மோடியை, இந்தியாவைப் பற்றி அமெரிக்கப் பில்லியனர் George Soros பேசியது இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி விட்டது. Image Credit
George Soros
ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சார்ந்தவர், பின்னர் கிறித்துவராக மாறிக்கொண்டவர். இவர் தன் இன மக்களையே காட்டிக்கொடுத்தவர், இலாபத்துக்காக எதையும் செய்யத்தயங்காதவர்.
தன் லாபத்துக்காக மற்றவர்கள் எவ்வளவு இழப்பைச் சந்தித்தாலும் தனக்குக் கவலையில்லை என்று கூறியவர்.
இதை இவரே பேட்டியில் கூறியுள்ளார்.
1992 ம் ஆண்டில் இங்கிலாந்து சென்ட்ரல் வங்கியில் Short Selling முறையில் பில்லியனில் லாபம் ஈட்டி, அவ்வங்கியே நிலைகுலைய காரணமானவர்.
இடது சாரி சிந்தனை கொண்ட முதலீட்டாளர், தொழிலதிபர்.
மிகப்பெரிய பில்லியரான George Soros உலகம் முழுவதும் தனது NGO அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு உதவி வருகிறார்.
உதவுவதில் என்ன பிரச்சனை?
எந்த ஒரு உதவிக்குப் பின்னும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது பொதுவானது. அனைத்தையும் கடந்தவர்கள் மட்டுமே எதையும் எதிர்பார்க்காமல் உதவுவார்கள்.
அவ்வாறு உதவ George Soros தகுதியானவரல்ல என்பதை அவர் கொடுத்த பேட்டியே உறுதிப்படுத்தும்.
தான் நினைக்கும்படியான அரசு ஒரு நாட்டிலிருந்தாலே தனக்கு, தனது வியாபாரங்களுக்கு நல்லது என George Soros நினைக்கிறார்.
அதையொட்டி தனது NGO அமைப்பை இதற்குப் பயன்படுத்துகிறார்.
இவரது NGO பல நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, பணத்துக்காக வேலை செய்யும் உள்ளூர் ஆட்கள் மூலம் நாட்டில் ஆட்சியையே மாற்ற முயல்கிறார்.
சில நாட்டில் செய்தும் உள்ளார்.
தற்போது இவர் பிரபலம் ஆகக் காரணம் என்ன?
இவர் ஏற்கனவே உலகளவில் மிகப்பிரபலமானவர் ஆனால், இந்தியாவில் தற்போது பேசுபொருளாக மாறக்காரணம் இவர் ஒரு மாநாட்டில் பேசியதே!
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி பங்குகளைக் குற்றம்சாட்டி அது சர்ச்சையானது அனைவரும் அறிந்தது.
இதை George Soros மோடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்கிறார். அதோடு மோடி அரசு மாற்றப்பட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்கிறார்.
இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இவருக்கு என்ன உரிமை உள்ளது? அதோடு வேறு ஆட்சி மாற வேண்டும் என்று இவர் கூற என்ன காரணம்?
ஒரு முதலீட்டாளராக வெளிநாட்டு முதலீட்டார்களின் சார்பாகப் பேசுகிறார் என்றாலும், இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?
சரி இதைப் பேசினாலும், ஆட்சி மாற்றத்தைப் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்?
இங்குத் தான் உளறி, தான் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டார்.
ரஷ்யா
இவருக்கு ரஷ்யாவை பிடிக்காது. எனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இந்தியா வாங்கக் கூடாது என்கிறார்.
ஆனால், இந்தியாவை விட ஐரோப்பா நாடுகள் பல மடங்கு வாங்குவதைக் கேள்வி கேட்பதில்லை. இவர் கூறுவதைக் கேட்டால், இந்தியா பிச்சை தான் எடுக்க வேண்டும்.
இதற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவாகப் பதில் அளித்து விட்டார்.
ரஷ்யாவுடன் சண்டையால் ஐரோப்பா நாடுகள் அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது.
இவ்வாறு அதிக விலை கொடுத்துக் கச்சா எண்ணெய் வாங்கி எங்கள் மக்களைக் சிரமப்படுத்த முடியாது என்பதால், நாங்கள் ரஷ்யாவிடம் வாங்குகிறோம்.
