தமிழகத்தில் திராவிடம் துவக்கத்தில் தமிழகத்தின் வளர்ச்சியில் பங்களித்தது ஆனால், நாளடைவில் திராவிட அரசியல் ஊழல் அரசாகவும், பல தவறான முடிவுகளால் தலைமுறையையே அழித்து வருகிறது. Image Credit
திராவிடத்தின் சாதனை என்னவென்றால், ஊழல் என்பதை சாதாரணமாக்கி, மக்களிடையே இதுவொரு இயல்பான செயலாக உருவாக்கித் தங்களுக்கும் அதில் வாக்குக்குப் பங்கு வேண்டும் என்று மக்களை மாற்றியதே!
திராவிடப் போலி அரசியல் அறிக
கண் முன்னே தமிழகம் சீரழிந்து வருவதை ஒரு வலது சாரி ஆதரவாளனாகவும், தேசியத்தை / தமிழகத்தை நேசிப்பவனாகவும் விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வதைக் கடமையாகக் கருதுகிறேன்.
காரணம், டாஸ்மாக் / கஞ்சா போதையால் தமிழகத்தின் ஒரு தலைமுறையையே அழித்து விட்டார்கள். குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்.
எதிர்காலத்தில் போதை மறுவாழ்வு மருத்துவமனைகள், அமைப்புகள் தமிழகத்தில் அதிகரிக்கப்போவதை அனைவரும் காணப் போகிறோம்.
கருத்தரிப்பு மையங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதைப் போல, இனி போதை மறுவாழ்வு மையங்களும் அதிகரித்து வரும்.
கல்வி
சமச்சீர் பாடத்திட்டத்தாலும், அதன் பிறகு கல்லூரி பாடத்திட்டங்களை மேம்படுத்தாததாலும் ஒரு தலைமுறையின் வாழ்க்கையை அழித்து விட்டார்கள்.
எத்தனை பேர் இதன் பாதிப்பை உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. காரணம், தற்போது கல்லூரி படிப்பை முடித்து வரும் பலர் நேர்முகத்தில் திணறி வருகிறார்கள்.
சாதாரணக் கேள்விகளுக்குக் கூடப் பதில் தெரியவில்லை. இதை, Campus Interview நடத்துபவர்களைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
சமூகநீதி பேசுபவர்கள் அதற்கு எதிராக தொடர்ந்து நடந்து, அரசியலுக்காக மட்டுமே சமூகநீதி வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பழம் பெருமை
எனவே, மேற்கூறிய விமர்சனங்கள் அல்லாது ஏராளமான வளர்ச்சி திட்டங்களில் உட்கட்டமைப்பு வளர்ச்சி உட்படப் பலவற்றில் பின்தங்கி இருக்கிறோம்.
இன்னும் பழம் பெருமை பேசிக்கொண்டு இருப்பது சரியல்ல.
நமக்குப் பின் இருந்த மாநிலங்கள் நம்மை வேகமாகத் துரத்திக்கொண்டுள்ளார்கள். சிலர் விரைவில் நம்மை மிஞ்சப்போகிறார்கள்.
தமிழக ஊடகங்களும் திமுகவின் ஊதுகுழலாக மாறி விட்டன. இவர்களிடம் இனி எந்த உண்மையான செய்தியையும் பெற முடியாது.
எனவே, திராவிடம் தமிழ்நாட்டை எவ்வாறு தன் போலி அரசியலால் ஏமாற்றி வருகிறது என்பதை இனி தொடர்ந்து எழுதப்போகிறேன்.
முடிந்த வரை மிகையாகி விடாமல் பார்த்துக்கொள்கிறேன்.
இங்கே எதையும் பொய்யாகக் கூறப்போவதில்லை ஆனால், திரிக்கப்பட்ட தகவல்களை அனைவருக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கப்போகிறேன்.
வலது சாரி ஆதரவாளன்
துவக்கத்திலிருந்தே வளர்ச்சி திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி, மாநிலத்தின் முன்னேற்றம் இதுபற்றிய என் எதிர்பார்ப்புகள் இருந்தன.
தற்போதும் இவையே தொடர்கின்றன.
இந்தி திணிப்புக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன் ஆனால், தற்போது மோடி அரசு மாநில மொழிக்கான முக்கியத்துவத்தை அளித்து வருவதால், இக்குறையும் மெதுவாகக் குறைந்து வருகிறது.
குறிப்பாக, தமிழக பாஜக தலைமை பொறுப்பை அண்ணாமலை ஏற்றப் பிறகு இம்மாற்றம் நடந்து வருகிறது.
ஸ்டிக்கர் அரசு
மத்திய அரசுத் திட்டங்களைத் தன் திட்டங்களாகத் திமுக அரசு அறிவித்து மக்களை ஏமாற்றி பலனைப் பெற்று வருகிறது.
முன்னர் தமிழகமே அனைத்து திட்டங்களுக்கும் முன்னோடியாக இருந்தது ஆனால், தற்போது மத்திய அரசு திட்டங்களைப் பெயர் மாற்றியும், சில மாறுதல்களைச் செய்தும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
இதனாலயே ஸ்டிக்கர் அரசு என்று விமர்சிக்கப்படுகிறது.
