Detachable Wallet பற்றிய விமர்சனம். Image Credit
Detachable Wallet
ஒவ்வொரு பொருளும் காலத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் பர்ஸ் உள்ளது.
பர்ஸ் என்று வழக்கமாகக் கூறப்படுவது இன்னொரு வகையில் Wallet என்று கூறப்படுகிறது. தயிரை Yoghurt என்று கூறுவது போல 🙂 .
ஒரே மாதிரி தயாரித்தால், மக்களுக்குச் சலிப்பாகி விடும். எனவே, மாற்றம் கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
மாற்றங்கள் வரும் போதே விற்பனையும் கூடுதல் ஆகும். அப்படிப்பட்ட மாற்றத்தில் வந்துள்ளதே Detachable Wallet.
RFID Protector
தற்போது கிரெடிட் கார்டுகள் WiFi என்ற RFID / NFC தொழில்நுட்பத்தில் வருகிறது.
அதாவது, PIN Enter செய்யாமல், POS Machine அருகே அட்டையைக் காண்பித்தால் பணத்தை எடுத்துக்கொள்ளும். (தேவையில்லையென்றால் Disable செய்யலாம்).
பணப்பரிவர்த்தனை முறையை இது எளிதாக்குகிறது ஆனால், இதில் ஆபத்தும் உள்ளது. அதாவது, அருகே POS Machine கொண்டு வந்து தெரியாமல் திருட முடியும்.
இது குறித்த காணொளிகளைச் சமூகத்தளங்களில் பார்த்து இருக்கலாம்.
இவ்வாறு திருட்டு போவதை தடுக்க RFID Protector என்ற வசதி இதில் உள்ளது. எனவே, POS Machine யை அருகே கொண்டு வந்து திருட முடியாது.
வேறு என்ன வசதிகள் உள்ளது?
- கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளச் சிறு பகுதியுள்ளது. தேவையில்லை என்றால் இதைக் கழட்டிக்கொள்ளலாம்.
- கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எடுக்க வேண்டும் என்றால், கீழே உள்ள Liver யை அழுத்தினால் கார்டுகள் மேலே வரும்.
- COINS வைத்துக்கொள்ளத் தனியிடம் (Zip வசதியுடன்).
- Wallet அளவில் COMPACT எனக் கூறுகிறார்கள் ஆனால், ரொம்ப COMPACT என்று கூற முடியாது.
- அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வசதிகள் உள்ளது.
யார் வாங்கலாம்?
ரொம்ப காலமாக ஒரே மாதிரியான Wallet பயன்படுத்துபவர்கள், மாற்றம் வேண்டும் என்பவர்கள், தேவைப்படுபவர்கள் வாங்கலாம்.
இதற்கு முன் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் பயன்படுத்திய பர்ஸை மாற்றியுள்ளேன்.
ஃபேஸ்புக்கில் விளம்பரம் பார்த்தேன் ஆனால், விலை அதிகமாக இருந்ததால், அமேசானில் தேடிப்பார்த்தேன், பாதி விலைக்கும் குறைவாக இருந்தது.
அமேசான் –> HIDE & SKIN Genuine Leather Wallet with Detachable Card Case
18 ம் பிறந்த நாளில் giriblog
இன்று giriblog 18 ஆண்டுகள் முடிந்து 19 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் நன்றி. பெரும்பான்மை கட்டுரைகளில் கருத்திட்டுத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் யாசினுக்கு சிறப்பு நன்றி 🙂 . இத்தளத்தை பலரிடையே கொண்டு சேர்க்கும் கூகுளுக்கு பெரிய நன்றி 🙏.
அனுபவங்கள் குறித்து தனிக்கட்டுரையாக எழுதும் விருப்பம் இல்லாததால், இத்தள WhatsApp Channel ல் கூறியுள்ளேன்.
படிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே 👇 சென்று பார்க்கலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
19_ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் giriblog தொடர்ந்து பல்லாண்டுகள் இதே போல் இயங்க நல்வாழ்த்துகள்!
Wallet குறித்த அறிமுகம் நன்று.
