இவ்வளவு ஆண்டுகளாகத் தங்களைப் பற்றி ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமாகக் கூறினாலும் அரசியல்வாதிகள் பம்மிக்கொண்டு இருந்தார்கள் ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கிக்கொண்டுள்ளார். Image Credit
அண்ணாமலை
மிகக்குறைந்த வயதிலேயே (37) தேசிய கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் அண்ணாமலை. இவர் வந்த பிறகு பாஜக வேறு லெவலில் போய்க்கொண்டுள்ளது.
பசுமை விகடனில் ஆட்டுக்குட்டியுடன் இவர் வந்ததை வைத்து ‘ஆட்டுக்குட்டி அண்ணாமலை‘ என்று பெயர் வைத்துக் கலாய்த்து வருகிறார்கள்.
ஆனால், அண்ணாமலையோ ‘நான் விவசாயி தான், அவ்வாறு கூறுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன்‘ என்று கூறி மைனஸை ப்ளஸாக மாற்றிக்கொண்டார்.
மாற்றம்
அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது போலானது. இளைய தலைமுறையினர் இவருக்குப் பெரியளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
பொதுமக்கள் இடையேயும் வரவேற்பை பெற்று வருகிறார் ஆனால், இதெல்லாம் எதிர் வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று மாறும் போது மட்டுமே உறுதி செய்யப்படும்.
ஆனால், தற்போது தமிழகப் பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக, நம்பிக்கை அளிப்பவராக மாறியுள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
திமுக ஊடகங்கள்
தற்போதைய அரசியலை கவனித்தவர்கள் அனைவருக்கும் தெரியும் பாஜக மீது திமுக காண்டில் உள்ளது என்று.
மிகப்பெரிய எதிரியான அதிமுக வை திமுக தற்போது கண்டுகொள்வதே இல்லை, அவர்களின் முக்கியக் குறியே பாஜக தான்.
இதைத் திமுக அவர்களது ஆதரவு ஊடகங்கள் மூலமாக இன்னும் தாக்கி வருகிறது.
தமிழகத்தில் 99% தொலைக்காட்சி ஊடகங்கள் திமுக கட்டுப்பாட்டில் அல்லது அவர்களது ஆதரவில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அண்ணாமலையை டம்மியாக்க நினைத்து அவரைக் கலாய்க்க முயன்ற முன்களப் பணியாளர்கள் தர்ம அடி வாங்கிக்கொண்டுள்ளார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலையிடம் வேண்டும் என்றே சர்ச்சையாகக் கேள்விகளைக் கேட்டு அவரைச் சிக்க வைக்க முயல்கிறார்கள்.
ஆனால், ஒவ்வொரு முறையும் படு கேவலமாக அசிங்கப்பட்டுத் திரும்புகிறார்கள்.
வெளுக்கும் அண்ணாமலை
செய்தியாளர் சந்திப்பில் நொறுக்கிட்டு இருந்த அண்ணாமலை சமீபமாக 1000 வாலா பட்டாசாக வெடித்துக்கொண்டு இருக்கிறார்.
கொஞ்ச மாதங்கள் முன்பு RedPix என்ற YouTube சேனல் அசிங்கப்பட்டது, பின்னர் சன் டிவி நிருபர் கேவலப்பட்டார். தற்போது மீண்டும் சன் டிவி அசிங்கப்பட்டுள்ளார்கள்.
இளம் வயது, Ex IPS மற்றும் அரசு பொறுப்பில் இருந்ததால், கேள்விகளுக்குப் புள்ளி விவரத்துடன் பதில் கூறி கிடுகிடுக்க வைக்கிறார்.
செய்தியாளர்கள் பலருக்கு ஒரு விவரமும் தெரியாது, வழக்கமான அரசியல்வாதியாக இருந்தால், அவர்களுக்கும் தெரியாது. எனவே, இவர்களுக்கு எளிதாக இருந்தது.
ஆனால், அண்ணாமலையிடம் வேலைக்கு ஆகவில்லை, விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்தாளு எப்படிப் பந்து போட்டாலும் அடிக்கறானே! என்று கலங்கி நிற்கிறார்கள்.
இவர்கள் இதுவரை கூறிய சிக்சருக்கும் அண்ணாமலை அடிக்கும் சிக்சருக்கும் சம்பந்தமே இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டுள்ளார்கள்.
