பெரிய நிறுவனங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் Brand கிரெடிட் கார்டை வெளியிடுவார்கள். அப்படியான ஒன்றே AXIS Airtel Credit Card.
AXIS Airtel Credit Card
ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இக்கார்டை வெளியிட்டது. மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்றாலும், ஒப்பீட்டளவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பலன். Image Credit
DTH, Mobile Recharge, Postpaid, Broadband கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம்.
என்னென்ன சலுகைகள் உள்ளன?
வழக்கமாக எல்லாம் கார்டுகளும் கொடுக்கும் Fuel charge waiver 1% Cashback, Airport Lounge Access போன்றவற்றைத் தவிர்த்து நேரடியாகச் செல்லலாம்.
Type of Transaction | Cashback Percentage | Capped at |
Bill payment for Airtel Mobile, Broadband, WiFi and DTH | 25% | ₹250 per month |
Utility bill payments such as electricity, water, gas | 10% | ₹250 per month |
Across preferred merchants- Zomato, Swiggy and BigBasket | 10% | ₹500 |
Other spend* (With restrictions) | 1% | No limit |
எப்படிப் பயன்படுத்தலாம்?
முன்பு ₹300 (Cap) இருந்தது ஆனால், தற்போது Devaluation செய்து ₹250 க்கு கொண்டு வந்து விட்டார்கள். இது அனைத்து நிறுவனங்களிலும் நடக்கும் வழக்கமான மாற்றம்.
ஏர்டெல் DTH, Postpaid ஆகியவை இருந்தாலே மாதம் ₹250 வந்து விடும், மின்சாரக்கட்டணம் செலுத்தினால் அதிலொரு ₹250 வந்து விடும்.
இதுவே ஒரே மாதத்திலேயே ஆண்டுக்கட்டணத்தை எடுத்து விடலாம்.
Swiggy, Zomato, Bigbasket பயன்படுத்துபவர் என்றால், ₹500 வரை பெறலாம்.
எனவே, என் பரிந்துரை, ஏர்டெல் பயன்படுத்துவதோடு Swiggy, Zomato பயன்படுத்துபவர்கள் என்றால் உறுதியாக வாங்கலாம்.
Cashback
இணைப்புக் கட்டணம் ₹500, ஆண்டுக்கட்டணம் ₹500.
முதல் பரிவர்த்தனைக்கு அமேசான் Gift Voucher ₹500 க்கு கிடைக்கும்.
இந்த Gift Voucher ₹500 மற்றும் முதல் மாதக் கட்டணத்தில் ₹500 Cashback என்று செலுத்திய கட்டணத்தை உடனே எடுத்து விடலாம்.
எனவே, இக்கடனட்டை வாங்குவதால் நட்டம் வர 100% வாய்ப்பில்லை. அப்படி வந்தால், அது கடனட்டையைப் பயன்படுத்தத் தெரியாததால் மட்டுமே நடக்கும்.
ஒரு மாதத்தில் ₹1000 வரை Cashback பெற முடியும்.
முக்கியக் குறிப்பு : ஏர்டெல், Gas மற்றும் மின்சாரக் கட்டணங்களை Airtel Thanks App ல் செலுத்தினால் மட்டுமே Cashback கிடைக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியானவராக இருந்தால், Airtel Thanks App ல் சென்று Credit Card ல் பார்த்தால் இருக்கும், அதிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
ஆனால், எனக்கு இதில் பல மாதங்களாக காட்டவில்லை. AXIS செயலி வழியாக விண்ணப்பித்தேன்.
ஏற்கனவே, AXIS ACE கடனட்டை வைத்து இருந்ததால், வேறு எதுவுமே கேட்காமல் இரு க்ளிக்கில் முடிந்து, நான்கு நாட்களில் கடனட்டையே வந்து விட்டது.
தேவைப்படுகிறவர்கள், மேற்கூறிய முறையில் முயற்சிக்கலாம்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
முன்பு ₹500 (Cap) இருந்தது ஆனால், தற்போது Devaluation செய்து ₹250 க்கு கொண்டு வந்து விட்டார்கள். இது அனைத்து நிறுவனங்களிலும் நடக்கும் வழக்கமான மாற்றம்.
@கிரி தவறான தகவல். முன்பு ₹299 (cap) தான் இருந்தது. இப்போது அதை 250 ஆக குறைத்து விட்டார்கள். இந்த கார்டு நான் அறிமுகப்படுத்திய அடுத்த நாளே apply செய்து வாங்கிவிட்டேன். ஒரு category payment
க்கு ₹299 தான் அதிகபட்ச cashback வரம்பு இருந்தது. ₹500 ரூபாயாக ஏர்டெல் axis வங்கி தரவில்லை. இப்போது ₹250 airtel recharge கட்டணம் cashback. gas போன்ற utility க்கு ₹250 கட்டணம் அவ்ளோ தான். நான் இப்போது மாதா மாதம் 500 cashback பெறுகிறேன்.
கடனட்டையை பற்றி நீங்கள் ஒவ்வொரு முறை பதிவு எழுதும் போது என்னுடைய பள்ளி பருவம் (12 ம் வகுப்பு) நிச்சயம் நினைவுக்கு வராமல் போகாது.. காரணம் முதன் முதலில் பற்றுஅட்டை / கடனட்டையை பற்றிய வகுப்பை அன்று தான் திரு.முத்துமாணிக்கம் ஆசிரியர் எடுத்தார்.
