இளையராஜா ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அப்படியென்றால் அதில் எவ்வளவு சுவாரசியமான தருணங்கள் இருக்கும்!
Image Credit – http://oviyaranikartick.blogspot.com
எனக்கு எப்போதுமே ஒரு படத்தின் காட்சி எடுக்கப்பட்ட விதம், அந்தச் சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த பேச்சுகள் மிகப் பிடிக்கும். ஏனென்றால், படத்தைப் பார்க்கும் போது இவர்கள் கூறியது நினைவுக்கு வந்து கூடுதலாக ரசிக்க வைக்கும்.
இளையராஜாவை கலாய்த்த பாக்யராஜ்
அது போல ஒரு தருணமாக, பாக்யராஜ் “விளக்கு வைத்த நேரத்துல” பாடல் உருவான விதம் பற்றிக் கூறியிருக்கிறார். அவரது பாணியில் கேட்கச் சிரிப்பாக உள்ளது 🙂 .
பாக்யராஜ் பேசியதையும், அதற்கு இளையராஜா பதில் அளித்த விதத்தையும் கற்பனை செய்து பார்த்தால், நகைச்சுவையாக உள்ளது 😀 .
இளையராஜா வேண்டுமென்றே செய்தாரா அல்லது உண்மையாகவே மறந்து அப்படிப் பாடினாரா என்பது தெரியவில்லை. அதைப் பாக்யராஜ் அவரது பாணியில் கலாய்த்தது செம.
இனி இப்பாடலை எப்போது கேட்டாலும் பாக்யராஜ் கூறியது நினைவுக்கு வரும் 🙂 .
நீங்களும் பாருங்கள் (2015 ஆண்டு மேடைப்பேச்சு)
காணொளி நன்றி – யாசின்
இருவருமே அவரவர் துறையில் ஜாம்பவான்கள்.. வாழ்க்கையில சிலபேர ஏன்??? பிடிக்குதுனே தெரியாது???? அந்த வகையில் எனக்கு மிகவும் பாக்கியராஜ் சார் ரொம்ப பிடிக்கும்.. அவரோட படங்களில் அவரை ரசித்ததை விட நான் யூடூப்பில் அவரது காணொளிகளை ரசித்ததே அதிகம்.. அவர்கிட்ட எனக்கு பிரமித்த விஷியம், இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக உருவாக்கியவர் பாக்யராஜ்.. தற்போது வரை ஒருமுறை கூட பாக்யராஜ் எந்த இடத்திலும், பாரதிராஜாவை பெயர் சொல்லி அழைத்ததில்லை..
அவர் பெயர் குறிப்பிட நேர்கையில் “என் குருநாதர்” அல்லது என் டைரக்டர் என்று மட்டும் அழைப்பார்!!! இந்த பண்பினை யாரிடமும் நான் இதுவரை திரைத்துறையில் பார்த்ததில்லை.. திரைத்துறையை குறித்து பல சுவாரசியமான தகவல்களை இவர் மூலம் நான் கேட்டு தெரிந்து இருக்கிறேன்.. எந்த குறிப்பும் இல்லாமல் தெளிவாக, அழகாக, ரசனையாக, நகைச்சுவையாக நடந்த நிகழ்வுகளை பகிரும் குணமுண்டு..
பின்வரும் காணொளியை பார்க்கவும்.. கண்டிப்பாக ரசிப்பீர்கள் கிரி..
https://www.youtube.com/watch?v=Pkykn5tU64M
யாசின் நீங்க கூறுவது சரி தான். தனது குருநாதர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்.