தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 | முடிவுக்குப் பின்

9
ஸ்டாலின் திமுக

ட்டமன்றத்தேர்தல் 2021 தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்றத்தேர்தல் 2021

மேற்கு வங்க தேர்தல் காரணமாக, தமிழகத் தேர்தல் முடிவுகள் ஒரு மாதம் தள்ளிச்சென்றது. Image Credit

வழக்கம் போல EVM சாதனங்களை ஹேக் செய்கிறார்கள் என்று சர்ச்சை எழுந்து, டிவி டிஷ் ஆண்டனாவை கூடக் கழட்ட வைத்து அட்டகாசம் செய்து விட்டார்கள்.

இன்னும் எத்தனை காலங்களுக்குத் தான் இதையே கூறிக்கொண்டு இருப்பார்களோ!

திமுக வெற்றி பெற்றதில் விருப்பம் இல்லையென்றாலும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்.

திமுக

எதிர்பார்த்தது போலத் திமுக வெற்றி ஆனால், கட்சிக்காரர்கள் எதிர்பார்த்தது போல 190 – 200 தொகுதிகள் என்று இல்லாமல், 159 தொகுதிகளைப் பெற்றுள்ளது.

திமுக வெற்றி பெற்றதுக்குப் பிகே ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியக்காரணம் ஸ்டாலினின் கடுமையான உழைப்பு.

பரப்புரையில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டார்.

ஸ்டாலின் மீது மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், இவர் உழைப்பை யாராலும் மறுக்க முடியாது, எளிதாக வந்த வெற்றியல்ல.

வாழ்வா சாவா போராட்டத்தில் கொஞ்சமும் சோர்வடையாமல், விமர்சனங்களைப் புறந்தள்ளி கடுமையாக உழைத்தார்.

பல முறை போட்டியிட்ட துரைமுருகன், 80+ வயதைத்தாண்டி இன்னமும் இளைஞர்களுக்கு வழி விடாமல் பதவிக்காகப் போட்டியிடுவது சரியல்ல.

நண்பர் அப்துல்லாக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தமே. வரும் தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்க வேண்டும்.

‘ஜெ’ ஈகோ காரணமாக அநியாயமா நிறுத்தப்பட்ட மதுரவயல் மேம்பாலம் மீண்டும் துவங்கப்படும் என்று நம்புகிறேன்.

திமுக தற்போது வந்துள்ள சூழ்நிலை மிக நெருக்கடியானது.

கொரோனா மிகத்தீவிரமாக உள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கியப் பணியில் ஸ்டாலின் உள்ளார்.

அதிமுக

‘ஜெ’ இல்லாமல், அதைவிட முக்கியமாகப் பாஜக வைக் கூட்டணியில் வைத்துக்கொண்டே 75 இடங்களைப் பிடித்தது மிகப்பெரிய செயல்.

மோசமான தோல்வியை அதிமுக அடைந்து இருந்தால், பாஜக க்கு சாதகமாக அமைந்து இருக்கும்.

ஆனால், இவ்வெற்றியின் மூலம் எடப்பாடி இன்னமும் கட்சியின் எதிர்காலத்துக்கு நம்பிக்கையளித்துள்ளார்.

சைதை துரைசாமி தோல்வியடைந்ததில் மிக வருத்தம். இவர் பயிற்சி பள்ளி மூலமாகப் பலர் IAS, IPS ஆகியுள்ளார்கள்.

வெற்றி பெற்று இருந்தால், இவருக்கும் ஊக்கமாக இருந்து இருக்கும். இன்னும் பலர் பயனடைந்து இருப்பார்கள்.

கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட C விஜயபாஸ்கர் வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி.

அதிமுக வாக்கு 3% மட்டுமே திமுக வை விடக்குறைவு. திமுக 36% அதிமுக 33%.

ஜெ இல்லாமலே எடப்பாடி இதைப் பெற்று இருக்கிறாரே! கூட்டணி கட்சிகள் இல்லையென்றால், திமுக நிலை என்ன?