அண்ணாமலை வேற ரகம்
வழக்கமாக அரசியல்வாதிகள், ‘செய்தியாளர்களிடம் எதற்குப் பிரச்சனை, நாம ஏதாவது கூறி சர்ச்சையாகி விட்டால் என்ன ஆவது!‘ என்று அசிங்கப்பட்டாலும் அடக்கி வாசிப்பார்கள்.
ஆனால், அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நீங்க நேர்மையா நடத்துக்குங்க நானும் சரியா பதில் அளிக்கிறேன்னு‘ நச்சுன்னு சொல்லிட்டார்.
‘பிரதமரைப் பற்றி ஒரு தலைப்பட்சமாகச் செய்திகளை வழங்குவீங்க பார்த்துட்டு போகணுமா… இப்படித்தான் பேசுவேன்! பிடிக்கலைன்னா டிவியில போடாதீங்க‘ ன்னு காய்ச்சி எடுத்தார்.
Times Of India பத்திரிகை பொய் செய்தியை வெளியிட்டதுக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில் அனைவரும் கடுப்பாகி கொந்தளித்தனர்.
இவ்வளவு நாட்களாகக் கேள்வி கேட்க ஆள் இல்லையென்பதால், விருப்பம் போல நடந்து கொண்டு வந்தனர். தற்போது கேள்வி கேட்க ஆள் வந்ததால், எரிச்சலாகத் தான் இருக்கும்.
என்ன செய்வது… உண்மை கசக்கத்தானே செய்யும்.
செய்தியாளர்களை டேமேஜ் செய்ததை வைத்து இரண்டு நாட்களாக அண்ணாமலை பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது.
பலரும் இதற்குப் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.
புறக்கணிப்பு
அண்ணாமலை கூறும் கருத்துகளில் முக்கியமானவற்றைத் தவிர்த்து, இருப்பதிலேயே முக்கியமில்லாத அல்லது எதைக் கூறினால் கவனிக்கப்படாமல் போகுமோ, விமர்சிக்கப்படுமோ அதைத் தான் முன்னிலைப்படுத்துவார்கள்.
தொடர்ந்து செய்திகளைப் படிப்பவர்கள் ஊடகங்களின் இந்தக் கேவலமான செயலைக் கவனித்து இருப்பார்கள்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் அண்ணாமலை கூறும் முக்கியமான கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்காமல், அவரை டம்மியாக்க முயல்கிறார்கள்.
இது தான் பத்திரிகை தர்மமா? இவ்வாறு நடந்து கொள்பவர்களிடம் பயந்து பேசி, அடங்கிப் போக வேண்டுமா?
ஊடகங்களுக்கு இது தேவையே
அண்ணாமலையிடம் உள்ள சிறப்பே புள்ளி விவரத்துடன் பேசுவது, அண்ணா, அக்கா என்று மரியாதையுடன் செய்தியாளர்களிடம் நடந்து கொள்வது, டுபாக்கூர் செய்தியாளர்களைத் துவைத்து எடுப்பது.
செய்தியாளராக இருந்தால், என்னமோ இவர்களை யாருமே கேள்வி கேட்கக் கூடாதுன்னு நினைப்பு.
திரைப்படங்களில் ‘உங்களை எல்லாம் கேள்வி கேட்க ஒருத்தன் வருவான்டா‘ என்று சொன்னதும், ஹீரோ என்ட்ரி வருவது போல அண்ணாமலை வந்து வெளுத்து வாங்கிட்டு இருக்கார் 😀 .
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு என்றாலே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லை. செய்தியாளர்களை அண்ணாமலை கதறவிடுவதைப் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக உள்ளது.
அண்ணாமலை தொடர்ந்து இதே போலப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையோர் எதிர்பார்ப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்
அண்ணாமலை வேற லெவல். தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அண்ணாமலை மட்டும் போதாது. இப்போது பலமாக இருக்கும் திமுகவை பாஜக அதிமுக மட்டும் தோற்கடிக்க முடியாது. சசிகலா. தினகரன். பாஜக அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நின்றால் திமுக நிச்சயம் தோல்வி தான். கடந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் தோற்தற்கு அமமுக முக்கிய காரணம். ஒற்றுமையாக இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. என்ன செய்வது. சோ போன்ற ஒருவர் இல்லாதது நன்றாக உணரமுடிந்தது. அண்ணாமலையும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். உங்கள் கட்சி வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டார். இப்படி அடித்துக்கொண்டால் யாருக்கும் பிரயோஜனமில்லை. திமுகவிற்கு தான் சாதகமாக இருக்கும். திமுகவை தேர்தலில் தோற்கடிக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் தட்டுத்தடுமாறி கூட்டணியாக மீண்டும் ஆட்சி அமைத்து விடுவார்கள்.
