ராகுல் எந்தளவுக்கு அபாயகரமானவர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
ராகுல்
நேரு, இந்திரா, ராஜிவ் என்று அரச பரம்பரை போல வழியில் வந்தவர் ராகுல்.
தனது குடும்பத்தினர் இந்திய அரசியலில் கோலோச்சி இருந்தனர், அவர்களது வாரிசு என்ற ஒன்றின் அடிப்படையில் மட்டுமே ராகுல் உள்ளார். Image Credit
இவருக்கான எந்தவொரு தனித்திறமையோ, செயல் திறனோ இதுவரை அறியப்படவில்லை. வெளிச்சத்தில் இருக்கக் காரணமே குடும்ப அரசியல் மட்டுமே.
இவர் மேற்கூறிய நிலையில் இல்லையென்றால், இவரை யாருமே பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.
பாஜகவினர் இவரைப் பப்பு என்று கிண்டலடித்து வந்ததை உறுதிப்படுத்தும் வகையில் தான் அவரது நடவடிக்கையும் இருந்தது.
இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளதை அனைவரும் அறிவர்.
மாறிய ராகுல் நடவடிக்கைகள்
2019 முதல் 2024 இடைப்பட்ட காலத்தில் ராகுலின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருந்தது, குறிப்பாக 2024 பாராளுமன்றத் தேர்தலில் அவரின் பரப்புரை.
ஆங்கிலேயர்களைப் போலப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பின்பற்றத் துவங்கினார். இந்துக்கள் இடையே சாதியை முன்னிறுத்தி தீவிர அரசியலை மேற்கொண்டார்.
இவரின் நடவடிக்கைகள் ஆபத்தானவையாக உள்ளன, இவர் பப்பு அல்ல, மிக ஆபத்தானவர். இவரை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தேர்தலுக்கு முந்தைய கட்டுரையில் கூறி இருந்தேன்.
இந்திய தேர்தல் முடிவுகள், தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து நான் எதிர்பார்த்த, கணித்த அத்தனையும் எனக்கு ஏமாற்றத்தை, தோல்வியைத் தந்தது.
ஆனால், ராகுல் பற்றிக் கணித்தது மட்டுமே உண்மையானது.
எதிர்பார்த்தது போலவே உபியில் கடாகட் என்று கூறி மாதம் ₹8,500 வழங்குவதாகக் கூறியதும், சாதி, இடஒதுக்கீடு பற்றி இவர் பொய் பரப்புரை செய்ததும் 50% இடங்களுக்கு மேல் பெற்றுத் தந்தது.
இதனாலேயே பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்தது.
முட்டாள் யார் தெரியுமா?
முட்டாள்தனமாக பெரும்பான்மை இந்துக்களை எதிர்த்து, சிறுபான்மையினரை எப்படி ஆதரிக்கிறார்கள்?! எப்படி வெற்றி பெற முடியும்? என்ற கேள்வி இருந்தது.
தற்போது நான் தான் முட்டாள் ஆகியுள்ளேன், காங்கிரஸ் தெளிவாக உள்ளார்கள்.
சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக எதையும் செய்யத்தேவையில்லை, இந்துக்கள் போலச் சிறுபான்மையினரும் ஏமாளிகள் தான்.
ஆனால், இந்துக்களிடையே சாதி, இடஒதுக்கீடு, மொழி, தெற்கு வடக்கு போன்ற பிரிவினைகளைத் தூண்டி விட்டாலே நினைத்ததை சாதித்து விடலாம்.
இதைத்தான் ராகுலும், காங்கிரஸும் செயல்படுத்திக்கொண்டுள்ளார்கள். இது தான் அவர்களுடைய நிகழ்கால, எதிர்கால அரசியல் திட்டம்.
Deep State ஆலோசனைகள்
Deep State தலைமையாக உள்ள ஜார்ஜ் சோரோஸ் என்ற கேடு கெட்டவனின், அமெரிக்க அதிகாரிகளின், இந்தியாவை எதிர்ப்பவர்கள் ஆலோசனையைத் தான் ராகுல் பின்பற்றுகிறார் என்ற கடுமையான குற்றச்சாட்டுள்ளது.
ராகுல் அமெரிக்கா, ஐரோப்பா சென்று வந்தாலே, சாதி, இடஒதுக்கீடு பற்றித் தீவிரமாக பேச ஆரம்பித்து விடுவார். கூர்ந்து கவனித்தவர்கள் உணர்வார்கள்.
எப்பல்லாம் வெளிநாடு சென்று வருகிறாரோ அப்போதெல்லாம் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை, ஆலோசனையைப் பெற்று வருகிறார்.
