மன்னன் ரஜினி

16
மன்னன் ரஜினி

மிழில் ரஜினி நடித்த “மன்னன்” படம் கன்னட ராஜ்குமார் 1986 ல் நடித்த “Anuraga Aralithu” என்ற படத்தை ரீமேக் செய்து 1992 பொங்கலுக்கு வெளியிடப்பட்டது.

இதே ஆண்டில் ஏப்ரல் மாதம் சிரஞ்சீவி நடித்து ரீமேக் செய்யப்பட்டு “Gharana Mogudu” என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.

வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல… அப்போதே 10 கோடி வசூல் செய்த முதல் தெலுங்குப் படம் என்ற சிறப்பைப் பெற்று இருக்கிறது.

மன்னன் ரஜினி

இந்தப் படத்தை பார்த்ததும் இக்கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. ஒரு ஒப்பீட்டிற்காக இந்த இரு படங்களின் மூலமான ராஜ்குமார் படமும் பார்த்தேன்.

இந்தப் படம் ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் எந்தத் திரைப்படத்தை முதலில் பார்க்கிறோமோ அந்தத் திரைப்படம் தான் பிடித்ததாக இருக்கும்.

இதன் பிறகு வேறு மொழியில் வந்தாலும் நம்மை அவ்வளவாகக் கவராது. இது உளவியல் ரீதியாக அனைவருக்கும் பொதுவானது.

எப்போதும் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஒவ்வொரு மொழிப் திரைப்படங்களும் அந்தந்த மொழி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெறுகின்றன.

எனவே நம் ரசனையில் இருந்து மாறி இருப்பதும் மற்ற மொழி படங்களின் மீதான மாற்றுக் கருத்திற்கு காரணமாக இருக்கிறது.

தெலுங்குப் படங்கள் என்றால் சில டெம்ப்ளேட் இருக்கிறது. மழை நடனம், மிக நெருக்கமான காட்சிகள், மிக மிக அதிகளவில் மசாலா என்று.

இது தமிழ்ப் படங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இவர்களை மிஞ்ச முடியாது.

மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களின் கலவையே தமிழ்ப் படங்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வரும் மசாலாப் படங்களும் வரும்.

சிரஞ்சீவி

தெலுங்கு “Gharana Mogudu” பார்த்த போது ஒவ்வொரு காட்சியிலும் சிரஞ்சீவிக்குப் பதிலாக மன்னன் ரஜினி தான் மனக்கண்ணில் தெரிந்தார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு எப்படியோ (நிச்சயம் அவர்களுக்கு சிரஞ்சீவி நடிப்புத் தான் பிடித்து இருக்கும்) இரண்டு படங்களில் மன்னன் ரஜினி தான் கலக்கி இருக்கிறார்.

சிரஞ்சீவி நடிப்பில் இருந்து எப்படி பல படி சிறப்பாக இருக்கிறார் என்பதற்குக் காரணம் ரஜினியின் நகைச்சுவை, வேகம், சென்டிமென்ட்.

இளையராஜாவின் அற்புதமான இசை, விஜயசாந்தி என்ற மிகத் திறமையான நடிகையின் அசர வைக்கும் நடிப்பு, கவுண்டரின் நகைச்சுவை, தெளிவான திரைக்கதை ஆகியவை  தமிழ்ப் படம் சிறப்பாக இருக்கக் காரணம்.

சிரஞ்சீவியின் நடிப்பைப் பார்க்கும் போது மன்னன் ரஜினி நடிப்பை ஒப்பிடாமல் இருக்க முடியாது. உண்மையையில் இருவரின் நடிப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

நடிப்பில் ரஜினி எங்கேயோ உள்ளார். நகைச்சுவை இவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கிறது. அதோடு ரஜினியின் அப்பாவித்தனமான முகம்.

சென்டிமென்ட், காதல், நகைச்சுவை, கோபம், சண்டை என்று அனைத்திலும்  ரஜினி சரியாகப் பொருந்திப் போகிறார்.

ரஜினி ரசிகன் என்பதால் மட்டுமே கூறவில்லை. இரண்டு படங்களையும் பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.

