இந்தியா எதிர்க்கும் இரு மாஃபியாக்கள்

5
இந்தியா எதிர்க்கும் இரு மாஃபியாக்கள்

லகில் இரு மாஃபியாக்கள் சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர். ஒன்று மருந்து தயாரிப்பவர்கள், இரண்டாவது ஆயுதம் தயாரிப்பவர்கள். Image Credit

இவர்களுக்குத் தோராயமாக 2020 ம் ஆண்டிலிருந்து இந்தியா பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறது, அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்க மாஃபியாக்கள்.

Drugs எனப்படும் மருந்து மாஃபியாக்கள்

மருந்து உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத் தக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

ஆனால், அனைவரையும் கவனிக்க வைத்தது கோவிட் வைரசுக்கு தடுப்பூசி வெளியிட்ட போது தான்.

கோவிட் தடுப்பூசியால் பல ட்ரில்லியன் லாபம் பார்க்கலாம் என்று நினைத்த அமெரிக்க மருந்து மாஃபியாக்கள் எண்ணத்தில் இந்தியா மண்ணள்ளி போட்டது.

கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளால் வெளிநாட்டு மருந்து தேவையை இந்தியா தவிர்த்தது மிகப்பெரிய அடியானது. இந்தியா மிகப்பெரிய நுகர்வு நாடு.

இது போதாது என்று 98 நாடுகளுக்கு இலவசமாகவும் கொடுத்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை இவர்களுக்குக் கொடுத்து விட்டது.

இதை வைத்துச் செம இலாபம் பார்க்க இருந்தவர்களுக்கு இந்நிகழ்வு பேரிடியானது.

Pfizer

குறிப்பாக, Pfizer நிறுவனம் தனது தடுப்பூசியை இந்தியாவில் விற்க இந்திய ஊடகங்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, ஊடகவியலாளர்களுக்கு, பிரபலங்களுக்குப் பணம் கொடுத்தது.

மத்திய அரசு இம்மருந்தை வாங்க இவர்கள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தார்கள். இதை ஊடகங்கள் பெரியளவில் மக்களிடையே கொண்டு சென்றன.

மருந்தைப் பரிசோதித்துப் பின்னரே அனுமதிக்க முடியும் என்று மத்திய அரசு கூறியதுக்கு Pfizer ஒத்துக்கொள்ளவில்லை.

அதோடு நிபந்தனையற்ற முறையில் மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை நிர்ப்பந்தித்தது. எப்படிக் கதை பாருங்க?!

ஆனால், மத்திய அரசு இறுதிவரை இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, இன்றுவரை Pfizer இந்தியாவுக்கு வரவில்லை.

Sinovac

இதே போலச் சீன மருந்து Sinovac க்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டது ஆனால், ஏற்கப்படவில்லை.

பொதுமக்கள் உயிருடன் இந்திய அரசு விளையாடுகிறது என்பது போன்ற உணர்ச்சிமிகு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன, சமூகத்தளங்கள் மூலம் அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த இரு மருந்துகளையும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா ஏற்றுக்கொண்டு இருந்தால், மிகப்பெரிய உயிரிழப்பைச் சந்தித்து இருக்கும்.

அதோடு பல ட்ரில்லியன்கள் பணம் செலவாகி, மிகப்பெரிய நிதிநெருக்கடியைக் இந்தியாக்குக் கொண்டு வந்து இருக்கும்.

தற்போது சீனாவின் Sinovac மருந்து சொதப்பியதில் அங்கேயே இந்திய மருந்துகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாகச் செய்திகளில் வந்தது.

World Health Organization

WHO அமைப்பும் இவர்களுக்கு உடந்தையாக, கோவாக்சின், கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுக்கப் பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்து வந்தது.

Sinovac க்கு கூட WHO அனுமதி கிடைத்து விட்டது ஆனால், இந்திய மருந்துகளுக்கு அனுமதி கிடைக்க தாமதமானது. இதுவே உலக அரசியல்.

உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம், சீனா மற்றும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் World Health Organization உள்ளது என்று.

ஆனால், World Health Organization உடன் ட்ரம்ப்க்கு சண்டையானது. பைடன் வந்த பிறகு சமாதானம் ஆகி விட்டார்கள்.

90% க்கு மேல் திறன்மிக்கது என்று கூறப்பட்ட Pfizer தற்போது 50% க்கு கீழே உள்ளது என்று ஆய்வுகள் கூறியதால், Pfizer நிறுவன உரிமையாளர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

பொது இடத்தில் இவரைத் துரத்திச் சில Freelance ஊடகவியலாளர்கள் கேட்டதுக்குப் பதில் கூறாமல் சென்று விட்டார்.