ராகுல் திறமையற்றவராக இருக்கலாம் ஆனால், பொய்களைப் பரப்புவதில் மிகத்திறமையானவராக உள்ளார். அதற்கு அவரது ஆதரவு ஊடகங்கள் உதவுகின்றன.
நாட்டுப்பற்று இல்லாதவர்
ராகுலின் நடவடிக்கைகளை, பேச்சுகளைக் கவனித்தவர்கள் எளிதாக அவரை ஊகிக்கலாம்.
ராகுலுக்கு நாட்டுப்பற்றோ, இந்தியாவின் மீதான அக்கறையோ, பெருமையோ, நாட்டின் வளர்ச்சி மீதான அக்கறையோ எதுவுமே கிடையாது என்பதை.
வெளிநாடுகளில் சென்று இந்தியாவை, இந்தியர்களை மிகக்கேவலமாகப் பேசி வருகிறார், ஆத்திரமாக உள்ளது.
நாட்டை நேசிக்கும் ஒருவரால் இதுபோலக் கேவலமாக நடந்து கொள்ள முடியாது.
பிரதமர் கனவு
ராகுலுக்கு எப்படியாவது பிரதமர் ஆக வேண்டும்.
இந்தியா எப்படி நாசமா போனாலும் கவலையில்லை, மற்ற நாடுகள் நம் நாட்டை எப்படி கட்டுப்படுத்தினாலும் கவலையில்லை.
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருந்தாலும் கவலையில்லை ஆனால், தான் பிரதமர் ஆக வேண்டும், அதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ளார்.
முன்பு மன்மோகன் சிங் என்ற பொம்மையிருந்தார் ஆனால், ராகுல் வந்தால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல இந்தியா மாறும்.
பாஜகவே தொடர்ந்து ஆட்சியிலிருக்க முடியாது, என்றாவது ஒரு நாள் காங் ஆட்சிக்கு வரத்தான் போகிறது.
அப்போது இந்தியா இதுவரை சந்தித்திராத அவமானங்களைச் சந்திக்கப்போகிறது. இதையெல்லாம் யோசித்தாலே கொடூரமாக உள்ளது.
அமெரிக்கா பயணம்
அமெரிக்கப் பயணத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் உலகளவில் சிரிப்பாய் சிரிக்கிறது.
ஒரு சாதாரண நபருக்கு இருக்கும் அடிப்படை அறிவு, பதில் கூறும் திறன் கூட எதிர்காலத்தில் பிரதமராக வரக் கனவு காணும் ராகுலுக்கு கிடையாது.
இவரது பதில்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.
ராகுல் சந்திப்பவர்கள் அனைவரும் இந்தியாவை விமர்சித்தவர்களாக, இந்தியாக்கு எதிராக செயல்பட்டவர்களாக உள்ளனர்.
இவற்றைப் பார்க்கும் போது கடுமையான மன உளைச்சலாகிறது.
சீக்கியர்கள்
சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா செயல்படுவதாகக் கூறி சீக்கியர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டார்.
இவ்வாறு கூறியதற்கு ராகுலை ஆதரித்தது யார் தெரியுமா?
‘இந்தியாவில் குண்டு வெடிப்பை நிகழ்த்துவேன்‘ என்று கனடாவிலிருந்து காணொளி வெளியிடும் காலிஸ்தான் தீவிரவாதி Gurpatwant Singh Pannun.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ராகுல் யாருடைய செல்லப்பிள்ளை என்று.
யாரெல்லாம் இந்தியாவை வெறுக்கிறார்களோ, வீழ்த்தணும், வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று துடிக்கிறார்களோ அவர்களை எல்லாம் ராகுல் சந்தித்து வருகிறார்.
நாட்டை நேசிப்பவரால் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலை உறுதியாகச் செய்ய முடியாது. எனவே தான் கூறினேன் இவருக்கு இந்தியா மீது எந்தப் பற்றும் இல்லையென்று.
பேட்டி
ராகுலை பேட்டி எடுத்த நிருபர் ஒருவர்,
‘உங்கள் பாட்டி இந்திரா எனக்கு பழக்கமானவர், மூத்த சகோதரி போன்றவர்.
ஒரு முறை அவர் சிறையிலிருந்த அனுபவத்தை லண்டனில் நிருபர் கேட்ட போது, இந்தியா பற்றிய தவறான எண்ணத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி அக்கேள்வியை தவிர்த்து விட்டார்.