வாழ்த்துக்கள் கிரி. 17 வருடங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன். கருத்து வேறுபாடுகள் மனித தன்மைகளை மாற்றி விடக் கூடாது. உங்கள் தளத்தில் நிறைய விஷயங்கள் கற்றுள்ளேன்.மிக்க நன்றி.
Congrats on 18 years. You won’t believe, I check your blog every day but don’t comment often. Keep it going Giri 🙏
wallet குறித்த பதிவு நன்றாக இருந்தது.. + 2 ம் வகுப்பு வரை பர்ஸ் பயன்படுத்தியது கிடையாது..11 / 12 ம் வகுப்பு படிக்கும் போது, சில்லறை காசு பாக்கெட்டிலில் வைத்து இருப்பேன்.. 1999 இல் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்ததும் RUF & TUF முத்திரை பதித்த ஒரு பர்ஸ் வாங்கினேன்.. பல வருடங்கள் பயன்படுத்தினேன்.. பர்சில் காசு அதிகம் இல்லாத போதும் பின் பாக்கெட்டில் வைக்கும் போது ஒரு விதமான கெத் இருப்பது போல் தோன்றும்..
தற்போதும் பர்ஸ் பயன்படுத்த அதிகம் பிடிக்கும்.. குறிப்பிட்ட இடைவெளியில் தீடிரென்று ஒரு நாள் பர்ஸை எடுத்து அதில் தேவையில்லாமல் இருப்பவைகளை தூக்கி எறிந்து விட்டு, அவற்றை ஒழுங்காக சரி செய்து வைக்க பிடிக்கும்.. நீண்ட வருடங்களாக இந்த பழக்கம் ஏனக்கு உண்டு.. எந்த காகிதத்தையும் அவ்வளவு சீக்கிரம் தூக்கி ஏறிய மனசு வராது.
18 ஆண்டுகள் : ஒரு நெடிய பயணத்தில் உங்களுடன் நானும் தொடர்ந்து பயணித்து வருவது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. இணையத்தில் உங்கள் எழுத்துக்கள் வருகின்ற வரை, எதிர்காலத்திலும் நானும் தொடர்ந்து பயணிப்பேன் என நம்புகிறேன்..
நிறைய நண்பர்கள் உங்கள் தளத்தை பார்வையிட்டாலும், என்னை மட்டும் சில தருணங்களில் நீங்கள் நினைவு கூறுவது, ஒரு பெண்ணை அவளுக்கே தெரியாமல், அவளை அணு அணுவாக (மெல்லிய புன்னகை, தோழியுடன் ரசிகசியமாய் காதில் சிணுங்குவது,
இருவர்க்கும் மட்டும் தெரிந்த மொழியில் தோழியுடன் மட்டும் உரையாடுவது, இன்னும் பல பல) ரசிக்கும் போது உள்ளுக்குள் ஒரு வித சொல்ல முடியாத ஒரு இன்பம் தோன்றுவது போல தோன்றுகிறது.. இதழியல் ஒரு மணி பகுதி நேர வகுப்பில் ஒரு பெண்ணை ரசித்த சொந்த அனுபவம் உண்டு..
Congratulations dear brother.
@ராமலக்ஷ்மி நன்றி
@Fahim 16 / 15 வருடங்களாக இருக்க வாய்ப்பு. ஏனென்றால், 2008 ல் தான் Blog வந்தேன், அதற்கு முன் Yahoo 360 ல் எழுதிக்கொண்டு இருந்தேன்.
இது என் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
2008 ல் தான் blogspot என்ற ஒன்றே இருப்பது தெரிந்து இதில் தொடர்ந்தேன். பல காலமாக தொடர்வதற்கு மிக்க நன்றி.
@மனோஜ் Thank You 🙂
@தமிழ்நெஞ்சம் பாஸ் நீங்கெல்லாம் இன்னும் பார்த்துட்டு இருக்கீங்களா! அப்பப்ப வாங்க 🙂 .
@யாசின்
“தற்போதும் பர்ஸ் பயன்படுத்த அதிகம் பிடிக்கும்.”