ஏனுங்கண்ணே. ரஜினி சார் அரசியலுக்கு வரவில்லையென்பதால் நீங்க பிஜேபியில் இணைந்துவிட்டீர்களா? நீங்கள் பெருமையாக பேசுமளவுக்கு அவர் எதுவுமே புடுங்கவில்லை என்பதுதான் என் எண்ணம். இவர் , ஸ்டாலின் எல்லோரிலும் பார்க்க எங்கள் ஜயா எடப்பாடிதான் தமிழக முதல்வராக வரவேண்டும்.
கிரி, அண்ணாமலை IPS பதவியை ராஜினாமா செய்த போது நான் பெங்களூரியில் இருந்தேன். தமிழன் ஒருவர் கர்நாடக மக்களின் பெரும் ஆதரவு பெற்றிருந்ததால் தமிழக ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. அன்றிலிருந்து இப்போது வரை நான் அவரை பின்தொடர்ந்து வருகிறேன். அவர் இன்றைய தலைமுறைக்கு Inspiration என்று நான் நினைக்கிறேன்.
அரசியலுக்கு வருவதற்க்கு முன்பு அவர் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் பேசிய உரைகளிலும் நேர்காணலிலும், அவருடைய vision மற்றும் future politics பற்றியும் ஒரு தீர்க்கமான அவதானிப்பை கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
நான் முன்பு சொன்னது போல அவர் அரவக்குறிச்சியில் தோல்வியடைந்தது பிஜேபி கட்சிக்கு நன்மையே. அவர் சொன்னது போல ஒவ்வொரு கிராமத்துக்கும் கட்சியை எடுத்து சென்று கொண்டிருக்கிறார். அதிமுக வுக்கு வாக்கு அதிகம் உள்ள என் கிராமத்தில், பிஜேபி கொடி கம்பத்தையும் போஸ்டர்களையும் காண முடிகிறது. பிஜேபி மிகச் சிறிய கட்சி, வளர்வதற்கு குறைத்தது 10 வருடங்கள் எடுக்கலாம். பார்ப்போம் எவ்வளவு வேகத்தில் கட்சியை வளர்த்து தேர்தலில் வெற்றிகளை பெற்று தருவார் என்று. அவர் முந்தைய தலைவர்களை விட பல மடங்கு வேகத்துடனும் விழிப்புடனும் இருக்கிறார்.
அவர் அரசியல் இல்லாத மேடைகளிலும் ஆங்கில ஊடக பேட்டிகளிலும் நிதானமாக பேசுகிறார் ஆனால் தமிழ் ஊடகத்தில் தான் உக்கிரமாகி விடுகிறார். அவரிடம் தமிழ் ஊடகங்கள் ஒரு பட்சமாக தான் நடந்து கொள்கின்றன. இவரை சிக்க வைக்க பல வேலைகள் பின் புறத்தில் நடந்து கொண்டிருக்கும் பார்க்கலாம் அவர் எப்படி எதிர் கொள்வார் என்று. இவர் திமுக வை அதிகம் விமர்ச்சிக்கிறார், பிஜேபி திமுக வுடன் கூட்டணி வைத்தால் இவர் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி தான், கட்சிக்குள்ளேயும் ஓரம் கட்ட வாய்ப்புள்ளது. பிஜேபி மாநில தலைவர்கள் பல பேர் திமுக மற்றும் அதிமுக வுடன் தொடர்பில் இருந்தவர்கள் இருப்பவர்கள் தான். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
@ஹரிஷ்
அனைவரும் இணைவது கடினமான செயலே. பார்ப்போம்.
“கடந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் தோற்தற்கு அமமுக முக்கிய காரணம். ”
உண்மை. ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், 47 இடங்களா என்பது எனக்குத் தெரியாது.
@பிரியா
“ரஜினி சார் அரசியலுக்கு வரவில்லையென்பதால் நீங்க பிஜேபியில் இணைந்துவிட்டீர்களா?”
ஏன் இணையக்கூடாதா?
“நீங்கள் பெருமையாக பேசுமளவுக்கு அவர் எதுவுமே புடுங்கவில்லை என்பதுதான் என் எண்ணம்.”
அவர் ஏராளமாக புடுங்கியதால் தான் திமுக மற்றும் ஊடகங்கள் அவர் மீது காண்டில் உள்ளன என்பது என் எண்ணம்.