திறன் குறைவால் அமெரிக்காவில் இறப்புகள் அதிகமாகின. இந்திய இறப்புகளை உலக ஊடகங்கள் ஓயாமல் பேசி வந்தன ஆனால், அமெரிக்க உயிர் இழப்பு செய்திகளைத் தவிர்த்து விட்டன.

சமீபத்தில் இந்திய மருந்து நிறுவனங்களால், ஆப்ரிக்கா நாட்டுக் குழந்தைகள் இறந்தார்கள், சிலருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டது பெரியளவில் சர்ச்சையானது.

இது உண்மையாகவும் இருக்கலாம் அதே சமயம் இதன் பின்னணியில் மாஃபியாக்கள் பங்கும் இருக்கலாம்.

என்னவாக இருந்தாலும், வரும் காலங்களில் அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சவாலைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சில மருந்துகளின் மூலப்பொருட்கள் நமக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, சிலவற்றுக்கு மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவையுள்ளது.

ஆயுத மாஃபியாக்கள்

உலகின் ஆயுத விற்பனை என்பது மிகப்பெரிய வர்த்தகமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்க ஆயுத விற்பனை என்பது அசாதாரணமாக உள்ளது. இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு.

அமெரிக்காவில் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு மாணவர்கள் கொல்லப்படும் செய்தியை ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்.

இதை ஏன் அரசால் தடுக்க முடியவில்லை. ஆயுத பயன்பாடு, விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டியது தானே!

காரணம், ஆயுத உரிமையாளர்களை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அமெரிக்க அரசே உள்ளது.

மற்ற நாடுகளுக்கும் ஆயுத ஏற்றுமதி அதிகளவில் உள்ளது. தற்போது நடைபெறும் ரஷ்யா உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆயுதங்களை விற்று வருகிறது.

இது மட்டுமல்ல, அமெரிக்காவே மற்ற நாடுகளில் பிரச்சனையை உண்டு செய்து, அங்கே ஆதரவு கொடுப்பது போல ஆயுதங்களை விற்பனை செய்வார்கள்.

இதில் இந்தியா எப்படி வந்தது?

இந்தியா தற்சார்பு உற்பத்தியில் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி குறைந்து வருகிறது.

தற்சார்பு பொருளாதாரம் உட்பட, பல பொருட்களின் ஏற்றுமதிக்கான வாய்ப்பைப் பற்றி மோடி கூறிய போது குறைத்து மதிப்பிட்டதற்காக வருத்தப்பட்டுள்ளேன்.

வழக்கமான அரசியல் ஸ்டண்ட் என்றே நினைத்தேன் ஆனால், அதை உண்மையாக்கியதோடு மிக வேகமாக முன்னெடுக்கிறார்.

எதிர்கால ஆயுத தேவைக்கு மற்ற நாடுகளின் தேவையைப் பெருமளவு குறைக்க நடவடிக்கைகளை அதுவும் வேகமாக எடுத்து வருவது ஆயுத மாஃபியாக்களைக் கடுப்படைய வைத்துள்ளது.

இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஆயுதங்களை, குறிப்பாக ஏவுகணைகளை மற்ற நாடுகளுக்குக் குறைந்த விலையில் ஏற்றுமதியும் செய்து வருகிறது.

இந்தியா எந்த நாட்டின் குடியையும் கெடுக்கவில்லை ஆனால், வளர்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இடைஞ்சலாக உள்ளது.

இதனால், இந்தியாவைக் காலி செய்யக் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

இந்த மாஃபியாக்களை, வளர்ந்த நாடுகளை, உள்நாட்டு எட்டப்பன்களை இந்தியா எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதில் இந்தியாவின் எதிர்காலமும் அடங்கியுள்ளது.

கொசுறு

சமீபமாகச் சர்வதேச செய்திகள் அதிகம் படிக்கிறேன், பார்க்கிறேன். இதனாலே உலக செய்திகள் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

கவனித்த வரையில் எங்கே சென்றாலும், எந்தப் பிரச்சனையென்றாலும் அங்கே அமெரிக்கா நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான் இந்தியாவின் நேரடி எதிரிகள் என்றாலும், அமெரிக்கா இவர்களை விட மிக மோசமான நாடாக உள்ளது அதாவது கூட இருந்தே குழி பறிக்கிறது.