இதை பற்றி அவர் விளக்கமாக கூற, அவர் சில கேள்வி கேட்கும் போது (ஒட்டு மொத்த வகுப்பே அமைதியாக இருந்த நேரத்தில்) அதிக ஆர்வத்தில் நான் செய்திகளில் படித்த தரவுகளை வைத்து வகுப்பறையில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது ஒட்டு மொத்த வகுப்பு மாணவர்களும் வியந்து போனார்கள்..
அதுவரை பள்ளியில் ஏதோ ஒரு மூலையில் வந்தோமா / போனோமா இருந்த எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.. குறிப்பாக மாணவிகளின் மத்தியிலும் ஒரு ஹீரோவாகி போனேன்.. அவர் வகுப்பெடுக்கும் அழகே தனி.. ஒரு period 45 நிமிடம் என்றால் வருவதும், போவதும் நேரம் சரியாக இருக்கும்.. தேவையற்ற பேச்சுக்கள் வகுப்பில் இருக்காது..
மொத்தத்தில் அவர் வகுப்பு என்றால் எனக்கு அலாதி விருப்பம்.. அதனால் +2 வில் நான் பிடிக்காமல் சேர்ந்த (Accounts குரூப்பில்) அவர் பாடம் எடுத்த வங்கியல் பாடத்தில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். எப்போதெலாம் நீங்கள் கடனட்டை குறித்து எழுதும் போதெல்லாம் இந்த நினைவுகள் நிச்சயம் வந்து போகும்..
அது போல இங்கு ஒரு வங்கியின் முகவர் (தமிழ்நாட்டை சேர்ந்தவர்) எங்கள் நிறுவனத்தில் எல்லோரிடமும் பேசி ஒரு இரண்டு / மூன்று மாதங்களில் கடனட்டை வாங்க வைத்து விட்டார்.. வாங்காத ஒரே ஆள் நான் மற்றும் சிலர் (அவர்கள் வேறு அட்டை வைத்து இருந்தார்கள்). இத்தனைக்கும் 10 வருடங்களுக்கு முன்பு கடனட்டை வாங்குவதற்கு கொஞ்சம் கெடுபிடி.. ஒரு கட்டத்தில் என்னை பின்தொடர ஆரம்பித்தார்.. அடிக்கடி அலைப்பேசியில் அழைப்பதுண்டு.. நிறுவனத்துக்கு நேராகவும் வருவதுண்டு..
ஆரம்பத்தில் நானும் எனக்கு வேண்டும் என்றால் நானே அழைக்கிறேன் என்று அவரை தவிர்க்க ஆரம்பித்தேன்.. சில சமயம் அவர் அழைப்புகளையும் எடுக்காமல் இருந்தேன்.. இப்படியே நாட்கள் செல்ல செல்ல, சில சமயம் தமிழ் நண்பராக இருப்பதால் நானும் கடிந்து கொள்ளாமல் பாலிஷா பேசுவேன்.. ஒரு கட்டத்தில் இவர் தொல்லை தாங்காமல் போனது, அந்த சமயத்தில் அவர் என்னை தேடி நிறுவனத்துக்கு வந்துள்ளார்.. நான் தேனீர் அருந்த நண்பனுடன் சென்றிருந்தேன். அப்போது இவர் நினைவு வர நண்பனிடம் எதார்த்தமாக இவரை பற்றி கடும் வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தேன்..
அப்போது நிறுவன ஓட்டுனருடன் இவர் வந்து சார் வணக்கம்.. எப்படி இருக்கீங்க? என்றார். அப்போது தான் நான் அவரை திட்டி கொண்டு இருந்தேன்.. நிறுவன ஓட்டுநர் சார்.. இவர் உங்களை தேடி கொண்டிருந்தார் அதான் கையோடு கூட்டி கொண்டு வந்தேன் என்றார்.. எனக்கு மிகவும் சங்கடமான போனது..
ஆனால் அவர் சார்? (எதுவும் நடக்காது போல) எப்ப கடனட்டை அப்ப்ளிகேஷனில் கையெழுத்து போட போறீங்க ?? என்றதும் நாடோடிகள் சசிகுமார் (உங்க நேர்மை பிடிச்சி இருக்குது) தான் நினைவுக்கு வந்தது.. அதன் பின்பு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.. நானும் இன்று வரை கடனட்டை விண்ணப்பத்தில் கையொப்பம் இடவே இல்லை..
@ஹரிஷ் தகவலுக்கு நன்றி
@யாசின்
“அதனால் +2 வில் நான் பிடிக்காமல் சேர்ந்த (Accounts குரூப்பில்)”
நானும் இதே குரூப் தான் 🙂 ஆனால், நானாக சேர்ந்தேன். இதில் மட்டுமே கணக்கு இல்லையென்று.
“சார்? (எதுவும் நடக்காது போல) எப்ப கடனட்டை அப்ப்ளிகேஷனில் கையெழுத்து போட போறீங்க ?? என்றதும் நாடோடிகள் சசிகுமார் (உங்க நேர்மை பிடிச்சி இருக்குது) தான் நினைவுக்கு வந்தது.”
🙂 🙂 LIC முகவர்களும் இதே போல விட மாட்டார்கள்.