அனைவருக்கும் பல்வேறு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட மாதத்தில் பணத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும். அதை எப்படித் திட்டமிடுவது என்று பார்ப்போம்.
இக்கட்டுரை நடுத்தர வருமானமுள்ள நபர்களை மனதில் வைத்து எழுதப்பட்டது.
செலவுகள்
இச்செலவுகளில் மாதம் செலுத்தும் EMI, SIP போன்றவற்றைத் தவிர்த்து விடலாம்.
வருடம் ஒரு முறை, காலாண்டு ஒரு முறைக் கட்டும் பள்ளிக்கட்டணம், மருத்துவக் காப்பீடு கட்டணம், வாகனக் காப்பீடு கட்டணம், Term காப்பீடு கட்டணம், LIC போன்றவை திட்டமிட வேண்டியவை. Image Credit
மேற்கூறியவற்றை வழக்கமாக எப்போது தோன்றுகிறதோ, மற்றவர் பரிந்துரைக்கிறார்களோ அல்லது தானாக வாய்ப்பு வரும் போதோ ஆரம்பிக்கிறோம்.
ஆனால், சில நேரங்களில் அனைத்துச் செலவுகளும் ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்த மாதத்தில் வந்து விடும்.
இதனால், கடன் வாங்க வேண்டிய நிலையோ, நண்பர்களிடம் கேட்க வேண்டிய நிலையோ வரும்.
பெரிய செலவுகள்
இதைத்தவிர்க்க, பெரிய செலவுகள் (பள்ளிக்கட்டணம்) இல்லாத மாதத்தில் காப்பீடு போன்ற வருடாவருடம் அதிகக் கட்டணம் செலுத்தித் துவங்குவதைத் திட்டமிடலாம்.
இதனால், ஒரே நேரத்தில் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். ஒருமுறை துவங்கி விட்டால், தேதியை மாற்ற முடியாது.
காலாண்டு பள்ளிக்கட்டணத்தை செலுத்தும் மாதத்திலேயே ஒரு காப்பீட்டைத் துவங்கினால், அடுத்த வருடம் இரு பெரிய செலவுகள் ஒரே நேரத்தில் வரும்.
திட்டமிட்டு கொஞ்சம் தள்ளித் துவங்கினால் நெருக்கடி குறையும். சுருக்கமாக, ஆரம்பிக்கும் தேதி / மாதம் முக்கியம்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் Billing தேதி எப்போது முடிகிறது என்று பார்த்து, அதற்கு அடுத்த நாள் கட்டணம் செலுத்தினால் ஒரு மாதம் தள்ளி வைக்கலாம்.
திட்டமிடுதல்
பல செலவுகளைத் திட்டமிடாமல் செய்வதாலே நமக்குச் சுமையாகி விடுகிறது.
எப்படி மற்றவர்கள் செலவுகளைச் சமாளிக்கிறார்கள்?! ஆனால், நம்மால் சமாளிக்க முடியவில்லையே என்பதற்குத் திட்டமிடாமல் செலவு செய்வதே காரணம்.
அதிகப் பணம் சம்பாதித்தாலும் திட்டமிட்டுச் செலவழிக்கவில்லையென்றால் மாத இறுதியில் கையைக் கடிப்பதும், பணத்தைச் செலுத்தத் திணறுவதும் நடக்கும்.
எனவே, கொஞ்சம் யோசனை, திட்டமிடல் நெருக்கடியைப் பெருமளவில் குறைக்கும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. தனிப்பட்ட முறையில் இந்த திட்டமிடல் என்பது எனக்கு மிகவும் கடினமானது.. நானும் பல முறை முயன்று சில முறை வெற்றியும், பல முறை தோல்வியும் கண்டு இருக்கிறேன்.. நாம் திட்டமிட்டாலும் அதை நிறைவேற்ற நம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.. அப்போது தான் திட்டமிட்டதை சரியாக நிறைவேற்ற முடியும்..
இந்த விஷியத்தில் சக்தியிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.. சமயத்தில் கற்றும் வருகிறேன்.. என்னை போல் சக்தி சம்பாரிக்க விடினும் என்னை விட, பல மடங்கு திட்டமிட்டு கட்சிதமாக பல காரியங்களை சிறப்பாக செய்து வருகிறார்..இதில் நான் அவர் பக்கத்தில் கூட நிற்க முடியாது.. உறவுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்..
ஒரு சிறிய வருமானத்தில் காது குத்து, திருமணம், இறப்பு, காரியம், வீட்டு விஷேஷம், பண்டிகை, திருவிழா, இன்னும் பல நிகழ்வுகளில் தன் பங்களிப்பை முறையாக திட்டமிட்டு (தந்தை தவறியதால், அந்த ஸ்னத்தில்) எல்லாவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.. இங்கு திட்டமிடல் என்பது மிக மிக அவசியம்.. அவருடைய இடத்தில் என்னை பொருத்தி பார்க்கவே இயலாது.. இந்த நிகழ்வுகள் எப்போதும் மேலும் மேலும் சக்தியிடம் ஆச்சரியப்படுத்த வைக்கும்..
சமயத்தில் சக்தியிடம் பேசும் போது 2005 காலகட்டத்தில் கோவையில் 2000 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு, நிறுவன இலவச தங்குமிடத்தை விட்டு விட்டு, சொந்தமாக தனி அறை வாடகைக்கு எடுத்து, நிறுவனத்தில் இலவச கேண்டீன் சாப்பாட்டை சில நேரம் மட்டும் சாப்பிட்டு விட்டு, பல நேரம் ஆனந்த பவன், கஸ்தூரி பவனில் உணவை உண்டு விட்டு, எல்லா வாரமும் புதிய படம், இடையில் பழைய படத்துக்கு படத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து, தான் கெட்டதும் இல்லாமல் என்னையும் சேர்த்து கெடுத்த ஒரே இனிய நண்பர் சக்தி மட்டுமே ..
இதற்கு இடையில் இன்ப சுற்றுலா வேறு.. ஊட்டி, பவானி, மேட்டு பாளையம், தென் திருப்பதி, கோவை, புளியம்பட்டி இன்னும் பல இடங்கள்.. மொத்த செலவில் நான் 10% கூட செய்து இருக்க மாட்டேன். 2005 கால கட்டத்திலே 2000 ரூபாயில் எத்தனை அற்புதமான திட்டங்கள்… சக்தியின் நட்பு கிடைத்தது என் வாழ்நாள் பாக்கியம்.. 19 வருடங்களை கடந்து இது தொடர்வது இன்னும் சிறப்பு..
@யாசின்
“தனிப்பட்ட முறையில் இந்த திட்டமிடல் என்பது எனக்கு மிகவும் கடினமானது”
நான் சரியாக திட்டமிட்டு செயல்படுத்துகிறேன்.
“நாம் திட்டமிட்டாலும் அதை நிறைவேற்ற நம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.. அப்போது தான் திட்டமிட்டதை சரியாக நிறைவேற்ற முடியும்..”
உண்மை.
சக்தியிடம் பேசும் போது அவரது பொறுப்புணர்வு தெரியும்.
அவர் திட்டமிட்டு செலவு செய்வதோடு, தேவையற்ற செலவுகளை தவிர்க்கிறார். எனவே தான் அவரால் அனைத்தையம் சமாளிக்க முடிகிறது.
சிலருக்கு அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, எதிர்கொண்ட பிரச்சனைகள் காரணமாக இயல்பாகவே திட்டமிடல் வந்து விடுகிறது.