தற்போது திமுக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தினாலும் அவற்றில் ஊழல் காரணமாகத் தரம் குறைந்தும், கொள்ளையடிப்பதற்காகவே பலவற்றை அவசியமே இல்லாமலும் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்து மத எதிர்ப்பு
இந்து மதத்தைத் திமுக அரசியல் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது.
இந்துக்கள் இயல்பாகவே மத உணர்வுகளுக்குப் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை காரணம், பெரும்பான்மை என்ற பாதுகாப்பு உணர்வால்.
அதோடு தமிழகம் வட மாநிலங்களைப் போலப் போர் மற்றும் மத ரீதியான பாதிப்புகளை அடையாததால், மக்களும் திமுக அரசு செய்யும் அவமானங்களைப் பொருட்படுத்தாமல், புறக்கணிப்புகளுக்கு பழகி விட்டார்கள்.
இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு திமுக அரசு தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகிறது.
மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளைச் சகிக்க முடியலை.
இந்து மதத்தை மிகவும் நேசிக்கிறேன் ஆனால், அம்மதம் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படும் போது அமைதியாகக் கடந்து செல்ல முடியவில்லை.
எனவே, இப்போலித்தனங்களைத் தொடர்ந்து எழுதி வருவேன்.
மற்ற மதங்களை இழிவுபடுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல, அது என் விருப்பமுமல்ல ஆனால், இந்து மதத்தை இழிவுபடுத்தினால் பொறுத்துப் போகச் சொரணை கெட்ட இந்துவாக இல்லை.
இதன் பெயர் மதவாதம் என்றால், அதைப் பற்றி எந்தக்கவலையுமில்லை. காரணம், இங்கே யாரையும் திருப்தி செய்ய எழுதுவதில்லை.
மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிக் கவலையுமில்லை.
Google News
இத்தளத்தை Google News அங்கீகரித்துள்ளதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பலரும் படிக்க விரும்புவதை விடப் பார்க்க (YouTube) விரும்புவதே அதிகம் ஆனாலும் படிப்பதற்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே உள்ளது.
அதற்கு Google Discover / Google Search மூலம் கூடுதல் வாய்ப்புக்கிடைத்துள்ளது.
எழுதுவதற்கு ஏராளமான தலைப்புகள் உள்ளன ஆனால், நேரம் தான் போதுமானதாக இல்லை. காரணம், எழுதுவது என் முதன்மை பணியல்ல.
முடிந்தவரை அனைத்தையும் எழுத முயற்சிப்பேன். திராவிடப் போலி கருத்துருவாக்க அரசியலை மக்களிடையே கொண்டு செல்ல முயல்கிறேன்.
இவற்றோடு மோடி அரசு எவ்வளவு சிறப்பான திட்டங்களை மக்களுக்கு அளித்துள்ளது என்பதையும் தொடர்ச்சியாக எழுதப்போகிறேன்.
இவ்வாறு தொடர்ந்து எழுதி, திராவிட போலித்தனங்களையும் பாஜக வளர்ச்சி திட்டங்களையும் பலரிடையே கொண்டு செல்வதே என் நோக்கம்.
உடன்பாடுள்ளவர்கள் தொடரலாம், மற்றவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், பொய் / மிகை செய்திகளை என்றும் பகிர மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இதையும் மீறி நடந்தால், 100% தற்செயலானது (Not Intentional) என்றறிக.
கொசுறு
முடிந்தவரை அனைத்துத் தளங்களிலும் திராவிடப் போலித்தனத்தை மக்களிடையே கொண்டு செல்ல முயன்று வருகிறேன்.
அதில் ஒரு பகுதியாக ShareChat App https://sharechat.com/giriblog பக்கத்தில் 10,000 பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளேன்.
ஒரு வருடத்தில் 1.4 கோடி பார்வைகளை இப்பக்கம் பெற்றுள்ளது.
Sharechat பயன்படுத்துபவர்கள், திராவிட அரசியலை வெறுப்பவர்கள், தலைவர் ரஜினி, அண்ணாமலை, பாஜக ஆதரவாளர்கள், ரயில்வே மற்றும் பொதுவான செய்திகளைத் தெரிந்து கொள்பவர்கள் (மட்டும்) பின் தொடரலாம்.
ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு வகையான பின் தொடர்பாளர்களைப் பெற்றுள்ளது. giriblog தளத்தில் நாகரீகம் கருதி அடக்கி வாசித்து எழுதுவேன் ஆனால், ShareChat ல் பகிர்வது அப்படியிருக்காது.
பலவற்றை மக்களிடையே எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?
கிரி.. நீங்கள் உங்கள் எழுத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்தாலும் நான் எப்போதும் போல விரும்புவது உங்கள் தளத்தில் படிப்பதை மட்டும் தான்.. காரணம் வேறு எதையும் நான் தொடர்வது இல்லை.. நான் ஊரில் இருந்த இரண்டு மாதத்தில் தொடர்ச்சியாக உங்கள் பதிவுகள் வந்து கொண்டே இருந்தது..
