இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் திக திமுகவினர்

6
இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் Karuppar koottam

திர்மறையாகக் கூறினால் கிடைக்கும் விளம்பரத்தால், பகுத்தறிவு என்ற பெயரில் இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.  Image Credit

இந்த நிலை தற்போதல்ல, தானே இப்படித்தான் இருந்தேன் என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களே ‘அர்த்தமுள்ள இந்து மதம்‘ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம்

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்துக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று படு ஆபாசமாக ஒருவர் விமர்சித்து, விளக்கம் கொடுத்து இருந்தார்.

எதிர்ப்பு கிளம்பியவுடன் அனைத்து ஆபாச காணொளிகளையும் Private செய்து விட்டார்கள். கந்த சஷ்டி விமர்சனத்தை நீக்கியே விட்டார்கள்.

ஒவ்வொரு பாடலுக்கும் இயற்றிய காரணம், சூழ்நிலை, காலம், எண்ணங்கள், விளக்கங்கள் என்று பல்வேறு காரணிகள் உள்ளது. எதுவுமே புரிந்துகொள்ளாமல் இவர் என்னமோ விளக்கம் கண்டுபிடித்தது போலப் பேசி உள்ளார்.

பாடலைக் கேட்கும், பாடும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் யாருமே, இது போல ஆபாசமாக நினைத்துப் பாடி இருக்க மாட்டார்கள் ஆனால், கேடுகெட்ட எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் தோன்றும்.

எண்ணங்கள் சிறப்பாக இருந்தால், நாம் காண்பதும் சரியாகத் தோன்றும் ஆனால், கேவலமான எண்ணங்கள் இருந்தால் பார்வையும் கேவலமாக இருக்கும்.

பல கோடி மக்கள் நம்பும் கடவுளை, கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் ஆபாசமாக மட்டுமே விமர்சிக்க முடியுமா? இதன் பெயர் தான் பகுத்தறிவா?!

lord murugan சஷ்டி விரதம் நம்பிக்கைகள்

திமுக

திமுக தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும், அவர் கட்சியினராக இருந்தாலும் (அனைவரும் அல்ல) இந்துக்களை, அவர்களது வழக்கங்களை, கடவுளைக் கிண்டலடிப்பதையே ஒரு வேலையாக வைத்துள்ளார்கள்.

கறுப்பர் கூட்டத்துக்கு அபார ஆதரவு!

அவர்கள் பகுத்தறிவுக்கு ஆதரவு கொடுத்தால், விமர்சிக்க ஒன்றுமில்லை ஆனால், கடவுளை ஆபாசமாக விமர்சிப்பதை கண்டிக்காமல் ஆதரவு கொடுப்பதோடு, கேள்வி கேட்கும் இந்துக்களைச் சங்கிகள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

இனி இந்துக் கடவுளை வணங்கினாலே சங்கி என்று கூறுவார்கள் போல.

நேபாள் பிரதமர்

நேபாள் பிரதமர் சும்மா இல்லாம அவர் பங்குக்கு, ராமன் நேபாளில் பிறந்தார் என்று கூற, உடனே இந்தக் கூட்டம் #நேபாளி_ராமன் என்று ட்ரெண்டிங் செய்து ராமனை ட்ரோல் செய்து மிக மோசமாகக் கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்துக் கடவுள்கள் என்றால், என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், கேலி சித்திரம் வரையலாம், ஆபாசமாகச் சித்தரிக்கலாம் அவை கருத்துச் சுதந்திரத்தில் வரும்.

ஆனால், ஏன் இப்படி ஆபாசமா கடவுளைப் பேசுகிறாய்? ஆபாசமா கேலி சித்திரம் வரைகிறாய்? என்று கேட்டால், கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது.

கொஞ்சம் பொறுமையாக யோசித்துக் கண்ணாடியில் இவர்கள் முகத்தைப் பார்த்தால்… இவர்களே தங்கள் முகத்துல பொளிச்சுனு துப்பிடுவாங்க.

எங்கே பிறந்தால் என்ன?

எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?‘ என்று ராமரை கலைஞர் நக்கலடித்தார். இதற்கு என்ன தற்போது நேபாள் கல்லூரியில் படித்தார்னு சொல்வார்களா?!

ராமரே இல்லைனு சொல்ற இவர்களுக்கு அவர் இந்தியால பிறந்தால் என்ன? நேபாள்ல பிறந்தால் என்ன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு ஏன் அந்தக் கவலை?!