எங்கள் நாட்டுக்கு எது நல்லதோ அதை நாங்கள் செய்வோம். மற்ற நாடுகள் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்.
அமெரிக்க உட்படப் பல நாடுகள் எதிர்த்தும் இந்தியா புறக்கணித்து விட்டது.
George Soros நோக்கம் என்ன?
2014 மோடி ஆட்சிக்கு வந்தது முதலே George Soros க்கு பிடிக்கவில்லை காரணம், மோடி தேசியவாதி, தேசிய உணர்வுடன் நாட்டை வழி நடத்துகிறார்.
மோடி மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம் ஆனால், அவர் இந்தியாவை விட்டுத்தருவாரெனக் கூற முடியாது. காரணம், தேசிய உணர்வு மோடி அடிப்படை.
இங்கு ஒரு ஒற்றுமையை உணரலாம். புடின் மீது விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால், அவர் மோடி போலத் தேசியவாதி, நாட்டின் வளர்ச்சியைச் சிந்திப்பவர்.
உலக நாடுகள் அனைத்தும் போரில் எதிர்த்தாலும் ரஷ்யாவை கெத்தாகச் சரியான திட்டமிடலுடன் மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார்.
இந்தப்புள்ளியில் தான் இவருக்குப் புடின், மோடி மீது காண்டாகிறது.
தனியாருக்கு இந்தியாவை மோடி விற்கிறார் என்பதெல்லாம் பலரின் பொருளாதாரம், வளர்ச்சி குறித்த புரிதல் இல்லாத பேச்சுகள் அல்லது மோடி மீதான வெறுப்பு.
ஒரு சிறிய நாட்டை இது போல மாற்ற நினைக்கிறார் என்றால், பணம் வைத்துள்ளார் முயற்சிக்கிறார் எனலாம் ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டையே இவர் மாற்ற முயற்சிக்கிறார் என்றால், இவர் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பாரெனக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இடதுசாரியான George Soros தான் விரும்பும் ஆட்சி அமைக்க விரும்புகிறார். எனவே, 2014 லிருந்து மோடி ஆட்சியை மாற்ற வேலை செய்து வருகிறார்.
எப்படி?
இங்குத் தான் இவரது NGO வான Open Society Foundation (OSF) வருகிறது.
வெளியே இருந்து பார்ப்பதற்கு NGO, மக்களுக்குத் தொண்டு செய்யும் அமைப்பு ஆனால், அது ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே!
பெரும்பான்மை அரசுக்கு எதிராகச் செயல்படுவது.
செயல்படுபவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு நிதி உதவியளிப்பது.
இதுவரை நடந்த Shaheen Bagh போராட்டம், விவசாயப் போராட்டம், Article 370, CAA போராட்டம் என்று ஒரு போராட்டம் விடாமல் அனைத்திலும் இவர் பங்குள்ளது.
Vice President Salil Shetty
NGO பெயரில் இருப்பதால், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாது ஆனால், OSF அமைப்பின் Salil Shetty அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
Pfizer அனுமதிக்கு நெருக்கடி கொடுத்தார். காங்கிரஸுடன் இணக்கமாக இருந்ததற்கு ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்டார்.
இவ்வமைப்பில் மன்மோகன் சிங் மகள் பணி புரிந்துள்ளார், காங்கிரஸ் தலைவர் சசிதரூர் இவருடன் நட்பில் இருந்ததாக ட்விட்டரில் 2009 ல் பதிவு செய்துள்ளார்.
இது போன்ற தொடர்புகளும், அதிகாரப்பூர்வமாக வராத தகவல்களாக இருந்தாலும் புள்ளிகளை இணைத்துத் தொடர்புகளை அறியும் சம்பவங்களாக ஏராளம் உள்ளது.
காங்கிரஸ் அல்லது வேறு கட்சி வந்தால் தன் விருப்பம்போலக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்று அனைவருக்கும் தெரியும் ஆனால், இவர்களைவிடப் பொருளாதாரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது என்று சர்வே வந்தது.
