காமன்வெல்த் கொடுமைகள்

20
காமன்வெல்த் கொடுமைகள்

காமன்வெல்த் போட்டிகளுக்கு நம்ம ஆளுங்க செய்வதை பார்த்துப் பலர் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் வேளையில் உலகம் முழுவதும் பல நாடுகளிலிருந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சில நாடுகள் போட்டிகளுக்கு தங்கள் வீரர்களை அனுப்பவதைப் பற்றி யோசித்து வருகின்றன.

அந்த அளவிற்கு நமது மானத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வாங்கி விட்டனர்.

காமன்வெல்த் கொடுமைகள்

காங்கிரஸ் அரசை என்ன சமாதானம் கூறினாலும் என்னால் மன்னிக்க முடியவில்லை இதைவிட இவர்கள் கூறும் சப்பைக் கட்டுகள் நமக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு சிலர் மீடியா தேவை இல்லாமல் இதைப் பெரிது படுத்துவதாக கூறுகிறார்கள்.

இருக்கலாம் ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

லண்டனில் நடந்த போது கூடக் கடைசி நேரத்தில் மரம் நட்டுக்கொண்டு இருந்தார்கள் என்று கூறுகிறார்கள் ஆனால், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

ஆனால், இங்கே பாலம் விழுகிறது, மேல் சுவர் கழண்டு விழுகிறது. இவை அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாதா! குறிப்பாக வீரர்கள்.

இப்படி இருந்தால் மற்ற நாட்டினர் எப்படி நம்பி தங்கள் வீரர்களை அனுப்புவார்கள்.

என்னமோ போங்க!

முன்பெல்லாம் கொள்ளை அடித்தாலும் வேலையை சரியாக செய்து விடுவார்கள் தற்போது கொள்ளையும் அடித்து வேலையும் செய்வதில்லை.

போறபோக்கை பார்த்தால் … என்னமோ போங்க! ஒன்றும் சொல்வதிற்கில்லை.

ஆளாளுக்கு நம்ம நாட்டின் மானத்தை வாங்கிக்கொண்டு இருக்க BBC யும் தன் பங்கிற்கு போட்டுத்தாக்கியுள்ளது.

இந்தப்படங்களில் ஏமாற்று வேலை எதுவுமில்லை என்றாலும் இப்படி பார்க்கும் போது ரொம்ப அசிங்கமாக உள்ளது.

படமல்ல நம்ம நாட்டோட நிலைமை 🙁 .

இந்தப்படங்கள் போட்டி துவங்கும் முன்பே அதாவது வேலை முடியும் முன்பே எடுக்கப்பட்ட படங்கள் என்றாலும் புது படுக்கை, சாதனங்கள் எல்லாம் இவ்வளவு கேவலமாகவா இருக்கும்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சி செய்தி வந்து நம் அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது.

ஆணியே புடுங்க வேண்டாம் என்பது போலப் போட்டியும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் என்று தோன்றுகிறது.

படங்கள் நன்றி BBC

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

  1. ஐயோ கொடுமைங்க! வர்ற நியூஸ் எல்லாமே நெகட்டிவ்வாவே வருது. என் நண்பன் இதுக்கு காரணமான நாய்களை எல்லாம் தூக்குல போடணும்னு புலம்பறான். எவனையாவது நேர்ல பாத்தா கொண்ணே புடுவான் போல.

    மலேஷியாவுலயும் இங்க சிங்கப்பூர்லயும் பல டேக்சிக்கள்ல ” Incredible India”-ன்னு எழுதி இருந்தாங்க. அது என்னான்னு டேக்சி ஓட்டிகளிடம் கேட்டப்ப “அதான் இந்தியால காமன் வெல்த் கேம்ஸ் வருதில்ல, அதை கொண்டாடத்தான்”ன்னு எல்லாருமே சொன்னாங்க. இத்தனைக்கும் அப்படி சொன்னவங்கள்ல இந்தியர்கள் அல்லாதவர்களும் அடக்கம். அப்படிப்பட்ட இந்த விழாவ போயி… எனக்கு ரத்தக் கண்ணீர்தான் வருது. ஆனா நம்ம மக்கள் எதுக்கும் அசர்றதா தெரியல. இதையும் வச்சு காமெடி பண்ணிட்டு இருக்காங்க, ஒரு சாம்பிள் பாருங்க இங்க:
    teacher: wht ds ur dad do?
    kid: he is a stripper in a gay bar.
    ——->after class
    teacher: is dat true abt ur dad?
    kid: no, actually he works for the CWG wid suresh kalmadi bt i ws too embarrassed to say dat..

  2. //முன்பெல்லாம் கொள்ளை அடித்தாலும் வேலையை சரியாக செய்து விடுவார்கள் தற்போது கொள்ளையும் அடித்து வேலையும் செய்வதில்லை. //

    நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கீங்க..!!

    //இப்படி பார்க்கும் போது ரொம்ப அசிங்கமாக உள்ளது…
    படமல்ல நம்ம நாட்டோட நிலைமை//

    இந்தப்படங்களே இந்தியாவின் சுகாதாரத்தை அருமையாக படம் பிடித்து காட்டுகிறது. ஒரு பானை சோற்றுககு ஒரு சோறு பதம் போல…. பல மாநிலங்களில் இதுதான் நிலைமை. பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் நிலைமை இதைவிட மோசம் என்றால் அது மிகையாகாது. நம்ப பங்குக்கு ஊதுற சங்க ஊதுவோம் கிரி சார்.