ராமர் இல்லை என்பது, நம்பாமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம். அதற்கு நம்புகிறவர் நம்பிக்கையை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?! மட்டமான எண்ணம் தானே!

புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து இவர்கள் தற்போது செய்து கொண்டு இருப்பதெல்லாம், ஒரு காலத்தில் வினையாக முடியும் போது காலம் கடந்து இருக்கும்.

தமிழகத்தில் பாஜக குட்டிக்கரணம் அடித்தும் செய்ய முடியாத ஒரு செயலைத் திகவும் திமுகவும் போட்டி போட்டுச் செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நிச்சயம் வரலாற்றில் இடம் உண்டு!

தொடர்புடைய கட்டுரைகள்

பெரியார் | ஈ. வெ. இராமசாமி

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

தமிழக பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?

அழகன் முருகன்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
  உள்ளத்து அனையது உயர்வு

 2. தமிழ்க் கடவுள் முருகனின் பிறப்பை இழிவு படுத்தும் பார்ப்பனீய நூலான சிவபுராணம் தடை செய்யப்படுமா?

  திருப்பதி கோவில் வலைத்தளத்தில் இந்த ஆபாசக் கதை இருக்கிறது. பக்கம் 126.

  https://t.co/YQ9Kc7hqsm?amp=1

  //The newborn Kumara Svami was various named, according to
  the various connotations of his conception: ‘Skanda’ (“skandatiiti”),
  because Siva’s semen was scattered or ejaculated at the sight of
  the sage-wives; ‘Agni-bhuh’ (“agneh bhavati iti”), because he
  emanated from the Fire-god; ‘Gangeya’ (“Gangayah nandanah iti”),
  because the semen was for a while accepted by Ganga; ‘Sarajanmaa’ (“Sara-aakhye thrine janma yasya sah”), because his
  evolution was from the semen scattered among the grass called
  ‘Sara’; and ‘Kartikeya’ (“Krittikanam apatyam”), because he was
  conceived, in transition, by the six ‘Krittika’s (wives of the sages).//

 3. தேவரடியாள் என்றால், பொட்டுக்கட்டி கோயில் ஊழியம் செய்ய விடப்பட்டவர்கள் என்று பொருள். அந்த கேவலமான பெண்ண்டிமைத்தன முறை ஒழிந்த பின், இன்று எவருமே அப்பொருளை எடுக்க மாட்டார்கள். தேவடியா என்றால் விலைமகள் என்றே பொருள். அதே போல பழம்பாடல்களில் இப்படி சொற்கள் இருக்கலாம். அவற்றின் பொருட்களைத் தெரிந்தும் படிக்கலாம். ஆனால் அன்றாடம் தெய்வத்தைப்பற்றி பூஜையறையில் வாசிக்கும் நூலில் ஆபாச சொற்கள் – அவற்றிற்கு அக்காலத்தில் அப்பொருள் என்று சொல்லி சமாளிக்காமல் – விலக்கிவிட்டால் நல்லது. அப்படித்தான் பழைய ஏற்பாடு விலக்கப்பட்டது. அப்படி விலக்காமலிருந்தபடியால் இசுலாமியரின் குரான் விமர்சனத்துக்குள்ளாகிறது. இந்து மதம் காலத்துக்கேற்ப மாறுவது. இதைப்போய், ‘அக்காலம் அப்படி. அப்படித்தான் எடுக்க வேண்டும்’ என்பது எப்படி சரியாகும்?

 4. கிரி, எல்லா மதத்தினரையும் நேசிப்பவன் நான் .. கல்லூரி பருவத்தில் காரல் மார்ஸ் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக அவர்கள் கொள்கைகள் பிடித்து போனது .. அதன் பால் ஈர்க்க பட்டது நிஜம் .. ஆனால் எனக்கு எனக்கு பிடிக்கிறது என்ற காரணத்தால் மற்ற மதங்களையோ அவர்களின் கொள்கைகளை வெறுக்க நினைப்பது பைத்தியக்காரதனம்..

  கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் ரொம்ப விளக்கமான , தெளிவாக கூறியிருப்பார் .. அதிலும் கடவுள் மறுப்பு என்பதை கூறிக்கொண்டு ஒரு கூட்டம் , வீட்டிலும் , பொது வெளியிலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதையும் விவரித்து இருப்பார் .. இவர்களை எல்லாம் திருத்துவது கடினம் கிரி .. பகிர்வுக்கு நன்றி கிரி..

