உடை அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். அது எப்படி என்று பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ் கட்டுரையில் கூறுகிறேன்.
உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும்.
ஆசைப்படுகிறோம் என்பதற்காகப் பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக் கூடாது. Image Credit
சரியான உடைகளைத் தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றலாம்.
எடுத்துக்காட்டாகக் குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள், ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள்.
நல்ல உடலமைப்பு இருக்கு ஆனால், ஸ்மார்ட்டா கவர்ச்சியா இல்லைன்னு நினைக்கிறவங்க எல்லோருமே இப்பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.
குண்டாக இருப்பவர்கள்
இருப்பதிலேயேகுண்டாக உள்ளவர்களுக்குத் தான் ரொம்பச் சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இருக்காது.
அதற்குக் காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான்.
உடற்பயிற்சி செய்து குறைக்கலாம் என்றாலும், உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளைத் தேர்வு செய்யவே கூடாது.
காரணம், அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாகக் காட்டும்.
குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம். பார்ப்பவர்களுக்கு வெறுப்பையே தரும்.
இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், ‘எனக்கு இந்த மாதிரித் துணி தான் பிடிக்கும்‘ என்றால், இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளைத் தேர்வு செய்யுங்கள்.
காட்டன் வகை உடைகள் சிறந்தது. ‘எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!!‘ என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
குள்ளமாகக் குண்டாக இருப்பவர்கள்
இவர்களும் வழுவழுப்பான உடைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை.
இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும்.
பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாகக் குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு சிலருக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும்.
அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான். இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்திக் காட்டும்.
அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாகக் காட்டாது.
பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாகக் குள்ளமாகக் குண்டாக உள்ளவர்கள்.
அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்புப் பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும்.
ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.
ஒல்லியாக உள்ளவர்கள்
ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடைகளைத் தவிர்க்க வேண்டும், இவை உடலைக் குச்சி குச்சியாகக் காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும்.
சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்பக் குறைவாக வைக்கக் கூடாது.
இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாகப் பார்த்துக்கொள்வது நல்லது.
உடைகளால் கவனிக்க வைக்கலாம்
நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்லை. சரியான உடலமைப்பில் இருந்தாலும் ஸ்மார்ட்டாகத் தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா!
இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள்.
இதற்கும் உங்கள் முக அழகிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், அதைப் பயன்படுத்தலாம்.
பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன். மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும்.
சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக் கூடாது.
சுடிதார்
உடல் வடிவமைப்பு சரியாக உள்ளவர்கள் ஸ்ட்ரைப்ஸ் (மேலிருந்து கீழ் வரிகள்) சுடிதார் அணிந்தால், உங்கள் உடல் வடிவமைப்பைக் கவர்ச்சியாக அதே சமயம் ஆபாசம் இல்லாமலும் காட்டும்.
இடுப்புப் பகுதி குறுகி இருக்க வேண்டியது அவசியம். இவை உங்கள் உடல் வளைவுகளை எடுப்பாகக் காட்டும்.
சுடிதார் துப்பட்டா தேவையா?
தற்போது பெண்கள் பெரும்பாலும் துப்பட்டா அணிவதில்லை. தங்கள் மார்பக அழகை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?! என்று தெரியவில்லை.
ஆனால், ஆண்களைக் கவர வேண்டும் என்றால், துப்பட்டா அணிந்தால், அதிகம் கவனிக்கப்படுவீர்கள். அதோடு கண்ணியத் தோற்றமும் மரியாதையும் ஏற்படும்.
முழுக்க போர்த்திக்கொண்டு இருக்க வேண்டியது இல்லையென்றாலும், ஓரளவாவது மறைப்பது அழகை, கண்ணியத்தைக் கொடுக்கும்.
புடவையை அடிச்சுக்க வேறு உடையே கிடையாது
‘நான் அலுவலகம் போவதில்லை, சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தான் கட்டுவேன்‘ என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க.
உலகிலேயே நாகரீகமாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான்.
நல்ல உடலமைப்பு உள்ளவர்களுக்கு எந்தப் புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம், அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதைச் சரியான முறையில் கட்ட வேண்டும்.
