அலறப்போகும் சிங்கப்பூர் – F1 Grand Prix 2010 கோலாகலம்

19
how to walk ஆண்கள் பெண்கள்

சிங்கப்பூர் அரசாங்கம் வெற்றிகரமாக மூன்றாவது வருடமாக Formula 1 Grand Prix இரவுப்போட்டியை நடத்த ஆயுத்தமாகி விட்டது.

போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை [24-09-2010] முதல் துவங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் சிறப்பான முறையில் செய்து வருகிறது.

போட்டிக்காக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஹோட்டல்கள் நிரம்பி வழிகிறது.

போட்டி நடக்கும் இடத்தைச் சுற்றி சில படங்கள்

வெள்ளிக்கிழமை கதறப்போகும் சாலை இது தான்.. விர்ர்ரர்ர்ர்ரர்ர்ர்ரும் சத்தம் அங்குள்ளவர்களின் காதைப் பிளக்கப்போகிறது.

இந்தச்சாலையை இந்தப்போட்டிக்காக இந்த முறை புதுப்பிக்கவில்லை அப்படி என்றால் இயல்பாகவே இந்தச் சாலையின் தரம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

F1 போட்டி நடக்கும் சாலை எல்லாம் கண்ணாடி மாதிரி இருக்க வேண்டும் கொஞ்சம் கூடப் பள்ளம் மேடு விரிசல் இருக்க கூடாது.

கடந்த முறை லூயிஸ் ஹாமில்ட்டன் பயிற்சி போட்டியில் சாலை குதிக்குது என்று புலம்பிட்டு முதல் பரிசைத் தட்டிட்டு போயிட்டாரு.

முதல் முறை நடந்த போட்டியில் முதலாக வந்த அலான்சோ இரண்டாவது போட்டியில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இந்த முறை ஃபெர்னாண்டோ அலான்சோ முதல் இடத்தைப் பிடிக்கலாம் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

The Fullerton Hotel

மேலே படத்தில் இருக்கும் “The Fullerton Hotel” ல் தான் F1 ஓட்டுனர்கள் தங்கப்போகிறார்கள். மிகவும் அதிகமான கட்டணத்தைக் கொண்ட ஹோட்டல் இது.

இந்த ஹோட்டல் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல்.

இதற்கு முன்பு இந்தக்கட்டிடம் சிங்கப்பூர் தபால் துறை அலுவலகமாக இருந்தது. இது எப்படி இருக்கு! 🙂 .

இவங்களுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பு ஆர்வம் அந்த நாட்டின் பிரதமருக்குக் கூடக் கிடைக்காது.

நம்ம ஊர்ல எப்படி சச்சின் வந்தால் மற்ற எந்தப் பெரிய தலையும் ஒதுங்கித் தான் நிற்கணும்… அது போலத்தான்.

விளையாட்டு வீரர்கள் எங்கும் கடவுளை விட அதிகமாக மதிக்கப்படுகிறார்கள் நேசிக்கப்படுகிறார்கள்.

Michael Schumacher

2006 இறுதியில் ஓய்வு பெற்ற கார்பந்தய சூப்பர் ஸ்டார் Michael Schumacher தனது வழக்கமான அணியான ஃபெராரியில் இல்லாமல் வேறு நிறுவனத்திற்காக போட்டியில் கலந்து கொள்ள மீண்டும் வந்துள்ளார் இதுவரை 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இவரைப் பார்க்கவும் பலர் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அது போல கார் ஓட்டுபவர்களும் சும்மா இருக்க முடியாது என்று மறுபடியும் வந்துட்டாரு போல 🙂 .

வாங்க தல! வந்து தூள் கிளப்புங்க!

போட்டி நடக்கப்போகிறது என்றால் இடம் களைகட்டி விடும். விளம்பரத்திற்க்காக பல பெண்களை அதன் நிறுவனங்கள் கொடியுடன் நிறுத்தி இருந்தனர்.

அந்தப்பெண்கள் உற்சாகமாக அனைவருடனும் புகைப்படம் எடுத்து வந்தவர்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடிகள் அவர்களிடம் வாங்கி உற்சாகமாக சுற்றிக்கொண்டு இருந்தனர்.

அங்கு வந்து இருந்த ஒரு வெளிநாட்டுப் பெண் அலான்சோ விற்க்காக தான் வந்து இருப்பதாகவும் அவர் தான் வெற்றி பெறுவார் என்றும் சந்தோசமாகக் கூறினார்.

அங்கு வந்து இருந்த பலர் போட்டிகளைக் காண ஆர்வத்துடன் இருப்பதை காண முடிந்தது.

டிக்கெட் விலை கண்ணைக் கட்டியதால் ஹி ஹி வழக்கம் போல டிவி யில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பாபு

எத்தனை பேரைப் படம் எடுத்தாலும் குழந்தைகளை எடுப்பது போல இருக்காது என்று மீண்டும் ஒரு முறை இந்தப்படம் நிரூபித்தது.

பையன் சோக்கா இருக்கான்பா! வருங்காலத்துல பல ஃபிகர்ஸை கவர் பண்ணிடுவான் போல 😉 .