இந்தச் சர்வே கொடுப்பவர்கள் யார் என்று நீங்கள் அறிந்தால், George Soros போன்றவர்களின் பங்கு என்னவென்று புரிந்து விடும்.
ஊடகவியலாளர்கள் / பிரபலங்கள்
இந்தியாவில் மோடிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பலர் செயல்படுகிறார்கள்.
இவர்களுக்கு இந்தியாவை, மோடியை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். எனவே, அதற்கு ஏதாவது ஒருவகையில் ஆதரவு கொடுத்தால் போதுமானது.
இவர்கள் அனைவரும் நேரடியாக இவருடன் தொடர்பில்லையென்றாலும், இவர்களின் தலைமை, தலைமைக்குத் தலைமை George Soros கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
சுருக்கமாகக் கூறினால், He is the BIG Boss of Left Eco System.
ஏராளமான ஊடகவியலாளர்கள், பிரிவினைவாதிகள், பல்வேறு அமைப்புகள், அரசியல் தலைவர்கள், மதமாற்ற சக்திகள், முற்போக்கு வாதிகள் என்ற பெயரில் உலவுபவர்கள் என்று பலருக்கு இவர் தான் தலைமை.
தலைமை என்றால், இவர்களில் பலருக்கு George Soros யார் என்றே தெரியாது. மேற்கூறியபடி பல அடுக்குத் தலைமைகளுக்குப் பிறகே இவரை அடைய முடியும்.
எனவே, இவர்கள் எல்லாம் எதோ ஒரு கிளை அமைப்பின் தலைமையின் மூலம் நிதியைப் பெற்று பிரச்சனையை உருவாக்குபவர்கள்.
ஆனால், ஒவ்வொருத்தராக நூல் பிடித்துச்சென்றால், இறுதியில் இருப்பவர் The BIG Boss George Soros.
மதமாற்றம்
இந்தியாவில் கிறித்துவ மதமாற்றம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.
இதற்கு George Soros மட்டுமல்ல, பல்வேறு NGO அமைப்புகள் நிதி உதவி அளித்து வருவதோடு மதப்பிரச்சனைகளையும் வெறுப்புணர்வையும் கிளப்பி வருகின்றன.
விவரம் தெரியாதவர்களுக்கும், மேலோட்டமாகச் செய்தியைப் படிப்பவர்களுக்கும் தெரியாது ஆனால், பின்னணியில் மிகப்பெரிய வலைப்பின்னல் செயல்படும்.
இந்து அமைப்புகளில் சிலர் செய்யும் தவறுகள் மிகப்பெரிய அளவில் ஊதிப்பெருக்கப்படும். மேலோட்டமாகப் பார்க்கையில் இந்துக்கள் மட்டுமே இதைச் செய்வது போலத் தோற்றமளிக்கும்.
அனைத்து மதத்தினரிடமும் தவறுள்ளது ஆனால், வேலைக்காரர்களின் பணி எதைப் பிரச்னையாக்குவது என்று கொடுக்கப்படும் கட்டளையின் படியே.
இந்துக்கடவுள்களைப் பற்றி மிகவும் கேவலமாக எழுதப்பட்டவை செய்திகளில் புறக்கணிப்பட்டு இருக்கும், விவாதங்கள் இருக்காது.
எளிதாகப் புரிந்து கொள்ளத் தமிழக ஊடகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
சொந்தப்பணம் அல்ல
மதமாற்ற அமைப்புகள் சொந்த பணத்தை ஏழைகளுக்குத் தருவதில்லை, அவர்களுக்கு NGO தரும் பணத்தைக் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள்.
இந்துக்கள் ஏன் இதுபோலக் கொடுத்து உதவக் கூடாது? என்பதற்கு இதுவே காரணம்.
ஒருவர் மதப்பரப்புரை செய்கிறார் என்றால், அவர் சொந்தமாக வருவதில்லை. அவருக்குப் பணம் கொடுக்கப்படுகிறது, அதைச்செய்கிறார்.
பணம் மொத்தமாகவோ / மாதாமாதம் வழங்குவதாகக் கூறி மதம் மாற்றுபவர்கள் கொடுப்பது சொந்தப்பணம் அல்ல, இது போன்ற NGO க்கள் கொடுப்பது.