‘எவ்வளவு வருசமாகப் புடவை கட்டுறேன் எனக்குப் புடவை கட்டுறத பற்றிச் சொல்றீங்களே!‘ என்று கோபப்படாதீங்க.
ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள், கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள்.
தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும்.
முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலைச் சுத்தி வைத்துக் கட்டியது போல இருக்கக் கூடாது இது மாதிரி நிறைய இருக்கு.
லோ ஹிப்
முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதைப் போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள்.
ஆனால், சிலருக்கு மட்டுமே அழகாக இருக்கும்.
விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் 🙂 .
கவர்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாகக் கிண்டலடிக்கும் படியோ உடை அணியக் கூடாது.
அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தைத் தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம் ஆனால், அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.
ஐஸ்வர்யா ராய்க்கு என்ன மாதிரியான உடை அணிந்தாலும் ஆபாசமாக இருக்காது. எல்லோருமே ஐஸ்வர்யா அல்ல என்பதை உணர வேண்டும் 🙂 .
குறைவான விலை உடையிலும் அசத்தலாம்
பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாகத் தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம்.
மிகக் குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது.
எந்த உடையாக இருந்தாலும் நமக்குப் பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்கக் கூடாது.
பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ் கட்டுரையில் கூறிய அனைத்தையும் விட மிக முக்கியமானது தன்னம்பிக்கையுடன் இருப்பதும், தாழ்வு மனப்பான்மையைத் தவிர்ப்பதும் தான்.
ஒருவரை மிக அழகாகக் காட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றுவது உடை தான்.
எனவே, இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்குத் தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றிக் கொள்ள முடியும்.
இது வரை உங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள், ‘நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும்‘ என்று சொல்லும் படி ஆகி விடும்.
அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதைப் பின் பற்ற முடியும்.
மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போலப் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.
எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட.
கொசுறு
எனக்கு மூன்று அக்காக்கள் உள்ளார்கள் என்பதும், உடை விஷயத்தில் அதிக ஆர்வம் என்பதுமே இக்கட்டுரை எழுத உதவியாக இருந்தது 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
பெண்களுக்கான ஜீன்ஸ் லெக்கிங்ஸ் உடை டிப்ஸ்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
🙂 Nice…
Fashion designer ஆக போறீங்களா?? :))
அருமையா சொல்லிருக்கீங்க. நன்றி.
கிரி கலக்கலோ கலக்கல் !
சுப்பர் ஒ சுப்பர்
கிரி…..
சரி…சரி…. கைவசம் ஒரு தொழில் இருக்கு….
இவ்ளோ சரக்கு (உடை/காஸ்டியூம் பத்திதாம்பா) கையில வச்சுட்டு, "எந்திரன்" ப்ரொஜெக்ட எப்படி மிஸ் பண்ணினீங்க? "ஐஸ்வர்யா ராய்"க்கு கொடுத்து வைக்கல…
ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க……
கிரி,அடுத்த முறை பதிவை நீளம் குறைவாகப் போடவும். இதை வாசித்துவிட்டு எவ்வளோ கஷ்டப்பட்டேன்னு என்று எனக்குத்தான் தெரியும்
இந்த ஏரியான்னே இல்லாம எல்லாத்துலயும் கலக்குறிங்க கிரி.சூப்பரு.
அப்துல்லாவுக்கு நம்ம மேல இருக்க நம்பிக்கைக்கு நன்றி.
போட்டாச்சுல்ல எதிர்பதிவு 🙂
செம டிப்ஸ் கிரி,
எப்படி இப்படியெல்லாம் …
பாப்பேல ஃபேஷன் டிசைனர் கொறையுதாம்!
கொஞ்சம் வந்துட்டுபோங்க!
ரொம்ப உபயோகமா தகவல்.. குட்
/*அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். */நல்ல ஒரு ஆராய்ச்சி…உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்..
நல்லா இருக்கு கிரி…,
படங்களை கொஞ்சம் பெருசா போடப்புடாதா?
ஒரு ஆதங்கந்தேன்…
அப்படியே ராமலெஷ்மி அக்காவோ,ச்சின்ன அம்மணி அக்காவோ அல்லது புதுகைதென்றல் அக்காவோ ஆண்களுக்கு டிப்ஸ் குடுத்தா பதில் மொய் சரியாப்போயிடும்
🙂
அண்ணே.. ரோஜா(நடிகை இல்லை) எப்படி இருந்தாலும் அழகுண்ணே..
