Google Discover என்றால் என்ன?

4
What is Google Discover

கூகுள் அறிமுகப்படுத்திய சேவைகளில் குறிப்பிடத்தக்கதும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுமான Google Discover பற்றிப் பார்ப்போம். Image Credit

Google Discover

கூகுள் நிறுவனம் 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Google Discover சேவையை அறிமுகப்படுத்தியது.

மொபைலில் கூகுள் செயலியைப் பார்க்கும்போதோ, க்ரோம் உலவியைப் பயன்படுத்தும்போதோ மற்ற தளங்களின் செய்திகளைக் காண முடியும்.

இவ்வாறு நமக்குத் தெரியும் செய்திகளே Google Discover என்று அழைக்கப்படுகிறது.

மொழி வாரியாக நம்மால் தேர்வு செய்ய முடியும். அதாவது தமிழ் மொழியைத் தேர்வு செய்தால், தமிழ் செய்திகள் தொடர்பான தளங்களைப் பரிந்துரைக்கும்.

இது போன்று நம் விருப்ப மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே போல நம் விருப்பங்களையும் தேர்வு செய்யலாம், பிடிக்காதவற்றை, தளங்களைத் தடை செய்ய முடியும்.

கூகுள் தேடுதலில் நாம் என்ன தேடுகிறோம் என்பதை வைத்தும் நமக்கு பரிந்துரை கட்டுரைகள் வரும்.

எடுத்துக்காட்டுக்கு, What is API / மேகக் கணினி / Best Audio System என்பது போலத் தேடினால், இது தொடர்பான கட்டுரைகள் வரும்.

Google News

Google News போலவே Google Discover ல் ஒரு செய்தித்தளத்தின் லிங்க் வந்தால், மிகப்பெரியளவில் ஹிட்ஸ் கிடைக்கும்.

இத்தளத்தை பில்லியனில் படிப்பதால், ஆங்கிலம் என்றால், ஏராளமான வாய்ப்பும், மொழி வாரியாக இருந்தால், அதற்குண்டான வாய்ப்பும் கிடைக்கும்.

தமிழ் தளங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இணையத்தில் உள்ளது. எனவே, Google Discover / Google News ல் வந்தால், கிடைக்கும் ஹிட்ஸ் தாறுமாறாக இருக்கும்.

பெரிய தளங்களுக்கு ஒரு நாளைக்கு 1 – 5 லட்சம் வருகை என்பது சாதாரணம்.

இதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் அபரிமிதமானது. இதன்காரணமாக Google Discover ல் வருவது என்பது ஒரு தளத்துக்கு முக்கியமானது.

ஏதாவது பிரச்சனையால் ஒரு தளம் கூகுளால் தடை செய்யப்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பு மோசமானது.

Click Bait

Click Bait என்றால், என்னவென்று உங்களுக்குத் தெரியும், தெரியவில்லை என்றாலும் தொல்லையை அனுபவித்து இருப்பீர்கள் 🙂 .

ஒன்றுமே இல்லாத கட்டுரைக்குப் பரபரப்பு தலைப்பு வைப்பது (சுளீர், பளீர், அதிரடி, பகீர் தகவல், பரபரப்பு, கலவரம் வெடித்தது, மிரட்டல், திணறல்).

YouTube ல் வட்டம், அம்புக்குறி எல்லாம் போட்டு ஈர்ப்பார்கள். நம்மவர்களும் ஏமாந்து குவிவார்கள், அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் இலாபம்.

ஆங்கிலம் தான் படிக்கிறேன். தமிழ் தளங்களின் மேற்கூறிய திருட்டுத்தனங்களால் வெறுப்பாகி Disover தமிழ் செய்திகளைப் படிப்பதில்லை.

ஆங்கிலத்திலும் Click Bait உண்டு ஆனால், தமிழ் தளங்கள் அளவுக்கு மோசமில்லை, அவ்வாறு தோன்றினால் அத்தளத்தை எளிதாக தடை செய்து விடலாம்.

Desktop Version

இதுவரை மொபைலில் மட்டுமே இருந்த Discover தற்போது Desktop Version லும் வரப்போவதாகக் கூறப்படுகிறது.

கூகுள் தேடல் தளத்தின் சிறப்பே அதன் எளிமை தான். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வடிவமைப்பில் இருக்கும் ஒரே தளம் https://www.google.com/ மட்டுமே!

இதன் எளிமைக்குப் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

Discover இதில் வந்தால், இதன் எளிமையான வடிவமைப்பு (கீழ் பகுதி) மாற்றம் பெறும். எனவே, இதற்கு எதிர்ப்புகள் எழலாம் என்று கூறுகிறார்கள், உண்மையே!

இம்மாற்றத்தை இந்தியாவில் தான் முதலில் செயல்படுத்தப் போகிறார்கள். இதன் வரவேற்பைப் பொறுத்து மற்ற நாடுகளிலும் விரிவு படுத்தப்போகிறார்கள்.

Desktop ல் செயல்படுத்தினால், தளங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு (ஹிட்ஸ்) கூடுதலாக இருக்கும் என்பதால், ஆர்வமுடன் பலர் உள்ளனர்.