அதிமுக தோற்றதில் வருத்தம் என்றாலும், எல்லோருக்கும் வாஷிங் மெஷின் என்ற பெயரில் மட்டரகமான ஒரு சாதனத்தைக் கொடுத்துப் பல டன் E Waste நடக்க இருந்தது தவிர்க்கப்பட்ட வகையில் மகிழ்ச்சி.

வாஷிங் மெஷின் அறிவிக்கப்பட்டவுடன் நினைத்தது இது தான். என்னைப் போல யாராவது யோசித்தீர்களா? 🙂 .

காங்கிரஸ்

இத்தேர்தலில் பெரிய வியப்புகளில் ஒன்று 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது தான்.

திமுக வை விட அதிக மகிழ்ச்சி அடைந்தது காங்கிரஸாகத் தான் இருக்கும் 🙂 .

காங் அழகிரி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்.

பாஜக

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே விட்டது 😀 . இதைக் கேட்கும் போதெல்லாம் தமிழிசை அவர்கள் பேசியதே நினைவுக்கு வரும்.

இதற்கு முன் திமுக கூட்டணியில் 4 இடங்கள் பெற்றது, தற்போது அதிமுக கூட்டணியில் 4 இடங்கள்.

அதிமுக கூட்டணியால், பாஜக 4 இடங்கள் பெற்றது, இல்லையென்றால் 0 என்கிறார்கள்.

தனித்து போட்டியிட்ட கட்சி மட்டுமே இதைப் பற்றிப் பேச அருகதையுள்ளது.

குறிப்பாகத் திமுக வினர் இதைப் பற்றிப் பேசவே கூடாது. ஏனென்றால், இதுவரை கூட்டணி வைக்காமல் ஒருமுறை கூடத் திமுக தேர்தலைச் சந்தித்தது கிடையாது.

மேற்கூறியபடி அதிமுகவை விடத் திமுக வாக்கு 3% மட்டுமே அதிகம்.

அண்ணாமலை, L முருகன் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், அவர்கள் தோல்வியடைந்து எதிர்பார்க்காத மற்றவர்கள் வெற்றி அடைந்து விட்டனர்.

அண்ணாமலை தோற்றதில் மிக வருத்தம். அவர் தொகுதி மக்களுக்குப் பணி புரிய ஆர்வமாக இருந்தார்.

என்ன வியப்பு என்றால், வானதி ஸ்ரீநிவாசன் தவிர வெற்றி பெற்ற மூவரிடமும் தோல்வியடைந்தது திமுக வேட்பாளர்கள்.

இன்னொரு சுவாரசியம், சரஸ்வதியிடம் தோற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்பு எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடித்தவராம்.

கிடைத்த வாய்ப்பை வெற்றி பெற்ற பாஜகவினர் சரியாகப் பயன்படுத்தினால் 2026 ல் கூடுதல் இடங்கள் பெற முடியும்.

நாதக அமமுக மநீம தேமுதிக

நாதக கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளைப் பெற்று முன்றாவது இடம்.

இவர்கள் பெற்ற வாக்குகள் மகிழ்ச்சியளிக்கவில்லை. சீமான் கட்சி தமிழகத்துக்கு இந்தியாக்கு ஆபத்தானது காரணம், சீமான் கொள்கைகள், எண்ணங்கள்.

அமமுக வாக்குகளால் அதிமுக 20 இடங்களை இழந்து உள்ளது.

அமமுக க்கு வாக்களித்தவர்கள் அனைவரும் அதிமுக க்கு வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது என்றாலும், குறைந்தது 10 இடங்களாவது இழந்து இருப்பார்கள்.

தினகரனும் வெற்றி பெறவில்லை. இனி என்ன செய்யப்போகிறார்? எதிர்காலத்தில் ஓரிரு இடங்களுக்காகக் கூட்டணியாக இணைவது மட்டுமே ஒரே வழி.