உலக அரசியலில் தெரிந்துகொண்டவற்றை இனி வரும் காலங்களில் பகிர்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19

மேற்கத்திய நாடுகள் | கெடுவான் கேடு நினைப்பான்

ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ

5 COMMENTS

 1. சமீபகாலமாக தாங்கள் உலக அரசியலை எழுதிவருவதை நாங்களறிவோம்…! மேலும் எதிர்பார்க்கிறோம்… புதிய தொழில் நுட்பங்களை விட மாட்டீர்கள் என்பதையும் அறிவோம். நன்றி

 2. கிரி, மோதியின் ஆட்சியில் generic மருந்துகளின் விலையை வெகுவாக குறைத்துள்ளது. மக்கள் மருந்துகளை Pradhan Mantri Jan aushadhi Store களில் வாங்க முடியும். அறிய வியாதிகளின் மருந்துகளின் விலை பல ஆயிரங்களில் இருந்து சில ஆயிரங்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 3. முக்கியமாக மோடி அரசின் ஜன் ஔஷதி மக்களுக்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டம். இது அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மக்களிடம் ரீச் ஆகவில்லையோ என தோன்றுகிறது. Fits க்காக மருந்து வாங்குகிறேன்.

  டாக்டர் எழுதி கொடுத்த அதே ஜெனடிக் மருந்து ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய் தான் மோடி மருந்தகத்தில். ஆனால் டாக்டர் பரிந்துரைத்த அந்த கம்பெனி மருந்து மாதத்திற்கு 5300 ரூபாய்.

  மாதம் 4300 ரூபாய் மிச்சம். இதுபோல சுகர் மருந்து எல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. மக்களும் டாக்டர் எழுதி கொடுத்த அதே கம்பெனி மாத்திரை தான் வாங்க வேண்டும் என்று நினைத்து தேவையில்லாமல் ஜெனடிக் மருந்து பற்றி தெரியாமல் செலவு செய்கிறார்கள்.

  தனிஒருவன் படத்தில் மட்டும் தான் இதைபற்றி விழிப்புணர்வோடு சொன்னார்கள். நிறைய டாக்டர்கள் மருந்து கம்பெனியிடம் பணம் பெற்றுக்கொண்டு ஜன்ஔஷதியில் இதற்கு மாற்று மருந்து வாங்க வேண்டாம் நான் எழுதி கொடுத்ததையே வாங்கி சாப்பிடுங்கள் என்று தங்கள் சுயநலத்திற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்.

  அப்படி சொன்ன டாக்டரை நான் மாற்றிவிட்டேன் இப்போது வேறு நல்ல டாக்டரிடம் செல்கிறோம். இப்படி ஒரு தட்டம் காங்கிரஸ் ஆட்சியில் வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான். நானும் யோசித்திருக்கிறேன்.

  இப்படி முக்கியமான மருந்தை மோடி அரசு மிக மலிவான விலையில் தருகிறார்களே இந்த மருந்து மாஃபியாக்கள் இந்த மத்திய அரசின் மீது எவ்வளவு காண்டில் இருப்பார்களோ என்று.

  இதற்கே இப்படி என்றால் அனைத்து மக்களுக்கும் இதை பற்றி தெரிந்து அனைவரும் இங்கேயே வாங்கி விட்டால் அவர்கள் இன்னும் காண்டு ஆவார்கள். ஜன்ஔஷதி ஜெனடிக் மருந்து பற்றி நீங்க உங்க ப்ளாக்ல எழுதுங்க. இன்னும் சில பேரை சென்றடையும்.

 4. @அழகு/Alagu நன்றி. தொழில்நுட்ப கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவேன்.

  முன்பு சிறு தொழில்நுட்ப செய்திகள் அதிகம் எழுதினேன் தற்போது கட்டுரைகள் மட்டும் எழுதுகிறேன், Chat GPT போல.

  @மணிகண்டன்

  “கிரி, மோதியின் ஆட்சியில் generic மருந்துகளின் விலையை வெகுவாக குறைத்துள்ளது. மக்கள் மருந்துகளை Pradhan Mantri Jan aushadhi Store களில் வாங்க முடியும். அறிய வியாதிகளின் மருந்துகளின் விலை பல ஆயிரங்களில் இருந்து சில ஆயிரங்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.”

  உண்மை தான்.

  மோடியின் திட்டங்களை பற்றித் தனிக்கட்டுரையாக எழுதத் திட்டமிட்டுள்ளதால், இதைக் குறிப்பிடவில்லை.

  @ஹரி

  மக்கள் மருந்தகம் மிகச்சிறந்த வாய்ப்பு. பலருக்கு இம்மறுந்தகம் பற்றி தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

  “இப்படி ஒரு தட்டம் காங்கிரஸ் ஆட்சியில் வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான். நானும் யோசித்திருக்கிறேன்.”

  இத்திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்தது அதை மோடி அரசு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here