பல விஷயங்கள கையில வச்சிருக்கீங்க ..நல்லாயிருக்கு.
அண்ணே நீங்க எங்கயோ போய்டிங்க…
எங்கயோ போட்டீங்க??இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் என்ற ரகசியத்தை சொல்லவும்.
இத நா படிக்கவே இல்ல…
:-))
அண்ணே!பெண்களுக்குனு சொன்னதாலநானும் இத படிக்கல…ஆனா நீங்க ஆல் இன் ஆல்… என்பதை அசால்டா விளக்கீட்டீங்க…பாராட்டுகள் அண்ணே….
எப்பலிருந்து இப்படி?
கலக்கல் கிரி!
// கயல்விழி நடனம் said…
🙂 Nice…//
நன்றி கயல்விழி
======================================================
//நட்புடன் ஜமால் said…
செம டிப்ஸ் கிரி,
எப்படி இப்படியெல்லாம் //
தானா வருது 🙂
======================================================
//இராம்/Raam said…
Fashion designer ஆக போறீங்களா?? :))//
உண்மையில் எனக்கு காஸ்டியும் டிசைனர் ஆக வேண்டும் என்று விருப்பம்..மாறி ஐ டி துறைக்கு வந்து விட்டேன் 🙁
======================================================
//அத்திவெட்டி ஜோதிபாரதி said…
நல்லா இருக்கு கிரி…,
படங்களை கொஞ்சம் பெருசா போடப்புடாதா?
ஒரு ஆதங்கந்தேன்//
:-))
படம் பெரிதாக போட்டால் பதிவு ரொம்ப பெரியதாக இருக்கும் அதனாலே சிறிதாக இணைத்தேன் 🙂
==================================================
//எம்.எம்.அப்துல்லா said…
அப்படியே ராமலெஷ்மி அக்காவோ,ச்சின்ன அம்மணி அக்காவோ அல்லது புதுகைதென்றல் அக்காவோ ஆண்களுக்கு டிப்ஸ் குடுத்தா பதில் மொய் சரியாப்போயிடும்//
அவங்க டிப்ஸ் க்கு பதிலா நம்மை போட்டு தாக்கிட்டாங்க 🙂
==================================================
//குறை ஒன்றும் இல்லை !!! said…
அண்ணே.. ரோஜா(நடிகை இல்லை) எப்படி இருந்தாலும் அழகுண்ணே..//
காலம் வரும் போது வித்யாசம் தெரியும் 😉
==================================================
//ஜோ/Joe said…
பல விஷயங்கள கையில வச்சிருக்கீங்க ..நல்லாயிருக்கு//
நன்றிங்க ஜோ. நான் உங்க விருப்ப நடிகர் கமல் மாதிரி பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பபடுவேன். அனைத்தையும் ஆர்வமாக தெரிந்து கொள்வேன்.
=================================================
//கோவி.கண்ணன் said…
கிரி கலக்கலோ கலக்கல் !//
நன்றி கோவி கண்ணன் 🙂 (அப்பாடா கோவி கண்ணன் நல்ல விதமா சொல்லிட்டாரு 😉
=================================================
// R.Gopi said…
கிரி…..