உங்கள் பாட்டியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்‘ என்று செருப்பாலடித்தது போலக் கூறினார்.
நாட்டின் மீது பற்றுள்ள எனக்கு, ராகுல் செய்வது அவமானமாக, ஆத்திரமாக உள்ளது.
இன்னொரு நாட்டு நிருபருக்கு ராகுல் பேசுவது தவறு என்று தெரிகிறது ஆனால், ராகுலுக்கு தவறு என்று தோன்றவில்லை.
இந்திய அரசியல் தெரியாத அமெரிக்காவில் உள்ள பலருக்கு ராகுல் இந்தியாவைச் சார்ந்தவரா பாகிஸ்தானைச் சார்ந்தவரா? என்றே குழப்பம் வந்து இருக்கும் .
அது வேற வாய் இது வேற வாய்
இந்தியாவில் ‘இடஒதுக்கீட்டுக்காகப் போராடுவேன், இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்துவேன்‘ என்று கூறி பரப்புரை செய்து கொண்டுள்ளார்.
அழகிப்போட்டியில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு ராகுல் மூளை கெட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால், அமெரிக்காவில் ‘இடஒதுக்கீடை நீக்குவேன்‘ என்கிறார்.
இந்தியாவில் இவர் கூறியதைத் தொடர்ந்து பரப்புரை செய்த இடது சாரி ஊடகங்கள் ‘இடஒதுக்கீடை நீக்குவேன்’ என்று கூறியதைப் பற்றி மூச்சே விடுவதில்லை.
இதையே மோடி கூறி இருந்தால், இந்தியாவே அலறி இருக்கும்.
இங்கே இந்தியாவின் மீது அக்கறை போலப் பேசுவது, வெளிநாட்டில் இந்தியாவைக் கேவலப்படுத்துவது.
பிரித்தாளும் சூழ்ச்சி
ராகுலுக்கு அவருடைய எஜமானர்கள் கூறுவது நன்றாக வேலை செய்கிறது.
‘வாய்க்கு வந்ததை அடித்து விடு, தொடர்ந்து சாதிப்பிரிவுகளை பேசி இந்துக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்து, பிரச்சினையில்லாத இடஒதுக்கீடை பிரச்சினை இருப்பது போல உருவகப்படுத்து‘.
என்று கூறி இருப்பார்கள் போல, வெளிநாடு சென்று வந்தால் இதையே தான் கீறல் விழுந்த ரெக்கார்டு போலப் பேசிகொண்டுள்ளார்.
இதை நான் மட்டும் கூறவில்லை, பல கட்சிகள் சார்ந்த ஏராளமான அரசியல் தலைவர்கள் ராகுலின் இந்திய எதிர்ப்பை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ராகுல் இந்தியாக்கே மிக மிக ஆபத்தானவர். வெளிநாட்டுச் சக்திகளின் கைக்கூலியாக இருந்து இந்தியாவை நாசப்படுத்தத் துணை போகிறவர்.
இந்தியா எக்கேடு கேட்டாலும் கவலையில்லை, ராகுலுக்கு பிரதமர் ஆக வேண்டும், அது மட்டுமே அவரது எண்ணம் !
இந்தியாவை நேசிக்கும் எவராலும் ராகுலை ஆதரிக்க முடியாது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அந்தப் பயபுள்ளையாவது பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் துணிவாவது இருக்கிறது. இங்கு ஒருவர் பத்திரிக்கையாளரை சந்தித்ததே கிடையாது. 56″
பாஜகவே தொடர்ந்து ஆட்சியிலிருக்க முடியாது, என்றாவது ஒரு நாள் காங் ஆட்சிக்கு வரத்தான் போகிறது.
அப்போது இந்தியா இதுவரை சந்தித்திராத அவமானங்களைச் சந்திக்கப்போகிறது. இதையெல்லாம் யோசித்தாலே கொடூரமாக உள்ளது
@கிரி எப்படி அவ்வாறு சொல்றிங்க? ரங்கராஜ் பாண்டே இன்னும் குறைந்தபட்சம் 25 வருடம் பிஜேபி ஆட்சி தான் என்று கூறுகிறார். எதிர் கட்சியிடம் பலமான போட்டியில்லாததால் பிஜேபிக்கு வசதியாக உள்ளது. நானும் அப்படி தான் நினைக்கிறேன்
கிரி, தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியை பற்றி அதிகம் படித்தது இல்லை.. இந்திரா காந்தியை பற்றி படித்த அளவிற்கு கூட ராகுலை பற்றி படிக்கவில்லை.. சுருங்கக்கூறின் இவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் தோன்றியது இல்லை. இவர் மட்டும் அல்ல நிறைய அரசியல்வாதிகளின் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவே இல்லை.