இங்குள்ள படங்கள் அனைத்தும் எனக்காக எடுத்தது என் நண்பேன்டா! பாபு 🙂 .

நான் இந்தப்போட்டியை பற்றி ஏற்கனவே அலசு அலசுன்னு அலசி விட்டதால் மறுபடியும் அதையே கூற என்ன இருக்கிறது என்று இதைப் போல முன்னோட்டம் கொடுத்து விட்டேன்.

சென்ற ஆண்டு நடந்த போட்டியைப் பற்றிய பல சுவாராசிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரை அலற வைத்த “Formula 1″ – 2009

மொத்தம் மூன்று நாட்கள் போட்டி நடைபெறுகிறது வெள்ளிக்கிழமை பயிற்சிப் போட்டி, சனிக்கிழமை தகுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி.

நான் வெள்ளிக்கிழமை நடக்கும் பயிற்சிப் போட்டிக்கு நண்பன் பாபு அழைப்பின் பேரில் செல்கிறேன்.

ஹி ஹி ஒரே பரபரப்பா இருக்கு… எவ்வ்வ்வளோ பெரிய போட்டியை பார்க்கப் போகிறோம் என்று நினைத்தாலே சும்மா கிரர்ர்ர்ர் னு இருக்கிறது.

ஹய்யோ! கை கால் எல்லாம் பரபரங்குதே! பயிற்சி போட்டியைப் பார்க்குறதுக்கே இந்தக்கூத்தா என்று நினைக்காதீர்கள்.. இந்தப்போட்டியே அதகளமாக இருக்கும்.

அப்ப இறுதிப்போட்டி!… ஷாக் அடிக்கற மாதிரி இருக்கும் 🙂 .

டிரைலரே அதிரும் மெயின் பிக்சர் பட்டாசு கிளப்பும் 😉 போட்டியைப் பார்த்த பிறகு சுவாரசியமான செய்திகள் இருந்தால் அது பற்றி எழுதுகிறேன்.

கொசுறு

நேற்று இந்தப்பதிவு எழுதி ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.

இன்று காலையில் இந்தியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் (ஊழலால்) இடிந்து விட்டது என்ற செய்தியை படித்த உடன் மொத்த உற்சாகமும் புஸ்ஸ்ஸ் ஆகி விட்டது. அட! போங்கப்பா!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

 1. மிக்க நன்றி கிரி…

  வெள்ளிகிழமை மாலை பொழுது கண்டிப்பாக பட்டாசா(உங்க பாஷைல சொல்லனும்னா) இருக்கும்… இதுக்கு நான் உத்தரவாதாம்…

  என்னை பொருத்தவரை F1 கார் பந்தயத்தை ஒவ்வாருவரும் ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும்…இது என்னுடைய தாழ்மையான கருத்து…

 2. கிரி, நான் ஊருக்கு புதுசு… என்னையும் ஆட்டத்துல செத்திக்குங்க.

 3. கிரி, ஆன்லைனில் டிக்கெட் இருக்கிறது. வெள்ளிக்கிழமைக்கு மட்டும் “Zone 4 Walkabout” ஏரியாவில் டிக்கெட் விலை 38 வெள்ளிதான்.

  என்ன சொல்கிறீர்கள்?

 4. @பாபு யோவ்! பாபு உன்னை நம்பி வசனம் எல்லாம் பேசிட்டேன்.. கவுத்துராதய்யா! 😉

  @முத்து அதற்கே முன்பதிவு செய்யுங்கள்..நாங்களும் அதற்கு தான் முன்பதிவு செய்துள்ளோம் 🙂 நான் வெள்ளிக்கிழமை மட்டும், என் நண்பன் இறுதிப்போட்டி வரை.

 5. ஹாஹா… அதற்கே (வெள்ளியன்று மட்டும்) முன்பதிவு செய்துவிட்டேன்.

 6. எங்க ஊர் அபுதாயில நவம்பர்ல இருக்கு எஃப்-1 ரேஸ்!! அதையும் பாக்க வாங்க. (நோ ஃப்ரீ டிக்கெட்!)

 7. //இந்த முறை அலான்சோ அல்லது ஃபெர்னாண்டோ முதல் இடத்தை பிடிக்கலாம் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.//
  இரண்டுமே ஒருவர்தான்.
  உங்களுக்கு நேரில் பார்க்க வாய்ப்பு கிடைதிருக்கிறது. நங்கள் ௨௦௧௧ டெல்லி GP க்காக காத்திருக்கிறோம்.
  நன்றி

 8. @முத்துக்குமார் ரைட்டு 🙂

  @ஹுஸைனம்மா ஆஹா! அங்கேயுமா! ஏற்கனவே சூடு அங்கே! இனி சூடு பறக்க விளையாட்டா .. 😉

  @சிங்கக்குட்டி நீங்க கில்லாடி குட்டி 🙂

  @குமார் கை ஸ்லிப் ஆகி மெர்ஜ் ஆகிட்டேன் 🙂 (சூரியன் பட கவுண்டர் ஸ்டைல் ல் படிக்கவும்) சுட்டியமைக்கு நன்றி மாற்றி விடுகிறேன்.

