இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துத் திமுக கூட்டணியில் கமல் இணைந்ததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக மாற்றாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Image Credit
கமல்
ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறிய பிறகு அதுவரை அரசியலில் ஆர்வமில்லை என்று கூறிக்கொண்டு இருந்த கமல், திடீரென்று கட்சியைத்துவங்கினார்.
ஆனால், கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறிக்கொண்டு இருந்த ரஜினி தனது உடல்நிலை மற்றும் கோவிட் பிரச்சனை காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
காரணம், ரஜினியும் அரசியலும் 90 களிலிருந்து பிரிக்க முடியாததாக இருந்தது. எனவே, நிச்சயம் கட்சி ஆரம்பிப்பார் என்று இருந்த நிலையில் ஆரம்பிக்கவில்லை என்று உறுதியாக அறிவித்து விட்டார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக கூறியதால் கமல் கட்சி ஆரம்பித்ததாக விமர்சனங்கள் எழுந்தன, இருப்பினும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மய்யத்தை துவங்குவதாக கூறினார்.
டீ கேன்சல் என்று ரஜினி கூறி விட்டுப் பட வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.
மய்யத்தின் கட்டமைப்பு
கமல் கட்சிக்கு அமைப்பு ரீதியாக பலமில்லை என்றாலும், கமலின் முகத்துக்காக, திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் கமலுக்கு வாக்களித்தனர்.
எனக்குத் தெரிந்து பல ரஜினி ரசிகர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூடக் கமலுக்கு வாக்களித்து இருந்தனர்.
திமுக B Team என்று கமல் விமர்சிக்கப்பட்டாலும் (ஓட்டுகளைப் பிரித்ததால்), திமுக கூட்டணியில் இணையாததால் விமர்சனங்கள் இருந்தாலும் மய்யத்துக்கு மதிப்பு இருந்தது.
இடையில் பலர் கட்சி மாறினாலும், கமல் என்ற நபருக்காக அவர் கட்சி மீது மதிப்பு வைத்து இருந்தவர்கள் ஆதரவாக தொடர்ந்தனர் ஆனால், திமுக கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாக மாறிய பிறகு வாக்களித்த பலரும் கோபத்தில் உள்ளனர்.
கோபத்துக்கு காரணம், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதால்.
கமலின் திராவிட கூட்டணி முடிவு
கமல் இது போல ஒரு முடிவை எடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்தது தான் என்றாலும், 2024 ல் நடக்கும் என்று எதிர்பார்த்தது முன்னரே நடந்து விட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 | முடிவுக்குப் பின் கட்டுரையில் கமல் இரு முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். எடுக்கவில்லையென்றால், இதே தான் தொடரும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
கமல் திமுக ஆதரவு நிலையை எடுத்து விட்டார். இதற்கு உதயநிதியின் பட ஆதரவுகள் போன்ற வேறு காரணங்களும் இருக்கக்கூடும்.
MP பதவிக்காக இணைந்து விட்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘ஏன் இருக்கக் கூடாது?‘ என்று கேட்டு உண்மை காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டார்.
MP பதவிக்காகவும், பட வியாபாரத்துக்காகவும் கட்சியைத் திமுக கூட்டணியிடம் அடகு வைத்து விட்டார்.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை – அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
என்று ட்விட்டரில் எம்ஜிஆரின் பாடலை முன்னர் கமல் குறிப்பிட்டு இருந்தார் ஆனால், தற்போது அவர் கூறியதுக்கு அவரே எடுத்துக்காட்டாகி விட்டார்.
ஒருவேளை தற்போது தான் முழுமையான அரசியல்வாதியாகி இருக்கிறாரோ! 🙂 .
ரஜினி
ரஜினியின் ரசிகனான எனக்கு மற்ற எதிலும் எதிர்பார்ப்பு இல்லையாததால் ஏமாற்றமில்லை ஆனால், உண்மையாகவே ரஜினி வந்தால் மாற்றமிருக்கும் என்று உறுதியாக நம்பினேன்.