பொதுவாக சரித்திரத்தின் மீது அதீத ஆர்வம் எப்போதும் உண்டு. வரலாற்றில் வாழ்ந்த நிறைய பேர்களின் சரித்திரங்களை தற்போதும் படித்து வருகிறேன். அதை குறித்த நிகழ்வுகளை கண்டு வருகிறேன். ஆனால் அரசியல் தலைவர்களின் வெகு சிலர் மீது மட்டும் ஆர்வம் ஏற்பட்டு அவர்கள் குறித்து படித்து இருக்கிறேன்.
என் பார்வையில் ஒரு முறை வாய்ப்பு வழங்கி, ராகுல் என்ன தான் செய்கிறார்? என்பதை பார்த்தால் தான் உறுதியாக அவரின் ஆளுமையை பற்றி முழுவதும் கருத்து கூற முடியும். காரணம் வரலாற்றில் எப்பேர்ப்பட்ட தலைவர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் பதவிக்காலத்தில் சில சமயம் சிறப்பாகவும், சில சமயம் வெறுப்பாகவும் ஆட்சி செய்துள்ளார்கள்..
உங்கள் பார்வையிலே மோடியின் ஆரம்ப கால செயல்பாடுகள் சிலது திருப்தி இல்லாமல் இருந்தது என்பதை உங்கள் பழைய பதிவுகளில் படித்து இருக்கிறேன். ஆனால் சில ஆண்டுகளில் சூழல் மாறி போனது..அதனால் ஒரு முறை வாய்ப்பு வழங்கினால் தான் ராகுலின் ஆளுமை பற்றி முழுவதும் தெரியும்.
@Unknown
தைரியத்தை பேசும் நபரின் பெயர் Unknown 😀 .
சரி மோடி தைரியம் இல்லாதவராகவே இருந்துட்டு போகட்டும் ஆனால், பத்திரிகையாளரைச் சந்திக்கும் ராகுல் என்ன சாதனைகளைச் செய்து விட்டார், பத்திரிகையாளர்களைச் சந்திக்காத மோடி என்ன சாதனைகளைச் செய்யவில்லை ?
பத்திரிகையாளரைச் சந்தித்து மேற்கூறிய பொய் புரட்டுகளை கூறுவதன் பெயர் தைரியமா ?
இதைக்கொஞ்சம் விளக்குங்க.. சந்திப்பதால் என்ன சாதித்து விட்டார் ? என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் விருப்பம் உள்ளது.
@ஹரிஷ்
“எப்படி அவ்வாறு சொல்றிங்க? ரங்கராஜ் பாண்டே இன்னும் குறைந்தபட்சம் 25 வருடம் பிஜேபி ஆட்சி தான் என்று கூறுகிறார்”
இதே பாண்டே தான் பலரும் 400 என்று கூறிய போது பாஜக கூட்டணி 350 இடங்களை உறுதியாக பெறும் என்று கூறினார் ஆனால், பெரும்பான்மை கூட பெற முடியவில்லையே.
எல்லோருக்குமே ஒரே நபர் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் போது, மற்ற பிரச்சனைகளால் வேறு ஒருவருக்கு வாக்களிப்போம் என்று தோன்றும்.
ஆதரவாளர்களுக்கு தோன்றாது ஆனால், கட்சி சாராத மக்களுக்கு தோன்றும். அந்நிலையில் மாற்றம் வரலாம்.
அதோடு சுங்கச்சாவடி கட்டண உயர்வு உட்பட பல்வேறு கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் மக்களிடையே கொண்டு செல்லும் போது வேறு கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
எனவே, எப்போது நடக்கும் என்று தெரியவில்லை ஆனால், உறுதியாக பாண்டே கூறியதுக்கு முன்னரே நடக்கும்.
அடுத்த தேர்தலிலேயே நடந்தால் வியப்பதற்கில்லை காரணம், ராகுல் அந்த அளவுக்கு மக்களைத் தவறான தகவல்களைக் கூறி திசை திருப்புகிறார்.
எதிர்கட்சிகள் இடங்கள் சேரும் போது ஒரு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறும் ஆனால், அது நிலையான ஆட்சியாக இருக்காது.
@மோடி
“உங்கள் பார்வையிலே மோடியின் ஆரம்ப கால செயல்பாடுகள் சிலது திருப்தி இல்லாமல் இருந்தது என்பதை உங்கள் பழைய பதிவுகளில் படித்து இருக்கிறேன். ஆனால் சில ஆண்டுகளில் சூழல் மாறி போனது”
அதாவது எனக்கு குறைகள் இருந்தது ஆனால், அதற்காக காங் கட்சியை ஆதரிக்கவில்லை.