விஜயசாந்தி

தமிழில் விஜயசாந்தி, தெலுங்கில் நக்மா, கன்னடத்தில் மாதவி. விஜயசாந்தி மாதவி அருமையான தேர்வு. இதிலும் விஜயசாந்தி தான் கலக்கி இருக்கிறார்.

கலக்கி இருக்கிறார் என்பதை விட பெரிய வார்த்தை இருந்தால் அதற்குப் பொருத்தமானவர்.

அக்கதாப்பாத்திரத்திற்கு என்றே இருப்பவர் போல இருக்கிறார்.  ரஜினிக்கு கடும் போட்டி கொடுத்து இருப்பார்.

சொல்லப்போனால் இந்தப் படத்தில் விஜயசாந்திக்கு தாறுமாறான ரசிகன் ஆகி விட்டேன்.  நடிப்பில் மிரட்டி இருப்பார்.

“நீலாம்பரி”  தங்கச்சி மாதிரி என்று சொல்லிக்கலாம் 🙂 .

இக்கதாப்பாத்திரத்தில் இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணனை மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது.

வேறு யாருமே இந்தக் கதாப்பாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக செய்து இருக்க முடியாது.

தெலுங்குப் படம் பார்த்து திரும்ப ஒரு முறை “மன்னன்” படம் பார்த்தேன். இதில் எப்போதும் இல்லாத எதோ ஒன்று விஜயசாந்தியிடம் பிடித்து விட்டது.

அவருடைய தெனாவெட்டான நடிப்பின் மீது ஒரு காதல் ஆகி விட்டது.

ஒருவேளை நக்மாவின் சொதப்பலான நடிப்பைப் பார்த்து இவர் நடிப்பு மிகவும் பிடித்ததோ என்னவோ! “மன்னர் மன்னனே” பாடலில் நிஜ ராணி போலவே இருப்பார்.

என்ன ஒரு நடை…! ப்ப்பா இப்பாடலில் விஜயசாந்தி உடையும், சிகை அலங்காரமும், அரங்க அமைப்பும், இளையராஜா இசையும் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது.

திரும்ப ரஜினியும் இவரும் இணையும் சந்தர்ப்பம் அமையாதது எனக்கு ஏமாற்றமே.

மாதவி

இக்கதாப்பாத்திரத்திற்கு மாதவி பொருத்தமான தேர்வு.

“தம்பிக்கு எந்த ஊரு”, “டிக் டிக் டிக்” போன்ற படங்களில் கவனித்து இருந்தால் இவர் இக்கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு என்பதை உணரலாம்.

கோபக்கார பெண்ணாக நடிப்பது இயல்பாகவே இவருக்குப் பொருந்தி வருகிறது.

நக்மா

நக்மா மிகத் தவறானத் தேர்வு, கவர்ச்சிக்காக மட்டுமே பயன்பட்டுள்ளார் (தெலுங்குக்காரர்கள் இதில் அதிக கவனம் எடுப்பார்கள்) மற்றபடி நடிப்பு ஒன்றுமே இல்லை.

சிரஞ்சீவிக்கு நக்மா சரியான போட்டியாக இல்லையென்பதால் ஈர்ப்பு குறைகிறது.

கவர்ச்சி என்பதில் தெலுங்குக்காரர்கள் எப்போதும் நம்மை விட பல படிகள் அதிகமாக இருப்பார்கள். இன்றைய படங்களிலும் இது தொடர்கிறது.

தமிழில் சீதாவாக இருக்கும் நடிகைகள்  கூட தெலுங்கு சென்றால் சிலுக்காக மாறி  விடுவார்கள்.

தமிழில் குஷ்பூ, தெலுங்கில் வாணி விஸ்வநாத், கன்னடம் கீதா. இதில் கன்னட கீதா தமிழ் குஷ்பூ நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

கீதா, குஷ்பூ கதாப்பாத்திரம் கண்ணியமாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

ராஜ்குமார்

தெலுங்கு படங்களோடு ஓரளவு ஒத்துப் போகும் நம்மால் கன்னடப் படங்களை ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

ராஜ்குமார் படங்களுக்கு எவ்வளவு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

எனவே, நமக்குப் பிடிக்கவில்லை அவ்வளவு தான், அவர்கள் ரசனையை குறை கூற முடியாது.