கமல் வெற்றி பெற்று விடுவாரென நினைத்தேன் ஆனால், நடக்கவில்லை. கமல் இனி என்ன செய்யப்போகிறார் என்று புரியவில்லை.

அதிமுக திமுக வுடன் கூட்டணி அமைத்தால், கட்சி ஆரம்பித்த காரணம் நீர்த்து போகும்.

கூட்டணி வைக்கவில்லையென்றால், அவர் நிலை இதே போலத்தான் தொடரும். என்ன செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறி.

தேமுதிக நிலை பரிதாபம். தன் நிலை என்னவென்று புரியாமல், அதிக ஆட்டம் போட்டால் என்னவாகும் என்பதற்கு இவர்களே சாட்சி.

ஊடகங்கள்

தமிழக ஊடகங்கள் மீது எப்போதுமே மதிப்பு இருந்தது இல்லை.

அதுவும் சமீப காலங்களில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டு வருகின்றனர் குறிப்பாகப் புதிய தலைமுறை, நியூஸ் 18, நியூஸ் 7, விகடன்.

இவர்களோடு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஊடகவியலாளர்கள் என்று சுற்றிக்கொண்டு இருப்பவர்கள்.

கடந்த வருடங்களில் முழுக்கத் திமுக ஆதரவு செய்திகளாகக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்ததால் எளிதாக இருந்தது.

இனி திமுக ஆளுங்கட்சியானதால் என்ன கூறி கடையை நடத்துவார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம்.

வழக்கம் போல மோடியை விமர்சிப்பது தான் இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி.

அவ்வப்போது நடுநிலை என்று காட்ட, ஆளுங்கட்சியைப் பற்றிச் சில விமர்சனங்கள் அவ்வளவு தான் தமிழக ஊடகங்கள்.

புதிய தலைமுறை கடமை உணர்ச்சி மிகுதியில், அம்மா உணவகத்தை நொறுக்கிய திமுக வினரை ‘மர்ம நபர்கள்‘ என்று கூறிக்கொண்டு இருந்தது 🙂 .

விமர்சனங்கள்

எதிர்க்கட்சியாக இருந்து இவ்வளவு நாட்களாக விமர்சிப்பது எளிதாக இருந்தது. இனி ஆளுங்கட்சியாக அனைத்துக்கும் திமுக பதில் கூறியாக வேண்டும்.

இதுவரை போராளிகளாக மாறித் தமிழகத்தில் அனைத்துக்கும் குதித்துக்கொண்டு இருந்தவர்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்க்க ஆவல்.

சமூகத்தளங்களில் அவதூறு செய்தார்கள் என்று தற்போது வழக்கு தொடுத்து அனைவரையும் திமுக வினர் மிரட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

இதையே அதிமுக காலத்தில் திமுக க்கு செய்து இருந்தால், கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது! என்பார்கள்.

வழக்கு பதிவது தற்போது கெத்தாக இருக்கலாம் ஆனால், எதிர்காலத்தில் மிகமோசமான எதிர்விளைவை கொடுக்கும் போது உணர்வார்கள்.

சமூகத்தளங்களில் திமுக செய்த வெறுப்பு பரப்புரை அவர்களுக்கே திரும்ப வரப்போகிறது. திமுக மற்றவர்களுக்குக் கொடுத்ததை இனி திரும்பப் பெறும் காலம்.

ஸ்டாலின்

மத்திய அரசைப் பகைத்துக்கொண்டால், மாநில அரசுக்குத் தான் நட்டம். எனவே, ஸ்டாலின் எப்படிக் கையாளப்போகிறார் என்று பார்ப்போம்.

திமுக எனக்குப் பிடிக்காது என்றாலும், தமிழ்நாடு என்று வரும் போது என்றும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

MLA வாக ஸ்டாலின் சிறப்பாகச் செய்ததாகக் கருதவில்லை ஆனால், மேயராக ஸ்டாலின் இருந்த போது சிறப்பாக நிர்வாகம் செய்தார்.