Microsoft Edge ல் ஏற்கனவே இவ்வசதியுள்ளது.

Google News தளத்தில் பின்தொடர விரும்பினால் —> Google News giriblog

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி, நான் கைப்பேசியில் யூடூப்பில் பாடல் கேட்பது மட்டும் தான்.. வேறு எந்த சேவையையும் பயன்படுத்துவது இல்லை.. Click Bait நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை..
    ==============
    இதுவரை மொபைலில் மட்டுமே இருந்த Discover தற்போது Desktop Version லும் வரப்போவதாகக் கூறப்படுகிறது.

    கூகுள் தேடல் தளத்தின் சிறப்பே அதன் எளிமை தான். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வடிவமைப்பில் இருக்கும் ஒரே தளம் https://www.google.com/ மட்டுமே!

    இதன் எளிமைக்குப் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
    ==============
    இந்த பல கோடியிலில் நானும் ஒருவன் தான்.. ஆனாலும் எனக்கு ஜிமெயில் முகப்பு எனக்கு என்னவோ பிடிக்கவில்லை.. ஆரம்பத்தில் HOTMAIL முகப்பு மிகவும் பிடித்து இருந்தது.. பின்பு யாஹூ பயன்படுத்த துவங்கியது முதல் அதன் முகப்பை தற்போது வரை ரசிக்கிறேன்.. அறியாத தகவலை தந்தமைக்கு நன்றி கிரி.

  2. இந்த சேவை வந்த புதுசுல நல்லா இருந்திச்சி னா. இப்பலாம் அதிகம் மொக்கையான செய்திகளை மட்டுமே காட்டுகிறது. இடம், செய்தியின் உள்ளடக்கம், நேரம், அதிகம் படிக்கும் தளம், இது போன்ற தகவல்களை அடிப்படியாக வைத்து நமக்கு ரேண்டமா செய்திகளை காட்டுது. இதனால அதிகமா ஸ்பேம் தான் வருது. தடை செய்தாலும் இது குறையவில்லை. அதனால இப்ப அந்த பக்கமே போறது இல்ல. டெஸ்க்டாப் version வந்தாவாது நல்லா இருக்கானு பாப்போம்.

    edge ல ஏற்கனவே இந்த வசதி இருந்தாலும் அது சுத்த வேஸ்ட்.

    கூகுளை போல நம்ம தளமும் மிக எளியமையானது னா.

  3. @யாசின்

    “Click Bait நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை..”

    பெயரை அறியாமல் இருக்கலாம் ஆனால், இதனால் ஏமாறாமல் இருக்க வாய்ப்பில்லை.

    “எனக்கு ஜிமெயில் முகப்பு எனக்கு என்னவோ பிடிக்கவில்லை..”

    அப்படியா! நான் எப்போதும் Logged in ஆக இருப்பதால், இதைப் பார்க்கவேண்டிய அவசியமே வரவில்லை.

    “யாஹூ பயன்படுத்த துவங்கியது முதல் அதன் முகப்பை தற்போது வரை ரசிக்கிறேன்”

    யாஹூ பயன்படுத்துவதே இல்லை. கணக்கு முடங்கி விடக்கூடாது என்று அவ்வப்போது யாஹூ மின்னஞ்சலில் நுழைந்து வருவேன்.

  4. @கார்த்திக்

    “இப்பலாம் அதிகம் மொக்கையான செய்திகளை மட்டுமே காட்டுகிறது.”

    Disover Artificial Intelligence மூலமாக செய்திகளைத் தருகிறது. அதாவது நம் விருப்பம் என்னவென்று அறிந்து அதன்படி செயல்படுகிறது.

    நீ சிலவற்றை புறக்கணித்து வந்தால், உன் பரிந்துரைகள் சிறப்பாக இருக்கும்.

    “இடம், செய்தியின் உள்ளடக்கம், நேரம், அதிகம் படிக்கும் தளம், இது போன்ற தகவல்களை அடிப்படியாக வைத்து நமக்கு ரேண்டமா செய்திகளை காட்டுது”

    ஆமாம். அதோடு கூகுள் தேடலில் என்ன தேடுகிறாய் என்பதை வைத்தும் கட்டுரைகள் வரும்.

    “தடை செய்தாலும் இது குறையவில்லை.”

    எனக்கு குறைகிறது.

    “டெஸ்க்டாப் version வந்தாவாது நல்லா இருக்கானு பாப்போம்.”

    இரண்டுக்கும் ஒரே AI தான். எனவே, இதிலும் மொபைலில் என்ன வருகிறதோ அதுவே வரும்.

    “edge ல ஏற்கனவே இந்த வசதி இருந்தாலும் அது சுத்த வேஸ்ட்.”

    Disover போல Edge காட்டுவதில்லை. இரண்டையும் ஒப்பிட முடியாது.

    Edge பொதுவான செய்திகளைக் காட்டும். அதில் நமக்கு விருப்பில்லாத செய்திகளை, தளங்களைத் தடுக்கும் வசதி உள்ளது.

    “கூகுளை போல நம்ம தளமும் மிக எளியமையானது னா.”

    நன்றி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!