சரி…சரி…. கைவசம் ஒரு தொழில் இருக்கு….//
ஆமாம் 🙂
//இவ்ளோ சரக்கு (உடை/காஸ்டியூம் பத்திதாம்பா) கையில வச்சுட்டு, "எந்திரன்" ப்ரொஜெக்ட எப்படி மிஸ் பண்ணினீங்க? "ஐஸ்வர்யா ராய்"க்கு கொடுத்து வைக்கல…//
முதல்ல பாராட்டிட்டு இப்படி கடைசியில வாரிட்டீங்களே 🙂
=====================================================
//Sukumar Swaminathan said…
ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க……//
நன்றி சுகுமார் 🙂
=====================================================
//VIKNESHWARAN said…
அண்ணே நீங்க எங்கயோ போய்டிங்க…//
🙂 நன்றி விக்னேஸ்வரன்
//கோவி.கண்ணன் said…
கிரி,
அடுத்த முறை பதிவை நீளம் குறைவாகப் போடவும். இதை வாசித்துவிட்டு எவ்வளோ கஷ்டப்பட்டேன்னு என்று எனக்குத்தான் தெரியும்//
ஒருத்தன் கஷ்டப்பட்டு ஒரு இடுகையை போட்டால் அதற்க்கு அதை விட கஷ்டப்பட்டு ஒரு எதிர் பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
===================================================
//பாலா… said…
இந்த ஏரியான்னே இல்லாம எல்லாத்துலயும் கலக்குறிங்க கிரி.சூப்பரு.//
நன்றி பாலா..எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கணும் என்பது தான் என் ஆசை 🙂
===================================================
//சின்ன அம்மிணி said…
அப்துல்லாவுக்கு நம்ம மேல இருக்க நம்பிக்கைக்கு நன்றி.
போட்டாச்சுல்ல எதிர்பதிவு :)//
ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு 🙂
=================================================
//எவனோ ஒருவன் said…
இத நா படிக்கவே இல்ல…//
படித்தால் ஒன்றும் தவறில்லைங்க பெஸ்கி 🙂
=================================================
//வால்பையன் said…
பாப்பேல ஃபேஷன் டிசைனர் கொறையுதாம்!
கொஞ்சம் வந்துட்டுபோங்க!//
யாரும் நம்ம்ம்ம்பி கூப்பிட மாடேங்குறாங்க..கூப்பிட்ட போய்டலாம் 🙂
=================================================
//viji said…
ரொம்ப உபயோகமா தகவல்.. குட்//
நன்றி விஜி 🙂
==================================================
//கார்த்திக்.ச said…
நல்ல ஒரு ஆராய்ச்சி…உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்..//
டாக்டர் விஜய் மாதிரியா! 🙂
==================================================
//வாசுகி said…
எங்கயோ போட்டீங்க??//
ஹி ஹி நன்றி
//இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் என்ற ரகசியத்தை சொல்லவும்.//
ரகசியம் எதுவும் இல்லை, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அதுவுமில்லாமல் எனக்கு மூன்று அக்கா அவங்க கிட்ட இருந்து தெரிந்துகொண்டதும் கொஞ்சம். இயல்பாகவே இதில் எனக்கு நல்ல ரசனை அவ்வளவே 🙂
======================================================
//பரிசல்காரன் said…
எப்பலிருந்து இப்படி?//
ரொம்ப நாளாகவே! இதை எழுத தான் தோணல
//கலக்கல் கிரி! //
நன்றி கே கே
=====================================================
//உடன்பிறப்பு said…
மிகவும் பயனுள்ள குறிப்புகள்//
நன்றிங்க உடன்பிறப்பு
====================================================
//ஈ ரா said…
பொதுவாக பெண்களுக்கு நீ நன்றாக இருக்கிறாய் என்ற பாராட்டே அதிகமான தன்னம்பிக்கையைத்தரும்//
உண்மை, அவர்களுக்கு மட்டுமல்ல எவருக்கும்
அப்புறம் கவிதை…ம்ம்ம் ஒன்றும் சொல்றதிக்கில்லை 😉
====================================================
//’டொன்’ லீ said…
:-))//
புன்னகை மன்னன் டொன் லீ நன்றி வருகைக்கு
===================================================
//மங்களூர் சிவா said…
டிப்ஸ் என்ற பெயரில் பெண்களின் உடை விசயத்தில் உங்கள் ஆணீய கருத்தை திணிக்கும் ஆதிக்க போக்கை பெண்ணீய பித்தாள ஈய பதிவர்கள் சார்பாக கண்டனம் செய்கிறேன்.//
ஹி ஹி ஹி ஹி
===================================================
//பிரவின்குமார் said…
அண்ணே!பெண்களுக்குனு சொன்னதால
நானும் இத படிக்கல…
ஆனா நீங்க ஆல் இன் ஆல்… என்பதை அசால்டா விளக்கீட்டீங்க…
பாராட்டுகள் அண்ணே….//
அடேய்! நாட்டுல இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதிரி ஒரு ஆள் வேணுண்டா! அப்படின்னு நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி சொல்றீங்களா! :-)))
நன்றி பிரவின் 🙂
மிகவும் பயனுள்ள குறிப்புகள்
பொதுவாக பெண்களுக்கு நீ நன்றாக இருக்கிறாய் என்ற பாராட்டே அதிகமான தன்னம்பிக்கையைத்தரும்…..