அவர் காலத்தில் கட்டப்பட்ட சென்னை மேம்பாலங்கள் அவர் முயற்சிகளைக் கூறும். எனவே, தற்போதும் தொடர்வார் என்று நம்புகிறேன்.

அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் சராசரி எதிர்ப்பாளராக இருந்ததில்லை, நல்லது செய்தால் பாராட்டியும், தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடரும்.

ஆட்சியாளர் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டின் மீதான அன்பு என்றும் மாறாது.

முதல்வராகப் பதவி ஏற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்புடைய கட்டுரை

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 | முடிவுக்கு முன்

கொசுறு

மேற்கு வங்கத்தில் மம்தா 213 தொகுதிகள் வெற்றி பெறுவார் என்று நினைக்கவில்லை. மம்தா தோல்வியும் எதிர்பார்க்காதது.

வெற்றி பெற்ற பிறகு பாஜக மட்டுமல்லாது மற்ற கட்சி அலுவலங்கள் நொறுக்கப்பட்டுள்ளன, தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிகே சொன்ன மாதிரியே பாஜக 100 க்கு கீழே தான் வெற்றி பெற்றுள்ளது. சொன்னதைச் சாதித்து விட்டார்.

பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும், 3 இடங்களில் இருந்து 77 இடங்கள் மிகப்பெரிய வளர்ச்சியே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

 1. கிரி , நலமா ? நான் நினைத்ததை நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள். என் சொந்த ஊர் சேலம்.வீரபாண்டி ஆறுமுகம் செய்த வன்முறைகளை நேரில் பார்த்திருக்கிறேன் மற்றும் கேட்டும் தெரிந்தும் இருக்கிறேன். அதனால் நான் DMK க்கு வாக்களித்தது கிடையாது.இனிமேலும் அப்படித்தான்.அவர் விட்டு சென்ற legacy அப்படி, அதன் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.

  ஸ்டாலின் எப்படி ஆட்சி நடத்துகிறார் என்று பார்ப்போம். அவருக்கு மிக பெரிய சவாலாக இருக்க போவது ADMK, பிஜேபி அல்ல. அவரது கட்சிக்காரர்களும், தொண்டர்களும் மற்றும் அமைச்சர்களும் தான். அமைச்சர்களின் ஊழல் மற்றும் அராஜங்களை பிஜேபி சென்ட்ரல் government வெளிகொணரும் என நினைக்கிறேன். பல IT ரெய்டுகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.பிஜேபி அவர்களை எளிதில் விடாது. மக்களின் நலம் கருதி, ஸ்டாலின் central goverment உடன் சுமூக உறவுடன் செயல்பட்டால் நல்லது. இல்லையேல் நட்டம் நமக்கு தான்.

  மீடியா மேல் இருந்த மரியாதையை மக்கள் இழந்து உள்ளார்கள் என நினைக்கிறேன். முக்கியமாக புதிய தலைமுறை,நியூஸ் 7 மற்றும் you tube channels (Behindwoods, Galatta, other DMK paid channels ). கடந்த 6 மாதமாக எதிர்மறை மற்றும் போலி செய்திகளை இந்த ஊடகங்கள் வெளியிட்டன. ஆளும் கட்சியை விமர்சிப்பார்களா என்று பார்ப்போம். எதற்கெடுத்தாலும் பிஜேபி மற்றும் மோடியை சாடுவது ஒரு மனப் பிறழ்வே.

  பிஜேபி:

  தாமரை மலர்ந்து விட்டது! கடந்த ஒரு வருடமாக நல்லதொரு மாற்றத்தை நான் பார்க்கிறேன். புதியவர்கள் கட்சியில் இணைகிறார்கள், முக்கியமாக இளைஞர்கள். அவர்களின் கள உழைப்பு மிக அபாரமானது.