எனக்கு பிடிக்கும் என்பதை விட, அத்தியாவசியமாக உள்ளது. அவசியமில்லையென்றால், பயன்படுத்த விருப்பமில்லை.
ஒரு Backup க்காக வைத்துள்ளேன், பெரும்பாலான வேலைகளை மொபைலிலேயே முடித்து விடுகிறேன்.
“குறிப்பிட்ட இடைவெளியில் தீடிரென்று ஒரு நாள் பர்ஸை எடுத்து அதில் தேவையில்லாமல் இருப்பவைகளை தூக்கி எறிந்து விட்டு, அவற்றை ஒழுங்காக சரி செய்து வைக்க பிடிக்கும்”
நான் இதை செய்வேன் 🙂
“இணையத்தில் உங்கள் எழுத்துக்கள் வருகின்ற வரை, எதிர்காலத்திலும் நானும் தொடர்ந்து பயணிப்பேன் என நம்புகிறேன்..”
நன்றி
“நிறைய நண்பர்கள் உங்கள் தளத்தை பார்வையிட்டாலும், என்னை மட்டும் சில தருணங்களில் நீங்கள் நினைவு கூறுவது”
ஒருத்தருக்கு ஊக்கம் என்பது கிடைக்கும் விமர்சனங்கள், பாராட்டுகள் தான்.
குறிப்பிட்ட கட்டுரைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரும்பாலான கட்டுரைகளுக்கு பதில் கூறுவது எளிதல்ல.
ஏதேனும் ஒரு கட்டத்தில் சலிப்பாகும் ஆனால், எப்படி தொடர்கிறீர்கள் என்பது புரியவில்லை!
எனக்கு Blog எழுதுவது Passion அதனால் எழுதுகிறேன் ஆனால், அதற்கு தொடர்ச்சியாக கருத்திடுவது என்பது எளிதான ஒன்றல்ல.
ஒருமுறை நண்பர் காயத்ரி நாகா இது போன்ற ஒரு தருணத்தில் கூறும் போது,
‘கிரி நாங்களும் தான் படிக்கிறோம் ஆனால், எங்களைக் கூற மாட்டேங்குறீங்களே’ என்று கேட்டு இருந்தார்.
அதற்கு, உங்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வு கொடுக்காமல் நீங்கள் நன்றாக வேலை செய்வதாக நான் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தேன் என்று மேலதிகாரி கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
எனக்கு விமர்சனங்கள் தான் சம்பளம் போன்று ஊக்கம் கொடுப்பவை. எனவே அவரைக் குறிப்பிடுகிறேன் என்று கூறி இருந்தேன்.
புரிந்து கொண்டார்.
எழுதப்படும் கட்டுரைகளை எனோ தானோ என்று எழுதுவதில்லை. என் முழுமையான உழைப்பை கொடுக்கிறேன். திருப்தியில்லாதவற்றை வெளியிடுவதில்லை.
எனவே, அப்படிப்பட்ட கட்டுரைகளுக்கு ஒருத்தர் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் போது எனக்கு அவரைப் பெருமைப்படுத்த எனக்கு இந்த வாய்ப்பு தான் ஒரே வழி.
எனவே தான் உங்களைக் குறிப்பிடுகிறேன்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பாராட்டி விட யாருக்கும் அவ்வளவு எளிதில் மனசு வராது யாசின். அது உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களுக்கு உள்ளது.
Fahim கூட நிறைய சண்டை போட்டு இருக்கேன், இனியும் போடுவேன் ஆனாலும், அவர் இத்தருணத்தில் வந்து குறிப்பிட்டு போகிறார்.
இவ்வாறு அனைவருக்கும் எட்டிப்பார்த்துக் கூற மனது வராது.
எனவே, இதைப் பற்றிக் கூறினால் ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவுக்கு உளவியல் காரணங்கள் உள்ளது 🙂 .
இந்த Blog மூலம் ஏராளமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன் என்றால் மிகையில்லை. எப்படி ஒருவரை கையாள்வது என்பதை இந்த Blog தான் எனக்கு கற்று கொடுத்தது.
Super Giri….Very nice and useful blog this is….congratulations on the anniversary and continue the good work….
@Payapulla Thank you 🙂