 5. @கார்த்திகேயன் கார்த்தி எப்படி இருக்கே? ரொம்ப நாளா ஆளைக் காணோம் 🙂 .

  இக்கட்டுரைக்கு பதில் சொல்லாம சம்பந்தமே இல்லாம பார்ப்பீனியம் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கே. இதற்கு பதில் சொல்.

  அது வேற பிரச்னை, அது குறித்து எனக்குத் தெரியாது. பிரச்சனை என்னவென்று முழுவதும் தெரியாமல் கருத்து கூறுவதில்லை.

  இதில் முருகன் என் விருப்பக்கடவுள். அதோடு இதை பற்றி தெரியும் எனவே, இது குறித்து விமர்சித்து உள்ளேன்.

  @ஆவடி ரமேஷ்

  “ஆனால் அன்றாடம் தெய்வத்தைப்பற்றி பூஜையறையில் வாசிக்கும் நூலில் ஆபாச சொற்கள் ”

  எதை ஆபாச சொற்கள் என்று கூறுகிறீர்கள்? புரியவில்லை. உடலின் உறுப்பின் பெயரைக் கூறுவது ஆபாசமா? யார் இதைக் கூறியது?

  ஆண் குறி என்றால் உறுப்பைக் கூறுவது அதையே வேறு விதமாகக் கூறினால் ஆபாசம். யோனி என்றால் பெண் பிறப்புறுப்பு அதையே வேறு விதமாகக் கூறினால் ஆபாசம், வசை.

  மருத்துவர் ஆண் குறி என்று குறிப்பிடுவாரா? அல்லது மற்ற பெயரில் கூறுவாரா?

  யார் பார்வையில், எண்ணத்தில் தவறு? எது ஆபாசம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

  நீங்கள் ஆபாசம் என்று கருதும் உறுப்பில் பிரச்சனை என்றால், மருத்துவர் எதைக் கூறி விளக்குவார்?

  இதற்கான பதிலை யோசியுங்கள். தவறு எங்கே என்று புரியும்.

  “இந்து மதம் காலத்துக்கேற்ப மாறுவது.”

  மிகச்சரியாகக் கூறினீர்கள். காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் உள்ளது ஆனால், நம்ம அவசரத்துக்கு எல்லாம் மாறாது ஆனால், மாறும்.

  “இதைப்போய், ‘அக்காலம் அப்படி. அப்படித்தான் எடுக்க வேண்டும்’ என்பது எப்படி சரியாகும்?”

  அப்படி எதுவும் நான் குறிப்பிடவில்லை. அவர்கள் கூறியது உறுப்பின் பெயரை மட்டுமே அதை ஆபாசமாக அல்ல. அவர்கள் கூறியதை மாற்று அர்த்தம் / பெயர் கற்பித்து யோசித்தால் தவறு யாரிடம்?

  ஒருவேளை இப்பாடல் தற்போது இயற்றப்பட்டால், இது போல இல்லாமல் வேறு வார்த்தைகளில் வந்து இருக்கும் அவ்வளவே! அப்படியே வந்தாலும், முன்னர் கூறியது ஆபாசமாகி விடாது.

 6. @யாசின் நான் இதுவரை சந்தித்தவர்களில் நீங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான் 🙂 . உங்களைப்போல ஒருவரை மாற்று மாதத்தில் காண்பது அரிது.

  10+ வருடங்களுக்கு மேலாக உங்களை அறிந்தவன் என்கிற முறையிலும், மாற்று மாதமாக இருந்தாலும் இந்து மதத்தை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதையும் பல கருத்து பரிமாற்றத்தில் கண்டு இருக்கிறேன்.

  எனக்குத் தெரிந்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்து மதத்தின் சிறப்புகளை / வாழ்க்கை முறைகளை பற்றி நீங்கள் பேசியதே அதிகம். எனக்கு வியப்பளிக்கும் விஷயம் இது.

  இப்போது கூட பாருங்க.. அர்த்தமுள்ள இந்து மத புத்தகத்தை தான் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளீர்கள் (நானும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்).

  நீங்க வேற லெவல் யாசின். எப்போதும் இப்படியே நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here