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து நிறுவனத்தில் (19 வருடம்) கூட பணிபுரிந்த நண்பர் திடிரென்று உடல்நிலை (brain tumor) பாதிப்படைந்ததால் அவருடைய பணியையும் சேர்த்து (புதிய ஆள் எடுக்க வில்லை) செய்வதால் முன்பு போல உங்கள் தளத்தில் கருத்துக்களை விரிவாக பதிவிட முடியவில்லை..
நீங்களும் தற்போது முன்பை விட அதிகமான பதிவுகளை தொடர்ச்சியாக வெவ்வேறு தலைப்புகளில் எழுதி வருவதால் என்னால் கட்டுரையை முழுவதும் உள் வாங்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நேரம் போதவில்லை…இந்த நிலை சில நாட்களில் மாறும் என நினைக்கிறேன்.. பொறுத்து இருந்து பார்ப்போம்..
@யாசின்
“உங்கள் எழுத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் வந்தாலும் நான் எப்போதும் போல விரும்புவது உங்கள் தளத்தில் படிப்பதை மட்டும் தான்.”
என் தளம் உங்களைச் சலிப்படைய வைக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கையைத் தொடர முயற்சிக்கிறேன்.
“முன்பு போல உங்கள் தளத்தில் கருத்துக்களை விரிவாக பதிவிட முடியவில்லை.”
யாசின் நீங்கள் கருத்திட்டே ஆக வேண்டும் என்பதில்லை. உங்களால் முடியும் போது கருத்திடுங்கள், அதையே நானும் விரும்புகிறேன்.
உங்களின் விரிவான கருத்துக்கு இத்தளத்தை படிப்பவர்களில் பலரும் ரசிகர்கள். இதைத் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறியுள்ளார்கள்.
அதிலும் என் நண்பன் விஜய் நீங்கள் கருத்திடவில்லையென்றால், ஏன் கருத்திடவில்லை என்று கேட்பான் 🙂 . நீங்கள் விடுமுறையில் சென்ற போது ஆளைக் காணோமே என்று கேட்டுட்டு இருந்தான்.
“தற்போது முன்பை விட அதிகமான பதிவுகளை தொடர்ச்சியாக வெவ்வேறு தலைப்புகளில் எழுதி வருவதால்”
உண்மை தான் யாசின் 🙂 .
எனக்கு எழுத ஏராளமான தலைப்புகள் கிடைப்பதால், அதைத் தவற விடக் கூடாது என்று எழுதி விடுகிறேன்.
இன்னும் நிறைய உள்ளது.. ஆனால், நேரமில்லை. இதற்கே வீட்டில் அவ்வப்போது பஞ்சாயத்து ஆகும் 🙂 .
மே மாதம் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்று விடுவார்கள்.. அந்த சமயத்தில் முக்கியமான கட்டுரைகளை எழுத நினைத்துள்ளேன்.
மாதம் அதிகபட்சம் 20 கட்டுரைகள். இதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறேன்.இதைத்தாண்டி சென்றதில்லை.
ஒரு காலத்தில், நாம் எப்படி எழுதுவோம்? எழுதுவதற்கு என்ன கிடைக்கும்? Writers Block ஆகி விடுமோ என்றெல்லாம் நினைத்தேன் ஆனால், அது போல நிலைக்குச் செல்லாமல், நேரம் இல்லாமல் எழுத முடியலை என்ற நிலைக்கு வந்து விட்டது மகிழ்ச்சி 🙂 .
முடிந்தவரை பல நல்ல தகவல்களை, என் கருத்துகளை, சரி என்று படுவதை பலரிடையே கொண்டு செல்ல விரும்புகிறேன்.
மற்றவர்கள் நினைப்பதை பற்றிக் கவலைப்படாதது நெருக்கடி அளிக்காமல் உள்ளதால், எளிதாக உள்ளது.
“இந்த நிலை சில நாட்களில் மாறும் என நினைக்கிறேன்.. பொறுத்து இருந்து பார்ப்போம்”
பொறுமையாக வாங்க.. 🙂 .
உங்களுக்கு எப்போது இயல்பாக கருத்திட முடியும் என்று தோன்றுகிறதோ அப்போது கருத்திடுங்கள். நமக்கு சோறு போடும் வேலை முக்கியம், பின்னரே மற்றதெல்லாம்.
யாசின் நீங்கள் கருத்திட்டே ஆக வேண்டும் என்பதில்லை. உங்களால் முடியும் போது கருத்திடுங்கள், அதையே நானும் விரும்புகிறேன்: ஏற்று கொள்கிறேன் கிரி.
என் கருத்துக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது: நன்றி விஜய்.
இதற்கே வீட்டில் அவ்வப்போது பஞ்சாயத்து ஆகும் : வீட்டுக்கு வீடு வாசப்படி..
மற்றவர்கள் நினைப்பதை பற்றிக் கவலைப்படாதது நெருக்கடி அளிக்காமல் உள்ளதால், எளிதாக உள்ளது. : உண்மை கிரி..
நமக்கு சோறு போடும் வேலை முக்கியம், பின்னரே மற்றதெல்லாம் : நிச்சயமாக..