கூகுள் முக்கிய அறிவிப்புகள் | Google Account & Google Photos

3
கூகுள் முக்கிய அறிவிப்புகள்

துவரை இலவசமாக வழங்கி வந்த Google Photos சேவையை, கட்டண சேவையாக ஜூன் 1, 2021 முதல் மாற்றப்போவதாகக் கூகுள் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டது.

அறிவித்தவுடன் பலர் கொந்தளித்துக் கூகுளை திட்டி, இலவசமாகத் தரும் நிறுவனத்துக்கு மாறப்போகிறோம் என்று கூறினார்கள். Image Credit

அதோடு, வேறு என்னென்ன நிறுவனங்கள் இலவசமாகத் தருகின்றன என்ற பட்டியலையும் வெளியிட்டு வருகிறார்கள்.

கூகுள் முக்கிய அறிவிப்புகள்

கூகுள் துவக்கத்தில் பல சொதப்பல்களைச் செய்து Google Photos யைத்தனிச் செயலியாக (App), தளமாகப் பிரித்த பிறகு மாபெரும் வெற்றியைப்பெற்றது.

துவக்கத்தில் இரு வசதிகளைக் கொடுத்தது.

  1. தரவேற்றம் (அப்லோடு) செய்யும் நிழற்படங்களை, தரம் குறைக்காமல் அதே தரத்துடன் சேமிப்பது. அதாவது 4 MB நிழற்படத்தை 1 MB என்று குறைக்காமல் அதே 4 MB யில்.
  2. தரத்தைக் குறைத்துச் சேமிப்பது. நிழற்படம் மட்டுமல்ல, காணொளியும் சேர்த்து.

முதல் வசதியில், கூகுள் இலவசமாகத் தரும் 15 GB இடத்தில் கணக்கில் கொள்ளப்படும்.

இரண்டாவது வசதியில் இலவசமாக எத்தனை நிழற்படங்களை வேண்டும் என்றாலும் தரவேற்றம் செய்துகொள்ளலாம், கூகுளின் 15 GB இலவசக் கணக்கில் வராது.

தற்போது கூகுள் கூறி இருப்பது, இரண்டாவது இலவச சேவையை நிறுத்தப்போகிறோம் என்பது தான்.

தற்போது பிரச்சனை என்னவென்று உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

WhatsApp

WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான நிழற்படங்கள், காணொளிகள் வருகின்றன.

இவை அனைத்தும் கூகுள் ஃபோட்டோஸில் சேமிக்கப்படுகின்றன.

2017 ம் ஆண்டே 1.2 பில்லியன் நிழற்படங்கள் தினமும் சேர்க்கப்படுவதாகக் கூகுள் கூறியது. தற்போது நிலை என்னவாக இருக்கும்?!

கூகுள் அறிவிப்பு வியப்பை தரவில்லை காரணம், இவ்வளவு படங்களை இவ்வளவு வருடங்களாக இலவசமாகக் கூகுள் சேமித்ததே பெரிய விசயம்.

கூகுள் இலவச சேவை தர, நிறுவனத்தை நடத்தவில்லை, இலவசமாகத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை.

எந்தவொரு இலவசத்தின் பின்பும் இலாபம் இருக்கும்.

பராமரிப்புச் செலவுகள்

இத்தனை பில்லியன் நிழற்படங்கள் சேமிக்கப்படுகிறது என்றால், அதைப் பராமரிக்க ஏகப்பட்ட வழங்கிகள் (server) தேவை,

இதைப் பராமரிக்கக் குளிர்சாதனம், மின்சாரம், பாதுகாப்பு உபகரணங்கள் என்று பராமரிப்புச் செலவுகள் அதிகம்.

கூகுள் இதற்குக் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்.

எனவே, தொடர்ச்சியாக இலவசமாகத் தருவது நடைமுறையில் சாத்தியமில்லை. சொல்லப்போனால், இந்த அறிவிப்பை முன்னரே எதிர்பார்த்தேன்.

