ஒருவரை மதிப்பிடுவது எப்படி?

0
ஒருவரை மதிப்பிடுவது எப்படி?

ருவரை மதிப்பிடுவதில் பலருக்குக் குழப்பம் உள்ளது என்பதை விட அதைப் பற்றிய புரிதலே இல்லை என்பதே உண்மை. Image Credit

100% சரியான நபர்

உலகில் 100% சரியான நபர், நமக்குப் பிடித்த மாதிரி ஒரு நபர் உள்ளாரா? என்றால் இல்லையென்பதே பதிலாக இருக்கும்.

காரணம், நமக்குப் பிடித்த மாதிரி, நாம் எதிர்பார்ப்பதை 100% செய்யும் நபராக ஒருவர் இல்லையென்பதே எதார்த்தம்.

எப்போதாவது மன வருத்தமோ, கோபமோ ஏற்பட்டு இருக்கும்.

இருப்பினும், அதைக்கடந்து செல்கிறோம் காரணம், சம்பந்தப்பட்டவர் நமக்கு நெருங்கியவராகவோ, தவிர்க்க முடியாதாவராகவோ இருப்பார்.

எனவே, சில மனவருத்தங்களை ஒதுக்கி விட்டுத் தொடர்கிறோம்.

நெருக்கமில்லாதவர்

சிலர் நம் தின வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் தொடர்புள்ளவராக இருப்பார் ஆனால், அவரோடு ஏதாவது ஒரு காரணத்துக்காகத் தொடர்பில் இருப்போம்.

அவர் நமக்குப் பல்வேறு வகைகளில் உதவி இருப்பார் ஆனால், அவர் செய்த, பேசிய எதோ ஒன்று நம்மைக் கோபப்படுத்தியிருக்கும், வருத்தமடையச் செய்து இருக்கும்.

இந்நிலையில் பலர் என்ன செய்கிறார்கள் என்றால், சம்பந்தப்பட்டவரை ஒரேடியாகப் புறக்கணித்து விடுகிறார்கள்.

அவர் இதற்கு முன் செய்த உதவிகளைக் கணக்கில் கொள்வதில்லை.

இதுவே தவறான செயல் அல்லது முடிவு.

ஒருவரை மதிப்பிடுவது எப்படி?

ஒருவரை மதிப்பிடுவதில் நமக்கு அவர் 70% – 80% சரியாக உள்ளாரா? என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும். 100% சரியாக இருக்க வேண்டும் என்பதையல்ல.

இவ்வாறு நீங்கள் நினைத்தால், உங்களால் யாரோடும் நட்பு பாராட்ட முடியாது.

சமூகத்தளங்களில், அலுவலகங்களில் ஏராளமானோரை பின்தொடர்கிறோம், சந்திக்கிறோம் ஆனால், அனைவரையும் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்பச் செயல்பட நினைப்பது சாத்தியமா?

முடியாது.

இருப்பினும் எதோ காரணத்துக்காகத் தொடர்பில் இருக்கிறோம், அதே போலத் தான் மற்றவர்களிடமும்.

என் தளத்தையும் சிலர் 2008 லிருந்து படிக்கிறார்கள், அப்படியென்றால் என் கருத்துகளில் 100% ஏற்புடையவர்கள் என்று அர்த்தமா?

கிடையாது.

சிலவற்றில் ஏற்புடையது இல்லையென்றாலும், மேற்கூறிய 70%, 80% கணக்கில் என்னைக் கருதி தொடர்கிறார்கள் அவ்வளவே!

எனவே, எதோ ஒரு சமயத்தில் கடுமையாகவோ, மனது வருத்தமடையும்படி நடந்து கொண்டார் என்பதற்காக உங்களுக்கு உதவியவரின் பழைய உதவிகளை மறந்து அவரை வெறுத்தால், நண்பர்கள், உறவுகள் என்று எவருமே இருக்க மாட்டார்கள்.

சில விதிவிலக்காக மன்னிக்க முடியாத அளவுக்கு நம்பிக்கை துரோகமாகவோ அல்லது வேறு வகையிலோ இருக்கலாம், அவை இக்கணக்கில் வராது.

மேற்குறிப்பிட்டது, மன்னிக்கக்கூடிய அல்லது கடந்து செல்லக்கூடிய பிரச்சனைகளுக்கு மட்டுமே!

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், மற்றவர்களின் எதிர்மறை தாக்குதல் குறைந்து பகைவர்களும் நண்பர்களாவார்கள்.

தொடர்புடைய கட்டுரை

நம்பினால் நம்புங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!