சற்றே ஓவராக இருந்தாலும் நான் எழுதிய கவிதை உங்கள் பதிவிற்கு சம்பந்தமாகவே அமைந்தது அதிசயம்….
இதோ உங்களுக்காக…
எனக்காகப் பிறந்தவளே!
எனக்குள்ளே இருப்பவளே!
உனக்கு மட்டும் ஏனடி
இத்தனை பளபளப்பு?
உனக்கு வாழ்த்து சொல்ல ஏனடி
இத்தனை குறுகுறுப்பு?
நீ பிறந்த இந்நாளின்
பிரகாசத்தினால் வருடத்தின்
மற்ற 364 நாட்களும்
மறைக்கப்பட்டு விட்டன!
நான் நினைக்கிறேன் –
உன்னைப் படைத்த அன்று மட்டும்
அந்த பிரம்மன் ஓவர் டைம்
செய்து இருப்பான் என்று!
நீ
பிறந்த நாள் துணி எடுக்க
கடைக்குச் செல்லும்போது
வேண்டாமென்று சொல்லவாவது – நீ
தம்மைத் தொட்டு தூக்க மாட்டாயா என்று
துணிகள் எல்லாமே ஏங்குகின்றன..
நீ
தம் பக்கம் திரும்பப் போவதில்லையே
என்ற ஏக்கத்தில் – தம்
பிறப்பை எண்ணி எண்ணி
நொந்து கொள்கின்றன –
ஜென்ட்ஸ் வாட்சுகள்…..
தாம் தேய்ந்து விட்டால் – உன்
கால்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்றெண்ணி
தேயாமலே நடக்கின்றன
உன் கால் செருப்புக்கள்!
நீ
வளைஎடுக்க கடைக்குச் செல்லும்போது
உன் கை அளவு சேரா வளையல் எல்லாம்
ஏக்கப் பெருமூச்சுடன்
வெளிநடப்பு செய்கின்றன…..
உனக்கு மெலிதான சங்கிலிதான் பிடிக்குமென்பதால்
தமக்கு சேதாரம் ஆனாலும் பரவாயில்லை என்று
தம்மைத் தாமே தேய்த்துக் கொள்கின்றன –
தடிமனான சங்கிலிகள்…..
இப்படி உயிரற்ற பொருட்கள் கூட
உன்னால் உயிர் பெறும்போது –
உயிருள்ள நான் எம்மாத்திரம்?
என்னால் முடிந்தது –
ஹாப்பி பர்த் டே…….
அன்புடன்
ஈ. ரா
பி. கு.: இது ஏதோஉணர்ச்சி வசப்பட்டு எழுதியது… எனவே இதைப் படித்து விட்டு பந்தா காட்டவோ, பிகு பண்ணவோ வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்!
டிப்ஸ் என்ற பெயரில் பெண்களின் உடை விசயத்தில் உங்கள் ஆணீய கருத்தை திணிக்கும் ஆதிக்க போக்கை பெண்ணீய பித்தாள ஈய பதிவர்கள் சார்பாக கண்டனம் செய்கிறேன்.
:))
உபயோகமான குறிப்புகள் கிரி!
//(அப்பாடா கோவி கண்ணன் நல்ல விதமா சொல்லிட்டாரு ;-)//
வடை பதிவைப் பார்க்கும் முன் நீங்க சொன்னது போலிருக்கு:))!
//அவங்க டிப்ஸ் க்கு பதிலா நம்மை போட்டு தாக்கிட்டாங்க :-)//
சின்ன அம்மிணியை ஒண்ணும் சொல்லாதீங்க. சடை பதிவுக்கு காரணமே உங்க நண்பர்தான்:))!
//அவங்க டிப்ஸ் க்கு பதிலா நம்மை போட்டு தாக்கிட்டாங்க :-)//
என்னாங்க கிரி, சும்மா தமாசுக்குதானே, கோவிச்சுக்காதீங்க. 🙂
எப்படி கிரி ..எப்படி …இந்த ஆடிக்கே முயற்சி செஞ்சு தங்கமணிகிட்ட பேரு வங்கிரேன் ….நல்ல தகவலுக்கு நன்றி.