ஆனால், நடக்கவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
சுயமுன்னேற்ற புத்தகங்களில் அல்லது அது தொடர்பான புத்தகங்களில் No சொல்வது பற்றி ஒரு புத்தகம் உள்ளது.
அதாவது, நம்மால் முடியாத, சமாளிக்க முடியாத நிலை வரும் என்றால், No சொல்லிப்பழக வேண்டும் என்பது.
பலருக்கு பல விஷயங்களில் No சொல்லத்தெரியாது. எனவே, செய்கிறேன் என்று கூறி அவர்களை அவர்களே வருத்திக்கொள்வார்கள், பின்னர் புலம்புவார்கள்.
முடியாத ஒன்றை ஒப்புக்கொண்டு இவர்களே சிக்கலில் வாழ்வார்கள்.
ஆனால், No கூறினால், எவ்வளவு பெரிய விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் ரஜினி தைரியமாக No சொல்லி விட்டார்.
ரஜினி முடிவால் பலர் நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
ரஜினி எதிர்ப்பாளர்கள்
இதன் பிறகு 2021, 2022 கால மாற்றம் இதை மெதுவாக மறக்க வைத்தாலும், அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதாலே அதிகமான எதிரிகள் இன்னமும் ரஜினியை அனைத்துக்கும் எதிர்த்துக்கொண்டு தான் உள்ளனர்.
சமீபத்தில் சிகரெட், சரக்கு, அசைவம் ஒரே நேரத்தில் அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்று கூறியதை, ரஜினி அசைவத்துக்கு எதிராக பேசினார் என்று பலர் அவர் பேசியதை கூட என்னவென்று பார்க்காமல் கொந்தளித்து வருகின்றனர்.
தலைவர் அரசியலுக்கு வரப்போவதாக கூறிய போது இது போன்ற சர்ச்சைகள் வந்தால், கடுப்பாக இருக்கும் ஆனால், தற்போது எந்தக்கவலையும் இல்லை 🙂 .
எவனோ எதையோ உளறிட்டுப் போறான் இதனால் நமக்கு என்ன?! என்று எந்தப் பதட்டமும் இல்லாமல் இருப்பது சுகமானதாக உள்ளது 🙂 .
அரசியலுக்கு வந்தாலும் சரி வரலைனாலும் சரி ரஜினியை எப்போதுமே Talk Of The Town ல் வைத்து இருக்க கடுமையாக உழைப்பது அவரது ஹேட்டர்கள் தான்.
வலது சாரி எண்ணங்கள்
நான் வலது சாரி / பாஜக ஆதரவாளன்.
ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்து இருந்தாலும், அவரது காலத்துக்குப் பிறகு கட்சி எப்படிப்போகும் என்று தெரியாது. அதற்கு சரியான நபராக அண்ணாமலையை தேர்வு செய்து வைத்து இருந்தார்.
ரஜினி கட்சி என்பது ரஜினிக்காக மட்டுமே!
எனவே, அவர் காலத்துக்குப் பிறகு வாக்களித்தவர்கள் தொடர்வது நிச்சயமில்லை. கட்சி தொடரும் என்பதற்கு உத்தரவாதமுமில்லை.
தற்போது அதே அண்ணாமலை பாஜகவில் இருப்பது இரண்டும் ஒன்று தானே! எனவே, நடந்தவை, நடப்பவை, நடக்கபோகிறவை அனைத்தும் நன்மைக்கே!
அண்ணாமலை
ஆக மொத்தத்தில் தலைவர் அரசியலுக்கு வரவில்லையென்றாலும், அவரை எந்த அளவுக்கு அரசியலில் நேர்மையாக இருப்பார் என்று எதிர்பார்த்தேனோ அதே அளவு அண்ணாமலை மீதும் நம்பிக்கையுள்ளது.
எனவே, தலைவர் வரவில்லையே என்ற ஏமாற்றம் இருந்தாலும், அதை ஈடு செய்யும் அளவுக்கு அண்ணாமலை வந்ததில் மகிழ்ச்சியே.