நம் திரைப்படங்களில் வரும் காட்சிகள் வேறு சிலருக்கு கொடுமையாகத் தோன்றும். ஒப்பீட்டிற்காக இப்படத்தைப் பார்த்தேன்.

நான் பார்த்த முதல் ராஜ்குமார் படமும் இது தான், மற்றபடி அவரின் நடிப்பு என்னை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை.

உடல் மொழியில், முகத்தில் எப்போதும் ஒரே மாதிரியான உணர்ச்சி தான் இருக்கிறது.

தமிழ் தெலுங்கு இரு திரைப்படங்களும் அப்படியே எடுக்கப்படவில்லை, அந்தந்த மாநிலத்தினரின் ரசனைக்கு ஏற்ப மாற்றங்களுடன் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று படங்களிலும் தமிழில் நகைச்சுவையும் இசையும் படத்தை ஒரு படி கூடுதலாக ரசிக்க வைக்கிறது.

கன்னடத்தில் ராஜ்குமார் நடிப்பு பொறுப்பான நடிப்பு தமிழ் தெலுங்கில் ரஜினி சிரஞ்சீவி குறும்பான நடிப்பு.

கன்னடப் படம் 1986 ல் வெளியாகியுள்ளது.

ரீமேக் செய்து 1992 ல் மன்னனாக வெளியிட்டு இருக்கிறார்கள். ஏன் ஆறு வருடம் கழித்து ரீமேக் செய்தார்கள் என்று யோசனையாக இருந்தது.

அதோடு இப்படம் 1992 ஜனவரி பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது.

தெலுங்குப் படம் 1992 ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்கிறது. இதில் கன்னடப் படத்தில் இல்லாத தமிழ் படத்தில் உள்ள காட்சிகள் இருக்கிறது.

தமிழில் மன்னன் பெரிய வெற்றி பெற்ற பிறகு இதை மூன்று மாதத்தில் எடுத்து வெளியிட்டு விட்டார்களா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

இது பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்தால் கூறவும்.

உங்களுக்கு பொறுமையும் நேரமுமிருந்தால் இந்த மூன்று படங்களையும் பாருங்கள். Anuraga Aralithu (கன்னடம்) மன்னன் Gharana Mogudu (தெலுங்கு).

பிற்சேர்க்கை

இந்தி ரீமேக் “Laadla” பற்றி Thameez கூறி இருந்தார். அதையும் பார்த்து விட்டேன் 🙂 ஒரு படத்தை மூன்று மொழி ரீமேக்கிலும் பார்த்தது இந்த ஒரு படம் தான்.

ஸ்ரீதேவி

இந்திப் படம் தமிழ் படத்தில் இருந்து 60% தெலுங்கு படத்தில் இருந்து 20% இவர்கள் சொந்த காட்சியமைப்பு 20%.

ஸ்ரீதேவி சரியான தேர்வு ஆனாலும், தற்போது நடிப்பில் ஒப்பீடு என்று வந்தால் விஜயசாந்தி தான் முன்னணியில் இருக்கிறார்.

ஸ்ரீதேவி முகத்தை கோபமாக வைத்து நடித்து இருக்கிறார் ஆனால், விஜயசாந்தியிடம் இருக்கும் ஒரு இயல்புத் தன்மை இவரிடம் இல்லை.

நடிப்பில் ஸ்ரீதேவி மிகச் சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை ஆனால், இதில் விஜய்சாந்தியே அனைவரையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் மிரட்டி இருக்கிறார்.

ஸ்ரீதேவி நடிப்பைப் பற்றி நான் எழுதி இருக்கும் இந்த விமர்சனம் முடிந்தால் படியுங்கள்.

இந்தப் படத்தில் இவரின் நடிப்பை பாராட்ட எனக்கு நிறைய இடத்தில் வார்த்தைகளே கிடைக்கவில்லை என்பதே உண்மை.

Read: “என்னுடைய” Engliஷ் Vingliஷ்

அனில்கபூர்

அனில்கபூர் நடிப்பை எல்லாம் ஒப்பிடவே முடியாது. எந்த ஒரு சிறப்புத் தன்மையும் இல்லை. வழக்கமான ஒரு கதாப்பாத்திரம்.