ஆமாண்ணே.. இன்னுமா உங்களுக்கு நேரம் கிடைக்கல.. என்னமோ போங்கண்ணே.. இந்த பிரபல பதிவர்களை புரிஞ்சுக்க முடியல!!!!
:))))))))))))
//ராமலக்ஷ்மி said…
உபயோகமான குறிப்புகள் கிரி!//
நன்றி ராமலக்ஷ்மி 🙂
//வடை பதிவைப் பார்க்கும் முன் நீங்க சொன்னது போலிருக்கு:))!//
:-)) இல்ல இல்ல
//சின்ன அம்மிணியை ஒண்ணும் சொல்லாதீங்க. சடை பதிவுக்கு காரணமே உங்க நண்பர்தான்:))!//
சும்மா டமாசு.. நோ சீரியஸ் 🙂
============================================================
// சிங்கக்குட்டி said…
எப்படி கிரி ..எப்படி …இந்த ஆடிக்கே முயற்சி செஞ்சு தங்கமணிகிட்ட பேரு வங்கிரேன் //
ஹி ஹி ஹி கலக்குங்க..:-)
=============================================================
// சின்ன அம்மிணி said…
என்னாங்க கிரி, சும்மா தமாசுக்குதானே, கோவிச்சுக்காதீங்க. :)//
அடடா! நான் சொன்னது அப்படி இருக்கா.. மன்னித்துக்குங்க..கிண்டலா தான் கூறினேன்..
அதுவும் அப்துல்லா அண்ணன் கிட்ட போய் சீரியஸ் ஆகவா! வாய்ப்பே இல்ல 🙂
==============================================================
// குறை ஒன்றும் இல்லை !!! said…
ஆமாண்ணே.. இன்னுமா உங்களுக்கு நேரம் கிடைக்கல.. என்னமோ போங்கண்ணே.. இந்த பிரபல பதிவர்களை புரிஞ்சுக்க முடியல!!!!
:))))))))))))//
ராஜ் இப்படி என்ன தவறா நினைத்துட்டீங்களே! அவ்வ்வ்வ்
பிரச்சனை என்னன்னா! என்னோட லேப்டாப் சங்காகி விட்டது..அதுனால அலுவலகத்தில் மட்டுமே பார்க்க முடியும்…உங்க தளத்தின் பின்னூட்ட பெட்டி என் அலுவலகத்தில் திறக்க மாட்டேன் என்கிறது. எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது அதனால தான் தற்போது இருப்பதை போல மாற்றி விட்டேன்.
இன்று தான் லேப்டாப் ஓகே ஆகியது..அதனால மொத வேலையா உங்களுக்கு வந்துடுறேன் ஓகே வா.. நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி less tension more work 😉
பின் குறிப்பு: நான் பிரபல பதிவர் எல்லாம் இல்ல.
மன்னிச்சுக்கோங்க அண்ணே..
பொம்பளங்க சமாச்சாரம் எல்லாம் நல்லா தெரியும் போல
:))
குமுதத்துல வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுற வேண்டியது தானே………
// குறை ஒன்றும் இல்லை !!! said…
மன்னிச்சுக்கோங்க அண்ணே..//
Raj no sentiments cool 😉
=====================================================
// கிறுக்கல் கிறுக்கன் said…
பொம்பளங்க சமாச்சாரம் எல்லாம் நல்லா தெரியும் போல//
ஹலோ இப்படி கூறி தப்பா ஏதும் நினைத்துக்க போறாங்க :-))
======================================================
// காத்தவராயன் said…
குமுதத்துல வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுற வேண்டியது தானே..//
உங்கள் பாராட்டிற்கு நன்றி காத்தவராயன், என்றாவது கவனிக்கப்படும் 🙂
======================================================
// தமிழன்-கறுப்பி… said…
நடக்கட்டும்..நடக்கட்டும்!//
😉 நீங்க சொன்னா சரி காண்டீபன்
நடக்கட்டும்..நடக்கட்டும்!
🙂
Very nice Giri :)…
super
சுப்பர் அண்ணா!
From – ஸ்ரீலங்கா
சோ sweet