UPI சேவைக்கட்டணம் விதித்தால் என்ன செய்வது?

0
UPI சேவைக்கட்டணம்

UPI சேவைக்கட்டணம் (MDR – Merchant Discount Rate) விதிக்கப்படுவதாகவும், இனி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் சென்றால் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் என்று தற்போது செய்திகளில் காண முடிந்தது. Image Credit

எதனால் வங்கிகள் கட்டணம் விதிக்கிறார்கள்?

UPI பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கிகளின் Server Load தாங்குவதில்லை.

இதற்கு CPU, RAM, Bandwidth, Powerful server போன்றவற்றை அதிகரிக்க வேண்டும்.

இதற்கு வங்கிகளுக்கு கூடுதல் செலவு ஆவதால், MDR க்கு வற்புறுத்துகின்றன ஆனால், இதற்கு மத்திய அரசு இழப்பீடு தந்து வருகிறது.

UPI சேவைக்கட்டணம்

2017 ம் ஆண்டு எழுதிய போதே UPI பரிவர்த்தனைக்குச் சேவைக்கட்டணம் பின்னாளில் விதிக்கப்படலாம் என்று கூறி இருந்தேன்.

எனவே, எதிர்பார்த்தது என்பதால் எனக்கு அதிர்ச்சி இல்லை.

மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் 2023 – 2024 நிதியாண்டிலும் சேவைக்கட்டணங்களுக்கு மானியம் ஒதுக்கியுள்ளதாகவும் எனவே, கூடுதல் கட்டணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

பின்னர் எப்படி இந்தச் செய்திகள் உலவுகின்றன என்று புரியவில்லை.

யாராவது கிளப்பி விட்டார்களா? அல்லது வங்கிகளே முடிவு செய்து விட்டார்களா? கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.

இதுபோல வங்கிகளே தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. காரணம், ஏற்கனவே நிதியமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார்.

சேவைக்கட்டணம் இல்லையென்பதாலே பலரும் UPI பயன்படுத்துகிறார்கள், கட்டணமென்றால் பலரும் ரொக்கத்தைப் பயன்படுத்தத் துவங்கி விடுவார்கள்.

இன்னும் சிலர் ‘ஒரு சிகரெட் வாங்க கூட UPI பயன்படுத்திப் பழகி விட்டதாகவும், இனி கட்டணம் என்றால் என்ன செய்வது?‘ என்று புலம்பியதையும் காண முடிந்தது.

அதிகாரப்பூர்வமாக அரசின் அறிவிப்பைக் காணவில்லை என்றாலும், ஒருவேளை சேவைக்கட்டணம் விதிக்கப்பட்டால், எப்படிச் சமாளிப்பது என்று பார்ப்போம்.

எப்படிச் சமாளிப்பது?

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட UPI Lite பயன்படுத்தினால், இப்பிரச்சனையைக் கடக்கலாம்.

இது Wallet போல ₹500, ₹1000 என்று போட்டு வைத்துக்கொண்டால், இதிலிருந்தே செலுத்திக்கொள்ளலாம்.

பெரும்பாலான செலவுகள் ₹200 க்குள்ளே இருப்பதாலும், எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் பணத்தை வைத்துக்கொள்ளலாம்.

இதில் பணத்தைப் போடக் கட்டணம் கிடையாது. அதே போலக் கடைகளில் பணம் செலுத்தும் போது வங்கியைத் தொடர்பு கொள்வதில்லை.

எனவே, ஒருவேளை உண்மையிலேயே UPI பரிவர்த்தனைக்குச் சேவைக்கட்டணம் விதித்தாலும் பிரச்சனையில்லை.

PhonePe & Paytm

மேற்கூறிய BHIM UPI Lite ல் பிரச்சனையுள்ளது என்றால், அடுத்த வாய்ப்பாக PhonePe & Paytm Wallet ல் இதே போலப் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

ஆனால், UPI Lite ல் எந்த UPI நிறுவன QRCode இருந்தாலும் செலுத்தலாம், PhonePe & Paytm க்கு அந்தந்த Wallet ல் இருந்து மட்டுமே செலுத்த முடியும்.

அதாவது, நீங்கள் பணம் செலுத்தும் போது அங்குள்ள UPI QRcode PhonePe என்று இருந்தால், PhonePe Wallet ல் இருந்து செலுத்த வேண்டும், Paytm ஆக இருந்தால், Paytm Wallet ல் இருந்து செலுத்த வேண்டும்.

இவையல்லாமல் Paytm postpaid சேவையையும் பயன்படுத்தலாம், எளிது.

மேற்கூறியவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரிகிறது என்றாலும், சேவைக்கட்டணம் செலுத்தி UPI பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், இம்முறையையே பயன்படுத்தியாக வேண்டும்.

இவற்றைப் பயன்படுத்துகிறவன் என்ற முறையில் இது கடினமான ஒன்றல்ல. எனவே, கூடுதல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க இம்முறை எளிமையானதே.

பிற்சேர்க்கை

Paytm தற்போது BHIM UPI Lite போல Paytm UPI Lite அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமும் இருமுறை ₹2,000 (அதிகபட்சம் ஒரு நாளைக்கு ₹4,000) சேர்க்க முடியும், அதிகபட்சம் ₹200 வரை ஒரு பரிவர்த்தனையில் செலவு செய்ய முடியும்.

என் பரிந்துரை BHIM UPI Lite யை விட Paytm UPI Lite பயன்படுத்தலாம். காரணம், வாடிக்கையாளர் சேவை BHIM யை விடச் சிறப்பாக இருக்கும்.

Paytm UPI Lite எப்படியுள்ளது?

தொடர்புடைய கட்டுரைகள்

UPI Lite என்றால் என்ன?

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!