giriblog Version 3.0

7
giriblog Version 3.0

giriblog தளத்தில் அவ்வப்போது காலத்துக்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக தற்போது முக்கிய மாற்றத்தைச் செயல்படுத்தியுள்ளேன். Image Credit

என்ன மாற்றங்கள்?

 • 2010 இத்தளம் டொமைன் (www.giriblog.com) பெறப்பட்டு, Blogger ல் இருந்து Hosting க்கு (WordPress) மாற்றப்பட்டது.
 • 2015 Mobile, Tablet உட்படச் சாதனங்களில் படிக்க வசதியாக Responsive Theme மாற்றப்பட்டது.
 • 2020 10 வருடங்களுக்குப் பிறகு தள வடிவமைப்பை மாற்றியதோடு Cloudflare CDN (Content Delivery Network) & Cloud Hosting முறைக்கு மாற்றப்பட்டது.
 • 2021 Google Domain லிருந்து Cloudflare க்கு (https உடன்) மாற்றப்பட்டது.
 • 2022 கட்டுரைகள், நிழற்படங்கள் (WebP) போன்றவை புதுப்பிக்கப்பட்டது.
 • அவசியமற்ற (Outdated) கட்டுரைகள் பலவற்றை நீக்கி, Search Engine Optimization க்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்யப்பட்டது.

2023 ல் மிகப்பெரிய மாற்றமாக 13 வருடங்களாகப் பயன்படுத்திக்கொண்டு இருந்த நிறுவனத்திலிருந்து இந்தியாவில் உள்ள Hosting நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

எதற்கு இந்த மாற்றம்?

USD என்பதாலும் புதுப்பித்தலுக்குக் கூடுதல் கட்டணம் என்பதாலும், தொடர முடியவில்லை. அதோடு இந்தமுறை தள்ளுபடி பெற முடியவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, வழங்கி (Server) அமெரிக்காவிலிருந்ததால், இந்தியாவிலிருந்து பயன்படுத்துபவர்களுக்குத் தள வேகம் மட்டுப்பட்டு இருந்தது.

இந்தியாவிலிருந்தே இத்தளத்தை அதிகம் படிக்கிறார்கள். எனவே, Hosting இந்தியாவிலிருப்பதே பலன். அதோடு புதிய Hosting தளத்தில் பல புதிய வசதிகள், கட்டணம் குறைவு, UI பயன்படுத்த எளிமையாக உள்ளது.

வேகம் அதிகமாகியுள்ளது, தளத்துக்கு வந்து படிப்பவர்களுக்கு வித்தியாசம் புரியும்.

இன்னும் கொஞ்ச நாட்களுக்குச் சிறு சிறு தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, ஏதாவது பிரச்சனை இருந்தால், தற்காலிகமானதே.

WhatsApp Channel

WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்திய Channel வசதியில் இத்தளத்தை இணைத்துள்ளேன்.

சுவாரசியமாக, செய்தியாக, தகவலாக, நகைச்சுவையாகத் தோன்றுவதை இத்தள கட்டுரைகள் உட்பட WhatsApp Chennel ல் தற்போது பகிர்ந்து வருகிறேன்.

Google Feeds வழியாகப் படிப்பவர்கள் குறைந்ததால், அனைவரும் தினமும் பயன்படுத்தும் WhatsApp ல் இத்தள கட்டுரைகளைப் பின்தொடர்வதோடு, தவறவிட்ட கட்டுரைகளையும் படிப்பது எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

விரும்புவர்கள் இணையலாம். உங்கள் மொபைல் எண், பெயர் என்று எதுவுமே மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, பாதுகாப்பானது.

WhatsApp Channel ல் பின் தொடர –> giriblog WhatsApp Channel

இத்தளத்தில் வேறு என்ன பிரச்சனைகள் உள்ளது என்பதைத் தெரிவித்தால், அதைச் சரி செய்ய முயல்கிறேன்.

அனைவரின் அன்புக்கு நன்றி. தொடர்பில் இருங்கள் 🙏.

தொடர்புடைய கட்டுரைகள்

giriblog தள மாற்றங்களும் அறிவிப்புகளும் (2022)

வோர்ட்பிரஸ் (WordPress) என்றால் என்ன?

