இறப்புக்குப் பின் கூகுள் கணக்கு என்ன ஆகும்?!

4
இறப்புக்குப் பின் கூகுள் கணக்கு Flower

லருக்கு கூகுள் கணக்கு என்பது வங்கிக்கணக்கு போல மிக முக்கியமான கணக்கு. தங்களுடைய தகவல்கள் அனைத்தையும் இங்கே வைத்து இருப்பார்கள்.

சிலர் முக்கியத் தகவல்களை, அலுவலகத் தகவல்கள் உட்பட Google Drive ல் வைத்து இருக்கலாம், சிலர் பல காலமாக எடுக்கப்பட்ட நிழற்படங்களை, சான்றிதழ்களை இங்கே சேமித்து வைத்து இருக்கலாம். Image Credit

எனவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இறப்புக்குப் பின் கூகுள் கணக்கு 

விபத்திலோ / வேறு காரணத்தாலோ நாம் மரணமடைந்து விட்டால், இறப்புக்குப் பின் கூகுள் கணக்கு என்ன ஆகும்? என்று எண்ணம் பலருக்கு தோன்றி இருக்கும்.

மக்கள் நினைப்பதை கூகுள் நினைத்து இருக்காதா?! 🙂 இதோ இதற்கான பதில்.

3 மாதங்களில் இருந்து அதிகபட்சம் 18 மாதங்கள்

நம்இறப்புக்கு பின்னர் நம் தகவல்கள் எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தால், 3 மாதங்களில் இருந்து அதிகபட்சம் 18 மாதங்களுக்குப் பிறகு கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் கூகுள் நீக்கிவிடும்படி செய்யலாம்.

ஒருவேளை நம்முடைய இறப்புக்குப் பின் கூகுள் தகவல்கள் அனைத்தும் நம் துணைக்கோ அல்லது வேறொரு நம்பகமான நபருக்கோ செல்ல வேண்டும் என்று நினைத்தால், அதற்கும் வழி உள்ளது.

நாம் யாரை குறிப்பிடுகிறோமோ அவருடைய மின்னஞ்சலை இதில் குறிப்பிட்டு விட்டால், அவர்களுக்கு நம் இறப்புக்குப் பின் தகவல் சென்று விடும்.

குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு அவர் நம் தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.

கூகுள் பல முறை உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும், அப்பவும் தொடர்பில் கிடைக்கவில்லை என்றாலே, நீங்கள் குறிப்பிட்டுள்ள நபருக்குத் தகவல் செல்லும்.

எவை என்று தேர்வு செய்யலாம்

இதில் என்னென்ன சேவைகளை இவர் கையாள முடியும் என்று தேர்வு செய்யலாம்.

Google Photos கொடுக்க விரும்பும் நீங்கள் Google History யை கொடுக்க விரும்பாமல் இருக்கலாம்.

எனவே, எதைப் பகிரணும் என்று நினைக்கிறீர்களோ அதை மட்டும் தேர்வு செய்யலாம்.

பின்வரும் தளத்தில் சென்று நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம்

Link https://www.google.com/settings/u/0/account/inactive

எதையும் செய்யவில்லை ஆனாலும் வேண்டும்!

ஒருவேளை இதையெல்லாம் செய்யவில்லை ஆனாலும், குறிப்பிட்ட நபரின் தகவல்கள் வேண்டும் என்றால் அதற்கும் வழி உள்ளது ஆனால், அவ்வழி எளிதான வழி அல்ல.

கூகுள் அவ்வளவு எளிதில் உங்களுக்குக் கொடுத்து விடாது.

Link https://support.google.com/accounts/troubleshooter/6357590

பயனாளர்களின் தகவல்களை முக்கியமாகக் கருதுவதால், பல கட்ட சோதனைகள், விசாரணைகள் என்று உள்ளது. எனவே, இது அவ்வளவு எளிதல்ல.

இறுதியில் அடப்போங்கய்யா! தகவலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கடுப்பாகும் நிலைமையும் ஆகலாம் 🙂 .

கொசுறு

உயிரோட இருக்கும் போதே என் கணக்கை நான் கண்டுகொள்வதில்லை! நாமே போன பிறகு கூகுள் கணக்கு எப்படி போனால் எனக்கென்ன? என்பவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க 😀 . 

தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நிச்சயம் பயனுள்ள பதிவு.. கண்டிப்பாக அனைவரும் இதை பயன்படுத்த வேண்டும்.. நம்முடைய இறப்புக்கு பின் நமது தகவல்கள் நிச்சயம் நெருக்கமானவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.. எப்படியும் ஒரு நாள் இந்த தகவல்கள் கண்டிப்பாக தேவைபடும்… நாம் இறந்த பின் யாருக்கு என் பயன் என நினைப்பது சரியில்லை… பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. “””கிரி! உயிரோட இருக்கும் போதே என் கணக்கை நான் கண்டுகொள்வதில்லை! நாமே போன பிறகு கூகுள் கணக்கு எப்படி நாசமா போனால் எனக்கென்ன? என்பவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க ? ?”””
    🙂 🙂 🙂 🙂 🙂

  3. ஒரு வருடத்துக்கு முன்னரே நான் இதை செயல்படுத்தி விட்டேன் அண்ணா ..

    நான் ஒருமாதம் கூகிள் கணக்கை பயன்படுத்தாவிட்டால் தகல்வல்கள் அனைத்தையும் அழித்து விடும்படி மாற்றி அமைத்து உள்ளேன்.

  4. @யாசின் உண்மை தான். நம்மிடம் உள்ள சில தகவல்கள் நம் துணைக்கோ மற்றவருக்கோ தேவைப்படலாம்.

    @விஜய் 🙂

    @கார்த்தி ஒரு மாதம் என்பது குறைவான அளவாக உள்ளது. மூன்று மாதமாக மாற்றுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here