னு இருக்கு. அது மத்த நாட்டுகாரங்கல விட இந்தியர்களுக்கு அழகா இருக்கு.

    • sakotharan,
      Manasu – namma kitta enna manasu irukku?
      I Could say many examples – few months before 2 ministers (people representatives) were just watching when Police Inspector was struggling for his life in road (he was attcked my mistake by bomp and aruva).
      Mother is killing her own children. Husband is killed in 1st night/honeymoon by his own wife.
      Enna manasu!!!!vengayam!!!!
      Sorry if my words are hurting anyone.

  4. 11 madhiri nadakaroma, v madhiri nadakaromangaradhu mukkiam illai. Poga vendiya idathukku correct ah poidanum adhudhan mukkiyam.

    /ரஜினியை பிடிக்காதவர்கள்
    படத்திற்கு பலமான பிரச்சாரம்
    செய்து கொண்டு இருக்கிறார்கள்
    அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள்
    சார்பாக நன்றிகள/
    naanum thanks sollikiren

  5. @நாஞ்சில் 🙂 ரைட்டு

    @தனுசு ராசி ..ஹி ஹி ஹி கண்டுபிடிச்சுட்டீங்களா! ஒரே குஷ்டமப்பா! 🙂

    @சகோதரன் பதிவை படித்தா அனுபவிக்கனும் இப்படியெல்லாம் ஆராயப்படாது! அப்படியே ஆராய்ந்தாலும் இப்படி சென்ட்டியா யோசிக்கக்கூடாது! 🙂 பாருங்க நம்ம சதீஷ் எப்படி டென்ஷன் ஆகிட்டாருன்னு 😀

    @Mrs.Krishann அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல நீங்க ஒழுங்கா பார்த்து நடங்கன்னு சொல்றீங்களா! அது சரி! 🙂

    @சதீஷ் சகோதரன்! தானே மன்னித்து விடலாம் 🙂

  6. தங்களது வழக்கமான மற்றும் நேர்த்தியான எழுத்து நடையில் பதிவு நடையும் மெருகேறியுள்ளது. படித்து முடித்த பின் இவ்வளவு பெரிய கட்டுரையை முழுவதும் படித்து முடித்துவிட்டோமா..?!!! என்று நானே யோசிக்குமளவுக்கு கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது கிரி சார். (இது புகழ்வதற்கல்ல). 11 மற்றும் V என நடையின் முறையை இயல்பான நடைமுறையில் சொல்லி இருக்கீங்க. இவ்வளவும் என் எண்ணத்தின் வெளிப்பாடு அம்புட்டுத்தேன்.

  7. “இதில் உள்ள என்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூட வில்லன் ரஜினி மட்டுமே! ”
    எப்படி ஐஸ் மறக்கலாம் நீங்க!!!! வரலாறு முக்கியம் கிரி:)

    பதிவு கலக்கல்

  8. சிங்கப்பூரில் இருந்து கொண்டு மற்றவர்கள் நடக்கும் நிற்கும் அழகை ரசிக்க கூட உங்களுக்கு நேரம் இருக்கிறதா கிரி, நீங்கள் ஒரு நல்ல ரசிகன்தான் போங்க 🙂 .

    சலாம் பாம்பே நானும் பார்த்திருக்கிறேன் நல்ல கட்சியாமைபுள்ள ஒரு படம்.

    //அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றிகள//

    ஹ ஹ ஹ தொப்பி…தொப்பி…! இது எப்படி இருக்கு…!

    பகிர்வுக்கு நன்றி!.