Google Page Experience | இணைய தரத்தை மேம்படுத்தும் கூகுள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. கிரி, உங்க தளத்தோட அமைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். நானும் சில நேரம் பழைய பதிவுகளை படிக்க நினைத்து தேடும் போது மிகவும் எளிதாக நான் தேடும் பதிவு வந்து விடுகிறது.. WhatsApp Chennel ல் தற்போது நான் தொடர்வேனா? என்பது சந்தேகமே..

  தளத்தில் நேரிடையாக வருவது தான் எனக்கு பிடிக்கும். எப்போதும் போல espncricinfo & உங்கள் தளம் தினமும் நேரம் கிடைக்கும் போது ஒரு முறையாவது பார்ப்பேன். தற்போது இணையத்தில் எதுமே பார்ப்பதில்லை.. Youtube இல் பாடல்கள் கேட்பது மட்டும் தான்.
  =============================
  Google Feeds வழியாகப் படிப்பவர்கள் குறைந்ததால், அனைவரும் தினமும் பயன்படுத்தும் WhatsApp ல் இத்தள கட்டுரைகளைப் பின்தொடர்வதோடு, தவறவிட்ட கட்டுரைகளையும் படிப்பது எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன். காலத்திற்கு ஏற்ப மாற்றம் நிச்சயம் அவசியமானது கிரி.. அதை நீங்கள் எப்போதும் சரியாக செய்து வருவது இன்னும் சிறப்பு!!!

 2. கரி. bhim ஆப் இல் upi lite x என்று புதிதாக வந்துள்ளது. 500 ரூபாய் வரை ஒரு transaction செய்துகொள்ளலாம். அதை பற்றி எழுதுங்க

 3. @யாசின்

  “நானும் சில நேரம் பழைய பதிவுகளை படிக்க நினைத்து தேடும் போது மிகவும் எளிதாக நான் தேடும் பதிவு வந்து விடுகிறது.”

  யாசின் வடிவமைப்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை, தள வேகத்தை மட்டும் கூட்டி இருக்கிறேன்.

  “WhatsApp Chennel ல் தற்போது நான் தொடர்வேனா? என்பது சந்தேகமே..”

  நீங்கள் நேரடியாகவே வந்து பார்ப்பதால், அவசியமில்லை ஆனால், தள கட்டுரைகள் அல்லாது மற்ற தகவல்களையும் பகிர்கிறேன்.

  “உங்கள் தளம் தினமும் நேரம் கிடைக்கும் போது ஒரு முறையாவது பார்ப்பேன்.”

  நன்றி யாசின் 🙂 . நீங்கள் வந்து பார்க்கும் அளவு எழுதுகிறேன் என்பது மகிழ்ச்சி.

  @ஹரிஷ்

  இது அதே UPI Lite தான். முன்னர் ₹200 அதிக பட்சம் செலவு செய்ய முடியும், தற்போது ₹500 ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.

  நல்ல மாற்றம்.

  https://www.giriblog.com/what-is-upi-lite/

  @Fahim நன்றி 🙂

 4. அண்ணா சூப்பர் னா . நம்ம தளத்தோட வேகம் உண்மையிலே முன்ன விட இப்ப அதிகமா இருக்கு. நான் செக் பண்றதுக்கு மிகப்பெரிய கட்டுரைகள், மிகச் சின்ன கட்டுரைகள் என தேடித் தேடி ஓபன் செய்து பாத்துட்டேன். நல்ல வேகம்.

  அண்ணா ஒரு வேண்டுகோள். தளத்தை புதுப்பித்த மாதிரி பதிவுகள்ளயும் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்களேன். ஒரு சார்பு பதிவுகள் அதிகம் வருகிறது.

  API பற்றி ஒரு பதிவு. அவ்ளோ செமயா இருந்தது. ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க அப்படி ஒரு பதிவு எழுதி இருந்திங்க. இப்படி அத்தி பூர்த்தார் போல் இல்லாமல் அடிக்கடி இருந்தால் நல்லா இருக்கும். அப்படியே அந்த புத்தக விமர்சனம், பயண கட்டுரைகள் இவைகளும்

 5. @கார்த்திக்

  “நான் செக் பண்றதுக்கு மிகப்பெரிய கட்டுரைகள், மிகச் சின்ன கட்டுரைகள் என தேடித் தேடி ஓபன் செய்து பாத்துட்டேன். நல்ல வேகம்.”

  நன்றி கார்த்திக் 🙂 .

  “தளத்தை புதுப்பித்த மாதிரி பதிவுகள்ளயும் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்களேன். ஒரு சார்பு பதிவுகள் அதிகம் வருகிறது.”