எனக்கு தவறு என்று தோன்றுவதை விமர்சனமாக முன் வைக்கிறேன், அது மோடியாக இருந்தாலும். அதனாலையே காங்கிரஸ் கட்சியை வரவேற்பதாக ஆகி விடாது.
பாராட்டும் போது எனக்குள்ள அதிருப்தியை சுட்டிக்காட்டுகிறேன். அனைத்தையும் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை என்பதால்.
சமீபத்தில் கூட வரி தொடர்பாக என் விமர்சனத்தை முன் வைத்து இருந்தேன் ஆனால், அதற்காக பாஜக ஆட்சி வேண்டாம் என்பதல்ல.
பாஜக ஆகச்சிறந்த ஆட்சியை அளிக்கிறது அதே சமயம் குறைகளும் உள்ளது. ஏற்புடையது இல்லாததை சுட்டிக்காட்டுகிறேன், அவ்வளவே.
“அதனால் ஒரு முறை வாய்ப்பு வழங்கினால் தான் ராகுலின் ஆளுமை பற்றி முழுவதும் தெரியும்.”
யாசின் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன் எப்படி இருக்கு பாருங்க.
உங்கள் நிறுவனத்தில் முக்கியபொறுப்பில் உள்ளவர் உங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்கள் போட்டி நிறுவன விழாவில் கேவலமாக பேசுகிறார்.
ஒரு போட்டி நிறுவனம் அல்ல, இது போன்ற பல்வேறு நிறுவன முதலாளிகளுடன் பேசி, உங்கள் நிறுவனத்தை சிறுமை படுத்துகிறார்.
உங்க நிறுவனத்தை அழிக்க முயன்ற நபர்களுடன் கலகலப்பாக பேசி மகிழ்கிறார்.
அதோடு உங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களையிடையே தவறான கருத்துகளைப் புகுத்தி, அவர்களைக் குழப்பி அவர்களின் ஒற்றுமையைக் குலைத்து நிறுவனத்தையே சிக்கலுக்குள்ளாக்குகிறார்.
ஒரு முறை வாய்ப்பு கொடுத்து MD ஆக்கிப் பார்ப்போம் அப்போது தான் அவரது திறமை தெரியும் என்று நீங்கள் கூறுவீர்களா?
ராகுல் மிக மோசமான நபர் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது பாம்புக்கு பால் வார்ப்பது போன்றது.
இவர்கள் ஆட்சியில் இருக்கும் ஹிமாச்சல் பிரதேசம் திவால் நிலைக்கு சென்று கொண்டுள்ளது, கர்நாடகாவில் அனைத்து கட்டணங்களையும் ஏற்றி விட்டார்கள்.
இது போன்று கூற ஏராளம் உள்ளது. இவர்களால் ஒரு மாநிலத்தையே சிறப்பாக நடத்த முடியவில்லையே. அப்படி இருக்கையில் நாட்டை எப்படி கொடுப்பது சரியாகும் ?
ஏற்கனவே 60 வருடங்கள் ஆட்சி செய்து நாட்டை சீரழித்து, கடந்த 10 வருடங்களாகத்தான் வளர்ச்சி பாதையில் செல்கிறது.
இவர்கள் வந்தால் மீண்டும் பல காலம் பின்னோக்கி கொண்டு சென்று விடுவார்கள்.
இது என் தனிப்பட்ட கருத்து. மக்களின் எண்ணம் வேறாக இருக்கலாம்.. அதை தான் ஹரிஷிடம் கூறினேன்.
ஏனென்றால் மக்களுக்கு நாடு வளர்கிறதா என்பதை பற்றி கவலையில்லை, அவர்களுக்கு இலவசமாக என்ன கிடைக்கிறது? எல்லாமே குறைந்த விலையில் கிடைக்கிறதா? என்பதையே பார்ப்பார்கள்.
ஆனால், காங் இலவசமாக கொடுத்து பின்னர் அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசு போல உயர்த்தி வருகிறது.
மக்களுக்கு 1000 வருவது விருப்பமாக உள்ளது ஆனால், 5,000 தேவையற்று செலவாவது தெரியவில்லை.
காங் ஆட்சிக்கு வந்தால் இது தான் நடக்கும். ராகுல் வந்தால் கூடவே இந்தியாவின் மானமும் கப்பலேறும்.