உண்மையான ஆன்மீக அனுபவம் எது?

0
உண்மையான ஆன்மீக அனுபவம் எது?

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 8 வது கட்டுரை. Image Credit

உண்மையான ஆன்மீக அனுபவம் எது?

பல காலமாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தாங்கள் மிகுந்த அனுபவம் பெற்று விட்டோமா இல்லையா? என்பதில் குழப்பம் இருக்கும்.

சிலருக்கு நாம் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டோம் என்ற இறுமாப்பு இருக்கும். இவர்களுக்கு சுவாமி சச்சிதானந்தா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஏன் ஆண்டவனை அடையவில்லை?

பல காலமாக ஆன்மீகத்திலிருந்தும் கடவுளை ஏன் காண முடியவில்லை? ஏன் எந்த ஆன்மீக அனுபவமும் ஏற்படவில்லை என்று நினைக்கின்றனர்

ஆன்மீக அனுபவம் என்பது எது?

அந்தரத்தில் பறப்பதா? மாயாஜால காட்சிகள் கண்முன்னே நடப்பதா? நாம் நினைப்பது சொல்வதெல்லாம் நடப்பதா?

இவையெல்லாம் நடந்தாலே ஆன்மீகத்தில் உச்சம் அடைந்ததாகக் கருத முடியுமா?

இக்கேள்விகளுக்கு சுவாமி சச்சிதானந்தா கூறுவது,

இவை ஆன்மீக அனுபவமன்று.

மேற்கூறியவை நடப்பதால் மற்றவர்களுக்கு என்ன நன்மை!

உண்மையான ஆன்மீக அனுபவம், மலர்ந்த முகத்துடன் நடமாடுதல், மற்றவர்களில் உங்கள் ஆன்மாவைக் காண்பதும் ஒவ்வொருவரையும் நேசிப்பதும் வேறுபாடுகளையெல்லாம் மறந்து ஒற்றுமையை வளர்ப்பதும் ஆன்மீகமாகும்.

உங்களால் மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியவில்லையென்றால், மற்ற ஆன்மீக அனுபவங்களால் என்ன பயன்?!

ஒவ்வொருவரும் உங்களை நேசிக்க வேண்டும், அவர்களை நீங்கள் நேசிக்க வேண்டும்.

அத்தகைய அன்பு உங்கள் வாழ்வில் நிலவினால், உங்களுக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறார்.

தனக்குத் தெரியாதது எதுவுமில்லை, எவருக்கும் அறிவுரை கூறும் தகுதியுள்ளதாக நினைத்து மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட்டுத் தாங்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைந்ததாக பலர் நினைக்கிறார்கள்.

ஆன்மீகம் தொடர்பாக பல ஆண்டுகளாக இயங்கி வருபவர்களுக்கு இயல்பாகவே தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

ஆன்மீகத்தில் கரை கடந்ததாக! நினைப்பவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் வளர்ச்சி அமைகிறது.

இதுபோலத் தங்களை உயர்வாக நினைத்துக் கற்பனையில் மிதப்பது ஆன்மீக அனுபவம் அல்ல என்பதையே சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறுகிறார்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here