Paytm Postpaid பயன்படுத்துவது பயனுள்ளதா?

7
Paytm Postpaid

னைத்து நிறுவனங்களும் தாமதக்கட்டணம் (Pay Later) முறையை முன்னெடுத்து வருகின்றன. அது போன்ற சேவையில் Paytm Postpaid வசதி வருகிறது.

Paytm Postpaid

UPI மற்றும் இணையப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவற்கு Paytm வசதியான சேவை.

பணம் மற்றவர்களுக்கு அனுப்பவதற்கு PhonePe & Google Pay அதிகம் பயன்படுத்தினாலும், கடைகளில் UPI கட்டணம் செலுத்த பெரும்பாலும் Paytm தான் தேர்வு செய்கிறேன்.

காரணம், அதனுடைய எளிமை, வடிவமைப்பு (User Interface), கட்டணம் செலுத்தியதை கடைக்காரர்களுக்குத் தெளிவாகக் காட்ட முடியும்.

Paytm Postpaid என்பது கட்டணங்களை இதன் மூலம் செலுத்தி மாத இறுதியில் மொத்தமாகக் கட்டணத்தைச் செலுத்தி விடலாம். கிட்டத்தட்ட சிறிய வகைக் கடனட்டை வசதி போலக் கருதலாம்.

₹60,000 வரை பயன்படுத்தி இதில் மாதத்துக்கு ஒரு முறை மொத்தமாகச் செலுத்தலாம். அனுமதிக்கப்படும் தொகை நபருக்குநபர் மாறுபடும்.

இத்தொகை நபருக்கு நபர் CIBIL ஸ்கோர் பொறுத்து மாறுபடும்.

இதன் மூலம் நம் வங்கி கணக்கில் உள்ள தொகையைப் பயன்படுத்தாமல், Paytm வழியாகச் செலுத்துவதன் மூலம் நம் தொகை நம் வங்கிக்கணக்கிலேயே இருக்கும்.

UPI வசதி ஆனால், நம் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படமாட்டாது.

PIN கொடுக்கத்தேவையில்லை

மேற்கூறிய வசதிகள் கிட்டத்தட்ட பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வந்தாலும், இதில் குறிப்பிடத் தக்க வசதியாகக் கருதுவது PIN கொடுக்கத்தேவையில்லை என்பது.

எடுத்துக்காட்டுக்கு, பெட்ரோல் நிரப்பிய பிறகு UPI வழியாகப் பணம் செலுத்தும் போது UPI PIN தட்டச்சுச் செய்ய வேண்டும்.

இது சில நொடிகள் தாமதத்தை நமக்கு ஏற்படுத்தலாம்.

ஆனால், இதே Paytm Postpaid வழியாகச் செலுத்தினால் PIN கொடுக்கத்தேவையில்லை. Default Payment ஆக மாற்றினால் இன்னும் எளிது.

காரணம், இப்பணம் வங்கியிலிருந்து எடுக்கப்படாமல் Paytm கணக்கு வழியாகவே செலுத்தப்படுகிறது. விரைவான பணப்பரிவர்த்தனைக்கு உதவுகிறது.

UPI Payment க்கு வங்கி நெட்ஒர்க்கில் பிரச்சனை இருந்தால், பணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் ஆனால், Paytm Postpaid முறையில் அச்சிக்கல்கள் இல்லை.

இச்சேவை Paytm UPI அட்டை வைத்துள்ள இடங்களில் மட்டுமே செல்லுபடியாகும், PhonePe, Google Pay, Amazon Pay அட்டை வைத்துள்ள இடங்களில் Paytm Postpaid பயன்படுத்த முடியாது.

பல கடைகளில், உணவகங்களில் Paytm நிறுவன UPI அட்டை வைத்துள்ளதால், இம்முறை எளிதாக உள்ளது, விரைவாகப் பணத்தைச் செலுத்த முடிகிறது.

UPI க்கு மட்டுமல்லாது வாடகை, தொலைபேசி, மின்சாரம், எரிவாயு, Swiggy, Zomato உட்படப் பல்வேறு வகையான கட்டணங்களை இதன் மூலம் செலுத்த முடியும்.

இச்சேவையைக் கடந்த மூன்று மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன், பயனுள்ளதாக உள்ளது.

இதற்கு விண்ணப்பம் செய்தால், உங்கள் CIBIL Score ல் பட்டியலிடப்படும்.

தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் குறிப்பாகக் கடைகள், உணவகங்களில் UPI பயன்படுத்துபவர்கள்.