 9. ////// இந்தச்சாலையை இந்தப்போட்டிக்காக இந்த முறை புதுப்பிக்கவில்லை அப்படி என்றால் இயல்பாகவே இந்த சாலையின் தரம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். F1 போட்டி நடக்கும் சாலை எல்லாம் கண்ணாடி மாதிரி இருக்க வேண்டும் கொஞ்சம் கூட பள்ளம் மேடு விரிசல் இருக்க கூடாது.////

  ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ….,இங்க காமன் வெல்த் கேம் ஒன்னு நடத்துறாங்க கிரி ,நேத்து ஒரு பாலம் இடிஞ்சு போச்சு ..,இன்னைக்கு மதியம் வெயிட் லிப்டிங் ஸ்டேடியம் FALSE CEILING பேத்துகிச்சு..,ஊழல் ,ஊழல் ,ஊழல்….,காமன் வெல்த் கேமுக்காக கட்டப்பட்ட ஒவ்வொரு செங்கல்ளையும் ஊழல் …, ஹ்ம்ம் ..,ஹ்ம்ம் என்ஜாய் கிரி

 10. ஐ ,

  கொசுறு பகுதியில பாலம் பற்றி நீங்களும் போடிருகீன்களா !!!

 11. நண்பர் கிரிக்கு போட்டிகள் பற்றிய விவரங்கள் அருமை. விறுவிறுப்பாக படிக்க முடிந்தது.

  படங்கள் நன்றாக உள்ளது அதுவும் குழந்தை படம் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பேன்டா பாபுவுக்கு பாராட்டுகள் 🙂

 12. என்னைய விட்டுட்டு போறது உங்களுக்கே நியாயமா இருக்கா?? தம்பி வினய் அப்பா தலையில உச்சா போடா… அப்பத்தான் சரிப்படுவாரு.

 13. //இந்த ஹோட்டல் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் இதற்கு முன்பு இந்தக்கட்டிடம் சிங்கப்பூர் தபால் துறை அலுவலகமாக இருந்தது. இது எப்படி இருக்கு!//

  வேறு அலுவலகமும் இருந்ததாகத் தெரியாதா?

 14. கிரியார்
  அந்த சாலையை பார்க்கும் போது நமது இந்திய சாலையின் ஒப்பீடு செய்யமால் இயலவில்லை 🙂 நம்ம ஊரில் கூடிய சீக்கிரம் f1 வரும் 🙂
  காமன் வெல்த் போட்டிகள்- புது இலக்கணம் – நம் மக்களின் வரி பணம் – காமன் வெல்த் அதை வைத்து அரசியல்வாதிகள் விளையடுவது கேம் ..

 15. @சங்கர் என்னத்தை சொல்றது போங்க! கடுப்பு தான் ஆகுது.

  @டேனியல் “படமெடுக்கும் பாபு” ன்னு இனி கூப்பிட வேண்டும் போல.. 🙂 அடுத்த போட்டிக்கான படத்தையும் எடுக்க கூறி இருக்கிறேன். என் கிட்ட ரொம்ப உயர்தர கேமரா இல்லை.

  @ரோஸ்விக் ஏன் இந்த கொலைவெறி!

  @ராமலக்ஷ்மி நன்றி 🙂

  @ராவணன் Good Question! 🙂 இதை மாற்றி பல வருடங்கள் ஆகிறது..அதே போல மாற்றங்கள் செய்யும் போது மிகப்பெரிய பணி நடந்து இருக்கும் என்பதால் இந்த மாதிரி எல்லாம் தோன்ற விடமாட்டார்கள். சிங்கப்பூர் ஆளுங்க கில்லி மாதிரிங்க.

  @சுனில் உங்க இலக்கணம் செம! 🙂

 16. கிரி சார் நீங்க ரொம்ப லக்கி. மீதியை அப்புறம் சொல்கிறேன். அசத்துங்க…. !!!
  ( இது என்ன ஊர் சிங்கப்பூர்……..) (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

 17. //@ராவணன் Good Question! 🙂 இதை மாற்றி பல வருடங்கள் ஆகிறது..அதே போல மாற்றங்கள் செய்யும் போது மிகப்பெரிய பணி நடந்து இருக்கும் என்பதால் இந்த மாதிரி எல்லாம் தோன்ற விடமாட்டார்கள். சிங்கப்பூர் ஆளுங்க கில்லி மாதிரிங்க.//

  இதெல்லாம் பண்ணும் போது இங்கேயே சுற்றித்திரிந்தவன்.முஸ்தாபாவே இன்று வந்ததுதான்.நான் வரும்போது செரங்கூன் பிளாசாவில் இருந்த சின்னக் கடை இன்று மிக பிரம்மாண்டமாய் உள்ளது.பழைய சிங்கையை நான் எனது பழைய போட்டோவில் மட்டுமே பார்க்கின்றேன்.
  நாங்கெல்லாம் ‘ஒக்கடு’ ,மாதிரி,கில்லியின் ஒரிஜினல் தெலுகு வெர்ஷன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here