“இவர் , ஸ்டாலின் எல்லோரிலும் பார்க்க எங்கள் ஜயா எடப்பாடிதான் தமிழக முதல்வராக வரவேண்டும்.”
வரட்டுமே.
@மணிகண்டன்
“அவர் இன்றைய தலைமுறைக்கு Inspiration என்று நான் நினைக்கிறேன்.”
உண்மை. அதோட இவருடைய எண்ணங்களும் இளைஞர்களிடையே சென்று சேர்வது மகிழ்ச்சி.
“நான் முன்பு சொன்னது போல அவர் அரவக்குறிச்சியில் தோல்வியடைந்தது பிஜேபி கட்சிக்கு நன்மையே. அவர் சொன்னது போல ஒவ்வொரு கிராமத்துக்கும் கட்சியை எடுத்து சென்று கொண்டிருக்கிறார். ”
சரியாக கூறினீர்கள். வெற்றி பெற்று இருந்தால், MLA பணியோடு சட்டமன்றம், தொகுதியோடு முடிந்து இருக்கும்.
நடக்கும் அனைத்துக்கும் காரணம் இருக்கும் போல 🙂
“பிஜேபி மிகச் சிறிய கட்சி, வளர்வதற்கு குறைத்தது 10 வருடங்கள் எடுக்கலாம். ”
சரியான அவதானிப்பு.
பாஜக கடக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். அண்ணாமலை மூலம் வேகமாக கடந்து வருகிறார்கள். நீங்கள் கூறியது போல 2031 ல் இவர்கள் முக்கிய கட்சியாக வளர்ந்து இருப்பார்கள்.
அண்ணாமலையே கட்சி தலைவராக தொடர்ந்தால் விரைவிலேயே நடக்க வாய்ப்புள்ளது.
“அவர் அரசியல் இல்லாத மேடைகளிலும் ஆங்கில ஊடக பேட்டிகளிலும் நிதானமாக பேசுகிறார் ஆனால் தமிழ் ஊடகத்தில் தான் உக்கிரமாகி விடுகிறார்.”
அதற்கு அவர்கள் கேள்வி கேட்கும் முறை.
“அவரிடம் தமிழ் ஊடகங்கள் ஒரு பட்சமாக தான் நடந்து கொள்கின்றன”
உண்மையே. இவரிடம் வரிந்துகட்டி கேட்பவர்கள் திமுக தலைவர்களிடம் பம்மிக்கொண்டு நிற்கிறார்கள்.
“இவரை சிக்க வைக்க பல வேலைகள் பின் புறத்தில் நடந்து கொண்டிருக்கும் பார்க்கலாம் அவர் எப்படி எதிர் கொள்வார் என்று.”
ஏற்கனவே நடந்தது ஆனால், தப்பித்து விட்டார்.
“திமுக வை அதிகம் விமர்ச்சிக்கிறார், பிஜேபி திமுக வுடன் கூட்டணி வைத்தால் இவர் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி தான், கட்சிக்குள்ளேயும் ஓரம் கட்ட வாய்ப்புள்ளது.”
மிகச்சரியாக கூறினீர்கள். இதை இக்கட்டுரையிலேயே குறிப்பிட நினைத்தேன் ஆனால், தலைப்பில் இருந்து விலகி சென்று விடும் என்பதால் தவிர்த்து விட்டேன்.
தனிக்கட்டுரையாக எழுதுகிறேன். ஒருவேளை அச்சூழல் வந்தாலும் திறமையாக சமாளிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
“பிஜேபி மாநில தலைவர்கள் பல பேர் திமுக மற்றும் அதிமுக வுடன் தொடர்பில் இருந்தவர்கள் இருப்பவர்கள் தான். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.”
மறுக்க முடியாத உண்மை.
மணிகண்டன் சிறிய வயது என்றாலும் உங்கள் நிதானம், சொல்ல வரும் கருத்தில் தெளிவு, காமன் சென்ஸ் என்று சிறப்பாக பதில் அளிக்கிறீர்கள்.
இன்னும் வயதாகும் போது, அனுபவம் கிடைக்கும் போது மேலும் பக்குவம் அடைந்து விடுவீர்கள் 🙂 .
பிரியா கூட உங்களைப்போலத்தான்… ஆனால், கருத்துகளை வெளிப்படுத்துவதில் வித்யாசம். வயது, அனுபவம் கூடும் போது மாற்றம் வரும்.
நன்றி கிரி.