இந்தியில் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் சரியான தேர்வு. அனில்கபூருக்கு பதிலாக அமிதாப் நடித்து இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழ் படத்தில் குறிப்பிட நினைத்து ஒன்றை மறந்து விட்டேன். அது இறுதிக் காட்சி.

இந்தக் காட்சியில் பண்டரிபாய் அவர்கள் தன் தவறை உணர்ந்து அப்படியே தலைவர் காலில் விழுந்து இறப்பது போல இருக்கும்.

அவசியமே இல்லாத காட்சி, அதிர்ச்சியில் இறப்பது போல காட்டி இருக்கலாம். வாசு இந்தக் காட்சியை வைத்து இருந்தாலும் தலைவர் இதை அனுமதித்து இருக்கக் கூடாது.

அமிதாப்

ரஜினியின் பழைய பெரும்பான்மையான படங்கள் ரீமேக் படங்களே! குறிப்பாக அமிதாப் படங்கள் தலைவரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து உள்ளது.

ரீமேக் செய்யப்பட்டாலும் தனக்கென்று தனித்துவத்தை வைத்து இருந்ததால் தான் பெரியளவில் விமர்சனங்களை ரஜினி எதிர்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

“வேலைக்காரன்” படத்தில் ரஜினி பேசும் ஆங்கிலம்!! மிகவும் பிரபலமான காட்சி.

இன்று பார்த்தாலும் நம்மால் சிரிக்காமல் குறைந்த பட்சம் புன்னகைக்காமல் இருக்க முடியாது. இந்தப் படம் அமிதாப் நடித்த “Namak Halal” திரைப்படத்தின் ரீமேக்.

இருவரின் நடிப்பைப் பார்க்கலாம். எந்த இடத்திலும் ரஜினியின் நகைச்சுவையான பேச்சும் நட்பான உடல் மொழியும் தான் மிகப் பெரிய பலமாக அவருக்கு இருக்கிறது.

வேலைக்காரன்

Chaat up! I can talk English, I can laugh English, I can walk English you bloody fellow! Vaiyapuri in Tamil becomes Vai Puri in English and Bhel Puri in Hindi.

Sir English is a very punny language, but pine and determine also you know how? English is the pascination of nation. In such condition and consideration, the conjunction becomes injunction and injunction becomes irritation.

Frustration and temptation are come across of all nation because condition becomes conpredition and predition becomes premolitions. Just like in collusions, diffusion, distruction, demolition, declaration, degeneration, depression, deliberation and decotion.

Now general knowledge, cricket. In the year 1929, when India was playing against Australia in Melbourne, Vijay Merchant and Vijay Hazare were at the crease.

Vijay Merchant told Vijay Hazare, look Vijay Haraze this is a very prestigious match. Considering the match for considerable time, so considering the consideration, that Vijay Merchant gave Vijay Hazare, Vijay Hazare told Vijay Merchant ultimately they must take a run.

When they were striking the ball in left side sir, the consideration came at the right side with ultimatum. Ultimately Vijay Hazare went to Vijay Merchant and said I am considering your consideration what you meant as declaration. –

Credit Whatsapp

தலைவரின் வளர்ச்சிக்கு அமிதாப் மிக முக்கியப் பங்கு ஆற்றியிருக்கிறார். அமிதாப் மூலமாக ரசிக்கும்படியான பல நல்ல படங்கள் கிடைத்து இருக்கிறது.

ரஜினியும் அப்படியே அமிதாப் நடிப்பை காப்பி அடிக்காமல் தனக்கு என்று தனித் தன்மையுடன் நடித்து இருக்கிறார்.

அமிதாப் மீது தான் வைத்து இருக்கும் மரியாதையை எப்போதும் ரஜினி நினைவு கூறுவார்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. (விஜயசாந்தி தான் கலக்கி இருக்கிறார். கலக்கி இருக்கிறார் என்பதை விட பெரிய வார்த்தை இருந்தால்) கலா மாஸ்டர் பாணியில் கிழி கிழி என்று கூறலாமா கிரி!அப்புறம் ரஜினி அமிதாப் ஒப்பீடு பற்றி தலைவரின் பெருந்தன்மையை நினைக்கும்போது ஏனோ தம்பி விஜய்யின் சூப்பர் ஸ்டார் பட்டம் மீதான ஆர்வம் ஞாபகத்தில் வந்து போகிறது !!!!!?.