இவ்வாறு மதமாற்றத்துக்குப் பணம் கொடுப்பது George Soros NGO மட்டுமல்ல, Ford, Rockefeller & The Bill and Melinda Gates foundation போன்ற பல்வேறு அமெரிக்க NGO அமைப்புகள் மதமாற்றத்தின் பின்னணியில் உள்ளன.
முன்னரே கூறியபடி எங்கே ஒரு பிரச்சனை உள்ளதோ அங்கே அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா சார்ந்து ஒருவரோ இருப்பார்கள்.
நம்ப முடியாத செய்தி
இவர்கள் வெளிநாட்டவர், இந்தியாவை அழிக்க எதோ ஒருவகையில் நினைக்கிறார்கள், அதைச் செயல்படுத்துகிறார்கள் ஆனால், இந்தியர்கள் எப்படி?!
இடது சாரி இந்திய ஊடகங்களில் இந்தியாக்கு, மோடிக்கு எதிராகத் தொடர்ச்சியாக எழுதும் தளங்களுக்கு Wipro Azim Premji, Nandan Nilekan போன்றோரும் நிதி உதவியளித்து வருகிறார்கள்.
குர்ஆனில் இருந்ததைக் குறிப்பிட்டு நுபுர் சர்மா பேசியதை மிகப்பெரிய பிரச்சனையாக்கி, கலவரமாக்கி பலர் கொல்லப்படக் காரணமாக இருந்த Altnews தளம் உட்பட, பல தளங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
நிதி உதவி அளித்ததில் டாடாவும் உள்ளது.
ஏற்கனவே இதுகுறித்துப் பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், George Soros பிரச்சனைக்குப் பிறகு பலரும் இதை அறிந்ததால், எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது.
இதுபற்றித் தற்போது தான் படித்து வருவதால், விளக்கமாகக் கூற முடியவில்லை. இது பற்றி விரிவாகத் தெரிந்து, தகவல்களில் நம்பிக்கை வந்த பிறகு எழுதுகிறேன்.
சுற்றுச்சூழல் போராளிகள்
மற்றவர்கள் எல்லாம் ஒரு வகை போராளிகள் என்றால், இவர்கள் வேறு வழியில் திட்டங்களை முடக்குவார்கள்.
இவர்கள் பணி என்னவென்றால், எங்கு வளர்ச்சி திட்டம் நடைபெறுகிறதோ, எங்கே இருந்து வருவார்கள் என்று தெரியாது மக்களோடு கலந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளுக்கு தூத்துக்குடி கலவரத்தில் பங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம்.
எட்டுவழிச்சாலை திட்டம், துறைமுகம் (கேரளா) அமைப்பதற்கு எதிர்ப்பு என்று இவர்கள் போராட்டம் தொடரும்.
உண்மையான மக்கள் இக்கணக்கில் வர மாட்டார்கள், மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை இவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
எளிதாக புரிந்து கொள்ள கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்துக்கும் போராடிய பலர் தற்போது எங்கே? என்று தோன்றினால், உங்கள் கேள்விக்கான விடை அது.
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் தற்போது எங்கே போனார்! நடுநிலை என்று காட்ட அவ்வப்போது எதையோ பேசுகிறார் அவ்வளவே.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலம் உடைந்த போது ஆமைகள் வருவதாலே மரப்பாலம் அமைக்கப்பட்டது என்றார்.
தற்போது நிரந்தர பேனா சிலை கடலுக்குள் அமைக்கப்படுத்தவற்கு என்ன கதை தயார் செய்து வைத்துள்ளாரோ!
இவர்கள் எல்லாம் உள்ளூர் சுற்றுச்சூழல் போராளிகள் என்றால், உலக போராளி Greta Thunberg.
அனுபவின்மையால் Tool Kit Link யைப் பொது வெளியில் பகிர்ந்து விட்டார். அதில் யார் யார் தொடர்பு என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இது போல உலகம் முழுக்க யாரோ ஒருவர் கட்டளையில் வேறு நோக்கங்களுக்காக போராட்டங்கள் நடைபெறுகின்றன.