  அண்ணாமலை நல்ல மனிதராக தெரிகிறார். தெளிவாகவும், நேர்மறையாகவும் பேசுகிறார். அவர் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவார் என நினைக்கறேன். கொங்கு மண்டலத்தில் நிறைய இளைஞர்கள் அவரால் பிஜேபி இல் இணைந்து உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் அவர் தீவிரமாக செயல் பட்டு கட்சியை பலப்படுத்துவார் . ஒரு வகையில் அவர் தோல்வி, கட்சிக்கு நல்லதே.

  எடப்பாடி பழனிச்சாமி :

  நான்கு ஆண்டு ஆட்சி மிக சிறப்பாக இருந்தது. சேலம் முழுவதும் பாலமே ! விவசாயிகள் நல்ல பலன் அடைந்தனர். அவர் செய்த ஊர் மராமத்து பணிகள் நல்லதொரு விளைவை தந்தன.ஒரு சிறந்த தலைமையை காலம் AIADMK க்கு கொடுத்து உள்ளது . அவர் சர்வசாதாரணமாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஆட்சியை நிறைவு செய்து, 70+ இடங்களை பெற்றது சாதனையே! முக்கியமாக மக்களிடம் அவர் மேல் வெறுப்பு இல்லை.

  அவர் தொடங்கி வைத்த பல திட்டங்கள் பாதியில் உள்ளன.ஸ்டாலின் அதனை முன்னியெடுப்பாரா என்று பார்ப்போம்.

  கமல், தினகரன்,சீமான் மற்றும் பொன்னார்(MP election) தோல்வியடைந்தது ஏமாற்றமே! We all missed multi party representation in assembly. I don’t think we would get this opportunity again.

 2. I thought you are something different but you have shown that you are one among a party supported. I am very disappointed. Take care. Stat safe.

 3. கிரி, (வாஷிங் மெஷின் அறிவிக்கப்பட்டவுடன் நினைத்தது இது தான். என்னைப் போல யாராவது யோசித்தீர்களா? ) நிச்சயமா E-வேஸ்ட் பற்றி நான் யோசிக்கவில்லை.. ஆனால் தண்ணீர் பயன்பாட்டை எப்படி சமாளிப்பார்கள் என்று யோசித்தேன்.. நல்லது நடக்கும் என எப்போதும் போல நம்புவோம்… நன்றி கிரி..

 4. @மணிகண்டன்

  “ஸ்டாலின் எப்படி ஆட்சி நடத்துகிறார் என்று பார்ப்போம். அவருக்கு மிக பெரிய சவாலாக இருக்க போவது ADMK, பிஜேபி அல்ல. அவரது கட்சிக்காரர்களும், தொண்டர்களும் மற்றும் அமைச்சர்களும் தான்.”

  மிகச்சரியாகக் கூறினீர்கள். இதை நானே குறிப்பிட்டு இருக்க வேண்டும். பின்னர் வரும் பொருத்தமான கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.

  “பல IT ரெய்டுகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.பிஜேபி அவர்களை எளிதில் விடாது.”

  பாஜக வுடன் திமுக இணக்கமாக செல்லும் என்றே கருதுகிறேன்.

  அதாவது தலைமையில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், மாநில அளவில் அவர்களுக்குண்டான எதிர்ப்பைத் தொடர்ந்து தக்க வைக்கும்.

  “மக்களின் நலம் கருதி, ஸ்டாலின் central goverment உடன் சுமூக உறவுடன் செயல்பட்டால் நல்லது. இல்லையேல் நட்டம் நமக்கு தான்.”

  அத்தவறை திமுக செய்யாது.

  “Behindwoods, Galatta, other DMK paid channels ”

  தற்போது திமுக ஆதரவு செய்திகளை யார் புகழ்ந்து கொடுப்பது என்ற கடும் போட்டியில் இத்தளங்கள் உள்ளன 🙂 . மீமாகவும் வந்து விட்டன.