பிற்சேர்க்கை (January 2024)

Paytm அதிகபட்ச கடன் வழங்களில் கவனம் செலுத்துவதாகக் கூறி, Paytm Postpaid சேவையை முடக்கி வைத்துள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

UPI Payment confirmation Sound Box

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. UPI வழியாக paytm Postpaid உபயோகிக்கலாமா? இது நன்றாக இருக்கிறதே. நான் 1.5 வருடமாக paytm postpaid உபயோகிக்கிறேன். UPI க்கு PAYTM POSTPAID உபயோகிக்கலாம் என்பதை இப்போது தான் அறிகிறேன். கொஞ்சம் விளக்கமாக அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கூறமுடியுமா?

  2. கிரி. நான் முன்பு கூறியது போலவே இது போல சேவைகளை நான் இது வரை பயன்படுத்தியது இல்லை.. உங்கள் பதிவுகளில் படித்தவை தவிர வேறு தகவல்கள் எனக்கு தெரியாது.. ஊரில் இருந்த சமயத்தில் அவசரமாக ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டி இருந்த போது, சக்தியுடன் பேசிவிட்டு, மனைவியின் வங்கி கணக்கின் மூலம் இந்த சேவையை பயன்படுத்தி பணத்தை அனுப்பினேன்.. மிகவும் எளிமையாக தான் இருந்தது.. ஊருக்கு சென்ற பின் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. உங்கள் பதிவுகளும் உதவியாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @யாசின் பயன்படுத்துவது எளிது தான். ஒரு முறை எப்படி என்று தெரிந்து கொண்டால் எளிதாகப்பயன்படுத்தலாம்.

  4. நான் முன்னர் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டிங்க போல. எப்படி paytm postpaid default ஆக மாற்றுவது சொல்ல முடியுமா என தானே கேட்டிருந்தேன். சரி. நானே அதை கண்டுபிடித்து default payment mode ஆக postpaid ஐ வைத்துவிட்டேன். paytm Postpaid தான் இப்போது அனைத்துக்கும் உபயோகிக்கிறேன். கிரெடிட் கார்டை விட சுலபமாக உள்ளது. 30k Limit கொடுத்து உள்ளார்கள். பண்படுத்த மிக எளிமையாக இருக்கிறது. மிக்க நன்றி கிரி.

  5. @ஹரிஷ்

    “நான் முன்னர் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டிங்க போல. எப்படி paytm postpaid default ஆக மாற்றுவது சொல்ல முடியுமா என தானே கேட்டிருந்தேன்”

    இதை டெலிட் செய்ய என்ன காரணம் இருக்கப்போகிறது?!

    இத்தளத்தில் கருத்து மட்டுறுத்தல் (comment Moderation) இல்லை, நீங்கள் கருத்திட்டால் உடனே வெளியாகி விடும்.

    நான் நீக்கவில்லை, ஸ்பாம் க்கு சென்று விட்டது. தற்போதைய கருத்தைப் பார்த்து அதை வெளியிட்டேன்.

    “பண்படுத்த மிக எளிமையாக இருக்கிறது. மிக்க நன்றி கிரி.”

    உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதில் மகிழ்ச்சி 🙂 .

  6. ஆனால் paytm அல்லாத phonepe போன்ற UPI கடையில் இருந்தால் அப்போது paytm postpaid வழியாக பணம் செலுத்துகின்ற option வருவதில்லை. Paytm bar code இருந்தால் மட்டுமே paytm postpaid உபயோகமாக இருக்கிறது. பெரும்பாலான கடைகளில் பேடிஎம் இருந்தாலும் சில கடைகளில் phonepe gpay upi barcode தான் வைத்து உள்ளார்கள். அதனால் ஏமாற்றமாகிறது. எப்படி இருந்தாலும் இது ஒரு நல்ல சேவை.

  7. @ஹரிஷ்

    “ஆனால் paytm அல்லாத phonepe போன்ற UPI கடையில் இருந்தால் அப்போது paytm postpaid வழியாக பணம் செலுத்துகின்ற option வருவதில்லை. Paytm bar code இருந்தால் மட்டுமே paytm postpaid உபயோகமாக இருக்கிறது.”

    இச்சேவை Paytm UPI அட்டை வைத்துள்ள இடங்களில் மட்டுமே செல்லுபடியாகும், PhonePe, Google Pay, Amazon Pay அட்டை வைத்துள்ள இடங்களில் Paytm Postpaid பயன்படுத்த முடியாது.

    என்று கட்டுரையில் கூறியுள்ளேனே. நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள்.

    “பெரும்பாலான கடைகளில் பேடிஎம் இருந்தாலும் சில கடைகளில் phonepe gpay upi barcode தான் வைத்து உள்ளார்கள். அதனால் ஏமாற்றமாகிறது.”

    ஆமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!