தங்களுக்காக போராடுகிறார்கள் என்று அப்பாவி மக்கள் நினைக்கிறார்கள்.
George Soros க்கும் அதானிக்கும் என்ன பிரச்சனை?
எல்லோருமே கூறுவது டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களை யாரும் எதிர்ப்பதில்லையே! அம்பானி, அதானியை தானே எதிர்க்கிறார்கள் என்று.
பெரிய நிறுவனங்கள் எவருமே நியாயமானவர்கள் கிடையாது, நியாயமாக நடந்தால் தொழில் நடத்த முடியாது. இதுவொரு கசப்பான உண்மை.
விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம் ஆனால், அவர்கள் பெரும்பான்மை அல்ல, பெரிய நிறுவனங்களாகவும் இருக்காது.
அதானிக்கு அம்பானி பரவாயில்லையென்று தற்போது பலருக்கும் அம்பானி மீது ஒரு Softcorner வந்து விடக் காரணம் அதானி அசுர வளர்ச்சி.
இந்திய நிறுவனங்கள் (அம்பானியையும் சேர்த்து) வெளிநாடுகளில் அதிகளவில் முதலீட்டில் ஈடுபடுவது அதானியை ஒப்பிடும் போது குறைவு.
காரணம், அதானி பல நாடுகளின் நிலக்கரி, துறைமுகங்கள் உட்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களோடு போட்டியிடுகிறார், அதைக் கைப்பற்றுகிறார்.
இங்குத் தான் George Soros கடுப்பாகிறார். அதாவது, அதானி உலகளவில் தொழிலைப் பெருக்க முயல்வது George Soros க்கு பிடிக்கவில்லை.
Mahua Moitra
மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் Mahua Moitra, அதானியை தொடர்ச்சியாகத் தாக்கி வருகிறார்.
சமீபத்தில் SBI யை வைத்துத் தவறான தகவலை ட்வீட் செய்ததை SBI அறிவிப்புகளுடன் சுட்டிக்காட்டி பலரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு நீக்கினார்.
இவர் முன்பு பணி புரிந்த வெளிநாட்டு வங்கி, அவருடன் பணி புரிந்தவர்கள், Hindenburg என்று புள்ளிகளை இணைத்தால், பல புரிதல்கள் கிடைக்கும்.
ஒவ்வொருவர் பின்னணியையும், தொடர்புகளையும் ஆராய்ந்தால் இவர்களின் எண்ணம் என்னவாக உள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.
மேம்போக்காகப் படித்துப் பேசுபவர்களால் புள்ளிகளை இணைத்து யோசிக்க முடியாது, யோசிக்கவும் மாட்டார்கள்.
Hindenburg
அதானி பற்றி Hindenburg குற்றச்சாட்டு வைத்த போது வலது சாரிகள் பலர் இதில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்புள்ளது என்று கூறினார்கள்.
ஆனால், George Soros பேச்சு அதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கூறுவது அதானி உத்தமர் என்று கூறுவதற்காக அல்ல, அவர் உத்தமரும் அல்ல ஆனால், அவரைக் குறை கூறுபவர்களின் நோக்கம் என்னவென்பதே இங்கே கேள்வி.
Hindenburg நிறுவனம் அதானி பங்கு வீழ்ச்சியைப் பயன்படுத்தி Short Selling முறையில் பல ஆயிரம் கோடி இலாபத்தைப் பெற்றுள்ளது.
Hindenburg Short Selling நிறுவனம், George Soros Short Selling specialist. இதுவும் பலரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
George Soros பொறுமையிழக்கக்காரணம் என்ன?
கடந்த (2014) 9 வருடங்களாகத் தனது இந்திய வேலைக்காரர்கள் மூலம் மோடிக்கு எதிராக George Soros மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
முயற்சிகள் என்றால், அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்தது, மதரீதியிலான பிரச்சனைகள், ஊடகவியாளர்களை எதிர்மறை செய்திகளை எழுத வைத்தது, மதமாற்றம், சுற்றுச் சூழல் போராட்டங்கள் போன்றவை.
