இளையராஜாவை பற்றிப் பலர் கூறியதில் பல சுவாரசியமான தகவல்களை அனைவரும் கேட்டு இருப்போம். Image Credit
அதில் என்றென்றும் ராஜாவைத் தொகுத்து வழங்கிய பிரகாஷ்ராஜ் கூறிய தகவல்களும், தொகுத்து வழங்கிய விதமும் எப்போதும் நினைவில் இருக்கும்.
ஞானியும் ஞான சூன்யமும்
பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்த ‘தோனி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நாசர் அவருடைய ‘அவதாரம்’ படத்தின் ‘தென்றல் வந்து தீண்டும் போது‘ பாடலுக்கு இளையராஜாவுடனான உரையாடலை விளக்கியது அற்புதம்.
சூழ்நிலைக்கு ஏற்ற உடல் மொழிகளுடன், பேச்சில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசியதை கேட்க அவ்வளவு அசத்தலாக இருந்தது.
சம்பவத்தைச் சுவாரசியமாக விவரிப்பது ஒரு கலை, அனைவருக்கும் வாய்த்து விடாது. சிலர் ஒரே சம்பவத்தைப் பல முறை கூறினாலும் அதே சுவாரசியம் இருக்கும்.
இதில் நாசர் கூறும் அனுபவங்களைக் கேளுங்கள், நான் கூறிய அந்தச் சுவாரசிய அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும்.
‘அவதாரம்’ படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிகச் சிறப்பாக இருக்கும். யாரோ இசையே இல்லாமல், ‘தென்றல் வந்து தீண்டும் போது‘ பாடலைப் பாடி இருந்தார்கள், அதுவும் அட்டகாசமாக இருந்தது. இளையராஜா ஒரு அற்புதம்.
காணொளி பரிந்துரைத்தது நண்பர் யாசின்.
Read : என்றென்றும் ராஜா
கிரி, நான் எப்போது இந்த காணொளியை கண்டாலும் உள்ளுக்குள் ஒருவித பரவசம் உண்டாகும் .. இளையராஜா சார் இசையுலகில் ஒரு ராஜா என்பதை யவராலும் மறுக்க முடியாது .. இந்த காணொளியும் அதற்கு ஒரு சாட்சி .. நாசர் சார் விவரித்த விதம் இன்னும் அற்புதம் .. இது போல எத்தனை நிகழ்வுகள் இளையராஜாவின் வாழ்நாளில் நடந்து இருக்கும் .. எப்பா !!! யோசிக்க முடியவில்லை ..
இந்த நிகழ்ச்சியின் நடுவில் மஹிந்திரன் சார் இளையராஜாவை பற்றி சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும். (உன் தேகமெல்லாம் ராகம்……..). அழகி படத்துல உன் குத்தமா என் குத்தமா பாடல் இளையராஜாவே எழுதி இசையமைத்து இருப்பார் .. அந்த படத்தோட சூழலுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும் .. (இது குறித்து இயக்குனர் தங்கர் பட்சனிடம் தான் கேட்க வேண்டும் என்பது என் ஆவல் ..) ராஜா என்றும் ராஜா தான் !!! பகிர்வுக்கு நன்றி ..
யாசின் முழு நிகழ்ச்சியையும் இன்னும் பார்க்கவில்லை. அழகி பாடல் அட்டகாசமாக இருக்கும்.