  2. Giri……….

    Superb….. We like tamil movies (when its remade from other languages) may be because of the nativity and also the actor who performed in our language….

    Rajni will so stylish in the movie Mannan and i like the scenes with Vijayashanthi, Visu, Pandaribhai and his kalakkal comedy with evergreen comedian Goundamani….

    Ilaiyaraja has done fantastic music for Mannan and epsecially the song “Amma Endrazhaikkadha”, wowwwwwwwww………

    Nice review Giri…..

    Keep rocking and write more movie reviews….

  3. அண்ணா நான் மன்னன் படத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னாடி தான் முதன் முறையாக முழுவதுமாக பார்த்தேன். காரணம் கவுண்டரின் அந்த “என்ன விடமாட்டேங்கிறாங்க மா” காட்சிக்காக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பார்த்தேன்.. செம படம் தான் ஆனால் இந்த படத்தில் தலைவரின் (வர வர நான் கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியின் தீவிர ரசிகனாக மாறிக்கொண்டு இருக்கிறேன் ) நடிப்பை அந்த மாஸ் ஐ என எல்லாத்தையும் கொஞ்சம் தாண்டி விட்டார் விஜயசாந்தி என்று தான் எனக்கு தோன்றியது….

    இருந்தாலும் எப்படி அந்த காலத்தில் தன்னை விட அதிக முக்கியத்துவம் அல்லது சமமான கதாபாத்திரம் ஒரு நடிகைக்கு கொடுத்து அவருடன் தலைவர் நடித்தார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை….

    ஒவ்வொரு முறையும் விஜயசாந்தி க்கு தலைவர் பதிலடி கொடுக்கும் போது ப்பா என்னுடைய ரூமில் இருந்ந்த என் சக நண்பர்கள் அனைவரும் கைதட்டி வசனத்தை ஆரவாரமிட்டு பார்த்து ரசித்தனர். இதில் என்னையும் சேர்த்து அப்போது யாரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்னன் பார்த்ததும் பாட்ஷா வை தரவிறக்கம் செய்து பார்த்தோம் … ஆனால் மன்னன் எங்களை மயக்கிய அளவுக்கு எங்களை பாட்ஷா ஈர்க்கவில்லை அண்ணா

    ரஜினியின் இந்த மாதிரி மாஸ் படங்களின் தரவிறக்க முகவரி கிடைத்தால் கொடுங்கள் அண்ணா

  4. கிரி.. ரஜினியின் நடிப்பு, கவுண்டமணியோட காமெடி, இசை, மற்றும் எல்லாவற்றை பற்றியும் தெளிவா சொல்லியிருங்கீங்க.. ஆனால் “அம்மா” பாடலை பற்றி சொல்லவே இல்லை.. மன்னன் படம் என்றாலே என் மனதுக்கு முதலில் தோன்றுவது… “அம்மா” பாடல் தான்..

    (பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா…..)

    என் மொழியை குறை கூறுபவர்களுக்கு, என்ன சொல்லி புரியவைப்பேன் என் தாய்மொழிதான் சிறந்தது என்று…..பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

    • In Hindi too it remade name LAADLA. Anil kapoor, Sri Devi and Raveena Tandon.
      Sri Devi electrifying performance and a must to see. But as you said Vijayshanthi was best cos we all saw her first.

  5. @அரண் ஆமாம் கிழி கிழி 🙂

    @கோபி தலைவர் நிறைய ரீமேக் செய்து இருக்கிறார். அதிகமாக செய்ததும் இவராகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    @கார்த்திக் நீ சொல்வது சரி தான்.. தலைவரையே விஜயசாந்தி மிஞ்சி விட்டார். ஒரு நிறுவனத்தின் முதலாளி போலவே நடித்து இருப்பார்.

    தலைவர் படம் அனைத்தும் YouTube ல் இருக்கிறது.