இவருக்கு வயது 92. எனவே, பிரம்மாஸ்திரமாக அதானி பிரச்சனையின் மூலமா இந்தியாவைப் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்தார்.
இந்திய அரசு நிறுவனங்கள் அதானி பங்குகளில் முதலீடு செய்து இருக்கும் அதனால், இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று நினைத்தார்.
ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தது அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது. Biggest frustration!
காரணம் LIC, SBI போன்றவை 1% குறைவாகப் பங்குகளையே பெற்று இருந்தன. 1% என்றாலும், பெற்ற இலாபத்தில் இழப்பே தவிர, முதலீட்டில் இழப்பில்லை.
மற்ற அரசு நிறுவனங்களும் Fund Management படியே செயல்படுவதால், எந்தப் பாதிப்பையும் அரசு சந்திக்கவில்லை. அதானி மட்டுமே பாதிக்கப்பட்டார்.
Credit Suisse
இழப்பு என்று சொல்ல முடியாது ஆனால், ஒரு ஏமாற்றம் நடந்தது.
இந்திய 2023 – 2024 பட்ஜெட் வரவேற்புக்குப் பிறகு பங்குச்சந்தையில் புள்ளிகள் வேகமாக உயர்ந்த போது, அதானி கடன் பத்திரங்களை வாங்க மாட்டோம் என்று Credit Suisse வங்கி மதியம் அறிவித்ததில் பங்குச் சந்தை சரிவானது.
Credit Suisse நிறுவனத்தின் பங்குகளே மிகப்பெரியளவில் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தை உயர்ந்து வந்த தருணத்தில் இவர்கள் அறிவித்தது திட்டமிடப்பட்டதா, எதேச்சையானதா என்று விமர்சனம் எழுந்தது.
தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி George Soros முயன்றார் ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றதும் பொறுமை இழந்து உணர்ச்சிவசப்பட்டு மோடியை ஆட்சியிலிருந்து தூக்கும் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறி விட்டார்.
சமூகவலைத்தளங்களில் George Soros உடன் மற்றவர்களுக்கு எப்படித் தொடர்பு இருக்கலாம் என்பதை வரைபடங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.
2024 பாராளுமன்றத் தேர்தல்
2024 தேர்தல் வரை புது புது பிரச்சனைகள், போராட்டங்களை இனி அதிகமாக உருவாக்குவார்கள். வெறுப்புணர்வு அதிகமாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
இதையெல்லாமா பிரச்சனையாக்குவார்கள்?! என்று நினைக்கும் அளவுக்கு இனி Aggressive ஆக நடைபெறும்.
இவ்வாறு பிரச்சனைகளை உருவாக்கி, செய்திகளைத் தொடர்ச்சியாக வர வைத்து மக்களிடையே அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதே இவரது நோக்கம்.
எவர் ஒருவர் நேரடியாக மோதாமல் மறைமுகமாக மோதி அழிக்கப்பார்க்கிறார்களோ அவர்களின் எண்ணம் ஈடேறாது. முக்கியமாக மோடி விஷயத்தில் நடக்காது.
George Soros போன்றவர்கள் மற்ற நாடுகளைக் கட்டுப்படுத்தியது போலத் தற்போதைய இந்தியாவைக் கட்டுப்படுத்த முடியாது.
காரணம், தற்போது இந்தியாவை ஆள்பவர், அவருக்கு துணையாக இருப்பவர்கள் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துச் சறுக்காமல், நிதானமாக யோசித்துச் சரியான நேரத்தில் ஒவ்வொரு அடியையும் மரண அடியாகக் கொடுப்பவர்கள்.
இது இந்தியாவின் காலம் 🙏.
தொடர்புடைய கட்டுரைகள்
நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?
மேற்கத்திய நாடுகள் | கெடுவான் கேடு நினைப்பான்
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ
இந்தியா எதிர்க்கும் இரு மாஃபியாக்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அருமை👌🏽 mahua moitra is not a minister she is MP
@Balamurali
Mahua Moitra MP என்பதை அறிவேன்.
பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடுவதற்கு அமைச்சர் என்று குறிப்பிட்டு விட்டேன்.
a details article. good