  9. அடபோங்க பாஸ் ரொம்ப நேரம் நடந்தாலோ நின்னாலோ கடுப்பாக வரது நாலா கொஞ்சம் இடுப்புல முட்டு கொடுத்து நிக்கறது சகஜம் தானே .நீங்க தீபாவளி சமயத்துல உஸ்மான் ரோடு ல பொய் பாருங்க எல்லாரும் இப்படி தான் நிப்பாங்க.எந்திரன் ஒரு தலைவர் படம் , மேற்கொண்டு தொழில் நுட்ப விஷயங்கள் எல்லாம் நமக்கு additional fest என்று மனசுல நினைச்சுட்டு போன , எதிர்பார்ப்பு இல்லாம போன நிச்சயம் நல்லா இருக்கும் 🙂

  10. “எப்படியாவது நடந்தா சரி”-ன்னு நாங்கெல்லாம் நெனச்சுட்டிருந்தா, நீங்க அதுலயும் வகை வகையா இருக்குபான்னு சொல்றிங்க. அதுவும் பெண்களுக்கு டிப்ஸ் எல்லாம் அள்ளி வீசுரிங்க. ம்ம்ம்ம். உங்க வீட்டுக்காரம்மா காதுல இந்த விஷயத்த போட வேண்டியதுதான். 🙂

    //எனவே இது வரை வந்துள்ள படங்களில் இது கொஞ்சம் கிராபிக்ஸ் காட்சிகளில் சிறப்பாக இருக்கும் மற்றும் சில விசயங்களில் மேம்பட்டு இருக்கலாம் அவ்வளவே. எனவே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.// ரொம்பவே சரி. போட்டோக்கள பாத்தா, ரோபோவும் மத்த பட ஹீரோ போல (முக்கியமா ஷங்கரோட வழக்கமான பாணியில) அநியாங்களை தட்டிகேட்கும் போல இருக்குது. இது உண்மைங்கற பட்சத்துல நடுநிலைவாதிகளே படத்த நார் நாரா கிளிச்சுடுவாங்கலோங்குற பயம் ரொம்பவே இருக்கு. பார்ப்போம்.

  11. சன் இதற்கு செய்யும் விளம்பரம் ரசிகனான எனக்கே கடுப்பை கிளப்புது.

    அதே அதே

    நடை நல்லாருக்கு கிரி நான் எழுத்து நடையை சொன்னேன்

    ஹி ஹி

  12. கிரி,

    வாழ்த்துக்கள். விகடனின் ‘குட் ப்ளாக்ஸ்’ பகுதியில் உங்களது இந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

  13. @பிரவீன் நன்றி

    @அருண் ஐஸ் க்கு முன்னாடி இருந்து ..ரஜினி வில்லனாக நடிக்க மாட்டாரான்னு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கிறேன். ஒரு நல்ல வில்லனை தமிழ் திரையுலகம் இழந்து விட்டது. அது இப்படி சூப்பர் ஸ்டாராக வந்ததில் ஒரு மகிழ்ச்சி.

    @சிங்கக்குட்டி நான் ஒரு ரசிகன் 😉

    @சுனில் அப்ப நீங்க இடுப்புல கையோட தான் நின்னுட்டு இருக்கீங்க போல 😉

    @முத்து என் மனைவிக்கு எல்லாம் தெரியும் 🙂

    @சரவணன் நன்றி

    @ஸ்ரீநிவாசன் தகவலுக்கு நன்றி

  14. நடக்கும் நடையை அழகான எழுத்து நடையில் எழுதியுள்ளதால், விகடன் தேர்ந்தெடுத்து விட்டதோ!!??

    எந்திரன் – இது பத்தி நம்மள விட எதிராளிகள் நிறைய சொல்லி விடுகிறார்கள்.. நமக்கு டென்ஷன் குறைந்து விட்டது…. படம் பிரமாதம் என்று பார்த்தவர் ஒருவர் சொன்னார்…

  15. Hello, ENTRAN annan sonna maathiri > singa`nadai pottu sirathil earu.. ; sigarathai`adainthaal vaanathil earu.. > ada nalla nadanga.. Nalla naadunga.!

  16. நல்ல commedy ah எழுதி இருக்கீங்க……….
    அதோட நல்ல கருத்தும் உள்ளது…
    நன்றி தொடரட்டும்………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here