A Man Called Otto (2022) | நல்ல உள்ளங்கள்

2
A Man Called Otto Movie

நாவலை அடிப்படையாக வைத்து Tom Hanks நடித்துள்ள படமே A Man Called Otto.

A Man Called Otto

பணி ஓய்வு பெற்ற Tom Hanks தன் அன்பான மனைவியை இழந்தவர். எனவே, தனது மனைவியிடமே செல்லத் தற்கொலைக்கு முயல்கிறார் ஆனால், கடவுள் அவருக்கு வேறு கணக்கு வைத்துள்ளார். Image Credit

இதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே A Man Called Otto.

Tom Hanks

மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் Tomhanks. இவருடைய Castaway மற்றும் Captain Phillips ஆகிய படங்களைப் பலரும் பார்த்து ரசித்து இருப்பீர்கள்.

இப்படமும் அவரின் மிகை நடிப்பில்லாத வாழ்க்கையைக் காட்டுகிறது.

துவக்கத்திலேயே இவர் ஒரு Perfect ஆன நபராகவும், அனைத்துமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நபராகவும் காட்டி விடுகிறார்கள்.

இவரைப்போலவே அனைத்துமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நபரை எனக்குத் தெரியும். அவரை இவரோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது 🙂 .

அனைவராலும் இவ்வாறான குணமுள்ளவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இவருடைய எண்ண அலையில் பொருந்துகிறவர் மட்டுமே ஒத்துப் போக முடியும்.

தன் பக்கத்து வீட்டில் குடி வருபவர்களுடன் சண்டை ஏற்பட்டாலும், பின்னர் அவர்களுடன் இணைந்து செல்வது ரசிக்கும்படியுள்ளது.

இக்கதையில் மிகக்குறைவான கதாப்பாத்திரங்களே, அதே போல இடங்களும் மிகக்குறைவே. சில சோகமான நிகழ்வுகள் இருந்தாலும், உதவும் எண்ணம் கொண்டவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றோடு பல கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகள், அவர்களின் பிரச்சனைகளைக் கதையின் போக்கோடு கொண்டு செல்கிறார்கள்.

முயற்சி

சரி செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட விஷயத்தை Tom Hanks எடுத்துச் சரி செய்வது அசத்தல். இந்த எண்ணம், முயற்சி மிகவும் என்னைக் கவர்ந்தது.

இவரின் இந்த முயற்சி என் மனைவியை நினைவு படுத்தியது. வீட்டில் ஏதாவது சாதனம், கதவு என்று ஏதாவது பழுதென்றால், இவரே எப்படியாவது முயற்சித்துச் சரி செய்து விடுவார்.

நண்பர் வடுவூர் குமார் இதே போலப் பழுதான சாதனங்களைப் பல்வேறு முயற்சிகளைச் செய்து சரி செய்வார். அவ்வளவு தான் என்று தூக்கிப்போடாமல், அதை முயற்சித்துச் சரி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

யார் பார்க்கலாம்?

இது அனைவருக்குமான படமல்ல.

டிராமா கதைகளை, நல்ல உள்ளங்களைக் கொண்டவர்களை விரும்பும் எண்ணம் கொண்டவர்கள் இப்படத்தைப்பார்க்கலாம்.

மற்றவர்களுக்கு இது சலிப்பான படமாகப் தோன்றும்.

பரிந்துரைத்தது சூர்யா. NETFLIX ல் காணலாம்.

Directed by Marc Forster
Screenplay by David Magee
Based on A Man Called Ove by Fredrik Backman
Produced by Fredrik Wikström Nicastro, Rita Wilson, Tom Hanks, Gary Goetzman
Starring Tom Hanks, Mariana Treviño, Rachel Keller, Manuel Garcia-Rulfo
Cinematography Matthias Koenigswieser
Edited by Matt Chessé
Music by Thomas Newman
Distributed by Sony Pictures Releasing
Release date December 29, 2022 (United States)
Running time 126 minutes
Country United States
Language English

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. இது வரை இந்த படத்தை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.. ஆனால் நான் பார்த்த வெகு சில ஆங்கில படங்கள் வரிசையில் கேப்டன் பிலிப்ஸ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.. தற்போதும் இந்த படத்தை எப்போதாவது தனிமையில் பார்ப்பதுண்டு.. மிகவும் அருமையான படம்.. குறைந்த நடிகர்களே இருந்தாலும் எல்லோரும் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்து இருப்பார்கள்.. நேரம் கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்கிறேன்..

  2. @யாசின்

    “கேப்டன் பிலிப்ஸ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.. குறைந்த நடிகர்களே இருந்தாலும் எல்லோரும் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்து இருப்பார்கள்.”

    இதில் கடல் கொள்ளையர்களாக வருபவர்கள் பேசும் ஆங்கிலம் செமையா இருக்கும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here