Quarantine From Reality | சுபஸ்ரீ தணிகாசலம்

2
Quarantine From Reality

சை பிரியர்களுக்கு ராகமாலிகா YouTube சேனல் நடத்தும் Quarantine From Reality நிகழ்ச்சி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

Quarantine From Reality

இச்சேனலை நடத்தும் சுபஸ்ரீ தணிகாசலம் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அப்பாடலைப் பற்றிய தகவல்களை விளக்குகிறார்.

ஒரு பாடலைப் பற்றி எதுவும் தெரியாமல் கேட்பதை விட அதைப் பற்றித் தெரிந்து கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்பாடலில் என்ன சிறப்பு? இசை எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது? பாடகர்கள் திறமை ஆகியவற்றை விளக்கமாகக் கேட்டுப் பார்க்கும் போது சுவை அதிகம்.

சுபஸ்ரீ மிகச்சிறப்பாகப் பாடலைப் பற்றி விளக்குகிறார்.

இசை எப்படி மாறுகிறது, பாடகர்கள் எவ்வாறு மெருகு சேர்க்கிறார்கள் என்று கூறும் போது ‘அட! இதை நாம் கவனிக்கவில்லையே!‘ என்று தோன்றும்.

பாடல்கள் நமக்குப் பிடித்தாலும் அதை ஒருவர் விளக்கி, அதன் சிறப்புகளைக் கூறிய பிறகு பாடலைக் கேட்டால் இன்னும் அழகாகத் தோன்றுகிறது.

சுபஸ்ரீ பாடல் பற்றியும், பாடுபவர்களைப் பற்றியும், இதற்கு இசையமைத்தவர்களையும் கூறுவது சிறப்பு.

ஆர்கெஸ்டராவில் பாடுபவர்கள், இசையமைப்பவர்கள் பற்றிச் சிறு குறிப்புக் கொடுப்பது நன்றாக உள்ளதோடு அவர்களை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

சுபஸ்ரீ தணிகாசலம்

1994 ல் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகத் தொடங்கிய சுபஸ்ரீ பணி பலவேறு தளங்களில் தொடர்ந்து வருகிறது.

மார்கழி மாத உற்சவம்‘ புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்..

இசையில் மிகப்பெரிய ஆர்வமும், அறிவும் கொண்டுள்ளார். இதை இவர் விளக்கும் பாடல்களிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக வரிகளை, இசையைச் சரியாக நினைவு வைத்து அதை விளக்கும் போது தான் நமக்கும் அவருக்கும் என்ன வித்யாசம் என்று புரிகிறது 🙂 .

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

எல்லோருக்குமே எதோ ஒன்று, யாரோ ஒருவரால் நமக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்தச் சேனல் தெரியாதவர்களுக்கு இக்கட்டுரை மூலம் தெரிந்து இருக்கும்.

எனக்குத் தலைவர் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக ஆர்வத்தில் இப்பாடலைப் பார்த்தேன், அறிமுகம் நன்றி ராம்.

இதன் பிறகு தொடர்ச்சியாக மற்ற பாடல்களையும் பார்த்து வருகிறேன்.

இப்பாடலை சுபஸ்ரீ விளக்கி, ஒவ்வொரு இசையும் ஒவ்வொரு இடத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறும் போது பாடல் இன்னும் பிடித்து விடுகிறது.

இளையராஜா ஒரு அதிசயம் தான்! பாடலில் பல இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இருப்பார், அனைத்துமே தனித்துவமாகத் தெரியும்.

அதாவது ஒரு கருவியின் இசை மற்ற கருவியின் இசையைச் சேதப்படுத்தாது, மாறாக அதை இன்னும் மேம்படுத்தி அழகுபடுத்தும்.

பல்வேறு இசைக்கருவிகளின் தனித்துவமான இசையைக் கேட்பதற்காகவே ராஜா பாடல்கள் ஒவ்வொன்றையும் வியப்பாகக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தற்கால நவீன இசையில் இசைக் கருவிகளின் தனித்துவமான இசையைக் கேட்க முடியாது. அதாவது ஒரே மாதிரியான இசையாக பாடல் முழுவதும் இருக்கும்.

எனக்குப் பிடித்த ராஜா பாடல்களில் மன்னன் ரஜினி பாடல்களும் அடங்கும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள் 🙂 , அதோடு மற்ற பாடல்களையும் ரசியுங்கள். சுபஸ்ரீ YouTube சேனல் –> https://www.youtube.com/c/Ragamalikatv

கிட்டத்தட்ட ஒரிஜினல் இசையைக் கொண்டு வந்துள்ளார்கள்.

https://youtu.be/WN3TYb6gqeY

தொடர்புடைய கட்டுரைகள்

இளையராஜா மாபெரும் இசைக் கொண்டாட்டம்

என்றென்றும் ராஜா

இளையராஜாவை கலாய்த்த பாக்யராஜ்

ஞானியும் ஞான சூன்யமும்

“தளபதி” நினைவுகள் [1991]

2 COMMENTS

  1. கிரி, இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் இல்லை, இதை பற்றி கேள்விப்பட்டதும் இல்லை.. ரஜினி சாரின் நிறைய பாடல்கள் பிடித்து இருந்தாலும் எனக்கு எப்போதும் விருப்பமான பாடல் பிறைசூடன் எழுதிய மீனம்மா, மீனம்மா (ராஜாதி ராஜா) பாடல் தான்.. இந்த பாடலில் தலைவர் உடல் மொழி அருமையாக இருக்கும்..

    உங்கள் பதிவை படிக்கும் போதே உற்சாகமாக இருக்கிறது.. எனக்கும் பாடல்களை விட, அது தொங்கிய கதையும் அதன் பின்னணியும் அறியும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. இளையராஜா ஒரு அதிசயம் தான்!!!! கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.. நிகழ்ச்சியை பார்த்து விட்டு என் கருத்தை பகிர்கிறேன்.. நன்றி கிரி..

  2. @யாசின்

    “எனக்கு எப்போதும் விருப்பமான பாடல் பிறைசூடன் எழுதிய மீனம்மா, மீனம்மா (ராஜாதி ராஜா) பாடல் தான்.. இந்த பாடலில் தலைவர் உடல் மொழி அருமையாக இருக்கும்..”

    ராஜாதிராஜாவில் அனைத்துப் பாடல்களும் தேன் போன்று இனிமை.

    மலையாள கரையோரம் உட்பட அனைத்துப் பாடல்களும் அட்டகாசமாக இருக்கும். இப்படம் ஒரு Musical Hit

    இந்த சேனல் பாருங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here