  “புதியவர்கள் கட்சியில் இணைகிறார்கள், முக்கியமாக இளைஞர்கள். அவர்களின் கள உழைப்பு மிக அபாரமானது.”

  உண்மை தான்.

  ” ஒரு வகையில் அவர் தோல்வி, கட்சிக்கு நல்லதே.”

  🙂 . இவர் வந்தால், மற்றவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்யாசத்தை உணர வைப்பார் என்று நினைத்தேன் ஆனால், முஸ்லீம் வாக்காளர்கள் இவருக்கு வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டனர்.

  இவர் வெற்றி பெறாதது எனக்கு ஏமாற்றமே! வந்து இருந்தால் அப்பகுதிக்கு நன்மைகள் செய்து இருப்பார்.

  “முக்கியமாக மக்களிடம் அவர் மேல் வெறுப்பு இல்லை.”

  உண்மை தான். சில பகுதிகளில் தோற்றதுக்கு, தவறான கணக்காகி இருக்கலாம் அல்லது அதிமுக வினர் சிறப்பாகச் செயல்படாமல் இருந்து இருப்பார்கள்.

  “அவர் தொடங்கி வைத்த பல திட்டங்கள் பாதியில் உள்ளன.ஸ்டாலின் அதனை முன்னியெடுப்பாரா என்று பார்ப்போம்.”

  ஸ்டாலின் முன்னெடுப்பார் என்று எனக்கு நம்பிக்கையுண்டு.

  “We all missed multi party representation in assembly. I don’t think we would get this opportunity again.”

  சரி தான். ரணகளமாக இருந்து இருக்கும் 🙂 .

 5. @Ravi it’s fine that now you understood who I am. I am just writing my opinion and not trying to satisfy others which I’m following for years.

  Also, let me know which line / word / subject is not acceptable to you so that I can answer.

  If you could explain particularly instead of general, I can answer. I can answer all your questions, won’t ignore / escape.

  I couldn’t understand what is the meaning of “different”. I assume that you meant “Neutral” or if you have another meaning Pls let me know.

  I’m not a neutral person Ravi and am sorry if you are thinking like that.. and nobody is neutral including you.

  Opinions are always different from person to person so no one can say which is correct / wrong. Everyone will have a reason.

  Always you can criticize me if you feel something is not correct and am ready to answer and correct it if it is acceptable to me but don’t expect me to write what you are thinking.

  Thank You for your understanding

  @யாசின்.. தண்ணீர் [பிரச்சனையும் குறிப்பிடத்தக்க ஒன்று தான்.

  “நல்லது நடக்கும் என எப்போதும் போல நம்புவோம்”

  கண்டிப்பாக. தமிழகத்துக்கு யார் மூலமாக நல்லது நடந்தாலும், எனக்கு மகிழ்ச்சியே. தமிழை, தமிழகத்தை எதையும் விட அதிகம் நேசிக்கிறேன்.

 6. Sir
  I too felt against all odds stalin stood like a warrior and won the battle.
  Many said his astrology does not warrant him to be a chief of a state.
  His brother talked him down.
  Inspite of being active for 50 years he succeeded late he made a mark for him . He faced the election as cm candidate and won the candidature .I admire his hard work . I feel he will give good governance and he will make efforts to eradicate the fears against dmk.

 7. @Raguraam I completely agree with your points about Stalin’s work. Yes, I’m expecting good governance from him. Hope he will.

  As Manikandan (first comment) mentioned, Stalin will face issues because of his cadres than ADMK and BJP. Hope he will control.

  Let’s see. My wish is.. Good governance TN whoever the leader may be.

 8. Inpite of Pollachi issue’s still caste dominate ppl are batting ADMK & BJP. எல்லாம் சாதி வெறி.
  இதுல கொக்கு மாதிரி வருமானு ஒரு சப்பகட்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here