தமிழ்நாடு முன்னேற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும், இந்துமதம் மதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனவே, யார் மூலமாக நடந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
ஆக மொத்தத்தில் ரஜினியை வைத்து நினைத்தது நடக்கவில்லையென்றாலும், தமிழக அரசியலில் நான் எதிர்பார்ப்பது நடந்து வருவது மகிழ்ச்சியே! 🙂 .
தொடர்புடைய கட்டுரை
ரஜினியை விமர்சிக்கும் பாஜக ஆதரவாளர்கள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கமல் கட்சி ஆரம்பித்துத் தேர்தல்களில் (2019, 2021) நின்றதே 100% திமுக ஏற்பாட்டில் தான் இதில் சந்தேகமில்லை. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அதிமுகவிற்கு செல்லாமல் தடுத்து ஓட்டை பிரித்து திமுக வெற்றி பெறச்செய்த நரித்தந்திரம் தான் இது.
அதிமட்டுமல்லாமல் ஜெயலலிதா மீது கமலுக்கு இருந்த வன்மமும் இந்த டீலிங்கிற்கு கமல் ஒப்புக்கொள்ள ஒரு காரணம். கமல் என்ற நம்பிக்கை துரோகியை தமிழக மக்கள் எங்கு அவர் நின்றாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
கேவலம் MP பதவிக்காகவும் தன்னுடைய சினிமா வியாபாரத்திற்காகவும் திமுகவிடம் சரணடைந்த கமல் ஒரு அயோக்கியர். இவரை எல்லாம் நம்பி ஓட்டளித்த தமிழக மக்களை என்னவென்று சொல்வது? திமுகவிற்கு ஓட்டளித்து தமி்ழக மக்கள் படும்பாடு தற்போது சொல்லி மாளாது.
அந்த கோபத்தை காட்ட இன்னும் 3 வருடங்கள் பொறுக்க வேண்டும். தேவையா இந்த கஷ்டங்கள்? அதிமுக ஆட்சியே இருந்து இருக்கலாம். மிகவும் தவறான முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள். தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டார்கள்.
இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த திமுகவை மக்கள் நம்புவார்கள்? எவ்வளவு ஏமாறினாலும் மீண்டும் மீண்டும் மறந்து ஓட்டு போடுகிறார்களே இது எப்படி?
அதிமுக அப்படி என்ன கெடுதல் செய்தது? நல்லாட்சி கொடுத்த அதிமுகவை மக்கள் தூக்கி எறிந்த பாவத்தை தான் இப்போது நன்கு அனுபவிக்கிறார்கள். அம்மா உணவகத்தில் வயிறார உண்டு அதற்கு நன்றியுணர்வை காட்ட தவறிவிட்டார்கள்.
திமுகவிற்கு ஓட்டு போட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் என்று இலவச மாயைக்கு மயங்கி வீழ்ந்துவிட்டார்கள். திமுக 1000 ரூபாய் தர சாத்தியமில்லை என்று கூறிவிட்டது.
ஆட்சி முடியும் தருவாயில் சிலமாதம் தருவார்கள். இதனால் அடுத்து வரும் ஆட்சியாளருக்கு நிதிச்சுமை அதிகரித்து பின்னர் இதை வைத்தே எதிர்கட்சியாக அரசியல் செய்வார்கள்.
திமுக போல வில்லங்கமாக யோசித்து அரசியல் செய்ய இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
ஆட்சியை விட்டு போகும் போது கடும் கடனில் வைத்து விட்டு கஜானாவை கொள்ளையடித்து காலி செய்துவிட்டு நறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஆட்சி முடியும் தருவாயில் செயல்படுத்தி அடுத்து வரும் ஆட்சியாளார்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்தி அதை தொடரவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் அவர்களை திண்டாட வைத்து மக்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் செய்யமுடியாதபடி செய்து விட்டு தான் போவார்கள்.