ஜூன் 1, 2021 வரை சேமிக்கப்படும் நிழற்படங்கள், காணொளிகளுக்கு இக்கட்டுப்பாடுகள் இல்லை. இதற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் பொருந்தும்.

பலர் பல குப்பையான நிழற்படங்களை, காணொளிகளை இலவசம் தானே என்று சேமித்து வருகிறார்கள். இனி இது போலச் செய்ய முடியாது.

தேவையற்றதை நீக்கியே ஆக வேண்டும்.

அல்லது கூகுள் இலவசமாகத் தரும் 15 GB அளவு முடிந்தால், கூடுதல் இடத்தைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

கோப்புகள் நீக்கம்

மேற்கூறியது அல்லாமல் புதிய இன்னொரு அறிவிப்பையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுள் கணக்கை இரண்டு வருடங்கள் (24 மாதங்கள்) தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அக்கணக்கில் உள்ள கோப்புகள் (Gmail, Google Drive & Google Photos) அனைத்தும் நீக்கப்படும்.

நீக்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் உங்களை வந்தடையும், அதையும் புறக்கணித்தால், இக்கணக்கில் உள்ள தகவல்கள் நீக்கப்படும்.

இந்த அறிவிப்பும் ஜூன் 1, 2021 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் பிறகு இரு வருடங்கள் என்றால், 1 ஜூன் 2023 ஆகும்.

எனவே, கணக்கைப் பயன்படுத்தாமல் Backup க்காக ஒரு கூகுள் கணக்கை வைத்து இருந்தாலும், சில மாதங்களுக்கு ஒரு முறை நுழைந்து வெளியே வந்து விடுங்கள்.

மேற்கூறியதில் சந்தேகம் இருப்பின் கேட்கலாம்.

தொடர்புடைய கட்டுரை

கூகுள் ஃபோட்டோஸ் இலவச சேவைகள் 

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவன் நான்.. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, கைப்பேசியில் புகைப்படம் எடுக்க பிடிக்கவே பிடிக்காது.. தற்போதாவது வெகு அரிதாக சில புகைப்படங்களை கைப்பேசியில் எடுக்கிறேன். நீண்ட நாட்களுக்கு முன்பு கேமரா பிலிம் போட்டு எடுத்த புகைப்படங்களை பார்க்க ரொம்ப பிடிக்கும்.. சில சிறு வயது புகைப்படங்கள் வைத்து இருக்கிறேன்.. எப்போதாவது சோர்வாக தோன்றும் போது அவற்றை பார்க்கும் போது ஒரு வித உற்சாகம் பிறக்கும்.. தற்போது சீரியசான மேட்டருக்கு கூட சிரிச்சிக்கிட்டே இருக்குறேன், சின்ன வயசு புகைப்படங்கள் எல்லாவற்றிலும் அதிகம் உம் என்று தான் இருப்பேன்.. சக்தியுடன் இத்தனை ஆண்டுகள் பழகி இருந்தும் 2 / 3 புகைப்படம் மட்டுமே இருவரும் சேர்ந்து எடுத்து இருக்கிறோம்.. உங்கள் தகவலுக்கு நன்றி கிரி..

  2. இலவச சேவைகள் எவையென்பதையும் தெரிவியுங்கள்.

  3. @யாசின் நானும் கை தொலைபேசியில் படம் எடுப்பது குறைவு, ஆர்வமில்லை.

    “சக்தியுடன் இத்தனை ஆண்டுகள் பழகி இருந்தும் 2 / 3 புகைப்படம் மட்டுமே இருவரும் சேர்ந்து எடுத்து இருக்கிறோம்”

    🙂

    @எந்நாளும் சூப்பர்ஸ்டார் ரஜினி

    Amazon Photos, Microsoft OneDrive, Dropbox app, JioCloud.

    மேற்கூறியவற்றிலும் கட்டுப்பாடுகள் உண்டு. இதுவரை இவற்றை நான் பயன்படுத்தியதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here