  புரிகிறது கார்த்திக். சமீபமாக அரசியல் கட்டுரைகள் அதிகமாகி விட்டது.

  முடிந்தவரை ஒரே மாதிரியான கட்டுரைகளை வெளியிடுவதில்லை ஆனால், இதில் தான், நான் கூற வேண்டிய செய்திகள், விமர்சனங்கள் அதிகம் உள்ளன.

  இனி வரும் நாட்களிலும் அரசியல் கட்டுரைகள் அதிகம் வரவே வாய்ப்பு. இருப்பினும் உன் பரிந்துரையை பரிசீலிக்கிறேன்.

  “API பற்றி ஒரு பதிவு. அவ்ளோ செமயா இருந்தது. ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க அப்படி ஒரு பதிவு எழுதி இருந்திங்க.”

  இது பற்றி தேர்வுக்காக படித்துக்கொண்டு இருந்ததால், இதை எழுதினேன்.

  பெரும்பாலும் ஒன்றை எழுத வேண்டும் என்று தோன்றினால் மட்டுமே எழுதுகிறேன். இதை எழுதி ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், அதில் தரம் இருக்காது.

  கடமைக்கு எழுதாமல், விருப்பத்துக்கு எழுத வேண்டும் என்பதையே பின்பற்றி வருகிறேன்.

  “இப்படி அத்தி பூர்த்தார் போல் இல்லாமல் அடிக்கடி இருந்தால் நல்லா இருக்கும்.”

  🙂 முன்பு குட்டி குட்டி தொழில்நுட்ப செய்திகளைச் சேகரித்து எழுதி வந்தேன் ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால், விரைவில் Outdated ஆகி விடுகிறது.

  எனவே, தொழில்நுட்ப செய்திகள் என்றால், கட்டுரைகளாகத் தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

  எனவே தான் இது போன்ற கட்டுரைகள் குறைந்து விட்டது. அதோடு பெரும்பாலான தொழில்நுட்ப செய்திகள் பலரும் அறிந்தது.

  எனவே, பலரும் அறியாத செய்தி என்றால் மட்டுமே எழுதுகிறேன்.

  “அப்படியே அந்த புத்தக விமர்சனம், பயண கட்டுரைகள் இவைகளும்”

  புத்தக விமர்சனம் எழுதுவது குறைந்து விட்டது என்பது உண்மையே.

  அதற்கு காரணம் என்னவென்றால், முன்பு அலுவலகம் சென்று வரும் போது ரயில் பயணத்தில் படிப்பேன்.

  தற்போது அரசியல் விமர்சனங்களுக்காக YouTube காணொளிகள் இந்நேரத்தை ஆக்கிரமித்து விட்டது.

  எனவே, புத்தக விமர்சனங்கள் குறைந்து விட்டது. அதோடு நான் படிக்க நினைக்கும் புத்தகங்கள் Kindle ல் இல்லை.

  Kindle ல் இருப்பதையே படிக்கிறேன், இதுவே படிக்கவே எளிதாகவும் உள்ளது.

  ஊருக்குச் சென்று வந்தால் பயணக்குறிப்புகள் எழுதி வந்தேன்.

  ஆனால், ஒரே மாதிரியான தகவல்களாகவே இருப்பதால், படிப்பவர்களுக்கு ஆர்வம் இருக்காது என்பதாலையே வருடத்துக்கு ஒருமுறை என்று மாற்றிக்கொண்டேன்.

  வேறு ஊருக்கு, மாநிலத்துக்குச் செல்லும் வாய்ப்புக்கிடைக்கவில்லை அல்லது முயற்சிக்கவில்லை. அவ்வாறு சென்றால் நிச்சயம் எழுதுகிறேன்.

  கார்த்திக் ஒரு காலத்தில் துவக்க முன்னுரை பெரிதாக உள்ளது, படிக்கச் சலிப்பாக இருந்தது என்று ஒருமுறை குறிப்பிட்டு இருந்தாய்.

  அதன் பிறகு அதை மாற்றிக்கொண்டேன். இன்றுவரை அதைப் பின்பற்றி வருகிறேன்.

  உன் விமர்சனத்துக்கு நன்றி. இது போன்று அவ்வப்போது கூற வேண்டுகிறேன். தவறுகளை திருத்தி மேம்படுத்த உதவும்.

 6. நேரம் ஒதுக்கி பதில் அளித்தது மகிழ்ச்சி னா. மென்மேலும் தளம் வளர வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here