அப்போது தான் அடுத்த 5 வருடம் இதை வைத்து அரசியல் செய்து மீண்டும் மக்களை முட்டாளாக்கி ஆளும் கட்சியாக வரமுடியம். இந்த மாதிரி கிரிமினலாக யோசித்து அரசியல் செய்ய திமுகவால் மட்டுமே முடியும்.
ஆட்சியை விட்டு போகும் போது அடுத்த 5 வருடம் கழித்து ஆட்சிக்கு வரும் வழியை தயார் செய்துவிட்டு தான் போவார்கள். புதிய கட்சி ஆட்சி செய்ய நிதி இல்லாமல் செய்து விடுவார்கள்.
இவர்கள் விஷச்செடி. இவர்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். 2021 தேர்தலில் திமுக தோற்றிருந்தால் கட்சி ஆட்டம் கண்டு கலைந்து கரைந்து போயிருக்கும். மக்கள் இந்த விஷச்செடிக்கு மீண்டும் உயிர் கொடுத்து பெரும் தவறு செய்துவிட்டார்கள்.
தமிழக முட்டாள் மக்கள் இருக்கும்வரை திமுகவிற்கு அழிவே கிடையாது.
இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துத் திமுக கூட்டணியில் கமல் இணைந்ததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக மாற்றாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது –
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!! கவுண்டமணி சாரின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.. மற்ற படி கூற எதுவும் இல்லை..
@ஹரி
“இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த திமுகவை மக்கள் நம்புவார்கள்? எவ்வளவு ஏமாறினாலும் மீண்டும் மீண்டும் மறந்து ஓட்டு போடுகிறார்களே இது எப்படி?”
அது அப்படித்தான்.. மாறும் ஆனால், காலம் எடுக்கும்.
“அதிமுக அப்படி என்ன கெடுதல் செய்தது? ”
ஒரு கட்சி 10 வருடம் ஆட்சி செய்து விட்டது, பெரியளவில் ஊழல் இல்லையென்றாலும், வளர்ச்சியும் ஓரளவு தான் இருந்தது. எனவே, மாற்றம் வேண்டி வாக்களித்து விட்டார்கள்.
இருப்பினும் வித்யாசம் 3% என்பது குறிப்பிடத்தக்கது.
“திமுகவிற்கு ஓட்டு போட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் என்று இலவச மாயைக்கு மயங்கி வீழ்ந்துவிட்டார்கள்.”
அதிமுக வும் இதே போல அறிவித்தது. 1500 என்று நினைக்கிறன்.
“ஆட்சியை விட்டு போகும் போது கடும் கடனில் வைத்து விட்டு கஜானாவை கொள்ளையடித்து காலி செய்துவிட்டு நறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஆட்சி முடியும் தருவாயில் செயல்படுத்தி அடுத்து வரும் ஆட்சியாளார்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்தி அதை தொடரவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் அவர்களை திண்டாட வைத்து மக்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் செய்யமுடியாதபடி செய்து விட்டு தான் போவார்கள்.”
மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்றுக்கொள்கிறேன். இது தான் நடக்கும். நான் நினைத்து இருந்ததை அப்படியே கூறியுள்ளீர்கள்.
பொங்கலுக்கு இவர்கள் கூறிய வருடத்துக்கு ஒரு முறை கொடுக்கும் 5000 ருபாய் தர முடியாமல் 1000 கொடுத்தார்கள். இதில் மாதம் 1000 எங்கே இருந்து கொடுப்பார்கள்.
பழைய பென்ஷன் திட்டம் உட்பட பல திட்டங்களைச் செயல்படுத்தி விடுவார்கள்.
4 வருடங்களுக்கு பிறகு அல்லது ஆட்சி முடிய சில மாதங்கள் இருக்கும் போது இதைச் செயல்படுத்துவார்கள்.
@யாசின்
“அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!! கவுண்டமணி சாரின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.. மற்ற படி கூற எதுவும் இல்லை..”
🙂 .