  3. Singapore hosted Youth Olympics games. South Africa hosted World Cup.
    And India is hosting Commonwealth Games. India has more preparation time ( 7 years ) than Singapore and World Cup.

    Shame.

  4. North Indiavula varalaaru kaanatha mazhai peyyuthu. Erkanave delhi is not designed for rain or floods, ithula Bombay or Chennai maadiri mazhai penja enanvum?

    Ithula common wealth games vera oru koothu. Supera 70000 crore rs (70000,00,00,000) vaangi pocketla pottukittanga ellarum (suresh kalmadi, shiela Dikshit, Sonia Gandhi, sharad pawar,etc).

    Contract vaangi 4 varusham supera thoonginanga. Appurama muzhichikittu 2008 endla velai start panna aarambichaanga (delhila mazhai peyyathunnu confidence). aanal varuna bhagwan samayam paarthu pazhi theerkkaraar.

    Naduvula CWG committee aalungala (vellaikaaran than) sari katta paarthanga. Avan poda mayirunnu sollittan.

    Ippo pona vaaram vellaikaaranga inspection panninaanga. Games village apartment orama oruthan onnukku adichikittu irundhaan. Atha kooda press meetla sollittan andha vellaikaaran “this place is filthy and not suitable for stay”.

    Stadium pakkathula oru foot-over bridge idinju vizhundhiduchu. Apuram stadium ulla boxing areavula ceiling govinda.

    Games villagekku pakkathula oru logistic center kattiyirukkanga – oru 600 buses anga nikkuthu, for picking and dropping the players to venue and airport.

    Ivlo kooththu nadakkuthu, anaalum suresh kalmaadi (avarthan chief operating officer) onnumay nadakkatha maadiri “this will be the best CWG event” appadinnu petti kudukkaraaru. As usual ella news channelsum pottu kizhikkaraanga.

    Pothaakuraikku Dengue fever vera delhila paravuthu. Vellaikaaran summave allergy aavan. Ivlo mazhaiyila vandhaanna avlo than.

    Event nadakkumbothu mazhai penjaa avlo than. Kandippa indha nainga ceilinga ozhunga finish panniyirukka mattanga. Supera ozhugum.

    Yamunai nadhila vellam perukkeduthu oduthu, delhikku mela Haryana and Uttarakhandnu rendu state irukku, rendu idathalyum sema mazhai, avanga dam thorandhu vittuttanga. Plus delhila vera mazhai pottu kaattuthu. Vilaivaasi innum erapovuthu. Because all the important food supplying states are under flood.

    New Zealand team will decide on Friday whether to participate in the games or not. Already all the star performers across events have pulled out of games.

    Minji pona suresh kalmaadikku padhavi pogum. 70k crorela 10% adichakooda periya amount than. Athukkapuram padhaviyavathu mayiraavathu?

    Ithula oru periya advantage ennanna Indiavukku niraya medals kidaikka chance irukku. enna yaarume pottikku irukka mattanga.

  5. வெறும் வாய் மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் எப்படி இருக்கும்…

  6. வாழ்த்துக்கள் சகோதரம்… தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ…அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!ஃஃஃ

  7. என்னாலும் தாங்க முடியவில்லை!!!… ஆனாலும் ஆபிஸில் அது ரொம்ப பழைய படம்ன்னு சமாளித்துக் கொண்டிருக்கிறேன்!!!… துட்டு அதிகமா குடுக்கிறப்ப 20 20 கிரிக்கெட் போட்டி நடக்கிறப்ப இந்த மீடியாவுக்கு தெரியலயா? …. எல்லாம் நம்ம மீடியாவை கொஞ்சம் அடக்கி வைக்கனும்!!

  8. நான் அவரை நல்லவர் என்று சொல்லவில்லை ஆனால் அவரிடம் தலைமை பொறுப்பை கொடுத்துப்பாருங்கள், கண்டிப்பாக இத்தணை பிரச்சினைகள் இருக்காது, சுத்தமா அவர் சுருட்டிட்டு சூப்பராக்கி இருப்பார் அவர்தான் Mr.Modi (IPL KING).

  9. பாலம் இடிவது, கட்டிடம் இடிவது போன்ற வேலைகள் தாமாகவே நடை பெறுவதால் தீவிரவாதிகளுக்கு மொக்கை கொடுக்கப் படுகிறது… என்று சொன்னாலும்சொல்வார்கள்..

  10. முத்து, பிரவீன், ராமலக்ஷ்மி, Kreshna, தினேஷ், mathistha, Jawa, sheik, மனோஜ், சங்கர், shivabi மற்றும் ஈ. ரா வருகைக்கு நன்றி.

    @தினேஷ் ஒரு பதிவே எழுதும் அளவிற்கு விரிவா எழுதிட்டீங்க நன்றி.

    @எல்லோருக்கும் எல்லா நாட்டிலும் கேவலமா திட்டிட்டுடு இருக்கானுக.. என்னத்தை பண்ணுறது! கடுப்பு தான் வருது 🙁

  11. எல்லாம் நல்லதுக்குத்தான். பணம் இருந்தா
    மட்டும் பத்தாது, தரம் இருக்கணும், என்பது நம்மாட்களுக்கு புரியணும். எல்லா விஷயங்களையும் போட்டு உடைச்சாத்தான், முன்னேற்றம் வரும். மறைச்சு use இல்ல. வாட் மீடியா ஹாஸ் டன் இஸ் குட் for இந்தியன் country .

  12. இந்திய மானம் போச்சு எல்லாம் அரசியல் வாதிகளின் சூல்சி

  13. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகிறது .இந்திய மக்கள் பாவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here