    @யாசின் அம்மா என்றழைக்காத பாடல் பிடிக்காதவர் எவர் இருப்பர்! இந்தப் பாடல் பற்றி அனைவரும் எழுதி விட்டார்கள்.. நான் புதிதாக கூற என்ன இருக்கிறது. எனவே தான் மன்னர் மன்னனே பற்றிக் கூறினேன்.

    @THAMEEZ ரைட்டு.. இந்தப் படத்தையும் பார்த்துட வேண்டியது தான். 🙂 நன்றி.

  6. அருமையான ஒப்பீடு கிரி. அது சரி. எப்படித்தான் பொறுமையாக மூன்று மொழிப் படங்களையும் பார்த்தீர்களோ தெரியவில்லை..

    கன்னடத்தில் வெற்றி பெற்ற படத்தை மொழி மாற்றம் செய்வது பி.வாசுவுக்கு புதிதில்லை. சந்திரமுகி மற்றொரு உதாரணம்.

    மன்னன் உண்மையிலேயே ஒரு Feel good movie தான். விஜயசாந்தி, குஷ்பூ, இளையராஜா மற்றும் ரஜினி – கவுண்டமணி காம்பினேஷன் எல்லாமே அருமை.

    இன்றுதான் ‘போக்கிரி மன்னன்’ என்ற ஒரு புதுப் பட Pramo பார்த்தேன். போக்கிரி வெற்றிப் படமாம். மன்னனும் வெற்றிப் படமாம். அதனால் இந்தப் படத்தின் வெற்றியும் நிச்சயம் என்று ஒருவர் பேசினார். என்ன லாஜிக்கோ போங்க 🙂

  7. giri,

    I have seen Mannan many times.. I have not seen the other 2 languages.. for me SS is always a step ahead though his films are remake as your said SS with him style makes the difference.. For your info… Annamalai was a telugu remake “chinna naati snehithulu” after annamalai .. Venkatesh did it again in Telugu.. ennatha solla.. SS always allow other to perform in his movies.. for Viduthalai.. he made that equal importance was given for Vishnu Vardhan… VV is a legend and I like him most in Kannada for he was the only man against Rajkumar and Co. in Kannada and he came up also. others were sombu thookifying for Rajkumar …. even Vivek was given prominence in Sivaji which he will not get from any hero…

    Kamesh

  8. @Kan நன்றி

    @பொன்மலர் உங்களின் பரிந்துரைகளுக்கு நன்றி 🙂

    @@ஸ்ரீநிவாசன் நான்கு படத்தையும் பார்த்து விட்டேன் 🙂

    போக்கிரி மன்னன் ஹி ஹி எதோ டப்பிங் படம் பேர் மாதிரி இருக்கு.

    @காமேஷ் தல தலைவர் இது போல வாய்ப்பு கொடுப்பதால் தான் அவரது படங்கள் பார்க்கும்படி இருக்கிறது. நினைத்துப் பாருங்க.. பாஷா ல ரகுவரனை டம்மி செய்து இருந்தால்.. இப்படி ஒரு படம் கிடைத்து இருக்குமா! நீலாம்பரிக்கு முக்கியத்துவம் என்று நினைத்து காட்சிகளை குறைத்து இருந்தால் படம் எடுபட்டு இருக்குமா!

    நல்லவேளை இதை எல்லாம் நம்மைப் போலவே தலைவர் உணர்ந்து இருக்கிறார்.

  9. Nama SS kalakkina padathula onnuu marakka mudiyuma thala

    Marriage ku next day vijayasanthi rajini enga nu keppanga appa Oru style la nadanthu varuvaar paarunga.. Athey mathiri vijayasanthi Aranchitu vara scene la style therikum

    Neenga sonna chiranjeevi padam first 20 mins pathen full padam Neenga pathu irukeenga naa unga kal la thaan uzhanum

    Giri Question ungaluku Ippa mannan vanthu iruntha yaru vijayasanthi character ku correct? Ippa ulla heroines pera solli Neenga innum youth nu prove pannunga

    Arun

  10. அருண் தற்போது உள்ள நடிகைகள் எவரும் என்னை நடிப்பில் கவரவில்லை. “மயக்கம் என்ன” ரிச்சா “அருந்ததி” அனுஷ்கா மட்டுமே என்ன நடிப்பில் கவர்ந்தவர்கள். இவர்களும் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

  11. அணைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here